Tuesday, February 28, 2012

இன்னுமொரு வானத்தைப் பிளந்த கதை

-கற்சுறா-

ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் எனும் ஐயரின் புத்தக வெளியீட்டிற்குச் சென்றேன்.  செழியனின் பேச்சு மிகுந்த அசௌரியமாக இருந்தது. நண்பர்கள் மிகவும் ஏமாற்றுவார்கள் என்பதற்கு உதாரணம் செழியனாக தற்போது இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. செழியன் முன்னைநாள் போராளி தான் சார்ந்த இயக்கத்தின் மத்தியகுழு உறுப்பினர் ஈழத்துக் கவிஞர் என அடையாளம் கொண்டவர். மிகுந்த பொறுப்புடன் பேசவேண்டும். அங்கு குமரன் பேசியளவுக்கு கூட செழியனின் பேச்சில் ஒன்றுமிருக்கவில்லை. அதைவிட இறுதியில் பாருங்கள் இலங்கையில் இன்னுமொரு ஆயுதப்போராட்டம் வெடிக்கும்  நிச்சயம் உருவாகும் என சத்தியம் செய்துவிட்டுப் போகிறார். மிகுந்த கவலையளித்தது. 30வருட போராட்டம்  எனச் சொல்லப்பட்டதை ஒரு அழுகிய யுத்தத்தின் மூலம் அரசு முடித்திருக்கிறது.  அரசும் புலிகளும் தமது அரணாக மக்களை காவுகொண்டு முடித்திருக்கிறது. கடந்த 30வருடங்களும் உட்கட்சி  மற்றும் சகோதரப் படுகொலை என்றும் தடுப்பு முகாம் வதைமுகாம் சிறைச்சாலை என்றும் தமது பிள்ளைகளைக் காவுகொடுத்து  மக்கள்  மனநோயாளிகளாக வாழும் சூழல் அதற்குள் அரசின் கண்மூடித்தனமான  தாக்குதல்களால் ஊனமுன்றவர்கள் பெற்றோரை இழந்த குழந்தைகள் என்று இன்னும் இரண்டு  மூன்று தலைமுறைக்கு தொடரும் வலிகளாக  வாழ்ந்து வரும் மக்கள் ஆயுதம் திரும்பவும் தரிப்பார்கள் என்று சொல்ல செழியனுக்கு எப்டி மனம் வந்தது. இதுவும் இன்னொருமுறை வானத்தைப் பிளந்த கதைதானே செழியன்?
மற்றும்  போராட்டம் முளைவிட்ட ஆரம்ப காலத்தின் நேரடி சாட்சியாக வெளிவரும் நூல் இதுஎன புத்தகத்தின் பதிப்புரையில் இனியொருவினர் சொல்கிறார்கள். அப்படியாயின் கோவிந்தனின் புதியதொரு உலகம். டேவிட் ஐயாவின் கொலைகார முகுந்தனும் கூட்டாளி வாசுதேவாவும் புஸ்பராசாவின் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்பன எத்தனையாவது? இந்த நம்பர் ஒன் வியாபாரத்தைவிட்டு ஐயரை தன்னிச்சையாக எழுத விடுங்கள். அவர் எழுதவேண்டியவை அதிகம் உண்டு. எழுதுப்படும் தளங்களின் அரசியல் நிலைப்பாடுகளுக்குள் அவை மங்கிவிடக் கூடாது.

