Friday, May 29, 2026

A Letter to Lanka கலாநிதி இலக்கியா மரியா சைமன்

-கரவைதாசன்- 

அன்றொருநாள் நோர்வே நாட்டைச் சேர்ந்த
இயக்குனர்/ திரைப்பட தயாரிப்பாளர்: கலாநிதி இலக்கியா மரியா சைமன் அவர்களை சந்தித்ததும் அவர் ஆவணப் படத்தினை தருசித்த தருணமும்.....

NAFA INTERNATIONAL ETHNOGRAPHIC FILM FESTIVAL – 2023 Copenhagen.
A Letter to Lanka
லங்காவுக்கு ஒரு கடிதம்
ஆண்டு: 2023
நீளம்: 28 நிமிடங்கள்
இயக்குனர்/திரைப்பட தயாரிப்பாளர்: இலக்கியா மரியா சைமன்.
தயாரிப்பு நிறுவனம்: UiT நோர்வேயின் ஆர்க்டிக் பல்கலைக்கழகம்
தயாரிப்பு நாடு: நோர்வே நாடு
திரைப்படம் உருவான நிலம் : ஸ்ரீ லங்கா
திரையில் ஸ்ரீலங்காவின் உள்நாட்டுப் போரின் நினைவுகளுக்கு இடையே தற்போதைய அரசியல் கொந்தளிப்பு வரை விம்பங்கள் நகர்கிறது. திரைக்கதையின் பேசுபொருள் நிலம், மண் மற்றும் மனிதர்களுடன் திரைப்படத் தயாரிப்பாளரின் மறு தொடர்பின் கவிதை மற்றும் தனிப்பட்ட பயணத்தின் அனுபவத்தின் மூலம் பேசப்படுகிறது. இது, குழப்பமான உலகத்தைச் சேர்ந்த இருத்தலியல் கேள்விகளுக்கு பார்வையாளர்களை அழைக்கிறது. உலகில் வீட்டில் இருப்பதன் அர்த்தம் என்ன? எது மக்களை ஒன்றாக இணைக்கிறது! எதனால் அவர்களைப் பிரிக்க முடியும்? என கேள்விகளை அடுக்கிச்செல்கிறது...
இலக்கியா மரியா சைமன், கவிஞர் பானுபாரதி பன்முக ஆளுமை குறும்பட இயக்குனர் தமயந்தி இணையர்களின் மகள் ஆவார். சமீபத்தில் ஆஃப் விஷுவலை துறையில்தனது முதுமானியப் படிப்பினை
UiTயில் மானுடவியல் நோர்வேயின் ஆர்க்டிக் பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார். ஏலவே அவர் எத்னோகிராஃபிக் ஃபிலிம் கிளப்பை நிறுவிய பெர்கன் பல்கலைக்கழகத்தில் சமூக மானுடவியலில் BA இளநிலை பட்டம் பெற்றுள்ளார். மானுடவியலில் சேருவதற்கு முன்பு அவர் பல்வேறு துறைகள் மற்றும் கலைகளில் இருந்து ஒரு ஆசிரியராகவும் இயக்க பயிற்சியாளராகவும் இருந்தார்.
இயக்கம் மற்றும் அவரது இலங்கை வம்சாவளி தொடர்பான அவரது அனுபவங்கள், வீடு, சொந்தம், அடையாளம் மற்றும் சூழல் ஆகிய இருத்தலியல் கருப்பொருள்களை ஆராய்வதில் அவரது மானுடவியல் ஆர்வத்திற்கு வழிகோலுகிறது. இலக்கியா இலங்கையுடனான தனது நெருக்கமான மற்றும் துண்டு துண்டான உறவில் ஆர்வமாக உள்ளார்.


வடக்கு  நோர்வேயின் ஓலசுண்ட்   மலைகளின் அடிவாரத்தில், சதுப்பு நிலக் காடுகளுக்கு அருகில் வளர்ந்த இலக்கியா , சக்திவாய்ந்த இயற்கை உணர்வுகளைத் தன் கமராவுக்குள் இருளும் ஒளியுமாக  கொண்டு வந்த ஓர் இருத்தியியல் படைப்பாளி . அறம்,  அன்பு, அதிகாரம் , அனைத்தையும் பற்றிய கூர்மையான பார்வைகள், சமூக உணர்வு மற்றும் சீற்றம் ஆகியவற்றால் உயிரூட்டப்பட்ட முடிவற்ற படிமங்களின் படச்சுருள்  கூட்டங்களில் அனைத்தையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு நீர்த்தேக்கமாக அவற்றைப் பயன்படுத்துகின்றார் . பெரியம்மா  எனும் பாத்திர வாகனத்துக்கூடாக  வர்ணமும் வனப்புமாக  ஈழத்தின் லாவண்யத்தினை   பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஈழத்தின் கறுப்பாகிக் கிடந்த பக்கங்களை நிழல் கொள்ளளால்  அவர் தனது உணர்வுகளைத் தனக்குள்ளேயே பதிவு செய்துகொண்டார் என்கிறேன் .


