Friday, July 30, 2010

குருதியுறையும் தண்டகாரண்யா- சுவாமி அக்னிவேஷின் வாக்குமூலம்.

குருதியுறையும் தண்டகாரண்யா

-பொன்னிலா-

(இகட்டுரை எழுதி முடிக்கப்பட்ட பின் மேற்குவங்கத்தின் மிட்னாபூரில் இருந்தும் ஜார்கண்டில் கிகுந்தி மாவட்ட காடுகளில் இருந்தும் வருகிற செய்திகள் இந்தியா தன் சொந்த்க் குடிகள் மீதான் போரை துவங்கி விட்டதை முன்னறிவிக்கின்றன. வன்னி மக்கள் மீது வீசக் கொடுத்த பேரழிவு ஆயுதங்களை இப்போது தன் சொந்தக் குடிகள் மீதே பயன்படுத்தத் துவங்கியிருகிறது இந்தியா. இனி வரும் மாதங்களில் பெரும் ரத்தக்களரியை நடத்தி முடிப்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள் அவர்கள்)

சிதம்பரம் வாயில் தவழும் சைவத் தமிழைக் கேட்கக் கேட்க இனிக்கும். பிசகில்லாத மொழி நடையில் தூய தமிழாய் வந்து விழுகிற வார்த்தைகளும் அவர் தும்பைப் பூ நிறத்தில் உடுத்தியிருக்கும் கதர்ச் சட்டையின் வெண்மை போனறதுதான்.ஆனால் ஈழப் படுகொலைகளில் அவர் பேசிய வார்த்தைகளின் எச்சில் ஈரம் காய்வதற்குள் நடத்தி முடித்த கொலை பாதகம் நினைவிலிருந்து அகல்வதற்குள், காஷ்மீரிலும் மத்திய இந்தியாவிலும் ரத்த தாண்டவத்தைத் துவங்கும் வேட்டையை துவங்கி விட்டார்கள். ஒரு பக்கம் போரையும் இன்னொரு பக்கம் வெள்ளை முகத்தையும் காட்டும் இந்த மனிதர். இப்போது பழங்குடி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தப் போவதாகப் பேசுகிறார். அச்சமாக இருக்கிறது.அவர்கள் எப்போதெல்லாம் முன்னேற்ற, என்ற சொல்லை பிரயோகிக்கிறார்களோ அப்போதெல்லாம் பெருந்தொகையான மக்கள் கொல்லப்படும் அனுபவத்தை நாம் காண்கிற நிலையில் மத்திய இந்தியாவின் லால்கர் முதல் சர்ஜாகர் வரை பழங்குடிகளை அமைதியான முறையில் கொன்றொழித்து விடுவார்களோ என்று நாம் அஞ்ச வேண்டியிருக்கிறது.மாவோயிஸ்டுகளின் சமாதான முன்னெடுப்புகளை இவர்கள் நடத்திய இரண்டு கொலைகள் சீர்குலைத்திருக்கிறது. இந்த மனிதரின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டினார் சுவாமியும் சமூக சேவகருமான அக்னிவேஷ். இந்திய புரட்சிகர இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான சிக்குரி ராஜ்குமாரையும் பத்திரிகையாளர் ஹேமச் சந்திர பாண்டேயையும் போலி என்கவுண்டரில் கொன்றதன் மூலம் தண்டகாரண்யா போரில் உறுதியாக இருக்கிறோம் என்பதை இந்தியா மீண்டும் ஒரு முறை நீருபித்திருக்கிறது.

சுவாமி அக்னிவேஷின் வாக்குமூலம்.
…………………………………………………………………………
சுவாமி அக்னிவேஷ் உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் கேட்டுக் கொண்டதன் பேரில் மாவோயிஸ்டுகளுக்கும் மத்திய அரசுக்குமிடையில் நல்லெண்ணத் தூதராகச் செயல்பட்டவர். சிக்குரி ராஜ்குமாரும், ஹேமச்சந்திர பாண்டேயும் கொல்லப்பட்ட பின்னர், அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பான அவரின் நம்பிக்கைகள் பெருமளவு குலைந்து விட்டது. அவர் சிதம்பரத்தின் வார்த்தைகளால் ஏமாற்றப்பட்டிருக்கிறார். சுவாமியின் நீண்ட நேர்காணலை zee news.com வெளியிட்டுள்ளது. தோழர்கள் கொல்லப்பட்டது, அமைதி முயர்ச்சி தொடர்பாக அவரது நேர்காணலின் சுருக்கம்.

சிக்குரி ராஜ்குமாரும், ஊடகவியளார் ஹேமச்சந்திர பாண்டேவும் கொல்லப்பட்டது குறித்து உங்கள் கருத்து என்ன?

இதில் என்னவிதமான கருத்தை நான் சொல்லி விட முடியும். மாவோயிஸ்டுகளுக்கும், அரசுக்குமிடையே சமாதானப் பேச்சுவார்த்தைக்கான மீடியேட்டராக நான் இருந்தேன். அமைதி முயர்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் ராஜ்குமாரையும் பாண்டேயையும், கொன்று விட்டார்கள். மக்களும் சரி மாவோயிஸ்டுகளும் சரி இந்த இருவரும் ஆந்திர போலீசால் கொல்லப்பட்டதாகத்தான் சொல்கிறார்கள். இக்கொலைகள் போலி என்கவுண்டர் என்று மக்கள் திடமாக நம்புகிறார்கள். நானும் இதை கொலை என்றே நினைக்கிறேன். இது தொடர்பாக நான் சமீபத்தில் ப. சிதம்பரத்தைச் சந்தித்தேன். ஏன் இப்படிச் செய்து விட்டீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் ”எனக்கு எதுவுமே தெரியாது. நீங்கள் ஆந்திர அரசைப் போய் கேட்டுக் கொள்ளுங்கள். எனக்கு எதுவுமே தெரியாது. என்றார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் முதல் நடவடிக்கையாகவும் முன்னணி நடவடிக்கையாகவும் உள்ள நகசல் ஒழிப்புப் போர் பற்றி கவனம் கொள்ளும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் அந்த பதில் என்னை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது.

சமாதானம் தொடர்பாக என்ன மாதிரியான உரையாடல் நடந்தது. மாவோயிஸ்டுகள் அமைதி முயர்ச்சியை எப்படிப் பார்க்கிறார்கள்?

இந்த வருடம் (2010) மே&11&ஆம் தியதி சிதம்பரம் ஒரு கடிதம் கொடுத்தார். அதை நான் மாவோயிஸ்டுகளுக்குக் கொடுத்தேன். மே மாதம் 31&ஆம் தியதி மாவோயிஸ்டுகளிடமிருந்து பதில் கடிதம் வந்தது. அக்கடிதத்தில் நாங்களும் சமாதானத்தை விரும்புகிறோம். பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை கொள்கிறோம். அதற்கு வசதியாக எங்கள் மீதான தடையை விலக்கிக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தில் நீடிக்க விரும்புகிறோம் என்று மாவோயிஸ்டுகள் கொடுத்தனுப்பிய இரண்டரை பக்க கடிதம் மிகுந்த நம்பிக்கையளிக்கும் படி இருந்தது. நான் அக்கடிதத்தை எடுத்துக் கொண்டு சிதம்பரத்தைப் பார்க்கச் சென்றேன். கடிதத்தைப் பார்த்து விட்டு இதில் பேச்சுவார்த்தைக்கான தேதியோ யுத்த நிறுத்தத்திற்கான தேதியோ குறிப்பிடப்பட வில்லையே, நான் உயரதிகாரிகளுடன் பேச தேதி இருந்தால்தான் வசதியாக இருக்கும் என்றார். அவரே மூன்று தியதிகளைக் குறித்துக் கொடுக்க தையும் நான் மாவோயிஸ்டுகளிடம் தெரிவித்தேன். அது தொடர்பாக ஆலோசித்து விட்டுச் சொல்வதாக அவர்கள் சொல்ல அதற்குள்தான் இருவரைக் கொன்று சூழலை மோசமாக்கி விட்டார்கள்.

ஜனநாயகத்தில் பங்கேற்போம் என்று மாவோயிஸ்டுகள் சொல்கிறார்கள் என்றால் அவர்கள் தேர்தல் அரசியலுக்கு வர சம்மதித்து விட்டார்களா?

தேர்தல் அரசியலுக்கு வருவதாக அவர்கள் சொல்லவில்லை. அவர்களின் கஷ்டங்களையும், மக்களின் கஷ்டங்களையும் சமாதானமான வழியில் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றே அவர்கள் விரும்புகிறார்கள்.

அவர்கள் இராணுவத்தினரையும் மக்களையும் கொன்றிருக்கிறார்களே?

அவர்கள் கடைசியாக எழுதியிருக்கும் கடிதத்திலேயே தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். யாரையும் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் செயல்படவில்லை. எங்களைத் தேடி வந்து எங்களுடைய பகுதிகளுக்குள் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் போது மட்டுமே நாங்கள் பாதுகாப்பிற்காக சுடுகிறோம். ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் சம்பவத்தை நாங்கள் செய்யவில்லை என்றும் அந்த மக்களுக்காக நாங்கள் வருந்துகிறோம் அவர்களுக்கு முறையான நட்ட ஈட்டைக் கொடுங்கள் என்கிறார்கள். மேலும் சட்டீஸ்கர் தாக்குதலில் கொல்லபப்ட்ட சி.ஆர்.பி.எப்ஃ வீரர்கள் தொடர்பாக வருத்தம் தெரிவித்து தோழர் உசந்தி மத்திய அரசுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார். என்னைப் பொறுத்தவரையில் வன்முறையை யார் செய்தாலும் நான் ஆதரிக்க மாட்டேன். துப்பாக்கி முனையில் மக்களின் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள முடியாது. ஆனால் அவர்கள் மனப்பூர்வமாகவே இவைகளைப் பேசுகிறார்கள். நல்லெண்ண நடவடிக்கையாத்தான் இவைகளைப் பார்க்க வேண்டும்.

மாவோயிஸ்டுகள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

பழங்குடி மக்களின் நில உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என எதிர்பாக்கிறார்கள்.

அரசு நிஜமாகவே பிரச்சனையைத் தீர்க்குமா? அல்லது நாடகம் ஆடுகிறதா?

நீங்கள் சரியான கேள்வியைத்தான் கேட்டிருக்கிறீர்கள். எனக்கே அந்த சந்தேகம் இருக்கிறது. ராஜ்குமார் கொலை தொடர்பாக சிதம்பரத்திடம் நான் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலும் சரி சமாதானம் ஒன்றை உருவாக்கும் முயர்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் போதே ராஜ்குமார், பாண்டேவைக் கொன்றதும் சரி நான் குழம்பிப் போயிருக்கிறேன்.

மாவோயிஸ்டுகளையும் பழங்குடிகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினால் மட்டுமே அப்பகுதியில் வளர்ச்சியைக் கொண்டு வர முடியும் என்பதை நீங்கள் ஆதரிப்பீர்களா?

ஒரு பகுதியில் முன்னேற்றத்தைக் கொண்டு வர அப்பகுதியில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி விட்டுதான் அப்பகுதியில் வளர்ச்சியைக் கொண்டுவரவேண்டும் என்றில்லை. அப்படி மக்களை வெளியேற்றி வளர்ச்சியைக் கொண்டு வரவும் முடியாது. மாறாக மக்களின் வளர்ச்சிதான் அந்தப் பகுதியின் வளர்ச்சி. மக்களின் முன்னேற்றம்தான் அந்தப் பகுதியின் முன்னேற்றம். அவர்களின் பூர்வீக நிலங்களின் உரிமை அவர்களுக்கு வேண்டுமென்று நினைக்கிறார்கள் இதில் என்ன தவறு? அவர்களின் நிலங்களை அபகரித்து மக்களை அப்புறப்படுத்தி விட்டு எப்படி வளர்ச்சியைக் கொண்டு வரமுடியும் அந்த வளர்ச்சி யாருக்கானது? 1948 – ல் -பக்காரா அணையைக் கடிட்னார்கள். அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பல்லாயிரம் ப்ழங்குடி மக்களின் வாரிசுகளும் சந்ததிகளும் இன்னமும் நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அது போல தெஹ்ரி டேம் , நர்மதா டேம் எல்லாம் வளர்ச்சிக்காக வந்தவைதான் அந்த மக்கள் என்ன ஆனார்கள்? ரூர்கேலா, பெக்காரோ, ஆகியவை எலலாமே வளர்ச்சியின் பெயரால் வந்தவைதான் இவைகள் மக்களை வஞ்சிக்கவில்லையா? ஆகவே மக்களை அப்புறப்படுத்தி விட்டு வளர்ச்சியைக் கொண்டு வருவது என்பதை நான் ஆதரிக்கவில்லை.

மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை வைத்திருக்கும் போது அரசும் ஆயுதம் கொண்டுதானே தாக்கும்?

நீங்கள் ஒரு பொதுப் புத்தியில் இருந்து கொண்டு பொது ஜன மன நிலையில் இருந்து பேசுகிறீர்கள். பாதிக்கப்பட்டுள்ள அவர்களின் நிலையில் இருந்து இந்தப் பிரச்சனையைப் பார்க்க வேண்டும். மாவோயிஸ்டுகளை அவர்கள் அழிக்க நினைக்கிறார்கள். அது மக்களின் கோபத்தை அதிகரிக்கிறது. அதனால்தான் மக்கள் அதிகளவில் மாவோயிஸ்டுகளோடு சேர்கிறார்கள். மற்றபடி நான் காந்தியின் சீடன் அமைதி வழியில்தான் இதைத் தீர்க்க வேண்டும் என்ற நம்பிக்கை உடையவன். பிரச்சனையில் வேரைக் கண்டு பிடித்து அமைதி வழியில் அதைச் சரிசெய்ய வேண்டுமே தவிற சுட்டுக் கொல்வதோ வன்முறை செய்வதோ பிரச்சனைக்குத் தீர்வாகாது.

மாவோயிஸ்ட் பிரச்சனைக்கு என்ன தீர்வு?

சமாதானம் வரவேண்டும். இருவருமே பேச வேண்டும். இதற்கு மேலும் உயிர்களை நாம் இழக்கக் கூடாது.

ஆஸாத் (ராஜ்குமார்) இறந்த பிறகு மாவோயிஸ்ட்டுகளுடனான உங்கள் பேச்சுவார்த்தை எப்படி இருக்கிறது?

ஆசாத்தின் மரணம் சமாதான முயர்ச்சிகளைக் குழப்பி விட்டது. ஆசாத்தின் கொலையைக் கண்டித்து மாவோயிஸ்டுகள் பந்த் அறிவித்தார்கள். பந்தின் போது மிகக் குறைந்த அளவில்தான் வன்முறை நடந்தது. ஆக அவர்கள் இன்னும் பேச்சுவார்த்தைக்கு வர விரும்புவதைத்தான் இது காட்டுகிறது என்கிறார் சுவாமி அக்னிவேஷ்.

அமைதி என்பது புதை குழியா?
…………………………………………………..

