நாமும் எங்களால் ஆனது செய்வோம்...
இன்றையதினம் 30.8.20 யா/கரவெட்டி ஸ்ரீ நாரதவித்தியாலய சுற்றுச்சூழலிலுள்ள காலம் சென்ற சமூகத்தொண்டன் சீ.செல்லக்கிளி அவர்களின் வேலி செப்பனிடப்பட்டது. செப்பனிடும் பணியில் சி.புஸ்பாக்கா, தவம் அறக்கட்டளைச் செயற்பாட்டாளர் இ.சாள்ஸ். மற்றும் சாத்தியப்படுத்திய உறவுகளுக்கு நன்றி. அனுசரணை தவம் அறக்கட்டளை.Sunday, August 30, 2020
Tuesday, August 11, 2020
'நீண்ட காத்திருப்பு" எனும் நூல் வாசிப்பு கிளர்த்திய நினைவும் சோர்வும்.
-கரவைதாசன்-
கொமடோர் அஜித் போயகொட எனும் சிறீ லங்கா கடற்படைத் தளபதி எட்டு வருடங்கள் தன் "நீண்ட காத்திருப்பு" புலிகளின் சிறையில் வாடிய அனுபவத்தை அவர் அது ஒரு சிநேக அனுபவம் என சொல்ல எத்தணிக்கின்றார். அப்படி அவர் எத்தணிக்கின்றபோதும் புலிகளின் சிறையின் நிலவறையிலிருந்து கேட்கும் அலறல் சத்தங்கள் எனும் ஒற்றைச் சொல்லால் அனைத்தையும் போட்டுடைத்து விடுகிறார். நாய்க்கூடு, கால்விலங்கு, சித்திரைவதைக் கதிரை என கொமடோர் சொல்லக் கேட்டு பிரதியை கட்டமைத்திருக்கும் அரங்கியலாளார் சுனிலா கலப்பதி அவர்களின் எழுத்துக்களுடனான அநுபவம். இவ்வகை எழுத்தை உற்பத்தி எனும் பிரிவிலிருந்து விலத்தி படைப்பிலக்கியமாக்கியிருக்கிறது. தமிழ் மொழிபெயர்ப்பும் தமிழ் வாசகர்களை தேவா,சத்தியதேவன், கெளரிபாலன் இவர்களின் கூட்டு மொழிபெயர்ப்பு சிரமப்படுத்தவில்லை. பொருத்தமான இலகுவான இலக்கியசொற்களை வரிகளில் குந்தியிருக்க செய்துள்ளார்கள். இஷ்டப்பட்டபடி எழுதி எங்களை கஷ்டப்படுத்தவில்லை. நான் எழுதுவது இப்புத்தகம் பற்றிய அறிமுகமோ அல்லது விமர்சனமோ அல்ல . அப்படியாயின் புத்தகத்தினை மூடி வைத்ததும். என்னை முழுவதுமாக கொமடோர் வியாபித்திருக்க வேண்டும். அல்லது புலிகளின் நேர்வும் எதிர்மறைவும் என்னை ஆக்கிரமித்திருக்க வேண்டும். இரண்டும் இல்லையெனில் புலிகளின் நீண்டகால சிறையிலிருந்து மீண்ட ஒருவர் எதிர் கொள்ளும் நேரடியான அரசநிர்வாகச் சிக்கல் அல்லது அவர் குடும்பத்தில் உறவுகளுக்குள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கலாகக் கூட இருந்திருக்க வேண்டும் .எதுவுமல்லாமல் மாறாக அப்புத்தகத்தில் வரும் புலிகளின் ஜெயிலர் நியூட்டன் என்னை முழுவதுமாக வியாபித்திருந்தார். அவரை மிருதுவான இதயம் படைத்த ஜெயிலர் என கொமடோர் விளிக்கின்றபோதெல்லாம் எனது பாடசாலைத் தோழனாக பாடசாலை உதைபந்தாட்டக்குழுவின் சக அணித்தோழனாக என் அறை முழுவதும் நியூட்டன் (சிவகுமார்) ஐக்குண்டனாக வியாபித்து நின்றான். ஒரு தடவை டென்மார்க்கிலிருந்து தனது பிழைப்புக்காக