Thursday, January 28, 2010


காணவில்லை டானியலின் கல்லறை
-ஆதவன் தீட்சண்யா-

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஊழியர். இலங்கை தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராட கட்சியின் முன்னெடுப்பில் உருவான தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர். மார்க்சீய அறிதல்முறை மற்றும் தலித் உள்ளுணர்வின் வழியே சமூகத்தின் அடிப்படையையும் நிகழ்வுப் போக்குகளையும் விளங்கிக் கொண்டவர். தமிழர் என்ற பொது அடையாளத்திற்கு வெளியே தாழ்த்தப்பட்ட மக்களை நிறுத்திவைப்பதற்கு சாதியம் வழங்கிக் கொண்டிருந்த உளுத்துப்போன நியாயங்களையும் நடைமுறைகளையும் தனது எழுத்தாக்கங்கள் வழியே அம்பலப்படுத்தியவர். அவரது எழுத்துகள் அவரை தமிழ் தலித் இலக்கியத்தின் முன்னோடி என்ற பெருமைக்கு உயர்த்தி நிறுத்தியுள்ளன. விழுங்க முடியாத முள் அல்லது மறக்க முடியாத சொல்லாக அவரது பெயர் மேலெழுந்து வந்தது. அ.மார்க்ஸ், தஞ்சை பிரகாஷ் போன்ற தமிழக எழுத்தாளர்கள் பலருடனும் தோழமை கொண்டிருந்தவர்.

... இப்படி சொல்லிக் கொண்டே போகுமளவுக்கு புரட்சிகரமான வாழ்வைக் கொண்டிருந்த தோழர் கே.டானியல், மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்து 1986 மார்ச் 23 அன்று தஞ்சையில் காலமானார்.வெண்மணிக்குப் போய் அந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு வரவேண்டும் என்ற அவரது விருப்பம் நிறைவேறாமலே போய் விட்டதென்கிறார் அவரது உற்றத்தோழர் வி.ரி.இளங்கோவன். பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாளும் டானியல் நினைவுநாளும் ஒன்றுதான். டானியலின் கல்லறையை மக்கள் கலை இலக்கியக் கழகம் கட்டியெழுப்பியிருந்ததாக தோழர்கள் சிலர் கூறினார்கள். அ.மார்க்ஸுக்கும், பொ.வேலுச்சாமிக்கும் இதில் கூடுதல் பங்களிப்பு இருந்திருக்கிறது.

கடந்த சிலவருடங்களில் மாதம் ஒருமுறையாவது ஏதேனுமொரு வேலையாக தஞ்சாவூருக்குப் போய்வந்து கொண்டுதானிருக்கிறேன். டானியலின் கல்லறையை இம்முறையாவது பார்த்துவிட்டு வரவேண்டும் என்று ஒவ்வொருமுறை போகும்போதும் நினைத்துக் கொள்வதுண்டு.

ஆனால் நிகழ்ச்சிகள், அதற்குப் பிறகு தோழர்களுடனான சந்திப்புகள் என்று இருந்துவிட்டு கிளம்பி வந்து வண்டி பிடிப்பதே வழமையாய் இருந்தது. இம்முறையும் அப்படி வந்துவிட்டிருந்தால் மனம் தொந்திரவு அடைந்திருக்காது என்று இப்போது நினைத்துக் கொள்கிறேன்.

2010 ஜனவரி 22 அன்று தஞ்சை மாவட்ட தமுஎகச செயலாளர் களப்பிரனின் தங்கை திருமணம். மண்டபத்திலிருந்து அறைக்குத் திரும்பி தோழர்கள் தஞ்சை சாம்பான், சோமலிங்கம் ஆகியோருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். கொஞ்சநேரத்தில் எழுத்தாளர் கீரனூர் ஜாகிர் ராஜாவும் திரைத்துறையில் பணியாற்றி வரும் தோழர் சசிகுமாரும் வந்து சேர்ந்தார்கள். உரையாடல் எனது இலங்கைப் பயணம் குறித்து திரும்பியது. (ஆதவன் எப்படி போய்வந்தார் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று விஷமத்தனமாக பாவ.செயப்பிரகாசம் பழி போட்டுக் கொண்டிருக்கிறாரே அந்த பயணம் பற்றியதுதான். அவருக்கு பதில் சொல்ல இதுவல்ல இடம். வேறு இடம் கிடைத்தாலும் அவரது ஊத்தை உளறல்களுக்கு பதில் சொல்லி ஆகப்போவதென்ன?) மலையகத்திலாகட்டும் கொழும்பு அல்லது யாழ்ப்பாணத்திலாகட்டும் அங்குள்ள எழுத்தாளர்கள் மறைந்த தோழர் டானியல் மீது வைத்திருக்கும் ஈடுபாடு அளவற்றதாய் இருப்பதையும், ஹரி கிருஷ்ணனின் மணல்வீடு டானியல் சிறப்பிதழாக வெளியானதை அவர்களில் பலர் நினைவு கூர்ந்ததையும் சொல்லிக் கொண்டிருந்தேன். டானியலின் நாவல்கள் குறித்து புதுவிசையில் லெனின் மதிவானம் எழுதிய கட்டுரை, டென்மார்க்கிலிருக்கும் தோழர் கரவைதாசன் கொண்டு வரவிருக்கும் இனி இதழில் வி.ரி.இளங்கோவன், சிவசேகரம், சி.கா.செந்திவேல், எஸ்.சந்திரபோஸ் ஆகியோர் டானியல் பற்றி எழுதியுள்ள கட்டுரைகள் என்று அவரைப் பற்றியே பேசிக்கொண்டிருந்த போதுதான், டானியல் கல்லறைக்குப் போவமா தோழர் என்று கேட்டேன். பிறகென்ன, ஐந்துபேரும் கிளம்பினோம்.

தஞ்சையின் ராஜகோரியும் அதையடுத்துள்ள இடுகாடும் திறந்தவெளி பீக்காடாக நாறிக் கொண்டிருக்கின்றன. உயிருள்ள மனிதர்கள் வாயில் மலத்தை திணிக்கிற கேடுகெட்ட நாட்டில் செத்தவர்கள் மேல் கழிந்துவைப்பதில் யாருக்கு என்ன வருத்தமிருக்கப் போகிறது? பட்டுக்கோட்டை அழகிரியின் கல்லறைக்கு அருகில்தான் டானியலின் கல்லறை என்று உறுதியாக தெரிவித்த சாம்பான் அவ்விடத்திற்கு அழைத்துப்போனார். (பாவம் திமுக. யாராவது ஒரு அழகிரியை மட்டும் பார்த்துக்கொள்கிற வலுவும் மனமும்தான் அதற்கிருக்கிறது போலும். பட்டுக்கோட்டை அழகிரியெல்லாம் இனி எதற்கு? சீந்துவாரற்று கிடக்கிறது அந்த கல்லறை). தஞ்சை சாம்பானும், சசிகுமாரும் அங்குமிங்குமாக தேடிச் சலித்துவிட்டு கடைசியில் உதட்டைப் பிதுக்கி நின்றனர். இத்தனைக்கும் அவர்கள் ஏற்கனவே டானியல் கல்லறைக்கு வந்துபோனவர்கள்தான். ஆனால் அப்படியெதுவும் அங்கு தென்படவில்லை. சந்தேகம் வந்துவிட்டால் பானையைத் திறந்து யானையைத் தேடுகிற மாதிரி அவரும் சசியும் அங்குமிங்குமாக அலைந்தார்கள். ராவணன் என்கிற தோழரை செல்போனில் அழைத்து சரியான இடம் குறித்த விவரங்களைத் கேட்டுக்கொண்டு மீண்டும் தேடினோம். ஒருவேளை இவர்கள் சரியான இடத்தை மறந்திருக்கக்கூடும் என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.

தோழர்.அ.மார்க்ஸ் சரியான இடத்தை சொல்லக்கூடும் என்ற நம்பிக்கையில் அவரை அலைபேசியில் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை. ஒருவேளை யாராவது இடித்துத் தள்ளியிருப்பார்களோ என்று யோசிக்கக்கூட எனக்கு தைரியம் வரவில்லை. சோர்வும் ஏமாற்றமும் பீடித்த மனநிலையோடு அறைக்குத் திரும்பிய கொஞ்நேரத்தில் தோழர் மார்க்ஸ் லைனில் வந்தார். விசயத்தை சொன்னதும்
அவரும் பதறிவிட்டார். அவருக்கும் டானியலுக்குமான நெருக்கமும் தோழமையும் அப்படியானது. அழகிரியின் கல்லறைக்குப் பக்கத்தில் அதேவரிசையில்தான் டானியல் கல்லறை என்று உறுதியாக தெரிவித்தார். பிப்ரவரி 2ம் தேதி தஞ்சை வரவிருப்பதாகவும் அப்போது நேரில் சென்று பார்ப்பதாகவும் அவர் கூறியது சற்றே ஆறுதலாயிருந்தது. இடுகாடு முழுவதும் மண்டிக் கிடக்கும் முட்புதருக்குள் டானியலின் கல்லறை சேதமின்றி இருக்கிறது தோழரே, நீங்கள்தான் சரியாய் தேடிப் பார்த்திருக்க தவறிவிட்டீர்கள் என்று மார்க்ஸ் சொல்ல வேண்டுமென விரும்புகிறேன்.

தோழர்கள் சசியும் கீரனூர் ஜாகீர் ராஜாவும் அலைபேசியில் தெரிவித்த அண்மைச் செய்திகள்:

மொழிப்போர் தியாகிகள் கூட்டத்திற்காக தஞ்சை வந்திருந்த தமிழச்சி தங்கபாண்டியனிடமும், எஸ்.தேன்மொழியின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவிற்காக வந்திருந்த சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரிடமும் டானியலின் கல்லறைக்கு நேர்ந்துள்ள கதியை சசி எடுத்துரைத்திருக்கிறார். இதனிடையே தஞ்சை மாநகராட்சி உறுப்பினராயிருக்கும் சசியின் நண்பர் குமார், “உலகம் போற்றும் ஒரு எழுத்தாளரின் கல்லறையைக்கூட நம்மால் பாதுகாக்க முடியவில்லையேஎன்கிற அவமானமும் ஆதங்கமும் கொண்டு இப்பிரச்னையை 25.01.2010 அன்று அவைக்கூட்டத்தில் எழுப்பியிருக்கிறார். டானியலின் கல்லறைக்கு நேர்ந்த கதியை தஞ்சை நாளிதழ்களும் கவனப்படுத்தி வெளியிட்டுள்ளன. டானியல் இப்போது ஒரு பேசுபொருளாகியிருக்கிறார் தஞ்சையில். சரியான இடத்தை கண்டுபிடித்து சொல்லுங்கள், அவருக்கு நேர்ந்த அவமானத்தைப் போக்கும் வகையில் மிகச்சிறப்பாக கல்லறையை எங்கள் செலவில் எழுப்பித் தருகிறோம் என்று பலர் முன்வந்திருப்பதாக சசி கூறிய தகவல் நெகிழ்ச்சியளிக்கிறது. புனரமைப்புக்கு உதவி தேவையெனில் தயங்காமல் கேளுங்கள் தோழரே என்று உயிர்மெய் தமயந்தியும் (நார்வே) கூறியிருக்கிறார்.

தோழர் டானியலின் நினைவுநாளான மார்ச் 23 நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு கம்யூனிஸ்டாக இருந்து போராடி ஈட்டிய வெற்றிகள், அவரது நூல்கள், அவர் உருவாக்கிய அறிவுப் பாரம்பரியம், முன்னெடுத்த தலித் இலக்கியம் ஆகியவற்றின் வழியாக நம்முடனேயே இருக்கும் தோழர் டானியலுக்கு அவரது கல்லறையையாவது மீட்டுத்தர என்ன செய்யப் போகிறோம்? அந்த பீக்காட்டில் அவரது கல்லறையை மறுபடியும் தேடப் போகிறோமா அல்லது அவருக்குரிய மரியாதையுடன் புனரமைக்கப்பட்ட ஒரு கல்லறையின் முன் அஞ்சலி செலுத்தப்போகிறோமா என்பதை அரசாங்கமும், தஞ்சை மாநகராட்சியும்தான் இனி சொல்லியாக வேண்டும்.

2. கல்லறைகளைப் பற்றிய பிற நினைவுகள்

அ) லண்டன் ஹைகேட் இடுகாட்டில் இருக்கும் காரல் மார்க்சின் கல்லறையைப் பார்க்க இப்படித்தான் நானும் ஷோபாசக்தியும் கீரனுடன் கிளம்பிப்போனோம் ஒரு சாயங்காலப் பொழுதில். சுடுகாட்டை பூட்டிவைப்பார்கள் என்று எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. கடுங்குளிர் காலமானதால் மாலையில் 4.30 மணிக்கே கதவடைத்துவிட்டார்கள். எதெதற்கோ சுவர் தாண்டுகிறவர்கள் இருக்க, மார்க்ஸ் கல்லறையைப் பார்க்க சுவரேறி குதித்தால் என்ன என்றுகூட யோசித்தோம். கீரன்தான் நாளைக்கு வருவோம் என்று சமாதானம் சொன்னார். பிறிதொருநாள் நானும் காண்டீபனும் போய் பார்த்தோம். யாரோவொரு தனிநபர்தான் தன் சொந்த செலவில் மார்க்சின் கல்லறையைக் கட்டியதாக சொன்னார்கள். அந்த கல்லறைத் தோட்டத்தில் 300 வருடங்களுக்கு முந்திய பல கல்லறைகளைக்கூட காணமுடிந்தது.

ஆ) கலை இலக்கிய ஆளுமைகளின் கல்லறைகள் ஆழ்ந்த பொறுப்புணர்வுடனும் அழகுணர்ச்சியுடனும் பிரான்சில் பராமரிக்கப்படுவதை நேரில் கண்டு நெகிழ்ந்த அனுபவத்தை ஓவியர் ட்ராட்ஸ்கி மருது பல்வேறு சந்தர்ப்பங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இ) இலங்கை மலையகப்பகுதியில் வீறுடன் செயல்பட்ட செங்கொடி சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான தோழர் சுந்தரம் அவர்களின் கல்லறையைப் பார்த்ததும்கூட இப்படியான ஒரு அனுபவம்தான். கடும் மழையில் சிக்கிக் கொண்டு வெகுவாக தாமதமாகி இருட்டும் நேரத்திற்குதான் அங்குபோய் சேர முடிந்தது. ஒரு தேயிலைத் தோட்டத்தினூடே நீளும் சாலையொன்றின் ஓரத்தில் சுந்தரத்தின் கல்லறை இருந்தது.

