Monday, May 31, 2010


மனிதாபிமான உதவி நிறுவனங்கள் மீதும், வைத்தியசாலைகள் மீதும், பொதுமக்கள் மீதும் திட்டமிட்டே இலங்கை அரசாங்கம் தாக்குதல்நடாத்தியுள்ளது
-லூயிஸ் ஆர்பர் -

நான் லூயிஸ் ஆர்பர். சர்வதே நெருக்கடிகள் குழுவின் தவைராக உள்ளேன். இலங்கையில் இடம் பெற் போர்க்குற்றங்கள் தொடர்பாகக் கடந்தவாரம் ஒருஅறிக்கையை நாம் வெளியிட்டிருந்தோம்.

இந்த
அறிக்கையில் கடந்த வருடம் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைஅரசாங்கப் படைகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிப் போரில்மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான மிக முக்கியமானகுற்றச்சாட்டுக்களை தகுந்த ஆவணங்களுடன் தொகுத்திருக்கிறோம்.

குறிப்பாக
இறுதி ஐந்து மாதங்களும் நடந்த போரில் பொதுமக்கள் மீதுமேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் வன்முறைகள் அவர்களுடைய அடிப்படைஉரிமைகள் மறுக்கப்பட்டமை போன்றன குறித்து குறிப்பிட்டிருக்கிறோம்.

மனிதாபிமான
உதவி நிறுவனங்கள் மீதும், வைத்தியசாலைகள் மீதும், பொதுமக்கள் மீதும் திட்டமிட்டே இலங்கை அரசாங்கம் தாக்குதல்நடாத்தியுள்ளமையை அங்கிருந்து கிடைக்கும் ஆதாரங்களின் மூலம்உறுதிப்படுத்தக் கூடியதாயிருக்கிறது.

அவ்வாதாரங்களின்படி
அரசாங்கத்தினதும் படைகளினதும் உயரதிகாரிகளுக்குபடையினரால் பொதுமக்கள் பெருமளவுக்குப் படுகொலை செய்யப்படுவதுதெரிந்திருந்தும் அவர்கள் அவற்றைத் தடுக்கவோ பொதுமக்களைப்பாதுகாக்கவோ முனையவில்லை என்பதனை நம்பக்கூடியதாயிருக்கிறதுஎன்றும், இது போரியல் விதிகளை மீறிய செயல் என்றும் சர்வதேசமனிதாப்மானச் சட்டங்களுக்கு எதிhனவை என்றுமே சர்தேச நெருக்கடிள் குழுகருதுகிறது.

இந்த
அடிப்படைகளிலேயே இலங்கையில் இடம்பெற்றுள்ள போர்க்குற்றங்கள்குறித்த விரிவான விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்று சர்வதேசநெருக்கடிகள் குழு கருதுகிறது.

இந்த
அறிக்கை வெளியானதிலிருந்து வெளிப்படையான பொறுப்பணர்வுடன்கூடிய ஒரு விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்று பல்வேறு அமைப்புக்களும்ஊடகங்களும் எமது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இலங்கை
அரசாங்கமும் அவர்களுடைய ஆதரவாளர்களும் இந்த அறிக்கையில்குறிப்பிடப்பட்ட தகவல்கள் அதற்கான ஆதாரங்களி; அடிப்படைகள் என்பவற்றைஎல்லாம் கண்டுகொள்ளவில்லை. இந்த அறிக்கையி;ல் குறிப்பிட்டு;ள்ள எந்தவிடயங்கள் குறித்தும் பொறுப்புணர்வுடன் கூடிய பதிலெதனையும்அளிக்கவில்லை.

அரசாங்கம்
இவ்வறிக்கை சுட்டிக்காட்டியவாறான ஒரு சர்வதேச விசாரணையைஎதிர்ப்பதிலேயே தீவிரம் காட்டி வருகிறது.

ஆனால்
இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வந்த போக்கிலிருந்து அதுவிடுபட்டுள்ளது என்பதனை உறுதிப்படுத்த வேண்டும். அத்தோடு தமிழ் மக்களும்இலங்கையின் மக்களும் தாங்கள் உண்மையில் விடுதலைப் புலிகளிடமிருந்துவிடுவிக்கப்பட்டு இருக்கிறோமென்பதனை அவர்கள் நம்பவும் உறுதிப்படுத்தவும்வேண்டும்.

அதற்கு
இவ்வாறான ஒரு சர்வதேச விசாரணைக்கு இலங்கை அனுமதித்தாகவேண்டும். தன்னுடைய இந்தப் பொறுப்புணர்வு குறித்து விசாரணையைநடாத்தாமலோ நடாத்த அனுமதிக்காமலோ இலங்கை அரசாங்கம் ஒரு போதும்தனது நன்மதிப்பை நிறுவிவிடமுடியாது.

Friday, May 21, 2010

små gymnasier


Hjælp til de små gymnasier


-Troels Ravn-


De unges uddannelse er for vigtig til at overlade til de frie markedskræfter.Som omtalt i Midtjysk Ugeavis d. 11/5 kan det frie gymnasievalg i fremtiden blive en trussel for de lokale gymnasier i Grindsted og Vejen. Selv om de lokale gymnasier aktuelt oplever en stigning i ansøgertallet, så er det efter min mening kritisk - og der er al mulig grund til at råbe vagt i gevær, hvis de store gymnasier får lov til at udkonkurrere og udsulte de mindre gymnasier. Det er afgørende vigtigt for udviklingen i lokalområdet, at vores unge mennesker får en ungdomsuddannelse, og det har i den forbindelse kæmpe betydning, at vi har lokale uddannelsesinstitutioner. Jeg mener derfor, der er brug for politisk styring på området, og det er derfor positivt, at en samlet opposition i Folketinget står bag et nyt lovforslag, der skal sikre, at gymnasieeleverne fordeles bedre. Vedtages forslaget bliver der nedsat regionale udvalg, der både tager hensyn til elevernes ønsker om studieretning, gymnasium og kortest mulig transporttid,ogsamtidig sikrer, at udkantsgymnasierne overlever.

Monday, May 17, 2010

ஈழத்து மெல்லிசை


ஈழத்து மெல்லிசை
-வதிரி – சி. ரவீந்திரன்


இசைத்துறையின் வரலாறு இந்தியாவிலேயே தோற்றம் காண்கிறது. அதன் ஒரு செயல் வடிவமான பரதமும் அங்குதான் பிறந்தது. இதன் வளர்ச்சியின் பின்புலமாக மற்றைய நாடுகளிலும் இக்கலைகள் வளர்க்கப்பட்டன. இந்த வளர்ச்சியின் ஒரு நாடாக எமது நாடும் அங்கீகாரம் பெறுகிறது. எமது மக்களின் இசை, நடன வளர்ச்சியின் ஆர்வம் காரணமாக நம்மவர்கள் இசை, நடனம் மற்றும் இசைவாத்தியங்களை தென் இந்தியாவில் சென்று கற்று பாண்டித்தியம் பெற்றவர்களாக விளங்குகின்றனர். யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய பகுதிகளில் தென்னிந்திய வித்துவான்கள் வந்து இசை வகுப்புகளை நடாத்தியுமுள்ளனர். ஒரு காலத்தில் இந்திய தவில் – நாதஸ்வரக் கலைஞர்களுக்கு இணையாக நமது கலைஞர்களும் திகழ்ந்தனர். இசையின் ஒரு பகுதியான நாட்டுக் கூத்து தமிழர்களின் பாரம்பரியக்கலையாகும். இதே போன்று காமன் கூத்து மலையகத்தின் பாரம்பரியக்கலையாக இருப்பதையும் உணரமுடிகிறது.
நமது மக்களுக்கென்று பாரம்பரியக் கலைவடிவங்கள் இருந்தாலும் நம்மவர்களுக் கென்று ஒரு இசைவடிவம் இருக்கவில்லை என்பதை மறுப்பதற்கில்லை. இசைப்பேரரசு திரு சண்முகரத்தினம் அவர்களின் இசையில் பல பாடல்களை பலர் பாடியிருந்தனர். இதை இலங்கை வானொலியே ஒலிபரப்பி வந்தது. இதே போன்று வீரமணி ஐயர் அவர்கள் பாடல்களை எழுதி இசையமைத்து பாட வைத்துள்ளார்.

(வரிகள்: வீரமணி ஐயர், குரல்: சத்தியா சத்தியதாஸ், ரவிக்குமார்,
இசை: ரவிக்குமார் )
இவரது பாடல்கள் கீர்த்தனங்களாக அமைந்தன. இவரது பாடல்களை மதுரைசோமு, சீர்காழி கோவிந்தராஜன், ரி .எம் . சௌந்தரராஜன் ஆகியோரது குரல்களிலும் கேட்கின்றோம். இவைகள் கர்நாடக இசையிலமைந்த பாடல் களாகவே இருந்தன. 1969ல் காவலூர் ராஜதுரை அவர்களால் வர்த்தக சேவை நிகழ்ச்சிக்காக பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. நம்மவர் பாடலில் நம்மவர் குரல் ஒலித்ததாக திரு. விக்னேஸ்வரன் கட்டுரையொன்றில் குறிப்பிடுகின்றார். (வடமராட்சியின் இசைப் பாரம்பரியம் நூல்) இதன் பின் தமிழருக்கு தனித்துவமான இசையொன்று தேவையென பலர் ஆதங்கம் கொண்டமையால் இதனைப் பூர்த்தி செய்ய மர்ஹம் ர்.ஆ.டீ. முகைதீன் வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.


