Tuesday, June 09, 2026

பிரக்ஞை

 -கரவைதாசன்-

   நான், அம்மா, அக்கா, தங்கை, ஐயா எல்லாருமாக  வீட்டுக்குள்ள இருக்கிறம் . மூலையில் கைவிளக்கு எரிந்துகொண்டிருக்கின்றது. விளக்கு சின்னதுதான் ஆனால் அறையிலிருந்த இருட்டு முழுவதையும் விரட்டியடித்து விட்டிருந்தது. ஒரு கடகம் இல்லை! ஒரு மூடல் அதுவும் இல்லை! அப்படின்றால் அதனை எப்படி அழைப்பது? ஓ! ஒரு குஞ்சுப்பெட்டி இது தான் சரி. அது நிறைய இடியப்பம் இருக்கிறது. உடனே அம்மியில் அரைச்சு எடுத்து வந்த சம்பல் ஒரு கிண்ணத்திலும் சட்டி நிறைய  தக்காளியும் சிறு நெத்தலியும் போட்டு வைச்ச சொதியும் இருக்கிறது. இந்த நேரத்தில எங்கால நெத்தலி என்று கேட்கக் கூடாது. எங்கட ஊர்ப்பக்கம் பின்னேரம் கூடுகிற கோயில்ச் சந்தையிலிருந்து அது அம்மம்மா கொண்டு வந்தது. எல்லாருமாக சாப்பிடத் தொடங்கும்போது நான் மட்டும் குழப்படி செய்யிறன். 

  "எனக்கு இடியப்பம் வேண்டாம். எனக்கு ஐயா வாங்கி வந்த பணிஸ்தான் வேணும்." இதில் நான் பிடிவாதமாக நிற்கிறன். அம்மா எனக்கெதிராக ஏப்பையை தூக்குகிறா. திண்ணையில் இருந்து நிலைமைகளை  அவதானித்த அம்மம்மா   "நான் யாவாரத்துக்கு எடுத்துச்செல்ல அரிஞ்சு வைச்ச வாழைப்பழ சீப்புகளில் நாலு கரஞ்ச பழத்தை இப்ப சாப்பாட்டுக்கு எடுங்கோவன்" என்று கூறுகிறா.

    ஐயா  சொல்லுகிறார் "அதிலை பிள்ளை இரண்டு பழத்தைப் பிடுங்கி பணிசோட அவனுக்கு குடுங்கோவன்" ஐயா அம்மாவை எப்பவும் பிள்ளை என்றுதான் அழைப்பார். எனக்கு பணிசும் பழமும் அவைக்கு சம்பலும் சொதியும் இடியப்பமும். எனக்கு நிறைய சந்தோசம். நான் வீட்டில் எல்லாருக்கும் செல்லம், யாரென்றில்லை  ஒருவர் கோவித்தாலும்  வேறு யாராவது ஒருவரிடமிருந்து எனக்கு அரவணைப்பு கிடைக்கும்.  

   எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறம். "மாமி கொஞ்சம் காலைவில த்தணை"  தாழ்வாரத்துக்கு குனிந்தவாறு சொல்லிக்கொண்டு பெரியப்பா திண்ணைக்கு வருகிறார்...  பெரியப்பாவென்றால் அம்மாவின்ர சொந்த மச்சான். அவருக்கு நான் பெறாமகன். 

    "யார் வாத்தியாரே? வாங்கோ! வாங்கோ!" ஐயா சாப்பாட்டுக்குள்ளால கையை  எடுத்துக்கொண்டு செம்பையும் தண்ணியையும் தூக்குகிறார். "அவசரமில்லை,  நாங்கள் முற்றத்தில இருக்கிறம் . நீங்கள் சாப்பாட்டை முடித்துக்கொண்டு வாங்கோ" என்று கூறிக்கொண்டு பெரியப்பா முற்றத்துக்கு திரும்புகிறார். 

    முற்றத்தில் இந்தியாவிலிருந்து வந்த நடிகர் கோபாலகிருஷ்ணர், அவர் கையில் ஒரு பருவ வயதை எட்டிய   பராயப் பெண் பிள்ளையுடன் நிற்கிறார். படங்களில் பார்த்த அதே முகம் , நல்ல நரைத்த வெள்ளைத்தலை, வெள்ளை அரக்கை சேர்ட் + வெள்ளை நாலுமுழம். அந்தப் பெண்கூட வடிவானவளாக இருக்கிறாள். அவளுக்கு இது புது இடம் தானே அவளது வண்டுக் கண்களால் உருட்டி உருட்டி எல்லாரையும் பார்க்கிறாள். ஆனால் எனக்கோ அவள் என்னை மட்டும் துரத்தித்  துரத்தி தேடுவது போல் மனதிற்குள் மத்தளம். 