தொழிலாளி வர்க்கத்திற்காக தோழர் சுந்தரம் ஆற்றிய பணிகள் குறித்து மரியாதை கொண்டிருந்த சிங்களவரான ஒரு கம்யூனிஸ்ட் தன் சொந்த செலவில் அந்த கல்லறையை கட்டியதாக தோழர்கள் ஜேம்சும் மகேந்திரனும் தெரிவித்தார்கள். தொழிலாளர்களை ஒடுக்கி தனக்கு ஆதாயம் தேடித் தந்த பெரிய கங்காணிகளின் கல்லறைகளை எஸ்டேட் நிர்வாகங்களே கட்டி வருடந்தோறும் நினைவுதினத்தை அனுஷ்டித்து வருவதும், தமக்காக உழைத்து மாண்ட ஒரு தலைவரின் கல்லறையை தொழிலாளிவர்க்கம் கண்டுகொள்ளாதிருப்பதும் ஏனோ இவ்விடத்தில் நினைவில் தோன்றி உறுத்துகிறது.

ஈ) சேகுவேராவை கொன்றவர்கள் அவரை எங்கே புதைத்தார்கள் என்பது 30 வருடங்கள் கழித்தே வெளியுலகுக்கு தெரியவந்தது. கொன்றபிறகும் ஆத்திரமடங்காமல் சேவின் கரங்களை மணிக்கட்டுடன் வெட்டியெடுத்துவிட்டு புதைத்தார்கள் என்கிற குறிப்புதான் கண்டுபிடிக்க உதவியாய் இருந்தது. தோண்டியெடுக்கப்பட்ட அவரது எலும்புக்கூடு வழியே உலகம் மீண்டும் சேகுவேராவை கண்டது.

உ)டானியலின் கல்லறையை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்கு வருந்திய தோழர்.அழகிய பெரியவன், பெருநகரத்தின் கழிவுகளால் திணறி அழுக்கேறிப் போன கடலின் ஓரத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சமாதி முறையான பராமரிப்பின்றி இருந்ததைக் காணநேர்ந்ததாக கவலை தோயக்கூறினார்.


புலம் பெயர்வும் இடம் பெயர்வும்
-தோழர் .தங்கவடிவேல்-

அன்பர்களே நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். நான் சமாதானத்திற்கான கனடியர் அமைப்பினர் நடாத்தும் இந்தக் கூட்டத்தில் பேசுவதையிட்டு பெருமைப் படுகிறேன்.. எனக்குத் தரப்பட்ட தலைப்பு
இடம்பெயர்ந்தவர்களும்புலம்பெயர்ந்தவர்களும். இது ஒரு அருமையான தலைப்பு. அன்பர்களே முதலில்இடம்பெயர்வு என்ற பதத்தை எடுப்போமாக இருந்தால் இலங்கையில்தமிழர்களாக இருந்த தமிழர்களோடு இருந்த ஒருசாரார் அதாவது தாழ்த்தப்பட்டமக்கள்தான் முதன் முதலில் இடம்பெயர்வுக்கு உள்ளானார்கள். நண்பர்களுக்குநான் இதை ஞாபகப்படுத்த ஆசைப்படுகிறேன். முற்றுமுழுதாக தமிழர்கள்வாழுகின்ற யாழ்ப்பாண மண்ணிலே தாழ்த்தப்பட்ட மக்கள் ஏழை மக்கள்உயர்சாதி என்று சொல்லப்படுபவர்களால் பலதடவை இடம்பெயர்வுக்குவற்புறுத்தப்பட்டார்கள். பலர் மனபங்கப்படுத்தப்பட்டார்கள். பல இளைஞர்கள்கொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் அங்கவீனர்களாக்கப்பட்டார்கள். விசேடமாகப் பெண்கள். பலரது குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன. அதேபோலஓரிடத்தில் நிரந்தரமாக வாழுகின்ற தங்களது அடிப்படை உரிமையை இழந்துயாழ்ப்பாண மண்ணிலே இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் திருகோணமலைக்கும்வன்னிப் பகுதிக்கும் இடம்பெயர்ந்த வரலாறு ஏராளம் ஏராளம்.
இது ஒன்றும் கற்பனைக் கதையல்ல. நிதர்சனமான வரலாற்று உண்மைகள். இந்தச் சாதித் துவேசம் என்கின்ற அடிப்படையான கேவலமான மிருகத்தனமானமிலேச்சத்தனமான இந்தக் கட்டமைப்பிலிருந்து எங்களுடைய இலங்கைஅரசியலில் இனவாதமும் சரி மதவாதமும் சரி முளைத்திருக்கின்றன. முளைக்கின்றன. தமிழ் மொழியைவிட வேறுமொழி தெரியாது. வேறுமொழிகளைப் படிப்பதற்கு வாய்ப்பளிக்ப்படாத மக்கள். பாடசாலைகளிலேபடிக்க்கூடாது என்று தடுக்கப்பட்ட மக்கள்.தாங்கள் நினைத்தது போல்உடைதரிக்க முடியாது போன மக்களை மிகவும் கீழ்த்தரமான வாழ்நிலைக்குத்தள்ளி மிக மோசமான மனித உரிமை மீறல்களைச் செய்தவர்கள் இலங்கைவரலாற்றிலே மேட்டுக் குடியினர் என்று சொல்லப்படும் சாதிமான்களானயாழ்ப்பாணத்துக் கனவான்களே என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

யாழ்ப்பாணத்துத் தமிழ்த் தலைவர்கள் யாழ்ப்பாணமண்ணிலே வாழ்ந்ததாழ்த்தப்பட்ட மக்களது உரிமையை கொடுக்க மறுத்து செய்த கொடுமைகள்ஏராளம். இப்படியான தலைவர்கள் இலங்கை சுதந்திரம் அடைந்ததற்கு அதாவதும் ஆண்டுக்கு முன்னும் பின்னும் எப்படிச் சிங்களத் தலைவர்களோடுஉறவாடினார்கள் என்பதைநாங்கள் நிதானமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உதாரணத்திற்குச் சொல்லலாம், டி.எஸ் சேனநாயக்கா குடும்பம் பின்பண்டாரநாயக்கா குடும்பம் அதன்பின் வந்தவர்கள் என அனைவரோடும்மிகநெருங்கிய உறவை வைத்துக் கொண்டிருந்தவர்கள் இராமநாதன், அருணாசலம், ஜி.ஜி. பொன்னம்பலம் அதன்பின் வந்த சுந்தரலிங்கம்திருச்செல்வம் போன்றவர்கள்.

இந்த இரண்டு இனவாதிகளும் இந்த இரண்டு சாதிவாதிகளும் தான் இலங்கையில்நடைபெற்ற அனைத்து அட்டூழியங்களுக்கும் மோதல்களுக்கும்அடாத்துக்களுக்கும் விதை விதைத்தார்கள் என்று சொல்வது ஒன்றும்பொய்யல்ல. கட்டுக்கதையல்ல. நண்பர்களே… சிங்கள அரசியல் தலைவர்கள்முழு இலங்கையையும் ஆண்ட காலத்திலே அதாவது உதாரணத்திற்கு டி.எஸ். சேனநாயக்கா காலத்திலே அவர்பிரதமராக இருந்த காலத்திலே அவருக்கு சகலவிதமான உதவிகளையும் ஒத்தாசையையும் செய்தவர்கள் ஜி.ஜி. பொன்னம்பலம், எஸ்.ஜே.வி. செல்வநாயகம் போன்றவர்கள். ஏனெனில் அவர்கள் ஒருவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் உதவியாகவும்பாதகாப்பாகவும்தான் இருந்திருக்கிறார்கள். சேனநாயக்கா அவர்கள் குடியேற்றத்திட்டம் ஒன்றைக் கொண்டுவந்த பொழுது சிங்களக் குடியேற்றம் என்றுசொன்னார்கள். அன்றைய தமிழ்த் தலைவர்கள் அவர்களுக்குஉடன்பாடாய்த்தான் இருந்தார்கள். ஒத்தசையாகத்தான் இருந்தார்கள்.

அப்போது இதனைத் தவறு என்றும் பிரச்சனைக்குரியவை என்றும் இடதுசாரிகள்சொன்னபொழுது இந்தத் தமிழ்த் தலைவர்கள் சிங்களத் தலைவர்களோடு சேர்ந்துநின்று தமது கைங்கரியங்களை புரிந்தார்கள். தமிழ் மக்களில் ஒரு சாராருக்குஉரிமைகள் கொடுக்கக் கூடாது என்று பேசியவர்கள் சிங்களத் தலைவர்கள்அல்ல. முதல் பேசியவர்கள் இராமநாதன் போன்ற தமிழ்த் தலைவர்கள். பின்னர்அந்த அடக்கப்பட்ட மக்கள் அடக்குமுறைக்கெதிராக வீறு கொண்டெழுந்துதெளிந்த மனதோடு மார்கிய லெனினிச சோசலிச கொள்கையோடு சேர்ந்துஎடுத்த நடவடிக்கைக்கு எதிராக நின்றவர் வவுனியா சி.சுந்தரலிங்கம் அவர்கள். இவர்களுக்கு எதிராக சிங்கள அரசு எந்த நடவடிக்கையும் எடக்கவில்லை. தட்டிக்கேட்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள்தான் கேட்டார்கள். நண்பர்களே சாதிவாதம்மொழிவாதம் இனவாதம் வர்க்க வாதம் எல்லாமே கிட்டத்தட்ட ஓரிடத்தில்இருந்துதான் பிறக்கின்றது.

சாதி அடக்குமுறை எவ்வளவு பயங்கரமானதோ அதேயளவு பயங்கரமானதுதான்இனவாதம். வர்க்க வாதமும் அப்படித்தான். வர்க்கமுரண்பாடு உலகம்முழுமைக்கும் பொதுவானது. அடுத்து, பண்டார நாயக்கா ஆட்சிக்குவருகிறபொழுது இரண்டே இரண்டு கட்சிகள்தான் சிங்களவர்களிடம் இருந்தது. ஒன்று ஐக்கியதேசியக்கட்சி மற்றது சிறீலங்கா சுதந்திரக் கட்சி. பண்டாரநாயக்காஇலேயே தமிழத் தலைவர்களான எஸ்.ஜே.வி. செல்வநாயகம்போன்றவர்களிடம் இலங்கையில் ஒரு இனப்பிரச்சனை இருக்கிறது இதுபிற்காலத்தில் வளர்ந்து பெருத்து வெடித்து பேராபத்தை உண்டுபண்ணக்கூடியது. ஆனபடியால் இரண்டுபகுதித் தலைவர்களும் பேசி ஒரு உடன்பாட்டிற்குவருவதன் மூலம் இதை விஸ்பரூபம் எடுக்காமல் தடுக்கமுடியும் என்றுசொல்லியிருக்கிறார். இது எஸ்.டிபிள்யூ.ஆர்.டி. பண்டபரநாயக்காவின் மனதில்எழுந்த எண்ணம். இது எங்கள் தமிழ்த் தலைவர்களது மனதில் தோன்றியதல்ல. பின்னர் பண்டாரநாயக்காவும் தந்தை செல்வநாயகமும் சேர்ந்து ஒப்பந்தம்ஒன்றை எழுதினார்கள். இது பூரணமானதாக இல்லாவிடினும் பின்னர் எழுந்தமிகப்பெரிய பிரச்சனைகளை தவிர்க்க அது காத்திரமான பங்களிப்பைச் செய்தது.

ஜே.ஆர். ஜெயவர்த்தனா என்ன செய்தார் என்று உங்களுக்குத் தெரியும். ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்கள் பண்டாரநாயக்காவும் செல்வநாயகமும் செய்தஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்து கண்டி யாத்திரை செய்தார். கண்டி யாத்திரைசெய்ததன் மூலம் சிங்கள இனவாதத்தை தூண்டினார். நான் சிங்களப்பேரினவாதம் என்று சொல்ல மாட்டேன். நண்பர்களே நீங்கள் என்னநினைக்கிறீர்களோ தெரியாது. இனவாதம் என்பது தமிழர்களிடமும் இருந்தது. அது தமிழ் இனவாதம். சிங்களவர்களிடமும் இருந்தது சிங்கள இனவாதம். இந்தஇனவாதத்தை மக்களுடைய தொகையைக் கொண்டு நாங்கள் தீர்மானிக்கஇயலாது. தமிழ் இனவாதம் என்பது இந்த வெறி என்பது, இந்தமிலேச்சத்தனமென்பது சிங்கள இனவாத்தை விட எந்தளவிலும் குறைந்ததல்ல. ஜே.ஆர்.அவர்களது கண்டியாத்திரையின் பிற்பாடு யூ. என்.பி கட்சி சிங்களமக்களிடத்தில் கணிசமான ஆதரவைப் பெற்று வளருகிறது. அதற்கான ஆதாரம், மூலதனம் இனவாதமே. இன்றுவரை அனைத்துப்பிரச்சனைகளுக்கும்முரண்பாடுகளுக்கும் மூலகாரணம் பொருளாதாரம் தான் அந்த ஏற்றத்தாழ்வுதான்என்று சொன்னவர்கள் இடதுசாரிகள்தான். இடதுசாரிகள் ஒன்றையே நினைத்துநேரான பாதையில் சென்றதனால்தான் ஒருபோதும் இடறவில்லை. ரஸ்சியாஎன்றும் மொஸ்கோ என்றும் ரொஸ்கியம் என்றும் பிளவுபட்டு நின்றதும்இவர்கள் ஒற்றுமைப்படாததும் தவறுதான். இந்த மூவரும் ஒற்றுமைப்பட்டுநின்றிருந்தால் இலங்கையில் நடைபெற்ற அரசியல் அனர்த்தங்கள் நிட்சயம்தவிர்க்கப்பட்டிருக்கும். தவிர்க்கப்படுவது மாத்திரமல்ல ஒரு பெரிய ஐக்கியம்இந்த மக்களிடையே வந்திருக்கும்.

get-attachment.aspx (3)நான் 1956ம் ஆண்டு கல்லோயா அபிவிருத்தி சபையிலேபணிபுரிந்தேன். இலங்கை வரலாற்றிலே முதலாவது இனக்கலவரம் அங்கேதான்வெடித்தது. இனக்கலவரம் அம்பாறையில் வெடித்தபொழுது எனக்கு அப்போது 23 வயது. அந்தநேரம் எங்களை ஒரு துன்பமும் இல்லாது பாதுகாத்தவர்கள்எங்களது சிங்கள நண்பர்கள். நான் ஒரு உதாரணத்திற்குச் சொல்லுகிறேன். பிரேமரட்ணா என்று அம்பாந்தோட்டையில் இருக்கின்ற எனது நண்பன்என்னையும் இன்னும் மூன்று தமிழ் இளைஞர்களையும் ஒரு பேக்கரியிலேயேகொண்டு போய் பத்திரமாக இருக்கச் சொல்லி விட்டார். அது முதலாவதுஅனுபவம். அங்கே பார்த்தால் ஒவ்வொருவரும் வெவ்வேறு கோலங்களில்இருக்கின்ற தொழிலாளிகள். பார்க்க எங்களுக்கு மிகவும் அச்சமாக இருந்தது. தமிழன்ர குணம் என்ன பார்த்தவுடன் எல்லோரையும் சந்தேகிப்பது. அங்கிருந்தகத்திகள் கோடாலிகளைப் பார்க்க எனது நண்பர்களுக்குப் பயம் வந்துவிட்டது. ஆனால் தனது தம்பியினது பேக்கரிதான் இது. நீங்கள் இங்கிருந்து வெளியில்போக யோசிக்க வேண்டாம். வெளியில் நிலைமை படுமோசமாகவுள்ளது. என்பதை பிரேமரட்ண விளக்கினார். தனது தம்பியும் என்னைப் போல்தான்ஆதலினால் பயப்படவேண்டாம் என்றார்.

நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால், அடிமட்டத்து மனிதர்கள் தொழிலாளிகள்உறவு கொள்வது என்பது திடீரென ஏற்படும் சிக்கல்களிலும் அல்லது அளவுகடந்த அன்பிலும்தான். 1987களில் பலாலி இராணுவமுகாமைச் சுற்றியுள்ளகிராமத்து குடும்பங்கள் பாதுகாப்புக் கருதி இடம்பெயரவேண்டிவந்தது. அனைவரும் ஒட்டுமொத்தமாக இடம்பெயர்ந்தார்கள். அந்தநேரம் இரண்டுநாள்தங்குவதற்கு அரசாங்க அதிபரும் பொலிசும் இடம் ஒதுக்கிக்கொடுக்கப்பட்டபொழுது, சாதியிலே ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருபகுதியிலேயேவிடப்பட்டு சாதிமான்கள் வேறுபகுதியிலே போய்ச் சேர்ந்தார்கள். பின்பு நடந்தஉள்நாட்டு யுத்தத்திலே எங்களுடைய மக்கள் உயிருக்குப் பயந்து அநாதைகளாகஓடி ஒழிந்து கொண்ட இடங்களிலே தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணியள்ளிக்குடிக்கமுடியாமல் தடைசெய்யப்பட்டார்கள்.

நண்பர்களே அன்பர்களே நான் உங்களுக்குச் சொல்லுவது, இந்த அடிப்படைஇன்றுவரை இருக்கிறது. அது செத்து விட்டது என்று சிலர் சொல்கிறார்கள். வெளிநாடுகளில் புலம்பெயர்ந்தவர்களைப் பார்க்கிறேன். இங்கே மிகக் கவனமாகஅது பாதுகாக்கப்படுகிறது. குடியிருக்க வீடு வாங்கப் போகும் போது அயலிலேயார் இருக்கிறார்கள் என்தான் பார்க்கிறார்கள். என்ன சாதிக்காரர் இருக்கிறார்என்றுதான் பார்க்கிறார்கள். இதுதான் தமிழர்களது மனோபாவமாக இருக்கிறது. இனி, தமிழீழ விடுதலைப் போரை நடாத்திய புலிகள் போரில்தோற்கடிக்கப்பட்டார்கள். தோற்கடிக்கப்பட்டது என்று சொல்லுவதற்கும்எதிர்ப்பானவர்கள் இருப்பார்கள். புலிகள் போரில் தோற்கடிக்கப்ட்ட பின்அங்குள்ள அரசும் அரசுக்கு சார்பானவர்களும் தூண்டிவிட்டதின் பேரில் சிங்களமக்கள் பெரிய கொண்டாட்டமாகக் கொண்டாடினார்கள். புத்தர் அதையாசொன்னார்? பஞ்ச சீலம் என்கின்ற அன்பைப் போதித்த புத்த சமயத்தைத்தழுவுகிற மக்கள் பல்லாயிரம் மக்கள் சாகடிக்கப்பட்டதை கொண்டாட்டமாகக்கொண்டாடினார்கள்.

இது அந்த மக்களுடைய குற்றமல்ல. அந்த மாதிரி அவர்களுடைய மூளைகள்சலவை செய்யப்பட்டுள்ளன. நான் இப்படிச் சொல்கிற பொழுது இன்னொருவிடையத்தையும் சொல்ல வேண்டும். 1999-2000ம் ஆண்டுகளில் ஓயாதஅலைகள் என்ற புலிகளுடைய இராணுவ நடவடிக்கையின் பொது நடந்தசம்பவங்கள் பூண்டோடு அழிக்கப்பட்ட இராணுவ முகாம்கள், சிங்களக்கிராமங்கள், முஸ்லீம் மக்கள் அழிக்கப்பட்டு இரசு தடுத்து நிறுத்த முடியாதுபின்வாங்கியபோது நாங்கள் எல்லாம் கொண்டாடினோம். எமது வீடுகளில்விழாவாகக் கொண்டாடினோம். நமது நாட்டிலல்ல. இங்கே புலம் பெயர்ந்து வந்துசர்வ பாக்கியங்களையும், வாழ்க்கைக்குத் தேவையான சகலவசதிகளையும்அதற்கும் மேலால் மனித உரிமைகளைப் பாதுகாக்கின்ற, மதிக்கின்ற நாட்டில்வந்திருக்கின்ற நாங்கள் கொண்டாடினோம். அது தவறு எனில் இது எவ்வகையில்சரியானதாக இருக்கமுடியும்? ஆகவே இனவாதம் என்பது தமிழர்களுக்கும்சிங்களவர்களுக்கும் பொதுவான விடையம். இடதுசாரி என்று சொல்கிற நாங்கள். இனவாதம் என்ற உணர்வுக்கோ அந்த மனநிலைக்கோ எங்களை உள்ளாக்காமல்இருந்தபடியால்தான் யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்களது சமஉரிமைக்கான போராட்டத்தில் எதிர்பார்க்காதளவு வெற்றியை அடைந்துள்ளோம்.

காரணம் எங்களது போராட்டத்திலே நம்மிடம் இனவாதம் இருக்கவில்லை. சிங்களமக்கள் நிறையளவு உதவி செய்தார்கள். முஸ்லீம் மக்கள் உதவிசெய்தார்கள். அதேபோல் நல்லெண்ணம் படைத்த, தெளிந்த சிந்தனையுள்ள, இடதுசாரி மனப்பாங்குள்ள உயர்சாதித் தமிழர்களும் தங்களுடைய உயிரைக்கொடுக்கிற அளவுக்கு முன்வந்தார்கள். இவற்றையெல்லாம் நாம் பெருமையாகப்பேசவேண்டும். முடிவாக புலம்பெயர்ந்து வந்திருக்கிற தமிழர்கள் பற்றிப்பேசவேண்டும். இங்கு சகலவிதமான வசதிகளுடன் வாழ்ந்து கொண்டுஅழிவையே நோக்காக்கொண்ட அழிந்துபோகின்ற இயக்கங்களுக்கு தாராளமாகஅள்ளிக் கொடுத்து அங்கே நடக்கின்ற போருக்கு வித்திட்டவர்கள், அதைவெற்றிகரமாகச் செய்து முடிப்போம் என்று நம்பியவர்கள் இந்தப் புலம்பெயர்ந்தவர்கள்.

எங்காவது யாராவது நூறுபேர் சென்று உண்மையான சமாதானம் வேண்டும். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உண்மையாக அமைதி வேண்டும். தமிழர்களுக்கு மாத்திரமல்ல ஏழைச் சிங்களவர்களுக்கு, மலையக மக்களுக்குஉண்மையான அமைதி வேண்டும் என்று சொன்ன ஏதாவது ஒரு இயக்கம்இங்கிருந்திருக்கிறதா? இல்லை. தற்போது இங்கிருந்து அரசு அமைப்பது பற்றியும்தேசியக்கொடி எது என்றும் விவாதித்துக் கொண்டிருப்பதை விட்டு புலம்பெயர்சமூகம் இனிச் செய்யவேண்டியது இலங்கையில் இருக்கின்ற அனைத்துசமூகங்களும் இன ஐக்கியத்துடன் ஒன்றுபட்டு ஒரு புரிந்துணர்வுடன் வாழவழிசெய்கின்ற ஒரு அரசை அங்கு ஏற்படுத்துவதுதான் சரியாக இருக்கமுடியும்என்று சொல்லி எனது பேச்சை முடித்துக் கொள்கின்றேன்.

நன்றி: வைகறை

Wednesday, January 27, 2010


Srilankas præsident rajapaksa genvalgt

Sri Lankas siddende præsident, Mahinda Rajapakse, blev genvalgt ved tirsdagens præsidentvalg. Det rapporterer lokale tv-stationer.

- Der er tale om en klar sejr for præsidenten, rapporterer den statskontrollerede Rupavahini tv-station.

Det endelige resultat af valget offentliggøres onsdag eftermiddag, dansk tid. Men en talsmand for den 64-årige Rajapakse siger, at præsidenten har fået 1,8 millioner flere stemmer end modkandidaten, den tidligere hærchef og general Sarath Fonseka.

Soldater har omringet hotel
I alt blev der afgivet 9,8 millioner stemmer. Da 85 procent af stemmerne var talt op, nåede Rajapakse de 50 procent af stemmerne, der sikrede ham sejren.

Mens optællingen var i gang i hovedstaden Colombo, opstod der stor spænding. Op mod 100 bevæbnede soldater omringede det hotel, som modkandidaten Sarath Fonseka opholdt sig i sammen med sine tilhængere.

En talsmand for Fonseka sagde, at der er frygt for, at kandidaten bliver anholdt, når optællingen er afsluttet.

Sikkerheden skærpet
Ifølge militærkilder er soldaterne udkommanderet, da der er oplysninger om, at udenlandske kriminelle opholder sig på hotellet.

Rajapaksa og Fonseka var allierede indtil for nylig, men generalen brød med præsidenten på grund af uenighed om hans påståede autoritære stil og accept af korruption.

Sikkerheden er kraftigt skærpet i forbindelse med valget, idet 68.000 politifolk og 12.000 soldater er sat ind for at bevogte valgstederne. Valget forløb dog uventet fredeligt.

தேர்தலில் சிறுபான்மை மக்கள் சொந்தத் தலைமைகளை
நிராகரித்துள்ளனர் - என் . சரவணன்

6வது ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான 5வது ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளின் படி மகிந்த ராஜபக்ஷ வென்றுள்ளார். தெர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் வழங்கும் செய்தி என்பதன் சாராம்ச விளக்கமே இது.


யாழ் மாவட்டத்தில் 26.66 சதவீத மக்களே வாக்களித்துள்ளனர். அதிலும் அளிக்கப்பட்ட வாக்குகளில் 3,65 வீத வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அளிக்கப்பட்ட வாக்குகளில் 64 சதவீதம் சரத் பொன்சேகாவுக்கே அளிக்கப்பட்டுள்ளன. யாழ் மாவட்டத்தின் 11 தொகுதிகளில் ஒரு தெரகுதியில் அதாவது ஊர்காவற்துறை தொகுதியில் மாத்திரமே மகிந்த வென்றுள்ளார் அதுவும் 635 வாக்குகள் மட்டுமே மேலதிகமாக பெற்றுள்ளார்.


வன்னி மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் சரத் பொன்சேகா வெற்றி பெற்றுள்ளார். கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் மகிந்த படு தோல்வியடைந்துள்ளார் சரத் பொன்சேகா 69 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். திருகோணமலையில் சேருவில தொகுதியைத் தவிர மூதூர் திருகோணமலை தொகுதிகளில் மகிந்த தொல்வியடைந்துள்ளார். அம்பாறையிலும், அம்பாறை தொகுதியைத் தவிர எனைய 3 தொகுதிகளிலும் மகிந்த தோற்கடிக்கப்பட்டுள்ளார்.


சரத் பொன்சேகா வெற்றி பெற்ற இன்னொரு மாவட்டம் மத்திய மாகாணத்திலுள்ள மலையகத் தமிழர்கள் அதிகமாக வாழும் நவரெலிய மாவட்டமாகும். அங்கும் சரத் பொன்சேகா வெற்றிபெற்றுள்ளார். கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வாழும் தொகுதிகளில் அனைத்திலும் மகிந்த தொல்வியடைந்துள்ளார். 15 தொகுதிகளில் 6 தொகுதிகளில் சரத் பொன்சேகா வென்றுள்ளார்.தேர்தலுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கணிப்புகளின் படி தமிழர்களின் வாக்குகள் திசை தெரியாதபடி சிதைந்துள்ளதாக கணிப்புகள் வெளியிடப்பட்ட போதும், இன்றைய தேர்தல் முடிவுகளானது வேறும் பல செய்திகளை வெளிப்படுத்தியிருக்கிறது.


அரசுடன் இணைந்த அனைத்து தமிழ் கட்சிகளும் இத்தேர்தலில் நிராகரிக்கப்பட்டுள்ளனர். அரசுடன் உள்ள முக்கிய தமிழ் கட்சிகளான, வடக்கில் ஈ.பி.டி.பி, புளொட், மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் கட்சி, கிழக்கில் டி.எம்.வி.பி என்பன மகிந்தவுக்கு ஆதரவாக எத்தனை பிரச்சாரம் செய்த போதும் அவர்களின் கருத்தை மக்கள் ஏற்காது தமது சொந்த முடிவினையே எடுத்திருக்கிறார்கள் என்பது வெளிப்படை. தமிழ் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவின் கூட்டில் இருந்தது ஒரு பொருட்டல்ல. அவர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதே வெளிப்பாடு ஏற்பட்டிருக்கும் என்று கருதத் தோன்றுகிறது.சரத்பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் சரத் பொன்சேகாவை வெற்றிபெறச் செய்ய அளிக்கப்பட்ட வாக்குகளில்லை. மகிந்தவை தோல்வியடையச் செய்வதற்காக அளிக்கப்பட்ட வாக்குகளே என்று கூறலாம். கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் பகதிகளில் அளிக்கப்பட்ட வாக்குகள் சரத் பொன்சேகாவுக்கே அளிக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
கொழும்பில் சரத் பொன்சேகா வென்ற தொகுதிகளில் கிடைத்த வெற்றியில் மனோ கணேசனுக்கு பங்குண்டு என்றும் கூறலாம்.


முல்லைத்தீவு மாவட்டத்தில் 14 வீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. குறைந்தளவு வாக்குகள் பதிவான மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டமே. மக்கள் தேர்தலில் ஆர்வமில்லையென்பதை இவை நிருபித்துள்ளன. வவுனியா மாவட்டத்தில் 43 வீத வாக்குகளும், மன்னாரில் 34 வீத வாக்குளுமே பதிவாகியுள்ளன. ஆக மொத்தத்தலில் வடக்கில் அனைத்து 5 மாவட்டங்களிலும் 50 வீதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன. இதற்கு மக்களின் இடப்பெயர்வு ஒரு காரணமாக இருந்த போதும், அது முழுமையான காரணமாக இருக்க முடியாது என்று தெரிகிறது. ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்குப் பின் வடக்கில் முழு பிரதேசங்களிலும் தேர்தல் இடம்பெற்றுள்ளன. முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த மக்கள் இறுதி நேரத்தில் அவசர அவசமாக குடியேற்றப்படுவதற்கு தேர்தல் ஒரு முக்கிய காரணமாகவே இருந்தது.


ஆக மொத்தத்தில் இம்முறை தேர்தலானது, இலங்கை தேர்தல் வரலாற்றிலேயே சிறுபான்மைத் தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம், மலையக மக்களில் பெரும்பாலானோர் தெட்டத்தெளிவாக தென்னிலங்கை "தேசிய" அரசியல் நீரோட்டத்தில் இருந்து பிரிந்து நிற்பது வெளிப்படையாகத் தெரிகிறது.