வன்னிக்குப் போன ஒருவர் டென்மார்க்கில் நான் ஒரு கம்மனாட்டி கம்யூனிஸ்ட் புலிகளுக்கு வெளியே பத்திரிகை நடத்துகிறேனென இல்லாததும் பொல்லாததும் சொல்லிவைத்திருக்கிறார். ஆனால் அதனை மறுதலித்து எனது அறம் சார்ந்து நியூட்டன் கதைத்ததாக அறிந்தேன். பின் என்னோடு தொடர்பு கொண்டு இலங்கைத்தீவுக்கு என்னை வர வேண்டாமென நியூட்டன் எச்சரித்தான். அது கொமெண்டோர் கூறவதுபோல் நியூட்டனின் மிருதுவான பக்கமாக இருக்கலாம். இப்படி எங்களோடு படித்து எங்களோடு கூட விளையாடியத் திரிந்த எத்தனையோ பேரை கொன்று தின்றதும் கொடியவயவர்களாக்கியதும் இப்புத்தக வரிகளுக்குள் இட்டு நிரப்பதாக பக்கங்களாக இப்புத்தகம் வந்திருப்பதாக அங்கலாய்த்தேன். ஐயகோ ஒரு சிறைக் கைதியின் சொந்த அநுபவத்தினை வாசிக்கிறேன் எனும் நிசத்தை, என்ற சிற்றறிவை ஏதோ சிறை செய்திருக்கின்றது. எங்களோடு ஒன்றாக படித்த யாராயினும் இப்புத்தகத்தினை வாசிக்கக் கிடைப்பின் எனக்கு ஏற்பட்ட இவ்வுணர்வுத் தொற்று ஏற்படாவண்ணம் உங்களை சுதாகரித்துக் கொண்டு வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
Labels:
-கரவைதாசன்-
Sunday, July 05, 2020
கலீல் ஜிப்ரானும் எனது பேரக்குழந்தைகளும்
-கரவைதாசன்-
இந்தக் கிழமை நேற்றும் இன்றும் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பொழுது கழிகிறது. எங்களது பிள்ளைகள் மூவரையும் நல்ல மனிதர்களாய் வளர்த்தெடுத்துவிட்டோம் என்ற மதர்ப்பு எங்களிடமிருந்தது.
"பிள்ளைகள் எங்களிடமிருந்து வந்தவர்கள் ஆனாலும் அவர்கள் எங்களவர்கள் அல்ல " என்ற கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளுக்கு எங்களிடம் பொருள் இருந்ததில்லை.
எங்களது பேரக்குழந்தைகளுடன் கழிக்கின்ற அநேக பொழுதுகளை நான் நிழலாகவோ அல்லது காணொளியாகவோ பதிவு செய்து நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்ந்து வந்திருக்கின்றேன். ஆனாலும் இதனை எங்களது பிள்ளைகள் கூடுமானவரை தவிர்த்து வருகிறார்கள் என்பது எனது மகன் ஸ்ரெலினுடன் உரையாடும்போது தெரிய வந்தது. அவரிடம் கேட்டபோது அவர் சொன்னார் "நாங்கள் அங்கரின்(எனது பெயரன்) படங்களை பகிர்ந்து மகிழலாம் ஆனால் அதனை அனுசரிக்கின்ற எந்த அறிவும் அவருக்கு இப்போது இல்லை. அவர் வளர்ந்த பின் ஏன் இப்படி செய்தீர்கள்? எனக் கேட்டால் எங்களிடம் பதில் இல்லாமல்ப் போகலாம் அப்பா. எனவே தான் தவிர்த்து வருகிறோம்" எனப் பதிலிறுத்தார். எனது மகனிடம் கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளுக்கு பொருள் இருந்தது கண்டு மகனை நினைத்து எனக்குள் இன்னும் மதர்ப்பு.