1970-71 காலப்பகுதியில் இலங்கை வானொலியில் ர்.ஆ.டீ. பணிப்பாளர் சபையில் அங்கம் வகித்தபோது மெல்லிசைப் பாடல்கள் என்ற நிகழ்ச்சிக்கு அங்கீகாரம் வழங்கினார். அன்றைய காலத்தில் ஈழத்து ரத்தினம் எழுதிய அனேக பாடல்களே பாடப்பட்டன. ஈழத்து ரத்தினம் தென்னிந்தியாவின் தமிழ் சினிமாவுக்கும் பாடல் எழுதியதாக ஞாபகம். படத்தின் பெயர் ஞாபகத்தில் இல்லை. மெல்லிசைப் பாடகராகத் தெரிவுசெய்யப்பட்ட முதல் கலைஞர் தானென பாடகர் முத்தழகு கூறுகிறார். மெல்லிசைப்பாடலின் பிதாமகனென ‘பரா’ என்றழைக்கப்பட்ட திரு. ளு. மு. பரராஜசிங்கம் பெயர் பெறுகிறார். இலங்கை வானொலியில் அறிவிப் பாளராகக் கடமை புரிந்த பரா அவர்கள் இயற்கையான இசைஞானம் மிக்கவர். பரா பற்றிய இன்னொரு தகவலையும் சொல்லி வைக்க வேண்டும். பராவும் இவரது சகோதரர் னுச. மகேஸ்வரனும் ஒரு காலத்தில் இசைக்கச்சேரிகள் செய்தார்களென்ற தகவலை மூத்த இலக்கிய ஆர்வலரான த. இராஜகோபாலன் சொல்லக் கேள்விப்பட்டேன். பராவின் இனிமையான குரலும் இசைஞானமும் பராவை நல்ல தொரு மெல்லிசைப்பாடகனாக்கியது.
இலங்கை வானொலியின் இசைப் பகுதியில் சேவையாற்றிய பலர் இசையமைத்து மெல்லிசைப் பாடல்கள் வெளிவந்தன. இசையமைப்பாளர்களாக ஆரம்பத்தில் ஆ. முத்துசாமி, ரொக்சாமி, லத்தீப், வி.ஏ. பிச்சையப்பா கண்ணன் – நேசம் ஆகியோர் இசையமைத்த பாடல்களே ஒலிபரப்பப்பட்டன. ஆரம்பத்தில் பாடல்கள் வெளிவந்தபோது பல விமர்சனங்கள் வந்தன. இன்று இருக்கும் கேள்வியைத்தான் அன்றும் கேட்டார்கள். இந்தியாவின் பாடல்களோடு நெருங்குமா? இசைகள் ஏதோ தகரத்தில் அடிப்பதாக ஏளனம் பண்ணினார்கள். யார் கேள்விகளைக் கேட்டாலும் மெல்லிசையை ரசிப்பதற்கென்று ஒரு சிறு கூட்டம் இருந்ததை மறுப்பதற்கில்லை. நம்நாட்டு பாடல்கள் ஒலிபரப்பும்போது நான் வானொலிக்கு கிட்டச் சென்று விடுவேன். எனது வீட்டிலே “மெல்லிசைப்பாடல்” நடக்குதென்று சொல்வார்கள். இந்தப் பாடல்களை நான் திருமணமாகி பிள்ளைகள் பிறந்த பின்பும் ஆர்வமாக ரசித்திருக்கின்றேன். இந்த மெல்லிசைப் பாடல்கள் பற்றி எனக்கு பேசிக்கொள்வதற்கு ஒரு ரசிகன் இருந்தார். அவர் பராவின் நல்ல நண்பனாவார். அவர் சட்டத்தரணி செ. பேரின்ப நாயகம். அவர் நல்ல இசை ரசிகன். அவரும் சில பாடல்கள் ஒலிப்பதிவு செய்து வைத்திருந்தார். அதனால் இருவரும் பேசி மகிழ்வோம். அவரிடம் இன்றும் ஒலி நாடாக்கள் இருக்கின்றன.
நம்நாட்டு கவிஞர்கள் பலரது பாடல்கள் இசையமைத்து பாடப்பட்டன. ஈழத்து ரத்தினம், சில்லையூர் செல்வராஜன், பா. சத்தியசீலன், அல்வைச்சுந்தரன், அங்கையன் கைலாசநாதன், பளீல்காரியப்பர் ஆகியோரே நினைவில் வருகின்றனர். நம் நாட்டு சினிமாப் பாடல்களும் மெல்லிசைப்பாடல்களுக்குள் அடக்கப்பட்டு வானொலியில் ஒலிபரப்பப்பட்டு வந்தன. அதனால் தென்னிந்தியப் பாடல்களுடன் நமது பாடல்கள் இணையாகுமா என்று கேட்டதில் வியப்பில்லைத் தான்! பாடல்களை பதிவு செய்வதிலே ஆரம்பித்த நமது கலைஞர்களுக்கு நல்ல பக்கவாத்தியங்கள் இருக்கவில்லை. பழைய வாத்தியக்கருவிகளுடன், சிங்கள தமிழ் கலைஞர்களுடன் செய்ய வேண்டிய சூழ்நிலை. கலையகத்துள் குறிப்பிட்ட நேரத்துள் ஒத்திகை, ஒலிப்பதிவு செய்யவேண்டுமென்று தகவல்களை வானொலி நிகழ்ச்சிகளுக்கு நானும் சென்று வந்தபின்பே நமது கலைஞர்களுக்கு இருந்த தடைகளை அறியமுடிந்தது.
ஆரம்பத்தில் கோகிலா,சுபத்திரை, அம்பிகா தாமோதரம், முல்லைச் சகோதரிகள் பார்வதி சிவபாதம் என்று இன்னும் பலரும்; பரா, குலசீல நாதன், அருமைநாயகம், சந்திரசேகரன், முத்தழகு, கணபதிப்பிள்ளை, சத்தியமூர்த்தி என்று இன்னும் பலரும் பாடக்கேட்டுள்ளேன். பாடல்கள் மனதுக்கு மகிழ்வைத்தந்தன. பராவின் பாடல்களான "கங்கையாளே", "சந்தன மேடையின் நிலவினிலே". "அழகான ஒரு சோடிக்கண்கள்", குல சீல நாதனின் "ஞாயிறென வந்தாள், ஈழத்திரு நாடே "என்று பாடல்கள் வரும். என். சண்முகலிங்கனின் பல பாடல்களை பராவும், குலசீலநாதனும் பாடியுள்ளார்கள். இதேவேளை சில்லையூரானின் பாடல்களும் பராவையும் குலசீலநாதனையும் உச்சத்துக்கு கொண்டு சென்றன. பளீல் காரியப்பரின் “அழகான ஒரு சோடிக்கண்கள்” என்ற பாடலும் ஒரு முத்திரை பதித்த பாடலாகும். சில்லை யூரானின் கவித்திறனுக்கு “ஞாயிறென வந்தாள்” என்ற பாடல் பெரும் புகழ்சேர்க்கிறது. கிழமைகளையும், மாதங்களையும் வைத்து மிக அழகாக வடித்த பாடலாகும். அக்கவிதையின் உயிர்த்துடிப்பு சில்லையூரின் வாயால் வரும்போது இன்னும் மெருகுபெறுகிறது. (சில்லையூரின் கவிதைச் சிமிழ்) முத்தழகு பல பாடல்கள் பாடினாலும் “எண்ணங்களாலே என்ற பாடலே நினைவில் வருகிறது. அப்பாடல் “அனுராகம்” என்ற படப்பாடலாகும்.
கோகிலா சுபத்திரா சகோதரிகளும் மனதுக்கினிய பாடல்களைப் பாடியவர்களாவர். ‘கங்கையாளே’ என்ற பாடலிலும் இவர்களின் பங்களிப்பு இருந்ததாக எண்ணுகிறேன். அம்பிகா தாமோதரம் அவர்கள் இசைப்பேரரசு சண்முகரத்தினத்தின் இசையமைப்பில் பல பாடல்களை மெல்லிசை என்று வரும் முன் பாடியுள்ளார். இனிமையான குரல்; அடக்கமான ஏற்ற இறக்கங்களுடன் அவரது பாடல்கள் அமைந்திருக்கும். “மாணிக்கத் தேரிலே மயில் வந்தது மயிலாசனத்திலே மயில் வந்தது” என்ற பாடலையும் அவர் பாடியிருந்தார். இதன் பின் இப்பாடலை வேறொரு மெட்டமைப்பில் பாடகர் அமுதன் அண்ணாமலை பாடிப் புகழ் கொண்டார். வேல்விழா நிகழ்வுகள், திருவிழாக்களிலும் இப்பாடலையும் அண்ணாமலை பாடுவார். இவரது இப்பாடலுக்கு பெருமதிப்பு இருந்து வந்தது. முள்ளியவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட முல்லைச் சகோதரிகளின் குரலும் இனிமையானது. இவர்களது பாடல்கள் அனேகமாக அல்வைச்சுந்தரனின் கவிதை வரிகளையே பாடிக் கொண்டிருந்தது. தைதை யெனதைமகளும் வந்தாள், பாடு நண்பா பரிசுதரும்பூமி என்ற பாடல்களும், இன்றோர் புதிய தினம் எங்கும் புதுமை மணம் ஆகிய பாடல்களும் ஞாபகத்தில் வருகின்றன. மெல்லிசைப்பாடல்கள் பற்றிக் குறிப்பிடுகையில் அல்வைச் சுந்தரன் பற்றிய தகவலையும் கூறவேண்டும். அல்வாயைப் பிறப்பிடமாகக் கொண்ட த. சுந்தரலிங்கம், நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தின் உயர்தர வகுப்புச் சித்தியடைந்தவர். பண்டிதர் வீரகத்தியிடம் தமிழ் இலக்கணம் கற்றமையால் மரபுக் கவிதைகள் எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். இவரைப் போன்றே கருணை யோகன் என்ற கலாநிதி செ. யோகராஜாவும் நல்ல கவிதைகளைப் படைத்தவர். வடமராட்சியில் அல்வைச்சுந்தரன், கொற்றை பி. கிருஷ்ணானந்தன், நெல்லை நடேஷ், கோவி நேசன் ஆகியோரும் நானும் பல கவியரங்குகளில் பங்கேற்றுள்ளோம். அல்வைச் சுந்தரன் ஆசிரியராகி எட்டியாந் தோட்டையில் சேவையாற்றுகிறார். இன்று கவிதையை மறந்து ஒரு புகைப்படக் கலைஞராகவே பிரபல்யம் பெற்றுள்ளார்.
மெல்லிசைப் பாடகர்கள், கவிஞர்கள், இசையமைப்பாளர்கள் என்று பலர் நம் நாட்டுப் பாடல்களுக்குள் பங்களிப்பு செய்துள்ளனர். அதற்காக எல்லோரையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் முடியவில்லை. தங்களைக் கூறவில்லை என்று யாரும் எண்ணவும் தேவையில்லை. ஏனெனில் பாடல்கள் வரும் போது வானொலி, தொலைக்காட்சியில் அவர்களது பெயரும் வந்து கொண்டு தானிருக்கும். அதற்காக யாரும் கவலைப்படத் தேவையில்லை. மெல்லிசைப் பாடல்களுள் “அழகுநிலாவானத்திலே பவனி வரும் வேளையிலே” என்ற பாடலும் இனிய சுகத்தை தரும் பாடலாகும். இப்பாடலைப் படியவர் மு. செ. விவேகானந்தன் என்பவராவார். முத்து சாமியின் இசையில் மண்டூர் அசோகா எழுதிய பாடலென எண்ணுகிறேன். இப்பாடலும் மிகவும் பிரபல்யம் பெற்ற பாடலாகும். இந்த மெல்லிசை வட்டத்துக்குள் பலபெண்பாடகிகளும் உள்ளே நுழைந்தனர். சக்திதேவி குருநாதபிள்ளை, அருந்ததி ஸ்ரீரங்கநாதன், புஸ்பாராஜசூரியர், ஜெகதேவி விக்னேஸ்வரன், வனஜா ஸ்ரீனிவாசன், ஜனதாசின்னப்பு, திவ்யமலர் ஆகியோரையும் குறிப்பிடலாம். அருந்ததியின் பாடல்கள் நன்றாகத்தானிருக்கின்றன. என்றா லும் இவரது குரலும் சகோதரியான அம்பிகாவின் குரலும் சிலவேளை ஒரே மாதிரியிருப்பதை அவதானிக்கலாம்.
சில்லையூரானின் “சிக்கனமே சிறந்த செல்வமடி” என்ற பாடலை யார் பாடினார்கள் என்ற கேள்வி என்னுள் எழுகிறது. அருந்ததியின் புதல்வன் சாரங்கன் ஸ்ரீரங்கநாதனும் பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். கண்ணன் – நேசம் என்ற இசையமைப்பாளர்கள் இலங்கையின் தமிழ் சினிமாவுக்கும் பங்களிப்பு செய்துள்ளனர். கண்ணன் இன்றும் யாழ்ப் பாணத்தில் பல பாடல்களுக்கு இசையமைத்து இசைத் தட்டுக்களாக வெளிக்கொணர்ந்துள்ளார். கண்ணன் – நேசம் இசையமைப்பில் ‘புதுறோஜா மலரே’ என்ற பாடலை இசைத்தென்றல் பாக்கியராஜா தொலைக்காட்சியில் பாடியிருந்தார். அது வானொலியிலும் ஒலிபரப்பாகி இருந்தது. இப்பாடலை ஷெல்லிதாசன் எழுதியிருந்தார். ஷெல்லிதாசன் பல புதுக்கவிதைகளை எழுதியவர். இப்போ எழுதாமல் ஓய்ந்துவிட்டார். புதுறோஜா மலரே என்ற பாடலையும் மௌனகுரு
எழுதிய சின்னச் சின்ன குருவிகள் என்ற பாடலையும் எனது மூத்த மகனுக்கு பாடிக்காட்டுவேன். அவரும் பாடிப் பாடி சிறுவயதில் தூங்கிக்கொள்வார். இப்பாடல்களை எனது மகன் வளர்ந்த பின்பும் பாடிக்காட்டுவான். கால நிகழ்வுகளால் மௌனகுரு எழுதிய அந்தப் பாடல் ஒலிபரப்ப தடையாகிவிட்டது.
“நாளை இந்த ஈழ நாட்டை நடத்தப்போகும் குருவிகள்” என்பது தான் அந்தவரிகள். இந்த வரியை புரியாததினால் இப்பாட்டை நிறுத்தி விட்டார்கள். அமுதன் அண்ணாமலையின் மண்குடிசை என்வீடு மாளிகைதான் என்மனசு என்ற பாடலும் முத்தமிழ் முருகனுக்கு மூன்று தலம் என்ற பாடலும் அண்ணாமலையின் பாடல்களுள் பெயர் பெற்றவை. கதிர் சுந்தரலிங்கம், அன்சார் ஆகியோரது பாடல்களும் நினைவில் வருகின்றன.
