Showing posts with label நூல். Show all posts
Showing posts with label நூல். Show all posts

Tuesday, January 31, 2012

"Kærlig hilsen mor" bogudgivelsen i Holbæk

 Kalanithy Jeevakumaran inviterede alle sine venner til at fejre udgivelsen af sin bog 
»Kærlig hilsen..Mor«  lørdag i Holbæk Private Realskoles aula.
Det blev et vaskeægte kulturmøde den 28.01 .2012 på lørdag i Holbæk Private Realskoles aula med tamilske kvinder i sarier i alle regnbuens farver, som lyste op i de mørke nuancer som de danske gæster delte, skriver dagbladet Nordvestnyt.
Kalanithy Jeevakumaran har skrevet bogen »Kærlig hilsen... Mor« der bygger på hendes oplevelser under borgerkrigen på Sri Lanka og som flygtning i Danmark.
Blandt gæsterne var lokale politikere og forfatteren Benny Andersen, som har haft lidt med udgivelsen at gøre.

Wednesday, January 11, 2012

நூலறிமுகம்

காசு  ஒரு பிசாசு
 
சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில், கலையரசன் எழுதிய பொருளாதாரக் கட்டுரைகளின் தொகுப்பு, "காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்" என்ற நூலாக வெளிவந்துள்ளது. கருப்பு பிரதிகள் அதனை பதிப்பித்துள்ளது. தற்போது சென்னையில் நடந்து கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளது.
நூல் பற்றிய சிறிய அறிமுகம்:

முன்னுரை
2008 ம் ஆண்டு, உலகை உலுக்கிய வீட்டுக்கடன் நிதி நெருக்கடியின் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. அமெரிக்காவில் மையம் கொண்ட நெருக்கடி, ஐரோப்பா ஆசியா எங்கும் பரவியது. வங்கிகள், தொழில் நிறுவனங்கள் திவாலாகின. லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்தனர். அந்த நேரத்தில் திறந்த பொருளாதாரக் கொள்கை குறித்த அதிருப்தியும், சந்தை குறித்த விமர்சனங்களும் பரவலாக எழுந்தன. அது வரை காலமும் முதலாளித்துவ பொருளாதாரத்தை சிறப்பானதாக கூறிக் கொண்டிருந்தவர்கள், அதன் குறைகளை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டார்கள்.

Friday, December 23, 2011

"மண்மறவா மனிதர்கள்" நூல் வெளியீட்டு விழா

 -இ .ஏகன்-

'எம் தாயகத்தில் அரசியல், இலக்கியம், சமூகம், சமயம், தமிழியல், இதழியல் எனப் பல்வேறு துறைகளில் இயங்கிய பதினேழு பேரின் ஒப்பரிய பணிகளை நினைவூட்டும் வகையில் 'மண் மறவா மனிதர்கள்' என்ற நூலினைப் பல்கலை வேந்தனாகத் திகழும் டாக்டர் வி. ரி. இளங்கோவன் வெளியிட்டுள்ளார்.

வருங்காலச் சந்ததியினர் நம்மவரின் அரும்பணிகளை நன்கு அறிந்துகொள்ள இந்நூல் நல்லதோர் ஆவணமாக அமைந்துள்ளது.' இவ்வாறு கடந்த ஞாயிறு மாலை (11 - 12 - 2011) பாரிஸ் மாநகரில் 'மார்க்ஸ் டோர்மா'  தேவாலயக் கலையரங்க மண்டபத்தில் நடைபெற்ற வி. ரி. இளங்கோவனின் 'மண் மறவா மனிதர்கள்' நூல் வெளியீட்டு விழாவுக்குத் தலைமைவகித்து உரையாற்றிய மூத்த பத்திரிகையாளர் திரு. எஸ். கே. காசிலிங்கம் குறிப்பிட்டார்.