காலனித்துவம் தந்துவிட்டுப்போன கருப்பு வெள்ளை வேதச் சீருடைகுள்ளே அறமாக ஆமிக்கு  குடிநீர் வழங்குவதும் அறச் சீற்றமாக இரவுப் பொழுதுகளில் மரக்கிளையினில் இலாம்பினை ஒளிர விடுவதும் , நிலத்தினைகொத்திப் பண்படுத்துவதும் அக்கருப்புக் கோட்டுக்குள்ளிருந்து நாட்டுக்கூத்துப் பாட்டு வருவதும்    உணர்வுகளின் வழியே  ஒரு பாரம்பரிய பண்பாட்டுச் சேமிப்பும் உள்ளது. அவற்றை எப்படிச் சேமிப்பது? அவர் கையாளும் மொழி அவரது இருப்பு சார்ந்து வலுக்கொள்கிறது அவை எழும்போது அவற்றைப் பற்றி உணர்வதன் மூலமாக  வெள்ளைத் திரை  முன், அந்த உணர்வை விட இந்த உணர்வை நாம் மிகவும் தெளிவாக நினைவில் கொள்கிற அவை இப்போது அவருடைய திரைக்கதையாடலில் வரும்  ஒரு சொல் " விளைநிலம்" soil என்ற முழுமையானசொல்  வழமையாக வரும் மண், நிலம்,  நாடு  போன்ற சொற்களிளிருந்து விடுப்பட்டு  பதிப்பில்  அவை திருத்தப்பட்டு, ஒரு சுதந்திரமான மொழிக்கு நெருக்கமாக வந்துள்ளன; நல்லதோ கெட்டதோ, அவை இன்னும் உரைநடையாக மாறியுள்ளன. முன்பு ஒரு வரி, "நீ துன்பப்படுகிறாய், என் அன்பே, பிறகு நான் மீண்டும் இறப்பேன்" என்று இருந்த இடத்தில், இப்போது அது "நீ துன்பப்படுகிறாய், என் அன்பே, நான் இன்னொரு முறை இறப்பேன்" என்று உள்ளது. போல் ஆகியுள்ளது இது , அதன் நீண்ட பாரம்பரியத்தில், மிகவும் கண்டிப்பான ஒரு வரி வடிவமாகும்.


 அவர் , அங்கே  உள்ள மரக்கட்டைகள், மணல் கடற்கரைகள் மற்றும் தென்னைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட  தென்னங்காய்களைக்  கொத்தி உடைப்பதனூடு  ஒரு கோடாரி, அரிவாள் மற்றும் மடிக்கத்தி ஆகியவற்றைக் கொண்டு, உணர்வுக் குவியல்களை அவர் காட்டுகின்றார். இந்த உருவக வழியில், முற்றிலும் இருத்தலியல் கருப்பொருள் சார்ந்த ஒரு படைப்பு உருவானது;  இந்த கருப்பொருளின் உண்மையான விரிவான விளக்கம், letter to sri lanka  என எழுத வைத்தது 

ஆழ்ந்த அற உணர்வு அறிவுத்திறன் அல்லது கருத்துப் பரிமாற்றங்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பு மாறாக, அவளது அகம்  எதனுடன் தொடர்புடையதோ, அவை அனைத்தின் மீதும் ஒரு விரிவான பேரார்வம் காணப்படுகிறது. இது படத்தின் முதல் ஒளியிளியிலிருந்து  நூர்ந்து நூர்ந்து வெளிப்படுகிறது. அதுவும் ஒரு முறையான வினைத்திறனே! 

இலக்கியாவுக்குள்  ஒரு மூர்க்கமான உணர்வு  கொழுந்துவிட்டு எரிகிறது; அது அவளை தலை  தனில் தரித்த முட்களாலும் வாள்களாலும் குத்தி, சுட்டெரிக்கும் தீயுடன் அவரின்  இதயத்தைக் கிழிக்கிறது. தனது உணர்வுதனை  பல்வேறு மனநிலைகளையும் முழுமையாக வெளிப்படுத்த, அவர்  ஒரு படிமத்திலோ,  ஒரு உருவகத்திலோ திருப்தி அடையாவில்லை; மாறாக, புலன்களின் களஞ்சியத்தில் உள்ள நிகழ்வுகளை மனிதகுலம் குறித்த ஒரு இயற்கைவாதப் பார்வையில் ஒன்றாகத் தொகுக்கிறார் . அதன் எல்லையற்ற பன்முகத்தன்மை இருந்தபோதிலும், அது சலிப்பூட்டுவதாகத் தோன்றாமல் இருக்க .  சமையல் அனுபவங்களை இணைத்துள்ளார்.:

சமையல்காரியே, உன் இரத்தம் இந்த விளை நிலம் போல உயிருள்ளது,

மேலும் உன் பழக்கவழக்கங்கள் உன்னதமானவை, இந்த விளை நிலம் போல.

ஒரு ஊர்த் தூரப் பயணத்தில் தேசம் எனும் கோடு கட்டலின்  அனைத்தையும் கண்டு மனம் வெந்து ஆவணப் படுத்தியுள்ளார்.  

எப்படியாயினும், அவள் நிலத்தின்  வேறொரு இடத்தில்  தன் தலைவணக்கத்தைச் செலுத்திக்கொண்டிருக்கும்போதும், அவள் தொட்டுணரக்கூடியவளாகவே இருக்கிறாள்.

 மரணம் வரும்போதும் , ​​அந்த வெறுமை அனைத்திற்கும் எதிராக அவளது பார்வை மட்டுமே உள்ளது; இருளை விரட்ட அன்பு மட்டுமே உள்ளது.

இலக்கியாவின் படைப்பு  அதன் ஒளியைத் தக்கவைத்துக் கொள்கிறது.