“அழகான பாட்டொன்று பாடாய்” என்ற பாடல் ‘அரங்கேற்றம்’ நிகழ்ச்சியில் பாடிய N. கிருஷ்ணனின் முதலாவது மெல்லிசைப் பாடலாகவும் இடம்பெற்றது. இவர் அதிகம் பாடலைப்பாடவில்லையென்றாலும் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் பாராட்டுப் பெற்ற வையாக அமைந்தன. இவர் கலாவதியுடன் பாடிய சொல்லத்தான் நானும் எண்ணித்தான் நாளும் என்ற பாடல் மறக்க முடியாத பாடலாகும். இப்பாடலுக்கு திருமலை பத்மநாதன் இசையமைக்க மு.மு. மதிவதனன் பாடலை யாத்துள்ளார். கலாவதி ஈழத்து மெல்லிசைத் துறையில் மட்டுமல்ல; சிங்களப் பாடல்களையும் பாடியுள்ளார். அதே போன்று முத்தழகுவும் சிங்களத்தில் பல பாடல்களை பாடியுள்ளார்.முத்துசாமிமாஸ்ரரின் இசையில் பாட ஆரம்பித்த N. ரகுநாதன் அவர்கள் முத்துசாமி யின் மகன் மோகன்ராஜ் அவர்களின் இசையிலும் பாடியுள்ளார். பூச்சூடும் நேரம் வந்தாச்சு, நினைப்பது எல்லாம் நடக்குது என்ற நினைவினில் மயங்காதே என்ற பாடலும், மாத்தளை முத்துமாரியம்மன் பற்றிய பாடல்களை ஆ.லு.செல்வராஜாவின் இசையிலும் பாடி தனக்கென ஒரு இடத்தை பதித்துக் கொண்டார். வானொலியில் இசைக்கச்சேரி செய்யும் கலைஞரான இவரது மெல்லிசைப் பாடல்கள் தனித்து வமானது தான். அடுத்து சத்தியமூர்த்தி என்ற பாடகன் ஒரு சங்கீதக் கலைஞனோவென எண்ணத் தோன்றுகிறது. அவர் பாடிய “ஓ வண்டிக்காரர்” என்ற பாடல் நீலாவணனை நினைவுபடுத்திக்கொள்கிறது. சங்கீத ஞானம் கொண்ட கலைஞனாக சத்தியமூர்த்தியை பதிவுசெய்கிறது.
மெல்லிசைப்பாடல்களுக்கு முன்பு பொப்பிசைப்பாடல்கள் வானொலியிலும், அரங்குகளிலும் வேகமாக வந்து கொண்டிருந்தவேளை பொப்பிசைக் கலைஞர்கள் பைலா ஆட்டப் பாடல்களை பாடிக்கொண்டிருந்தார்கள். மெல்லிசைப் பாடல்கள் புகுந்தவேளை வானொலியில் கடமையாற்றிய ளு.ராமச்சந்திரன் ஏ.ஈ. மனோகரன் ஆகியோரும் பல பாடல்களை பாடியிருந்தனர். சங்கீதபூஷணம் ஆ. யு. குலசீல நாதன் அவர்களே முதலில் மெல்லிசைப் பாடல்களை பாடியிருந்தார். இதன் பின் சங்கீத பூஷணங்களான திலகநாயகம்போல், பத்மலிங்கம் ஆகியோரும் மெல்லிசைப் பாடல்களை பாடியிருந்தனர். திலகநாயகம் போல் பாடிய நித்திரையில் தூங்கும் நித்திலமே வாராய் என்ற பாடல் இன்றும் காதில் வந்து ஒலிக்கிறது. ளு. பத்மலிங்கத்தின் “பாட்டுக்கு நீயொருகம்பன் என்ற பாடலும். ராமமூர்த்தியின் இசையிலமைந்த “உச்சி வெயில் காட்டினுள்ளே” என்ற பாடலும் பிரசித்திபெற்றவை.
ஒரு காலகட்டத்தில் மெல்லிசைப்பாடல்களை இந்தியக் கலைஞர்களான ஜொலி ஏபிரகாம், ரி .எம் .எஸ். இன் புதல்வர் செல்வகுமாரும் பாடியிருந்தனர். அப்போது ஈழத்தின் மெல்லிசையா? இந்தியாவின் மெல்லிசையா எனக் கேட்டனர். ராமமூர்த்தி இசையமைக்கலாமென்றால் இந்தியக் கலைஞர்கள் பாடக்கூடாதா? என்ற கேள்வி மட்டும் எழவில்லை. ஏனெனில் இவர்கள் இலங்கை வந்தபோது தற்செயலாக பங்குபற்றிய நிகழ்வாகும். ஆனால் ஈழத்துப் பாடல் என்ற பெயர் அழிந்து மெல்லிசைப்பாடலென்ற பெயர் நிரந்தரமானது. திருமதி பார்வதி சிவபாதம் என்ற பாடகி ஆரம்பகாலத்தில் பல பாடல்களை பாடியவர். இவர் பாடிய “மல்லிகை பூத்த பந்தலில்” என்ற பாடல் இன்றும் நினைவில் நிற்கிறது. மெல்லிசைப் பாடகர்களுக்கான தேர்வு காலத்திற்கு காலம் நடைபெற்று வந்தது. இதில் பல கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழில் பாடவல்ல சுஜாதா அத்த நாயக்கா சந்திரிகா டீ அல்விஸ் (பின்னாளில் ஸ்ரீவர்த்தனா) ஆகியோரும் பாடலைப் பாடினார்கள். சந்திரிகா பாடிய “ஆடி வரும் தென்றலே பாட்டுப்பாடவா!” என்ற பாடல் மனதில் பதிந்திருந்தது. இப்பாடல் சிங்களப் பாடலாகவும் மொழிமாற்றம் செய்யப் பட்டிருந்தது. சில சிங்கள இசையமைப் பாளர்களும் மெல்லிசைப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர் என்பதையும் குறிப்பிட் டாகவேண்டும். அனேகமாக ரூபவாஹினியில் தான் இது நடந்தது.
1977 இன வன்செயலின் பின்பு சுதந்திரன் பத்திரிகையில் ஒரு கேலிச்சித்திரம் வந்திருந்தது. தங்கரதம் போலே பொங்கி வரும் மலரே; எந்தன் ஈழநாட்டை பார்த்தாயா? சிங்களமும் தமிழும் சேர்ந்து நடம்புரியும் மங்காத காட்சியில் பூத்தாயா? என்ற மெல்லிசைப் பாடலை எழுதி தமிழர்களை சிங்களவர்கள் பஸ்வண்டியில் இறக்கி கொலை புரிவது போன்ற கேலிச் சித்திரம். இந்தப்பாடல் முன்பு வானொலியில் ஒலிபரப்பப்பட்டு வந்தது. மெல்லிசைப் பாடலும் கேலிச்சித்திரத்திற்கு பயன்பட்டது என்பது பலருக்கு தெரியாத விடயம்.
மெல்லிசைப்பாடல்களுக்கு ரூபவாஹினியும் தனது பங்களிப்பை வழங்கி யிருந்தது. ஜெகதீசன், நிலாமதி, ஸ்ரீதர் பிச்சையப்பா, மகிந்தகுமார், கணேஸ்வரன், ராணியோசெப் என்று ஒரு கூட்டமே இருந்தது. இங்கும் அருணா செல்லத்துரை அவர்கள் தனது பங்களிப்பை வழங்கியிருந்தார்.உதயகீதம் என்ற நிகழ்ச்சியை தயாரித்து வளர்ந்து வரும் பாடகர்களை பாட வைத்தார். வி .திவ்யராஜன், ஜெயபாரதிதாசான், விஜயரத்தினம், யாதவன், மொறின் ஜெனற் போன்றவர்கள் இதனூடாக பாடவந்தவர்களென எண்ணுகிறேன். மகேந்திரன் என்பவர் இசையமைத்து நிகழ்வை ஒருங்கிணைத்தார். பல பாடகர்களின் பெயர்களை குறிப்பிட்ட நான் ஜோசப் ராஜேந்திரனை மறந்திருந்தால் அது பெருந்தவறாகும். ஏனென்றால் இவரும் ஒரு ஆரம்பகால பாடகன், பரா, குலசீலநாதன், ஜோசப் ராஜேந்திரன் ஆகியோர் முக்கியமானவர்கள். ஜோசப் ராஜேந்திரனின் பாடல்கள் மிகவும் இனிமையானவை. இவர் நவாலியூர் செல்வத்துரையின் ‘காத்திருப்பேன் உனக்காக’ என்ற படத்திலும் பின்னணி பாடியுள்ளார். அடுத்து பொன் சுபாஷ் சந்திரன் பாடிய திருமலையில் ஒரு நாள் திருமணம் நடந்ததுவாம். என்ற பாடலும் இன்னும் சில பாடல்களும் ஞாபகத்தில் வருகின்றன. மகிந்தகுமார் ஒரு சிறந்த பாடகர். அவர் பாடிய “கற்பனை செய்வதால் கோடி சுகம்” என்ற பாடலை மிகவும் விரும்பிக் கேட்பேன். காரணம் இந்தப்பாடலை எழுதியவரும் சில்லை யூரான்தான்! அவரது கவிதைகள், பாடல்களை ரசிப்பதிலே அலாதிப்பிரியம் கொண்டவன் நான். சில்லையூரானிடம் இருந்த சிறப்புகள் எல்லோருக்கும் கிடைக்காது. அது அவருக்கு ஒரு கொடை. மகிந்தகுமார் பாடிய அந்தப்பாடல் சில்லையூரான் இறப்பதற்கு மூன்று வருடங் களுக்கு முன்பு எழுதியதாக இருக்கலாம். பல கவிஞர்கள் மெல்லிசை மூலம் பாடலாசிரியர்களாக வந்தனர். மூத்த கவிஞர்களுக்கு பின்பு வந்தவர்களில் ஏ. ஜெகதீசனின் பாடல்வரிகள் சிறந்தவை. வலுமென்மையாக காதலையும் இயற்கையையும் வைத்து கச்சிதமாக எழுதும் திறன் கொண்டவர். மரபு, ஓசையோடு பாடலெழுதிய கவிஞர்களுக்கெல்லாம் என்னாலும் பாடலெழுத முடியுமென ஒரு புதுக்கவிஞரும் புறப்பட்டார். புதுமைக்கவியென்றும் இவரைக் குறிப்பிடலாம். அவர்தான் மேமன் கவியாகும். இவரது பாடல்கள் வானொலி தொலைக்காட்சி களில் பார்த்தும் கேட்டுமுள்ளேன். இவருடைய கவிதைகள் சில புரியாவிட்டாலும் மெல்லிசைப் பாடல் கவிவரிகள் ரசிக்கும் படியாக இருக்கிறது. அந்த வகையில் ‘கவிபாய்’ கலக்கி விட்டாரென்றே கூறவேண்டும்.
ச. ஷஜகான் (சிவகுமார்) பற்றி செய்திகள் வந்துகொண்டிருந்தன. அவருடைய பாடல் அல்பம் வெளிவந்ததாக அறிந்தேன். வானொலி தொலைக்காட்சி யென்றுவிட்டு வைக்காதவர். நல்ல குரல் வளம் மிக்கவர். பாரதியார் வேடமிட்டு ஒரு மெல்லிசைப்பாடலைப் பாட பார்த்துள்ளேன். அவரது மென்மையான குரலிலே எனக்கு கூடிய அன்பு! அப்சராஸ் இசையிலும் பாடியவர். கவிஞர் ‘கனிவுமதி’ இசைஅல்பம் வெளியீட்டு விழாவில் மெல்லிசை பற்றி ஏதோ பேசியிருந்தார். முதல் பாடல்களை ரசித்துக் கேட்க வேண்டும். ஆ. மோகன்ராஜ் அக்னி சிவகுமார், நிலுஷ்ஷி ஆகியோரும் மிகவும் சிறந்த மெல்லிசைப் பாடல் களைப் பாடியுள்ளனர். சில பாடல்களை சிவகுமார் இசையமைத்துள்ளார். எத்தனையோ நல்ல பாடகர்கள் இருக்கிறார்கள். நீதிராஜசர்மா, கலைக்கமல், ஆகிய கலைஞர்களும் மறக்க முடியாதவர்கள். கவிஞர் ர்.ஆ. ஷம்ஸ் நல்லபாடகர், பாடலாசிரியர். இவரது “வெண்புறாவே” பாடல் காலத்தால் அழியாத கவிச்சித்திரமாய் விளங்குகிறது. இன்னும் இப்பாடலை நினைத்து கனவு காணுகின்றோம். விடிவு காணவேண்டும் என்ற ஆசை!
சினிமாப்பாடல்கள் பாடினால் மெல்லிசை பாடமுடியுமென எண்ணியவர்கள் பலர். அப்படிப் பாடப்போய் சந்தர்ப்பம் கிடைக்காமல் போனவர் களும் உளர். இன்னும் சிலர் சங்கீதத்தை பாடமாகக்கற்று டிப்ளோமாபட்டம் பெற்று வானொலிக்கு கச்சேரி செய்யமுடியாதவர் களாகவும் இருந்தனர். இவர்களுக்கெல்லாம் மெல்லிசைப்பாடல் கைகொடுத்தது. தங்கள் குரலை மெல்லிசையூடாக வானொலியில் ஒலிபரப்பி வைத்தனர். மெல்லிசை என்பது இலகு சங்கீதம். இந்த மெல்லிசையை நம் தமிழரின் ஒரு இசை வடிவமாக பதிக்க வேண்டுமென்ற அவாவே இருந்தது. அதற்காகவே மெல்லிசை என்ற பெயரோடு மலர்ந்தது. ஆனால் சில இசையமைப்பாளர்களும் பாடலாசிரியர்களும் மெட்டுக்குப் பாட்டுபோட்டு பாட்டுவரிகளை நீட்டி வைத்தனர். இதனை இந்தியச் சினிமாப்பாடல்களின் வரம்பிற்கு கொண்டுவரமுயன்றனர். ஆனால் அது வெற்றியளிக்காமலே போய்விட்டது. பாடலாசிரியர்கள் இயற்கையைப் பாடுகின்றேன் என்று பொருத்தமற்றவரிகளை வலிய இழுத்துபோட்டு பாடல்களை கீழே விழுத்தியுமுள்ளனர்.மெல்லிசைத்துறைக்குள்
காரை செ. சுந்தரம்பிள்ளை, செ. குணரத்தினம், அம்பி போன்ற மூத்த கவிஞர்களும், அன்பு முகைதீன், கார்மேகம் நந்தா, அக்கரைப்பாக்கியன், மண்டூர் அசோகா, இறைதாசன், ஏழில்வேந்தன் இன்னும் பலர் பாடல்களை எழுதியுள்ளனர். விபரமாக எழுதுவதெனில் எல்லாப் பாடல்களையும் கேட்டபின்பு ஒரு ஆய்வு செய்தால் மெல்லிசையின் வளர்ச்சி பற்றி அறிவதற்கு ஏதுவாக அமையும். இங்கு நினைவில் நின்ற பாடல்களையும், பாடகர்களையும், கவிஞர்களையுமே எழுதியுள்ளேன். இது பற்றிய சிறந்த ஆய்வு வந்தால் வரவேற்கக் கூடிய விடயமாகும். மெல்லிசைக்கு இலங்கை வானொலியும், ரூப
வாஹினியும் கூடுதலான வாய்ப்பை வழங்க முன் வரவேண்டும். அப்போதுதான் நமக்கென்று ஒரு இசைவடிவம் நிறைவு காணும்.