Saturday, December 17, 2011

நந்தினி சேவியரின்" நெல்லிமரப் பள்ளிக்கூடம் "


வாசக நோக்கில் சில குறிப்புகள்
-இதயராசன்-

சுரண்டல், இனபேதம், சமூக ஒடுக்குமுறை ஆகியவற்றினை சமூக வாழ்நிலை மாந்தர்கள் ஊடாட்டத்தின் மூலம் நெல்லிமரப் பள்ளிக்கூடம் சிறுகதைகளில் வெளிப்படுத்தியுள்ளார் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர். மேய்ப்பன், ஒற்றைத்தென்னை, கடலோரத்துக் குடிசைகள், மனிதம், நெல்லிமரப் பள்ளிக்கூடம், தவனம், எதிர்வு. விருட்சம் ஆகிய எட்டுக்கதைகளும் வறுமை, இனம், சாதி ஆகிய மூன்று சமூகப்பிரச்சினைகளையும் உயிர்ப்புடன் நம்முன் பேசுகின்றன. அயல்கிராமத்தைச் சேரந்தவர்கள் என்ற சிறுகதைத் தொகுதிக்கு அடுத்ததாக இச்சிறுகதைத் தொகுதி, கொடகே நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் கதையை நீட்டி முடக்காமல் தேவைக்கேற்ப அச்சொட்டாகச் சொல்வதில் வல்லவர். கூடவே எள்ளல் உணர்வுடன் வாசிக்கத் தூண்டுகிறது. இக்கதைகள் எட்டினையும் விமர்சனம் என்றில்லாமல் ஒரு வாசக அனுபவத்துடன், ஏனைய வாசகர்களும் வாசிக்கவும் ஜோசிக்கவும் வைக்கும் நோக்கில் இரசனைக்குறிப்பாக எழுதமுற்படுகின்றேன்.

Wednesday, December 07, 2011

Friday, November 11, 2011

உயிர் நிழல் இதழ் வெளிவந்துள்ளது....

உயிர்நிழல்இதழ்வெளிவந்துள்ளது....
தொடர்ச்சியான சிற்றிதழ்கள் வருகை!


புலம் பெயர் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வெளிவரும் மாற்று தமிழ் சிற்றிதழ்களில் உயிர் நிழல் இதழ் குறிப்பிடத்தக்கது.இவ்விதழில் மீராபாரதி,தூவாரகன்,திருமாவளவன்,கலையரசன், பவ்சர்,சிவலிங்கம்,ஆழியாள், பஹிமா ஜஹான்,ஜிப்ரி ஹசன்,எஸ்‍ சிவதாஸ்,ஆகியோர் பங்களித்துள்ளனர். தொகுப்பாசிரியர்களான லக்சுமி,சுசீந்திரன் ஆகியோரின் முயற்சியினால் இவ்விதழ் வருகை சாத்தியப்பட்டுள்ளது.இவ்விதழ் வெளிவர 5 மாதங்களுக்கு மேல் எடுத்துள்ளது.(உயிர் நிழல் தொடர்புக்கு exilpub@gmail.com ) குறிக்கப்பட்ட கால எல்லைக்குள் தொடர்ச்சியாக இதழை வெளிக்கொண்டு வர முடியாமைக்கான காரணங்களை, மாற்று தமிழ் சிற்றிதழ் பணியில் ஈடுபாடு கொண்ட அனைவரும் அறிவர்.