    ஐயா  முற்றத்திற்கு வந்ததும் ஐயாவும் பெரியப்பாவும் கதைத்துக் கொள்ளு .கினம் சித்தப்பாவும் தங்கட வீட்டுத் தாழ்வாரத்துக்குள்ளால குனிந்து முற்றத்துக்கு வருகின்றார்.

    எங்களின்ர வளவுக்கு பெரிய முற்றம் அடுப்புக்கு  மூன்றுகால்    வைச்சது மாதிரி எங்கடவீடும் சித்தியின்ரவீடும் மாமாவின்ரவீடும். இந்த மூன்று வீடுகளையும் பிறவெட்டுத்தடிகளால் வளைச்சுப் போட்ட வேலி இருக்கு, ஆனால் படலை இல்லை. முற்றம் நிறைய வெள்ளை மணல். அன்று பௌர்ணமி, அதனால் முற்றம் முழுவதும் பால்போல் இருந்தது. வேலிகளுக்கேயிருந்த நந்தியாவெட்டையும் பட்டிப்பூவும் காற்றடிக்கும் போதெல்லாம்  சிரித்துக் கொள்கின்றன. மாலுக்குள்ள இலட்சுமி படுத்துக்கொண்டு பகல் மேந்த  புல்லின் சுவைதனை மீ ட்டு இரைகண்டது. 

    இப்ப எங்கள் முற்றம் நிறைய சனம். அந்தோனிமாமா, காதர்காக்கா, பியதாச ஐயே  இன்னும் நிறைய ஐயாவின் கட்சியாக்கள். பெரியப்பா கொண்டு வந்த அரிக்கன் லாம்பு இரண்டையும் அம்மாவிடம் நீட்டியவாறு "சிமிளினை மினுக்குங்கோ" என்று சொல்லுகிறார். ஆனால் ராணிச்சித்திதான் லாம்புகளை வாங்கிக்கொண்டு எரிச்ச உமி போட்டு மினுக்கிறாள். 

    அரிக்கன் லாம்பு இரண்டும் இப்போ முற்றத்துக்கு வந்தாச்சு எல்லாரது முகங்களும் இப்போ வடிவாகத் தெரிகிறது. வகுப்பு ஆரம்பமாகியாச்சு முதலில் பெரியப்பா, பிறகு ஐயா இப்போ கோபாலகிருஸ்ணர் பேசிக் கொண்ட்டிருகின்றார். நாட்டில் எல்லாரும் கட்சிக்காக கூட்டம் கூடுவார்கள். ஆனால் இவர்கள் வகுப்பு எடுக்கிறம் அல்லது வகுப்பு நடத்துறம் என்று தான் சொல்லுவார்கள். அவர் பேசுவது என் காதில் தெளிவாக விழுகிறது . ஆனால் அது பற்றி நான் யாருடனும் கதைத்துக்கொள்வதில்லை. அதற்கான பக்குவம் இன்னும் எனக்கு வரவில்லையாம் . ஐயாவும் மாமாவும் கண்டிப்பான தொனியில் சொல்லிக்கொள்வார்கள்.   "நீயென்ன இப்போதும் குழந்தைதானே  இனி  வாலிபனாகி கமிட்டிக் காட்டெடுக்க இன்னும் காலங்கள் இருக்கு"  என்பார்கள்.    

      கோபாலகிருஸ்ணர் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றார். "பேரினவாத அரசு அப்பாவி மக்கெளுக்கெதிராக அராஜகத்தினை" எல்லாரும் அவதானமாகக்  கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நானும் தான் கேட்டுக்கொண்டிருக்கின்றேன் வலு தெளிவாக என் காதில் விழுகின்றன. நவ குடியேற்ற வாதம் ,  இலுமினாட்டிகள், உலகமயமாதல், பேரினவாதம், குறுந்தமிழ் தேசியம், அராஜகம், கொடூரம், கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது, பங்கெடுப்பு சொற்கள் தொடர்கிறது  நான் அவற்றை அசை போட்டுக் கொண்டு உச்சரித்துப் பார்க்கிறேன். எனக்கு பக்குவம் வர, வாலிபக் கமிட்டிக் காட்டு வர இன்னும் ஐந்து ஆண்டுகள் தான்  இருக்கின்றன. நானும் ஐயா வைப்போல, மாமாவைப்போல, பெரியப்பாவைபோல, கோபாலகிருஸ்ணரைப் போல  பேச வேண்டும் ........ 

