Thursday, August 22, 2013

வெகுசனப்போரளி நரேந்திர தபோல்கர் அவர்களுக்கு அஞ்சலி

 -கரவைதாசன் -
பொருள் முதல், கருத்து முதல் என்று எதையோ வைப்பைவர்களுக்கிடையே சீரான முறையில் மக்களை சிந்திக்க வைத்து வாழ்ந்து மறைந்த ஒரு சமகால அற்புதம்

 நரேந்திர தபோல்கர் கடந்த செவ்வாய் கிழமை 20.8.13  காலை புனே ஓம்கரேஷ்வர் பாலம் அருகில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள், அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதில் தலையிலும் நெஞ்சிலும் குண்டு பாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

நரேந்திர தபோல்கர் அவர்கள் பகுத்தறிவாளர், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான முற்போக்கு சிந்தனையாளர், சமூக ஆர்வலர் , முன்னாள் தேசிய விளையாட்டு வீரர் (கபடி), மருத்துவர், எழுத்தாளர் வெகுசனப்போரளி அறுபத்தி ஏழு வயதில் வாழும் காலத்திலேயே  அவர் வாழ்வு பறிக்கப்பட்டுள்ளது.

தபோல்கர் கொலை செய்யப்பட்டதையடுத்து அவரது சொந்த ஊரான சடாராவில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் அவரது வீட்டில் திரண்டனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தினர். இதையொட்டி அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன.


மகாராஸ்டியின் சிந்துதாத் மாவட்டத்தில் தாப்கோலி என்னும் குக்கிராமத்தில் அஜ்யுட் தாராபாய் தம்பதிகளின் பத்தாவது கடைசி மகனாக நரேந்திர தபோல்கர் அவர்கள்   கார்த்திகை மாதம் முதலாந்திகதி ஆயிரத்திதொளாயிரத்தி நாற்பத்தி ஐந்தாம் ஆண்டு  பிறந்தவர். 

இவரது தந்தையாரும் பகுத்தறிவாளர் ஆவர். மூத்த தமையனார் சிறந்த கல்வியாளர்.  தொழில்ரீதியாக  மருத்துவரான  நரேந்திர தபோல்கர் அவர்கள். பகுத்தறிவுப் போராளியான சைலா அவர்களை  மணம் புரிந்தார். இவர்களுக்கு கமித்,முக்தா என இரு பிள்ளைகள். 

1980 லிருந்து வெகுசன முற்போக்குச் செயற்பாட்டில்     தீவிரமாக செயல்பட்டு வந்த     நரேந்திர தபோல்கர் அவர்கள் முதலில்  1989களில் மராட்டிய அந்தா ஷ்ரத்தா நிர்மூலன் சமிதி என்ற மூட நம்பிக்கை எதிர்ப்பு இயக்க நிறுவனத்தினை நிறுவினார். முதலாளித்து அமைப்பில் அதன் அசைவின்  இயங்குதலுக்காக சங்கிலிப் பின்னலாக கொழுவி வைக்கப்பட்டிருக்கும் மதம்,சாதி,பால்,நிறம் தொடரின் அடிப்படை மூடத்தினை தகர்க்க வலுவான பலவீனத்தினை கண்டறிந்து மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அவரை ஒத்த தோழர்களுடன் சேர்ந்து தீவிரமாக இயங்கினார். இதுவரையில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக இவரால் சுமார் மூவாயிரம் கருத்தரங்குகள். நடத்தப்பட்டிருக்கின்றன.

Tuesday, August 13, 2013

இலங்கை: வடமாகாணத்தேர்தலும் 13வது சட்டத்திருத்தமும்

-அ.மார்க்ஸ்- 

(இலங்கையின் அரசியல் சட்ட வரலாற்றில் முதன் முதலாக Unitary State என்பதற்கு மாற்றாக unitary வடிவத்திற்குள் மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்குதல் என்கிற கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்ட அரசியல் சட்ட வடிவம் 13வது திருத்தம். ஆனால் இத் திருத்ததின் மூலம் வழங்கப்படும் மாகாண அதிகாரங்கள் எத்தனை அபத்தமானவை என்பதை இக்கட்டுரை விரிவாக அலசுகிறது. இந்த 13வது திருத்தத்தையும் நீர்க்கச் செய்ய இலங்கை அரசு முயற்சித்து வரும் சூழலில், இத் திருத்தத்தின் அடிப்படையில் வட மாகாணத்தில் நடத்தப்படும் தேர்தல் தமிழர்களுக்கு எந்த அரசியல் அதிகாரத்தையும் உண்மையில் அளிக்கப் போவதில்லை என்றாலும், இன்றைய சூழலில் இந்தத் தேர்தலில் தமிழர் கட்சிகள் பங்கேற்பது அரசியலதிகாரத்தை நோக்கிய போராட்டத்திகான ஒரு வலுவான தளத்தை ஏற்படுத்தித் தரும், அந்த வகையில் தேர்தலில் பங்கேற்பது என தமிழர் அரசியல் கட்சிகள் எடுத்துள்ள முடிவு சரியானதே என வாதிடுகிறது இக் கட்டுரை)
த.தே.கூ தலைவர்கள்
த.தே.கூ தலைவர்கள்



இலங்கையில் வடமாகாணத்திற்கான தேர்தல் வரும் செப்டம்பரில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளைத் துவங்கிவிட்டன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ளது. அவரும் தொடக்க மறுப்புகளுக்குப் பின் அதை ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஜூலை 27,1987 அன்று இயற்றப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடியாக நவம்பர் 14,1987 அன்று இலங்கைப் பாராளுமன்றம் இயற்றிய 13வது சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் 26 ஆண்டுகளுக்குப் பின் இப்போது ஈழத் தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசமான வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடக்கப் போகிறது. இடையில் என்னென்னவோ நடந்துவிட்டன. ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட ராஜிவ் காந்தி, ஜெயவர்த்தனா இருவரும் இப்போது இல்லை. விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு நான்காண்டுகள் ஓடிவிட்டன.

இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போதுகூட வட மாகாணத் தேர்தல் குறித்த முறையான அறிவிப்பு எதையும் ராஜபக்‌ஷே அரசு வெளியிடவில்லை. ஏதாவது ஒரு காரணம் சொல்லித் தேர்தலை ரத்து செய்வதுதான் இலங்கை அரசின் நோக்கமாக இருக்கிறது. தேர்தல் நடந்தால் நிச்சயமாக இங்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (த.தே.கூ) வெற்றி பெறும். இலங்கையின் ஒரு  மூலையில் கூட ராஜபக்‌ஷே குடும்பத்திற்கு விசுவாசமாக இல்லாத ஒரு அரசு வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர் சகோதர்கள். பாதுகாப்புச் செயலர் கோத்தபயா, ”இன்னும் தனி நாட்டுக் கோரிக்கையை வைத்துக் கொண்டுள்ள ஒரு கட்சியிடம் (அதாவது த.தே.கூ) காவல் அதிகாரத்துடன் கூடிய அரசைக் கையளிக்க இயலாது” என வெளிப்படையாகக் கூறியுள்ளார் (மே23, 2013).

Wednesday, July 31, 2013

"உறவு " திரைப்படம்.ரசித்தது கவிதா.


-கவிதா-

தமது அடையாளங்களைத் தொலைத்திருக்கும் புலம்பெயர் ஈழத்துத்தமிழ் திரைப்படங்கள் தற்பொழுது மீண்டும் தமது முகவரிகளைத் தேடத்தொடங்கியுள்ளன. அவ்வப்போது திரையிடப்படும் குறும்படங்களிலும், ஒளிஇசைகளின் மூலமும் மெல்ல மெல்ல தமது பாதையைத் தேடிக்கொண்டிருக்கின்றன.

ஈழத்திலும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலும் வளர்ந்துவரும் திரைக்கலை பெரும் சவால்களுக்கு மத்தியில் தன்னை இழுத்துக் கொண்டுபோகவேண்டிய நிலையில் உள்ளதாகவே நான் நினைக்கின்றேன். தென்னிந்திய சினிமாக்களின் தாக்கத்தையும் ஆக்கிரமிப்பையும் மீறி ஈழத்துச்சினிமா தனது அடையாளத்தை கண்டுகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது என்பதில் ஐயமில்லை.

தென்னிந்தியத் திரைப்படங்களுக்குக் கிளம்பும்போது இருக்கும் உற்சாகம் ஏனோ நமது ஈழத்துப் படைப்புகளுக்கு போகும் போது ஏற்படுவதில்லை. கடமைக்காக போவது, அழைப்பின் கட்டாயத்தில் போவது, எமது கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகப்போவது என்று இப்படி பல காரணங்களுக்காகவே ஈழத்துத்திரைப்படங்களுக்கு நாம் செல்கிறோம் என்பதுதான் உண்மை. இப்படித்தான் நானும் ஒரு ஈழத்து திரைப்படத்தைப் பார்ப்பதற்காக் சென்றேன். எமது கலைஞர்களின் படைப்பிற்கு சமூகமளிக்கவேண்டும் என்ற எண்ணம் தவிர வேறு ஏதுவும் என்னை உற்சாகப்படுத்தியிருக்கவில்லை. எப்படியோ அலுப்படிக்கப் போகிறது ஆனாலும் போய்வருவோம் என்ற மனநிலையில்த்தான் கிளம்பினேன். 

இந்த எண்ணத்தை முற்றிலுமாக மாற்றிப்போட்ட «உறவு» திரைப்படத்திற்கு முதலில் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். ஒரு முழுநீள ஈழத்துத்திரைப்படம் இரண்டு மணித்தியாளங்களுக்கு மேலாக எம்மை நகரவிடாமல் உட்காரவைத்த பெருமை கனடாவைச் சேர்ந்த இயக்குர் திவ்யராஜனையே சாரும். 