மாப்பிளாவில், பூம்கல்லில், தெபக்காவில், தெலுங்கானா கிளர்ச்சியில் என்று நூற்றாண்டுகால போராட்ட வரலாறுகளாலும் ஏராளமான விவசாயிகளின் உயிர்த்தியாகத்தாலும் வீரம் செறிந்த போராட்டங்களாலும் இந்தியச் சமூகங்கள் பெயரளவுக்கேனும் ஒரு சில உரிமைகளைப் பெற்றிருக்கின்றன. பெரிய ஆபத்துகளை எதிர்கொள்ளும் ஆளும் வர்க்கங்கள் இழப்புகளை கணக்கில் கொண்டும் தாங்கள் விரும்புகிற சமூக அமைப்பிற்கு பங்கம் வராமல் இருக்கவும் நிலப்பகிர்வு, ஆரம்பக் கல்வி, மானியங்கள், போன்றவற்றை மிக மிகக் குறைந்த அளவில் கொடுத்து வருகின்றன. தனியார் மூலதனங்களின் குவியல், தரகு முதலாளிகள், பன்னாட்டு முதலாளிகள், இவர்களின் தேவைகளுக்காக வடிவமைக்கப்படும் இன்றைய இந்தியாவில் இந்த உரிமைகளை இந்தியச் சமூகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதை நாம் காண்கிறோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரேஷன் அட்டைகளைக் கூட பறித்து விடும் திட்டங்களை வித விதமான தந்திரங்களோடு அரசுகள் செய்து வருவதை நாம் பார்க்கிறோம். முப்போக விளைச்சலையும் இழந்த காவிரி டெல்டா விவசாயிகள் ஏக்கருக்கு பத்தாயிரம் ரூபாய் நட்ட ஈடு கேட்கிறார்கள். பத்தாயிரம் கேட்டால் ஐந்தாயிரமாவது கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள். ஒட்டு மொத்த இந்திய வளமும் ஏகாதிபத்திய கொள்ளை லாப வெறிக்கு பலியாக்கப்படுகிற சூழலில் அதற்கு எதிரான பரந்த மக்கள் திரள் எதிர்ப்பு வடிவமாகவே நாம் மத்திய இந்திய பழங்குடி மக்களின் போராட்டங்களைக் காண்கிறோம்.

சிகப்புத் தீவீரவாதம், அவர்கள் மக்களைக் கொல்கிறவர்கள், அப்பாவிகளை வேட்டையாடுகிறவர்கள் என்று தொடர்ந்து பல மாதங்களாக இந்திய ஊடகங்கள் கூச்சலிட்டு வந்தன. நாம் நமது தலைவர்கள் என்று பார்த்தவர்கள் எல்லாம் மாவோயிஸ்டுகளை ஒழித்துக் கட்டும் கடமையை தேசீய வெறியாக கட்டமைக்க முயன்றார்கள்.ஒரு வேளை கார்கில் போருக்கு நிதி திரட்டி தடித்தனமாக இந்திய,பாகிஸ்தான் மக்கள் மீது திணிக்கப்பட்ட போர் ஒன்றிர்கு நிதி திரட்டி மக்களை தேசிய வெறியில் திரட்டியது போல மாவோயிஸ்ட் அழிப்பு என்னும் பெயரில் மக்களை அணி திரட்டும் ஆபத்தும் அதனூடாக ஊடகங்கள், மனித உரிமை ஆர்வலர்களின் வாயை அடைத்து பெரும் ரத்தக் களரியை தேசியப் பெருமிதமாக கட்டி எழுப்பி விடும் ஆபத்தும் இதில் இருக்கிறது. ஆக முழு அளவிலான விமானத் தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கான உகந்த சுழலை பின்தளத்தில் உருவாக்கிக் கொண்டு சி.ஆர்.பி.எப்ஃ, ஸ்பெஷல் கமாண்டோ போர்ஸ், ஆந்திர சிறப்பு அதிரடிப்படை, இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை, என பல படைகளையும் ஒருங்கிணைத்து இஸ்ரேலின் மொசாட்டிடம் பயிற்சி பெற வைத்து நவீன போர் முறைக்கு தயார் படுத்தி களமிரக்கி இருக்கிறது இந்திய அரசு.

பழங்குடி மக்களின் வளர்ச்சிக்கான சமூக நலத்திட்டங்களை அறிவித்துக் கொண்டே அடர்ந்த காடுகளுக்குள் அமைக்கப்பட்டுள்ள அதிரடிப்படை முகாம்களை விலக்கிக் கொள்வதும் அவர்களை நகரங்களை நோக்கி பின் வாங்கச் செய்வதும் முழு அளவிலான போர் ஒத்திகை போலத் தெரிகிறது. இன்றைய தேதியில் பல பத்தாயிரம் போர் வீரர்களையோ, ஆளணிப்படைகளையோ களமிரக்கத் தேவையில்லை மக்களையும் மரங்களையும் சேர்த்து எரிய விடும் பாஸ்பரஸ் குண்டுகளும், ஆக்சிஜனைக் கொன்று விடும் க்ளஸ்டர் குண்டுகளுமே போதுமானது. ஆளில்லா உளவு விமானத்தின் துணையோடு மிக நவீன முறையிலான கொடூர உத்திகளைக் கொண்ட வன்னிப் போரின் முன்னுதாரணங்களோடு தண்டகாரண்யா மீது பாயக் காத்திருக்கிறது மன்மோகன், சோனியா, சிதம்பரம் படைகள், தண்டகாரண்யாவில் படர்ந்துள்ள சிகப்புத் தீவீரவாதத்தை ஒழித்துக் கட்ட மேக்சிமம் நான்கு ஆண்டுகள்…… என்கிறார்கள். நண்பர்களே நான்காண்டுகள் கூட பேரழிவு ஆயுதங்களுக்குத் தேவைப்படுமா? என்று தெரியவில்லை.

வன்னியில் அழித்ததைப் போல தங்களின் வசிப்பிடத்தை விட்டு பெயர்த்தெடுக்கப்பட்டு முகாம்களுக்குள் வீசப்பட்டதைப் போல மத்திய இந்தியாவின் பழங்குடி மக்களும் வீசப்பட்டு விடுவார்கள் என்றே தோன்றுகிறது.லால்கர் இயக்கத்தை ஒட்டி அதன் பின்னர் உருவாக்கப்பட்ட முகாம்களே இன்னும் விலக்கிக் கொள்ளப்படாத நிலையில் ஒவ்வொரு பழங்குடி கிராமங்களையுமே ஒரு முகாமாக மாற்றி அதை சல்வார்ஜூடும் படைகளிடம் ஒப்படைக்கிறார் சிதம்பரம். புலிகளின் இராணுவத் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்ட மாவோயிஸ்டுகள் நிரந்தர மோதல் போக்கும் , முழு அளவிலான இராணுவ நடவடிக்கையும் பாரிய பின்னடைவுகளை உருவாக்கலாம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். தோழர் கணபதி ஊடகவியலாளர் ஜேன் மிர்தாலுக்கு வழங்கிய நேர்காணலில் ” பொதுவாக மக்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் யருடனும் ஆயுத மோதலோ வன்முறையோ தேவையில்லை. அவர்கள் எதிரிகளைத் தற்காத்துக் கொள்வதற்கும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவுமே போராடுகிறோம். இன்றைய போராட்டத்தோடு ஒப்பிடும் போது குறைவான நிலப்பரப்பில் நடத்திய தெலுங்கானா கிளர்ச்சியில் இருந்து கற்றுக் கொண்ட பாடத்தோடு இந்தப் போரை சந்திக்கிறோம். அனைத்து சாத்தியங்களையும் கொண்ட இந்த யுத்தத்தில் சிறிய இடை அமைதியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அது கொஞ்சம் நீண்டகால அமைதியாக இருந்தாலும் மக்களுக்கு நல்லதுதான்” என்கிறார் தோழர் கணபதி. ஆக வாசல் வரை வந்து ஏவக் காத்திருக்கும் வேட்டைக்காரர்களின் அனுபவங்களை அவர்கள் மக்கள் நலனில் இருந்து யோசிக்கிறார்கள். ஆனால் ஜிண்டாலுக்கும், எஸ்ஸாருக்கும் தேவையான கனிம வளங்கள் புதைந்திருக்கும் நிலங்களைக் காக்க சமாதானமாகவோ, வன்முறை வழியிலோ முயன்றால் அதை எப்படி சிதம்பரம் அனுமதிப்பார். ஆக அமைதியை புதை குழியாக்கும் எல்லா சாத்தியங்களையும் இவர்களே உருவாக்குகிறார்கள். அதன் முன்னுதாரணம்தான் தோழர் சிக்குரி ராஜ்குமார் கொலை.

தோழர் ஆசாத் என்னும் சிக்குரி ராஜ்குமார்.
…………………………………………………………………..
தோழர் ஆசாத் என்றழைக்கப்படுகிற சிக்குரி ராஜேந்திரன் இந்திய மாவோயிஸ்ட் இயக்கத்தின் மூத்த தோழர். ஆந்திராவிலுள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் மிக வசதியான குடும்பத்தில் பிறந்து கல்லூரி நாட்களில் புரட்சிகர இயக்கத்திற்கு வந்தவர். கெமிக்கல் என்ஜினியரிங் முடித்தவர். ஆந்திராவின் மாணவர் இயக்கத்திற்கு முன்னோடியாக இருந்த தோழர் ராஜ்குமார் பின்னர் மக்கள் யுத்தக் குழுவில் இணைந்தார். கட்சியின் விசாகப்பட்டின மாவட்ட கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்தியா முழுக்க பல்வேறு முக்கிய கருத்தரங்குகளில் பேசியிருக்கிறார். 1981& ல் சென்னையில் நடந்த தேசியம் குறித்த கருத்தரங்கில் தோழரின் பங்கு குறிப்பிடத் தக்கது. 1982&ல் கட்சியால் கர்நாடகாவிற்கு அனுப்பப் பட்டார். இந்திய புரட்சிகர இயக்கத்திற்காக தன் வாழ்வை அர்பணித்துக் கொண்ட தோழர் ஆசாத் கடின உழைப்பாளி. அறிவை மேன்மையான ஒன்றாகக் கருதாத தோழர் ராஜ்குமார் மக்களிடம் உறையாடுவதையும் மக்களுக்காக வாழ்வதையுமே பெருமையாகக் கருதியவர். ஆந்திர புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தில் செயல்பட்டு இலக்கியம், எழுத்து தொடர்பாக ஆழமான விமர்சனங்களை முன் வைத்தவர். இப்போது அவர் இந்திய அரசுப்படைகளின் ஒரு அங்கமான ஆந்திரப் போலிசால் வீழ்த்தப்பட்டிருக்கிறார். இந்திய புரட்சிகர இயக்கத்தில் 35 ஆண்டுகளாக தன்னை இணைத்து இடைவிடாது மக்கள் பணி செய்த தோழரின் இழப்பு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் புரட்சிகர முற்போக்கு சக்திகளுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். தோழர் ராஜ்குமார் கொல்லப்பட்டுள்ள நிலையில் தோழர் சீத்தாக்காவும் காணாமல் போயுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

தோழர் சிக்குரி ராஜ்குமாரின் தலைக்கு அரசு 12 லட்சம் விலை நிர்ணயம் செய்திருந்தது. தேடப்படும் பயங்கரவாதியாக அவர் அறிவிக்கப்பட்டிருந்தார். கட்சிப் பணி தொடர்பாக தண்டகாரண்யா நோக்கிச் சென்றவரை நாக்பூர் ரயில் நிலையத்தில் பிடித்து மகாராஷ்டிராவில் உள்ள அடிலாபாத் காட்டிற்குக் கொண்டு சென்று அவரோடு கூடவே கடத்தப்பட்ட பத்திரிகையாளர் ஹேமச்சந்திர பாண்டேயையும் சுட்டுக் கொன்று விட்டு துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது அரசு. தோழர் ஆசாத்( ராஜ்குமார்) கொல்லப்பட்டது தொடர்பாக மாவோயிஸ்ட் கட்சியின் தண்டகாரண்யா பேச்சாளர் தோழர் உசேந்தி பல உண்மைகளை வெளியிட்டுள்ளார். ” நான் ஏற்கனவே ஆசாத்தை ஆந்திரப் போலீசார் குறிவைத்து விட்டதை ஊடகங்களுக்குச் சொல்லியிருந்தேன். ஜூன் ஒன்றாம் தியதி ஆசாத் தண்டகாரண்யாவுக்கு வர வேண்டும் சுமார் ஒன்று அல்லது ஒன்றரை மாதம் இங்கே தங்கியிருந்து தோழர்களுக்கு அரசியல் வகுப்பெடுக்க வேண்டும் என்பது கட்சி அவருக்கு வழங்கிய வேலை. ஹிந்தி மொழியில் ஒலிபரப்பாகும் பி.பி.சி ரேடியோவுக்கு ஒரு நிகழ்ச்சி செய்ய வேண்டும் என்பது தோழர் ராஜ்குமாரின் எண்ணம். ஆனால் இது பி.பி.சி வானொலிக்குத் தெரியாது இந்த திட்டத்தின் படி தோழர் ஆசாத் முப்பதாம் தியதியே நாக்பூர் வந்து விடுகிறார். அவர் வந்து விட்ட செய்தி ஜூன் 30&ஆம் தியதி எனக்குக் கிடைத்தது. மறு நாள் ஜூலை ஒன்றாம் தியதி காலை சாதேவ் என்ற தோழரை நாக்பூரில் இருக்கும் சீதாப்ருதி என்ற இடத்தில் சந்தித்து விட்டு அன்றே காலை 11 மணியில் இருந்து ஒரு மணிக்குள் தண்டகாரண்யா வந்து விடுவேன் என்று எனக்கு தகவல் அனுப்பியிருந்தார் தோழர் ராஜ்குமார். ஆனால் அதுதான் அவரிடம் இருந்து வந்த கடைசிச் செய்தி.

ஜுலை இரண்டாம் தியதி இரண்டு மாவோயிஸ்டுகளைக் கொன்றுவிட்டதாகச் சொன்னார்கள். அடிலாபாத் காட்டில் வைத்து இரண்டு மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும் ஏ.கே. 47 ரக துப்பாக்கியும், பிஸ்டலும் கிடந்ததாகவும் கதை சொல்கிறார்கள் அடிலாபாத்தில் எங்கள் கட்சியோ எங்களுக்கான வேலைத்திட்டங்களோ எதுவும் இல்லாத போது தோழர்கள் ஏன் அடிலாபாத்திற்கு செல்ல வேண்டும். முதலில் நாங்கள் அவர் சந்திக்கச் சென்ற தோழர் சாதேவையும் கொன்று விட்டார்கள் என்றுதான் நினைத்தோம். சாதேவ் என்று நம்பியதால்தான் அவர் பெயரை முதலில் சொன்னோம். ஆனால் தோழர் சாதேவ் எங்கள் பகுதிக்கு வந்து விட்டார். தோழர் ராஜ்குமாருடன் சென்ற தோழர் சீத்தாக்க்காவைக் காணவில்லை இப்போது வரை சீத்தாக்கா என்னவானார் என்கிற தகவல்கள் இல்லை.” என்கிறார் தோழர் உசேந்தி. தோழர் சீத்தாக்க குறித்து உசேந்தி சொன்னதாக வெளியாகியுள்ள இத்தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து உறுதிப்படுத்துவதற்குள் தோழர் ராஜ்குமாரை கான்பூரில் பிடித்துச் சென்றதாகச் சொல்கிறார்கள்.