குறிப்பாக தமிழ், மலையக மக்கள் தமது அரசியல் தலைமைகளுக்கு ஆப்பு வைக்கவும் எம்மால் முடியுமென்று நிரூபித்திருக்கிறார்கள். மக்களின் அரசியல் அபிலாசைகளை அத்தலைமைகள் பிரதிபலிக்கவில்லை என்றும் அர்த்தம் கொள்ளலாம்.மகிந்த அரசு வெளிப்படையாகவே ஒட்டுமொத்த அதிகாரத்தையும், அரச வளங்களையும் துஸ்பிரயோகம் செய்து தமது மோசமான அராஜகத்தையும், அட்டுழியங்களையும் செய்தே இந்த வெற்றியை பெற்றனர் என்பது கண்கூடு.


ஊழல், மனித உரிமை உரிமை மீறல், கருத்துச் சுதந்திரப் பறிப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் இடது சாரிப் போராட்டங்களை மோசமாக அரச இயந்திரத்தைக் கொண்டு தொடர்ச்சியாக நசுக்கி வந்தமை என மகிந்த அரசுக்கு எதிரான அலை மிகுந்திருந்தது.


போர் வெற்றி மாத்திரமே தென்னிலங்கையில் மகிந்தவின் ஒரே ஒரு துருப்புச் சீட்டாக இருந்தது. அந்த வெற்றி மயக்கத்திலிருந்து மக்கள் மீள்வதற்குள் அந்த வெற்றியை பயன்படுத்த வேண்டுமென மகிந்த அரசாங்கம் திட்டமிட்டது. அதற்கான தேர்தல் தான் இப்போது நடந்து முடிந்தது. அதே வெற்றியை சம அளவில் பங்கு போடக்கூடியவரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை எதிர் கட்சிகள் பொது வேட்பாளராக நிறுத்தியபோதும் இறுதியில் எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்திருக்கிறதென்றால் அதற்கான முக்கிய காரணங்கள் அரசின் அதிகார துஸ்பிரயோகமும், போர் வெற்றி மயக்கத்திலிருந்து தென்னிலங்கை மக்கள் இன்னமும் மீளவில்லை என்பதுமே.
வெகு விரைவில் நடத்தப்படவிருக்கிற பாராளுமன்றத் தேர்தலுக்கான ஒத்திகையாகவும் இந்தத் தேர்தலை அரசாங்கம் கருதியிருந்தது. அப்படி நாடிபிடித்தறிவதற்கு இந்தத் தேர்தல் போதுமானதா என்பது கேள்விக்குறியே. இந்த இடைப்பட்ட காலத்தில் நிகழவிருக்கும் தேர்தல் கூட்டணிகள் மற்றும் மக்கள் மீது ஏற்படுத்தப்படும் நம்பிக்கைகளே அதன் முடிவைத் தீர்மானிக்கும். போர் வெற்றி எவ்வளவு காலம் அரசாங்கத்துக்கு கை கொடுக்கும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.


தேர்தல் முடிவுகளை முழுமையாக பார்வையிட
Election results

நன்றி -தலித்தியம்

Monday, January 25, 2010


Ny pris til krigsfilm øger chance for Oscar

Kathryn Bigelows Irak-krigsdrama "The Hurt Locker" viser forrygende form blot en uge før, nomineringerne til filmbranchens højeste anerkendelse, Oscar, offentliggøres.

Søndag vandt filmen hovedprisen ved den 21. udgave af Producers Guild Awards i Hollywood.

"The Hurt Locker" snuppede prisen, der er opkaldt efter filmmanden Darryl F. Zanuck, foran storsællerter som James Camerons "Avatar" og Quentin Tarantinos "Inglorious Basterds".

Noget nær perfekt
Krigsfilmen skildrer tre bombesprængningseksperter i Bagdad, hvis nervepirrende job sættes på spidsen af deres nye overordnede, spillet af Jeremy Renner, der nyder hvert et sus af adrenalin i kroppen.

Året er i det hele taget begyndt noget nær perfekt for holdet bag "The Hurt Locker". Således vandt filmen de prestigefyldte kritikerpriser for årets film, årets instruktør og årets mandlige skuespiller ved National Society of Film Critics Awards den 3. januar.

Et par uger senere triumferede "The Hurt Locker" ved Critics Choice Movie Awards, hvor den hjemtog statuetterne for årets bedste film og årets bedste instruktør.

Bodilnomineret
Herhjemme havde "The Hurt Locker" premiere i september sidste år - dog kun i to af landets biografer i henholdsvis København og Århus - og blev flot modtaget af de danske anmeldere. Filmen er nomineret til årets amerikanske film ved Bodil-prisfesten, der afholdes den 21. marts i Imperial i København.

Sunday, January 24, 2010

Interview med

Egon Fræhr (V)
Borgmester i Vejen kommune.

Født den 29.marts 1951. Uddannet agronom.
Gift med Lene. Har tre børn: Christian der er ingeniør, Lise der læser medicin i Århus og Niels, der er elev på Vejen Gymnasium.


Politisk karriere

1998-2001: Medlem af Brørup Byråd.

2002-2006:
Borgmester i Brørup kommune.
2006-2007: formand for sammenlægningsudvalget i Vejen storkommune .
2007- : Borgmester i Vejen kommune.


Hvis du skal fortælle om dig selv som person, uden om din politiske interesse, hvem er du så og hvilke interesser har du?

Jeg er familefar, driver et deltidslandbrug med får og heste, interesserer mig for historie, litteratur og musik. Jeg følger gerne sportsbegivenheder, som håndbold i fjernsynet, når der er tid. Jeg er formand for Ladelund Efterskole.

Hvorfor er du blevet politiker og hvorfra stammer din interesse for politik?

Det er tilfældigt, at jeg blev opstillet til byrådet, men jeg har altid været med i foreningsarbejde og været politisk interesseret. Den politiske interesse stammer vel fra en interesse for hvad det sker i vores samfund og en bevidsthed om, at man bør påtage sig opgaver i foreningslivet (skole, sport og lignende) for at et demokratisk samfund kan fungere og udvikle sig.

Hvordan føles det at være borgmester? Hvad gør det specielt at være borgmester netop i Vejen?

At være borgmester er ikke en følelse men en opgave, som en række borgere via stemmesedlen har anmodet mig om at varetage i en periode, og det søger jeg at gøre, så godt jeg kan.

Vejen er en god kommune at være borgmester i, fordi det er en kommune der har vækst og udvikling. Det betyder der kan tages en række fremadrettede tiltag. Det er en god tone og et godt samarbejde i byrådet, og der er mange engagerede borgere, som det er let at komme i dialog med. Mange gode medarbejdere gør arbejdet lettere.

Hvilke krav og forhindringer har du haft og skulle igennem i løbet af din politiske karriere?

Første valg, hvor jeg blev medlem af Brørup byråd, var en tilfældighed., for da var alt nyt. Men ved de næste valg har jeg tydeliggjort, hvad jeg villet arbejde med, og søge gennemført. Det har stået i et valgprogram.

Har du et politisk idol, og hvis ja, hvem er det?


Jeg har intet idol, men jeg lytter gerne til dygtige politikere, ledere og fagfolk.

Hvad gør Vejen kommune attraktiv i forhold til andre og hvordan vil du lokke udefra kommende borgere til kommunen?

Nærhed, natur og let at komme til og fra. Vejen kommune ligger lige ”midt i verden”. Det har mange fundet ud af og derfor har vi vækst i både antal tilflyttere og i virksomheder.

Hvor ofte drøfter I politiske vurderinger/tiltag i forhold til udlændinge/indvandrer politik Vejen kommune?

Vi betragter indvandrere/udlændinge som en væsentlig del af kommunens borgere og ikke som en særlig del. Det kan godt være, der skal etableres en særlig indsats en tid for bestemte grupper, men det skal der jo for så mange, så indvandrere er en naturlig del af befolkningen i Vejen kommune.

Hvilken holdning/oplevelser har du haft med tamiler som bor i Vejen kommune? Mener du, at de er integreret nok?

Jeg ved ikke andet end at integrationen har været god, og ellers hører jeg gerne om det. Jeg har mødt flere tamiler i forskellige sammenhænge og også deltaget i et arrangement. Det har været en positiv oplevelse hver gang.
Hvad betyder integration for dig?

At finde sig godt tilrette der hvor man bor og arbejder, så man selv og ens familie trives. Det allervigtigste er, at man behersker sproget, og at man selv involverer sig i de aktiviteter, der er i vores kommune, lige fra skoler og til foreningslivet.

Jeg har forinden dette interview afleveret et eksemplar af "Ini” læse blad. Hvad synes du om bladet?

Det ser positivt ud

Hvad er dine fremtidsudsigter i Vejen kommune?


Gode, jeg tror der kommer en øget tilflytning. Vi er i fuld gang med at udvikle kommunen, så Vejen kommune vil blive en endnu bedre kommune at bo i og at drive virksomhed i.

-ud arbejde thas -

Thursday, January 21, 2010

ஜனாதிபதி தேர்தல் தெரிவிக்க விரும்புவதென்ன ?

-வி.சிவலிங்கம் -

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் மிகவும் குறுகலான ஒரு சந்துக்குள் சிக்கியுள்ளது. கடந்த 30 வருடங்களிற்கும் மேலாக, நாட்டை உலுக்கிய தமிழ்க் குறுந்தேசியவாதமும், இதனை ஒடுக்குவதற்காக சிங்களத் தேசியவாதம் கலந்த அரச ஒடுக்குமுறையும் அதற்கான விலையைக் கொடுத்துள்ளன. புலிகளின் தேசியவாதம் தோற்கடிக்கப்பட்டதாக இறுமாப்பு அடைந்திருந்த சிங்களத் தேசியவாதம் நாட்டின் ஜனநாயகத்தை அடமானமாக வைத்தே இந்த வெற்றியை ஈட்டியது. நாட்டில் காணப்பட்ட ஜனநாயக நிறுவனங்கள் ஊழலின் இருப்பிடமாக மாறின. ஆயுதப் படைகள், அரசியல்வாதிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக மாறி, ஒரு குழுவினரின் ஆட்சி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. மொத்தத்தில் தேசத்தின் ஜனநாயக வாழ்வு மோசமான நிலைக்குச் சென்றது.

போரின் வெற்றியினால் பெருமிதமடைந்த மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு 2 வருடங்களுக்கு முன்பாகவே தேர்தலை நடத்துவதற்கு முன்வந்தார். அடுக்கடுக்காக இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தல்களில் கிடைத்த வெற்றியும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த பெரும் தோல்வியும் மேலும் அக்கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சி மோதல்களும் தேர்தலில் தன்க்கு வெற்றியை ஈட்டித் தரும் என அவர் நம்பினார்;. எனவே இதுவே சரியான தருணம் எனக் கருதிய ஜனாதிபதி மீள்தெரிவுக்கான தேர்தலில் குதித்தார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், ஊடகங்களுக்கெதிரான தாக்குதல்கள், மேற்குலக நாடுகளுக்கு எதிரான போக்குகள், ஈரான், லிபியா, பர்மா போன்ற ஜனநாயக விரோத நாடுகளுடனான நெருக்கமான உறவுகள் போன்றவற்றினால் ஜனநாயகம் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்கினார். எனவே ஜனாதிபதி தன்னை ஒரு ஜனநாயகவாதி என்று நிரூபிப்பது பிரதான தேவையாகியுள்ள நிலையில்தான் இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தல் நாட்டின் சிறுபான்மை இனங்களைப் பொறுத்தவரையில், அதுவும் குறிப்பாக தமிழ் மக்களைப் பொறுத்தளவில், முக்கியமான தேர்தலாகும். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் துப்பாக்கி மூலம் ஒடுக்கப்பட்டு முடக்கப்பட்டன. புலிகளின் முன்னணி அமைப்பாக செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டணி இக்கொடுமைகள் குறித்து மௌனம் காத்தது. தமிழ்ப் பிரதேசங்களில் ஜனநாயகம் குற்றுயிராக்கப்பட்டது. மக்கள் வரலாறு காணாத மிகப்பெரிய மனித அவலங்களைச் சந்தித்தார்கள். இன்று தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்ட மிகப் பெரிய ஜனநாயக விரோத சக்தி நிர்மூலமாக்கப்பட்ட நிலையில், அங்கு ஜனநாயக வாழ்வுக்கான அரும்புகள் துளிர்விடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த வாய்ப்பினை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வழங்குமா இல்லையா என்பதே நம்முன் உள்ள கேள்வியாகும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான சரத் பொன்சேகா, மகிந்த ராஜபக்ஷ ஆகியோரில் யார் இந்த வாய்ப்பைத் தருவார்கள்? இதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கான அரசியல் பின்புலம் யாரிடம் உள்ளது? தற்போதுள்ள அரசியல் சூழலில் ஆட்சி மாற்றம் ஒன்று அவசியம் என வாதிடப்படுகின்றது. அவ்வாறான ஆட்சி மாற்றம் சாத்தியமா? அல்லது அவ்வாறான ஆட்சி மாற்றம் எமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா? என்பன போன்ற பல கேள்விகள் எழுகின்றன. இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைப்பதை விட, இந்த இரண்டு அபேட்சகர்களினதும் கொள்கைகள், கோட்பாடுகள், வாய்ப்புகள், மற்றும் அவர்களது செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் சக்திகள் என்பன பற்றி விவாதிப்பதன்மூலம் வாக்காளர்கள் தமது வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான அதிகளவு தகவல்களை வழங்க முடியும். இதுவே இக்கட்டுரையின் நோக்கமுமாகும்.

அவ்வாறான ஒரு பரந்த எண்ணத்தை அடிப்படையாகக்கொண்டு முதலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்களின் பின்புலம் பற்றி ஆராய்வோம்.

இவர் இராணுத்தில் 40 வருடங்கள் சேவை புரிந்தவர். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இவரது பணியாகும். நாட்டின் பாதுகாப்பு என்பது தேசத்தின் ஜனநாயக கட்டுமானங்கள் மற்றும் அரசியலமைப்பு வழங்கும் விதிகளுக்கு அமைவாகச் செயற்படுவதை உறுதிப்படுத்துவதாகும். அந்த வகையில், இவர் இராணுவத்தின் பிரதான தளபதியாக செயற்பட்டாரா என்பதே எமது கேள்வியாகும். நாட்டின் பாதுகாப்புத் தொடர்பான முழுமையான தகவல்களை அரசின் தலைமைக்கு வழங்குவதும் அந்த அரசியல் தலைமையின் கொள்கை நிலைப்பாட்டுக்கு அமைய பாதுகாப்புத் திட்டங்களை வரைந்து செயற்படுத்துவதும் இராணுவத் தலைமையின் கடமையாகின்றது. புலிகளுக்கு எதிரான போர்த்திட்டங்கள் வரையப்பட்டபோது நாட்டின் ஜனநாயக வாழ்வுக்கு முதலிடம் வழங்கப்பட்டதா? நாட்டு மக்களின் ஒரு பிரிவினராகிய தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட கவனம் என்ன? புலிகளையும் பொதுமக்களையும் வேறுபடுத்தும் திட்டங்கள் காணப்பட்டதா? இவ்வாறான கேள்விகளுக்கான குறைந்த பட்ச பதில்கள் எதையாவது எம்மால் காண முடிகின்றதா?