       (காகம் இதழ்:4  ஏப்ரல் 1995 )

 


Friday, May 29, 2026

A Letter to Lanka இலக்கியா மரியா சைமன் அவர்களுடன் சந்திப்பு

-கரவைதாசன்- 

அன்றொருநாள் நோர்வே நாட்டைச் சேர்ந்த
இயக்குனர்/ திரைப்பட தயாரிப்பாளர்: இலக்கியா மரியா சைமன் அவர்களை சந்தித்ததும் அவர் ஆவணப் படத்தினை தருசித்த தருணமும்.....

NAFA INTERNATIONAL ETHNOGRAPHIC FILM FESTIVAL – 2023 Copenhagen.
A Letter to Lanka
லங்காவுக்கு ஒரு கடிதம்
ஆண்டு: 2023
நீளம்: 28 நிமிடங்கள்
இயக்குனர்/திரைப்பட தயாரிப்பாளர்: இலக்கியா மரியா சைமன்.
தயாரிப்பு நிறுவனம்: UiT நோர்வேயின் ஆர்க்டிக் பல்கலைக்கழகம்
தயாரிப்பு நாடு: நோர்வே நாடு
திரைப்படம் உருவான நிலம் : ஸ்ரீ லங்கா
திரையில் ஸ்ரீலங்காவின் உள்நாட்டுப் போரின் நினைவுகளுக்கு இடையே தற்போதைய அரசியல் கொந்தளிப்பு வரை விம்பங்கள் நகர்கிறது. திரைக்கதையின் பேசுபொருள் நிலம், மண் மற்றும் மனிதர்களுடன் திரைப்படத் தயாரிப்பாளரின் மறு தொடர்பின் கவிதை மற்றும் தனிப்பட்ட பயணத்தின் அனுபவத்தின் மூலம் பேசப்படுகிறது. இது, குழப்பமான உலகத்தைச் சேர்ந்த இருத்தலியல் கேள்விகளுக்கு பார்வையாளர்களை அழைக்கிறது. உலகில் வீட்டில் இருப்பதன் அர்த்தம் என்ன? எது மக்களை ஒன்றாக இணைக்கிறது! எதனால் அவர்களைப் பிரிக்க முடியும்? என கேள்விகளை அடுக்கிச்செல்கிறது...
இலக்கியா மரியா சைமன், கவிஞர் பானுபாரதி பன்முக ஆளுமை குறும்பட இயக்குனர் தமயந்தி இணையர்களின் மகள் ஆவார். சமீபத்தில் ஆஃப் விஷுவலை துறையில்தனது முதுமானியப் படிப்பினை
UiTயில் மானுடவியல் நோர்வேயின் ஆர்க்டிக் பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார். ஏலவே அவர் எத்னோகிராஃபிக் ஃபிலிம் கிளப்பை நிறுவிய பெர்கன் பல்கலைக்கழகத்தில் சமூக மானுடவியலில் BA இளநிலை பட்டம் பெற்றுள்ளார். மானுடவியலில் சேருவதற்கு முன்பு அவர் பல்வேறு துறைகள் மற்றும் கலைகளில் இருந்து ஒரு ஆசிரியராகவும் இயக்க பயிற்சியாளராகவும் இருந்தார்.
இயக்கம் மற்றும் அவரது இலங்கை வம்சாவளி தொடர்பான அவரது அனுபவங்கள், வீடு, சொந்தம், அடையாளம் மற்றும் சூழல் ஆகிய இருத்தலியல் கருப்பொருள்களை ஆராய்வதில் அவரது மானுடவியல் ஆர்வத்திற்கு வழிகோலுகிறது. இலக்கியா இலங்கையுடனான தனது நெருக்கமான மற்றும் துண்டு துண்டான உறவில் ஆர்வமாக உள்ளார்.


