Wednesday, December 28, 2011

இணைய தளமொன்றின் உருவாக்கமும் செயற்பாடும்,அச்சு சஞ்சிகையை நோக்கி.........

ந‌ம‌து அர‌சிய‌ல் ச‌மூக‌ம் க‌லை இல‌க்கிய‌ம் பண்பாட்டுத் த‌ளத்தில் ஆயிர‌மாயிர‌ம் இணைய‌த்த‌ளங்கள், blogs உள்ளன‌.இல‌ங்கை,புல‌ம்பெய‌ர்
 நாடுக‌ளிலிருந்து ப‌ல‌ ச‌ஞ்சிகைக‌ள் வ‌ந்து கொண்டிருக்கின்றன‌.அப்ப‌டியான‌ சூழ‌லில் ஏன் இப்ப‌டியான‌ முய‌ற்சிக‌ள் தேவைப்ப‌டுகின்ற‌ன‌ என்ப‌த‌னை முத‌லில் சொல்த‌ல் வேண்டும்.


மிக வெளிப்படையாக பேச வேண்டுமானால் பல்வேறு கருத்து நிலை,பார்வை அணுகுமுறை கொண்ட ஒரு சமூக சூழலில் அதன் அனைத்து தளங்களிலும் மிக அடிப்படையாக இருக்க வேண்டிய பன்மைத்துவ இருப்பிற்கும் அதன் உரிமைக்குமான முக்கியத்துவத்திற்கு கதவடைப்பு செய்து வெகுகாலமாயிற்று. நமது சமூகங்களின் பரப்பில் தொடர்ச்சியாக நிலவுகின்ற இறுக்கமான போக்குகளும் ஒற்றைப்பரிமாண நிறுவுதலும் எதிர் நிலைக்குத் தள்ளும் விமர்சன கதையாடல்களும் பிற போக்குகளை பார்க்க மறுக்கின்ற மேலாதிக்கமும் பகைமுரண்களும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன.

Friday, December 23, 2011

"மண்மறவா மனிதர்கள்" நூல் வெளியீட்டு விழா

 -இ .ஏகன்-

'எம் தாயகத்தில் அரசியல், இலக்கியம், சமூகம், சமயம், தமிழியல், இதழியல் எனப் பல்வேறு துறைகளில் இயங்கிய பதினேழு பேரின் ஒப்பரிய பணிகளை நினைவூட்டும் வகையில் 'மண் மறவா மனிதர்கள்' என்ற நூலினைப் பல்கலை வேந்தனாகத் திகழும் டாக்டர் வி. ரி. இளங்கோவன் வெளியிட்டுள்ளார்.

வருங்காலச் சந்ததியினர் நம்மவரின் அரும்பணிகளை நன்கு அறிந்துகொள்ள இந்நூல் நல்லதோர் ஆவணமாக அமைந்துள்ளது.' இவ்வாறு கடந்த ஞாயிறு மாலை (11 - 12 - 2011) பாரிஸ் மாநகரில் 'மார்க்ஸ் டோர்மா'  தேவாலயக் கலையரங்க மண்டபத்தில் நடைபெற்ற வி. ரி. இளங்கோவனின் 'மண் மறவா மனிதர்கள்' நூல் வெளியீட்டு விழாவுக்குத் தலைமைவகித்து உரையாற்றிய மூத்த பத்திரிகையாளர் திரு. எஸ். கே. காசிலிங்கம் குறிப்பிட்டார்.