Sunday, May 16, 2010

மக்கள் களரிJanakaraliya (ஜனகரலிய)


மக்கள் ளரி

Theatre Of the People
(TOP)
Voyage to North!

‘Janakaraliya’ Mobile Theatre
Group will be performing their plays at 10 schools in
Mannar, Vankalai, Nanattan, Murunkan, Pesalai, Thlaimannar in Mannar District and
Madukanda, Nelukkulam, Periya Ulukkulam in Vavuniya District
as a part of a 12 day tour in the Northern Province
from the 16th May to 27th May 2010.
They will also conduct Theatre Arts Workshops for the students and the Teachers of these schools.

A special performance of the play ‘Charandas’ will be held at the Vavunia Town Hall
on the 25th of May 2010 under the patronage of
"Circle of Arts and Literary Friends, Vavuniya"
Janakaraliya plays scheduled to perform in Schools
from 8.00am to 9.00am
Soru Evilla (Sinhala) or திருடன் வந்தான் (தமிழ் ) children's plays for primary students
from 10.00am to 01.00pm
Seethambarapata and antaraamal (Sinhala) or Mayapattadai and
எரிக்கலம் பூ (தமிழ் ) for other students
from 7.00 pm to 9.30pm
The play "Charandas" in Sinhala or Tamil on the School Grounds, open air for common public
All the performances are free of charge!

(Our web page : www.janakaraliya.org will be updated after 01st of June 2010)

Thursday, May 13, 2010

Shadows of Silence

Sri Lankas direktør »Shadows of Silence« vil Cannes
Paris-baserede Sri Lankas direktør Pradeepan Raveendran film
'Shadows of Silence ", der er opført som en fransk løsning, vil blive fremlagt i Directors' Fortnight afsnittet den 63. Cannes Film Festival 12-23 maj.
»Shadows of Silence 'er beskrevet som om den" mareridt og realiteter for en deprimeret person i eksil «. Han har instrueret, produceret og skrevet denne 11-minutter fiction film selv.
Raveendran tidligere film 'A Mango Tree i Front Yard ", også en fransk løsning, var valgt af Berlin Film Festival i 2009, og nomineret til en Golden Bear for bedste kortfilm. Det er blevet screenet i hele verden, herunder Den Internationale Film Festival i Los Angeles og
Museum of Modern Art (MOMA), New York.

Tuesday, May 11, 2010


பிரகீத்திற்காக எழுப்பப்படும் சந்தியாவின் குரல்
-சுனந்ததேசப்பிரிய-
இலங்கையின் ஏழாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டம் ஆரம்பமாகிய கடந்த ஏப்ரல் 22ம் திகதி தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களை ஏற்றிய ஆடம்பர வாகனங்களை நோக்கி ஓடிய பெண் ஒருவரும், ஆண் பிள்ளை ஒருவரும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தனர். அந்தப் பெண் சந்தியா ஹெக்நேலியகொடவாகும். இவர்கள் இருவரும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன, அதாவது கடந்த ஜனவரி 24ம் திகதி கொழும்பில் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்நேலியகொடவைத் தேடித் தருமாறு கோரும் துண்டுப் பிரசுரங்களையே விநியோகித்தனர். சந்தியா, பிரகீத்தின் மனைவியாவார். அந்த ஆண் குழந்தை பிரகீத்தின் மூத்த புதல்வர். கணவனையும், தந்தையையும் தேடி மனைவியும், மகனும் மேற்கொள்ளும் இந்த முயற்சி இலங்கையின் மனித அனர்த்தம் மாத்திரமல்லாது எதிர்பார்ப்பின் அடையாளமாகும்.

திருமணத்திற்கு முன்னர் பெண் உரிமை செயற்பாட்டாளராக பணியாற்றிய சந்தியா, கடந்த மூன்று மாதங்களாக காவல்துறை நிலையங்களுக்கும், அரசியல் வாதிகளிடமும் சென்று காணாமல் போன தனது கணவரைத் தேடிக் கொள்வதற்காக பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்தார்.

காணாமல் போன தனது கணவரைத் தேடி இந்தப் பெண் இரண்டு மகன்களுடன் முன்னெடுத்துவரும் இந்த முயற்சிகளுக்கு 100 நாட்கள் கடந்துள்ளன.

அதேபோல் மே மாதம் மூன்றாம் திகதி சர்வதேச ஊடக தினம் அனுஷ்டிக்கப்பட்டது. பிரகீத் குறித்து மறக்க இடமளிக்க முடியாது எனக் கூறும் சந்தியா, அவர் தற்போதும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறார் எனவும் அவரை விடுவித்துக் கொள்ள முடியும் எனவும் நம்பிக்கைக் கொண்டுள்ளார்.

இது சந்தியாவின் குரலாகும்! பிரகீத் இல்லாத வாழ்க்கை இருண்டு போயுள்ளது. பிரகீத் வெளியில் பேசாத பல விடயங்களை தனது குழந்தைகளுடன் பேசினார். இரண்டாவது மகன் தந்தை மீது அதிகம் அன்பு வைத்துள்ளார். அவர் மூத்த மகனுடன் அரசியல் பேசுவது போலவே கடந்த கால கதைகளையும் சொல்லிக் கொடுப்பார். அவர் இரவு நேரங்களில் தான் கணனியில் கட்டுரைகளை எழுதினார். கட்டுரைகளில் பிழையிருக்கிறதா எனப் பார்த்து திருத்துமாறு என்னிடம் அதிகாலையில் கூறுவார். பிரகீத் தகப்பன் போலவே கணவன் என்ற முறையில் மிகவும் சிறந்த நபராவார். பிரகீத் விரைவாக கேலிச் சித்திரங்களை வரைவார். அவர் கேலிச் சித்திரக் கண்காட்சியொன்றை நடத்த தயாராகி வந்தார். பிரகீத்தின் பெயரில் அந்தக் கண்காட்சியை நாம் விரைவில் நடத்துவோம். இதன்மூலம் மேலும் பலருக்கு பிரகீத்தை புரிந்துகொள்ள முடியும்.

எப்படி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரகீத் குறித்து கூறுவது என எண்ணிக் கொண்டிருந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகிங்கள் என சிறிதுங்க சகோதரர் கூறினார். தனியாக சென்று விநியோகித்தால் காவல்துறையினர் இடையூறு செய்யமாட்டார்கள் என அவர் கூறினார். நான் சிறிய கோரிக்கையொன்றை எழுதினேன். எனது மூத்த புதல்வர் அதனை ஆங்கிலத்தில் எழுதி தந்தையின் புகைப்படத்தை இணைத்து இரண்டு மொழிகளில் அதனை அச்சிட்டோம். இதனைத்தான் நாங்கள் அன்று விநியோகித்தோம்.

பிரகீத் காணாமல் போன மறுதினமான ஜனவரி 25ம் திகதி கொட்டாவ காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றபோது, அவர்கள் முறைப்பாட்டை எழுதமாட்டோம் எனக் கூறினார்கள். எனினும், நான் எப்படியாவது முறைப்பாட்டை செய்தேன். அன்றைய தினம் இரவு கொஸ்வத்த காவல்நிலையத்திலும் முறைப்பாடு செய்தேன். ஜனவரி 30ம் திகதி எமது பிராந்தியத்திற்குப் பொறுப்பான உதவிக் காவல்துறை அத்தியட்சகர் தேசபந்து தெனுவரவை சந்தித்தேன். மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முறையிடச் சென்றபோது அங்கிருந்த சமகி பெரேரா என்ற அதிகாரி இந்த ஆணைக்குழு காணாமல் போனவர்கள் குறித்த முறைப்பாட்டைப் பெற்றுக்கொள்ளும் இடமல்ல எனக் கூறினார். என்னுடன் சென்ற சட்டத்தரணி காரணமாகவே முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவினால், கொட்டாவ, கொஸ்வத்த, மிரிஹான காவல்துறை நிலைய அதிகாரிகளிடம் தகவல்களைக் கோரப்பட்டது. அனைத்துக் காவல்துறை அதிகாரிகளுமே விசாரணைகள் இன்னமும் முடிவடையவில்லை எனவும், இதனால் தகவல்களை வழங்க முடியாது எனக் கூறினர். இதனிடையே நான் அறிந்த அரசியல் தலைவர்களைச் சந்தித்தேன். பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்தேன். பிரகீத்தை தேடிக் கண்டுபிடிக்க உதவுமாறு நான் கோரினேன். சிலர் தைரியம் கோரினார்கள். சிலர் மனம் உடையும் படியான கதைகளைக் கூறினர். ஆபத்தில் விழுந்தால் மாத்திரமே மனிதர்களை அறிந்துகொள்ள முடியுமென்பதை நான் புரிந்துகொண்டேன்.