மௌனகுருவின் "இராவணேசனும்", மணிரத்தினத்தின் "ராவணனும்"

இரண்டு ஊடகங்கள், இரண்டு கலைஞர்கள், ஒரு கரு:
மணிரத்தினத்தின் "ராவணனும்", மௌனகுருவின் "இராவணேசனும்"

-க. மோகனதாசன்-
(விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக் கழகம். இலங்கை) 


ஒரு கலைஞன் தான் பார்த்து கேட்டு அனுபவித்த விடயங்களை தனக்கு கை வந்த ஊடகத்தினூடாக வெளிப்படுத்தும் போது அது கலையாகின்றது. கலைஞர்களுக்கிடையே வெளிப்படுத்தும் முறையிலும் கையாளும் உத்திகளிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இது அவர்களது அனுபவத்தினாலும் பயிற்சியினாலும் சூழலினாலும் வேறுபடுகின்றது. ஒரு கலைப்படைப்பில்  சமூகத்திலுள்ள பிரச்சினைகளும் அதிலிருந்து மீள்வற்கான வழிமுறைகளும் கூறப்படும் போது அதன் பெறுமதி இன்னும் அதிகரிக்கின்றது. கலையாக்கங்களில் சமூகத்தின் நிலைமைகளை பிரதிபலிப்போரில் பழைய கதைகளுக்கு புதிய வியாக்கியானங்களையும் புதிய கருத்தேற்றங்களையும் செய்வோரும் உள்ளனர். இது தழுவலாகவோ அல்லது அதே கதையமைப்புடன் சிறு மாற்றத்தினை மேற்கொள்ளும் முறைமையுடையதாகவோ அமைந்து காணப்படும். இராமாயணம் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய பல விடயங்களை உள்ளடக்கி யுள்ளது. இதனால்தான் பல இராமாயணங்கள் (கம்பர், வால்மீகி, வசிட்டர், போதாயினர், துளசி, சம்பூர்ணர்,….இராமாயணங்கள்) உருவாயின. இராமாயணம் சமூகத்திற்கான பல்வேறுபட்ட கருத்துக்களை முன் வைக்கின்றது. அந்தவகையில் இராமாயணக் கதையினை அடிப்படையாகக் கொண்டு, 2010ல் இராமாயணத்தைத் தழுவியதான கதையமைப்புடன் மணிரத்தினத்தின் இராவணணனும் (சினிமா) இராமாயணத்தின் யுத்த காண்டத்தை அடிப்படையாகக் கொண்டு மௌனகுருவின் இராவணேசனும்(நாடகம்) படைத்தளிக்கப்பட்டுள்ளன.

Sunday, February 26, 2012

"இங்கிருந்து" திரைப்படத்தை முடிப்பதற்கு உங்களது உதவியை நாடுகின்றேன்!!!!