இந்த நிழல் எனது பெயரன் அகரன் (மகளின் மகன்) நேற்றைய தினம் எனது அலைபேசியிலிருந்து கிளிக் செய்தது.

karavaithasan,
கரவைதாசன்,
கலீல் ஜிப்ரான்
இரண்டு தலையணையும் ஒரு படுக்கையும்....
-கரவைதாசன்-
எனது அப்பாவும் சகோதரனும் மொட்டைமாடியிலே பாயை போட்டுவிட்டு மல்லாந்து படுத்துக் கொண்டு கனவு காண்பார்கள் கூடவே என்னையும் அழைத்து நடுவில் படுக்கவைப்பார்கள் நான் என்ன காண்கிறீர்களெனக் கேட்டால் ஒவ்வொன்றாக சொல்வார்கள். அவர்களின் கனவுகளை வேறு எவர்தனும் காண முடியாது அப்படி வித்தியாசமாக இருக்கும்.என்னையும் சேர்ந்து கனவு காணச்சொல்வார்கள் நான் தான் கேள்விச் செவியனாச்சே கேட்பேன் "என்னத்தைக் காண? "யார் சொன்னதாக ஞாபகமில்லை என் காதில் விழுந்தது "எங்கள் ஊர்க் குளத்தில் எத்தனை பேர் அடிக்கழுவினால் குளத்து நீர் வற்றும்?" ம்.. வித்தியாசம் கட்டுடைப்பான கனவு தான். ஒருவர் சொன்னது கேட்டது " மல்லாந்து படுத்துக் கொண்டு குனிந்து செய்கின்ற வேலைக்கு கனவென்று பெயரோ இதுக்க வேற கட்டுடைப்பாம்." மற்றவர். நான் சொன்னேன் "வானத்தைப் பார்த்துக் கொண்டு காணூங்கள்." இருவரும் "ஆதோ அந்த நட்சந்திரங்களைப் பாருங்கள் அவை விளக்கானால் எரிவதுக்கு எவ்வளவு எண்ணை தேவைப்படும்?. அவை தொழிலாளவர்க்கத்தின் நம்பிக்கையின் குறியீடு அல்லவா இப்பவும்கூட பிரகாசமாக எரிந்து கொண்டுதான் இருக்கின்றன. நான் மகிழ்ந்திருந்தேன். ஆகா நட்சத்திரம் பற்றி கனவு காண்கிறார்கள் நானும் சேர்ந்து கனவு கண்டு கொண்டிருந்தேன். திடீரென வானத்தை நோக்கி துப்பத் தொடங்கினார்கள். நான் கேட்டேன் "என்ன ஆச்சு?ஏன் இப்படி? " இருவரும் முந்திக் கொண்டு சொன்னார்கள். நட்சத்திரங்களை துப்பி அணைத்துவிட்டு எண்ணையின் தேவையை கணக்கிடப்போகிறோம். யார் அதிகம் அணைக்கிறாரோ அவரே விபரமானவர். எஃகி, எஃகி துப்பத் தொடங்கினார்கள். முகம் தலையணையென தெப்பமாக அவர்களின் முகங்கள்மட்டுமல்ல எனது முகமும் எச்சில் நெடில் எங்கு சென்று கழுவுவது? ஏற்கெனவே அடிக்கழுவி குளத்தைக் கலக்கி......