ஊடகவியளார் ஹேமச்சந்திர பாண்டே
……………………………………………………………..

உத்திரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முற்போக்கு ஊடகவியளாரான ஹேமச்சந்திர பாண்டேவுக்கு வயது 30. உத்தர்காண்டின் பிட்டோகார் நகரில் பிறந்து நைனிடால் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரலாறு முடித்து ஆய்வு ஒன்றை மேற்கொள்வதற்காக பதிவும் செய்து வைத்திருந்தவர். கல்லூரி நாட்களில் மாணவர் அமைப்பில் இருந்தாலும் அதன் புரட்சிகர நடைமுறையில் முரண்பட்டு விலகியவர் பின்னர் மாவோயிஸ்ட் கட்சியின் ஆதரவாளராக செயல்படுகிறார். மாவோயிஸ்டுகள் மீது மரியாதையும் அன்பும் கொண்டவர் ஹேமச்சந்திர பாண்டே. ஹைதராபாத்தில் பாண்டேயின் உடல் வைக்கப்பட்டிருந்த போது தோழர் கத்தார், வரவரராவ் ஆகியோர் சென்று அஞ்சலி செலுத்தினார்கள் பெருந்திரளான ஊடகவியலாளர்கள் திரண்டு பாண்டேவுக்கு அஞ்சலி செலுத்துவதைக் கூட விரும்பவில்லை ஆந்திர மாநில அரசு. நெஹ்துனியா என்ற இந்தி பத்திரிகையின் ஆசிரியர் அலோக் மேத்தாவோ இவர் எங்கள் ஊடகத்தில் எதுவுமே எழுதியதில்லை என்று ஹேமச்சந்திர பாண்டேயின் அடையாளத்தை கைகழுவினார். ஆனால் பாண்டேயின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள வந்திருந்த ஊடகவியளார்களோ அவர் பத்திரிகைப் பணியில் தங்களுக்குச் செய்த உதவிகளை பட்டியலிட்டனர். இங்குதான் ஹேமச்சந்திர பாண்டேயின் மனைவி பாபிதாவின் மன உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நான் நினைக்கிறேன் ஹேமச்சந்திர பாண்டே மாவோயிஸ்டுகளோடு தனக்குள்ள தொடர்பை தன் மனைவி பாபிதாவிடம் மறைத்திருக்க வேண்டும்.

அவர் தனது புரட்சிகர செயல்பாடுகளுக்கு தடையாக இருப்பார் என்று ஹேமந்த் நினைத்திருக்கக் கூடும். பாபிதா இப்படிச் சொல்கிறார் ” பாண்டேவுக்கு மாவோயிஸ்டுகள் மீது கரிசனம் இருக்கலாம் ஆனால் அவர் எப்போதும் ஒரு மாவோயிஸ்டாக இருந்ததில்லை. பலர் அவரை மாவோயிஸ்டு என்கிறார்கள். சிலர் அவர் பத்திரிகையாளரே இல்லை என்கிறார்கள். பாண்டே ஒரு பத்திரிகையாளர் எங்களுக்கு போதிய வருவாய் இல்லாத காரணத்தால் அவர் சுதந்திர ஊடகவியலாளராக இருந்தார். அதற்கான சான்றுகள் என்னிடம் இருக்கிறது. ஜூன் ஒன்றாம் தியதி நாக்பூரில் ஒரு பத்திரிகைப் பணிக்காகச் ( Assignmend) செல்கிறேன் என்று சொல்லி விட்டுத்தான் சென்றார்” என்கிறார் பாபிதா.

ஆனால் மாவோயிஸ்ட் கட்சியினரோ கட்சியின் வடக்கு மண்டலத்தில் ஹேமச்சந்திர பாண்டேவுக்கு நாங்களே சில வேலைகளைக் கொடுத்திருக்கிறோம். மண்டலப் பொறுப்பாளராகவும் அவரை சமீபத்தில் நியமித்திருந்தோம் என்கிறார்கள்.

ஹேமச்சந்திர பாண்டே கட்சியோடும் மக்களோடும் நெருக்கமாக இருந்திருக்கிறார். ஒரு ஊடகவியளாராக இருந்து முழுப் பொழுதையும் மாத ஊதியக்காரனாக கழிக்காமல் மக்களோடு இணைந்த பத்திரிகையாளராக பணியாற்றியும் வந்திருக்கிறார். இதில் கட்சியோடு கொண்டிருந்த தொடர்புகளை அவர் பாபிதாவிடம் சொல்லாமல் தவிர்த்திருக்கலாம். தனது கணவரின் கொலைக்காக பாபிதா ஆந்திரப் பிரதேச உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டியைச் சந்தித்து ஹேமந்தின் சம்பளப்பட்டுவாடா ரசீதுகளைக் காண்பித்து ஹேமச்சந்திர பாண்டே ஒரு ஊடகவியளர் அவரை ஏன் ஆந்திர சிறப்பு அதிரடிப்படைக் கொன்றது என்று விசாரணைக் கோரிக்கை வைக்க அவரோ, ‘ஹேமச்சந்திர பாண்டே கட்சியின் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார் இது தொடர்பாக விசாரித்துக் கொண்டிருக்கிறோம்’ என்றார். ரெட்டியோ, சிதம்பரமோ அவர்களுக்கு பாபிதாக்களின் கண்ணீருக்கு என்ன முக்கியத்துவம் கொடுப்பார்கள். பாராளுமன்றத் தாக்குதலில், தாஜ் ஹோட்டல் தாக்குதலில், மாவோயிஸ்டுகள் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் மனைவிகளின் கண்ணீருக்கே இந்த செல்வந்தவர்களிடம் ஒரு மதிப்பும் கிடையாது. மும்பை தாஜ் ஹோட்டலில் கொல்லப்பட்ட கோடீஸ்வரர்களின் கண்ணீருக்கு வேண்டு மென்றால் ஆளும் வர்க்கங்களிடம் மதிப்பிருக்கலாம்.

மாவோயிஸ்டுகள் கடத்திக் கொன்ற காவல்துறை இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் இந்துவாரின் மனைவியின் கண்ணீருக்கோ, அல்லது தாந்தேவாடாவில் கொல்லப்பட்ட சி.ஆர்.பி.எப்ஃ வீரர்களின் மனைவிகளின் கண்ணீருகோ என்ன மதிப்பிருக்கும்? காஷ்மீரில், மத்திய இந்தியாவில் போராடும் சக்திகளுக்கு எதிராக இந்திய கூட்டு மனச்சாட்சியில் ஒரு தேசிய வெறியை கட்டமைக்க மட்டுமே இந்தப் பிணங்களை பயன்படுத்துகிறார்கள். ராஜீவ்காந்தியைப் புதைக்காமல் இன்னமும் தமிழகத்தையே ஒரு எமர்ஜென்சிக் கோட்டையாக நடத்திக் கொண்டிருக்கிறார்களே அது போன்ற ஒரு நிரந்தர ஒடுக்குமுறைக்காக இந்தப் பிணங்கள் தேவைப்படுகின்றன. ஆக பாபிதா யாரிடம் போய் நியாயம் கேட்க முடியும்?

கூடவே அவர்கள் அமைதியையும் கொன்று விட்டார்கள்.
………………………………………………………………………………………….

பேச்சுவார்த்தைக்கான நம்பிக்கைகள் இன்னமும் மீதமிருப்பதாக சுவாமி அக்னிவேஷ் சொல்லியிருக்கிறார். மாவோயிஸ்டுகளிடமிருந்து வந்த கடிதத்தில் தேதி குறிப்பிடாதிருந்த நிலையில் சிதம்பரம் மூன்று தேதிகளை அதாவது ஜூலை 10, ஜூலை 15, ஜூலை 20 இந்த மூன்று நாட்களும் அரசுப் படைகள் யுத்த நிறுத்தம் செய்யும். அதே நாட்களில் மாவோயிஸ்டுகளும் யுத்த நிறுத்தத்திற்கு தயாரா என்று சிதம்பரம் அகினிவேஷிடம் கடிதம் மூலம் கேட்க அரசின் கோரிக்கையை அக்னிவேஷ் மாவோயிஸ்டுகளிடம் தெரிவிக்கிறார். அந்த கோரிக்கை தொடர்பான ஆலோசனைக்குத்தான் தோழர்கள் சிக்குரி ராஜ்குமாரும், சீத்தாக்காவும், தோழர் ஹேமச்சந்திர பாண்டேவும், சாதேவும் நாக்பூரில் சந்திக்கும் திட்டத்தோடு சென்றிருக்கிறார்கள். இப்போது சாதேசைத் தவிற யாருமே இல்லை. ராஜேந்திரனும், பாண்டேவும் கொல்லப்பட்டு விட்டார்கள். சீத்தாக்கா என்னவானார் என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட அமைதிக்கான நாட்களாக குறிக்கப்பட்ட ஜூலை முடியப் போகிறது ராஜ்குமாரின் ரத்தக் கறைகளோடு நிற்கும் அவர்களிடம் நாங்கள் பேச வெண்டுமா? என்று ஆவேசமாக மாவோயிஸ்டுகள் கேட்கிறார்கள். இக்கட்டுரை எழுதி முடிக்கப்பட்ட நிலையில் இன்று 26&07&2010 அன்று ஆறு மாவோயிஸ்டுகளைக் நேரடி மோதலில் கொன்று விட்டதாக செய்திகள் வருகின்றன. மாவோயிஸ்டுகளை இவர்கள் கொலைகளைச் செய்யத் தூண்டுகிறார்கள். இவர்கள் செய்யும் கொலைகளுக்கு பதிலடியாக அவர்கள் செய்யும் அரசியல் படுகொலைகளை பூதாகரப்படுத்திக் காட்டுகிற ஊடகங்கள் விலங்களைப் போல கொன்று கம்புகளின் காவிச்செல்லப்படும் மாவோயிஸ்டுகளின் உடல்கள் பற்றி குறைந்த பட்ச கவலையைக் கூட வெளிப்படுத்துவதில்லை.

தண்டகாரண்யாவின் இன்றைய அமைதி இழந்த் நிலைக்கு சோனியா, மன்மோகன், சிதம்பரம்தான் பொறுப்பேற்க வேண்டும். கடந்த பல வருடங்களாக அமைதி இழந்து விட்ட தண்டகாரண்யா மக்களுக்கு குறைந்த பட்சம் சிவில் வாழ்க்கை உறுதிப்படுத்தப்படும் என்றால் அமைதிப் பேச்சுவார்த்தைகள் சாத்தியமானால் நமக்கும் சந்தோஷம் தான். ஆனால் இவர்கள் மாவோயிஸ்டுகளிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள். பழங்குடிகளிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமைதிக்கான சாத்தியங்கள் குறித்துப் பேச முடியும்.

இந்திய அரசோ மாவோயிஸ்டுகள் பாராளுமன்ற அரசியலுக்கு வர வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.

அதாவது சி,பி.எம் கட்சியைப் போல அவர்களும் தேர்தல் அரசியலில் பேரம் பேசும் சக்திகளாக வலுப்பெறுவதை இந்தியா விரும்புகிறது. ஆனால் மாவோயிஸ்டுகள் ஒரு போதும் தேர்தல் அரசியலுக்குள் வர விரும்பவில்லை. வரவிரும்பவில்லை என்பதை விட அரைக் காலனிய, அரை நிலபிரபுத்துவ அமைப்பை தூக்கி எரிந்து விட்டு புதிய ஜனநாயக புரட்சியை மாவோ சிந்தனையில் வன்முறை வழியில் நிறுவப் போராடும் அமைப்பு எப்படி தேர்தல் அரசியலுக்குள் வரும் என்பதே அடிப்படை முரண். அடுத்து மாவோயிஸ்டுகள் வைக்கும் அடுத்த கோரிக்கை, நிலத்தின் மீதான உரிமை பழங்குடி மக்களுக்கே என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்கள் கோரிக்கை. ஆயுதப் போராட்டம் தேர்தல் அரசியல் என்பதை எல்லாம் விட சிதம்பரம் அன் கோவுக்கு உறுத்துகிற மிகப்பெரிய அச்சுறுத்தலே இதுதான். அவர்கள் எஸ்ஸார், ஜிண்டால் உள்ளிட்ட ஏராளமான சுரங்க, கனிம நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போட்டு வைத்துக் கொண்டு நிலங்களை குறிவைத்து களமிறங்குகிறார்கள். மக்களை வெளியேற்றி விட்டு முழுமையாக வளங்களை கொள்ளையடிக்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதுதான் சிதம்பரத்தின் திட்டம். மாவோயிஸ்டுகளோ மக்களையும் நிலங்களையும் காப்பாற்றியாக வேண்டும். ஒன்றிலோ புரட்சியை மாவோயிஸ்டுகள் கொண்டு வர வேண்டும் அல்லது போராட வேண்டும். அல்லது தனியார் முதலாளிகளுக்காக தனிப்பட்ட விருப்பங்களோடு படைகளைக் குவிக்கும் சிதம்பரம் வெற்றி பெற வேண்டும். எழுத்தாளர் அருந்ததிராய் தோழர்களுடன் ஒரு பயணம் என்னும் நூலில் முக்கியமான பிரதானமான அந்தக் கேள்வியை முன்வைக்கிறார் தண்டகாரண்யா காடுகளில் உள்ள வளங்களை இந்தியா எடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் மாவோயிஸ்டுகள் எதிர்க்கிறார்கள். ஒரு வேளை மாவோ சிந்தனையின் அடிப்படையில் மாவோயிஸ்டுகளின் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் அந்த கனிமங்களை தோண்டி எடுக்காமல் விட்டு விடுவார்களா ? என்று கேட்டிருக்கிறார். தமிழகத்தின் நாமக்கல் பகுதியில் கண்டறியப்பட்டிருக்கும் பிளாட்டினப்படிமங்கள் என்பது எடுத்து பயன்படுத்தத்தான்.

ஆனால் அது யாருடைய வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் அதை எதிர்ப்பதா? ஆதரிப்பதா? என்பது உருவாகிறது. நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு மரபான விவசாய முறைகளை நவீனப்படுத்தி காடுகளைப் பாதுகாத்துக் கொண்டே இவைகளைச் செய்ய முடியும். மற்றபடி வளர்ச்சியின் பெயரால் சட்லஜ் நதியின் கட்டப்பட்டிருக்கும் பக்காரா அணையின் பெயராலோ நர்மதாவின் பெயராலோ வெளியேற்றப்படும் மக்களை தொடர்ந்து வஞ்சிப்பது என்பது அவர்களை தங்களின் பூர்வீக நிலங்களில் இருந்து அப்புறப்படுத்தவேயன்றி வேறொன்றும் இல்லை. ஆக இங்கே எஸ்ஸாரும்….ஜிண்டாலும்…..ரத்தம் கேட்கிறார்கள். பெரும் ரத்தக்களறியை ஏற்படுத்துவதின்றும் இந்தியப் படைகளுக்கு தயக்காமான ஒன்றல்ல. இப்போதே நவீன போர் ஒன்றை தன் சொந்தக் குடிகள் மீதே தொடுப்பதற்கு தயாராகி விட்டது.

அறிவித்தல்

Thursday, July 29, 2010

சரமாகோ இறப்பெய்தினார் .