Saturday, December 17, 2011

நந்தினி சேவியரின்" நெல்லிமரப் பள்ளிக்கூடம் "


வாசக நோக்கில் சில குறிப்புகள்
-இதயராசன்-

சுரண்டல், இனபேதம், சமூக ஒடுக்குமுறை ஆகியவற்றினை சமூக வாழ்நிலை மாந்தர்கள் ஊடாட்டத்தின் மூலம் நெல்லிமரப் பள்ளிக்கூடம் சிறுகதைகளில் வெளிப்படுத்தியுள்ளார் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர். மேய்ப்பன், ஒற்றைத்தென்னை, கடலோரத்துக் குடிசைகள், மனிதம், நெல்லிமரப் பள்ளிக்கூடம், தவனம், எதிர்வு. விருட்சம் ஆகிய எட்டுக்கதைகளும் வறுமை, இனம், சாதி ஆகிய மூன்று சமூகப்பிரச்சினைகளையும் உயிர்ப்புடன் நம்முன் பேசுகின்றன. அயல்கிராமத்தைச் சேரந்தவர்கள் என்ற சிறுகதைத் தொகுதிக்கு அடுத்ததாக இச்சிறுகதைத் தொகுதி, கொடகே நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் கதையை நீட்டி முடக்காமல் தேவைக்கேற்ப அச்சொட்டாகச் சொல்வதில் வல்லவர். கூடவே எள்ளல் உணர்வுடன் வாசிக்கத் தூண்டுகிறது. இக்கதைகள் எட்டினையும் விமர்சனம் என்றில்லாமல் ஒரு வாசக அனுபவத்துடன், ஏனைய வாசகர்களும் வாசிக்கவும் ஜோசிக்கவும் வைக்கும் நோக்கில் இரசனைக்குறிப்பாக எழுதமுற்படுகின்றேன்.

Monday, December 12, 2011

வரலாற்றின் விளைபொருள்: ”கசகறணம்”

 விமல் குழந்தைவேலின் "நாவல்"
-ந.சுசீந்திரன்-

 ”வழி வழிவரும் ஏனைய இலக்கிய வடிவங்களைப் போலவே, நாவலும் வரலாற்றின் விளைபொருளாகும்…”
(க.கைலாசபதி, இலக்கியச் சிந்தனைகள், கொழும்பு 1983)

விமல் குழந்தைவேல் அவர்களின் மூன்றாவது  நாவல் கசகறணம், 2011 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளியாகியிருக்கின்றது. நூலின் முன்னுரையின் குறிப்புக்களில் இருந்து  இந் நாவல் இலங்கையில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்ட 2002 இற்குப் பின்னர் 2006 வரை நான்கு வருடங்கள் நிலவிய தற்காலிக அமைதியின் போது இலங்கையில் சுனாமிப் பேரலையின் அழிவுக் காலமான  2004 இன் இறுதி தொடக்கம் போர் முற்றாக முடிவுக்கு வந்த 2009 க்கும் இடைப்பட்ட 5 வருட காலத்தில்  எழுதப்பட்டிருக்கின்றது என்று கொள்ளலாம். காலம், ஆன்மா, நாடு, இனங்கள், உறவு போன்றவற்றை சிதைத்துச் சிதிலங்களாக்கி விட்டெறிந்த ஒரு களப்புலத்தில், அதிகாரம், வன்முறை, ஆயுதக் கலாசாரம், போரின் ஆரவாரம், சமாதானம், அனர்த்தனங்கள், போன்ற பெருங்கதைச் சமாச்சாரங்கள் மனிதர்களைப் பிடித்துக்கொள்ளும்போது, தெருத்தூசிகளாக மதிப்பிழந்து மறக்கடிக்கப்பட்ட  மிகச் சாதாரண மனிதர்களின் வாழ்வும் இருப்பும் மனோநிலையும் எப்படிச் சின்னாபின்னமாக்கப்பட்டது என்பதை அவர்களது அன்றன்றான சோலிகள், யோசனைகள், உணர்வுகள், பேச்சுக்கள், உறவாடல்கள் மூலம் ஒரு நல்ல நாவலாக உருமாற்றியிருக்கின்றர் விமல் குழந்தைவேல் அவர்கள். வரலாற்றின் விளைபொருளாக, காலத்தின் தவிர்க்க முடியாத அசலான அர்த்தம் மிக்க பதிவாகவும்  இந் நவீனம் இருக்கின்றது. 