வடக்கு  நோர்வேயின் ஓலசுண்ட்   மலைகளின் அடிவாரத்தில், சதுப்பு நிலக் காடுகளுக்கு அருகில் வளர்ந்த இலக்கியா , சக்திவாய்ந்த இயற்கை உணர்வுகளைத் தன் கமராவுக்குள் இருளும் ஒளியுமாக  கொண்டு வந்த ஓர் இருத்தியியல் படைப்பாளி . அறம்,  அன்பு, அதிகாரம் , அனைத்தையும் பற்றிய கூர்மையான பார்வைகள், சமூக உணர்வு மற்றும் சீற்றம் ஆகியவற்றால் உயிரூட்டப்பட்ட முடிவற்ற படிமங்களின் படச்சுருள்  கூட்டங்களில் அனைத்தையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு நீர்த்தேக்கமாக அவற்றைப் பயன்படுத்துகின்றார் . பெரியம்மா  எனும் பாத்திர வாகனத்துக்கூடாக  வர்ணமும் வனப்புமாக  ஈழத்தின் லாவண்யத்தினை   பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஈழத்தின் கறுப்பாகிக் கிடந்த பக்கங்களை நிழல் கொள்ளளால்  அவர் தனது உணர்வுகளைத் தனக்குள்ளேயே பதிவு செய்துகொண்டார் என்கிறேன் .


காலனித்துவம் தந்துவிட்டுப்போன கருப்பு வெள்ளை வேதச் சீருடைகுள்ளே அறமாக ஆமிக்கு  குடிநீர் வழங்குவதும் அறச் சீற்றமாக இரவுப் பொழுதுகளில் மரக்கிளையினில் இலாம்பினை ஒளிர விடுவதும் , நிலத்தினைகொத்திப் பண்படுத்துவதும் அக்கருப்புக் கோட்டுக்குள்ளிருந்து நாட்டுக்கூத்துப் பாட்டு வருவதும்    உணர்வுகளின் வழியே  ஒரு பாரம்பரிய பண்பாட்டுச் சேமிப்பும் உள்ளது. அவற்றை எப்படிச் சேமிப்பது? அவர் கையாளும் மொழி அவரது இருப்பு சார்ந்து வலுக்கொள்கிறது அவை எழும்போது அவற்றைப் பற்றி உணர்வதன் மூலமாக  வெள்ளைத் திரை  முன், அந்த உணர்வை விட இந்த உணர்வை நாம் மிகவும் தெளிவாக நினைவில் கொள்கிற அவை இப்போது அவருடைய திரைக்கதையாடலில் வரும்  ஒரு சொல் " விளைநிலம்" soil என்ற முழுமையானசொல்  வழமையாக வரும் மண், நிலம்,  நாடு  போன்ற சொற்களிளிருந்து விடுபட்டு  பதிப்பில்  அவை திருத்தப்பட்டு, ஒரு சுதந்திரமான மொழிக்கு நெருக்கமாக வந்துள்ளன; நல்லதோ கெட்டதோ, அவை இன்னும் உரைநடையாக மாறியுள்ளன. முன்பு ஒரு வரி, "நீ துன்பப்படுகிறாய், என் அன்பே, பிறகு நான் மீண்டும் இறப்பேன்" என்று இருந்த இடத்தில், இப்போது அது "நீ துன்பப்படுகிறாய், என் அன்பே, நான் இன்னொரு முறை இறப்பேன்" என்று உள்ளது. போல் ஆகியுள்ளது இது , அதன் நீண்ட பாரம்பரியத்தில், மிகவும் கண்டிப்பான ஒரு வரி வடிவமாகும்.


 அவர் , அங்கே  உள்ள மரக்கட்டைகள், மணல் கடற்கரைகள் மற்றும் தென்னைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட  தென்னங்காய்களைக்  கொத்தி உடைப்பதனூடு  ஒரு கோடாரி, அரிவாள் மற்றும் மடிக்கத்தி ஆகியவற்றைக் கொண்டு, உணர்வுக் குவியல்களை அவர் காட்டுகின்றார். இந்த உருவக வழியில், முற்றிலும் இருத்தலியல் கருப்பொருள் சார்ந்த ஒரு படைப்பு உருவானது;  இந்த கருப்பொருளின் உண்மையான விரிவான விளக்கம், letter to sri lanka  என எழுத வைத்தது 

ஆழ்ந்த அற உணர்வு அறிவுத்திறன் அல்லது கருத்துப் பரிமாற்றங்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பு மாறாக, அவளது அகம்  எதனுடன் தொடர்புடையதோ, அவை அனைத்தின் மீதும் ஒரு விரிவான பேரார்வம் காணப்படுகிறது. இது படத்தின் முதல் ஒளியிளியிலிருந்து  நூர்ந்து நூர்ந்து வெளிப்படுகிறது. அதுவும் ஒரு முறையான வினைத்திறனே! 