போர்த்துகேய நாட்டின் சிறந்த எழுத்தாளர் யூசே சரமாகோ இறப்பெய்தினார்.
-கரவைதாசன்-

"
பனிக் காலம் தொடங்கும் ஒரு பொழுதில் இரவு பகல் சமமாகும் நாள் நெருங்கு முன் நீர் பிறந்தீர். பழைய உலகம் மறைத்து இக்காலத்தின் குறியீடாக புது உலகின் அடையாளமாக ஓர் வளைவைப்போல் நீர் வந்தீர். எமக்கு பின் வழிவழித் திரண்டு வரும் எம் மக்கள் அவ்வளைவை பார்த்து விட்டுத்தான் கடந்து நடக்க வேண்டியிருக்கும் "

போர்த்துகேய நாட்டின் சிறந்த எழுத்தாளரும், மாக்சிய சிந்தனையாளரும் , இலக்கியத்திற்கான நோபல் பரிசினை பெற்றவருமான jose de souse saramago அவர்கள் தனது 87 வது வயதில் இறப்பெய்தினார்.
1922 ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ந் திகதி Azinhaga எனும் குக் கிராமம் ஒன்றில் தொடங்கிய அவரின் காலச் சக்கரம் யூன் மாதம் இறுதிப்பகுதியில் 2010ல் நகர்ந்து, ஸ்பெயின் நாட்டில் கனாரியன் தீவில் அவரின் சொந்த இல்லத்தில் நின்றகர்ந்தது.


அறிவித்தல்

tp];tNrJ ,yf;fpag;ghyk;
Gyk; ngah;e;Njhh; gilg;Gfisj; jhq;fp tUk; rpWfij njhFjp


,Wjp jpfjp : 31-08-2010


md;Gld; vOj;jhsh;fs;> ,yf;fpa Mh;tyh;fSf;F>

fle;j xU khjkhf njhiyNgrpfs;> kpd;dQ;ry;fs; %ykhf jq;fSld; njhlh;ig Vw;gLj;jpf;
nfhz;l tp. [PtFkhud; Mfpa ehd; ,e;j xU khj fhyfl;lj;jpy; Vw;gl;Ls;s Kd;N;dw;wq;fs;; kw;Wk;
re;jpj;j vjph;tpidfs; vd;gtw;iw ,jpy; gfph;e;J nfhs;Stjd; %yk; ehk;; vLj;Js;s Kaw;rp ve;j jpir Nehf;fp nrd;W nfhz;L ,Uf;fpwJ vd;gjid midtUld; gfph;e;J nfhs;s tpUk;Gfpd;Nwd;.

kPz;Lk; xUKiw. . .rPjhgpuhl;biaAk; ,uhkgpuhidAk; neQ;irj; jpwe;J fhl;ba mDkhuhf
,e;j Gyk;ngah;e;Njhh; njhFg;Ngh.. . md;wpy; njhlh;e;Jk; ,yq;ifapy; cs;s ghlrhiyfSf;Fk; E}yfq;fSf;Fk; 1000 Gj;jfq;fs; toq;f ,Uf;Fk; jpl;lNkh ve;j murpay; mikg;Gf;Fk; MjuthdNjh md;wpy; vjpuhdNjh ,y;iy vd;gij gjpT nra;J nfhs;fpd;Nwd;.

Nkyhf midj;Jyf tpoh gw;wpa re;Njfq;fs; vJthapDk; jaT nra;J mT];jpNuypahtpy; cs;s jpU. KUfG+gjpaplNkh (0061-3-9308 1484) md;wpy; ,yq;ifapy; ntspahFk; Qhdk; rQ;rpif Mrphpah; jpU. QhdNrfudplNkh (0094-11-2586013)Nfl;lwpAkhW ,jpy; ghpe;Jiu nra;fpd;Nwd;.

,e;j tpohtpy; gq;Fgw;wp mwpf;iffs; rkh;g;gpf;f ,Uf;Fk; gy mwpQh;fs;> vOj;jhsh;fs; thpirapy;
nld;khh;f; mur E}yfj;jpd; jkpo;g; gFjp MNyhrfh; vd;W Kiwapy; E}y;fspd; thrpj;jYk;; guk;gYk; vd;Dk; jiyaq;fj;jpy; mwpf;if rkh;gpf;f ,Uf;fpd;Nwd;.

Nghh; Kbe;J ,yq;iff;F Nghd nghOJ mq;Fs;s ghlrhiyfs;> E}yfq;fis ghh;j;j nghOJ mq;Fs;s ntw;wplk; vd;Ds; Vw;gLj;jpa jhf;fk; jhd; ,e;j 1000 Gj;jfq;fis ,ytrkhf nfhLf;Fk; jpl;lk; MFk;. jw;nghOJ midj;Jyf vOj;jhsh; tpohtpy; ,jid Muk;gpg;Nghk; vd Muk;gpf;fpd;NwNd jtpu ,e;j Kaw;rp> vOj;jhsh; tpohtpw;F gpd;Gk; jd;topapy; njhlh;eJ nfhz;L ,Uf;Fk; vd midj;J jkpo; Mh;tyh;fSf;Fk; gzpTld; njhptpj;Jf; nfhs;fpd;Nwd;.

,jw;fhf midj;J vOj;jhsh;fisAk; ,izj;J ,yq;ifg; ghlrhiyfSf;Fk; E}yfq;fSf;Fk; Gj;jfk; toq;Fk; jpl;lj;ij Nkw;nfhs;s vd;dhy; Kbe;jsT ghLgLfpd;Nwd;.

NkYk; 1994y; jpU. ,e;jpuh ghh;j;jrhujpapdhy; njhFf;fg;gl;L kpj;uh gjpg;gfj;jpdhy; ntspaplg;gl;l
gdpAk; gidAk; gw;wpa Fiwepiwfs; gw;wp ´’gjpTfs; ,izaj;jsj;jpy; ntspahfpapUf;Fk;
fl;Liuia thrpj;j nghOJ gy vOj;jhsh;fs; jtwtplg;gl;lJ gw;wp xU nra;jp ,Ue;jJ.
,g;gbahd nghpa Kaw;rpia Nkw;nfhs;Sk; nghOJ mg;gb jtWfs; eilngWtJ kpfr;rhjhuzNk.
nld;khh;f;fpy; ,Ue;j ,ju 2 Mrphpah;fspd; rpWfijfs; mjpy; gpuRuk; MfpAk; ehd; jtw tplg;gl;lJ gw;wp ,d;dwTk; ehd; myl;bf; nfhz;ljpy;iy. cz;ikapy; ,d;Ws;s mstpw;F kpd;dQ;ry; trjpfs; ,y;yhj fhyj;jpy; midtiuAk; njhlh;G nfhs;Sjy; kpfTk; fbdkhf gzp vd;gijAk; ehd; mwpNtd;.

,t;thwhd jtWfs; Vw;glf; $lhJ vd;w Kd;ndr;nrhpf;ifAld;> vd;dstpy; vdf;Fj; njhpe;j xU 100 NgUf;F ,nkapy; mDg;gpAk; njhiyNgrpapy; njhlh;G nfhz;Lk;> gpd; mth;fs; kw;wth;fSf;F mDg;gp. . .mt;thwhf jw;rkak; 1100 NgUf;F ,nkapypy; jfty;fis mDg;gpf; nfhz;L ,Uf;fpd;Nwd;. ,d;dKk; vj;jidNah NgUf;F jfty;fs; nrd;wilahky; ,Uf;fyhk;. Mdhy; Kaw;;rpfs; njhlh;fpwJ.

NkYk; ,yq;ifj; jkpoh;fs; vd;w XH milahsg;gLj;jy; vk;kpilNa ,Ue;jhYk; jdpkdpjh;fshf>
ehk; nfhz;bUf;Fk; nfhs;iffs;> murpay; Nfhl;ghLfs; - epiyg;ghLfs; - Nkw;Fyfpy; ehk; re;jpj;j ntw;wpfs; - Njhy;tpfs; - Gwf;fzpg;Gfs; - vq;fisg; gw;wp my;yJ ehk; njhpe;J nfhz;bUf;Fk; ,yf;fpaj;ijg; gw;wp ehk; nfhz;bUf;Fk; rhpahd my;yJ gpioahd mstPLfs; kw;Wk; vj;jidNah vj;jidNah fhuzq;fshy; ehk; jdpj;J epw;fpd;Nwhk; vd;gJ cz;ik. mt;thwhd
jdpj;J epw;wy; ,g;gbahd Kaw;r;rpfSf;F jilf;fw;fshf mike;JtpLk; vd;gJk; fhyk; fhykha; ehk; fz;L te;j cz;ik MFk;.

vJ vt;thW ,Ug;gpDk;> fle;j 30 tUlq;fshf Gyk; ngae;j kf;fspd; Neubahd my;yJ kiwKfkhd xj;Jiog;gpdhy; vLj;Jr; nry;yg;gl;l Nghuhl;lj;jpy; Majq;fs; nksdkhfptpl;l fhyfl;lj;jpy; ghjhsepiyf;F js;sg;gl;L thOk; kf;fspd; tho;it kPz;Lk; epiyepWj;Jtjpy; ,Nj Gyk; ngah; kf;fSf;F xU jhh;kPff; flik cz;L. me;j kPsf; fl;b vOg;Gjy; vd;gjid vj;jidNah jsq;fspy; ehk; nra;a Ntz;Lk;. mjpy; xU Jsp jhd; ,e;j ,ytr Gj;jf jpl;lk; vd;gjid ,jaRj;jpAld; ,jpy; gjpT nra;J nfhs;fpd;Nwd;.

Nkyhf jw;nghOJ vq;fs; ,yf;fpa Kaw;rpfs; ,e;jpah> ,yq;if> kNyrpah> rpq;fg;G+iu ikag; Gs;spfsha; itj;J cynfq;Fk; tphpe;J nfhz;L ,Ug;gjhy; ,e;j gzpf;F tp];tNrJ ,yf;fpag; ghyk; vdg; ngah; #l;b ,Uf;fpd;Nwd;.;.

1. 1000 gpujpfis ,yq;ifapy; cs;s ghlrhiyfs;> E}yfq;fSf;F ,ytrkhf toq;Fjy; vd;gjid mJ jdJ Fwpf;Nfhshf nfhz;L ntsptUk; midj;J gilg;GfSk; tp];tNrJ vd;Dk; ,yf;fpaghy mikg;gpD}L ntspaplg;gl ,Uf;fpd;wJ. ,e;j mikg;G ve;j murpay; mikg;igAk; rhh;e;jJ my;y.

2. ,jd; fd;dp Kaw;rpahf ntspahFk; KjyhtJ rpWfijj; njhFjpf;F ahUk; nghUshjhu cjtp (];nghd;rh;) nra;ahjepiyapy; ,jpy; gq;Fgw;Wk; vOj;jhsh;fsplk; ,Ue;Nj ,jw;fhd epjpia t#ypg;gJ vd jPh;khdpj;J ,Uf;fpd;Nwhk;. ,J mz;zsthf 25-30 nlhyh; mstpy; tUk;.

3. gq;Fgw;Wk; xt;nthU vOj;jhsh;fSf;Fk; 5 Gj;jfq;fs; ,e;jpahtpy; ,Ue;J jghy;$yp ,d;wp mDg;gg;gLk;. cz;ikapy; gq;Fnfhs;Sk; vOj;jhshpd; msitg; nghWj;J 25-50 Gj;jfq;fis vOj;jhsUf;F ,ytrkhf toq;f KbAk;. mg;gb toq;Fk; gl;rj;jpy; vOj;jhsh;fs; jghy; nryit nghWf;f Ntz;Lk;.

4. NkNy $wg;gl;ltw;wpy; ek;gpf;ifAk; cld;ghL cs;s midj;J vOj;jhsh;fisAk; ,g;gzpapy; gq;F gw;WkhW md;Gld; Nfl;Lf; nfhs;fpd;Nwd;.

5. ,e;j rpWfij njhFjpf;F Mf;fq;fs; mDg;g Ntz;ba ,Wjp jpfjp : 31-08-2010

6. Mf;fq;fs; me;j me;j ehl;L kf;fspd; tho;tpay;> mq;F vkJ tho;T. . .khw;wq;fs;. . mth;fSld; vq;fs; Gyk; ngah; tho;Tfs; vd me;j me;j ehl;ilj; jskhf nfhz;L mikjy; Ntz;Lk;.

7. gj;J gf;fq;fSf;F (A4) Nkw;glhjthW gilg;Gfs; mika Ntz;Lk;.

,Jtiu rhjfkhd gjpiy my;yJ mth;fspd; rpWfijfis mDg;gp itj;jth;fs;:

fdlh

jpU.m.Kj;Jypq;fk;> jpU. Njtfhe;jd;> jpU. mfpy;> jpU. etk;> jpU. tPuNfrhp. %h;j;jp

mT];jpNuypah

jpU. Mrp. fe;juh[h> jpUkjp. tp[auhzp> jpU. rpwp];fe;juh[h>
jpU. KUfG+gjp> jpU. M&ud;.;

nld;khh;f

jpU. ghykNdfud;> jpU.rf;jpjhrd;> jpU. Nf.v];. Jiu> jpU. Kuspjud;> jpU.[PtFkhud;

Ngh;ypd

jpU. fUzhfu%H;j;jp

N[h;kdp

jpUkjp. rhe;jpdp tujuh[d;> jpU.Qhdf;Fkud

Nehh;Nt

jpU. jpahfypq;fk, jpU. rpth

gpuhd;];

jpU. rptQhdk;> jpU. fNzrypq;fk

RtPld;

nry;tp. tre;jp

Rtpw;];yhe;J

jpU.fy;yhW rjP\;.

nfhyz;l;

jpUkjp. rf;jp

,q;fpyhe;J

jpU. kdNkhfd;

,j;jhyp

jpU. uF

,e;jpah

jpU. hp. Mfpyd

kNyrpah

jpU. nu. fhh;j;jpNfR

rpq;fg;G+h;

jpUkjp : n[ae;jp rq;fh

gp.Fwpg;G : lahdh rjrf;jpehjd;> uFgud; vd;gth;fsJ ehL Fwpg;gplg;gltpy;iy.

,Jtiu jkJ E}y;fis tp];tNrJ gjpg;gfj;jpD}L gjpg;gpj;J ,yq;ifapy; ,ytrkhf toq;f ,Ug;gth;fs;
jpU. E}y;Njl;lk; nry;tuh[h (fl;Liuj; njhFg;G) jpU. md]; - jPgk; hP.tp(fl;Liuj; njhFg;G)
jpUkjp. fyhepjp (ftpij tbtpy; neLehty; jkpo; .- Mq;fpyj;jpy;) jpU. [PtFkhud; (ehty;)
NkYk; 2 ehty;fs; 100 tPjk; cWjp nra;ag;gltpy;iy. mLj;j khjk; cWjp nra;ag;gLk;.

jhq;fs; ,e;jpahtpy; gjpg;gjpj;j E}y;fis vk;%yk; ,yq;ifapy; ,ytrkhf toq;f ,Ug;gth;fs;
nry;tp : Njtij ghujp ,U Gj;jfq;fs; (xt;nthd;wpYk; 300 gpujpfs;)
jpU. jpahfypq;fk; : 3-4 Gj;jfq;fs; (xt;nthd;wpYk; 200 gpujpfs;)

md;Gld;
tp. [PtFkhud;
jeevakumaran5@gmail.com

31-07-2010

Thursday, July 22, 2010

டென்மார்க்கின் முடிக்குரிய ராணி வயன் வந்திருந்தார்

Dronningen på uventet besøg i Vejen

Kun ganske få personer vidste på forhånd, at dronning Margrethe i dag ville besøge Vejen Kunstmuseum.