இப்போரின்போது சிங்களத் தேசியவாதம் ஆற்றிய பங்கு என்ன? மகிந்த ராஜபக்ஷ அவர்கள் அரசியல்வாதி என்ற வகையில் சிங்களத் தேசியவாதத்தை தனது அரசியல் தேவைக்கு பயன்படுத்தி இருக்க முடியும். ஆனால் நாட்டின் இராணுவம் சிங்கள தேசியவாதத்தின் சக்தியாக செயற்பட்டதா அல்லவா என்பதே எம்முன் உள்ள கேள்வியாகும். அரசு (state) என்பதும் அரசாங்கம (government) என்பதும் வெவ்வேறானவை. அரசு என்பது நிலையானது. அரசாங்கம் என்பது தற்காலிகமானது. இராணுவம் என்பது அரசின் பகுதியே தவிர, அரசாங்கத்தின் பகுதி அல்ல. இலங்கை அரசியல் வரலாற்றில் அமைந்த அரசாங்கங்கள் யாவும் இராணுவத்தினை தமது கருவியாகப் பயன்படுத்தின. ஆனால் மகிந்த தலைமையிலான அரசாங்கம் அரசுக் கட்டுமானத்தை முழுமையாகவே இராணுவமயமாக்கியது. அரசாங்கத்தின் முழு அனுசரணையும் அரசின் ஒரு பகுதியாகிய இராணுவத்துக்குக் கிடைத்தன. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆயுதப்படையின் தளபதியாகவும் அமைந்ததால் இராணுவம் சட்டத்திற்குப் பயப்படாது செயற்பட்டது. இராணுவம் என்பது பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்டது. உதாரணமாக, உளவுப்பிரிவு, குண்டர் பிரிவு போன்ற பலவற்றை உள்ளடக்கியது. இதன் மூலம் பத்திரிகையாளர்கள், வர்த்தகர்கள், அரசியல் எதிரிகள், தொழிற்சங்கவாதிகள், மாணவர் தலைவர்கள் எனப் பல தரப்பினரும் படுகொலை செய்யப்பட்டார்கள். இராணுவத்தின் தகவல்களின் அடிப்படையில்தான் வீதித் தடைகள், வீடுகளில் புகுந்து சோதனையிடுதல், கொழும்பில் இருந்து இரவோடிரவாக மக்களை ப் வண்டியில் ஏற்றி அனுப்புதல், விசாரணை இன்றிச் சிறையில் இடுதல், சிறையில் படுகொலைகள் போன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றன. இவ்வாறான நடவடிக்கைகள் யாவற்றையும் அரசியல் தலைமையின் தனியான உத்தரவின்பேரில் நடைபெற்றதாகச் சொல்வதா அல்லது அரசியல் தலைமை என்பது இராணுவத்தின் பாதுகாப்புக்குள் அகப்பட்டதால் ஒன்றை ஒன்று பாதுகாத்துக் கொண்டதா? நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் அவரது கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்புப் படைகளும் சட்டத்திற்குப் புறம்பான வகையில் செயற்பட்டதன் மூலமே நாட்டின் ஜனநாயகம் சீர்குலைந்த நிலையில் போரை வெற்றி கொண்டார்கள் என்ற முடிவுக்கே நாம் வரமுடியும்.

எனவே இந்த அடிப்படையில்தான் சரத் பொன்சேகா அவர்களின் ஜனநாயகம் என்பதை நாம் கேள்விக்குட்படுத்த வேண்டியுள்ளது. இவர் ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்டிருப்பாராகில் முதலில் தாம் பதவிக்கு வந்ததும் போர் தொடர்பான முழுமையான விசாரணைக்கு உத்தரவிடுவதாகக் கூறவேண்டும். போர் தொடர்பான முழுமையான விசாரணை ஒன்றின் மூலமே சிங்கள தேசியவாதத்திற்கும் அரசுக்கும் இடையிலான உறவை அம்பலப்படுத்த முடியும். இது சாத்தியமா? இவர் சிங்களத் தேசியவாதத்தின் ஒரு பிரதிநிதியாவார். அரசியல் கட்டுமானங்களில் இரண்டறக் கலந்திருக்கும் இத் தேசியவாத சிந்தனைகள் ஒழிக்கப்படாதவரை ஜனநாயகம் நிலவுகின்ற ஒரு நாட்டை எம்மால் நினைத்துப் பார்க்க முடியாது. ஊழல், குடும்ப ஆட்சி என்பன இதன் விளைவுகளால் ஏற்பட்டவையே. கடந்த 30 ஆண்டுகளாக நாட்டில் நிலவும் திறந்த பொருளாதாரக் கட்டுமானம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை, விகிதாசார பிரதிநிதித்துவம் என்பன ஊழலுக்கா உந்துவிசைகளாகும். புலிகளின் 30 வருடகால பயங்கரவாதமானது சிங்களப்பகுதிகளில் கட்டுப்பாடற்ற பொருளாதாரம் வேரூன்றுவதற்கான அதிக வாய்ப்பை வழங்கியது. வெளிநாட்டு நிறுவனங்களின் தனியார்துறை மீதான முதலீடு, லஞ்சம், ஊழல் என்பன நாட்டின் பிரிக்க முடியாத அம்சங்களாக அமைந்தன. இதன் காரணமாக, இந்த 30 வருட காலங்களில், சர்வதேச வர்த்தகத் துறையுடன் இணைந்த புதிய சிங்கள வர்த்தக சமூகம் பலமடைந்துள்ளது. இச் சமூகம் தமிழ், மு;லிம் வர்த்தக சமூகங்களை முற்றாக ஒடுக்கும் வகையில் சிங்கள தேசியவாதத்தை இராணுவத்துடன் இணைத்து பயன்படுத்தி வருகின்றன. இப்பின்னணியில் இருந்தே சரத் பொன்சேகா அவர்கள் முன்வைக்கும் தீர்வுகளை ஆராயவேண்டியுள்ளது.

இலங்கையின் அரசியல் வாழ்வில் அரசியற் கட்சிகளின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும் கட்சி அரசியல்களின் நடவடிக்கைகளின் விளைவுகளே இன்றைய நிலைமைக்குக் காரணமாகும். நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துவதாயின் அரசியற் கட்சிகளின் துணையுடனேயே அதனை மேற்கொள்ள முடியும். எந்த விதமான அரசியற் பலமும் இல்லாமல் ஒன்றுக்கொன்று முரண்பட்ட அரசியற் கோட்பாடுகளைக் கொண்டிருக்கும் ஜே.வி.பி., ஐக்கிய தேசியக்கட்சி என்பவற்றில் சார்ந்திருக்கும் சரத் பொன்சேகா எந்த அடிப்படை மாற்றத்தையும் செய்ய முடியாத நிலையிலேயே காணப்படுகிறார். இவரின் கட்டுப்பாட்டில் அரசியற் கட்சிகள் இல்லாத நிலையில், ஆயுதப் படைகள் மட்டுமே இவரது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் இருக்கப் போகின்றது. இராணுவரீதியான அனுபவத்தைக் கொண்ட அவர் அரசியற் பிரச்சினைகளை அணுகுவதற்கும் அரசியல் கட்சிகள் அவருக்குத் துணையாக இல்லாதவிடத்து எதன் மூலம் அவர் தனது ஆளுமையை நிரூபிக்க முயற்சிப்பார். நாட்டின் தலைவர் என்ற வகையில் பிரச்சினைகளைக் கையாளும் அனுபவமும் அரசியல் அடிப்படையில் கோட்பாடுகளை மையமாகக் கொண்ட அணுகுமுறையும் இல்லாதவிடத்து சகல பிரச்சினைகளும் தனது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டுச் செல்வதாக அவர் உணரும் ஆபத்து அதிகளவில் உண்டு. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக் கோரிக்கைகள் காலப்போக்கில் பயங்கரவாதமாக வர்ணிக்கப்பட்டு, இராணுவத்தின்மூலம் ஒடுக்கப்பட்டு, அந்த அரசியல் கோரிக்கைகள் எவ்வாறு பலவீனப்படுத்தப்பட்ட நிலைமைக்குத் தள்ளப்பட்டதோ அதேபோன்று அரசியல் கட்சிகளின் மோதல்கள், ஊழல் மற்றும் லஞ்சம் என்பவற்றினால் சுயநலன்களை வளர்த்து வரும் கும்பல்கள் கட்டுப்பாடற்று செயற்படும் நிலைகள் ஏற்படும்போது இவற்றை ஒடுக்க பாகி;தான் போன்று ஒரு இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கான ஆரம்பமாகவே நாம் இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றிலேயே மிக முக்கியமான அரசியல் பதவிகளில் இருந்தவர்கள் தமது பதவிக்காலம் முடிவடைந்து சில மாதங்களிற்குள்ளாகவே அரசியலில் ஈடுபட்டு வருவது மிகவும் சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாகும். அரசின் சுதந்திரமான கட்டமைப்புகளில் ஒன்றாகிய நீதித்துறை சார்ந்த முன்னாள் பிரதம நீதியரசர் சரத் சில்வா அவர்கள் தீவிர அரசியலில் ஈடுபட்டிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, இவர் வடக்கு-கிழக்கு இணைப்புக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கி சிறுபான்மை இனங்களின் அரசியற் கோரிக்கையைப் பலவீனப்படுத்தியதோடு, இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை கேள்விக்குட்படுத்தியவர். இந்த நீதியரசர் முன்னாள் இராணுவத் தளபதியை ஆதரித்து நிற்பது என்பது நாட்டின் அரசியல் எதிர்காலம் குறித்து மேலும் சிந்திக்க வைத்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா அவர்கள் அப் பதவியினை எட்டுவதற்கு அவருக்குப் பின்னால் இருக்கும் சக்திகள் எவ்வாறான நலன்களைப் பிரதிபலிக்கின்றன என்பதையும் அவதானிக்க வேண்டியுள்ளது. உதாரணமாக, ஜேவிபியினரை எடுத்துக் கொண்டால், இவர்கள் அதிகாரப் பரவலாக்கத்தை முற்றாக எதிர்த்து வருகின்றனர். இவர்கள் 13வது திருத்தம் இந்தியாவின் தலையீட்டினால் உருவானது என்கிறார்கள். வடக்கு-கிழக்கை விட ஏனைய மாகாணங்களில் அதிக தமிழர்கள் வாழ்வதால் அதிகாரப் பரவலாக்கம் அர்த்தமில்லை என வாதிக்கிறார்கள். நாட்டின் பொருளாதார வாழ்வில் மேற்குலக ஆதிக்கம் இருப்பதாகவும் குறிப்பாக, இந்தியாவின் ஆதிக்கம் இருப்பதாகவும் கூறி இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் போன்றவற்றிற்கு எதிராக பேசியும் செயற்பட்டும் வருகிறார்கள். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி இதற்கு எதிரான போக்கைக் கொண்டிருக்கின்றது. இது அதிகாரப் பரவலாக்கத்தை ஆதரிக்கும் அதேவேளை, மேற்குலகம் மற்றும் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளையும் கொண்டிருக்கிறது. எனவே முக்கியமான பிரச்சினைகளில் எதிரெதிரான போக்குகளைக் கொண்டிருக்கும் இந்தக் கட்சிகள் சரத் பொன்சேகாவிடம் எவ்வாறான தீர்வினைச் சிபாரிசு செய்வார்கள் அல்லது சரத் பொன்சேகாவினால் ஏதாவது சுயமான தீர்வை முன்வைக்க முடியுமா?

இத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை பதவியில் இருந்து அகற்றவேண்டும் எனவும் அவரது 4 ஆண்டு கால பதவிக்காலத்தில் நாட்டில் என்னவித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் ஊழல், லஞ்சம், குடும்ப ஆட்சி என்பனவே எஞ்சியுள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இவை நியாயமானவை. இனப்பிரச்சினைக்கான எந்தவிதமான காத்திரமான முன்மொழிவையும் இவர் முன்வைக்கவில்லை. இவர் பதவிக்கு வந்த ஆரம்பத்தில் சில கல்விமான்கள் கொண்ட குழுவொன்றை அமைத்து நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றைக் கொடுக்கப் போவதாக கூறி இருந்தார். அவர்களும் பிரச்சினைகளை அடையாளப்படுத்தி அதற்கான தீர்வுகளையும் முன்மொழிந்தார்கள். ஆனாலும் அவ்வறிக்கைகளை அவர் தனது கவனத்திற்கு எடுக்கவில்லை. அதன் பின்னர் தென்னிலங்கையின் அரசியற் கட்சிகள் மத்தியில் இருந்து ஒரு பொதுவான அறிக்கையை எதிர்பார்த்து சர்வ கட்சிகள் மாநாட்டைக் கூட்டி இருந்தார். ஜேவிபி, ஐக்கிய தேசியக்கட்சி போன்றன வௌ;வேறு காரணங்களால் இடையில் விலகிக்கொண்ட போதிலும் திஸ்ஸவிதாரண அவர்கள் தலைமையில் அமைந்த சர்வ கட்சிகள் குழு அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்திருந்தது. அந்த அறிக்கை தொடர்பாகவும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அதேவேளை 13வது திருத்தத்தை அமுல்படுத்தப் போவதாகவும் இடையிடையே தெரிவித்திருந்தார். இந்த நான்கு வருட காலத்தில் போரை முன்னிலைப்படுத்த எடுத்த தீவிரம் தீர்வை முன்னிலைப்படுத்துவதற்கான தலைமையை வழங்குவதில் இருக்கவில்லை. தற்போதும் தனது இரண்டாவது பதவிக் காலத்திற்காகப் போட்டியிடும் இவர் இதுவரை இனப்பிரச்சினை தொடர்பாக எந்தத் தீர்வையும் முன்மொழிவதாக இல்லை. தற்போது வடக்கு - கிழக்கு இணைப்பு இல்லை எனவும் தெரிவித்து வருகின்றார். ஜனாதிபதியின் இத்தகைய போக்கானது சிறுபான்மை இனங்கள் மத்தியில் தவிர்க்க முடியாத சந்தேகத்தை விதைத்து வருகின்றது. சிங்கள தேசியவாதக் கருத்துக்கள் தேசபக்திக் கருத்துக்களாக மாற்றம் பெற்று வருவதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. மேற்குலக நாடுகளுக்கு ஆதரவான சக்திகள் தேசவிரோத சக்திகள் என அடையாளப்படுத்தப்படும் நிலை காணப்படுகின்றது.

