Wednesday, November 30, 2011

பரமக் குடி படுகொலைகளுக்குப் பின்

 அ.மார்க்ஸ்

 பரமக்குடியில் சென்ற செப்டம்பர் 13 அன்று ஆறு தேவேந்திர குல வேளாளர்களின் உயிர்களைப் பலிவாங்கிய துப்பாக்கிச் சூடு, தொடர்ந்து அம்மக்கள் மீது  மேற்கொண்ட அச்சுறுத்தல் நடவடிக்கைகள் ஆகியன முழுக்க முழுக்கக் காவல் துறையினர் அரசு ஆதரவுடன் மேற்கொண்ட ஒரு வன்முறை என்பதை இது தொடர்பான பல்வேறு ஆய்வு அறிக்கைகளும் உறுதி செய்துள்ளன. அ.இ.அ.தி.மு.க தவிர அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் இது குறித்து அரசைக் கண்டித்துள்ளன. எதிர்க்கட்சித் தகுதியைச் சட்டமன்றத்தில் பெற்றுள்ள தே.தி.மு.க முதலில் துப்பாக்கிச் சூட்டை ஆதரித்தபோதும் விரைவில் அதுவும் தன் நிலையை மாற்றிக் கொண்டது.
தமிழக அரசு முழுக்க முழுக்கக் காவல் துறை நடவடிக்கையை ஆதரித்தது. வழக்கமாக இது போன்ற சந்தர்ப்பங்களில் ஒரு முதல்வர் காவல்துறையை விட்டுக் கொடுக்காமல் பேசுவது என்கிற நிலையைத் தாண்டி இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா மிகவும் ஆங்காரமாகத் துப்பாக்கிச் சூட்டை அதரித்தார். தேவர் சாதி வெறியர்களால் பழனிக்குமார் என்கிற அப்பாவிச் சிறுவன் கொலை செய்யப்பட்டதையும் கூட அவர் சட்டமன்றத்தில் ஆதரித்துப் பேசினார். முத்துராமலிங்கத் தேவரை இழிவு செய்து எழுதினான், எனவே கொலை செய்யப்பட்டான் என ஒரு முதல்வர் சட்ட மன்றத்தில் பேசுகிறார்

Tuesday, November 29, 2011

ழாண்-லூயிக்- செவ்வியார்

சாஷா எபெலிங் உணர்வால் தமிழர்
- வி.தேவராஜ்-
பிறப்பால் ஜெர்மனியரான முனைவர்  சாஷா எபெலிங் உணர்வால் தமிழராக, தமிழ் மொழியை நேசிப்பவர். இவரைப் போலவே இன்னொருவரும் சிங்கப்பூர் உலகத் தமிழ் எழுத்தாளர் மகாநாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மகாநாட்டில் கலந்து கொண்டவர்களைச் சந்திக்கும் போது கை கூப்பி வணக்கம் தெரிவிக்கும் அவர் சுகமாக இருக்கிறீர்களா? பயணம் சுகமாக அமைந்ததா? போய் வருகின்றேன், உங்களுடைய பயணம் இனிதாக அமை யட்டும் என்றெல்லாம் தமிழ் மொழியில் சரளமாக உரையாடியவர் முனைவர் ழான் லூயிக் செவ்வியார்.

பிரெஞ்சைத் தாய் மொழியாகக் கொண்ட இவர் கணிதமும் மொழியியலும் பயின்றவர். தென்னிந்தியாவில் பேராசிரியர் முத்து சண்முகம்பிள்ளையிடம் இவர் தமிழ் கற்றார். தமிழ் இலக்கணப் பாரம்பரியத்தில் தனிக்கவனம் செலுத்திய இவர் சேனாவரையம் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதி அதை பண்டிட் டி.வி. கோபால அய்யரின் துணையுடன் திருத்தம் செய்து கொண்டார். பிரெஞ்சு கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடத்திலும் பின்னர் தேசிய அறிவியல் ஆய்வு மையத்திலும் பணிக்கமர்த்தப்பட்ட இவர் மொழித் தத்துவ வரலாற்றுக் குழுவிலும் இடம்பெற்றுள்ளார்.

இவர் பல நூல் பிரதியை வெளியிட்டுள்ளார். அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஒரு கணினி வட்டு (கணினித் தேவாரம்)முதலியவற்றை வெளியிட்டுள்ளார். வரலாறு அறிவாய்வியல் மொழி (History Epistemology Language-ISSN 0750-8069) என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும் கட மையாற்றுகின்றார். தற்போது ஆசிரியத்துறை பிரெஞ்சுப் பள்ளி, பாண்டிச்சேரி மையத்தில் பணியாற்றும் இவர் அதன் ஏட்டுச் சுவடிச் சேகரிப்பைக் கணினி மயப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். „ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்'' என்ற பாடல் வரிகளை உச்சரிப்புப் பிசகாமல் பாடி அசத்தினார் என்று சிங்கப்பூர்  தமிழ் முரசு பத்திரிகை அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளது. அத்துடன் பழம்பெரும் இலக்கியங்களான குறுந்தொகை, கலித்தொகை ஆகியவற்றின் பாடல்களைப் பிழையற வாசித்துக் காட்டியதுடன் தமிழில் மிகவும் பிடித்த நூல் சிலப்பதிகாரம் என்றும் கூறியுள்ளார். தொல்காப்பியத்தில் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து பெறப்பட்டு தற்போது பிரான்சின் கீழ்த்திசை ஆய்வுக் கல்விக் கூடத்தில் பாதுகாக்கப் பட்டு வரும் சுமார் 1600 ஓலைச் சுவடிகளையே அவர் கணினிமயப்படுத்தி வருகின்றார்.
தேவாரத்தில் உள்ள சுமார் 800 பதிகங்களையும் தொகுத்து அவற்றைச் சொற்கள் வாரியாகத் தேடக்கூடிய வசதியையும் கணினி வட்டின் மூலம் தமிழ் உலகுக்குத் தந்துள்ளார்.
நன்றி: வீரகேசரி

