Wednesday, December 28, 2011

இணைய தளமொன்றின் உருவாக்கமும் செயற்பாடும்,அச்சு சஞ்சிகையை நோக்கி.........

ந‌ம‌து அர‌சிய‌ல் ச‌மூக‌ம் க‌லை இல‌க்கிய‌ம் பண்பாட்டுத் த‌ளத்தில் ஆயிர‌மாயிர‌ம் இணைய‌த்த‌ளங்கள், blogs உள்ளன‌.இல‌ங்கை,புல‌ம்பெய‌ர்
 நாடுக‌ளிலிருந்து ப‌ல‌ ச‌ஞ்சிகைக‌ள் வ‌ந்து கொண்டிருக்கின்றன‌.அப்ப‌டியான‌ சூழ‌லில் ஏன் இப்ப‌டியான‌ முய‌ற்சிக‌ள் தேவைப்ப‌டுகின்ற‌ன‌ என்ப‌த‌னை முத‌லில் சொல்த‌ல் வேண்டும்.


மிக வெளிப்படையாக பேச வேண்டுமானால் பல்வேறு கருத்து நிலை,பார்வை அணுகுமுறை கொண்ட ஒரு சமூக சூழலில் அதன் அனைத்து தளங்களிலும் மிக அடிப்படையாக இருக்க வேண்டிய பன்மைத்துவ இருப்பிற்கும் அதன் உரிமைக்குமான முக்கியத்துவத்திற்கு கதவடைப்பு செய்து வெகுகாலமாயிற்று. நமது சமூகங்களின் பரப்பில் தொடர்ச்சியாக நிலவுகின்ற இறுக்கமான போக்குகளும் ஒற்றைப்பரிமாண நிறுவுதலும் எதிர் நிலைக்குத் தள்ளும் விமர்சன கதையாடல்களும் பிற போக்குகளை பார்க்க மறுக்கின்ற மேலாதிக்கமும் பகைமுரண்களும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன.

Friday, December 23, 2011

"மண்மறவா மனிதர்கள்" நூல் வெளியீட்டு விழா

 -இ .ஏகன்-

'எம் தாயகத்தில் அரசியல், இலக்கியம், சமூகம், சமயம், தமிழியல், இதழியல் எனப் பல்வேறு துறைகளில் இயங்கிய பதினேழு பேரின் ஒப்பரிய பணிகளை நினைவூட்டும் வகையில் 'மண் மறவா மனிதர்கள்' என்ற நூலினைப் பல்கலை வேந்தனாகத் திகழும் டாக்டர் வி. ரி. இளங்கோவன் வெளியிட்டுள்ளார்.

வருங்காலச் சந்ததியினர் நம்மவரின் அரும்பணிகளை நன்கு அறிந்துகொள்ள இந்நூல் நல்லதோர் ஆவணமாக அமைந்துள்ளது.' இவ்வாறு கடந்த ஞாயிறு மாலை (11 - 12 - 2011) பாரிஸ் மாநகரில் 'மார்க்ஸ் டோர்மா'  தேவாலயக் கலையரங்க மண்டபத்தில் நடைபெற்ற வி. ரி. இளங்கோவனின் 'மண் மறவா மனிதர்கள்' நூல் வெளியீட்டு விழாவுக்குத் தலைமைவகித்து உரையாற்றிய மூத்த பத்திரிகையாளர் திரு. எஸ். கே. காசிலிங்கம் குறிப்பிட்டார்.

Saturday, December 17, 2011

நந்தினி சேவியரின்" நெல்லிமரப் பள்ளிக்கூடம் "