மறுபக்கத்தில் சர்வதேச கடனுதவிகள் மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைகளில் அப்பிரதேச மக்களின் பங்களிப்பு பெறப்படுவதில்லை. இந்த அபிவிருத்தி வேலைகளில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. அபிவிருத்தி இடம்பெறும் பிரதேசங்களில் உள்ள காணிகளை சிங்கள மக்கள் வாங்குவதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள். இவ்வாறு மறைமுகமான சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்படுகின்றது. இது இலங்கை - இந்திய ஒப்பந்த நோக்கங்களுக்கு முரணானது. கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் நடைபெற்றபோது அப்பகுதியில் ஜனநாயகம் மலர்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. ஆனால் அச்சபை சுயமாக இயங்க முடியவில்லை. ஆளுநரின் தலையீடுகள் அதிகரித்தன. தேர்தல் வாக்குறுதிகள் மீறப்பட்டதே எஞ்சியது. மகிந்த ராஜபக்ஷ அவர்களின் 4 ஆண்டுகால ஆட்சியை மட்டும் மதிப்பீடு செய்வதன்மூலம் ஆட்சி மாற்றத்தைக் கோருவது அர்த்தமுள்ளதா என்பதே எம்முன் உள்ள மற்றொரு கேள்வியாகும்.

நாம் விமர்சனங்களை அர்த்தமுள்ள விதத்தில் முன்வைப்பதே நேர்மையான அணுகுமுறையாக அமையும். மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தின் பெரும்பகுதி புலிகளின் பயங்கரவாதத்திற்கெதிராகவே செலவிடப்பட்டது. கடந்த 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக இலங்கையில் அமைந்து வந்த அரசாங்கங்கள் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் தோல்வியையே கண்டன. இந்த அரசுகள் இவ்வாறான யுத்தத்தில் ஈடுபட்டபோது சர்வதேச அழுத்தங்களுக்கு செவி சாய்த்து வந்தன. தமிழ் மக்களின்மீதான துன்புறுத்தல்களின்போது அழுத்தங்களும் அதிகரித்து வந்தன. இதனால் போர் முழுவீச்சில் இடம்பெறாமல் தவிர்க்கப்பட்டு வந்தது. ஆனால் 2001ம் ஆண்டு செப்டெம்பர் 11ம் திகதி அமெரிக்க சர்வதேச வர்த்தக மையம் தாக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களின் நோக்கங்களையும் மாற்றின. இதனால் 2005ம் ஆண்டு பதவிக்கு வந்த மகிந்த ராஜபக்ஷ அவர்களின் நோக்கங்கள் நிறைவேற சர்வதேச உதவிகள் கிட்டின.

இதுவரை காலமும் புலிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்காகவே போர் என்ற நிலைமையில் இருந்து மாற்றம் பெற்று பேச்சுவார்த்தை என்பது கைவிடப்பட்ட ஒன்றாகவே தெளிவடையத் தொடங்கியது. 30 வருடங்களாகப் புலிகளுடன் போராடி வந்த அதே இராணுவம் தற்போது புதிய சூழலைத் தமதாக்கிக் கொண்டது. புலிகளால் தலைமை தாங்கி வழி நடத்தப்பட்ட குறுந்தேசியவாதத்துடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முயற்சித்து வந்த சிங்களத் தேசியவாதம் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இறுதிப்போருக்குத் தயாராகியது. சிங்கள தேசியவாதத்தின் கூறுகளாக இயங்கிய ஜாதிக ஹெல உறுமய, ஜேவிபி, கரு ஜயசூரிய தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியின் ஒரு பிரிவினர் இப்போருக்கான ஆள் திரட்டலுக்கான பின்புலமாகச் செயற்பாட்டார்கள். 30 ஆண்டு காலத்திற்கு மேலாக போர் நீடித்ததன் காரணமாகவே புலிகளுக்குள் உள்முரண்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன. அத்துடன் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடனான நெருக்கமான உறவு, புலிகளுக்கு எதிரான சர்வதேசத்தடைகள், நெருக்கடிகள் என்பன போரை மிகவும் குறுகிய காலத்தில் முடிவுக்குக் கொண்டு வர உதவின. சர்வதேச ஆதரவும் சிங்களத் தேசியவாதத்தின் உத்வேகமும் மகிந்த ராஜபக்ஷ, சரத் பொன்சேகா தலைமையிலான அரசியல் இராணுவத் தலைமையும் நாட்டின் முழு வளங்களையும் திரட்டி போரை நோக்கித் தள்ளின.

புலிகளினால் முன்னெடுக்கப்பட்ட வன்முறை கலந்த பயங்கரவாதத்தில் மிதவாத சக்திகள் மற்றும் புத்திஜீவிகள் விலகிச் செல்ல, சமூகவிரோத சுயநல சக்திகள் எவ்வளவு உள்நுழைந்தனவோ அதேபோன்று அரசினால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத நடவடிக்கையில் இருந்து தேசநலனை விரும்பும் புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், மத்தியதர வர்க்கத்தினர் ஒதுங்கிக்கொள்ள, தேசவளங்களை சூறையாடும் சுயநல சக்திகள் ஒன்றாக இணைந்துகொண்டது என்பது ஒரு பொதுவிதியாகவே அமைந்தது. போரை நடாத்துவதற்கான ஆள்திரட்டல், அதற்கான மூலவளங்களை ஒன்று திரட்டல், போருக்கான நியாயங்களின் பரப்புரைகளை மக்கள் முன் எடுத்துச் செல்லல் என்பன ஓர் ஜனநாயக விரோத சூழலிலேயே இடம்பெற்றன. நாடு முழுவதும் போரை நியாயப்படுத்தும் பிரச்சாரங்களுடன் இராணுவத் தோல்விகளை மறைக்கும் கைங்கரியங்களும் நிறைவேற்றப்பட்டன. இப்பின்புலத்தில் இருந்து பார்க்கும்போது இனப்பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அதற்கான விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. அது மட்டுமல்ல, சிங்கள தேசியவாதச் சிந்தனைகள் முழுவீச்சில் ஆதிக்கம் பெற்று வந்த அந்தக் காலகட்டத்தில் சிறுபான்மை இனத்தவர் தொடர்பான ஆதரவுக் குரல் எழுப்புபவர்கள் அரசுக்கெதிராக அல்லது இராணுவக் கெடுபிடிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் தேசவிரோத சக்திகளாக அடையாளப்படுத்தப்படும் பின்னணியில் தீர்வுகள் பற்றிப் பேசி இருக்க முடியுமா அல்லது அதனைக் கேட்க மக்கள் தயாராக இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே. தமிழ்ப் பிரதேசங்களில் புலிகளின் ஆதிக்கத்தில் தேசியவாத சிந்தனைகள் உச்சம் பெற்றிருந்த வேளை தமிழ்-சிங்கள இன ஐக்கியத்தைப் நன்றி நன்றி அறிந்தது

என்பது பாலரும்அறிந்தது.மகிந்த ராஜபக்ஷ அவர்கள் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாதவராக இருக்கலாம். ஆனால் அவரை இனவிரோதியாக அடையாளப்படுத்த முடியுமா? அவர் அரசியல் தீர்வுக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டார். ஆனால் அவரால் ஒரு எல்லைக்கு மேல் செல்ல முடியவில்லை. அவரால் ஏன் அவ்வாறு செல்ல முடியவில்லை? படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் எஸ் டபிள்ய ஆர் டி பண்டாரநாயக்கா அவர்கள் எந்தச் சக்திகளின் மூலம் நாட்டின் தலைவராக ஆக்கப்பட்டாரோ, அதே சக்திகளே மகிந்த ராஜபக்ஷ அவர்களையும் ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள். இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பௌத்த மகாசங்கத்தின் சம்மதத்தைப் பெறாமலேயே தந்தை செல்வநாயகம் அவர்களுடன் பண்டாரநாயக்கா ஒப்பந்தத்திற்குச் சென்றார். இதன் விளைவாகவே அதே சக்திகளால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

இன்று நாட்டின் பொருளாதாரம் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. உள்நாட்டு முதலாளி வர்க்கம் தற்போது கூறுபட்டுள்ளது. அதேபோன்று சிங்களத் தேசியவாதமும் கூறுபட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான முதலாளி வர்க்கம் தனக்கான இடத்தை இழந்து வருகின்றது. இது மீண்டும் உரிய இடத்தை அடைவதற்கு சிங்கள தேசியவாத சக்திகளுடன் மறைமுகமான உறவைப் பலப்படுத்தி வருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த உறவு அதன் முடிவுக்கான ஆரம்பமாகும்.

இலங்கையின் இரண்டாவது பழமை வாய்ந்த கட்சியான இது, தாக்கமுள்ள எதிர்க்கட்சியாக மட்டுமல்லாது, பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்வு செய்ய முடியாத நிலையிலும் உள்ளது. புலிகளுடன் மேற்கொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் நாட்டின் ஒரு பகுதி திருப்பிக் கொடுக்கப்பட்டதாகவும் தனியான அரசு ஒன்றை ஸ்தாபிக்கவும் இலங்கை அரசுடன் சம அந்த்து அடிப்படையில் சர்வதேசப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளவும் ரணில் அரசு வாய்ப்பளித்ததாகவும் குற்றம் சாட்டி மிகவும் பலவீனமான தலைவராகவும் விமர்சிக்கப்பட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டாவது பலம் வாய்ந்த தலைவராகக் கருதப்பட்ட கரு ஜயசூரிய அவர்கள் அரசாங்கத்தில் மேலும் பல உறுப்பினர்களுடன் இணைந்து கொண்டதும் ரணில் அவர்களின் தலைமையை மிகவும் பகிரங்கமாக விமர்சித்த நிலைமையும் ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவுக் காலத்தை அறிவித்து நின்றது. இவ்வாறான ஒரு வரலாற்றுப் பின்னணியில் ஜேவிபிக்கும் மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையேயான தேன்நிலவு முடிவுக்கு வருகிறது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களின் கணவரின் படுகொலைக்குப் பின்னால் ஜேவிபி இருப்பதாகக் குற்றஞ் சாட்டப்பட்ட நிலையிலும் அவரின் ஊடகத்துறை அமைச்சராக இருந்த மங்கள சமரவீர அவர்கள் ஜேவிபியுடன் ஏற்படுத்தி இருந்த உறவு காரணமாக அவர்கள் சந்திரிக்கா அரசுக்கு ஆதரவளித்தார்கள். சந்திரிக்கா அவர்களின் பதவிக்காலம் இறுதியை அண்மித்த நிலையில் அடுத்த பதவிக்கால வேட்பாளர் யார் என்ற பிரச்சினைகள் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எழுந்தன. அப்போது மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் ஒரு பிரிவினர் கட்சிக்குள் குழப்பங்களை ஏற்படுத்தினார்கள். இதற்குத் தலைமை தாங்கிய மங்கள சமரவீர அவர்கள் ஜேவிபியுடன் இணைந்து மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்தார். இதே மங்கள சமரவீர அவர்கள் பின்னர் அவரிடம் இருந்து பிரிந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு என்ற அமைப்பை உருவாக்கியதோடு ஜேவிபியையும் மகிந்தவில் இருந்து விலகிச் செல்ல வழி வகுத்தார்.

அதன் பின்னர் தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜேவிபிக்கும் இடையேயான இணக்கத்திற்கும் இவரே காரணமாக உள்ளார். இவ்வாறான அரசியல் போக்கின்போது ஜேவிபியினரின் நடத்தைகள் நாட்டின் எதிர்காலம் குறித்த தீர்மானங்களை மையமாகக் கொண்டிருந்தன என்பதை நாம் அவதானிக்க வேண்டும். அவர்களுக்கு எதிராகச் சந்திரிக்கா செயற்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசியலமைப்பின் 17வது திருத்தத்தை உருவாக்க அவர்களே காரணமாக இருந்தார்கள். மகிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இணைந்து மகிந்த சிந்தனை என்ற புரிந்துணர்வை ஏற்படுத்தியபோது புலிகளுக்கு எதிரான பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும் முழுமையாக ஒத்துழைத்தார்கள்.

போர் முடிவடைந்ததும் ஏனைய பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களை மேற்கொள்ள அரசு தயங்கியதாலும் ஊழல் அதிகரித்துச் சென்றதாலும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து விலகினார்கள். தற்போதைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை இல்லாதொழிக்க ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுகிறார்கள். ஜேவிபியினரின் அரசியல் அணுகுமுறைகளை மையமாக வைத்துப் பார்க்கும்பொழுது இலங்கை அரசியலில் மூன்றாவது அரசியல் பாதை எவ்வாறு வழி சமைக்கப்படுகிறது என்பதையும் இரு கட்சி ஆட்சிமுறை பலமாக உள்ள சூழலில் மூன்றாவது கட்சியின் அரசியல் வேலைத்திட்டம் எவ்வாறு அமையவேண்டும் என்பதையும் இது உணர்த்தி நிற்கிறது.

இந்த உதாரணத்தில் இருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய செயற்பாட்டின் பெறுபேறுகளை ஆராய வேண்டியுள்ளது. இலங்கையின் தமிழ் அரசியல் வரலாற்றிலே முதல் தடவையாக தமிழ் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பதாகவே தாம் யாரை ஆதரிப்பது என்பதை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். இது பேரம் பேசும் அரசியலின் முடிவாகவே உள்ளது. அது மட்டுமல்லாமல், கடந்தகால அரசியல் அணுகுமுறையின் தோல்வியாகவும் உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த முடிவு அதன் அரசியலின் முடிவின் ஆரம்பம் மட்டுமல்ல புதிய அரசியற் பாதைக்கான ஆரம்பமாகவும் உள்ளது. அரசுடன் ஒத்துழைப்பவர்கள் துரோகிகள் என்று கூறியவர்கள் தற்போது அந்த அரசியலைத் தாமும் தத்தெடுத்துள்ளார்கள். இந்தத் தேர்தல் இன்னுமொரு மாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது இரண்டு பிரதான கட்சிகள் பாராளுமன்றத்தில் சம பலத்தைப் பெறும்போது அரசு அமைக்கும் கட்சி எது என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக தமிழ்க் கட்சிகளே இருந்தன. இவர்களின் அரசியல் அணுகுமுறை தங்களுடைய அரசியல் தேவையை நிறைவேற்றும் ஒன்றாக இருந்ததே தவிர, தேசிய அரசியலின் போக்கை மாற்றும் அல்லது தீர்மானிக்கும் ஒன்றாக அமையவில்லை. இதன் காரணமாகவே இவர்களின் அரசியலும் அணுகுமுறையும் தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், எந்த சமுதாயத்தை அவ்வாறான வழியில் அழைத்துச் சென்றார்களோ அந்த சமுதாயமும் மீளமுடியாத துன்பத்தை அனுபவித்து வருகிறது.

எனவேதான் சமுதாயம் மற்றும் சர்வதேச மாற்றங்களுக்கு ஏற்றவாறு அரசியல் கொள்கைகளும் போக்குகளும் மாறவேண்டி உள்ளது. இந்த அடிப்படையில் பார்க்கும்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது காலாவதியான ஒன்று எனலாம்.