Tuesday, November 22, 2011

இலங்கையின் சமகால அரசியல் உரையாடல் அரங்கு

இலங்கையின் சமகால அரசியல்,சமூக நிலவரங்களுடன் , தமிழ் ,முஸ்லிம் மலையக , தலித் மக்கள் தொடர்பாக எதிர்வரும் 27-11-2011ம் திகதியில் (ஞாயிறு) பெர்லின் நகரில் முழுநாள் சந்திப்பு உரையாடல் அரங்கு ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளோம். இந்த அரங்கு பேசுபொருளாக கொண்டுள்ள விடயங்களில் திறந்த உரையாடலும் நடைபெறும்.கலந்து பங்காற்ற விரும்பும் அனைவரும் காலம் தாழ்த்தாது தொடர்பு கொள்ளவும்.லண்டன்,பிரான்ஸ்,நோர்வே,டென்மார்க் போன்ற நாடுகளில் இருந்தும் பங்குபற்றுனர்கள் கலந்து கொள்கின்றனர்.
அமர்வு -1
"தேசிய சிறுபான்மை இனங்களின் இணைவும் சாத்தியப்பாடுகளும்"
"குரலற்ற மக்கள் திரளின் கையறு நிலையும் பாடுகளும்"
"உயர்த்தப்பட்ட சாதி எதிர்பார்ப்புகளும், தலித் உளவியலும்..."
"இலங்கை பயணத்தில் கண்டவை"
வி.சிவலிங்கம்
எம்.பௌசர்
என்.சரவணன்
தேவதாசன்
அமர்வு -2
இரு நூல்களின் அறிமுகம்
கசகறணம்
ந.சுசீந்திரன்
கரவைதாசன்
உமா
விமல் குழந்தைவேல்
தீண்டாமைக்  கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்
ஜீவாமுரளி
எஸ்.சிவராஜன்
தேவதாசன்
யோகரட்ணம்
இந்நிகழ்வின் நேரடி ஒளிபரப்பினை தலித்தியம் (www.dalittiyam.com) இணையத்தளத்தில் காணலாம்

Friday, November 11, 2011

உயிர் நிழல் இதழ் வெளிவந்துள்ளது....

உயிர்நிழல்இதழ்வெளிவந்துள்ளது....
தொடர்ச்சியான சிற்றிதழ்கள் வருகை!


புலம் பெயர் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வெளிவரும் மாற்று தமிழ் சிற்றிதழ்களில் உயிர் நிழல் இதழ் குறிப்பிடத்தக்கது.இவ்விதழில் மீராபாரதி,தூவாரகன்,திருமாவளவன்,கலையரசன், பவ்சர்,சிவலிங்கம்,ஆழியாள், பஹிமா ஜஹான்,ஜிப்ரி ஹசன்,எஸ்‍ சிவதாஸ்,ஆகியோர் பங்களித்துள்ளனர். தொகுப்பாசிரியர்களான லக்சுமி,சுசீந்திரன் ஆகியோரின் முயற்சியினால் இவ்விதழ் வருகை சாத்தியப்பட்டுள்ளது.இவ்விதழ் வெளிவர 5 மாதங்களுக்கு மேல் எடுத்துள்ளது.(உயிர் நிழல் தொடர்புக்கு exilpub@gmail.com ) குறிக்கப்பட்ட கால எல்லைக்குள் தொடர்ச்சியாக இதழை வெளிக்கொண்டு வர முடியாமைக்கான காரணங்களை, மாற்று தமிழ் சிற்றிதழ் பணியில் ஈடுபாடு கொண்ட அனைவரும் அறிவர்.

Sunday, November 06, 2011

இப்படிக்கு அன்புள்ள அம்மா கவிதைத்தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

 -வெலிகம ரிம்ஸா முஹமத்-    (மதிப்புரை)

நூல் - இப்படிக்கு அன்புள்ள அம்மா
(கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - கலாநிதி ஜீவகுமாரன்
தமிழில் - வி. ஜீவகுமாரன்
வெளியீடு - விஸ்வசேது இலக்கியப் பாலம்

டென்மார்க்கில் டெனிஷ் மொழியில் திருமதி கலாநிதி ஜீவகுமாரன் எழுதிய இப்படிக்கு அன்புள்ள அம்மா என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதை (காவிய) த் தொகுதியை விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் இரண்டாவது படைப்பாக 163 பக்கங்களில் திரு வி. ஜீவகுமாரன் அவர்களால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. திரு வி. ஜீவகுமாரன் அவர்கள் தனது பதிப்புரையில் ''விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் இரண்டாவது படைப்பாக இப்படிக்கு அன்புள்ள அம்மா வெளிவருதல் பற்றி மனம் மகிழ்ச்சி அடைகிறது. காரணம் இதில் வரும் அம்மாவுடனும், அவரின் மகன் ஹரியுடனும் பதிப்பாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் கடந்த ஆறு மாதகாலமாக நான் பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். பிரிவு! வாழ்வின் முதல் அத்தியாயத்தில் உலகத்தை விட்டுப் பிரியும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது" என்கிறார்.
"இலக்கியம் மனிதனின் சிக்கலைக் கலைத்துவப் பாணியில் எடுத்தியம்புவது ஆகும். இப்பொழுது நாம் வாசிக்க எடுக்கின்ற புத்தகம் எளிமையான கவி நடையில் புதுக்கவிதை நடையில், வயோதிக மாது ஒருவரின் மனக்குமுறலை பதிவு செய்கிறது.