கதையமைப்பு:

Thursday, December 08, 2011

போதி தர்மன் தமிழரா?....

சமூகநீதி காவலர் மாவீரர் வி.பி.சிங் நினைவு நாள் கருத்தரங்கம் 26.11.2011 அன்று பெரியார் திடலில் பெரியார் களம் சர்ப்பில் நடைபெற்றது.இதில் பேராசிரியர் கருணானந்தம்.ஆற்றிய உரை......
காணொளியைகாண்க

Wednesday, December 07, 2011

இரு நூல்களினது அறிமுகம்

பெயரிடாத நட்சத்திரங்கள்", "Mit dem Wind fliehen" ஆகிய இரு நூல்களினது அறிமுகமும் -தமிழ் சிங்கள மொழியில்- கலந்துரையாடலும் சுவிஸ் சூரிச் இல் இடம்பெற இருக்கிறது.

Wednesday, November 30, 2011

பரமக் குடி படுகொலைகளுக்குப் பின்

 அ.மார்க்ஸ்

 பரமக்குடியில் சென்ற செப்டம்பர் 13 அன்று ஆறு தேவேந்திர குல வேளாளர்களின் உயிர்களைப் பலிவாங்கிய துப்பாக்கிச் சூடு, தொடர்ந்து அம்மக்கள் மீது  மேற்கொண்ட அச்சுறுத்தல் நடவடிக்கைகள் ஆகியன முழுக்க முழுக்கக் காவல் துறையினர் அரசு ஆதரவுடன் மேற்கொண்ட ஒரு வன்முறை என்பதை இது தொடர்பான பல்வேறு ஆய்வு அறிக்கைகளும் உறுதி செய்துள்ளன. அ.இ.அ.தி.மு.க தவிர அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் இது குறித்து அரசைக் கண்டித்துள்ளன. எதிர்க்கட்சித் தகுதியைச் சட்டமன்றத்தில் பெற்றுள்ள தே.தி.மு.க முதலில் துப்பாக்கிச் சூட்டை ஆதரித்தபோதும் விரைவில் அதுவும் தன் நிலையை மாற்றிக் கொண்டது.
தமிழக அரசு முழுக்க முழுக்கக் காவல் துறை நடவடிக்கையை ஆதரித்தது. வழக்கமாக இது போன்ற சந்தர்ப்பங்களில் ஒரு முதல்வர் காவல்துறையை விட்டுக் கொடுக்காமல் பேசுவது என்கிற நிலையைத் தாண்டி இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா மிகவும் ஆங்காரமாகத் துப்பாக்கிச் சூட்டை அதரித்தார். தேவர் சாதி வெறியர்களால் பழனிக்குமார் என்கிற அப்பாவிச் சிறுவன் கொலை செய்யப்பட்டதையும் கூட அவர் சட்டமன்றத்தில் ஆதரித்துப் பேசினார். முத்துராமலிங்கத் தேவரை இழிவு செய்து எழுதினான், எனவே கொலை செய்யப்பட்டான் என ஒரு முதல்வர் சட்ட மன்றத்தில் பேசுகிறார்

Tuesday, November 29, 2011

ழாண்-லூயிக்- செவ்வியார்

சாஷா எபெலிங் உணர்வால் தமிழர்
- வி.தேவராஜ்-
பிறப்பால் ஜெர்மனியரான முனைவர்  சாஷா எபெலிங் உணர்வால் தமிழராக, தமிழ் மொழியை நேசிப்பவர். இவரைப் போலவே இன்னொருவரும் சிங்கப்பூர் உலகத் தமிழ் எழுத்தாளர் மகாநாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மகாநாட்டில் கலந்து கொண்டவர்களைச் சந்திக்கும் போது கை கூப்பி வணக்கம் தெரிவிக்கும் அவர் சுகமாக இருக்கிறீர்களா? பயணம் சுகமாக அமைந்ததா? போய் வருகின்றேன், உங்களுடைய பயணம் இனிதாக அமை யட்டும் என்றெல்லாம் தமிழ் மொழியில் சரளமாக உரையாடியவர் முனைவர் ழான் லூயிக் செவ்வியார்.