நன்றி : புகலி

Wednesday, January 20, 2010

லசந்த விக்ரமதுங்கவின் முதலாம் ஆண்டின் நினைவாக!

லசந்த விக்ரமதுங்கவின் மரண சாசனம்!


ஊடகவியலாளர், சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர், வழக்குரைஞர் லசந்த விக்ரமதுங்க அவர்கள் கொலைசெய்யப்பட்ட ஓராண்டின் நினைவாக அவரால் சண்டே லீடர் பத்திரிகைக்கு எழுதப்பட்ட கடைசி ஆசிரியர் தலையங்கத்தை இங்கே மீள்பதிவு செய்கின்றோம்.
-இனி -

(இலங்கையிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் என்ற ஆங்கில வாரப்பத்திரிகையில் 11-01-2009 வெளியாக வேண்டிய இதழுக்காக அவர் 2009 ஜனவரி 7ம் தேதி எழுதிய தலையங்கம் இது. இதை எழுதிய அடுத்த நாளே அவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தனது மரணத்தின் பாதையை அறிந்திருந்த அவருடைய மரண சாசனமாக இந்த தலையங்கம் அமைந்துள்ளது)

ராணுவத்தைத் தவிர வேறு எந்த ஒரு தொழிலும் - தொழில் நிமித்தமாக - அந்த தொழில் புரிபவர்களின் உயிரை பலியாக கேட்பதில்லை இலங்கையில் இந்த வகையில் பத்திரிகைத் தொழிலும் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. மின்னணு மற்றும் அச்சு ஊடக நிறுவனங்கள் எரிக்கப்படுவதும், வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளாவதும், மூடப்படுவதும், பலவந்தமாக நிறுத்தப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. எண்ணற்ற செய்தியாளர்கள் தாக்கப்படுகின்றனர், மிரட்டப்படுகின்றனர், படுகொலை செய்யப்படுகின்றனர். இந்த அனைத்தும் - கடைசி அம்சம் உட்பட - எனக்கும் பொருந்தும் என்பது எனக்கு மிகவும் சிறப்பு செய்வதாக உள்ளது.
பத்திரிகைத் தொழிலில் மிக நீண்ட காலமாக நான் இருந்து வருகிறேன். உண்மையில், இந்த 2009ம் ஆண்டு, சன்டே லீடர் பத்திரிகையின் 15ம் ஆண்டாகும். இந்த காலக்கட்டத்தில் இலங்கையில் பல மாறுதல்கள் நடந்துள்ளன. அவற்றில் பெரும்பாலான மாற்றங்கள் விரும்பத்தக்கவை அல்ல என்பதை நான் உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எல்லையில்லா ரத்த தாகம் கொண்டவர்களால் இரக்கமற்று தொடுக்கப்பட்ட உள்நாட்டுப்போரின் மத்தியில் நாம் இருக்கிறோம். பயங்கரவாதிகளாலோ, அரசாங்கத்தாலோ ஏவப்படும் பயங்கரவாதம் என்பது நமது அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. சுதந்திரத்தை முடக்க விரும்பும் அரசு முக்கிய நடவடிக்கையாக படுகொலைகளை நிகழ்த்தி வருகிறது. இன்று பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகின்றனர். நாளை நீதிபதிகள் கொல்லப்படுவார்கள். இந்த இரு தரப்பினருக்கும் ஆபத்துகள் அதிகரிக்கின்றன. நம்பிக்கைதான் குறைந்து வருகிறது.
இருந்தபோதிலும் ஏன் இந்த தொழிலை தொடர்ந்து செய்கிறோம் என்று நான் அவ்வபோது ஆச்சரியப்படுவதுண்டு. நானும் ஒரு கணவன்தான். எனக்கும் மூன்று அருமையான குழந்தைகள் உள்ளனர். எனக்கும் கடமைகளும், பொறுப்புகளும் உள்ளன, நான் சட்டம் அல்லது பத்திரிகை ஆகிய எந்தத் துறையில் இருந்தாலும், ஆபத்துகளை விலை கொடுத்து வாங்குவது தேவைதானா? தேவையில்லை! என்றே பலரும் கூறுகின்றனர். நண்பர்கள் என்னை வழக்குரைஞர் தொழிலுக்குத் திரும்புமாறு கூறுகின்றனர். அத்தொழில் எனக்கு மேம்பட்ட மற்றும் பாதுகாப்பான வாழ்வைத் தரும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

மற்றவர்கள், குறிப்பாக இரு தரப்பிலும் உள்ள அரசியல் தலைவர்கள் அரசியலுக்கு வருமாறு என்னை அழைக்கின்றனர், நான் விரும்பும் துறைக்கு என்னை அமைச்சராக்குவதாகவும் கூறுகின்றனர். இலங்கையில் பத்திரிகையாளர்கள் சந்திக்கும் ஆபத்துகளை உணர்ந்த வெளிநாட்டுத்தூதர்கள், என்னை இலங்கையிலிருந்து வெளியேறுமாறும் - அவர்கள் நாட்டில் பாதுகாப்பாக வசிக்குமாறும் அழைக்கின்றனர். எனக்கு முன்னால் பல வாய்ப்புகள் இருந்தாலும், அதில் ஒன்றைக்கூட நான் செய்வதாக இல்லை.

உயர்ந்த பதவி, புகழ், செல்வம், பாதுகாப்பு போன்றவை அழைத்தாலும், அவற்றிற்கெல்லாம் மேலாக உள்ளுணர்வின் அழைப்பே முக்கியமாக இருக்கிறது.

நாங்கள் என்ன பார்க்கிறோமோ அதை, அவ்வாறே மண்வெட்டி என்றோ, திருடன் என்றோ, கொலைகாரன் என்றோ அப்படியே எழுதுவதால் சண்டே லீடர் பத்திரிகை சர்ச்சைக்குரிய ஒன்றாக விளங்குகிறது. நாங்கள் வார்த்தை விளையாட்டுகளுக்கு பின்னே பதுங்குவதில்லை. நாங்கள் வெளியிடும் புலனாய்வு செய்திகள் அனைத்தும் உரிய ஆதாரங்களுடன் வெளியிடப்படுகின்றன. அதற்காக ஆபத்து வரும் வாய்ப்புகள் இருப்பது தெரிந்தும் எங்களுக்கு ஆதாரங்களை வெளிப்படுத்தும் சமூகப்பொறுப்புள்ள மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் பல ஊழல்களை வெளிக்கொணர்ந்து இருந்தாலும் கடந்த 15 ஆண்டுகளில் நாங்கள் தவறு செய்துவிட்டதாக யாரும் நிரூபித்தது இல்லை. அதேபோல எங்களுக்கு எதிரான எந்த வழக்குகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதும் இல்லை.
சுதந்திரமான பத்திரிகை என்பது கண்ணாடியாக இயங்கி ஒப்பனை இல்லாத உண்மையான சமூகத்தின் முகத்தை மக்களுக்குக் காட்டும். பத்திரிகைகளின் மூலமாகத்தான் நாட்டின் நிலை குறித்தும், நாட்டை நிர்வகிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் குறித்தும் மக்கள் அறிந்துகொள்ள முடியும். இந்தத் தலைவர்கள்தான் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுப்பதற்காக தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். சில நேரங்களில் இந்த கண்ணாடியின் மூலம் நீங்கள் பார்க்கும் உருவம் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லாமல் இருக்கிறது. இந்நிலைக்காக நீங்கள் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் வேளையில், உங்களுக்காக அந்தக் கண்ணாடியை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்கள் மிகப்பெரும் ஆபத்தில் இருக்கின்றனர். இதுதான் எங்களுக்கான அழைப்பு - நாங்கள் புறக்கணிக்க முடியாத அழைப்பு.

ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும், எங்கள் பார்வையை நாங்கள் மறைத்ததில்லை. இலங்கையை ஒரு வெளிப்படையான, மதசார்பற்ற, சுதந்திர ஜனநாயக நாடாக நாங்கள் பார்க்க விரும்பினோம். இந்த வார்த்தைகளுக்கு உள்ளே இருக்கும் பொருளை கவனியுங்கள். வெளிப்படையாக என்றால் அரசு என்பது மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டதாக, அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்தாததாக இருக்க வேண்டும். மதசார்பின்மை என்பது, பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட - பல கலாசாரங்களைக் கொண்ட நம்முடைய சமூகத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைவதற்கான முக்கியமான கருத்தாகும். சுதந்திரம் என்பது, மனிதர்கள் பலவிதங்களில் வித்தியாசமாக படைக்கப்பட்டுள்ளனர் என்பதையும், அவர்கள் இருக்கும் முரண்பட்ட விதங்களிலேயே ஏற்றுக்கொள்வதுமாகும். நாம் விரும்பும் விதத்தில் அவர்கள் இருக்க வேண்டும் என்று கூறுவதல்ல. மேலும் ஜனநாயகம் என்பது... இது ஏன் முக்கியமானது? என்பதையும் நான் விளக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், மன்னிக்கவும்! நீங்கள் இந்தப் பத்திரிகையை வாங்குவதை நிறுத்திவிடுவதே நல்லது.

பெரும்பாலானவர்கள்

ஆதரிக்கிறார்கள் என்பதற்காக ஒரு கருத்தை கேள்வி கேட்காமல் எழுதுவதன் மூலம் - பிரதிபலிப்பதன்மூலம் சண்டே லீடர் பத்திரிகை பாதுகாப்பு தேடியதில்லை. கருத்து முரண்பாடுகளை எதிர்கொள்வதன் மூலமாகவே இதுவரை பத்திரிகையை நடத்தி வந்திருக்கிறோம். இத்தனை ஆண்டுகளாக நாங்கள் கூறிய கருத்துகள் மக்களில் பலருக்கும் சுவை அளிப்பதாக இல்லை என்பது தெரியும். உதாரணமாக, தனிநாடு கேட்கும் தீவிரவாதத்தை ஒடுக்கும் அதே நேரத்தில், பயங்கரவாதத்திற்கான மூல காரணங்களை கண்டறிந்து அவற்றையும் களைய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மேலும் இலங்கை இனப்பிரசினையை பயங்கரவாத பூதக்கண்ணாடி மூலமாக மட்டுமே பார்க்காமல், வரலாற்று நோக்கிலும் இந்தப் பிரச்சினையை பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறிவருகிறோம். பயங்கவாதத்திற்கு எதிரான போர் என்று கூறிக்கொண்டு சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டுகளை வீசி படுகொலை செய்வதை வழக்கமாக கொண்டுள்ள நாடு உலகிலேயே இலங்கை ஒன்றுதான் என்பதையும் எடுத்துக்கூறி அதை எதிர்த்து வருகிறோம். இத்தகைய கருத்துகளுக்காக நாங்கள் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறோம். இது உண்மையிலேயே தேசவிரோதம் என்றால் அதைப் பெருமிதத்துடன் ஏற்கிறோம்.
சண்டே லீடர் பத்திரிகைக்கு அரசியல் நோக்கம் இருப்பதாக பலரும் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. எதிர்கட்சிகளை விமர்சனம் செய்வதைவிட தீவிரமாக அரசை விமரிசனம் செய்வது ஏனென்றால், கிரிக்கெட் விளையாட்டில் பேட்ஸ்மேனை தவிர்த்து, பீல்டிங் பகுதியில் பந்து வீசுவதில்லையோ, அதேபோல் ஆட்சியில் உள்ளவர்களுக்கு எதிராகத்தான் தீவிரமாக விமர்சனங்களை வைக்க முடியும்; எதிர்கட்சிகள் மீதல்ல. கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தபோதும், அந்த ஆட்சியின் அத்துமீறல்களை, ஊழல்களை வெளிக்கொணர்ந்து அன்றைய ஆட்சியின் தொண்டையில் சிக்கிய முள்ளாக நாங்கள் இருந்தோம். இத்தகைய எங்களின் போக்கும் அந்த ஆட்சி வீழக் காரணமாக இருந்தது.

போரை நாங்கள் எதிர்க்கிறோம் என்பதற்காக நாங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறோம் என்று அர்த்தமில்லை. உலகில் உள்ள மிகவும் இரக்கமற்ற - ரத்தவேட்கை கொண்ட இயக்கங்களில் ஒன்றாக அந்த இயக்கம் இருக்கிறது. அந்த இயக்கம் அழிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவ்வாறு கூறுவதால், தமிழ் மக்களின் மனித உரிமைகளை பறிப்பதையும், அவர்கள் மீது இரக்கமற்று துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுமழை பொழிவதையும் ஏற்க முடியாது. ஏனெனில் அது தவறானது மட்டுமல்ல, புத்தரின் தம்மத்தை பாதுகாப்பதாகக் கூறும் நாம் வெட்கப்படவேண்டியதும் ஆகும். இத்தகைய அத்துமீறிய தாக்குதல்கள், செய்தித்தணிக்கை காரணமாக பொதுமக்களுக்கு உரியமுறையில் சென்று சேர்வதில்லை.

இதைவிட நாட்டின் வடக்கு-கிழக்குப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தின் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்கள், அவர்களின் சுயமரியாதையை இழந்து, நிரந்தரமாக இரண்டாம்தர குடிமக்களாக வசிக்க வேண்டிய அவலமும் ஏற்பட்டுள்ளது. போர் முடிந்த பின்னர், அப்பகுதியில் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதன்மூலம் சீற்றத்தை தணிக்கமுடியும் என்று கனவு காணக்கூடாது. இந்தப்போரின் ரணங்கள் நிரந்தர வடுக்களை ஏற்படுத்திவிடும். இதன் விளைவாக தமிழ் மக்களிடம் மேலும் கசப்புணர்வும், வெறுப்புணர்வுமே ஏற்படும். அதை சமாளிப்பது எளிதல்ல. அரசியல் ரீதியாக தீர்வு காணக்கூடிய ஒரு பிரச்சனை, அனைத்து தரப்பு மக்களையும் துன்புறுத்தக்கூடிய சீழ்ப்பிடித்த கொடுங்காயமாக மாறிவிடும். நான் கோபமடைந்தும், சலிப்புற்றும் இருக்கிறேன் என்றால், எனது நாட்டு பெரும்பான்மை மக்களும் - முழு அரசும் - வெளிப்படையாகத் தெரியும் இந்த உண்மையை பார்க்கத் தவறுவதால்தான்.

நான் இரண்டு முறை தாக்கப்பட்டதும், எனது வீடு துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டதும் அனைவருக்கும் தெரியும். இந்த சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடத்துவதாக அரசுத்தரப்பில் உறுதி அளிக்கப்பட்டாலும், இந்த தாக்குதல் குறித்த விசாரணை நடத்தி, இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த அனைத்து சம்பவங்களும் அரசின் தூண்டுதல் காரணமாகவே நடந்தது என்று நான் நம்புவதற்கு காரணங்கள் உள்ளன. இறுதியில் நான் கொல்லப்பட்டால், அரசுதான் என்னை கொன்றிருக்க வேண்டும்.