22.6.20
Labels:
karavaithasan,
கரவைதாசன்
Sunday, June 14, 2020
யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்த அதிபரும் காணாமல் ஆக்கப்பட்டவரும்
-கரவைதாசன்-
இலங்கைக் கொடியின் கீழ் "யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்த அதிபரும் காணாமல் ஆக்கப்பட்டவரும்" எனும் தலைப்பில் சர்வதேச மன்னிப்புச் சபை டென்மார்க் காலாண்டிதலில் இந்த மாதம் வந்த அனே லீ லண்ட்ஸ்ரெத் Anne lea Landsted அவர்களின் கட்டுரை படிக்க கிடைத்தது. நடந்து முடிந்த இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் வடபகுதியில் 90.000க்கு மேற்பட்ட விதவைகள் ஆக்கப்பட்ட பெண்கள், 100.000 அதிகமாக காணமல்ஆக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்ட மனிதர்கள், மஞ்சள் தபால் உறைகளில் பிள்ளைகளின் புகைப்படங்களுடன் பிள்ளைகளைத் தேடும் அன்னையர்கள் அல்லது மனைவிமார் உட்பட Inform அமைப்பினைச் சேர்ந்த நண்பர் றூக்கி பெர்ணான்டோவின் விபரம், கருத்துக்கள், ஊடகவியலாளர்களின் களவிபரம் போன்ற விசயதானங்கள் கட்டுரை எங்கும் பரவிக்கிடந்தன. கட்டுரையின் மையப் புள்ளியாக கூறப்படுவது. இலங்கை நாட்டின் அதிபர் கோதபாய ராஜபக்ச சொல்கிறார் காணமல் போனவர் யாவரும் இறந்துவிட்டார்கள். அவர்களின் பெயரில் அவர்களின் குடுபங்களுக்கு இலங்கை ரூபா.6000 ஜீவனாம்சப் பணமாக மாதமாதம் தருகிறோம். பெற்றுக்கொள்ளுங்கள் என்பதே. ஆனால் அன்னையர்களில் கேள்வி கேட்போரின் கோரிக்கை எங்களுக்கு பணம் வேண்டாம் காணமல் ஆக்கப்பட்டவர்கள் நிலவரத்தினை உறுதிப்படுத்துங்கள் என்பதே. உறுதிப்படுத்துங்கள் எனக் கேட்பது கருத்துச் சுதந்திரம். நடந்தது நடந்து முடிந்துவிட்டது. வாருங்கள் அபிவிருத்தியினை நோக்கிப் போவோம் என்பது மறுபக்க நியாயம். கட்டுரையை படித்து முடித்ததும் எனக்குள் சிந்தனைச் சிதறல் யாழ்ப்பாணம் நூலகத்தை எரிச்சுப்போட்டு எரிச்சதுக்கான எந்த தடயமும் இல்லாமல் புதிதாக ஒரு கட்டடத்தினைக் கட்டித்தந்ததும் அதனை யார் திறப்பது என சண்டை பிடியுங்கள் எனவிட்டதுக்கும் இந்த பொறிமுறைக்கும் சம்மந்தம் ஏதாவது இருக்குமோ?

Saturday, June 13, 2020
பன்னிரண்டு இளநீல ரோஜாக்கள்
-தமயந்தி-
காலை பத்து மணி. படுக்கையை விட்டு எழுந்திருக்க மனமில்லை. அடித்துப் போட்டாற்போல் அசதியாக இருந்தது. கடந்த பல வருடங்களாக இந்த தினத்தில் காலை ஏழுமணியிலிருந்து இரவு ஏழுமணிவரை தெருத்தெருவாக அலைவேன் கமெராவோடு. முந்நூறுக்கும் குறையாத படங்களைப் பிடித்துக் கமெராக் கூட்டுக்குள் அடைத்து வைத்திருப்பேன். பத்துப் பதினைந்து படங்களாவது மறுநாள் தினப்பத்திரிகையிலும் வெளியாகியிருக்கும். வழமையாகப் பிரசுரிக்கப்படும் எனது படங்கள் போலல்லாது, இந்தப் படங்கள் மட்டும் ஒருகணம் கன்னங்களை வருடிக் கொடுக்கும், மறுகணமே நகங்களால் நெஞ்சைக் கிழிக்கும். ஆனாலும் சற்றுநேரமாவது படங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்பேன்.
