Showing posts with label மௌனகுரு. Show all posts
Showing posts with label மௌனகுரு. Show all posts

Sunday, May 12, 2013

இசைப்பார் இல்லை என்பதால் அந்த ராகம் இல்லாமலா போய்விடும்?

-சி.மெளனகுரு-

(70 களில் ஈழத்து நாடக அரங்கின் போக்குகள் பற்றியும் கந்தன்
கருணை நாடகப் பங்கேற்பு பற்றியுமான சிவ அனுபவப்
பதிவுகள்)


அரங்கு அரசியல் பேசியது

1969ஆம் ஆண்டு ஈழத்து தமிழ் அரங்க வரலாற்றில் மிக முக்கியமானதொரு ஆண்டாகும். அக்காலகட்டத்தில் அரங்கு அரசியல் பேசியது மாத்திரமன்றி சமூக விடுதலைக்கான காத்திரமிக்கதொரு கருவியாகவும் செயற்பட்டது.

இவ்வாண்டிலேதான் யாழ்ப்பாணத்து இந்துக் கோயில்களை தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்கும் திறந்து விட வேண்டுமென்ற போராட்டம் தீவிரம் பெற்றது. சாதி அடக்கு முறைக்கு எதிரான இப்போரைத் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் முன்னின்று நடத்தியது. இப்போர் இந்து ஆகமக் கோயில்களின் கதவுகளைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக திறந்து விடுதல் என்ற நடவடிக்கையினை மையம் கொண்டபோது மட்டுவில் பன்றித் தலைச்சியம்மன் கோயிலும், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும் போராட்டக் களங்களாயின. குறிப்பாக மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் நுழைவுப் போராட்டம் இலங்கை எங்ஙனும் பேசப்பட்டது.
தமிழருக்காகத் தனிநாடு கேட்டவரும், அடங்காத் தமிழர் என அழைக்கப்பட்டவருமான திரு. சி. சுந்தரலிங்கம் அவர்களே தமிழருள் ஒரு பிரிவினரான தாழ்த்தப்பட்ட தமிழ் மக்கள் கோயிலினுள் நுழைவதை மூர்க்கமாக எதிர்த்தமையையும் அன்றைய பிரபல தமிழ்த் தலைவர்கள் எனக் கருதப்பட்டோர் பலர் இப்போராட்டம் பற்றி மௌனம் சாதித்தமையையும் தமிழ் கூறும் நல்லுலகம் வியப்போடு பார்த்த காலம் அது.

போராட்டமும் போராளிகளும்

அப்போராட்டம் ஈழம் எங்ஙணும் பரந்து வாழ்ந்த முற்போக்குச் சிந்தனகள் கொண்ட மனிதாபிமான அறிஞர்களதும், கலைஞர்களதும், எழுத்தாளர்களதும் மனச்சாட்சியை உலுப்பி விட்டிருந்தது. இவர்கள் தம் எழுத்தாலும், செயலாலும் சத்தியம் மிகுந்த அப்போராட்டத்திற்கு ஆதரவு நல்கினர்.அப்போராட்டத்தில் இளம் போராளிகள் பலர் உருவாகினர். அவ்வுரிமைப் போரில் பங்கு கொண்ட பலருக்கு அன்று பிரபலியமாகியிருந்த மாசே - துங் சிந்தனைகளும் மாபெரும் சீனக் கலாச்சாரப் புரட்சியும் ஆதர்சங்களாயிருந்தன.
தமிழர் மத்தியிலே காணப்பட்ட தீண்டாமைக்கும் சாதிக் கொடுமைக்கும் எதிராக கலைஞர்களும் எழுத்தாளர்களும் அன்று ஒன்று திரண்டனர் தம் பேனாக்களைத் தூக்கினர்..
போராடிய மக்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் இரத்தக் கடன் என்ற தலைப்பில் சாதி எதிர்ப்பு போராட்டக் கவிதைத் தொகுதி ஒன்றினை மட்டக்களப்பிலிருந்து கவிஞர் சுபத்திரன் வெளியிட்டார்.

Tuesday, February 28, 2012

மௌனகுருவின் "இராவணேசனும்", மணிரத்தினத்தின் "ராவணனும்"

இரண்டு ஊடகங்கள், இரண்டு கலைஞர்கள், ஒரு கரு:
மணிரத்தினத்தின் "ராவணனும்", மௌனகுருவின் "இராவணேசனும்"

-க. மோகனதாசன்-
(விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக் கழகம். இலங்கை) 


ஒரு கலைஞன் தான் பார்த்து கேட்டு அனுபவித்த விடயங்களை தனக்கு கை வந்த ஊடகத்தினூடாக வெளிப்படுத்தும் போது அது கலையாகின்றது. கலைஞர்களுக்கிடையே வெளிப்படுத்தும் முறையிலும் கையாளும் உத்திகளிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இது அவர்களது அனுபவத்தினாலும் பயிற்சியினாலும் சூழலினாலும் வேறுபடுகின்றது. ஒரு கலைப்படைப்பில்  சமூகத்திலுள்ள பிரச்சினைகளும் அதிலிருந்து மீள்வற்கான வழிமுறைகளும் கூறப்படும் போது அதன் பெறுமதி இன்னும் அதிகரிக்கின்றது. கலையாக்கங்களில் சமூகத்தின் நிலைமைகளை பிரதிபலிப்போரில் பழைய கதைகளுக்கு புதிய வியாக்கியானங்களையும் புதிய கருத்தேற்றங்களையும் செய்வோரும் உள்ளனர். இது தழுவலாகவோ அல்லது அதே கதையமைப்புடன் சிறு மாற்றத்தினை மேற்கொள்ளும் முறைமையுடையதாகவோ அமைந்து காணப்படும். இராமாயணம் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய பல விடயங்களை உள்ளடக்கி யுள்ளது. இதனால்தான் பல இராமாயணங்கள் (கம்பர், வால்மீகி, வசிட்டர், போதாயினர், துளசி, சம்பூர்ணர்,….இராமாயணங்கள்) உருவாயின. இராமாயணம் சமூகத்திற்கான பல்வேறுபட்ட கருத்துக்களை முன் வைக்கின்றது. அந்தவகையில் இராமாயணக் கதையினை அடிப்படையாகக் கொண்டு, 2010ல் இராமாயணத்தைத் தழுவியதான கதையமைப்புடன் மணிரத்தினத்தின் இராவணணனும் (சினிமா) இராமாயணத்தின் யுத்த காண்டத்தை அடிப்படையாகக் கொண்டு மௌனகுருவின் இராவணேசனும்(நாடகம்) படைத்தளிக்கப்பட்டுள்ளன.