இதில் துயரமான வேடிக்கை என்னவென்றால், நானும் மஹிந்தாவும் கடந்த கால்நூற்றாண்டாக நண்பர்களாக இருப்பது பொதுமக்களில் பலருக்கும் தெரியாது. அவரை அவரது முதல் பெயரான ‘மஹிந்தா’ என்ற பெயரிலும், சிங்கள மொழியில் அழைக்கும் ‘ஓயா’ என்று அவரை இன்றும் அழைக்கும் மிகச்சிலரில் நானும் ஒருவனாக இருப்பேன். அதிபர் மாதத்திற்கு ஒருமுறை பத்திரிகை ஆசிரியர்களை சந்திக்கும் கூட்டத்திற்கு நான் செல்வதில்லை. எனினும் சில பின்னிரவு நேரங்களில் தனியாகவோ, நெருங்கிய நண்பர்கள் சிலருடனோ அதிபரின் இல்லத்திலேயே சந்தித்து அரசியலைப்பற்றியும், பழைய இனிமையான நாட்களைப் பற்றியும் பேசுவதுண்டு. இந்த இடத்தில் சில குறிப்புகளை கூற விரும்புகிறேன்.

நண்பர் மஹிந்தா! கடந்த 2005ம் ஆண்டில் இலங்கை சுதந்திரக் கட்சியின் அதிபர் வேட்பாளராக நீங்கள் உருவெடுத்தபோது, எங்கள் பத்திரிகையைப்போல இதமான வரவேற்பு உங்களுக்கு வேறு எங்கும் கிடைக்கவில்லை. உண்மையில் உங்கள் முதல் பெயரை குறிப்பிடுவதன்மூலம் பல்லாண்டாக நடைமுறையில் இருந்த சம்பிரதாயங்களை உடைத்தோம். மனித உரிமைகள் மற்றும் சுதந்திரம் மீது அப்போது நீங்கள் கொண்டிருந்த கொள்கைகளுக்காக உங்களை நாங்கள் வரவேற்றோம். ஆனால் ‘ஹம்பன்டோடா’வுக்கு உதவும் முறைகேட்டில் நீங்கள் முட்டாள்தனமாக ஈடுபட்டபோது நாங்கள் கனத்த இதயத்தோடு அதை வெளியிட்டோம். மேலும் முறைகேடு செய்யப்பட்ட பணத்தை திருப்பி அளிக்கும்படியும் வலியுறுத்தினோம். அதை நீங்கள் பல வாரங்கள் கடந்து செய்தீர்கள். உங்கள் மீதான நன்மதிப்பில் மிகப்பெரும் தீயவிளைவை அது ஏற்படுத்தியது. அது உங்களை இன்றளவும் துரத்தி வருகிறது.

அதிபர் பதவி மீது உங்களுக்கு ஆர்வமில்லை என்று நீங்களே என்னிடம் கூறி இருக்கிறீர்கள். நீங்கள் அதிபர் பதவியைத்தேடி செல்லவில்லை; அப்பதவி தங்கள் மடியில் விழுந்தது. உங்கள் மகன்களே உங்களின் மகிழ்ச்சி என்றும், அரசு நிர்வாகத்தை உங்கள் சகோதரர்களிடம் ஒப்படைத்துவிட்டு, உங்கள் மகன்களோடு நேரத்தை செலவிடுவதே உங்களுக்கு விருப்பமானது என்றும் நீங்கள் கூறியிருக்கிறீர்கள். இப்போது எனது மகனுக்கும், மகளுக்கும் தந்தை இல்லாது போகும் சூழலில் அரசு நிர்வாகத்தை செம்மையாக நடத்துவது யார் என்பது அனைவருக்கும் தெரியவருகிறது.

எனக்கு மரணம் ஏற்படும்போது, நீங்கள் வழக்கமான சடங்குச் சொற்களை கூறுவதோடு, முழுமையான விசாரணை செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிடுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இதே போன்ற மற்ற சம்பவங்களில் நடந்ததைப்போல இந்த விசாரணையிலும் எந்த உண்மையும் வெளிவராது என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் உண்மையைச் சொன்னால், எனது மரணத்திற்குப் பின்னால் யார் இருப்பார்கள் என்பது நம் இருவருக்கும் தெரியும், அந்த பெயரைச் சொல்லும் துணிவு உங்களுக்கு இல்லாவிட்டாலும்கூட. ஏனெனில் என் வாழ்க்கையோடு, உங்கள் வாழ்க்கையும் அந்த உண்மையில் சிக்கியிருக்கிறது.

இலங்கை தேசம் குறித்து நீங்கள் இளமையில் கண்ட கனவுகள், நீங்கள் அதிபராகப் பதவியேற்ற இந்த மூன்று ஆண்டுகளில் உடைந்த செங்கற்களைப்போல தூள்தூளாகி விட்டது. தேசபக்தி என்ற பெயரில் மனித உரிமைகளைப் பறிப்பதிலும், ஊழல் சாம்ராஜ்யத்தை உருவாக்கியதிலும், பொதுமக்களின் வரிப்பணத்தை சூறையாடியதிலும் மற்றெந்த அதிபரையும்விட நீங்களே மிஞ்சி இருக்கிறீர்கள். உண்மையைச் சொல்லப்போனால், பொம்மை கடையில் இறக்கிவிடப்பட்ட குழந்தையைப்போல நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால் அந்த உதாரணம்கூட உங்களுக்குப் பொருந்தாது. ஏனெனில் நீங்கள் இந்த மண்ணில் ஏற்படுத்திய ரத்தக்கறையையும், குடிமக்களின் மனித உரிமைகளைப் பறித்ததையும்போல எந்தக் குழந்தையாலும் செய்ய முடியாது. நீங்கள் பதவி போதையில் மூழ்கி இருப்பதை உங்களால் உணரமுடியாது; இந்த போதை தலைக்கேறிய நிலையில் உங்கள் மகன்கள் இருப்பதைப் பார்த்து நீங்கள் வருந்தும் நிலை ஏற்படலாம். அது துயரத்தையை கொண்டுவரும். என்னைப் பொறுத்தவரை, தெளிவான மனநிலையில் என்னைப் படைத்தவனிடம் நான் செல்கிறேன். உங்களுக்கான நேரம் இறுதியாக வரும்போது, நீங்களும் அதையே செய்வீர்கள் என்று நம்புகிறேன். அதை விரும்புகிறேன்.

என்னைப் பொறுத்தவரை, நான் எந்த தனிமனிதனுக்கும் பணியாமல், தலை நிமிர்ந்து வாழ்ந்த நிறைவு இருக்கிறது. நான் இந்தப் பாதையில் தனியே பயணம் செய்யவில்லை. சக பத்திரிகையாளர்களும் என்னோடு பயணம் செய்துள்ளனர். அவர்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தூர தேசங்களுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அதிபரான நீங்கள் முன்னொரு காலத்தில் எந்த பத்திரிகை சுதந்திற்காக பாடுபட்டீர்களோ, அதே பத்திரிகை சுதந்திரத்திற்காக தற்போது பாடுபடும் மேலும் சில பத்திரிகையாளர்கள் மரணத்தின் நிழலில் உள்ளனர். எனது மரணம் தங்கள் கண்காணிப்பின் கீழ் நிகழ்வதை நீங்கள் மறக்கவே முடியாது. எனது கொலையாளிகளை நீங்கள் பாதுகாப்பதைத்தவிர வேறு வாய்ப்பில்லாத நிலையில் நீங்கள் இருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் எப்போதும் தண்டிக்கப்படாத வகையில் நீங்கள் பார்த்துக்கொள்வீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். உங்களுக்கு வேறு வழியே இல்லை. உங்களுக்காக நான் வருந்துகிறேன். உங்களைப் பதவியில் அமர்த்தியுள்ள உங்கள் குடும்பத்தினர், உங்கள் பாவங்களுக்காகவும் கடவுளிடம் நீண்ட நேரம் முழந்தாளிட்டு பாவமன்னிப்பு கேட்பார்கள்.

சண்டே லீடர் பத்திரிகையின் வாசகர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், எங்கள் பணியில் துணை நின்றதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிறுபான்மையினரின் நலன்களுக்காக, குரல் எழுப்பக்கூட நாதியற்றவர்களுக்காக குரல் கொடுத்திருக்கிறோம். வேர்களை மறந்துவிட்டு தலை கொழுத்துத் திரிபவர்களின் ஊழல்களை வெளிப்படுத்தி உங்கள் வரிப்பணம் விரயமாக்கப்படுவதை அம்பலப்படுத்தி இருக்கிறோம். அரசுத்தரப்பில் கூறப்படும் பிரச்சாரங்களுக்கு மாற்றாக உண்மை நிலையை உணர்த்தி இருக்கிறோம். இதற்கான விலையை ஒரு நாள் கொடுக்க வேண்டும் என்று எனக்கு எப்போதும் தெரியும். அதனை நானும் - என் குடும்பத்தினரும் தற்போது கொடுக்கிறோம். நான் அதற்கு எப்போதும் தயாராகவே இருக்கிறேன். இதனைத் தடுக்க நான் எதையும் செய்யவில்லை. முன்னெச்சரிக்கையோ, பாதுகாப்போ இல்லை. ஆயிரக்கணக்கான படுகொலைகளைக் கண்டிக்கும்போது மனித கேடயங்களின் பின் பதுங்கிக்கொள்ளும், எனது கொலையாளியைப்போல நான் கோழை இல்லை என்பதை அவன் உணர வேண்டும் என்று விரும்புகிறேன். எனது உயிர் யாரால் எப்படி கவரப்படும் என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அது எப்போது நடைபெறும் என்பதுதான் மீதமுள்ள கேள்வி.
சண்டே லீடர் பத்திரிகை தனது அறம் சார்ந்த யுத்தத்தை தொடர்ந்து நடத்தும் என்பதும் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது. நான் இந்தப்பணியில் தனித்து செயல்படவில்லை. இந்த பத்திரிகை வீழ்த்தப்படுவதற்கு முன்னர் எங்களில் பலர் கொல்லப்படவேண்டும் - கொல்லப்படுவார்கள். அதுவரை சண்டே லீடர் பத்திரிகை மக்களுக்காகப் போராடும். எனது கொலை பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலாக கருதப்படாமல், கருத்துரிமைக்காக தொடர்ந்து பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கான தூண்டுதலாக செயல்படும் என்று நம்புகிறேன். இன்னும் சொல்லப்போனால் எனது கொலை, இலங்கையில் மனித விடுதலைக்கான புதிய யுகத்தை படைப்பதற்காக போராடும் சக்திகளை இணைக்க உதவி செய்யும் என்றும் நம்புகிறேன். தேசபக்தியின் பெயரால் பல படுகொலைகள் நடந்தாலும், மனிதநேயம் மேலும் செழித்து வளரும் என்றும் அது அதிபரின் கண்களைத் திறக்கும் என்றும் நம்புகிறேன். எத்தனை ராஜபக்சேக்கள் சேர்ந்தாலும் மனிதநேயத்தை அழித்துவிட முடியாது.
நான் இத்தகைய ஆபத்தான முயற்சிகளில் இறங்க வேண்டுமா என்று பொதுமக்கள் பலரும் என்னிடம் கேட்டுள்ளனர். காலம் மாறும்போது இந்த அநீதிகளும் மாறிவிடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனக்கும் அது தெரியும், அது தவிர்க்கமுடியாததும்கூட. ஆனால் இப்போது நாம் பேசாவிட்டால், பின்னர் பேசுவதற்கு யாரும் மிஞ்சாமலே போய்விடக்கூடும். அவர்கள் சிறுபான்மையினராக, ஒடுக்கப்பட்டவர்களாக, வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களாக இருக்கலாம்.

ஜெர்மானிய மதத் தத்துவாதியாகிய மார்ட்டீன் நீய் மொல்லர் என்பவரின் வாழ்க்கை அனுபவமே எனது பத்திரிகை வாழ்க்கை முழுக்க எனது உந்து சக்தியாக செயல்பட்டு வந்தது. யூதர்களுக்கு எதிரான கருத்து கொண்ட இவர், இளமைக்காலத்தில் ஹிட்லரின் ஆதரவாளராக இருந்தார். ஹிட்லர் தலைமையிலான நாஜிக்கள் ஜெர்மனியை கைப்பற்றியவுடன், ஹிட்லரின் கொள்கை யூதர்களை மட்டுமே அழிப்பதல்ல என்பதையும், ஹிட்லருக்கு எதிரான கருத்து கொண்ட அனைவரையும் அழிப்பதே ஹிட்லரின் நோக்கம் என்பதையும் புரிந்து கொண்டார். ஹிட்லருக்கு எதிரான கருத்துகளைக் கூறிய மார்ட்டீன் நீய் மொல்லரும் நாஜிப்படையால் பிடிக்கப்பட்டு 1937 முதல் 1945 வரை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவர் படுகொலை செய்யப்படுவதற்குமுன் எழுதிய கவிதையை நான் என் இளம்பருவத்தில் படித்தேன். என் நெஞ்சில் நிலைத்த அந்த கவிதை இதோ:

முதலில் அவர்கள் யூதர்களைப் பிடிக்க வந்தனர்.
நான்பேசவில்லை; ஏனெனில் நான் யூதன் அல்ல.
பின்னர் அவர்கள் கம்யூனிஸ்டுகளைப் பிடிக்க வந்தனர்.
நான் பேசவில்லை; ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல.
பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளைப் பிடிக்க வந்தனர். அப்போதும்
நான் பேசவில்லை; ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியும் அல்ல.
பின்னர் அவர்கள் என்னைப் பிடிக்க வந்தனர்.
அப்போது எனக்காக பேச யாருமே இல்லை.

நீங்கள் எதை மறந்தாலும் இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சண்டே லீடர் பத்திரிகை உங்களுக்காக உள்ளது. நீங்கள் சிங்களவராக, தமிழராக, இஸ்லாமியராக, தாழ்ந்த சாதியினராக, ஓரினப்புணர்ச்சியாளராக, எதிர்கருத்து கொண்டவராக அல்லது ஊனமுற்றவராக இருக்கலாம். உங்களுக்காக போராடுவதற்கு, அதிகாரத்திற்கு அடிபணியாமல் - அச்சமில்லாமல், தைரியமாக செயல்படுவதற்கு சண்டே லீடரின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இது வெறும் வார்த்தையல்ல. பத்திரிகையாளரான எங்கள் தியாகங்கள் எங்கள் பெயருக்கும், புகழுக்கும் செய்யப்பட்டதல்ல, அது உங்களுக்காக செய்யப்பட்டது. அந்த தியாகத்திற்கான தார்மீகத்தகுதி உங்களுக்கு இருக்கிறதா என்பது வேறு விவகாரம். என்னைப் பொறுத்தவரை நான் அதற்கு முயற்சி செய்தேன் என்பது கடவுளுக்குத் தெரியும்.

நன்றி :உயிர்மெய் சிறப்பிதழ் 2009/2010

மூலம்:http://www.thesundayleader.lk/20090111/editorial-.htm
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு: சுந்தரராஜன்(sundararajan@lawyer.com)