Sunday, July 28, 2013

தேவதாசி முறையும் சொர்ணமாலாவும் ஒரு குறிப்பு

-அ.மார்க்ஸ்-
சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியின் நாட்டியத் துறை சார்பாக நடத்தப்பட்ட பரத நாட்டியம் தொடர்பான ஒரு சர்ச்சையை பத்திரிக்கையாளர் கவின்மலரின் பக்கத்தில் பார்த்தேன். Devadasi System  and Bharatha Natyam என்கிற தலைப்பில் அக் கல்லூரியின் நாட்டியத் துறையில் ஒரு உரை நிகழ இருப்பதாக வந்த அறிவிப்பைப் பார்த்துவிட்டு முதலில் பேரா. சரஸ்வதி தொலை பேசியிலும் பின்னர் சரஸ்வதி,  பெண்ணியச் சிந்தனையாளர் ஓவியா, வழக்குரைஞர் அஜிதா, கவின்மலர் ஆகியோர் நேரிலும் சென்று கல்லூரி முதல்வரிடம் பேசியுள்ளனர். “தேவதாசி முறை ஒழிக்கப்பட்டுவிட்டது. இந்நிகழ்வு அதை மீண்டும் மாணவர்களிடையே நியாயப்படுத்துவதாக அமைந்துவிடுமோ என்கிற அச்சத்தை” அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அவ் உரை ரத்து செய்யப்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.

தொலைபேசியில் கூறியதை ஒட்டி ‘Evolution of Bharathanatiyam' என்பதாக உரைத் தலைப்பு மாற்றப்பட்டுவிட்டதாகவும், ‘’இது கலை சார்ந்த நிகழ்வாக இருக்கும். சொர்ணமால்யாதான் பேசுகிறார்’’ என்றும் கல்லூரி தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

நிகழ்வின்போது இவர்களும் சென்று உரையைக் கேட்டுள்ளனர்.  உரைத் தலைப்பு அதுவாக இருந்தபோதிலும்  சொர்ணமாலாவின் பவர் பாயின்ட் ஸ்லைட் தலைப்பு  'Devadasis - Wives of God' என்பதாகாக இருந்துள்ளது. மாலா என்ன பேசினார் என்பது முழுமையாகத் தெரியவில்லை. கவின்மலரின் பதிவிலிருந்து அவர் தேவதாசி முறையைப் போற்றிப் பேசினார் என்றும் தேவதாசியரால் வளர்க்கப்பட்ட ‘சதிரில்’ இருந்தே பரதம் தோன்றியதாகவும் அவர் பேசியதாகத் தெரிகிறது. தேவதாசி சாதி உருவானது, முத்து லட்சுமி ரெட்டி போன்றோர் அதை ஒழித்தது முதலியன குறித்தும் அவர் சில தவறான கருத்துக்களை முன் வைத்ததாகவும் அதற்கு ஓவியா முதலானோர் அங்கேயே எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் அறிகிறேன்.

Thursday, July 25, 2013

நோர்வேயில் திவ்வியராஜனின் உறவு

நோர்வேயில் திவ்வியராஜனின் உறவு

Thursday, July 18, 2013

41வது இலக்கியச் சந்திப்பு - யாழ்ப்பாணம் 2013

ஊடக அறிக்கை:

41 வது இலக்கியச் சந்திப்பு  (இலங்கை - யாழ்ப்பாணம்) எதிர்வரும் யூலை 20 - 21ம்திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. கீழ்வரும் வகையில் இலங்கைஇலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி உள்ளடக்கங்கள் அமையும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகம், பன்மைத்துவம், சமனிலை என்பவற்றின் அடிப்படையில் ஈழ இலக்கியத்தில்பேசுபொருளாக இருந்த - இருக்கின்ற அனைத்து விடயங்கள் பற்றியும் எத்தகைய சார்புநிலைகளுமின்றி, பேசுவதற்கான அரங்குகள் திறந்துள்ளன.

 1.பாரம்பரியக் கலைகள் 
  மலையக, முஸ்லிம், தமிழ்ச் சமூகங்களின் கலை, பண்பாடு, மரபுரிமை மற்றும்அவற்றின் இன்றைய நிலை தொடர்பான அரங்கு.

 2.சாதியம்
யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு, கிழக்கு, மலையகம், புலம்பெயர் சூழல் ஆகிய இடங்களில்சாதியம்.

சமூகச் செயற்பாட்டனுபவங்கள் மற்றும் சமகாலச் சவால்கள்
பொது மற்றும் சமூக சேவைகள், செயற்பாடுகளில் பணிசெய்தல் மற்றும் பணி செய்வோர் தொடர்பான விடயங்கள். (போர் மற்றும் போருக்குப் பிந்தியகால உளவியல்)

4.இலக்கியம்
மலையக, முஸ்லிம், தமிழ், தலித், விளிம்புப்பால்நிலை, புலம்பெயர் இலக்கியத்தளங்கள்  மற்றும் கவின் கலைகள்.

தேசிய இனங்களின் பிரச்சினைகள் 
மலையக, முஸ்லிம், தமிழ், சிங்களத் தேசியவாதங்கள், தேசியமும் பெண்களும், காணி தொடர்பான பிரச்சினைகள், தேசிய இனங்களுக்கு இடையிலான உறவுகள்.

மேற்கண்ட கருத்தாங்கங்களில் பேசப்படுவதற்கான அரங்குகளில் பல்வேறு தரப்பைச் சேர்ந்த ஆளுமைகளும் செயற்பாட்டாளர்களும் பங்கேற்பர். ஒவ்வொரு தலைப்பினையும் பெண்ணிய நோக்கில் அவதானிக்கும் உரைகளும் இடம்பெறும்..

 *கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

- 41வது இலக்கியச் சந்திப்புஏற்பாட்டுக்குழு, யாழ்ப்பாணம்.