இலக்கியாவுக்குள்  ஒரு மூர்க்கமான உணர்வு  கொழுந்துவிட்டு எரிகிறது; அது அவளை தலை  தனில் தரித்த முட்களாலும் வாள்களாலும் குத்தி, சுட்டெரிக்கும் தீயுடன் அவரின்  இதயத்தைக் கிழிக்கிறது. தனது உணர்வுதனை  பல்வேறு மனநிலைகளையும் முழுமையாக வெளிப்படுத்த, அவர்  ஒரு படிமத்திலோ,  ஒரு உருவகத்திலோ திருப்தி அடையாவில்லை; மாறாக, புலன்களின் களஞ்சியத்தில் உள்ள நிகழ்வுகளை மனிதகுலம் குறித்த ஒரு இயற்கைவாதப் பார்வையில் ஒன்றாகத் தொகுக்கிறார் . அதன் எல்லையற்ற பன்முகத்தன்மை இருந்தபோதிலும், அது சலிப்பூட்டுவதாகத் தோன்றாமல் இருக்க .  சமையல் அனுபவங்களை இணைத்துள்ளார்.:

சமையல்காரியே, உன் இரத்தம் இந்த விளை நிலம் போல உயிருள்ளது,

மேலும் உன் பழக்கவழக்கங்கள் உன்னதமானவை, இந்த விளை நிலம் போல.

ஒரு ஊர்த் தூரப் பயணத்தில் தேசம் எனும் கோடு கட்டலின்  அனைத்தையும் கண்டு மனம் வெந்து ஆவணப் படுத்தியுள்ளார்.  

எப்படியாயினும், அவள் நிலத்தின்  வேறொரு இடத்தில்  தன் தலைவணக்கத்தைச் செலுத்திக்கொண்டிருக்கும்போதும், அவள் தொட்டுணரக்கூடியவளாகவே இருக்கிறாள்.

 மரணம் வரும்போதும் , ​​அந்த வெறுமை அனைத்திற்கும் எதிராக அவளது பார்வை மட்டுமே உள்ளது; இருளை விரட்ட அன்பு மட்டுமே உள்ளது.

இலக்கியாவின் படைப்பு  அதன் ஒளியைத் தக்கவைத்துக் கொள்கிறது.

Monday, February 09, 2026

"எம். சி.ஒரு சமுகவிடுதளைப் போராளி" நூல் ஆசிரியர் எம்.சி.சந்திர போஸ் காலமானார்...

 எம்.சி யின் மகன் சந்திர


-கரவைதாசன்-

அறம்தான் ஆயுதங்களில் கூர்மையானது - ஆனால்
அது நேர்மையானது.
அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு அது யாரையும் தாக்காது, தாக்க ஆரம்பித்தால் அது தோற்காது .
-எம். சி. சுப்பிரமணியம்-