தேசத்தின் வான்பரப்பெங்கும் வியாபித்து ஒலிக்கும் எக்காளத்தொனிகளை அள்ளி முகங்களில் அப்பியபடி, வண்ணத்துப் பூச்சிகள்போல் சிறகடிக்கும் சிறுவர் பட்டாளங்கள் கைகளில் தேசியக்கொடிகளை ஏந்தியபடி பாடசாலை ஊர்வலங்கள், அமைப்புக்கள், அரசியற்கட்சிகள், படையணிகளின் அணிவகுப்புக்கள், இயல், இசை, நாடகப் பள்ளிகளின் வீதிநிகழ்வுகள்..... இப்படி குடிகள்பூராவும் தெருவில் இறங்கிக் கொண்டாடி மகிழ்வர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வர். ஆண்கள் பெண்கள் சிறுவர் முதியோர்களென தமது தேசிய உடைகளில் தெருக்களை நிறைத்து வலம்வருவதைப் பார்க்க கொள்ளை அழகாக இருக்கும். நோர்வேயின் தேசியதினம் இன்று. எங்களுக்கென்றொரு நாட்டின் விடுதலைக்காகவும் யுத்தம் செய்தோம். மிக நீளமான யுத்தம். சுதந்திரமான எங்கள் தெருக்களிலும் இப்படி எமது சிறுவர்கள் கைகளில் தாங்கிய கொடிகளை அசைத்தபடியும், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் சொல்லியபடியும் கொண்டாடித் திரிவர் என்ற கனவும் இருந்தது. தோற்றுப் போனவர்கள் ஆனோம். கைகள் வைத்துத் தைத்த சட்டைகளை, கைகளை இழந்த சிறுவர்களுக்கு அணிவித்து அழுபவரானோம்.
ஆனால், இன்று தூக்கம் கலையாதவோர் பட்சியைப்போல நள்ளிரவுச் சூரியதேசம் அடங்கிக் கிடக்கிறது.
-------------------
கொரோனா உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கி, நிலவறையில் சுயமுடக்கமாகி இன்றோடு எனக்கு எழுபத்தைந்தாவது நாள். இன்னும் இரண்டு மணி நேரத்தில் பூக்கடைக்காரக் கிழவி மார்கிரத்தா என்ற எனது பூவாத்தாவின் தோட்டத்துக்குப் போகவேண்டும். பல வாரங்களாகப் பூக்கடை திறக்கவில்லை. இனியும் எப்போ திறக்கப்படும் என்பது கிழவிக்கும் தெளிவில்லை. நேற்றுத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, நேராகவே தோட்டத்துக்கு இன்று பன்னிரண்டு மணிக்கு வரும்படி சொல்லியிருந்தாள் பூவாத்தா. இரண்டு கிலோமீற்றர் நடந்துதான் போக வேண்டும். ஒருவாறகப் படுக்கையை விட்டு எழுந்தாயிற்று.
Labels:
-தமயந்தி-
Monday, April 27, 2020
தமிழ்த் தாத்தா கந்த முருகேசனார்
ஈழத்துத் தமிழறிஞர். 'உபாத்தியாயர்' என்றும் 'தமிழ்த் தாத்தா' என்றும் அழைக்கப்பட்டவர். தமிழ் அறிஞராக, சமூக சீர்திருத்தவாதியாக, தர்க்கவாதியாக, பல்துறை விற்பன்னராக வாழ்ந்தவர் கந்த முருகேசனார்
இலங்கையின் வட மாகாணத்தில் தென்புலோலியில் #கந்தப்பர்_தெய்வானைப்_பிள்ளை இணையருக்கு இரண்டாவது மகனாக 27.04.1902 ஆம் ஆண்டு பிறந்தவர் முருகேசனார்.
அறிஞர் கந்த முருகேசனார் ஒரு வறிய விவசாய குடும்பத்தில் பிறந்து தமது ஆரம்பக் கல்வியை தரம் 1 முதல் 4 வரை தட்டாதெரு மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் அதன் பின்னர் புலோலி ஆண்கள் ஆங்கிலப் பாடசாலையென அழைக்கப்பட்ட வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும் கற்றதுடன் கல்வியை வறுமையின் காரணமாக இடையில் நிறுத்தினார்.