Wednesday, July 10, 2013

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 70ஆவது ஆண்டுவிழா

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 70ஆவது ஆண்டு விழா யாழ்ப்பாணம் பலநோக்கு கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தோழர் சிவராஜா தலைமையில் இன்றுபிற்பகல் 2.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் டியூ குணசேகர, கட்சியின் உபதலைவரும் புனருத்தாபன அமைச்சருமான சந்திரசிறி கஜதீர, நேபாள அரசின் முன்னைநாள் பிரதமரும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான தோழர் மாதேவ் குமார் நேபாள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா, பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச்செயலர் தி.சிறீதரன் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும், கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் பெருமளவிலான பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்வில் நேபாள முன்னைநாள் பிரதமரும், நோபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான தோழர் மாதேவ் குமார் நேபாள் மற்றும் தோழர் டியூ குணசேகர ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். அத்துடன் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன.  

Tuesday, July 02, 2013

கட்டாய திருமணத்திற்கு எதிரான சட்டம்

sinthuja1
கட்டாய திருமணத்திற்கு எதிரான சட்டம் இன்று முதல் சுவிட்சர்லாந்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டு ஆகக்குறைந்தது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சுவிட்சர்லாந்தின் சமஷ்டி அரசு அறிவித்துள்ளது.
கட்டாய திருமணத்தை செய்து வைப்பதில் சுவிட்சர்லாந்தில் உள்ள இலங்கை தமிழர்கள் பெரும்பாலும் ஈடுபடுவதாக சுவிசர்லாந்தின் பிரபல பத்திரிகையான சொண்டாக் பிளிக் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்தம் சராசரி 400 கட்டாய திருமணங்கள் நடப்பதாகவும் இலங்கை, துருக்கி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், போன்ற நாடுகளை சேர்ந்த பெற்றோரே தமது பிள்ளைகளின் விருப்பத்திற்கு மாறாக கட்டாய திருமணங்களை செய்து வைக்கின்றனர் என்றும் சுவிஸ் சமஷ்டி அரசின் ஆதரவுடன் நொசத்தல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சூரிச் மாநிலத்தில் உள்ள 22வயதுடைய சிந்துஜா என்ற தமிழ் பெண் தமது பெற்றோர் தனக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக தெரிவித்துள்ளார். 16வயதில் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்ற போது தனது விருப்பத்திற்கு மாறாக தனது தந்தை தனக்கு தெரியாத ஒருவருக்கு திருமணம் முடித்து வைத்ததாகவும் அத்திருமணத்தை செய்யவில்லை என்றால் உன்னை கொலை செய்வேன் என அச்சுறுத்தினார் என்றும் சொண்டாக் பிளிக் பத்திரிகைக்கு சிந்துஜா தெரிவித்துள்ளார்.
இப்பொழுது தனது பெற்றோரை பிரிந்து தனது நண்பருடன் வாழ்ந்து வரும் சிந்துஜா பெரும்பாலான தமிழ் பெண்கள் பெற்றோர்களால் அச்சுறுத்தப்படுவதாகவும் பெண்கள் தாங்கள் சுயமாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இப்பொழுது தனது பெற்றோருடனான தொடர்புகளை முற்றாக துண்டித்து சுதந்திரமாக வாழ்வதாகவும் முன்னர் தனது தந்தை எல்லா விடயத்திற்கும் கட்டுப்பாடுகளை விதித்து அடக்கி வைத்ததாகவும் 22வயதுடைய சிந்துஜா தெரிவித்துள்ளார்.

Wednesday, June 26, 2013

டொமினிக் ஜீவா பிறந்த தின சந்திப்பு

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் 87 வது பிறந்த தின சந்திப்பு

Wednesday, June 05, 2013

பிணங்களால் பிரச்சினை இல்லை மனுஷங்கதான் பிரச்சினை



சுடுகாட்டின் திசையிலேயே பெண்கள் நடக்கக் கூடாது என்று கட்டுப்பாடு காக்கும் சமூகம் நம்முடையது. சுடுகாட்டுக் காற்று அடித்தாலே ஆவி  அண்டியதாக அஞ்சும் மக்கள் மத்தியில்தான் கிருஷ்ணவேணி வாழ்கிறார். அனாதைப் பிணங்களை வண்டியில் சுமந்துவந்து அடக்கம் செய்வதோடு,  சந்நியாசித்தோப்பு சுடுகாட்டுக்கு வரும் ஊர்ப் பிணங்களை எரிக்கும் பணியையும் செய்கிறார்.


புதுவை பொது மருத்துவமனை வளாகத்திலிருந்து கிளம்புகிறது அந்த வண்டி. முன்னும் பின்னும் பிணவண்டியிலிருந்து சகிக்க இயலாத நாற்றம்  நாசியை உறுத்துகிறது. வியர்வை உருக உருக வலுகொடுத்து வண்டியை இழுத்துச் செல்லும் கிருஷ்ணவேணியை சபித்துக்கொண்டே நடக்கிறார்கள்  மக்கள். பிரதான சாலையைக் கடக்கும் வண்டி, சந்துகளில் நுழைந்து சந்நியாசித்தோப்பு சுடுகாட்டை வந்தடைகிறது. வண்டியை நிறுத்திவிட்டு,  படபடவென மண்வெட்டியை எடுத்து குழிவெட்டத் தொடங்குகிறார் கிருஷ்ணவேணி. குழி ஆழமானதும் வண்டியைச் சரிக்க, குழியில் விழுகிறது  வெண்துணி போர்த்திய சடலம். அருகே அமைதியாக எரிந்து கொண்டிருக்கிறது இன்னொரு பிணம்.