Dronningen ankom ved 11-tiden i Krone 121 og fik en times rundvisning på museet. Dronningen havde udtrykt særlig interesse for den aktuelle Ballin-udstilling på museet.
Kl. 12.10 gik dronningen, der var ledsaget af sin søster - eksdronning Anne Marie - tilbage til den royale bil for at forlade Vejen.

Tuesday, July 20, 2010

இசைத்திருவிழா

Black & White: Michael Jackson og Elvis er forbillederne
I hvert fald har Michael Jackson sat sine spor – også på rockscenen i Vejen, hvor et af de bands, der er på plakaten til årets Anlægskoncert, ligefrem har taget navn efter et af Jacksons hits.

Det er megahittet, Black or White, som var den bedst solgte single i 1991, og som nu med en lille ændring er blevet til navnet på et af Vejens nyste bands, Black and White.

Både Jacksons, Black or White, og et andet stort hit, A little less conversation, af Elvis Presley, er et par af de sange, bandet har på repertoiret.

– Indtil videre spiller vi udelukkende kopinumre, men vi sætter selvfølgelig vores eget præg på både sang og guitaren, siger Jacob Schmidt Clausen, der er forsanger.

Blandt hans inspirationskilder er danske Tim Christensen og komponisten, Andrew Lloyd Webber, der blandt andet har skrevet The Phantom of the Opera og Jesus Christ Superstar.

– Andrew Lloyd Webber er fra teaterverdenen, men hans musik kan sagtens bruges i rocksammenhænge, siger Jacob Schmidt Clausen, der også har ladet sig inspirere af Michael Jacksons evner som danser.
På scenen kan man nemlig godt lokke ham til at vise en rask lille moonwalk.

Black and White spiller en blanding af rock og pop – poppen er repræsenteret af kunstnere som: Pink, John Mayer og Maroon 5, mens rocken kommer fra kunstnere som, Tim Christensen, Carpark North og Elvis Presley.

– Hvorfor det endte med, at vi blandede rocken med pop, tror jeg skyldes, at vi bare har besluttet at spille nogle af de numre, som vi alle sammen synes er fede, siger Loke Bager Kristensen, der spiller guitar.

Ja, for samtidig tænker vi også meget på, hvad publikum gerne vil høre, siger Goutam Natkunarajah, der spiller trommer.

Black & White har spillet rock-pop i et års tid, og her har man hidtil kunnet høre bandet på hjemmebane i: Connect Club i Vejen, i Læborg Forsamlingshus, til Jule- og Påske-jam i Vejen og på Studioscenen i Vejen.

– Vi har også lige været på Roskilde Festivalen. Det var en stor oplevelse. Her hørte vi et helt nyt superband fra USA, Them Crooked Vultures, der spiller retrorock, siger Loke Bager Kristensen og lader forstå, at Black & White desværre ikke var med på Roskilde Festivalens plakat, men måtte nøjes med en plads blandt publikum.

Til gengæld er Black & White med både på plakaten og på scenen ved Anlægskoncerten lørdag den 21. august.

kilde : jv.dk

செயற்கை உயிர்:

செயற்கை உயிர்:
பழைய
கடவுள் காலி!
புதிய கடவுள் யார்?

-மருதையன்-
உயிர் என்பதை பொருள்முதல்வாதத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட விடை காண முடியாத புதிராகச் சித்தரித்து வாதிட்டவர்களுக்கு இயற்கையின் இயக்கவியல் என்ற தனது நூலில் (1886) எங்கெல்ஸ் பதில் அளித்தார். இயங்கியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் இயற்கை விஞ்ஞானம் அன்று கண்டிருந்த முன்னேற்றங்களின் துணை கொண்டு ‘உயிர்’ என்பதற்கு எங்கெலஸ் அளித்த அற்புதமான பொருள்முதல்வாத விளக்கம் இது.

“புரதப் பொருட்களின் இருத்தலின் பாங்கே உயிர்…. இரசாயன ரீதியாகப் புரதப் பொருள்களைத் தயாரிப்பது என்பது எப்போதாவது வெற்றி பெறுமெனில் அப்போது அவை உயிரின் இயல் நிகழ்ச்சியை நிச்சயமாகவே வெளிப்படுத்தும்…”
“.. மனது – பொருள் என்பதையும் மனிதன் – இயற்கை என்பதையும் உடல் – ஆத்மா என்பதையும் வேறுபடுத்தி எதிர்நிலைப்படுத்துகின பொருளற்ற இயற்கைக்கு முரணான கருத்து மேலும் மேலும் சாத்தியமில்லாமல் போகும்.”

“புரதப் பண்டங்களின் ஆக்கம் அறியப்பட்டவுடன் உயிருள்ள புரதத்தைத் தயாரிக்கும் வேலையில் இரசாயனவியல் இறங்கும். மிகச் சாதகமான சூழ்நிலைகளில் எதை இயற்கை ஒரு சில வான்கோள்களில் செய்து முடிக்கப் பத்து இலட்சக் கணக்கான ஆண்டுகள் பிடித்தனவோ, அதைப் பொழுது விடிவதற்குள் இரசாயனவியல் சாதிக்க வேண்டும் எனக் கோருவது ஒரு மந்திரவித்தையைக் கோருவதற்கு ஒப்பாகும்.”

1886 இல் எதனை மந்திர வித்தை என்று எங்கலெஸ் குறிப்பிட்டாரோ, அந்த மந்திர வித்தையைச் சாதிக்கும் திசையில் இரசாயனவியல் இன்று வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

000

சிந்தடிகா செல்

சிந்தடிகா – Synthetica . அமெரிக்காவின் கிரேக் வென்டர் என்ற விஞ்ஞானி தனது சோதனைக் கூடத்தில் மே, 20, 2010 ஆன்று உருவாக்கியிருக்கும் புதியதொரு நுண்ணுயிரின் பெயர். செயற்கையாக உருவாக்கப்பட்ட உயிர் என்ற பொருள்படும் வகையில் சூட்டப்பட்ட பெயர். சடப்பொருள் வேறு, உயிர்ப்பொருள் வேறு; உடல் வேறு ஆன்மா வேறு என்று கூறி வரும் மதக் கோட்பாடுகள் மற்றும் பல கருத்துமுதல்வாத கோட்பாடுகள் அனைத்தின் முகத்திலும் பூசப்பட்டிருக்கும் கரி – சிந்தடிகா.

ஒரு நுண்ணுயிரின் (பாக்டீரியா) மரபணுக் குறியீடுகளுக்குரிய (டி.என்.ஏ) வேதியியல் மூலக்கூறுகளை செயற்கை முறையில் உருவாக்கி வைத்துக் கொண்டு, வேறொரு பாக்டீரியாவிலிருந்து அதன் மரபணுக்களை நீக்கிவிட்டு, எஞ்சியிருக்கும் அதன் கூட்டுக்குள் அவற்றை உட்செலுத்தி செயற்கை முறையில் திருத்தியமைக்கப்பட்ட புதிய உயிர்தான் சிந்தடிகா.

சிந்தடிகா என்பது இயற்கை தனது இயக்கத்தின் போக்கில் தானே படைத்த புதியதொரு உயிரல்ல; ஏற்கெனவே இருக்கின்ற ஒரு உயிரின் மரபணுவை பிரதி எடுத்து குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட டாலி ஆட்டினைப் போன்ற நகலும் அல்ல. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி அல்லது தக்காளியைப் போன்றதும் அல்ல. இயற்கை படைத்த கூட்டுக்குள் நுழைக்கப்பட்டிருக்கும் செயற்கை என்று இதைச் சொல்லலாம்.

வேர்க்கடலையின் பருப்பை நீக்கி விட்டு தோலுக்குள்ளே செலுத்தப்பட்ட முந்திரிப் பருப்பைப் போன்றது இந்தப் படைப்பு. இந்த முந்திரிப்பருப்பு முந்திரியின் மரபணுவிலிருந்து நேரிடையாகப் படைக்கப்பட்டதல்ல. அந்த மரபணுவின் வேதியியல் மூலக்கூறுகளை சோதனைச்சாலையில் ஒன்றிணைத்து அதன் மூலம் உருவாக்கப்பட்டது. அந்த அளவில் இது உயிரற்ற சடப்பொருளிலிருந்து உருவாக்கப்பட்ட உயிர்.

மைகோபிளாஸ்மா மைகோய்டஸ் என்ற பாக்டிரியாவின் குரோமோசோம் அமைப்பை கணினியின் உதவியுடன் பகுத்தாராய்ந்து, அவற்றின் மரபணுத் தொகுப்பை (ஜெனோம்) சுமார் 10 இலட்சம் வேதியியற் குறியீடுகள் கொண்ட மொழிக்கு மொழிபெயர்த்தனர் கிரேக் வென்டர் குழுவினர். பின்னர் அந்த வேதியியற் குறியீடுகளின் அடிப்படையில் வேதிப் பொருட்களை ஒன்றிணைத்து செயற்கையான மரபணுத் தொகுப்பை (ஜெனோம்) உருவாக்கினர். பின்னர் மைகோபிளாஸ்மா காப்ரிகோலம் என்ற பாக்டிரியாவிலிருந்து அதன் மரபணுத்தொகுப்பை ‘சுரண்டி’ எடுத்துவிட்டு, எஞ்சியிருந்த கூட்டுக்குள் (செல்) தாங்கள் உருவாக்கிய செயற்கையான மரபணுத் தொகுப்பில் சில மாற்றங்களும் செய்து உட்செலுத்தினர். இந்தப் புதிய கூட்டிற்குள் குடியேற்றப்பட்ட மைகோபிளாஸ்மா மைகோய்டஸ் என்ற பாக்டீரியாவின் வேதியியற் பொருட்கள் கூட்டில் பொருந்தி, ஒரு புதிய உயிராக இயங்கத்தொடங்கின.

செயற்கையாக ஒரு மரபணுத்தொகுப்பை உருவாக்குவதற்கு அதன் வேதியியல் சேர்க்கையைக் கண்டறிதல்; அதனை வேறொரு செல்லில் உட்செலுத்தி, அவ்வாறு உட்செலுத்தப்பட்ட (செயற்கையான) மரபணுத்தொகுப்பின் இயங்குமுறையை தனதாக்கிக் கொள்ளுமாறு புதிய செல்லுக்கு(கூட்டுக்கு) புரியவைக்கத் தேவையான உயிரியல் மொழியைக் கண்டறிதல் – இவை இரண்டும்தான் வென்டர் குழுவினர் தீர்வு கண்ட பிரச்சினைகள்.

உடல் வேறு, உயிர் வேறு என்று கருதுகின்ற புராணங்களில் கூறப்படும் ‘கூடு விட்டுக் கூடு பாய்தல்’ என்ற புனைகதையை, நடைமுறையில் சாதித்துக் காட்டியிருக்கிறது இன்றைய அறிவியல். ராமசாமியின் உடலுக்குள் கோயிந்சாமியை நுழைத்து, இனி கோயிந்சாமியாகவே நடந்து கொள்ளவேண்டும் என்று ராமசாமியின் உடலுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது என்றும் இதனை எளிமைப்படுத்திக் கூறலாம். ஆனால் செல் (உடல்) என்பது வெறும் கூடு அல்ல, மரபணு (டி.என்.ஏ) என்பதே உயிரும் அல்ல. இவற்றின் இயங்கியல் ரீதியான சேர்க்கையும், அவ்வாறு சேர்ந்திருத்தலின் பாங்குமே உயிர்.

தனக்கு வேண்டிய ஆற்றலை இயற்கையிலிருந்து தானே கிரகித்துக் கொள்வதையும், தன்னைத்தானே மறு உற்பத்தி செய்து கொள்வதையும் உயிரின் இலக்கணமாகக் கூறுகிறது அறிவியல். தன்னைத் தானே மறு உற்பத்தி செய்து கொண்டு பல்கிப் பெருகியதன் மூலம் இந்த இலக்கண வரையறையையும் நிறைவு செய்திருக்கிறது சிந்தடிகா.

குரோமோசோம் என்பது மரபணுக்களால் அனது; மரபணுக்கள் டி.என்.ஏ, ஆர்.என்.ஏக்களால் ஆனவை; டி.என்.ஏ, ஆர்.என்.ஏ க்கள் பரதத்தினாலும், புரதங்கள் அமினோ ஆசிட்டுகளாலும் ஆனவை. அமினோ ஆசிட்டுகள் வேதிப் பொருட்களால் ஆனவை என்பது ஏற்கெனவே அறியப்பட்ட அறிவியல் உண்மை. கிரேக் வென்டரின் குழு நூற்றுக்கு நூறு சதவீதம் வேதிப்பொருட்களைக் கொண்டே உயிரை உருவாக்கிவிடவில்லையெனினும், அந்தத் திசையை நோக்கி குறிப்பிடத்தக்க அளவில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

எப்படிப் பார்த்தாலும், இயற்கை தன் போக்கில் உருவாக்கியவை அல்லது இறைவனால் படைக்கப்பட்டவை என்று நம்பப்படும் பல்லாயிரம் கோடி உயிரினங்களுக்கு அப்பால், மனிதன் தன் சொந்தக் கையால் உருவாக்கி, “இது நான் உருவாக்கியது” என்று அந்த உயிரிலேயே கையெழுத்தும் இட்டு வைத்திருக்கும் ஒரு புதிய உயிரினம் இது. ‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’ என்ற வகையிலான ‘போலச்செய்தலில்’ தொடங்கிய மனிதன், பறவையைக் கண்டான் பறவையைப் படைத்தான் என்பதை நோக்கியும், இதுவரை இல்லாதொரு புதிய பறவையையும் படைப்பான் என்பதை நோக்கியும் எடுத்து வைத்திருக்கும் அடி.

இந்தக் குறிப்பிட்ட ஆய்வுக்கு மட்டும் பத்து ஆண்டுகளும் 40 மில்லியன் டாலர்களும் செலவாகியிருக்கின்றன. கணினித் தொழில்நுட்பமும், அவற்றின் கணக்கிடும் வேகமும் பன்மடங்கு வளர்ந்திருப்பதனால்தான், பல இலட்சம் ஆண்டுகள் எடுத்துக் கொண்டு இயற்கை உருவாக்கியிருக்கும் இந்த நுண்ணுயிரின் கட்டமைப்பை, ஒரு பத்து ஆண்டுகளில் புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது.

உயிரைச் செய்றகையாக உருவாக்கும் ஆய்வுகள் உலகெங்கும் நடந்து வருகின்றன. ஒரேகானில் உள்ள ரீட் கல்லூரியின் தத்துவத்துறைப் பேராசிரியரும், முற்றிலும் இரசாயனப் பொருட்களிலிருந்தே செயற்கை உயிரை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் புரோட்டோ லைஃப் என்ற இத்தாலிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் பெடோ, “கடவுளின் ஏரியா என்று கருதப்படும் பகுதிக்குள் நாம் நுழைந்திருக்கிறோம். உயிர் என்பது மிகவும் வலிமையானது. நாம் நினைப்பதைச் செய்யும்படி ஒரு உயிரைப் படைக்கமுடியுமானால், எல்லாவிதமான நல்ல காரியங்களையசும் செய்யலாம். பொறுப்புடன் நடந்துகொள்ளும் பட்சத்தில் ‘கடவுளின் வேலையை’ நாம் மேற்கொள்வதில் தவறில்லை” என்கிறார்.