பிரெஞ்சைத் தாய் மொழியாகக் கொண்ட இவர் கணிதமும் மொழியியலும் பயின்றவர். தென்னிந்தியாவில் பேராசிரியர் முத்து சண்முகம்பிள்ளையிடம் இவர் தமிழ் கற்றார். தமிழ் இலக்கணப் பாரம்பரியத்தில் தனிக்கவனம் செலுத்திய இவர் சேனாவரையம் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதி அதை பண்டிட் டி.வி. கோபால அய்யரின் துணையுடன் திருத்தம் செய்து கொண்டார். பிரெஞ்சு கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடத்திலும் பின்னர் தேசிய அறிவியல் ஆய்வு மையத்திலும் பணிக்கமர்த்தப்பட்ட இவர் மொழித் தத்துவ வரலாற்றுக் குழுவிலும் இடம்பெற்றுள்ளார்.

இவர் பல நூல் பிரதியை வெளியிட்டுள்ளார். அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஒரு கணினி வட்டு (கணினித் தேவாரம்)முதலியவற்றை வெளியிட்டுள்ளார். வரலாறு அறிவாய்வியல் மொழி (History Epistemology Language-ISSN 0750-8069) என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும் கட மையாற்றுகின்றார். தற்போது ஆசிரியத்துறை பிரெஞ்சுப் பள்ளி, பாண்டிச்சேரி மையத்தில் பணியாற்றும் இவர் அதன் ஏட்டுச் சுவடிச் சேகரிப்பைக் கணினி மயப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். „ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்'' என்ற பாடல் வரிகளை உச்சரிப்புப் பிசகாமல் பாடி அசத்தினார் என்று சிங்கப்பூர்  தமிழ் முரசு பத்திரிகை அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளது. அத்துடன் பழம்பெரும் இலக்கியங்களான குறுந்தொகை, கலித்தொகை ஆகியவற்றின் பாடல்களைப் பிழையற வாசித்துக் காட்டியதுடன் தமிழில் மிகவும் பிடித்த நூல் சிலப்பதிகாரம் என்றும் கூறியுள்ளார். தொல்காப்பியத்தில் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து பெறப்பட்டு தற்போது பிரான்சின் கீழ்த்திசை ஆய்வுக் கல்விக் கூடத்தில் பாதுகாக்கப் பட்டு வரும் சுமார் 1600 ஓலைச் சுவடிகளையே அவர் கணினிமயப்படுத்தி வருகின்றார்.
தேவாரத்தில் உள்ள சுமார் 800 பதிகங்களையும் தொகுத்து அவற்றைச் சொற்கள் வாரியாகத் தேடக்கூடிய வசதியையும் கணினி வட்டின் மூலம் தமிழ் உலகுக்குத் தந்துள்ளார்.
நன்றி: வீரகேசரி