பிணம் புதைக்க குழி தோண்டித் தோண்டி கைகளில் இயல்புக்கு மீறிய சுருக்கங்கள். வாழ்க்கையின் இருட்டுப்புற ரகசியங்களை கண்டடைந்து விட்ட  ஞானியைப் போல அலட்சியம் தொனிக்கும் பார்வை... கிருஷ்ணவேணி சாதாரண மனுஷியில்லை. சாதனை மனுஷி.


‘‘இந்த ஊர்லதான் நான் பொறந்தேன். அப்பன் பேரு பிச்சமுத்து. முனிசிபாலிட்டில குப்பை வேலை செஞ்சார். அம்மை பேரு செங்கேணி. நாலு  புள்ளைகள்ல மூத்தவ நான். ஆறாப்பு வரைக்கும் படிச்சிருக்கேன். மூத்த பிள்ளைங்கிறதால சிறு வயசுலயே கல்யாணம் கட்டிட்டாங்க. புருஷன் பேரு  அல்பர். மனுஷன் தங்கமானவரு. குடிப்பழக்கம் மட்டும் உண்டு. ஒருநாளும் என்னை அழ வச்சுப் பாத்ததில்லை. 

Saturday, May 25, 2013

டி.எம்.எஸ் .மக்களின் பாடகன்.

-ஷாஜி-
                            இசை பயிற்சியல்ல இசை உணர்ச்சி

''நான் டி.எம்.எஸ் பாடல்களை வெறுக்கிறேன்'' என்று இப்போதுள்ள ஒரு தமிழ் பின்னணிப்பாடகர் என்னிடம் சொன்னார். அந்த வெறுப்புக்கான காரணத்தைக் கேட்டபோது அவரால் சரியாகச் சொல்ல முடியவில்லை. ''அவருடைய பாடல்கள் தமிழ்நாட்டின் வெயிலையும் புழுதியையும்தான் ஞாபகத்துக்குக் கொண்டுவருகின்றன'' என்று சொன்னார். ''நீங்கள் கோடைவிடுமுறைக்கு மட்டும் தமிழ்நட்டுக்கு வந்திருப்பீர்கள். அப்போது மட்டுமே அந்தப்பாட்டுகளைக் கேட்டிருப்பீர்கள்'' என்று நான் சொன்னேன். தமிழ்நாடில் பிறந்து வேறு பகுதிகளில் வளர்ந்த ஒரு சிறுவனின் மனப்பதிவு மட்டும்தான் அது. சிலர் அந்த மனப்பிராயத்தை தாண்டுவதேயில்லை!

நானும் சிறுவயதில் டி.எம்.எஸ் பாட்டை அவ்வளவாக விரும்பவில்லை. ஜேசுதாசை உலகிலேயே பெரிய பாடகர் என்று நினைத்திருந்த காலகட்டம் அது. ஆனால் கொஞ்சவருடங்களுக்குள்ளேயே டி.எம்.எஸ் பாட்டை கவனிக்க ஆரம்பித்தேன். அவரது பாட்டு என் மனதில் தீவிரமான பதிவை உண்டுபண்ணியிருந்தது என்ற ஒரே காரணத்தால் ஒரு முறை அவரது பாடலொன்றை பள்ளிநிகழ்ச்சியில் பாடினேன். பாடலின் வரிகளோ அதன் மெட்டோ எதுவுமே சரியாக தெரியாமல் மேடையேறி மானத்தை வாங்கினேன். மேற்கொண்டு நான் பாட்டே பாடக்கூடாது என்று எச்சரித்தார் தலைமையாசிரியர்.

'அண்ணாச்சி' என்று நாங்கள் அழைத்த ஒருவரிடமிருந்து தான் டி.எம்.எஸ் பற்றிய என் நினைவுகள் ஆரம்பிக்கின்றன. 'அண்ணாச்சி' என்றுதான் எல்லா தமிழர்களையும் எங்களூரில் சொல்வார்கள். மற்றபடி அவர் பெயரே தெரியவில்லை. அவர் ஒரு தேநீர் கடையில் தினக்கூலித் தொழிலாளர். கரிய மெலிந்த மனிதர். முகத்தில் சின்னப்பையன்களைப்போல ஒரு இனிய சிரிப்பு உண்டு. 'சத்தியமே லட்சியமாய் கொள்ளடா' பாட்டை அவர்
அருமையாக பாடுவார். அதைக் கேட்டநாள் முதல் அந்த அண்ணாச்சியே என் கதாநாயகன் என உறுதிபூண்டேன்.

Monday, May 20, 2013

காற்றில் கலந்த செங்கொடி ஓ.ஏ.ராமையா

-இரா.வினோத்-


இலங்கையின் மலையகத்தில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர் நலனுக்காகவும், தமிழர் உரிமைக்காகவும் துடி துடித்த மூத்த தொழிற்சங்கவாதி ஓ.ஏ.ராமையா நேற்றிரவு காற்றில் கலந்தார். கடந்த ஓராண்டாக உடல் நலிவுற்று இருந்த அவருக்கு அகவை 76!