கிரேக் வென்டரின் ஆய்வுக்கூடம், வேதிப்பொருட்களைக் கொண்டு தாங்கள் செயற்கையாக உருவாக்கிய மரபணுத்தொகுப்பினைக் குடியேற்ற, ஏற்கெனவே உள்ள இன்னொரு பாக்டீரியாவின் கூட்டினைப் பயன்படுத்திக் கொண்டனர். மார்க் பெடோவின் ஆய்வுக் குழுவோ, மரபணுக்களைக் குடியேற்றும் கூடுகளை செயற்கையான முறையில் தயாரிக்க முயன்று கொண்டிருக்கிறது. நூற்றுக்கு நூறு சதவீதம் வேதிப்பொருட்களிலிருந்தே உயிரை உருவாக்குவதற்கு மேலும் பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

000

விஞ்ஞானி கிரெய்க் வென்டர்

2500 ஆண்டுகளுக்கு முன்னால் கடவுள் கோட்பாட்டை முன்வைத்த பார்ப்பனிய தத்துவஞான மரபினர், உலகாயதவாதிகளை (பொருள்முதல்வாதிகளை) பார்த்து, “ஜடப்பொருளிலிருந்து, அந்த ஜடப்பொருட்களின் குணங்களைப் பெற்றிராத புதிய குணங்ளைக் கொண்ட உயிர்ப்பொருள் என்பது எவ்வாறு உருவாக முடியும்?” கேள்வி எழுப்பினர். “ஜடப்பொருளான அரிசி புளிக்க வைக்கப்படும்போது போதை எனும் புதிய குணம் கொண்ட மதுவாக மாறுவதைப் போல பஞ்சபூதங்களின் சேர்க்கையில்தான் உயிர் உருவாகிறது” என்று அன்றிருந்த அறிவின் வளர்ச்சிக்கு ஒப்ப கருத்துமுதல்வாதிகளுக்குப் பதிலடி கொடுத்தனர் பொருள்முதல்வாதிகளாகிய சாருவாகர்கள்.

25 நூற்றாண்டுகளில் அறிவியல் வெகுதூரம் வளர்ந்து விட்டது. எனினும் இன்றும் கூட பை பாஸ் சர்ஜரி செய்து கொண்டு, நேரம் தவறாமல் மாத்திரையை விழுங்கிக் கொண்டிருக்கும் பாதிரிகளும், முல்லாக்களும், சங்கராச்சாரிகளும் படுக்கையை விட்டு எழுந்திருக்காத நிலையிலும் கூட, “என்னதான் இருந்தாலும் மனிதனால் ஒரு எறும்பைப் படைக்க முடியுமா? இறைவன் பெரியவன்” என்று கூறி போலித் தன்னடகத்துடன் ஏளனப் புன்னகை சிந்துகிறார்கள்.

எனினும், செயற்கை உயிரியல் (synthetic biology) என்றொரு ஆய்வுத்துறையே உருவாகிவிட்ட இன்றைய நிலையிலும் சிந்தடிகா உருவாக்கப்பட்ட பிறகும், விஞ்ஞானிகள் யாரும் ஆணவம் கொண்டு திரியவில்லை. புதியதைப் படைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்குத்தான் பழையதை ஆய்வு செய்வதும் கற்றுக்கொள்வதும் அவசியமானதாக இருக்கிறது. அந்த வகையில் செயற்கை உயிரைப் படைக்க முனைந்திருக்கும் விஞ்ஞானிகள்தான் இயற்கை படைத்திருக்கும் உயிர்களை ஆய்வு செய்வதிலும் அளப்பரிய ஆர்வம் காட்டுகிறார்கள். 400 கோடி ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பரிணாம வளர்ச்சியின் போக்கில் இயற்கை படைத்திருக்கும் உயிர்களையும், நுண்ணுயிர் செல்களையும் அவை பெற்றிருக்கும் ஆற்றலையும் வியப்புடன் விவரிக்கிறார்கள்.

“நம் விரலை உள்ளே விட்டால் அந்தக் கணமே தசையும், நகமும், எலும்பும் கரைந்து காணாமல் போய்விடும் அளவிற்கான திராவகங்களிலும் உயிர்வாழக்கூடிய நுண்ணுயிர்கள், மனிதர்களைக் கொல்வதற்குத் தேவைப்படுகின்ற அணுக்கதிர் வீச்சைக் காட்டிலும் 1500 மடங்கு அதிகமான கதிர்வீச்சினால் தாக்கிச் சிதறடிக்கப்பட்ட பின்னரும், தன்னைத்தானே தைத்துக் கொண்டு உடனே தன்னை மறுஉற்பத்தியும் செய்து கொள்ளும் ஆற்றல் பெற்ற நுண்ணுயிர்கள், மனிதனும் விலங்குகளும் உறைந்தோ, உருகியோ, சிதறியோ, மூச்சுத் திணறியோ அழிந்து விடக்கூடிய சூழல்களில் சர்வ சாதாரணமாக உயிர்வாழும் நுண்ணுயிர்கள் இயற்கையில் இருக்கின்றன. இயற்கையின் பல்லுயிர்ச் சூழல் குறித்து இதுவரை நாம் அறிந்திருப்பது ஒரு சதவீதம் கூட இல்லை என்பதே உண்மை. நாம் படைக்கவிருக்கும் செயற்கை உயிரிகள் என்னவிதமான பணிகளை செய்யும் ஆற்றல் பெற்றவையாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அவற்றைக் காட்டிலும் பன்மடங்கு ஆற்றல் பெற்ற கோடிக்கணக்கான உயிரிகள் இயற்கையில் ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கின்றன” என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

“இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்துகொள்ள வேண்டியதில்லை… இயற்கையோடு சேர்ந்தவர்கள் நாம், அதன் நடுவில் நிலைவாழ்கிறோம்.. இயற்கையின் நியதிகளைக் கற்றுக் கொண்டு அவற்றைச் சரியாகப் பிரயோகிப்பதில், மற்றெல்லா உயிரினங்களைக் காட்டிலும் நமக்கு அனுகூலம் உள்ளது என்ற உண்மையில்தான் இயற்கையின் மீதான நமது ஆளுமை என்பதன் பொருள் அடங்கியுள்ளது” என்றார் எங்கெல்ஸ்.

மதவாத அறிவிலிகளின் போலித் தன்னடக்கத்திற்கும் அறிவியலாளர்களின் தன்னடக்கத்திற்கும் உள்ள வேறுபாடு இதுதான். “தன்னுடைய படைப்பைப் புரிந்து கொள்ளுவதற்கும், அதனை சிறப்பாக கையாள்வதற்குமான பரிசாக தேவன் மனிதனுக்கு அறிவை வழங்கியிருக்கிறான் என்பதற்கு இது (சிந்தடிகா) இன்னொரு நிரூபணம்” என்று மிகவும் அற்பத்தனமான முறையில் கடவுளை முட்டுக் கொடுத்து நிறுத்த முயன்றிருக்கிறார் இத்தாலிய கத்தோலிக்க திருச்சபையின் கார்டினல் அஞ்சலோ பாக்னசோ.

“தன்னைக் கடவுளாகக் கருதிக் கொள்வதும் கடவுளுக்கே உரிய படைப்பாற்றலை ஏந்திச் சுழற்றுவதும் மனிதனை காட்டுமிராண்டித்தனத்தில் தள்ளிவிடும். படைப்பவன் ஒருவன் மட்டுமே – அவன்தான் இறைவன் என்பதை விஞ்ஞானிகள் ஒருக்காலும் மறந்து விடக்கூடாது” என்றார் மோகேவெரோ என்றொரு பாதிரி. காட்டுமிராண்டித் தனத்தைப் பற்றிப் பேசும் யோக்கியதை கத்தோலிக்கத் திருச்சபைக்கு உண்டா என்பது ஒருபுறம் இருக்க, சிந்தடிகா குறித்த செய்தி வெள்வந்தவுடனே, ‘அழித்தல்’ தொழிலில் ஈடுபட்ட சங்கராச்சாரியும் கூட ‘ஆக்கல்’ தொழிலை பிரம்மனிடமிருந்து மனிதன் அபகரித்துக் கொண்டிருப்பது குறித்து தனது கவலையை வெளியிட்டிருக்கிறார்.

செயற்கை உயிரின் ஆக்கத்தின் மூலம், கடவுள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பை அறிவியல் மேலும் அடைத்து விட்டது. எனினும், கடவுள் கல்லறைக்குச் செல்ல மறுக்கிறார். காரணம், எந்த முதலாளித்துவம் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு மூலதனமிடுகிறதோ, அதே முதலாளித்துவம் அறிவியலை தனது இலாப நோக்கத்துக்கான கருவியாகப் பயன்படுத்துவதன் மூலம், கடவுள் இன்னமும் உயிரோடிருக்க துணை செய்கிறது.

தனது கொள்ளை இலாப நோக்கத்துக்காக இயற்கை முதல் மனிதர்கள் வரையில் எதையும், யாரையும் அழிக்கத் தயங்காத முதலாளி வர்க்கம் அறிவியலின் துணை கொண்டு நடத்தியிருக்கும் அழிவு வேலைகளைக் காட்டி, படைப்புப் பணியை கடவுளிடமிருந்து மனிதன் பறித்துக் கொண்டால் நேரக்கூடிய விபரீதங்களைக் காட்டி நம்மை மிரட்டுகிறார்கள் மதவாதிகள். திருச்சபை கூறுவது போல அறிவியல் மனிதனிடம் சிக்கியிருக்கவில்லை. தம்மளவில் மனிதத்தன்மையை அகற்றியவர்களும், மனிதகுலத்திடமிருந்தும் அதனை அகற்ற விரும்புகிறவர்களுமான உலக முதலாளி வர்க்கத்திடம் சிக்கியிருக்கிறது அறிவியல்.

அணு ஆயுதங்கள், இரசாயன ஆயுதங்கள், உயிரி ஆயுதங்கள், மரபணு மாற்ற விதைகள், புவி சூடேறுதல் மற்றும் இயற்கைப் பேரழிவுகளைத் தோற்றுவித்துள்ள உலக முதலாளி வர்க்கம், அறிவியலால் அகற்றப்பட்ட கடவுளை மீண்டும் அரியணையில் அமர்த்துகின்றது. மதவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருகிறது. இதன் விளைவாக, அறிவியலின் சாதனைகள் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் தருவதற்குப் பதிலாக அச்சத்தையும் அவநம்பிக்கையையும் தோற்றுவிக்கின்றன. சிந்தடிகா – இதற்கு விலக்கல்ல.

000

புதிய நுண்ணுயிரை வடிவமைத்து உருவாக்குவதைச் சாத்தியமாக்கியிருக்கும் இந்த முன்னேற்றத்தின் பயனாக, தொற்று நோய்கள் மற்றும் ஆட்கொல்லி நோய்களுக்கான புதிய தடுப்பு மருந்துகளை உருவாக்கலாம். பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற அழிக்க முடியாத கழிவுகளைக்கூட தின்று செரிக்கும் திறன் கொண்ட நுண்ணுயிர்கள், கரியமிலவாயுவை உறிஞ்சும் நுண்ணுயிர்கள், உயிரி எரிபொருளை (பயோ ஃப்யூவல்) உருவாக்கித்தரும் நுண்ணுயிர்கள் போன்ற பலவற்றையும் உருவாக்கலாம்.

அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனம், வெவ்வேறு விதமான பணிகளைச் செய்யக் கூடிய சுமார் 2000 உயிரி உறுப்புகளின் டி.என்.ஏ குறியீடுகளைத் (BioBrick parts) பட்டியலிட்டுத் தொகுத்து வைத்திருக்கிறது. போல்ட், நட்டுகள், சக்கரங்கள், புல்லிகள், கியர்களை இணைத்து ஒரு எந்திரத்தை உருவாக்குவதைப் போல, இந்த உயிரி உறுப்புகளை வேண்டியவாறு இணைத்து ஒரு உயிரி எந்திரத்தை உருவாக்குவதென்பதே அங்கு நடைபெறும் ஆய்வின் நோக்கம். சிலிக்கான் தொழில் நுட்பத்துக்கு மாற்றாக, நுண்ணுயிர்களைப் பயன்படுத்துவதற்கான ஆய்வுகளும் நடைபெறுகின்றன.

உயிரித் தொழில்நுட்பம் வழங்கும் நேர்மறைப் பயன்கள் கற்பனைக்கெட்டாதவை. எனினும், இந்த அறிவியலும் தொழில்நுட்பமும் யாருடைய ஏகபோகத்தின் கீழ் இருக்கின்றன என்பதுதான் அறிவியல் வளர்ச்சி செல்லும் திசையையும் அதன் ஆக்கபூர்வமான பயன்பாட்டுக்கான சாத்தியத்தையும் தீர்மானிக்கின்றன. பெரும் பொருட்செலவு பிடிக்கும் இந்த ஆய்வுகள் அனைத்தையும் மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்களோ அல்லது அமெரிக்க இராணுவத்தின் ஆராய்ச்சித் துறைகளோதான் கட்டுப்படுத்துகின்றன. உலகச் சந்தையின் மீது வர்த்தக ரீதியான ஏகபோக ஆதிக்கம் அல்லது இராணுவ மேலாதிக்கம் என்பவையே பெரும்பாலான ஆய்வுகளின் நோக்கத்தை தீர்மானிப்பவையாக இருக்கின்றன.

இந்நிறுவனங்களின் கூலி அடிமைகளாக உள்ள விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுநர்களும் ஒரு கண்டுபிடிப்பின் பயன்பாடு குறித்தோ, அதன் எதிர்விளைவுகள் குறித்தோ தாங்கள் அறிந்த உண்மைகளை வெளியிட முடியாமல் ஒப்பந்தங்களால் கட்டுப்படுத்தப் படுபவர்களாகவும், பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை நலனுக்கு ஏற்ப உண்மைகளைத் திரித்துக் கூறி சான்றளிக்கும் அறிவு நாணயமற்றவர்களாகவும் உள்ளனர்.

தற்போது சிந்தடிகாவை உருவாக்கியிருக்கும் கிரேக் வென்டரின் தனியார் ஆய்வு நிறுவனம், எக்சான் மொபில் என்ற அமெரிக்கப் பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. சூழலிலிருந்து கரியமிலவாயுவை உறிஞ்சி அதனை ஹைட்ரோ கார்பன்களாக மாற்றவல்ல கடற்பாசிகளை உருவாக்குவதே இந்த ஒப்பந்தத்தின்படி நடைபெறும் ஆய்வு. எண்ணெய் வளங்கள் வற்றி வரும் சூழலில், கரும்பு, சோளம், ஜட்ரோபா போன்றவற்றிலிருந்தெல்லாம் தயாரிக்கப்படும் உயிரி எரிபொருளைக் காட்டிலும் மலிவானதாக இருக்கும். இவ்வாறு உருவாக்கப்படும் ஹைட்ரோ கார்பனிலிருந்து பெட்ரோலும் டீசலும் தயாரித்து எண்ணெய் விற்பனையில் உலக ஏகபோகத்தை அடைவதே எக்சான் மொபில் நிறுவனத்தின் நோக்கம்.