Tuesday, November 22, 2011

இலங்கையின் சமகால அரசியல் உரையாடல் அரங்கு

இலங்கையின் சமகால அரசியல்,சமூக நிலவரங்களுடன் , தமிழ் ,முஸ்லிம் மலையக , தலித் மக்கள் தொடர்பாக எதிர்வரும் 27-11-2011ம் திகதியில் (ஞாயிறு) பெர்லின் நகரில் முழுநாள் சந்திப்பு உரையாடல் அரங்கு ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளோம். இந்த அரங்கு பேசுபொருளாக கொண்டுள்ள விடயங்களில் திறந்த உரையாடலும் நடைபெறும்.கலந்து பங்காற்ற விரும்பும் அனைவரும் காலம் தாழ்த்தாது தொடர்பு கொள்ளவும்.லண்டன்,பிரான்ஸ்,நோர்வே,டென்மார்க் போன்ற நாடுகளில் இருந்தும் பங்குபற்றுனர்கள் கலந்து கொள்கின்றனர்.
அமர்வு -1
"தேசிய சிறுபான்மை இனங்களின் இணைவும் சாத்தியப்பாடுகளும்"
"குரலற்ற மக்கள் திரளின் கையறு நிலையும் பாடுகளும்"
"உயர்த்தப்பட்ட சாதி எதிர்பார்ப்புகளும், தலித் உளவியலும்..."
"இலங்கை பயணத்தில் கண்டவை"
வி.சிவலிங்கம்
எம்.பௌசர்
என்.சரவணன்
தேவதாசன்
அமர்வு -2
இரு நூல்களின் அறிமுகம்
கசகறணம்
ந.சுசீந்திரன்
கரவைதாசன்
உமா
விமல் குழந்தைவேல்
தீண்டாமைக்  கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்
ஜீவாமுரளி
எஸ்.சிவராஜன்
தேவதாசன்
யோகரட்ணம்
இந்நிகழ்வின் நேரடி ஒளிபரப்பினை தலித்தியம் (www.dalittiyam.com) இணையத்தளத்தில் காணலாம்

Friday, November 11, 2011

உயிர் நிழல் இதழ் வெளிவந்துள்ளது....

உயிர்நிழல்இதழ்வெளிவந்துள்ளது....
தொடர்ச்சியான சிற்றிதழ்கள் வருகை!


புலம் பெயர் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வெளிவரும் மாற்று தமிழ் சிற்றிதழ்களில் உயிர் நிழல் இதழ் குறிப்பிடத்தக்கது.இவ்விதழில் மீராபாரதி,தூவாரகன்,திருமாவளவன்,கலையரசன், பவ்சர்,சிவலிங்கம்,ஆழியாள், பஹிமா ஜஹான்,ஜிப்ரி ஹசன்,எஸ்‍ சிவதாஸ்,ஆகியோர் பங்களித்துள்ளனர். தொகுப்பாசிரியர்களான லக்சுமி,சுசீந்திரன் ஆகியோரின் முயற்சியினால் இவ்விதழ் வருகை சாத்தியப்பட்டுள்ளது.இவ்விதழ் வெளிவர 5 மாதங்களுக்கு மேல் எடுத்துள்ளது.(உயிர் நிழல் தொடர்புக்கு exilpub@gmail.com ) குறிக்கப்பட்ட கால எல்லைக்குள் தொடர்ச்சியாக இதழை வெளிக்கொண்டு வர முடியாமைக்கான காரணங்களை, மாற்று தமிழ் சிற்றிதழ் பணியில் ஈடுபாடு கொண்ட அனைவரும் அறிவர்.

Sunday, November 06, 2011

இப்படிக்கு அன்புள்ள அம்மா கவிதைத்தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

 -வெலிகம ரிம்ஸா முஹமத்-    (மதிப்புரை)

நூல் - இப்படிக்கு அன்புள்ள அம்மா
(கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - கலாநிதி ஜீவகுமாரன்
தமிழில் - வி. ஜீவகுமாரன்
வெளியீடு - விஸ்வசேது இலக்கியப் பாலம்

டென்மார்க்கில் டெனிஷ் மொழியில் திருமதி கலாநிதி ஜீவகுமாரன் எழுதிய இப்படிக்கு அன்புள்ள அம்மா என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதை (காவிய) த் தொகுதியை விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் இரண்டாவது படைப்பாக 163 பக்கங்களில் திரு வி. ஜீவகுமாரன் அவர்களால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. திரு வி. ஜீவகுமாரன் அவர்கள் தனது பதிப்புரையில் ''விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் இரண்டாவது படைப்பாக இப்படிக்கு அன்புள்ள அம்மா வெளிவருதல் பற்றி மனம் மகிழ்ச்சி அடைகிறது. காரணம் இதில் வரும் அம்மாவுடனும், அவரின் மகன் ஹரியுடனும் பதிப்பாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் கடந்த ஆறு மாதகாலமாக நான் பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். பிரிவு! வாழ்வின் முதல் அத்தியாயத்தில் உலகத்தை விட்டுப் பிரியும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது" என்கிறார்.
"இலக்கியம் மனிதனின் சிக்கலைக் கலைத்துவப் பாணியில் எடுத்தியம்புவது ஆகும். இப்பொழுது நாம் வாசிக்க எடுக்கின்ற புத்தகம் எளிமையான கவி நடையில் புதுக்கவிதை நடையில், வயோதிக மாது ஒருவரின் மனக்குமுறலை பதிவு செய்கிறது.