''உலகத்தில் பசி... பட்டினி என்ற இருபெரும் பூதங்கள் தோன்றிய நாள் முதல் இன்று வரை உழைத்து உழைத்து ஓடாகி போன‌ பாட்டாளி வர்க்கத்தின் ரத்தம் கொடூரமாக உறிஞ்சப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. உலகமே கைக்குள் சுருங்கி விட்டதாக நாம் காலரை தூக்கி விட்டு கொண்டாலும், கால் வயிற்று கஞ்சிக்கு ஏங்கி தவிக்கும் வறண்ட நாவுகள் எத்தியோப்பியாவிலும், சோமாளியாவிலும், பாலைவனங்களிலும் மட்டுமின்றி பசும் போர்வைப் போர்த்தி செழுமையாக காட்சியளிக்கும் மலையகத்திலும் ஏராளமாக இருக்கின்றன.

இந்த அவல நிலை பொறுக்காமலே 'தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என சீறினான் பாரதி. மகாகவியும் மண்ணாகி போய் நூறாண்டு ஆகப்போகிறது. இன்னமும் மக்களின் வாழ்நிலை மாறலையே தம்பி!'' நான்கு மாதங்களுக்கு முன்பு ஓ.ஏ.ராமையாவை ஹட்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தபோது கடைசியாக உதிர்த்த உயிருள்ள வார்த்தைகள் இவை.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தென் தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது, இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்கு பஞ்சம் பிழைக்க சென்ற பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் ஒன்று தான் ராமையாவின் குடும்பமும். இலங்கையின் கண்டி மலை தொடரில் இருக்கும் நாவலபிட்டி, பூண்டுலோயாவில் உள்ள தோட்டமொன்றில் 1938ஆம் ஆண்டில் பிறந்தார். 'என்னுடைய தாய் நாடு இலங்கை என்றாலும், தமிழ் நாட்டுக்குள் கால் வைத்தாலே உடம்பெல்லாம் சிலிர்த்து விடும். என்னுடைய வேரும் வேரடி மண்ணும் இங்கே தானே இருக்கிறது. மறுத்தாலும், வெறுத்தாலும் இந்தியா என் தந்தை நாடு' என அடிக்கடி நினைவுகளை அசைப்போடுவார்.

இளம் வயது முதலே சமூக பிரச்னைக‌ளில் அக்கறை கொண்டிருந்த ஓ.ஏ.ராமையா 1950களின் இறுதியில் தனது வாழ்க்கையைத் தொழிற்சங்கத்தோடு இணைத்து கொண்டார். இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளராக இருந்த போது, தேயிலைக் கூடையில் தேசத்தை சுமக்கும் மலையகத் தமிழர்களுக்காக போராடி பல்வேறு உரிமைகளை பெற்று கொடுத்திருக்கிறார்.

Sunday, May 12, 2013

இசைப்பார் இல்லை என்பதால் அந்த ராகம் இல்லாமலா போய்விடும்?

-சி.மெளனகுரு-

(70 களில் ஈழத்து நாடக அரங்கின் போக்குகள் பற்றியும் கந்தன்
கருணை நாடகப் பங்கேற்பு பற்றியுமான சிவ அனுபவப்
பதிவுகள்)


அரங்கு அரசியல் பேசியது

1969ஆம் ஆண்டு ஈழத்து தமிழ் அரங்க வரலாற்றில் மிக முக்கியமானதொரு ஆண்டாகும். அக்காலகட்டத்தில் அரங்கு அரசியல் பேசியது மாத்திரமன்றி சமூக விடுதலைக்கான காத்திரமிக்கதொரு கருவியாகவும் செயற்பட்டது.

இவ்வாண்டிலேதான் யாழ்ப்பாணத்து இந்துக் கோயில்களை தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்கும் திறந்து விட வேண்டுமென்ற போராட்டம் தீவிரம் பெற்றது. சாதி அடக்கு முறைக்கு எதிரான இப்போரைத் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் முன்னின்று நடத்தியது. இப்போர் இந்து ஆகமக் கோயில்களின் கதவுகளைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக திறந்து விடுதல் என்ற நடவடிக்கையினை மையம் கொண்டபோது மட்டுவில் பன்றித் தலைச்சியம்மன் கோயிலும், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும் போராட்டக் களங்களாயின. குறிப்பாக மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் நுழைவுப் போராட்டம் இலங்கை எங்ஙனும் பேசப்பட்டது.
தமிழருக்காகத் தனிநாடு கேட்டவரும், அடங்காத் தமிழர் என அழைக்கப்பட்டவருமான திரு. சி. சுந்தரலிங்கம் அவர்களே தமிழருள் ஒரு பிரிவினரான தாழ்த்தப்பட்ட தமிழ் மக்கள் கோயிலினுள் நுழைவதை மூர்க்கமாக எதிர்த்தமையையும் அன்றைய பிரபல தமிழ்த் தலைவர்கள் எனக் கருதப்பட்டோர் பலர் இப்போராட்டம் பற்றி மௌனம் சாதித்தமையையும் தமிழ் கூறும் நல்லுலகம் வியப்போடு பார்த்த காலம் அது.