அதே போல, நுண்ணுயிர்களின் மரபணுக்களை செயற்கையாக திருத்தி அமைத்து, அவற்றிலிருந்து ஃப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து தயாரிக்கும் ஆய்விலும் நோவார்ட்டிஸ் என்ற பன்னாட்டு மருந்துக் கம்பெனியுடன் இணைந்து கிரேக் வென்டரின் நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. இரத்தப் புற்றுநோய்க்கான மருந்துகளைத் தயாரித்து வந்த இந்திய நிறுவனங்களை, காப்புரிமையைக் காட்டி தடுத்து நிறுத்தி, அம்மருந்துகளின் விலையை நூறு மடங்கிற்கு மேல் விலை உயர்த்தி விற்று வரும் நிறுவனம்தான் நோவார்ட்டிஸ்.

எக்சான் மொபில் நிறுவனமோ, புஷ் கும்பலுக்கு மிகவும் நெருக்கமானது; இராக் ஆக்கிரமிப்பின் பின்புலத்தில் இருந்தது. இத்தகைய நிறுவனங்கள் மேற்கூறிய கண்டுபிடிப்புகளை எப்படிப் பயன்படுத்தும் என்பதை விளக்கத் தேவையில்லை.

மருந்து நிறுவனங்கள் மட்டுமின்றி, உணவு தானிய வணிகத்தில் உலக ஏகபோகத்தை நிறுவிக் கொள்ளத் துடிக்கும் மான்சான்டோ முதலான பன்னாட்டு உணவுக் கழகங்களும் (Agri business corporations) உயிரி தொழில்நுட்ப ஆய்வுகளில் சிறப்புக் கவனம் செலுத்துகின்றன. இந்தியா முதலிய நாடுகளில் அரசுகள், ஆய்வுக் கூடங்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் ளின் துணையுடன் தமது ஆய்வுகளின் சோதனைக் களமாக ஏழைநாடுகளின் விவசாயத்தை மாற்றுகின்றன. மான்சான்டோவின் பி.டி விதைகள் இந்திய விவசாயத்தின் மீதும் விவசாயிகளின் மீதும் ஏவியிருக்கும் அழிவு நம் கண் முன் தெரிகின்ற சான்று.
ஆனால் இந்த அழிவைக்கூட “சொல்லி அழக்கூடாது, சொல்லாமல்தான் அழவேண்டும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு எதிராக அறிவியல் ஆதாரம் இல்லாமல் பேசுவது தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம்” என்று கூறும் சட்டமுன்வரைவை நிறைவேற்றுவதற்காக தயார் நிலையில் வைத்திருக்கிறது மத்திய அரசு.

செயற்கை கடற்பாசி இயற்கையான உயிர்ச்சூழலுக்குள் ஏவப்பட்டால் ஏற்படும் விளைவுகள் – பின் விளைவுகள் என்ன, அவை ஏவப்பட்டிருக்கின்றனவா இல்லையா என்பதைக் கூட எப்படித் தெரிந்து கொள்வது போன்ற கேள்விகளை எழுப்புகிறார்கள் சூழலியலாளர்கள். இந்தக் கேள்விகளுக்கு விடை காண பெரும் ஆராய்ச்சி தேவையில்லை. யூனியன் கார்பைடு நடத்திய போபால் படுகொலையும் தற்போது அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடாவின் கடற்பரப்பு முழுவதும் பரவி கோடிக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களைக் கொன்று கொண்டிருக்கும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் எண்ணெயும் உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரியும் உண்மைகள். செயற்கை உயிரிகளால் ஏற்படும் ஆபத்துகளை இவ்வாறு பளிச்சென்று நிரூபிக்கக் கூட முடியாது என்பதால், இத்தகைய ஆய்வுகளையே தடை செய்ய வேண்டும் என்று கோருகின்றனர் சூழலியலாளர்கள்.

விபத்துகள் மட்டுமல்ல. நுண்ணுயிர்களை எளிதில் கண்டு பிடிக்க முடியாத பேரழிவு ஆயுதங்களாகவும் ஏவ முடியும். இராக்கில் குறைந்த கதிர் வீச்சு கொண்ட அணு ஆயுதங்களையும், வியத்நாமிலும் கொரியாவிலம் ரசாயன ஆயுதங்களையும், இராக்கில் விசவாயுக் குண்டுகளையும் பயன்படுத்தியிருக்கும் அமெரிக்கா உயிரி ஆயுதங்களையும் பயன்படுத்தக் கூடும். அவ்வகையில் இக்கண்டுபிடிப்புகள் அனைத்தையுமே அழிவு வேலையின் ஆயுதங்களாகப் பயன்படுத்த முடியும். பயன்படுத்தும்.

இப்பிரச்சினைக்கு இன்னொரு பரிமாணமும் இருக்கிறது. அறிவியல் தொழில்நுட்பப் புரட்சியையும், உலகமயமாக்கலையும் தொடர்ந்து உலக நாடுகளின் மீது திணிக்கப்பட்டிருக்கும் வணிகம் சார்ந்த அறிவுசார் சொத்துடைமை (TRIPS), புதிய கண்டுபிடிப்புகளின் மீது மட்டுமின்றி, தாவரங்கள், நுண்ணுயிர்கள் மற்றும் மரபணுக்கள் மீதும் கூட காப்புரிமை கோரும் அதிகாரத்தை உலக முதலாளித்துவத்திற்கு வழங்கியிருக்கிறது. வேம்பு மீது அமெரிக்க நிறுவனம் காப்புரிமை பெற்றதும், அதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்புகளும் நாம் அறிந்ததுதான். தாவரங்களை மட்டுமல்ல, மனிதனின் மரபணுக்களுக்கும் கூட காப்புரிமை பெற்று, அவற்றைத் தனிச்சொத்துடைமையாக மாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது உலக முதலாளித்துவம்.
புதிய கடவுளாக காத்திருக்கும் கம்பெனிகள்

புதிய கடவுளாக காத்திருக்கும் கம்பெனிகள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த கிராட் (39) என்ற பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. கருப்பையிலும் தனக்குப் புற்றுநோய் வர அபாயம் உள்ளதா என்பதை மரபணுச் சோதனை மூலம் தெரிந்து கொள்ள எண்ணிய அந்தப் பெண், மிரியாட் என்ற சோதனைக் கூடத்தை அணுகினார். புற்றுநோயை உருவாக்கும் மரபணு அந்தப் பெண்ணின் உடலில் இருப்பது சோதனையில் தெரிய வந்தது. வேறோரு சோதனைக்கூடத்தில் மீண்டும் மரபணுச் சோதனை செய்து பார்த்து இதனை உறுதி செய்து கொள்ள கிராட் விரும்பினார். ஆனால் மரபு வழியில் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோயை உருவாக்கும் இரு மரபணுக்களை முதன்முதலாகக் கண்டுபிடித்த மிரியாட் சோதனைக்கூடம், அவ்விரு மரபணுக்களுக்கு அறிவு சார் சொத்துடைமையை பதிவு செய்து வைத்திருந்தது. மிரியாட்டில் இந்த சோதனைக்கான கட்டணம் 1.5 இலட்சம் ரூபாய். இதைவிட மிக மலிவான கட்டணத்தில் இச்சோதனையைச் செய்வதற்கு பல இடங்கள் இருந்தும், அமெரிக்காவின் வேறெந்த சோதனைக்கூடத்திலும் இந்தச் சோதனையைச் செய்வதற்குத் மிரியாட் தடை பெற்றிருந்தது.

கிராட்டின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அமெரிக்க சிவில் உரிமை யூனியன் “உடலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட நிலையிலும் கூட மனிதனின் மரபணுக்கள் எனப்படுபவை இயற்கையின் அங்கங்களே. இவை புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல” என்று வாதிட்டன. மார்ச் 2010 இல் அமெரிக்காவின் ஒரு மாவட்ட நீதிமன்றம் கிராட் நிறுவனத்தின் இந்தக் காப்புரிமையை ரத்து செய்திருக்கிறது.

மிரியாட் போன்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களும், மருந்து நிறுவனங்களும் சுமார் 40,000 மனித மரபணுக்களுக்கு காப்புரிமை பெற்று வைத்திருக்கின்றன. இந்த தீர்ப்பை ரத்து செய்தால் மட்டுமே தங்களது ஆராய்ச்சியின் ‘பயனை’ ‘அறுவடை’ செய்ய இயலும் என்பதால் இத்தொழில் நிறுவனங்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு இந்தத் தீர்ப்பை முறியடிக்க முயலும் என்பதில் ஐயமில்லை. சிந்தடிகாவுக்கு காப்புரிமை பெறும் முயற்சி, மேற்கூறிய வழக்கில் பன்னாட்டு நிறுவனங்கள் வெற்றி பெறுவதற்கு மறைமுகமாக உதவும் என்றும் சில விஞ்ஞானிகள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.

மனித மரபணுத் தொகுப்பு தொடர்பான ஆய்வில் முக்கியப் பங்கு வகித்த விஞ்ஞானியும், மனித மரபணுவின் மீது காப்புரிமை பெறும் முயற்சிகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருபவருமான மான்செஸ்டர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் சல்ஸ்டன் காழ்க்கண்டவாறு எச்சிரித்திருக்கிறார்: “சிந்தடிகாவுக்கு காப்புரிமை பெறுவதற்காக கிரேக் வென்டர் கொடுத்துள்ள விண்ணப்பம், சிந்தடிகாவுக்கு மட்டும் காப்புரிமை கோரவில்லை. உயிரி தொழில்நுட்பம் தொடர்பான பல வகையான ஆய்வு முறைகளுக்கும் சேர்த்து காப்புரிமை கோருகிறது. இது நிராகரிக்கப்படவில்லையென்றால், உலகெங்கும் நடைபெறும் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி முழுவதுமே கிரேக் வென்டர் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியே மொத்தமாக முடக்கப்பட்டுவிடும்”

சிந்தடிகாவை உருவாக்கிய கிரேக் வென்டர் எனும் விஞ்ஞானியே உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சிகளின் எதிரியாக மாறி நிற்பதை இப்போது காண்கின்றோம்.
இப்போது அறிவியல் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போட்டு நிறுத்துவது ஆண்டவனல்ல, அறிவு சார் சொத்துடைமை என்ற உலக முதலாளித்துவத்தின் கோட்பாடு. அறிவியலை அடக்கி ஆள்வது திருச்சபை அல்ல, முதலாளித்துவ உடைமை உறவை நிலைநாட்டுகின்ற ஏகாதிபத்தியம் அல்லது உலக வர்த்தகக் கழகம்.

உயிரின் வேதியல் மூலத்தை க் கண்டறிந்து, அதனை மாற்றியமைத்து, இதுவரை இல்லாத புதியதொரு உயிரை உருவாக்கவும் தலைப்பட்டுவிட்டது இயற்கை விஞ்ஞானம். உடைமை உறவின் சமூகப் பொருளாதார மூலத்தை மார்க்சியம் கண்டறிந்து சொல்லிய பின்னரும், அதனைப் புரிந்து கொள்ள இயலாத அறியாமையில் சமூகத்தை அமிழ்த்தியிருக்கும் ஏகாதிபத்தியம், உற்பத்தி சாதனங்களை மட்டுமன்றி உயிரணுவையும் தனிச்சொத்துடைமையாக்கும் திசையில் சமூகத்தை இழுத்துச் செல்கிறது.

இயற்கையின் 400 கோடி ஆண்டுக்கால ‘வரலாறு’, பொருள்முதல்வாத நோக்கில் விளக்கம் பெற்றுவிட்டது. சோதனைக்கூடத்தில் நிரூபிக்கப்பட்டும் விட்டது.
மனிதனின் சில ஆயிரம் ஆண்டுக்கால வரலாறு, பொருள்முதல்வாத நோக்கிலான மாற்றத்துக்காகவும் புதிய சமூகத்தின் தோற்றத்துக்காகவும் ஏங்கி நிற்கிறது. அதன் காரணமாகவே, அறிவியலும் தேங்கி நிற்கிறது. இந்தத் தேக்கத்தை உடைப்பதற்குத் தேவைப்படுவது – புரட்சி. இதுதான் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் முடிபு.
(புதிய கலாச்சாரம் ஜூலை 2010)


___________________________________________

Tuesday, July 13, 2010

பெண் கவிதை அரசியலும் அடையாளமும்
-முனைவர் அரங்கமல்லிகா-

சமூகத்தை இயக்க மொழி தேவைப்படுகிறது. மொழி, சமூகச் செயற்பாடு சார்ந்தது. மொழி, ஒவ்வொரு தனிநபருக்குமான வேட்கை அடிப்படையில் அமைந்தது. லக்கான், இதைச் சற்று விரிவாக ஆய்கிறார். அதாவது 'மனித அகநிலையே ஆண்மைத்தனமானது” என உறுதியாகக் கூறுகிறார். இந்த அகநிலை, எழுத்துகளில் ஆண் சமூகத் தகுதியை முதன்மைப் படுத்துகிறது. உடல்/பெண் உடல் ஆணினுடை யதாகப் பார்க்கப்படுகிறது. அவள் உடல் நுகர்வுக்குரியது. இதுதான் மொழி மூலம் ஆண் மொழி வழியாக உறுதிபடுத்தப் பட்டிருக்கிறது. பெண் உடல் புனைவு முதன்மையாகி யிருக்கிறது. கலையும் இலக்கியமும் இதை மரபாக்கி யிருக்கின்றன. அச்சமும் நாணமும் பெண்களுக்குரியன என மனித/ குறிப்பாகப் பெண்ணின் செல்களில் திணித் திருக்கிறது; பெண்ணை அடிமையாக்கியிருக்கிறது.

மார்க்சிய, பெரியாரியச் சிந்தனைகள் பெண்ணின் வலியைக் கவனப்படுத்தியுள்ளன. குடும்பப் பணி மற்றும் குடும்பச் சூழலில் அரசியல் முக்கியப்படுத்தப்பட்டன. அன்றாட வாழ்வில் ஆண் செலுத்தும் ஆதிக்கம், குடும்ப வன்முறை பாலியல் வன்முறை, மரபைப் பேணுவதற்குப் பெண் மீது திணிக்கப்படும் அடக்குமுறை, வரதட்சணை, பெண் சிசுக்கொலை, குழந்தைகள் பலாத்காரம் யாவும் பின் காலனித்துவ அரசியலாகப் பார்க்கப்பட்டன. பின் காலனித்துவ அரசியலானது பெண்ணின் தனித்த பிரச்சினைகளிலிருந்து தொடங்குகிறது. இதனால், பெண் காலனித்துவத்திலிருந்து விடுபட வேண்டிய தேவையைப் பெண்ணியம் வலியுறுத்துகின்றது. பெண்கள், பெண் தொழிலாளர்கள், பாலியல் தொழிலாளர்கள், விளிம்புநிலை பெண்கள், தலித் பெண்கள் ஆகியோரின் விடுதலையை மைய நீரோட்டமாக்குகிறது பெண்ணியம்.