Sunday, November 06, 2011

இப்படிக்கு அன்புள்ள அம்மா கவிதைத்தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

 -வெலிகம ரிம்ஸா முஹமத்-    (மதிப்புரை)

நூல் - இப்படிக்கு அன்புள்ள அம்மா
(கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - கலாநிதி ஜீவகுமாரன்
தமிழில் - வி. ஜீவகுமாரன்
வெளியீடு - விஸ்வசேது இலக்கியப் பாலம்

டென்மார்க்கில் டெனிஷ் மொழியில் திருமதி கலாநிதி ஜீவகுமாரன் எழுதிய இப்படிக்கு அன்புள்ள அம்மா என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதை (காவிய) த் தொகுதியை விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் இரண்டாவது படைப்பாக 163 பக்கங்களில் திரு வி. ஜீவகுமாரன் அவர்களால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. திரு வி. ஜீவகுமாரன் அவர்கள் தனது பதிப்புரையில் ''விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் இரண்டாவது படைப்பாக இப்படிக்கு அன்புள்ள அம்மா வெளிவருதல் பற்றி மனம் மகிழ்ச்சி அடைகிறது. காரணம் இதில் வரும் அம்மாவுடனும், அவரின் மகன் ஹரியுடனும் பதிப்பாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் கடந்த ஆறு மாதகாலமாக நான் பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். பிரிவு! வாழ்வின் முதல் அத்தியாயத்தில் உலகத்தை விட்டுப் பிரியும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது" என்கிறார்.
"இலக்கியம் மனிதனின் சிக்கலைக் கலைத்துவப் பாணியில் எடுத்தியம்புவது ஆகும். இப்பொழுது நாம் வாசிக்க எடுக்கின்ற புத்தகம் எளிமையான கவி நடையில் புதுக்கவிதை நடையில், வயோதிக மாது ஒருவரின் மனக்குமுறலை பதிவு செய்கிறது.

Friday, October 21, 2011

இந்திய மண்ணில் சிங்கள நூலுக்கு விருது

 -மேமன்கவி-
இந்திய மண்ணில் சிங்கள மொழி நூல் ஒன்றுக்கு நான் அறிந்த மட்டில் முதல் முதலாக விருதும்பரிசும் வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதுக்கும் பரிசுக்கும்; உரியவர் நம் நாட்டு சகோதர சிங்கள மொழிப் படைப்பாளியும் தமிழ் சிங்கள் மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டு வருபவருமான திரு உபாலி லீலாரட்ன ஆவார்.

இவர் சிங்களத்தில் மொழிபெயர்த்த தமிழகப் படைப்பாளியான கு.சின்னப்ப பாரதியின் ‘சுரங்கம்’ நாவலின் சிங்கள மொழிபெயர்ப்பு நாலுக்கு தமிழகத்தில் மொழிபெயர்ப்புத் துறையை ஊக்குவிக்கமுகமாக செயற்படும் நல்லி திசை எட்டும் எனும் அமைப்பினால் அப்பரிசு வழங்கப்பட்டது.

நல்லி குப்புசாமி செட்டியா அவர்களின் அனுசரணையுடன் செயற்படும் அவ்வமைப்பின் 2011 ஆம் ஆண்டுக்கான மொழியாக்க விருதுகள் வழங்கும் விழா கடந்த செப்டம்பர் 17ந்திகதி திருச்சியில் நடைபெற்ற வேளை

Tuesday, October 11, 2011

நூல் அறிமுகம்

விமல் குழந்தைவேலின் - கசகறனம் -  நாவல் உரை அரங்கு!
"""""போராட்டத்தின் பெயரால் தமது வாழ்வைத் தொலைத்த அக்கறைப்பற்று பெரும் பிரேதேச ஏழை தமிழ் முஸ்லிம் மக்களின் துயரத்தை அம்மக்களின் மொழியிலேயே நம்முன் காட்சிப்படுத்துகிறது இந் நாவல்.
தாயக மண்ணில் சிதவுற்று நிற்கின்ற  தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான வாழ்வுறவை மீளக் கட்டியெழுப்பும் விமல் குழந்தைவேலின் "கசகறணம்" நாவல்,கலாசார பண்பாட்டுத் தளத்தில் பெரும் பங்காற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
இந்த உன்னத பணி வெற்றிபெற நாமனைவரும் இணைந்து முடியுமான பங்களிப்பினை வழங்குவோம். தகவலை ஏனைய நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்."""""