போராட்டமும் போராளிகளும்

அப்போராட்டம் ஈழம் எங்ஙணும் பரந்து வாழ்ந்த முற்போக்குச் சிந்தனகள் கொண்ட மனிதாபிமான அறிஞர்களதும், கலைஞர்களதும், எழுத்தாளர்களதும் மனச்சாட்சியை உலுப்பி விட்டிருந்தது. இவர்கள் தம் எழுத்தாலும், செயலாலும் சத்தியம் மிகுந்த அப்போராட்டத்திற்கு ஆதரவு நல்கினர்.அப்போராட்டத்தில் இளம் போராளிகள் பலர் உருவாகினர். அவ்வுரிமைப் போரில் பங்கு கொண்ட பலருக்கு அன்று பிரபலியமாகியிருந்த மாசே - துங் சிந்தனைகளும் மாபெரும் சீனக் கலாச்சாரப் புரட்சியும் ஆதர்சங்களாயிருந்தன.
தமிழர் மத்தியிலே காணப்பட்ட தீண்டாமைக்கும் சாதிக் கொடுமைக்கும் எதிராக கலைஞர்களும் எழுத்தாளர்களும் அன்று ஒன்று திரண்டனர் தம் பேனாக்களைத் தூக்கினர்..
போராடிய மக்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் இரத்தக் கடன் என்ற தலைப்பில் சாதி எதிர்ப்பு போராட்டக் கவிதைத் தொகுதி ஒன்றினை மட்டக்களப்பிலிருந்து கவிஞர் சுபத்திரன் வெளியிட்டார்.

கலைச்சங்மம்


Thursday, May 02, 2013

பு.ஜ.மா.லெ.கட்சியின் புரட்சிகர மேதின ஊர்வலம் யாழ்ப்பாணம் 2013

கொட்டும் மழையில் சுன்னாகம் சந்தை வளாகத்தில் பிற்பகல் 2 மணிக்கு சைக்கிள் பேரணியுடன் ஆரம்பித்து யாழ் ஸ்ரான்லி வீதியில் உள்ள பட்டப்படிப்புகள் வளாகத்தில் பிற்பகல் 4 மணிக்கு கூட்டமும் இடம்பெற்றது.

Wednesday, May 01, 2013

சபாலிங்கம்

-
-ந.சுசீந்திரன்-
[1994 ஆம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி ச. சபாலிங்கம் அவர்கள் பிரான்ஸ் தேசத்தின் தலைநகர் பாரிசில் அவரது இல்லத்தில் வைத்து புலிகளின் கொலைப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 12.05.1994 இல் சபாலிங்கத்தின் உடல் எரியூட்டப்பட்டது. அன்றைய தினத்தில் இறுதி அஞ்சலிக்காக மயானதில் சுமார் 500க்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். அங்கு நடந்த மயான இறுதி அஞ்சலிக் கூட்டத்தில் ந.சுசீந்திரன் ஆற்றிய உரை.] 

காலத்தின் சாட்சிகளை அழித்துக் கொண்டே இருங்கள். நீங்கள் எழுதப்போகும் எங்கள் வரலாற்றை வாசிக்க இறுதியில் யார் இருக்கப் போகின்றார்கள்? தொடர்ந்தும் துப்பாக்கிகளின் கீழ்ப்படிவின் முன்னினையில் வரலாற்றைப் படிக்கவும் பாடமாக்கவும் சாம்பல் மேடுகளும் எலும்புத்தோட்டங்களும்…! இன்னும் போதாதா உங்களுக்கு? 

தின்ற மண்ணில் அவன் செத்து, அவன் அழைந்த புழுதியில் அவனது குருதியோடி, அவன் அலம்பியதண்ணீரில் அவன் அஸ்தி கரைந்து போவதை தடுத்துவிட மட்டும் உங்களால் இன்று முடிந்திருக்கின்றது. இவன் பதித்த தடயங்களை உங்கள் துப்பாக்கிகள், துர்ப் பாக்கிகள் ஒன்றும் செய்துவிடமுடியாது. மாற்றுக் கருத்தின் சிறு பொறிகளைக்கூட கண்டு குலை நடுக்கங் கொள்ளும் கோழை எப்போதுமே கொடூரமானவனாகத்தான் இருப்பான். 