இதன்பின்னர் மிரிஹான காவல்துறையினர் விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து கடந்த இரண்டாம் திகதி நான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்றபோது அங்கிருந்த காவல்துறையினர் சோதிடம் பார்க்கவில்லையா எனக் கேட்டார். நான் சோதிடம் பார்த்தேன். அனைவரும் பிரகீத் உயிருடன் இருப்பதாகக் கூறினார்கள் என அந்தக் காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்தேன். என்ன செய்வது நாங்களும் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகிறோம் என அந்த அதிகாரி தெரிவித்தார். காவல்துறை அதிகாரிகளைப் போலவே ஊடகவத்துறை அமைச்சரும் பிரகீத் ஓரிரு நாட்களில் வருவார் என ஆரம்பத்திலிருந்தே பகிரங்கமாக கூறிவந்தனர்.

ஏப்ரல் மாதத்தின் முதல்வாரத்தில் கருத்து தெரிவித்த காவல்துறைப் பேச்சாளர், பிரகீத் குறித்து இண்டு வாரங்களில் சிறந்த தகவல் கிடைக்குமெனக் கூறினார். இன்னும் அவ்வாறான தகவல்கள் கிடைக்கவில்லை. பிரகீத் தம்புள்ளையில் இருப்பதாகக் கூறி அரசாங்கத்தின் தினமினப் பத்திரிகை, முகவரியோடு செய்தியொன்றை வெளியிட்டது. இதன்பின்னர் அந்தச் செய்தி குறித்து விசாரணை நடத்துமாறு நான் மிரிஹான, ஹோமாகம காவல்நிலையங்களுக்கும் மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் கடிதம் மூலம் கோரினேன். எனினும், அந்த கடிதங்களுக்கு எவ்வித பதில்களும் கிடைக்கவில்லை. செய்தியை வெளியிட்ட நபரும் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை

. பிரகீத் காணாமல் போவதற்கு முன்னர் அவரை வெளியில் வருமாறு எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பு குறித்து விசாரணை நடத்தப்படுகிறதா? இல்லையா? என்பதை அறிய முடியவில்லை. அந்த கையடக்கத் தொலைபேசியின் சிம் அட்டையில் அன்றைய தினம் பிரகீத்துடன் மாத்திரமே உரையாடப்பட்டுள்ளது. இதன்மூலம் அது திட்டமிட்டுச் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது. நான் காவல்துறை நிலையங்களுக்குச் சென்ற போது விவசாயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் எவரையாவது தெரியுமா என என்னிடம் கேட்டனர். குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரது செயலாளரே அவ்வாறு இருப்பதாக நான் கூறினேன். காணாமல் போவதற்கு நான்கு நாட்களுகு;கு முன்னர் பிரகீத் அவருடன் தொலைபேசியில் உரையாடியதாக நான் கூறினேன். அதன்பின்னர், பிரகீத் மிகவும் அச்சத்துடன் காணப்பட்டார்.

பிரகீத் காணாமல் போன பின்னர் அந்தச் செயலாளர் எமது தொலைபேசி அழைப்புக்களுக்கு பதிலளிப்பதில்லை. அவர் முன்னர் எமக்கு சிறந்த நண்பராக இருந்தார். தொலைபேசி அழைப்பு குறித்து காவல்துறையினர் அவரிடம் விசாரணையையும் நடத்தவில்லை. பிரகீத் ஓகஸ்ட் மாதம் கடத்தப்பட்டபோது அவரது நண்பரான ஆங்கில மொழி ஊடகவியலாளர் ஒருவர் தலையிட்டே அவரை விடுதலை செய்ததாக அந்தச் செயலாளர் அண்மையில் கூறியிருந்தார். இந்தக் கதையை தமிழ் அரசியல் கட்சியொன்றில் பணியாற்றும் பிரகீத்தின் மற்றுமொரு நண்பரும் கூறினார். இதுகுறித்து நான் அந்த ஆங்கிலமொழி ஊடகவியலாளரிடம் கேட்டேன். அவர் மதுபோதையில் கூறும் கதைகளை கவனத்தில் எடுக்க வேண்டாம் எனக் கூறினார்.

ஓகஸ்ட் மாதம் தன்னைக் கடத்திச் சென்ற குழுவினர் அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என பிரகீத் எண்ணினார், அவர் கடத்தப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தன்னைக் குறித்து பாதுகாப்புப் பிரிவினர் அதிக மதிப்பீடுகளைக் கொண்டிருப்பதாகக் கூறினார். இதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். அதேபோல், கவனமாகவும் இருந்தார். அரசியல் காரணங்களின் அடிப்படையில் பிரகீத் போன்று காணாமல் போனவர்களின் மனைவிமாரை இணைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்த எண்ணியுள்ளேன். இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கையில் தற்போது எவரும் இல்லை. இதன்காரணமாக நாங்கள் புதிதாக மேற்கொள்ளவுள்ளோம்.

மனித உரிமை என்ற விடயம் நாட்டில் இல்லை. ஐந்து அல்லது ஆறு பேர் மாத்திரமே உதவுவதற்காக இருக்கின்றனர். எமக்கு பத்துபேர் இருந்தால் போதும். பிரகீத் அனைத்துக் குழந்தைகளையும் நேசித்த மனிதர். சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைவரும் சமமானவர்கள் என அவர் எப்போதும் கூறுவார். யுத்தத்தில் மக்கள் கொல்லப்படும்போது பிரகீத் மிகவும் கவலையடைவார். எழுதவேண்டியதை எழுதி முடிக்க வேண்டும் என்ற பெரிய எதிர்பார்ப்பு அவரிடமிருந்தது. அதேபோல் கேலிச்சித்திர கண்காட்சியொன்றை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அவரிடம் இருந்தது. இவற்றைத் தான் பிரகீத் குறித்து கூறமுடியும். இந்த எதிர்பார்ப்புக்களை நாங்கள் இன்னும் கொண்டிருக்கிறோம். அந்த எதிர்பார்ப்பில் தான் நாங்கள் மூவரும் இன்று வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். பிரகீத் வருவார் என நாங்கள் இரவு பகலாக பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
நன்றி :gtn

மொஸ்கோ செஞ்சதுக்க அணிவகுப்பு 09.5.2010

Victory day parade - Red square Moscow - 9-5-2010
ஜேர்மனிய பாசிச நாசிகளை தோற்கடித்த செஞ்சேனைகளின் வெற்றி நாளை முன்னாள் சோவியத்தை சேர்ந்த நாடுகள் நினைவு கூர்ந்து மொஸ்கோ செஞ் சதுக்கத்தில் அணிவகுத்து நின்ற காட்சிப்படிமங்கள்.Saturday, May 08, 2010

Friday, May 07, 2010


இரண்டாம் அர்த்த வரிசையின் கதை - சல்மாவின் நாவலை முன்வைத்து
-எச் . முஜீப் . ரஹ்மான் -

1) ஹோமஸ் மங்க்ஸ் என்பவர் காஸ்டிரேஸன் காம்ப்ளக்ஸ் காரணமாகபெண்கள் தங்களை ஆண்மையிழந்தவர்களாக கருதுகின்றனர் என்று ஒருமுறைசொன்னார் இதை தான் லிங்க மையவாதம் என்கிறார் ஏனஸ்டுஜான்ஸ்.ஜூலியட் மிட்செல் தன்னுடைய உள பகுப்பாய்வும் பெண்ணியமும்என்ற கட்டுரையில் பிராய்டின் இந்த கருத்தை ஆதரிக்கிறார்.கீழ்படிந்துபோதல்(passive),சுய காதல் மேற்கொள்ளுதல்(narcissitic), தன்னை துன்புறுத்தும்கொடுமையில் இன்பம் காணுதல்(masochistic),ஆண் பிறப்புறுப்பு பொறாமை ஆகியகுணங்களை பெண்கள் இயல்பாக பெற்றவர்கள் என்ற கருதுகோள்பிராய்டுடையதாகும். லிங்கம் என்பதை அதிகாரத்தின் குறியீடு என்றுழாக்லக்கானும் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் பெண் என்ற சொல் ஒருகுறிப்பானாக(signifier) விளங்குகிறதேயன்றி உயிரியல் அடிப்படையில் அவள்பெண்பாலாக திகழ்கிறாள் என்பதால் அல்ல(women does not exit) என்கிறார்.பெண்என்று யாருமில்லை என்பது லக்கானின் அவிப்பிராயம்.

பெண் என்ற பொருளை விட அவளுக்கென்று அமைந்த குறிப்பான் மிகவும்ஆற்றல் வாய்ந்ததாகும் என்ற அரிச்சுவடியிலிருந்து பிராய்டு என்ற ஆணின்பார்வையை விளங்கி கொள்வதற்கு முன் அவர் சொன்ன மனச்சிக்கல்சல்மாவின் நாவலில் பதிவாகியுள்ளதா என்று பார்ப்போம்.இது ஒரு பெண்பிரதி.. ஜமிலாபீவி, சபியா, றைமா, சொஹ்ரா, ஆமினா, கதிஜா,மைமூன் என்றுபெரும்பாலான பெண்கள் கீழ்படிந்து போகுபவர்களாகவே இருக்கின்றனர்.

பிர்தவ்ஸ், வகிதா, ஆமினா போன்ற கதாபாத்திரங்கள் சுயகாதல்

மேற்கொள்ளுபவராக தங்கள் அழகு மேல் அதிதமான நம்பிக்கை கொள்பவராகஇருக்கின்றனர். மாரியாயி,சொஹ்ரா போன்றோர்கள் மசொஸ்டிகளாகஉள்ளனர்.வேறு சில பெண்கள் ஆண் மீது பொறாமை படும் குணம்கொண்டோராக உள்ளனர் என்று பிராய்டிய வாசிப்பின் மூலம் மனசிக்கல்உள்ளவர்களாக காணலாம்.1874 ல் ஊதரிங் ஹைட்ஸ் எழுதிய நாவல்பெண்களை முதன்மை படுத்தியது.அப்போது இயங்கு நான் என்ற சப்ஜக்ட் இன்பிராசஸ் பரவலாக பேசப்பட்டது.மேலும் அந்த நாவல் முதாளித்துவத்தின்பெண்ணுருவாக்க நாவல் என்றும் சொல்லப்பட்டது.ஜூலியா கிறிஸ்தவா அந்தநாவலை ஹிஸ்டிரியாக்களின் சொல்லாடல் என்று வர்ணித்தார்.

அந்தவகையில் பெண் உளவியலை பெருங்கதையாடலாக மாற்றியிருக்கும்சல்மாவின் நாவலை முதலாளித்துவ ஆண்வழிச்சமூகத்தின் கீழ் ஒரே சமயத்தில்உடன்படல்,மறுத்தல் என்கிற பெண்களின் பாலியல் அமைப்பு சார்ந்தஹிஸ்டிரியாக்கள் என்று சொல்லலாமா ?அப்படி சொல்வதற்கு முன்ஒருபெண்ணெழுத்தில் முழுமையான பெண்குரல் இருக்குமா என்றுயோசிக்கவேண்டும்.ஏனெனில் பெண்ணின் அனுபவங்களை பற்றி பேசும்பெண்ணில் ஆண்குறிமையபடுத்தப்பட்ட ஆண் உடல் மொழியாலேபேசவேண்டியிருக்கிறது. இதையே திருவிழா மனநிலை என்பார்பக்தின்.ஆண்குறி மையபடுத்தப்பட்ட மொழியின் நிபந்தனைக்குட்பட்டுஆண்தன்மையுடன் மொழிவழி நின்று ஆண் வழி சமூக அமைப்பு பற்றி வினாஎழுப்பும் போது சந்தேகமே வருகிறது. .ஜூலியா கிறிஸ்தவா அந்த நாவலைஹிஸ்டிரியாக்களின் சொல்லாடல் என்று வர்ணிக்க முக்கிய காரணமாகசொல்லும் விசயமே லிங்க மொழியில் நாவல் தொழிற்பட்டிருப்பதுதான்.