- மு. நித்தியானந்தன்
- ந.சபேசன்
- ஹரி ராசலட்சுமி
- பூ.சீவகன்
- எஸ்.வேலு
- ச.வாசுதேவன்
- வசந்தி சுப்பிரமணியம்
- எம்.பௌசர்
- விமல் குழந்தைவேல்

இசைக்கோர்வை - சாலமன் மற்றும் நண்பர்கள்

இடம்: Quaker Meeting House
1A, Jewel Road, Walthamstow, London, E17 4QU

காலம்- 22  அக்டோபர் மாலை 5மணி

(இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.)

அழைப்பு- தமிழ் மொழிச் சமூகங்களின் செயட்பாட்டகம்
தொடர்பு - 074 02 868713 -  075 33 737896

Thursday, July 21, 2011

என் கண்ணீரோடு சேர்ந்து...

 யோ .கர்ணனின் கதைகள்: தேவதைகளின் தீட்டுத்துணி.
-ச .தமிழ்ச்செல்வன் -

இலங்கையிலிருந்து வரும் எந்த ஒரு படைப்பும் எம்மை முதலில் பெரும் குற்ற உணர்வுக்குள்ளாக்கும். எத்தனை சௌகரியமான –அமைதியான-ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ,நிற்க நிழலில்லாமல் ஓடித்திரியும் ஒரு வாழ்வைப்பற்றிய கதைகளை-கவிதைகளை- நாங்கள் வாசித்துக்கொண்டிருக்கிறோம் என்கிற குற்ற மனம்.முன்பு ஷோபா ஷக்தியின் ம்.. நாவல் குறித்து ஓரிரு பக்கங்கள் எழுதினேன்.ஆனால் அன்று இருந்த மனம் இன்று எனக்கில்லை.அன்று புலிகளும் இருந்தார்கள்.அவர்கள் மீதான எம் காட்டமான விமர்சனங்களும் சண்டைகளும் இருந்தன.இலங்கைப் பிரச்னையை அன்று நான் பார்த்த விதமும் வேறு.ஏதோ ஒரு நம்பிக்கை அன்று எல்லா வாக்குவாதங்களுக்கும் சண்டைகளுக்கும் பிறகு மிச்சமாக இருந்துகொண்டேயிருந்த்து.
யோ.கர்ணனின் தேவதைகளின் தீட்டுத்துணி சிறுகதைத்தொகுப்பை வாசிக்கும் இன்றைய என் மனநிலை முற்றிலும் வேறாக இருக்கிறது.முள்ளிவாய்க்காலில் எம் மக்கள் கதறிய வார்த்தைகள் எம் செவிகளில் விழுந்தும் ஏதும் செய்ய இயலாதவர்களாக-ஏதும் செய்யாதவர்களாக-ஏதேதோ வார்த்தைகளில் அல்லது வாதங்களில் முகம் புதைத்துக் கிடந்தோம்.எப்போதுமே தமிழ்நாட்டில் நாங்கள் இலங்கைத் தமிழ்மக்களின் பிரச்னைகளை எங்களின் அரசியலுக்குப் பயன்படுத்திக்கொண்டிருந்தோமே ஒழிய ஆழப்புரிந்து கொண்டு அக்கறையான முயற்சிகளைச் செய்தோமில்லை என்கிற கசப்பே என் அடி நாவில் படிந்து கிடக்கிறது. இன்றும்கூட அப்படித்தான் இருக்கிறோம்.ஐந்தாம் கட்டப்போரை கொழும்புவில் நடாத்துவோம் என்று வீர உரைகள் நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம்.அல்லது இன்னும் தனி ஈழத்துக்குறைவாக எதையும் ஏற்க மாட்டோம் என்று அதே குரலில் இங்கே நின்று பேசிக்கொண்டிருக்கிறோம்.
எங்கள் முகத்தில் அறைகின்றன யோ.கர்ணனின் இக்கதைகள்.