எனது வேண்டுகோள். ஃபேஸ்புக்கிலும் பார்க்கலாம். பப்ளிசிடி குடுக்கவும்!!!!
D/2/3/3 Torrington Flats, Stage 3
Longden Place
Colombo 07
01-12-2011
மலையகம் பற்றிய  "இங்கிருந்து" திரைப்படத்தை முடிப்பதற்கு உங்களது உதவியை நாடுகின்றேன்!!
ஒரு உயிரோட்டமுள்ள தேயிலை எஸ்டேட்டில், ஒரு வாய் பேசாத பெண்ணும், பட்டினி மத்தியில் தன் குடும்பத்தை காப்பாற்ற முயலும் தாயும், கொழும்பில் இருந்து வந்துள்ள ஆராய்ச்சியாளரும் அங்கு காணப்படும் சமூக பிரச்சனைகளுக்குள் காந்தம் போல இழுக்கப்படுகிறார்கள். 2000 ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பிந்துநுவேவவ கலவரம் இதன் பின்னணியாக விளங்குகிறது. ‘இங்கிருந்து’ திரைப்படம் மலையக மக்களின் வாழ்க்கையையும் வரலாற்றையும் சித்தரிக்கும் ஒரு கதையாகும்.. மலையக மக்களின் குடும்ப வாழ்க்கையையும், தோட்டத்தொழிலின் சவால்களையும், போராட்டங்களையும், அத்துடன் அரசு, கம்பனி, சமூகம் போன்ற அமைப்புகளுக்கூடாக எழும் வன்முறைகளையும், சித்தரிக்கின்றது.
இப் படம் நவீன டிஜிடல் தொழில்நுட்பங்களை கையாண்டு எடுக்கப்பட்ட படமாகும். படத்தின் முதல் கட்ட வேலை நீலன் திருச்செல்வம் ட்ரஸ்ட் மற்றும் வேறு நிறுவனங்களின் அணுசரணையுடன் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டது. அமெரிக்க நாட்டின் கம்பனி குளோபல் பிலிம் இனிசியேட்டீவ் (Global Film Initiative) ஒரு விருது ஒன்றை வழங்கியுள்ளது. அத்துடன், தமது டிஸ்டிரிபியூசன் (distribution) வட்டத்துக்கு படத்தை தருமாறும் கோரியுள்ளார்கள்.
பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில், ஹட்டன் பகுதியில் உள்ள எஸ்டேட்டுகளை மையமாக வைத்து எனது படவேலையை போன வருடத்திலிருந்து ஆரம்பித்தேன். அங்குள்ள மக்களுக்கு நடிப்புக் கலையிலும், திரைப்படம் சம்பந்தமான வேறு தொழில் நுட்பங்களிலும் பயிற்சியை அளித்தேன். எஸ்டேடட்டுகளில் படம் எடுப்பதற்கு தனியார் நிறுவனங்கள் சம்மதம் அளிக்காத நேரத்தில், மக்களின் ஒத்துழைப்புடன் கொரில்லா பாணியில் படப்பிடிப்பை மேற்கொள்ள நேரிட்டது. என்னை சூழ இருந்த மலையக மக்களின் உழைப்பினாலும், அவர்கள் எனக்கு கொடுத்த தைரியத்தினாலும்தான் இப் படப்பிடிப்பை நிறைவேற்ற முடிந்தது.
படவேலையில் எனக்கு ரூபா 3.5 மில்லியன் செலவாகியது. படத்தை பூர்த்தி செய்யவதற்கு இன்னும் ரூபா 1. 5 மில்லியன் தேவையாகவிருக்கிறது. இத் தொகையை, பல்வேறு மூலங்களில் இருந்தும் பெறுவதற்கு நான் முயற்சிக்கிறேன். இம் முயற்சிக்கு உங்களால் இயன்ற பங்களிப்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் நேரடியாக நன்கொடை அளிக்க விரும்பினால். கீழே தந்க விளிம்புகள் பெர்ஃபோர்மிங் ஆர்ட்ஸ் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Villimbuhal Performing Arts
Bank of Ceylon, Thimbirigasyaya
Account No: 0070810393
SWIFT CODE: BCEYLKLX

உரையாடல் அரங்கம்

யோ.கர்ணனின் படைப்புலகமும் ,மற்றும்ஜெனிவாவில், இலங்கை தொடர்பான போர்க்குற்றமும் மனித உரிமை விவகாரமும் எனும் தலைப்பிலான அரசியல் உரையாடலும்!
 
மாதமொருமுறை தொடர்ச்சியான சந்திப்பு,உரையாடல் அரங்கம் ஒன்றினை சாத்தியப்படுத்தும் முயற்சியில் பல்வேறு கருத்துநிலை,பார்வை கொண்டோர்களிடையே பல்துறைசார்ந்து உரையாடுவதனை நோக்காகக் கொண்டு இம்மாதம் மூன்றாவது சந்திப்பு அரங்கினை ஒழுங்குபடுத்தி உள்ளோம்.
 
இம்முறை முள்ளிவாய்க்கால் துயரின் நேரடி சாட்சியாளர்களில் ஒருவராகவும் அத்துயரையும் அந்த வலியை அடைவதற்கான அரசியலையும்,அதிகார மையங்களையும் தனது எழுத்தின் ஊடாக பதிவு செய்யும்,ஒரு காலகட்டத்தின் சிதைந்தழிந்த வாழ்வின் கதைசொல்லியான யோ.கர்ணனின் "தேவதைகளின் தீட்டுத் துணி","சேகுவரா இருந்த வீடு"ஆகிய அவரது இரு சிறுகதைத் தொகுதிகளை முன்வைத்து முதலாவது அமர்வும் கருத்துரையும் இடம்பெற உள்ளது.
 