Sunday, October 30, 2011

ஏழாம் அறிவு -தமிழர் பெருமிதத்தின் பின்னுள்ள அபாயங்கள்

-சுகுணா திவாகர் -

 கி.பி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த பௌத்த மதத்தைச் சார்ந்த பல்லவ இளவரசன் போதிதர்மன் சீனா சென்று அரிய வகை மருத்துவத்தையும் நோக்குவர்மம் எனப்படும் மெஸ்மரிசத்தையும் தற்காப்புக்கலைகளையும் கற்றுத்தருகிறார். அதே விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு சீனா, இந்தியாவின் மீது உயிரியல் போர் தொடுக்க லாங்லீ என்பவரை அனுப்புகிறது. மரபணு அறிவியல் மாணவி சுபா, போதிதர்மரின் வாரிசான சர்க்கஸ் கலைஞர் அரவிந்தனின் மரபணு நினைவாற்றலை உசுப்பிவிட்டு சீன அபாயத்தை முறியடிக்கிறார். கதை குறித்தும் காட்சியமைப்புகள், தொழில்நுட்பங்கள் குறித்தும் விரிவான விமர்சனங்கள் வரக்கூடும். அதை நான் எழுதப்போவதில்லை.

படம் நெடுகிலும் தமிழரின் வீரம்,அறிவியல், கலைகள் குறித்த பெருமிதம் முன்வைத்து வியந்தோதப்படுகிறது.சீன தேசத்தில் கொண்டாடப்படும் மகத்தான ஞானியான போதிதர்மனை (இது போதிதர்மனா, போதிதம்மனா என்கிற அய்யம் எனக்குண்டு) தமிழகம் எப்படி மறந்துபோனது என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.ஞாயமான கேள்விதான். தமிழ்ப்பரப்பில் இலக்கியம்,

Thursday, October 27, 2011

கடாஃபியைக் கொன்றவர்களும் லிபியாவை வென்றவர்களும்


  -அ.மார்க்ஸ்-
சாக்கடைக் குழாய்க்குள்ளிருந்த  பெருச்சாளி ஒன்றை வெளியே இழுத்துப் போட்டு அடித்துக் கொன்றதைப் போல் கர்னல் கடாஃபியை கலகப் படையினர் கொன்று போட்டுள்ளனர்.  அமெரிக்கத் தலைமையில் இயங்கும் ‘நேடோ’ படைகளின் உதவியோடு இது நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு செத்த நாயைப்போல அவர் உடல் இழுத்துச் செல்லப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டதையும், சதாம் உசேன் அல்லது சீசெஸ்கு வீழ்த்தப்பட்டபோது மக்கள் "மகிழ்ச்சி அடைந்த" காட்சிகள் எவ்வாறு காட்டப்பட்டனவோ  அதேபோல இன்று கடாஃபியின் கொலையை மக்கள் கொண்டாடடியதையும் ஊடகங்களில் பார்த்தோம்.
அராபிய வசந்தம் எனச் சொல்லப்படும்

Saturday, October 22, 2011

ச.தமிழ்ச்செல்வனுடன் நேர்காணல்


‘‘எந்த ஆன்மிகவாதியாலும் தொட முடியாத எல்லையில் நிற்பவன் கம்யூனிஸ்ட்''  -ச.தமிழ்ச்செல்வன்-