மொழியை ஆண்கள் கைக்கொண்டபோது ஆணின் பார்வைதான் பெண்ணுக்கும் இருந்தது. அவர்கள் உலகத்திற்குள் பெண்கள் இயங்கவேண்டி இருந்தது. முலையிடை முளைவிட்ட நோய் நெஞ்சில் வேர்விட்டு, அசைவுடை நெஞ்சத்து உயவுத்திரன் நீடி, காதல் தளிர் பரப்பி, புலவர்கள் புகழும் நாணம் இல்லாத பெரிய மரம் ஆகி நிலம் முழுவதும் பரவி அலரையும் அரும்பையும் பூத்தது. எனினும் இந்நோய்க்கு மாற்று மருந்தான தலைவர் வரவில்லை. முன்பனிக் காலம் நம்மை வருத்த நம் துயரத்தை அவர் அறியவில்லை என்றும், பெண்ணைப் போல மென்மை உணர்வு இல்லாதவன் அதனால் பெண்ணின் தவிப்பு புரியவில்லை என்றும் (அகம், ஒளவை, 273) கூறுவதிலிருந்து பெண் உடல் பற்றிய ஒளவையின் பதிவு பெண்ணியத் திற்கான நுட்பமான கூறு என்பதை உணர்ந்துகொள்ள முடியும். ஆனால் சங்கப் பெண் கவிஞர்களின் அரசியல் நவீனப் பெண் கவிஞர்களின் அரசியலோடு தொடர்புபடுத்த விடாதபடி காலனித்துவ அரசியல் இயங்குகிறது. இந்தக் காலனிய மரபை எதிர்க்கிறது பின்காலனித்துவப் பெண்ணியம். இதனால் தந்தை அதிகாரம், நிறுவன - பொருளாதார - அரசியல் தத்துவங்களில் மாற்றம் நிகழ்கிறது.

இதன் தொடர் பயணம் பெண் இயக்கங்களில் பரிணமிக்கிறது. விலைவாசி ஏற்றம் தொடங்கி பாலியல் வல்லுறவுவரை பெண்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றனர்/எதிர்க்கின்றனர் என்பது பெண்ணியத்தின் தளத்தை விரிவுபடுத்துகின்றது. பெண் பிரச்சினைகள்மீது கவனம் ஏற்படத் தொடங்கிய பிறகு, பெண்ணின் ஆளுகையும், ஆளுமையும் பிரதானமாகின்றன. பெண்களுக்குள் சமூகம் சார்ந்த விவாதங்கள் கிளர்ந்தெழு கின்றன. பெண்மீதான தொன்மங்களைக் கட்டுடைக்கின்றனர். தன்னை உணர்த்துதலை, தன்னிலையை மையமாக்குதலைப் பெண்மொழி மூலம் அடையாளப்படுத்துகின்றனர்.

பெண்மொழியும் அடையாளமும்

பண்பாடும் மொழியும் ஆணுலகைக் களமாகக் கொண்டிருப் பதால், பெண் தனது மனதையும் சிந்தனையையும் கவிதையில் முன்னிலைப்படுத்தும்போது இதுவரை வந்த ஆண் மொழி உடைபடுகிறது. காதலின் எதிர்பார்ப்பும், காமத்தின் தகிப்பும் கலைத்துப் போடப் படுகின்றன. இருப்பும் உறவும் அர்த்தப்படும் முயற்சிதான் பெண் அடையாளமாகும். குறிப்பாக, பெண் கவிஞர்கள் தங்கள் அனுபவங்களை எழுதுவதன் மூலம் தங்களது இருப்பை, வெளியைத் தீர்மானிக்கிறார்கள். மரபுக்கும் புதுமைக்கும் இடையிலான ஓர் இடைவெளியைக் கோடிட்டுக் காட்டுகிறது பெண்மொழி. ஆணுக்கு எதிரான புதுவரலாறு, மாற்று வரலாறு கட்டமைக்கப்படுகிறது. பெண்மொழி கவிதையின் பாடுபொருளில் மட்டும் மாற்றத்தைத் தரவில்லை. மாறாக, திறனாய்வையும் உள்ளடக்கியே பெண்மொழி வெளிப்படுகிறது.

பெண்மொழி கலகமா? விவாதமா?

பொதுவாக பெண்மொழி, ஆண் கவர்ச்சிக்குரிய பெண் உறுப்புக்களை அழகியல் சார்ந்ததாகப் பார்ப்பதைத் தவிர்க்கிறது. காதல் ஷ் காமம் சார்ந்த எதிர்வுச் சிநதனையை மையப்படுத்துகிறது; அரசியலாக்குகிறது. கணவன் ஷ் மனைவி இடையே நிலவும் ஆதிக்கத்தைத் தகர்க்கிறது. அதிகாரம் பெண் உடலை மையம்கொண்டது என்ற ஆணின் புரிதலைத் தவிர்த்து பெண் தன்னுடல் மீதான வேட்கையைத் தானே அதிகாரத்தின் மையமாக்கும் தொனியைக் கலகமாக்குகிறது.

பெண்ணுக்குள் திணிக்கப்பட்ட ஆண் மீதான, தந்தை மீதான பயம், சடங்குகளில் கட்டுறுவது, மூடப் பழக்க வழக்கங்களில் முடங்குவது, காம உணர்வுகளை அடக்கிக் கொள்வது, தனிமைப் புலம்பல்களை அங்கீகரிப்பது, அகத்தைக் கலைத்துப் போடுவது எல்லாம் பெண் மொழியில் அடையாளப்படுத்தப்படுகின்றன. கலையும் இலக்கியமும் எதிர்க்கலாச்சாரத்தைப் பதிவு செய்கின்றன. கவிதையும் திறனாய்வும் ஒன்றோடு ஒன்று கலந்ததாக இருக்கின்றன. 'நிஜமாய் இருக்கிறேன்; முரணானவள் என முகம் சுளிக்கிறார்கள்” என்ற இளம்பிறையின் அகநிலை/அகமொழி பெண்மொழியின் ஊடகமாகும். சுருக்கமாகச் சொல்வ தெனில் பெண் உடல் பெண்ணின் கூடுதல் கவனத்தில் பெண்ணே நுகர்வதை/நகர்வுப் பொருளாவதை எதிர்க்கும் பெண்ணின் வெளிதான்/சுதந்திரம்தான், புனிதங்கள் கட்டுடைவதுதான் பெண்மொழி விவாதமாகிறது. இது கலகமல்ல என்ற புரிதலை பெண் கவிஞர்கள் புரியவைக் கின்றனர். பெண்ணியம் பெண் கவிதைகளின் மூலம் பெண் அடையாளத்தை வலிமையாக்கியிருக்கிறது. பெண்உடல்/பெண் அடையாளத்தைத் தாண்டி, இனம், மதம், வர்க்கம், சாதி ஆகியவற்றிலும் புதைக்கப்பட்டிருப்பதை இவற்றின் மூலமாக ஆணின் ஆசை முலாம்பூசி இருப்பதை விவாதப்படுத்துகிறது பெண்ணியம்.

இந்தப் போக்கு, சங்க இலக்கிய மரபு, பக்தி இலக்கிய மரபு ஆகியவற்றில் பெண்களின் கவிதைகளிலிருந்து முற்றாகச் செறித்துக்கொண்டு நவீனப் பெண் கவிஞர்களின் கவிதை களோடு தொடர்கிறது. எனினும் பாரதிக்குப் பின் கவிதைத் தளத்தில் பெண்ணியம் இடம் வெற்றிடம்தான். ஏறத்தாழ, 1975-1985 பெண்கள் பத்தாண்டு ஐ.நா. சபையால் அறிவிக்கப் பட்ட பிறகுதான் பெண்ணின் எழுதுகோல் கூர்மையடை கின்றது. எனினும் தொண்ணூறுகளில்தான் உச்சம் பெறுகின்றது. பாரதிக்குப் பிறகு இரா. மீனாட்சி புதுக்கவிதைக் களத்தில் புது நுழைவாகிறார். எனினும் பெண்ணியம் கைவரப் பெறவில்லை. கி. விஜயலட்சுமியின் 'காற்றின் சந்தேகம் (1982), எஸ். சுகந்தி சுப்பிரமணியனின் 'புதையுண்ட வாழ்க்கை” (1988), உமா மகேசுவரியின் 'நட்சத்திரங்களின் நடுவே” (1988), இளம்பிறையின் மௌனக்கூடு, நிசப்தம், முதல் மனுஷி, கனிமொழியின் கருவறை வாசனை (1995), பெருந் தேவியின் தீயுறைத் தூக்கம், ப. கல்பனாவின் பார்வையிலிருந்து சொல்லுக்கு (1998), க்ருஷாங்கனியின் கானல் சதுரம் (1998), பெண் கவிஞர்களின் தொகுப்பான பறத்தல் அதன் சுதந்திரம், சே. பிருந்தாவின் மழை பற்றிய பகிர்தல் (1999), மாலதியின் வரிக்குதிரை (1999) வெண்ணிலாவின் நீரில் அலையும் முகம், குட்டி ரேவதியின் முலைகள், தனிமையில் ஆயிரம் இறக்கைகள், சல்மாவின் பச்சை தேவதை, ஒரு மாலையும் இன்னொரு மாலையும், சுகிர்தராணியின் கைப்பற்றி என் கனவுகேள், இரவு மிருகம், சுபத்ராவின் எந்தன் தோழா, தாமரையின் ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும், திலக பாமாவின் கூர் பச்சையம்கள், தேவமகளின் முரண், அரங்க மல்லிகாவின் நீர் கிழிக்கும் மீன், தேன்மொழியின் இசையில்லாத இலைகள், பத்மாவதி விவேகானந்தன் கவிதைகள், பாலுமணிவண்ணனின் பெண்ணியக் கவிதைகள், தேன்மொழியின் ஒளியறியா காட்டுக்குள், கவிதாவின் சந்தியாவின் முத்தம் எனும் படைப்புகளின் ஊடாக, பொதுவாகப் பெண்களின் எழுத்துகள் தன்னிலை உணர்த்தல், காமத்தைப் பந்தியிடல், நீக்குதல், நீங்குதல் பற்றித் தானே எடுக்கும் முடிவுகள், இருப்பின் அடையாளங்களைக் கலைத்துப் போடுதல், அல்லது அடையாளத்தை அற்றுப் போக விடாது செய்தல், சமகால வாழ்வை எதிர் கொள்ளும்போது கடந்த கால வாழ்வை நினைவுபடுத்திக் கொண்டே தன்னைத் தனித்த அடையாளத்திற்குள் நிறுத்திக் கொள்ளல், என நீள்கின்றன.

உக்கிரம் நிரம்பி வழியும் பெண் கவிதைகளும் பல விவாதங்களை முன்னர் எழுப்பி யுள்ளன. பெண் கவிதைகளின் தரத்தைத் தீவிரமானதாகவும், சாதாரணமானதாகவும் எண்ணித் தரம் பிரிக்கும், தாழ்த்தும் அரசியல் நிகழ்ந்துள்ளது. மண் விடுதலை, பெண் விடுதலை, ஈழப் பெண் கவிஞர்கள் புலம்பெயர்தலோடு வலுப்பெறுகிறது. ஈழப்பெண் கவிஞர்கள் எழுதித் தொகுத்த 'மறையாத மறுபாதி” முக்கிய கவனம் பெற்றது. ஆழியாளின் "உரத்துப்பேச” பெண் மொழியின் உச்சமாகும். போர்க்களக் கவிச்சி, உறவுச் சிதைவு, புலப் பெயர்வு பெண்ணியக் கருத்தாக்கத்தினை விரிவுபடுத்தின. ஆண் அகநிலை தவிர்த்த பெண்ணின் மாற்று வரலாறு கட்டமைக்கப்படுகிறது. ப்ரியதர்ஷினி, மைத்ரேயி, மல்லிகா, உமையாள், கருணா, நிருபா, கல்யாணி, யாமினி, பஹீமா, கமலா, வாசுகி போன்றோர் ''போர்களை நிறுத்திய பின் கருக்களைப் பற்றிப் பேசுவோமாக!” என உக்கிரக்குரலில் முடிவு கூறுகின்றனர். சொல்லாத சேதிகள் (1986) தொகுப்பின் அடுத்தகட்ட நிகழ்வுதான்

தோழர்களே
விலங்குகளுக்கெல்லாம்
விலங்கொன்றைச் செய்தபின்
நாங்கள் பெறுவோம்
விடுதலை ஒன்றை (சிவரமணி)
என்ற பதிவாகும்.

தொண்ணூறுகளின் புதுப் பாய்ச்சலில் அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பிறகு, எழுந்த தலித் இலக்கியம் இந்துத்துவத்தை வேர் அறுக்கும் பணியை பிரகடனப் படுத்தியது. சிறுகதை, நாவல், கவிதை என விரிந்த இந்தத் தளத்தில் வழக்கம்போல ஆண்களின் கலகக்குரல் உச்சம் பெற்றுள்ளன. தலித் பெண் கவிஞர்களின் அழுத்தம் குறைவாக இருக்கின்றது. சிவகாமி, பாமா, சுகிர்தராணி, அரங்கமல்லிகா, உமாதேவி ஆகியோரின் கவிதைகள் பேசப்படுகின்றன. பாமாவின் ஒப்பாரி, சுகிர்தராணியின் பறக்கடவுள் திரும்பத் திரும்ப நினைவுபடுத்தப்படுகின்றன. அரங்கமல்லிகாவின் கவிதைகளில் 'அக்குளுக்கல்ல இடைத்துண்டு, சிறுதொண்டமாதேவி, கயர்லாஞ்சி போன்ற கவிதைகள் நிலம் - பெண் - பாலியல் வல்லுறவில் வதைபடும் பெண் வாழ்வு முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, சாதி இந்துக்களின் கொடூர எதிர்ப்புதான் தலித் பெண் கவிதை அடையாளமாகும். காலந்தோறும் தமிழ்ச் சமுதாயத்தில் ஆண் மரபு காத்தலும் ஆதிக்கத்தை நிலைப்படுத்த பெண்உடல் உடைமையாவதும் தொடர் போராட்டம்தான். பெண்ணுக்கென்று அதிகாரங் கொண்டாட, தன் உடலை தனதாக்கும் முயற்சியில், சமூகத்தைக் கேள்வி கேட்கும் மனம்/அகநிலை உறுதிபெற கலை, இலக்கிய வெளியை விசாலப்படுத்தப் பெண்மொழி பயன்பட வேண்டும். பெண் அடையாளத்தை மீட்டெடுக்கும் பணியில் உலகமயத் தாக்கத்தில் நிலமற்று, பணியற்று, உணவற்று, ஓரங்கட்டப்படும் தலித் பெண்ணின் அடையாளம், புலம் பெயர்தலில் மனப்புழுக்கம் உடலை நெருக்க வதைபடும் பெண்ணின் அடையாளம் பெண் கவிதை அரசியலைக் கூர்மைப்படுத்த வேண்டும்.

நினைத்த பொழுதெல்லாம் வரும் மழை
வேண்டும் பொழுதெல்லாம் கிடைக்கும் மழை
சோர்ந்த பொழுதெல்லாம் பெய்யும் மழை
மகிழ்ந்த பொழுதெல்லாம் கொட்டும் மழை
மனம் அறியும் மழை
உணரும் மனம் மழை
- மாலதி மைத்ரி.

நன்றி: கவிதாசரண்