பெண்களின் உலகம் துன்பம்,துயரம்நிறைந்தது.மதம்,நிறுவனம்,திருமணம்,

திருமணவாழ்க்கை,வாழ்க்கை சிக்கல்கள் போன்றவை பெண் விருப்பின்றியேநிகழ்கிற விஷயங்கள் என்பன போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களின் பேச்சுகளுக்கிடையே எதார்த்தமாக பாலியல் ஊடாடுகிறது.ஆணின்பாலியல், உடல், அதிகாரம், அமைப்பு சட்டகங்கள் போன்றவைகேள்விகேட்கபடுகிறது என்று பெண்ணின் சார்பாக நாவல் இயங்கினாலும்ஆண்மதிபீடுகள் சார்ந்த ஆண்மைய சிந்தனைகளே பிரதியில் விமர்சனமாககேட்கிறது.

மைமூனின் மரணம்,பிர்தவ்சின் மரணம் போன்றவை ஆண்மைய சிந்தனைகளின்விளைவுகளாகும்.பல்வேறு விஷயங்கள் ஆணிய மொழியின் இன்னொருவெளிப்பாடு என்று சொல்வதைவிட நாவலின் மொழி கூட்டு நனவிலிநிலையிலும்,நனவிலி நிலையிலும் தொழிற்பட்டிருக்கிறது என்றுசொல்லலாம். கூட்டு நனவிலி என்பது பாரம்பரிய சக்தியால் உருவாகும் உளவியல் பண்பாகும். இது நம்பிக்கைகள்,கருத்துகள்,தொன்மங்கள்,மூலப்படிவங்களில் படிந்துள்ளனஎன்பார் சி.ஜி.யுங். கூட்டுநனவிலியில் குறியீடுகள்,படிமங்கள் முதலானவைமொழிவழி உட்காட்சியனுபவமாக படிகிறது.இவ்விதமானஉட்காட்சியனுபவங்களே ஆணியமொழியாக விளங்குவதால்இத்தொழிற்படலை நிகழ்த்திய சல்மாவின் நாவலும் கூட்டு நனவிலின்வெலிப்பாடாகிறது.

உளவியலின் அடிப்படையில் மனிதநேயம், அஃறிணை படுத்தல்(dehumanaization), பெண்சார்பு நிலை, தோல்வி,ஆக்கிரமிப்பு தன்மை,இரட்டை வாழ்க்கைபரிவுணர்வும், ஒத்துணர்வும்(sympathy and empathy),பொறாமை,எதிர்குரல் போன்றவை பெண் உளவியலாகயிருக்கிறதுசல்மா சொல்வது இதுதானா என்று பார்ப்போம். பெண்களின் இருப்பு(existence for others) பிறரை சார்ந்தே சார்பு நிலையில் உள்ளது. கூட்டு அனுபவங்களும் கூட்டுவாழ்வுமிக்க பெண்களுக்கு தனிவிருப்பங்களும், தனித் தேவைகளும்தனித்துவமும் மறுக்கப்படுகிறது.பிறருக்ககவே அவர்களது இருப்பு நிலைஉள்ளதாகவும் பிறராலேயே(exitance by others) அவர்களுக்கு இருப்புநிலைஉள்ளதாகவும் இருக்கிறது. ழீன் பாக்க்ர் மில்லரின் பெண்களின் உளவியலைநோக்கி என்ற நூலில் சொல்லபடும் விஷயமும் இதுதான்.பாவ்லர் என்பவர்பெண் பெற்றோராலும்,மற்றோராலும் ஆக்கநிலையிருத்தபடுகையில் அவர்கள்ஸ்டாரியோடைப் படிமங்களாகி உயிர்துடிப்பில்லாதவர்களாக தட்டைமனுஷிகளாக உருவாகிவிடுகின்றனர் என்பார். ராபியாவின் தாய் சொஹ்ராஆக்கநிலையிருத்தப்பட்டு அடக்கு முறைக்கு உள்ளாவதை காணலாம்.இதனால்அவளின் உள்ளார்ந்த சக்தி முடக்கப்பட்டு உயிரோட்டமின்றி காணப்படுகிறாள்.

யுங்கின் கூற்றுபடி ஆளுமைகளை பொருத்தவரையில் பெண்களின் தன்மைசற்று வித்தியாசமானது.நாவலில் வரும் பெண்பாத்திரங்களை பார்கிறபோதுஉதாரணமாக பிர்தவ்ஸ் அகநோக்கு(introverts) கொண்டவளாகஇருக்கிறாள்.தனக்கு தானே புலம்புவதும்,நொந்து கொள்வதும் வாழ்வில்வெறுப்பும் ,விரக்தியும்,வேதனையும் கொண்டவர்களாகவேபெரும்பான்மையான பெண்கள் விளங்குவது தற்செயலான நிகழ்வல்ல என்றேபடுகிறது. மேலும் புறவயப்பட்ட பெண்களும்(extroverts) காணப்படுகின்றனர்.பாத்திரங்களின்மனபாங்கினை(temperament),மனநிலையினை(attitude),திறனை(aptitude),பற்றார்வங்களை(sentiments) துல்லியமாக காணலாம். சல்மாவின் பெண்கள் உலகம் sentiments உடையவராகபுறச்சூழல்களின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி புறனதிப்புகளை(external values) தம்முடைய ஈகோவில் கட்டமைப்புக்குள் அகவயப்படுத்தி கொண்டுள்ளதால்இசுலாமிய வாழ்க்கைக்கு உட்பட்டவராகவே உள்ளனர்.

இனி நாவலி காணப்படும் பெண்களின் சூழல் பற்றி உளவியலடிப்படையில்நோக்கவேண்டியுள்ளது.மனிதர்களின் படிநிலைத்தேவைகள் (Hierarchy of needs) மாஸ்லோ கூறுவார்.அவை:

1) உடலியல் தேவைகள்(Biological Needs)

2) பாதுகாப்பு தேவைகள்(Safety and Security Needs)

3) அன்பு,உடைமை உணர்வு தேவைகள்( Love and belonging needs)

4) தன்மதிப்பு தேவைகள்(Self esteem needs)

5) தன்னையறிதலாகிய தேவைகள்(Self Actualization needs)

இதனடிப்படையில் பார்க்கும் போது சமூக,பொருளாதார,அரசியல் காரணிகளால்பெண்கள் முழுமையான ஆளுமை வளர்ச்சி பெறமுடியவில்லை.மேலும்பெண்களின் இயல்புகளை உளவியல் நோக்கில் பார்க்கும் போது கூட சிலஉண்மைகள் புலனாகிறது

1) தன் தேவைகளை குடும்பத்திலுள்ள பிறர் தேவைக்காக மாற்றிக்கொண்டுவாழுதல்(Need Transformation)

2) உறவு மோதல் (Inter-personal Conflict)

3) அகமன போராட்டம்(Intera Psychic conflict)

4) மனயிறுக்கம்

5) பயபதற்றம்(Anxiety)

6) மோதல் சூழல்(strategies of defence)

7) மனகட்டுப்பாடு(mental balance)

8) தனித்துவமான உணர்வையிழந்த பண்புடையவர்கள்

காரல் ஹார்னி எனும் பெண் உளவியலாளர் கூற்றுபடி தனித்துவஉணர்வையிழந்த இணக்கமான பண்புடையவர் மக்களை நோக்கி இயங்குவர்என்றும்,ஆக்கிரமிப்பு தன்மை வாய்ந்த தன்முனைப்புள்ள பழிவாங்கும்பண்புடையோர் மக்களுக்கு எதிராக இயங்குவார் என்றும் பற்றற்ற தன்மைவாய்ந்தோர் மக்களை விட்டு விலகி இயங்குவார் என்பது சல்மாவின் நாவலின்பொது செய்தியாகும்.எனவே உளவியல் வாசிப்பில் சல்மாவின் நாவல் தரும் சிலஉண்மைகளை பார்க்க வேண்டியிருக்கிறது.அதாவதுகருத்தியல்கள்,நம்பிக்கைகள் அடிப்படையில் அகவய நிலையில் (Subjective) ஒருநாவல் பிரதியை அணுக கூடாது என்பது தான்.

அதாவது

இது ஆண்களுக்கு எதிரான நாவல் அல்லது

இது மதத்திற்கு எதிரான நாவல் அல்லது

இது சமூகத்திற்கு எதிரான நாவல் என்பன போன்று.

2) அடுத்ததாக பெண்ணுடலை எழுதுதல் பற்றி பார்ப்போம்.ஹெலன் சிக்ஸிஎன்பவர் பெண்ணுடலையும், பெண் வித்தியாசங்களையும் மொழியில்,பிரதியில்ஏற்றிக்காட்டுதல் தான் பெண் உடலை எழுதுதல் என்றார்.ஜூலியாகிரிஸ்தவா,லூயிஸ் இரிகாரே, மோனிக் விட்டிங் இந்த ஆய்வை வளர்த்தனர்.

“ நான் தான் பிரபஞ்சத்தின் முழுமையான ,சுயகட்டுப்பாடுடைய மையம் என்றஆண் சொல்லுதலை மீறியிருக்கும் உலகத்தோடு மற்றவை என நான் கூறும்உலகம் என்னோடு தொடர்பு கொள்ளுவதால் தான் (ஆண்,தந்தை) அர்த்தம்பெறுகின்றன” என்பன போன்ற லிங்க சொல் மையத்தை(Phallogocentric) சிதைவாக்கம் செய்தனர்.ஆணாதிக்க இருமை எண்ணம் என்பதிற்க்கு பதிலாகபன்முக வேறுபாட்டை ஹெலன் முன் வைத்தார்.

தெரிதாவின் எழுத்து பற்றிய கோட்பாடான வேறுபாடு தள்ளி போடல் என்பதோடுதொடர்புடையது.பெண்மை பிரதிகள் (Feminne Texts) வித்தியாசத்தில்லிங்கசொல்மைய ஆளுமையை தவிற்ப்பதாகவும்,இரட்டை எதிர்மறையின்முடிவை சிதைத்து திறப்புடையதாக இருக்கவேண்டும் என்றார்.இந்த இடத்தில்ஆண் அல்லது பெண் உற்பத்தி செய்த எழுத்தில் ஆழ்ந்துள்ள பால்மையபெண்மையை வாசிக்கலாம் என்பது முக்கியமானதாகும்.

இங்கு எழுத்தாளர்களின் பாலினம் முக்கியமல்ல.எவ்வித எழுத்து என்பதேமுக்கியம்.படைப்பளியின் பாலினத்தையும் அவர் உருவாக்கும் எழுத்தின்பாலினத்தையும் குழப்பிக்கொள்ள கூடாது.பெண்களின் நினைவிலி மனம்ஆண்களது போலின்றி முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது.அவர்களின் உளபாலியல் தனித்தன்மைதான் அவர்களுக்கு ஆண்மைசார் கருத்துருவங்களைதூக்கியெறியவும் புதிய பெண் சொல்லாடல்களை உருவாக்கவும் ஆற்றல்தருகிறது.

ஆனால் அபெளதிகத்தின்(Metaphysics) பிடியில் தான் நாம் இன்னமும் வாழ்ந்துவருகிறோம்.நிகழ்கால அபெளதிகத்தின் சாயலின்றி புதியகருத்து வரைவுகளைதெரிதாவின் கூற்றை ஏற்கும் இரிகாரே சிதைவாக்கம் என்று சொல்லாமல்நடவடிக்கை என்கிறார்.பெண்மை பற்றிய ஒரு பொதுக்கோட்பாடு

ஒரு அபெளதிகமாகவே முடியும்.பெண் பற்றிய விளக்கம்சாராம்சவாதமாகிவிடும்

ஆபத்தையும் இரிகாரே உணர்ந்தே இருந்தார்.