Sunday, April 21, 2013

இளையதலைமுறைக்கு புதிய வாசல்






ஆசிரியர் சிதம்பரப்பிள்ளை அவர்களின் நினைவாக


-இராகவன்-
காலச்சுவடு என்ற பெயரை 2001 பிற்பகுதியில் நண்பர் குப்பிழான் ஐ. சண்முகன் வாயிலாகத்தான் நான் முதன் முதலாகக் கேள்வியுற்றேன். 1988 காலப் பகுதியில் குப்பிழான் ஐ. சண்முகன் அவர்கள் தமிழகத்திற்கு வந்து சுந்தர ராமசாமி வீட்டில் தங்கியிருந்ததாகவும் தான் இதுவரை சந்தித்த மனிதர்களுள் கேண்மை பூண்டு விருந்தோம்புவதில் சுந்தரராமசாமி போல் ஒருவரை எடுத்துக்காட்ட இயலாதென்றும் கதை கதையாகச் சொல்லி சுந்தர ராமசாமியின் மகள் தைலாவின் ஒளிப்படத்தையும் எனக்குக் காட்டியிருக்கிறார். எனினும் நான் காலச்சுவடு இதழைக் கண்டது தேவதாசனின் ‘சலன சித்திரம்’ அலுவலகத்தில்தான். தேவதாசன் ஈழத்துத் தமிழ் சினிமாவை வளப்படுத்தப் போகிறேனென ‘சலன சித்திரம்’ அமைப்பைத் தொடங்கினார். அப்போதுதான் ‘பாரதி’ திரைப்படம் வெளியாகியிருந்தது. தேவதாசன் ‘பாரதி’ திரைப்படம் குறித்து ஈழம் தமிழகம் மற்றும் புலம்பெயர் சஞ்சிகைகளில் வெளிவந்த விமர்சனக் கட்டுரைகளைத் தொகுத்து ‘பாரதி - திரைப்பட விமர்சனத் திரட்டு’ என்ற நூலை சலன சித்திர வெளியீடாகக் கொண்டுவந்திருந்தார். அந்நூல் குறித்துக் காலச்சுவடில் கண்ணன் ‘சலனபாரதி’ என்ற தலைப்பில் ஒரு விமர்சனக் குறிப்பை எழுதியிருந்தார். அக்குறிப்பு வெளியான இதழையே தேவதாசன் சலன சித்திரம் அலுவலகத்தில் பார்வைக்காக வைத்திருந்தார். அவ்விதழை எடுத்துப் புரட்டிப் பார்த்தபோது வடிவமைப்பும் உள்ளடக்கமும் அதுவரை நான் பார்த்திருந்த இதழ்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. எனினும் அவ்விதழை வீட்டிற்கு எடுத்துச்சென்று வாசிக்கத் தேவதாசன் அனுமதிக்க வில்லை.2002 பிற்பகுதியில் பருத்தித்துறைக் காணிப் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் நண்பர் உமாகாந்தன் ஒருநாள் தமது அலுவலகத்திற்கு காணியுறுதி அலுவலாக ஒருவர் வந்ததாகவும் அவர் பெயர் குலசிங்கம் என்றும் அவர் தீவிர இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடுடையவராகத் தோன்றுவதாகவும் விரும்பினால் புலோலியிலுள்ள தனது வீட்டிற்கு வரும்படி சொன்னதாகவும் என்னிடம் கூறினார். ஒருநாள் சனிக் கிழமை நானும் உமாகாந்தனும் புலோலியிலுள்ள குலசிங்கம் வீட்டிற்குப் போனோம். வீட்டில் ஒரு நூலகமே வைத்திருந்தார். யாழ் மாநகரசபை நூலகத்தில் கூட இல்லாத நூல்கள் எல்லாம் அந்த நூலகத்தில் இருந்ததைக் கண்டு பிரமிப்பிலாழ்ந்தோம். அங்கே காலச்சுவடு இதழ்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டோம். அவ்விதழ்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் விரும்பினால் வாங்கிக்கொள்ளலாம் என்றும் குலசிங்கம் சொன்னார். அப்போது எனக்கு வேலை இல்லை. அதனால் கையில் பணப்புழக்கமுமில்லை. ஆனால் உமாகாந்தனின் நிலமை வேறுவிதமானது. அதனால் 500ரூபா கொடுத்து 50 காலச்சுவடு இதழ்களைக் குலசிங்கத்திடம் வாங்கினார். காலச்சுவடு இதழொன்றில் குலசிங்கத்தின் நேர்காணலும் வெளியாகியிருந்தது. இவ்விதழை குலசிங்கம் எங்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார். அவரிடம் வாங்கிய 50 இதழ்களையும் ஆளுக்கு 25 எனப் பிரித்து வாசித்துப் பரிமாறிக்கொள்ளத் தீர்மானித்தோம்.

Thursday, April 18, 2013

சீனா புதிய சவால்கள்- புதிய தலைவர்கள்


-மருதன்-
ஒரு பக்கம் பராக் ஒபாமாவின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கியிருக்கிறது. மற்றொரு பக்கம், சீனாவில் ஹூ ஜிண்டாவ் தனது இரண்டாவது பதவிக்காலத்தை முடிக்கும் தருவாயில் இருக்கிறார். இந்தக் கட்டுரை சீனாவின் புதிய தலைமை குறித்தும் அந்நாடு எதிர்கொண்டுள்ள முக்கியப் பிரச்னைகள் குறித்தும் சுருக்கமாக ஆராய்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு
சீனாவின் பதினெட்டாவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு கடந்த நவம்பர் 14ம் தேதி நடந்து முடிந்தது. 1.4 பில்லியன் சீனர்களை ஆளப்போகும் ஒரு புதிய தலைமையை சீனா இந்த மாநாட்டில் அறிமுகம் செய்துவைத்துள்ளது. சீனாவின் உயர்ந்த அதிகார மையமான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ ஸ்டாண்டிங் கமிட்டியில் இந்த முறை ஏழு பேர் இடம்பெறுகிறார்கள். சீனா முழுவதிலும் இருந்து திரண்டு வந்த 2200 பிரதிநிதிகள் இவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.  பத்தாண்டுகள் சீனாவை வழிநடத்திச் சென்ற ஹூ ஜிண்டாவின் அதிபர் பதவிக்காலம் மார்ச் 2013ல் முடிவடைகிறது. புதிய அதிபராக ஜி ஜின்பிங் அப்போது பொறுப்பேற்பார்.