 நேர்கண்டவர் : பேராச்சி கண்ணன்

ச.தமிழ்ச்செல்வன்
ச. தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக ஆறு ஆண்டுகள் பதவி வகித்தவர். தற்போது மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இருளும் ஒளியும், அரசியல் எனக்கு பிடிக்கும் உட்பட முப்பது நூல்களை வெளியிட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக இருக்கும் இவர், தமிழகம் முழுவதும் தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருப்பவர். தமுஎகச மற்றும் இடதுசாரிகளின் பங்களிப்புகள், முற்போக்கு எழுத்து உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பேராச்சி கண்ணனிடம் தெளிவாகப் பதிலளிக்கிறார்
தமிழின் நம்பிக்கை அளிக்கும் சிறுகதை எழுத்தாளராக அறிமுகமானவர் நீங்கள். பிறகு முற்றிலும் களச்செயல்பாட்டாளராக மாறிவிட்டீர்கள். ஏன் இந்தத் தேர்வு?
எல்லா மனிதர்களுக்குமே புறச்சூழல் தான் அகத்தூண்டுதலைத் தீர்மானிக் கிறது. என்னுடைய வாழ்க்கையில் புறச்சூழல் தூண்டுதல்தான் எழுதக் காரணமானது. எழுத்து முக்கியம்தான். ஆனால் அதைவிட களப்பணி முக்கியமானதாக இருக்கிறது.

Friday, October 21, 2011

இந்திய மண்ணில் சிங்கள நூலுக்கு விருது

 -மேமன்கவி-
இந்திய மண்ணில் சிங்கள மொழி நூல் ஒன்றுக்கு நான் அறிந்த மட்டில் முதல் முதலாக விருதும்பரிசும் வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதுக்கும் பரிசுக்கும்; உரியவர் நம் நாட்டு சகோதர சிங்கள மொழிப் படைப்பாளியும் தமிழ் சிங்கள் மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டு வருபவருமான திரு உபாலி லீலாரட்ன ஆவார்.

இவர் சிங்களத்தில் மொழிபெயர்த்த தமிழகப் படைப்பாளியான கு.சின்னப்ப பாரதியின் ‘சுரங்கம்’ நாவலின் சிங்கள மொழிபெயர்ப்பு நாலுக்கு தமிழகத்தில் மொழிபெயர்ப்புத் துறையை ஊக்குவிக்கமுகமாக செயற்படும் நல்லி திசை எட்டும் எனும் அமைப்பினால் அப்பரிசு வழங்கப்பட்டது.

நல்லி குப்புசாமி செட்டியா அவர்களின் அனுசரணையுடன் செயற்படும் அவ்வமைப்பின் 2011 ஆம் ஆண்டுக்கான மொழியாக்க விருதுகள் வழங்கும் விழா கடந்த செப்டம்பர் 17ந்திகதி திருச்சியில் நடைபெற்ற வேளை

Thursday, October 20, 2011

பக்தி பேரியக்கத்தை வெறும் மத நிகழ்வாக மட்டும் பார்க்க முடியாது! .

-கலாநிதி .ந.இரவீந்திரன்-

இலங்கையின் வடபுலத்தில் யாழ்ப்பாண நகரிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பண்டத்தெருப்புக்கு உட்பட்ட காலையடி எனும் கிராமத்தில் 1955இல் பிறந்தவர். நடேசன் இரவீந்திரன். காலையடி அமெரிக்கன்மிசன் தமிமழ்க்கலவன் பாடசாலை, சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லுரி ஆகியவற்றில் கல்வி பெற்று, பேராதனைப் பல்கலைக் கழகத்தில் வெளிவாரி மாணவராய் கலைப் பட்டதாரியாகவும், பின்னர் முதுகலை மாணிப் பட்டத்தையும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் “திருக்குறளின் கல்விச் சிந்தனை’’ எனும் பொருளில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
மார்க்சியத்தைத் தனது தத்துவத் தளமாக்கிக் கொண்டார். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (இப்போது “புதிய ஜனநாயகக் கட்சி’’) இவரது அரசியல் பார்வையை விரிவுபடுத்தியது. மலையகத்தில் 1977இல் ஆசிரியராகச் செயற்படத் தொடங்கியதிலிருந்து மேலும் தனது சமூகவியல் பார்வையை வளர்த்துக் கொண்டவர். மலையகத்தின் ஸ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரியில் 1992இல் விரிவுரையாளராக இணைந்து, 1995இல் வவுனியாவிற்கு இடமாற்றம் பெற்று இன்றுவரை வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை வந்திருந்தபோது சந்தித்த உரையாடலிலிருந்து...