ஆணாதிக்க தர்க்கத்தை சிதைக்கும் ஒரு வழிதான் போலச்செய்தல் என்பதாகும். பெண்களின் பேரின்பம் என்பதை ஆணின் தர்க்கம் யோசித்ததுகிடையாது.ஆணின் இன்பம் என்பது ஒருமுகபட்டதாகவும் லிங்கத்தோடுதொடர்புடையதாகவும் இருக்கிறது.பெணின் இன்பம் பன்முகப்பட்டதுதான்.மேலும் இரிகாரே பெண்பேச்சு பெண்மொழி பற்றி பேசியுள்ளார்.பெண்கள்தங்களுக்குள் கூடி பேசும் போது பெண்மொழி இயல்பாக உருவாகிறது.ஆணின்வருகையால் அது உடனே மறைந்து விடுகிறது.பெண்ணின் பாலியல்பன்முகப்பட்டதாக இருப்பதால் உருவாகும் பெண்ணின் மொழி கூட பழக்கமானஆணாதிக்க தர்க்கத்தின் விதிகளுக்குள்ளேயே பன்முகமாக,சுஇன்பஎழுச்சியாகபரந்துபட்டதாக வரையறுக்கமுடியாததாக இருக்கும் என்று அவர்எச்சரித்திருப்பது பற்றி யாரும் கவலை கொள்ளாமல் இருந்தால் அபத்தமாகபோய்விடும் என்பதுதான் சல்மாவின் நாவலிலும் நாம் காணகூடியதாகஇருக்கிறது.

கிறிஸ்தவா இதுவரையிலான மொழியியல் பற்றிய வரையறைகளைதலைகீழாக்குகிறார்.மொழி என்பது ஒரு ஒழுங்கமைவுயில்லாத சிக்கலானகுறிப்பீடாக்கத் தொடர் செயல் ஆகும்.எனவே மொழி ஒருமுகப்பட்டதுஅல்ல.அது பன்முகப்பட்டது.இப்படி பிரதிக்கோட்பாடை அவர்உருவாக்கிறார்.கிறிஸ்தவாவின் பிரதிக்கொட்பாட்டின் படி சல்மாவின் நாவலைஅணுகுவது ஒரு முயற்சிதான்.

1) பாலின வேறுபாடு பார்வையை இனம் காணுதல்:

“இன்ஷா அல்லா இந்த ஆறு நோன்பு பிறையில் நம்ப வஹிதாவுக்கும்சிக்கந்த்ருக்கும் நிக்காஹ் வைக்கலாம்னு இருக்கேன் துஆ செய்யிங்க” என்றுசொன்ன நொடியிலேயே றைமாவின் சிவந்தமுகம் கறுத்து சுண்டிப்போயிற்று.

“என்ன சொல்றீங்க நீங்க .. ?” கரீமின் முன்பாக தனது ஆத்திரத்தை முழுவதுமாககாட்ட முடியாத நிலையில் தன் குரலை சற்று உயர்த்தி அழுத்தமாக கேட்டாள்றைமா” (பக்கம் 90) என்று தொடரும் உரையாடலை பாலின வேறுபாட்டின்

தன்மையை காணமுடியும்.

2) பிரதியில் ஆணாதிக்க சொல்லாடலின் களம்:

மேற்சொன்ன உரையாடலே ஆண்மைய சொல்லாடலாக இருந்துஆணாதிக்கமாக மாறியிருப்பதை காணலாம்.

3) தன்னிலையின் உருவாக்கத்தை இனம் காணுதல்:

மொழியினால் தன்னிலை கட்டமைக்கப் பட்டுள்ளது என்பதும் அதுஆணைமையமாக வைத்து உருவாவதையும் காணலாம்.” நீ சும்மாஇருலே,வக்காலத்து வாங்க வந்துட்டா என்னா ? ஒரு பொட்டச்சி,இஸ்லாத்துலபொறந்திட்டு இப்படி ஒரு காரியம் பண்ணுறான்னா அதுக்கு எம்புட்டு தைரியம்இருக்கணும் ? நெனைக்கையிலே ஒடம்பு நடுங்குதே.அவ செஞ்ச காரியத்தஅப்பிடியா ஆம்பிள சொகம் கேக்கும் ? கர்மம்! துத்தேறி” என்று பெண்ணின் மொழிஆணிய தன்னிலையின் உருவாக்கத்தை காணமுடிகிறது.

4) மெளனங்களை காணுதல்:

ஆணிய நோக்கு பார்வையால் விளைவது எனில் பெண்ணிய நோக்குதொடுதலால் விளைவது என்பது லூசி இரிகாரேயின்கருத்தாகும்.பிரதிநிதித்துவத்துக்கு வெளியே நிற்கும் பெண்ணுக்கு விளிம்புநிலையில் நிற்கும் பெண்ணுக்கு தன்னுடைய உணர்ச்சிகளை வெளியிடஅனுமதியில்லை. மெளனமே அவளது மொழியாகும்.இதை இடைவெளி என்றுசொல்லலாம்.கல்லுப்பட்டி சம்பவத்தை சொல்லி ஆமினா மகள் பிதவ்சைகொலைச்செய்ய விஷத்தை கொடுத்த போது குற்றவுணர்வு முதன்மை படுத்தபடுகிறதேயன்றி ஜமாத்துக்கு எதிரான குரல் காணப்படவில்லை.இந்த மெளனம்தான நாவலில் எங்குமே விரவி இருக்கிறது என்பதை காணமுடியும்.இந்தமெளனமே ஆணாதிக்க ,விதிமீறாத ,ஒழுங்கமைவுக்குட்பட்ட நடவடிக்கையாகஇருக்கிறது.மெளனங்களை போல இடைவெளிகளும் அர்த்தங்களை உருவாக்கவல்லதாகவே இருகிறது.

1) புளூபிலிம் கேசட் பார்கிற பெண்கள் சமூகம் சிவாவுடன் பாலியல் உறவுகொள்ளும் பிர்தவ்சை கொல்லதூண்டியது எது ?

2) கிழடுகட்டையெல்லாம் இளசுகளை கேக்கிற போது நாம மட்டும் வாலிபபசங்களை அடையக்கூடாதா ?

3) எல்லா பயலுகளும் எல்லாவளோடும் உறவு வைச்சு இருக்கறப்போ நாமமட்டும் பிறத்தியாருட்டே தொடர்பு வைக்க கூடாதா ?

4) வஹிதாவின் மாமனார் செக்ஸ் கதை சொல்லி ஜொள்ளு வடித்தாலும் வஹிதாஏன் ” நல்ல” பெண்மணியாக திகழ்ந்தாள் ?

5) சிவாவையும், பிர்தவ்சையும் பார்த்து கோபப்படும் வஹிதாவிடம்உங்கம்மவின் விஷயத்தை சாச்சாவிடம் என்று சொல்ல வைப்பதன் மூலம்யாருமே ஒழுக்கமில்லை சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லாரும் அப்பிடிதான் என்றுசொல்வதன் அர்த்தம் என்ன ?

மேற்குறிப்பிட்ட கேள்விகள் ஒரு சராசரி வாசகனுக்கு எழுவது இயல்பு.இதைஒருவேளை பிரதியின் மெளனம் என்று சொல்லலாமா ? நிச்சயமாகமுடியாது.ஏனெனில் பிரதியின் இடைவெளி நாவல் கட்டுமானத்தை அசைக்கும்வகையி தான் இருக்கும்.ஆசிரியரின் கையை மீறி அது செயல்படும்.அதை காணதெரிதாவின் உபதர்க்கம் என்கிற ஆய்வை மேற்கொள்ளவேண்டும்.நாவல்கட்டமைக்கப் படும் போது புனைவு தர்க்கம் முக்கிய இடம் வகிக்கிறது.ஆனால்இந்த புனைவு தர்க்கம் மொழி வழியாக உருவாகிற போது ஒரு உப தர்க்கம்மெளனமாக அல்லது இடைவெளியில் மறைந்திருக்கும்.அந்த உபத்ர்க்கத்தையேரோலண்ட் பார்த் இரண்டாவது அர்த்த வரிசை என்றழைத்தார்.மொழி இரண்டுவரிசை அர்த்தம் கொண்டது என்பது அவரது நிலைபாடாகும்.அப்படி பார்கிறபோது சல்மாவின் நாவலின் இரண்டாவது வரிசை அர்த்தம் எதை சொல்கிறது. ? என்று பார்கிறபோது இருமைஎதிர்வில் கட்டமைக்க பட்டிருக்கிற முஸ்லிம்,தலித்நிலைபாடாகும்.வீட்டில் வேலைசெய்கிற தலித் பெண்களிலிருந்து,பாத்திமாஎன்பவள் முருகன் கூட ஓடிப்போகிற எல்லா விஷயங்களும் முஸ்லிம்,தலித்விரோதபோக்கே பிராதனமானதாக இருக்கிறது.முஸ்லிகள் தலித்தை மோசமாகநடத்தினார்கள் என்பதே இரண்டாம் அர்த்தவரிசை கூறும் கதையாகும்.இந்தஇடைவெளி மிகவும் ஆபத்தான விஷயமாகும்.நாவலில் இருந்து அதற்கொருஉதாரண்ம்.

“பள்ள முண்ட கல்யாணத்தை முடிச்சுகிட்டு போனாளா ?றைமா அவளருகில்வ்ந்து நின்று உதட்டை கடித்தாள்.”உஸ்..!! கூலியாளுக வீட்டுக்குள்ளே இத்தினிபேர் நடமாடுறப்போ ஜாதியசொல்லி இழிவா பேசாதே” (பக்கம்284)

5) புனைவு மொழியை தகர்த்தல்:

புனைவு மொழியை தகர்த்து அதை புனைவு நீக்கம் அதன் உட்பொருள்

காணல் முக்கியமானதாகும்.இரண்டாம் ஜாமங்களின் கதை என்ற எதார்த்த வகைநாவலை புனைவு நீக்கம் செய்யாமலே அது மதுரை மாவட்ட சில இஸ்லாமியகுடியிருப்புகளை சார்ந்த குடும்பங்களின் கதை என்பது தெளிவாக தெரிகிறது.

6) தொன்மங்களை தகர்த்தல்:

கற்பு,பண்பாடு,ஒழுக்கம் போன்ற விஷயங்கள் பற்றிய தொன்ம கதைகளின் மறுஉருவாக்கங்களே இது போன்ற கதைகளின் மூலபிரதி என்பது தெளிவாகதெரிகிறது.பெண் பற்றிய ஆணிய மதிபீடுகளே பொது புத்தியாக இருக்கும் போதுபெண்படைப்பளிகளும் அதிலிருந்து தப்பவில்லை என்பது புலனாகிறது.

7) சிதைவாக்கம் செய்தல்:

மொழி என்பது முரண்களாலே அர்த்தத்தை உற்பத்தி செய்கிறது என்பது சசூர்போன்ற மொழியிலாளரின் கருத்தாகும்.கிறிஸ்தவா போன்றோர் ஆண்மையசொல்லாடல்கள் உற்பத்தி செய்த இருமை எதிர்வுகள் யாவும்தகர்க்கப்படவேண்டும் என்று கூறுவர்.

“ஒனக்கு தெரியாது வஹிதா,போன எடத்துல மொதத்தீட்டு வந்துட்டா,காடுகரையில காத்து கருப்பு அண்டுச்சுன்னா ஒண்ணும் பண்ண முடியாது.”(பக் 473)

இந்த வசனம் சொஹ்ரா எனும் பெண்ணின் மொழியாக வெளிப்பட்டாலும் ஆண்கட்டமைத்திருக்கிற சமூகமொழியின் நீட்சி என்பது புலனாகிறது.நாவலைமுழுமையாக சிதைவாக்கம் செய்கிற போது சமூக எதார்த்தம் தான் நாவலின்மையமாக இருக்கிறது.சமூக எதார்த்தம் என்பது இங்கே ஆணின்கருத்துருவாக்கத்துக்கு துணை நிற்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.நாவலின்புனைவு தளமும்,புனைவு தர்க்கமும் போலச்செய்தலின் கட்டமைப்பில்இறுகிப்போன பெண்ணின் இயங்குதளமாக இருக்கிறது.நாவலை சிதைவாக்கம்செய்தபோது கிடைத்த உண்மைகளை தொகுத்து பார்ப்போம்.