வாசக நோக்கில் சில குறிப்புகள்
-இதயராசன்-

சுரண்டல், இனபேதம், சமூக ஒடுக்குமுறை ஆகியவற்றினை சமூக வாழ்நிலை மாந்தர்கள் ஊடாட்டத்தின் மூலம் நெல்லிமரப் பள்ளிக்கூடம் சிறுகதைகளில் வெளிப்படுத்தியுள்ளார் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர். மேய்ப்பன், ஒற்றைத்தென்னை, கடலோரத்துக் குடிசைகள், மனிதம், நெல்லிமரப் பள்ளிக்கூடம், தவனம், எதிர்வு. விருட்சம் ஆகிய எட்டுக்கதைகளும் வறுமை, இனம், சாதி ஆகிய மூன்று சமூகப்பிரச்சினைகளையும் உயிர்ப்புடன் நம்முன் பேசுகின்றன. அயல்கிராமத்தைச் சேரந்தவர்கள் என்ற சிறுகதைத் தொகுதிக்கு அடுத்ததாக இச்சிறுகதைத் தொகுதி, கொடகே நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் கதையை நீட்டி முடக்காமல் தேவைக்கேற்ப அச்சொட்டாகச் சொல்வதில் வல்லவர். கூடவே எள்ளல் உணர்வுடன் வாசிக்கத் தூண்டுகிறது. இக்கதைகள் எட்டினையும் விமர்சனம் என்றில்லாமல் ஒரு வாசக அனுபவத்துடன், ஏனைய வாசகர்களும் வாசிக்கவும் ஜோசிக்கவும் வைக்கும் நோக்கில் இரசனைக்குறிப்பாக எழுதமுற்படுகின்றேன்.

Monday, December 12, 2011

வரலாற்றின் விளைபொருள்: ”கசகறணம்”

 விமல் குழந்தைவேலின் "நாவல்"
-ந.சுசீந்திரன்-

 ”வழி வழிவரும் ஏனைய இலக்கிய வடிவங்களைப் போலவே, நாவலும் வரலாற்றின் விளைபொருளாகும்…”
(க.கைலாசபதி, இலக்கியச் சிந்தனைகள், கொழும்பு 1983)

விமல் குழந்தைவேல் அவர்களின் மூன்றாவது  நாவல் கசகறணம், 2011 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளியாகியிருக்கின்றது. நூலின் முன்னுரையின் குறிப்புக்களில் இருந்து  இந் நாவல் இலங்கையில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்ட 2002 இற்குப் பின்னர் 2006 வரை நான்கு வருடங்கள் நிலவிய தற்காலிக அமைதியின் போது இலங்கையில் சுனாமிப் பேரலையின் அழிவுக் காலமான  2004 இன் இறுதி தொடக்கம் போர் முற்றாக முடிவுக்கு வந்த 2009 க்கும் இடைப்பட்ட 5 வருட காலத்தில்  எழுதப்பட்டிருக்கின்றது என்று கொள்ளலாம். காலம், ஆன்மா, நாடு, இனங்கள், உறவு போன்றவற்றை சிதைத்துச் சிதிலங்களாக்கி விட்டெறிந்த ஒரு களப்புலத்தில், அதிகாரம், வன்முறை, ஆயுதக் கலாசாரம், போரின் ஆரவாரம், சமாதானம், அனர்த்தனங்கள், போன்ற பெருங்கதைச் சமாச்சாரங்கள் மனிதர்களைப் பிடித்துக்கொள்ளும்போது, தெருத்தூசிகளாக மதிப்பிழந்து மறக்கடிக்கப்பட்ட  மிகச் சாதாரண மனிதர்களின் வாழ்வும் இருப்பும் மனோநிலையும் எப்படிச் சின்னாபின்னமாக்கப்பட்டது என்பதை அவர்களது அன்றன்றான சோலிகள், யோசனைகள், உணர்வுகள், பேச்சுக்கள், உறவாடல்கள் மூலம் ஒரு நல்ல நாவலாக உருமாற்றியிருக்கின்றர் விமல் குழந்தைவேல் அவர்கள். வரலாற்றின் விளைபொருளாக, காலத்தின் தவிர்க்க முடியாத அசலான அர்த்தம் மிக்க பதிவாகவும்  இந் நவீனம் இருக்கின்றது. 

கதையமைப்பு:

Thursday, December 08, 2011

போதி தர்மன் தமிழரா?....

சமூகநீதி காவலர் மாவீரர் வி.பி.சிங் நினைவு நாள் கருத்தரங்கம் 26.11.2011 அன்று பெரியார் திடலில் பெரியார் களம் சர்ப்பில் நடைபெற்றது.இதில் பேராசிரியர் கருணானந்தம்.ஆற்றிய உரை......
காணொளியைகாண்க

Wednesday, December 07, 2011

இரு நூல்களினது அறிமுகம்

பெயரிடாத நட்சத்திரங்கள்", "Mit dem Wind fliehen" ஆகிய இரு நூல்களினது அறிமுகமும் -தமிழ் சிங்கள மொழியில்- கலந்துரையாடலும் சுவிஸ் சூரிச் இல் இடம்பெற இருக்கிறது.