சந்திப்பு: முத்தையா வெள்ளையன்

Wednesday, October 19, 2011

உலகத்தமிழாராய்ச்சி மகாநாடு பின்னணியும் பின்நோக்கும்

-க.கைலாசபதி-

கீழைத்தேசங்களைப் பற்றியும், அதன் வரலாறு, மொழி, இலக்கியம், சமயங்கள், கலைகள் முதலியன பற்றியும், மேல்நாட்டு அறிஞர்கள் பலர் சிறப்பாக ஆராய்ந்துள்ளனர் என்னும் கருத்து பலரிடையே ஆழமாக வேரூன்றியுள்ளது. இக்கருத்து முற்றுமுழுதாக உண்மையல்லவெனினும், சிற்சில துறைகளில், ‘விஞ்ஞானபூர்வமான’ ஆய்வுகளை மேல்நாட்டு கல்விமான்கள் சிலர் நடத்தியுள்ளனர் என்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே. இன்று, சோசலிச நாடுகள் சிலவற்றிலும், ஆசிய - ஆபிரிக்க கலை இலக்கியங்கள் குறித்து சில பல கனமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆயினும் ஆரம்பத்திலிருந்தே ஒரு விசயம் தெளிவாயிருந்து வந்துள்ளது. மேலைத்தேசங்கள் “உலகையாண்ட” காலத்திலேயே, அந்நாடுகளில் கீழைத்தேய ஆராய்ச்சிகள் தொடங்கப் பெற்றன. விசித்திரமான விசயங்களைக் கற்க விரும்பும் ஒரு சிலர் எல்லாக் காலத்திலும், எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். மேல்நாடுகளிலும் அத்தகைய “பைத்தியங்கள்” சில, சமஸ்கிருதம், தமிழ், இந்தி, யப்பானிய மொழி போன்ற அயல் மொழிகளையும், இலக்கிய இலக்கணங்களையும், கற்பதில் பெருங்காதல் கொண்டிருந்தனர். ஆனால் கீழைத்தேயங்கள் சம்பந்தமான ஆய்வுகளில் ஈடுபட்டோரிற் பெரும்பாலானோர், ஏதோ ஒரு வகையில் மேல்நாட்டு அரசாங்கங்களுடன் நெருங்கிய தொடர்புடையோராயும் அவற்றின் ஆதரவை வேணடி நின்றோராயும் இருந்தனர்.

Saturday, October 15, 2011

இலங்கையில் இறுதி யுத்தத்தில் நடந்த சம்பவங்களிலும் நான் பொறுமை இழந்துள்ளேன். பான்.கீ மூன்


(காணொளி  இணைக்கப்பட்டுள்ளது )

நார்வேயில் கடந்த  திங்கட்கிழமை (10.10.2011) துவங்கிய  "உலகில் அனைவருக்கும் 2030ஆம் ஆண்டுக்கிடையில் மின்சாரம்" என்ற பொருளில் நடைபெற்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வந்தபோது பன்னாட்டு  பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது  அவர்  இலங்கை தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கள்:


"இலங்கை அரசின் நடவடிக்கையிலும் இலங்கையில் இறுதி யுத்தத்தில் நடந்த சம்பவங்களிலும் நான் பொறுமை இழந்துள்ளேன்." என்று அய்க்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்தார்.