இரண்டாவது அமர்வாக,ஜெனிவாவில், இலங்கை தொடர்பான போர்க்குற்றமும் மனித உரிமை விவகாரமும் எனும் தலைப்பிலான அரசியல் உரையாடலும் கருத்துப் பகிர்வும் இடம்பெற உள்ளது.
 
காலம்-26-02-2012 - 02.30pm -07.30pm (SUNDAY)
இடம்- WANSTEAD QUAKER MEETING HOUSE
BUSH ROAD -LONDON
E11 3AU
 

Thursday, February 23, 2012

சுதந்திரத்துக்கான விடுதலைப்போராளி பியா (Per Mortensen)

-கரவைதாசன்- 

சுதந்திரத்துக்கான விடுதலைப்போராளி Per Mortensen கடந்த வெள்ளிக்கிழமை 17.02.2012 இறப்பெய்தினார்.  நீண்ட நாட்களாக  நோய் வாய்ப் பட்டிருந்த  பியாவின்  இருதயம் தனது எண்பத்தி ஏழாவது வயதில்  தன் துடிப்பை நிறுத்திக் கொண்டது. 

1924ம் ஆண்டு யூன்மாதம் 2ந் திகதி டென்மார்க்கின் தலை நகர் கோபன்ஹேகனின்  நகரப் புறப் பகுதியான வன்லூசாவில்  போராட்ட குணாம்சம் மிக்க குடும்பத்தில் பிறந்து , தொழிலாளர்கள் சேரி ஒன்றில்  வளர்ந்து வந்தார்.  இவரது பேரனார் ஒரு போர் வீரனாவார். இவரது குடும்பத்தில் பலர் கடல்படை வீரர்கள் ஆவார்கள். 

தொழில் முறையில் இயந்திர பொறியிலாளரான இவர், சுதந்திரம், விடுதலை, அடிபணியாமை பற்றியும்,  நாசிகளின் ஆக்கிரமிப்பு பற்றியும் புத்தகங்களை எழுதியுள்ளார்.

இரண்டாம் உலகமாக யுத்தக் காலப் பகுதியில் கிட்லரின் நாசிப் படைகளால் டென்மார்க் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தவேளை  நாசிகளுக்கு எதிராக ஆர்த்தெழுந்த  BOPA எனும் விடுதலை அமைப்பில் 1943ம் ஆண்டு தனது 19வது  வயதில்  முன்னனிப்போரளிகளின் வரிசையில் இணைந்து  ரோம் Tom  எனும் இயக்கப் பெயரினை தன்னகத்தே கொண்டு நாசிகளுக்கு  எதிரான சிறு சிறு தாக்குதல்களை மேற்கொண்டவர். 

அந்நாட்களில்  நாசிகள்  அணுகுண்டு  தயாரிப்பதற்கான தாதுப்பொருட்களை   நோர்வேயிலிருந்து  சரக்குவண்டிகளில்  டென்மார்க் ஊடாக  எடுத்துச் சென்ற வேளை, அச்சரக்குவண்டிகளை தகர்த்து, அவர்களுக்கு அத்தாதுப்பொருட்கள்  சென்றடையாமல் BOPA எனும் விடுதலை அமைப்பு மேற்கொண்ட தாக்குதலை தலைமை ஏற்று  பியா செயல்ப்படாது போயிருந்தால், ஜேர்மன் நாசிகளின் கையில் அன்று அணுகுண்டு இருந்திருக்கும். இன்று இந்த உலகப்பந்தும் அதில் உயிர்களும் இருந்திருக்கா.