ஈழ தேசத்தின் மகாப் பெரிய அறவழிப் போராளி, பொதுமைச் சிந்தனையாளர், விம்புநிலை சமூகத்தின் கல்வியின் தந்தை, கறுப்பாகக் கிடந்த சமத்துவ மற்ற மூடத்தனங்களையே மூலதனமாக வைத்திருந்த தமிழர்களில் சாதாரணமானவர் தொடக்கம் சனாதனர்கள் வரை எடுத்துரைத்து கல்வியாளர் தசநாயக்க என்ற மகான் கல்வி மந்திரியாகவிருந்த கால கட்டத்தினிலே பருத்தித்துறைதொகுதி கம்யுனிஸ் கட்சி எம்பியாகவிருந்த தோழர் பொன் கந்தையாவையும் இணைத்துக்கொண்டு தமிழர்களே தமிழர்களின் ஒரு பகுதி மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டபோது சுமார் இருபத்தைந்து அ.த.க பாடசாலைகளை நிறுவியவர்தான் எம்.சி. என அழைக்கப்படுகின்ற எம்சி சுப்பிரமணியம்.
1956 ம் காலப் பகுதியிநிலேயே ஆலயப் பிரவேசம் தேநீர்கடைப் பிரவேசம் மயானங்களில் சமத்துவத்துக்கான போராட்டம் எனத் தேதியிட்டு வரிசைப் படுத்திக் கொண்டே செல்ல நீண்ட பெரும் பக்க வரலாறு ஈழத் தமிழருக்கு உண்டு. இக் காலத் தேதிகளை தெரிந்து வைத்திருந்த காலக் கண்ணாடி சந்திர போஸ் அண்ணா அவர்களின் இறுதிப் பயண குறிப்பினை எழுதக் கிடைத்த இயற்கையினை வைகிறேன்.
எனில் ,
சந்திர போஸ் அண்ணா இன்னும் எழுதுவதுக்கு அவரது அப்பாவின் வரலாறு குறித்தும் அவரோடு ஒத்த தோழர்கள் குறித்தும் எழுவதுக்கான ஏதுக்கள் அவரிடம் நிறையவே இருந்தன, டென்மார்க்கில் என்னால் கொண்டுவரப்பட்ட “இனி “ சஞசிகையில் கே.டானியல் பற்றி ஒரு நினைவுக் கட்டுரை எழுதிருப்பார் அதில் படைப்பாளிக்கு ஒரு சமூகப் பொறுப்புண்டு என்பதையும் படைப்புகளுக்கு ஒரு இலக்கும் பயன்பாடும் சமூகக்கட்டமைப்பும் உள்ளது எனக் குறித்துள்ளார். இத்தகைய ஆக்கச்செறிவும் அறம் சார்ந்து பார்க்கின்ற பக்கச் செறிவும் அவரிடமிருந்தது.
சந்திர போஸ் அண்ணா அவர்களின் அப்பா எம்.சி அவர்கள் காலமாகிய காலம். மிகவும் சிக்கலுக்குரிய ஒரு நேரமாகவிருந்தது. வலதுசாரிய சிந்தனையில் வெளிக்கிளம்பிய இளைஞர்கள் கையில் ஆயுத பெலம் இருந்தது. பேச்சுக்கு சோசலிசம் சமத்தும் பற்றிய பேச்சுக்கள் அவர்களது அரசியல் கடைகளிலே ஏலமிடப்பட்டபோதும் அவர்களிடம் காணப்பட்டதெல்லாம் சுத்த பாசிசப் போக்கே . இடது சாரிகள் தேடித் தேடி கொல்லப்பட்டார்கள். அவர்களது பாசிசப் பார்வையில் இடது சாரிகளின் சமூகப் பங்களிப்பு பற்றி பேசுவதும் குற்றமாகப் பார்க்கப் பட்டு வேட்டையாடப்பட்ட காலம்
எனவே சுமார் பத்து வருடங்கள் காத்திருந்து கதைகளின் உரையாடல்களிடையே ஒருவகை சமரச போக்கினை கையாண்டே எம் சி . ஒரு சமூகவிடுதலை போராளி எனும் ஒரு சிறு நூலினை 1999 ஆம் ஆண்டுசந்திர போஸ் அண்ணா வெளிக்கொண்டு வந்தார். அதன் தொடர்ச்சியே அதே பெயரில் பின்பு வந்த தொகுப்பு. வாழ்நாள் முழுவதும் அர்பணிப்பு மிக்க எழுத்தும் வாழ்வும் அவரிடமிருந்தபோதும் கன்னை கட்டி கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டமற்ற போக்க்கினைத் தான் அவரிடம் காணலாம் .
அவ்வாறே தனது இறுதி நிகழ்வும் தனது பூதவுட லை டொராண்டோ பல்கலைக்கழகத்துக்கு தானமாக வழங்கியுள்ளார் . அந்த வரலாற்று மிக்க நிகழ்வின் ஒளித்தொகுப்பே இணைக்கப்பட்டது. டொராண்டோ பல்கலைக்கழகத்தினர் உத்தியோக பூர்வமாக அவரது உடலினை பெற்றுச் செல்கிறார்கள். ஆனாலும் அவரது குடும்பத்தினர் அவருக்குகான இரங்கல் உரைக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர் அதன் விபரம் கீழே இணைத்துள்ளேன்
அன்பு மறவா
சத்தியதாஸ்