1) சிறுபான்மையினரின் சமூக எதார்த்தம் சரியாக வெளிப்படுத்தப்படவில்லை

2) பிரதிக்கும் சூழல் அர்த்தத்துக்குமான உறவு சரிவர பேணப்படவில்லை

3) பெண்ணிய உளபகுப்பாய்வு ஒற்றை எதார்த்தத்தையே முன்மொழிகிறது

4) சமூக எதார்த்தத்தை புரிந்து கொள்ள பண்பாட்டுச்சூழல், சமூகசூழல்,

சந்தர்ப்பச்சூழல் முக்கியமானவைகளாகும்.இவைபற்றிய சரியானபிரக்ஞையின்மை

புனைவுகளத்தை சிதைத்துவிட்டது.

5) கதையின் ஆற்றல்மிக்க கூறுகள் ஆணியதர்க்கங்களுக்கு துணைபுரிவதாகஇருக்கிறது.

6) கூட்டுநனவிலியின் வெளிப்பாடுகள் பாத்திர செயல்பாடுகளின் வழிநிர்வகிக்கப்படுவதால் அடிக்கருத்துக்கு விரோதமாக அதாவது சமூக எதார்த்தைஆணியபார்வையில் சொல்லமுயன்றிருப்பது கதையை திரிபுடையதாகமாற்றிவிட்டது.

7) இசுலாமிய ஒழுக்க மறுவுருவாக்கம் நாவல் முன்னிறுத்தும் பிரதானவிஷயமாகும்

8) நாவலின் நீளம் வாசகர்களுக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்துகிறது.

9) பலவிஷயங்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதால் நாவலின்புனைவுதளம் பற்றிய கேள்விகுறி உருவாகிறது.

10) நாவலின் பல பாத்திரங்களும் ரொமாண்டிக் தன்மையுடையதாக இருப்பதால்எதார்த்த வகைக்கு முரண்பட்டுவிடுகிறது.

8) குறியீட்டு மொழியை தகர்த்து குரிமொழியாக்குதல்:

குறியீட்டு முறை ஆணிய மொழி எனும் குறியீட்டு முறையில் அமைவதால்

அம்மொழி தகர்க்கப்பட்டு அவ்விடத்தில் குறிமுறையில் அமைந்த பெண்ணியமொழி அமைய வேண்டும் என்பது பெண் எழுத்தாளர்களின் நோக்கமாகஇருக்குமிடத்து மொழி வலிமைமிக்கதாகிறது.ஆனால் நாவலைபொறுத்தவரையில் குறிமொழி வலுவாகவே இருக்கிறது.

“மரப்பச்சி பொம்மையை ராபியா வைத்திருக்கிறாள்”

9) பன்முக அர்த்தத்தை காணுதல்:

“என்ன தான் அதிசய காய்ச்சலோ,அவசரமுன்னா அதுக்காக ஒரு குடியான வீட்டுஆம்பிளைக்கிட்டயெல்லாமா உதவி கேக்கிறது ?”

பிரதியின் உரையாடல்களை குறியியல் அச்சுகளாக பாவித்து பிரதியியல்ஆய்வுக்கு உட்படுத்தும் போது உரையாடல் தொடர்பியல் முடிச்சுகள் அவிழ்ந்துநுண் அரசியல் வெளிப்படும்.

10) மறு உற்பத்தி செய்தல்:

பெண்ணை மரபார்ந்த கருத்தாக்கங்களுக்கு தக்கன கட்டமைப்பது தான் மறுஉற்பத்தி எனப்படும்.பெண் என்பவள் மனைவியாக,தாயாக, சுயகட்டுப்பாடுமிக்கவளாக மறு உற்பத்தி செய்வது ஆணிய பிரதியின்இலக்கணமாகும்.

“சரிம்மா,நீ அங்கே வேணுமின்னா போக வேணாம்.இங்கேயேஇருந்துக்க.மாப்பிள்ளை வந்து,போக இருக்கட்டும்.அவன் இவன் என்றெல்லாம்மரியாதை குறைவா பேசக்கூடாது.உனக்கு தான் பாவம்”(பக் 506)

மேற்சொன்ன பெண்ணிய திறனாய்வு மூலம் சல்மாவின் நாவலை வாசிக்கும்போது இரட்டை பிரக்ஞை இயங்குவதை காணமுடிகிறது.அதாவதுபெண்பிரதியாக மாறவேண்டும் என்ர முனைப்பும்,அதேநேரம் மதத்தைமீறமுடியாத சூழலும் காணப்படுகிரது.

சந்தால் சவாப்,சவியேர் காதியே,லூசி இரிகாரே போன்ற பிரஞ்சுபெண்ணியவாதிகள் பெண்ணின் பாலியல் ஆழமான நிலவறைப்போன்றது

அறிந்து கொள்ள முடியாத ஒரு கூறு என்று வாதிடுகின்றனர்.அதை முடிந்தவரைவெளிக்கொண்டு வரவேண்டுமென்று மெடுசாவின் புன்னகை என்ற கட்டுரையில்ஹெலன் சிக்ஸீ கேட்டுக்கொள்கிறார்.

“ உன்னையே நீ எழுது.உன் உடம்பின் குரல்களுக்கு நீ செவிசாய்.அப்பொழுதுதான் வகுத்துரைக்கமுடியாத உனது நனவிலி மனத்திலுள்ள மூலவளங்கள்எல்லாம் பொங்கி புறப்பட்டு வரும்....

....உலகத்திற்கெல்லாம் பொதுவான பெண்மனம் என்று ஒன்று கிடையாது.மாறாகபெண்ணின் கற்பனையாற்றல் எல்லையற்றது.வகை

தொகைக்குள் அடங்காதது.அதனாலேயே அழகானது. ....

....நான் பொங்கி வழிந்தோடுகிறேன் என்னுடய ஆசைகள் புதிய ஆசைகளைகண்டுபிடித்திருக்கிறது..எனது உடம்பு இதுவரை கேட்காத பாடல்களை அறிந்துவைத்திருக்கிறது...என்னால் உடைத்து திறந்துவிடப்பட்ட ஒளிவெள்ளத்தின்ஓட்டத்தை நான் முழுமையாக உணர்கிறேன்..இந்த ஒலிவெள்ளம்வெட்கங்கெட்ட அதிர்ஷ்டம் என்ற பேரில் சட்டம் போட்டு சந்தையில்விலைப்போய் கொண்டிருக்கும் எந்த ஒரு வடிவத்தை விடவும் அழகானவடிவங்களில் நிறைந்து வெளிப்படுகிறது....” -The laugh of Medusa

496 பக்கங்கள்,66 அத்தியாயங்கள் என்ற ஒரு பெரிய நாவலுடன் களதில்வந்திருக்கும் சல்மாவுக்கு முன் மாபெரும் அலையடித்துக்கொண்டிருக்கிறதுஎன்பதை பார்க்க வேண்டும்.மலையாளத்தில் சுகறா முடித்த இடமும்,கன்னடமொழியில்சாராஅபுபக்கரும்,தெலுங்குமொழியில்,உருதுவில்,கஷ்மீரியில்,பங்களாமொழியில்,அஸ்ஸாமியில்,சிந்தியில்,என்று இந்திய மொழிகளிலும்,அரபுமொழியில் தாஹா ஹுசைன்,ஹனன் அல் சஹ்கியா, பத்வா துஹ்கான்,நவால்சாதவி,ஜைனப்,ஹையாதி,பாத்திமாமெர்னீசி(மொராக்கோ),சாதியாசைக்

(தென்ஆப்ரிக்கா), ஹிதாயத் ச்துக்சால் (துருக்கி), பாத்ஹசன் (சவுதிஅரேபியா), ஹிமானத்(மலேசியா)ஆமினா வ்ஹ்தூத் (இந்தொனேஷியா)ஹாலிக் அப்சர், ஸிபாமிர்கோசினி,ஹைதா மொஹிசி,ஹாமத்சாஹிதன்(ஈரான்),போன்றோர்களும் 55 நாடுகளில் வாழும் இஸ்லாமிய பெண்எழுத்தாளர்களும் தொடர்ந்த பாதையில்லல்லாமல் வேறு அல்ல என்பது சல்மாதெரிந்து கொள்ளவேண்டும்.
(doublestandard), . (introjections)

“It is impossible to define feminine practice of writing,and this is an impossibility that will remain,for this practice will never be theorized enclosed,enooded which doesn 't mean that it doesn 't exist.”

Helene cixous

(The laugh of the medusa)


நன்றி - திண்ணை

Saturday, May 01, 2010


பெண் தொழிலாளர்கள் இன்னும் அடிமைளாகவே நடத்தப்படுகிறார்கள்
-தாஸ் -

இலச்சக்கணக்கான ஆசிய, ஆபிரிக்க நாட்டைச்சேர்ந்த பெண் தொழிலாளர்கள் பணிப் பெண்களாகவும் கடைநிலைத் தொழிலாளர்களாகவும் மத்திய கிழக்கு நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் அடிமைகளாகவே நடத்தப்படுவதாகவும், அவர்களுக்கு எதிராக நடத்தப்படுகின்ற கொடுமைகளுக்கு, குரல் உயர்த்தாத வகையில் முடியாதவர்களாக, ஓர் கோணலான கட்டமைப்பு அங்கு காணப்படுவதாகவும், மனித உரிமைகளுக்கான அமைப்பான human rights watch தனது மேதினத்துக்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. உலகத் தொழிலாளர்கள் தினத்தில் இந்த இலச்சக் கணக்கான பாட்டாளியப் பெண்கள், தொழிலாளர்கள் அணியில் அணிவகுத்து தங்கள் உரிமைக்கான கோசங்களை, கோசமிட்டுச் செல்லத்தானும் முடியாதவகையில் ஆகக் கூடிய அல்லது குறைந்த வகை அடிமைகள் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

மத்திய கிழக்கைச்சேர்ந்த எட்டு நாடுகளில் கடந்த ஐந்தாண்டுகளின் தொடர்ந்த போராட்டத்தில் நிச்சயமாக ஜோர்டான் நாட்டில் குறைந்தளவேனும் அங்கு தனியார் வீடுகளில் பணிபுரியும் பிலிப்பயன்ஸ், ஸ்ரீலங்கா, இந்தோனேசிய நாட்டைச்சேர்ந்த பணிப் பெண்களுக்கு ஓரளவு பாதுகாப்பை பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளது. இருப்பினும் சட்ட வரையறைகளுக்கு அப்பால் வாரத்தில் ஒருநாள்தானும் விடுமுறையின்றி ஒவ்வொரு நாளும் 18 மணித்தியாலயங்கள் இவர்களிடமிருந்து வேலை வாங்கப்படுகிறது.

ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட கால் கோடி பெண்கள் வேலைக்காக குடி பெயர்ந்து அடிமைகளாக வாழ்வதென்பது இன்றைய நவதாராளவாத அமைப்பின் உலகமயமாகிப் போயிருக்கும் பெண்ணியப் பிரச்சினை.

மத்திய கிழக்கு நாடுகளில் ஜோர்டான் நாடு அண்டளவாக டென்மார்கினைப் போல் ஐம்பது லச்சம் மக்கள் சனத்தொகையை கொண்டதுதான். ஆனால் அங்கு சுமார் எழுபதுனாயிரம் மூன்றாம் உலகநாடுகளை சேர்ந்த பெண்கள் தனியார் வீடுகளில்
ணிப்பெண்களாகச் சென்று அடிமைகளாகக் கிடக்கின்றார்கள். இதேபோல் சவூதி அரேபியாவில் ஒன்றரைலட்சம் பெண்கள், பணிப்பெண்களா சென்று அடிமைகளாகி வதைபடுகிறார்கள். மிகுந்த போராட்டங்களின் மத்தியில் தான் இவர்களின் எதிர் குரலைத்தேனும் வெளிக்கொணர முடிகிறது. இனிவரும் காலங்களில் .......
இனி ஒரு மேதினத்தில் .......

தகவல் :human rights watch