இன, சாதி, பால், வர்க்கம் , தேசியம் போன்ற காரணிகளில்  தோன்றும் ஆதிக்கவெறிபிடித்த  ஆக்கிரமிப்பாளர்களே அதிகாரத்துவப்போட்டியில்  "பியா" போன்ற சுதந்திரத்துக்கான விடுதலைப்போராளிகள் தோன்றுவதற்கான வெளிகளை தோற்றுவிக்கிறார்கள்.


Saturday, February 18, 2012

ஹோமாய் - இந்தியாவின் முதல் பெண் போட்டோ ஜெர்னளிஸ்ட்

-கவின்மலர்-
குடியரசுத்தலைவர் மாளிகையில் அரசு நிகழ்வு ஒன்றில்..பத்திரிகையாளர்களும், புகைப்படக்காரர்களும் குழுமியிருந்த அந்த அரங்கில் அந்தப் பெண், நிகழ்ச்சியின்  ஒவ்வொரு கணத்தையும் தன் கேமிராவுக்குள்  அடக்கிக்கொண்டிருந்தார். கையினால் தைக்கப்பட்ட அவரது ப்ளவுஸின் கைப்பகுதி அவருக்குத் தொல்லை தந்தது. அவர் நினைத்தபடி சரியான கோணத்தில் படமெடுக்க கையை உயர்த்திய வேளையில் அவரது கைப்பகுதியில் ப்ளவுஸ் துணி கிழிந்தது. அங்கிருந்த ஒரு சில பெண்களின் முணுமுணுப்பைப் பொருட்படுத்தாமல், சட்டென்று தனது இரண்டு கைப்பகுதி துணிகளையும் வெட்டி எடுத்து ஹேண்ட்பேக்கில் வைத்துக்கொண்டு, படமெடுக்கும் வேலையைத் தொடர்ந்தார். இந்த நிகழ்வுக்குப் பின் அவர் சல்வார் கமீஸ் அணியத் தொடங்கினார். அவர் ஹோமாய் வியாரவல்லா. இந்தியாவின் முதல் பெண் போட்டோ ஜர்னலிஸ்ட்.


Monday, February 13, 2012

தாயகம் கடந்த தமிழ் இலக்கியத்தில் தமிழ் மனம்உறைபனி இடுக்கில் அடம்பன் கொடி வேர் பின்னும்

-ந. சுசீந்திரன்-

„ Ihr, die ihr auftauchen werdet aus der Flut 
 In der wir untergegangen sind 
 Gedenkt 
 Wenn ihr von unseren Schwächen sprecht 
 Auch der finsteren Zeit 
 Der ihr entronnen seid…“
                                  -Bertolt Brecht

‚தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்‘ என்னும் தொடரில் வருகின்ற தாயகம் என்ற பதம்  இக் கட்டுரையில் இலங்கையை மட்டுமே சுட்டுகின்றது. ‚தமிழ் மனம்‘ என்பது தமிழ் அடையாளம், தமிழ் நிலைப் பட்ட உணர்வு மற்றும் தமிழ் பண்பாடு, தமிழ்  மனப்போக்கு போன்ற கருத்தமைவுகளில் எழுதப்படுகின்றது.   
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் உருவாகிய இலக்கிய முயற்சிகளை, குறிப்பாக இலக்கிய சந்திப்பு என்ற தொடர் நிகழ்வை முன்வைத்து,  அதனூடாக  தமிழ் மனம் என்பது  முற்றிலும் புதிய சூழலை எதிர் கொண்டு எவ்வாறு செயற்பட்டிருக்கின்றது? தன் சுயத்தை இப் புதிய சூழலுக்கேற்ப தகவமைப்பதன் மூலம் ஏற்படுகின்ற மாற்றங்களைத், தன்  இருப்புக்கு எவ்வாறு  சீரமைத்துக்கொண்டது என்பதையும், புகலிடக் காலத்தின் பல்வேறு நிலைகளில்  அடையாளத்தின் மாறுபடு தன்மையை இலக்கியத்தின் துணைகொண்டு  இனங்காணமுனைவதுமே  இக்கட்டுரையின் நோக்கமாகும். கவிதைளே எடுத்துக் காட்டுக்களுக்கு அதிகம் பயன்படுத்தப் படுகின்றன

Sunday, February 12, 2012

ஈரான் மீதான தடையும் இலங்கையில் ஏற்படும் பாதிப்புகளும்

-இதயச்சந்திரன்-

ஈரானிற்கும் அமெரிக்காவிற்குமிடையே தீவிரமடையும் இராஜதந்திரப் போர்,
இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும்பாதிப்பினை ஏற்படுத்தப் போகிறது.

சர்வதேச அளவில் இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணைக்கான அழுத்தங்கள்
அதிகரிக்கும் அதேவேளை, மத்திய கிழக்கு நெருக்கடியும் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள
பொருளாதார சரிவும் இலங்கையின் திறைசேரியை ஆட்டம் காண வைக்கிறது.

இந்த வாரம், அனைத்துலக குற்றவியல் நீதித்துறை மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி ஸ்டீபன் ராப் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அத்தோடு மத்திய மற்றும் தெற்காசிய பிராந்தியத்திற்கான அமெரிக்க இராஜாங்க
திணைக்களத்தின் உதவிச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக்கும், அமெரிக்க மக்கள் பாதுகாப்பு
மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்பான உதவிச் செயலர் மரி ஒட்டேரோ (Marie Otero)
அவர்களும் வருகை தர உள்ளனர்.

Sunday, February 05, 2012

vellykket integrationsforløb


Historien om de tamilske flygtninge

De tamilske flygtninge kom til Danmark fra det borgerkrigshærgede Sri Lanka i 1984 og et par år frem. Tamilerne blev samlet i lokale flygtningecentre, fik sprogundervisning og bosatte sig derefter rundt omkring i landet. En del tamiler slog rod i Billund og Grindsted og indledte dermed et særdeles vellykket integrationsforløb, hvor de udgør en vigtig resurse og er en afholdt befolkningsgruppe. I lørdags(28 . 01. 2012) fejrede lokalsamfundet 25 året for tamilernes ankomst med en stor fest i Billund Centeret. 
Tamilerne kom til et koldt og fremmed land langt mod nord, men fandt varme, anerkendelse og respekt her i Danmark.

லீனா மணிமேகலை நேர்காணல்

இனத்துரோகி என்னும் பட்டத்தை ஏற்கத்தயார்!
-லீனாமணிமேகலை- 

மாற்று சினிமா என்பது நெருப்பு ஆறு. இங்கே யாருக்கும் அதன் அருகில் போகத் துணிச்சல் இல்லை. லீனா அந்த நெருப்பாற்றை நீந்திக் கடந்து கொடியை நாட்டியவர்.

சர்வதேச அளவில் இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்தும் சில இயக்குனர்களில் ஒருவர்.

ராமேஸ்வரம் கடல் பரப்பில் இன்று விழும் ஒவ்வொரு பிணத்தையும் மருத்துவ அறிவைக் கொண்டல்ல; சர்வதேச அரசியல் அறிவைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை தன்னுடைய செங்கடல் படம் மூலம் உருவாக்கிக் கொண்டிருப்பவர்.

சமீபத்தில் "இளங் கலைஞர்களுக்கான சார்ல்ஸ் வாலஸ் விருது" பெற்று லண்டன் பல்கலைக் கழகத்தில் Visiting Scholar ஆக UK விற்குப் பறந்து சென்றவரை தரையிறங்கும் முன் ஒரு நேர்காணலுக்காகப் பிடித்தோம்.
எப்போதும் உரையாடலுக்குத் தயாராக இருப்பது லீனாவின் பெருமைகளில் ஒன்று.