இதன் பின்னர் ஈழமணி ஆசிரியர், புலவர் என்று அன்றைய காலத்தில் அழைக்கப்பட்ட க. முருகேசபிள்ளை என்ற பெரியாரிடம் சிறிது காலம் கந்தபுராணமும் நன்னூல் காண்டிகையுரையும் கற்றார்.
பின்பு நன்னூல் யாப்பிலக்கண காரிகை போன்ற சிற்றிலக்கணங்களையும், தொல்காப்பியம் போன்ற பேரிலக்கண நூல்களையும் தானாகவே எவரினதும் உதவியுமின்றிப் படித்து ஒரு தலைசிறந்த அறிஞரானார்.
கந்த முருகேசனாருக்கு ஏறத்தாழ 25 ஆவது வயதில் கால்கள் வலுவிழந்தன. அதற்கு முன்பு புராணங்களுக்கு விரிவுரை சொன்னவர், பின்பு அதைத் தொடர முடியவில்லை.
இளமைக்காலத்தில் கோயில்களில் புராணங்களுக்குப் விரிவுரைசொன்ன இப்பெரியார் கால்கள் வலுவிழந்து, முடமான பின்னர் ஒரு #நாத்திகவாதியாக மாறி விட்டார். நாத்திகவாதியாக மாறினாலும் இரவு, பகல் என்று பாராது சகலவற்றையும் கற்றுப் பாண்டித்தியம் அடைந்தார்.
சிறந்த சிந்தனையாளராக மாறி #பொதுவுடைமைத் தத்துவங்கள் வாழ்க்கைத் தத்துவங்கள் யாவற்றையும் நன்கு கற்றார்.
உபாத்தியாயர்கந்த முருகேசனார் ஆரம்பத்தில் புற்றளை சாரதா வித்தியாசாலையில் (தற்போதைய புற்றளை மகா வித்தியாலயம்) ஆசிரியராகப் பணியாற்றினார்.
பின்னர் அவரது உறைவிடமான 'தமிழகம்' ஒரு திண்ணைப் பள்ளிக்கூடமாக மாறியது.
இயற்கைச் சூழலில், வெண் மணற்பரப்பில், இப்பள்ளிக் கூடம் பாலர் வகுப்பு முதல் பண்டிதர், வித்துவான் வகுப்பு வரை எப்போதும் மாணாக்கர்களால் நிறைந்திருக்கும்.
இங்கு தமிழ் மட்டுமின்றி சமயம், தர்க்கம், புவியியல், கணிதம் யாவும் இவரால் இத்திண்ணைப் பள்ளியில் கற்பிக்கப்பட்டன.
கந்தமுருகேசனாருக்கு #பேரறிஞர்_அண்ணா . #நாவலர் #இரா. #நெடுஞ்செழியன், #நாஞ்சில்_மனோகரன் ஆகிய தமிழக அரசியல் தலைவர்களோடும்,
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பொன் கந்தையா, பீற்றர் கெனமன் போன்றவர்களோடு நேரடித் தொடர்பும் தபால் மூலத் தொடர்பும் கொண்டிருந்தார்.
#தமிழகத்_தந்தை_பெரியாருடன் நேரடித் தொடர்பு இல்லை என்றாலும் அவரின் நகத்திகக் கருத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டவர். எனவே இவர் #ஈழத்துப்_பெரியார் எனவும் அழைக்கப்பெற்றார்.
கந்த முருகேசனார் பல நூல்களை எழுதி வெளியிட்டிருந்தார். அவரின் 'நல்லை நாவலன் கோவை' 1930 ஆம் ஆண்டு எழுதப்பட்டாலும் 69 ஆண்டுகளுக்குப் பின்பே புத்தக உருவாக வெளிவந்தது.
ஈழத்துப் பெரியார் கந்த முருகேசனார் தமது 63 ஆம் அகவையில் 14.6.1965 இல் புகழுடம் பெய்தினார்
கந்த முருகேசனாரின் நினைவாக புற்றளை மகா வித்தியாலயம், புற்றளை சனசமூக நிலையம், மந்திகை சந்தி ஆகியவற்றில் முருகேசனாரின் உருவச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
வாழ்க வளர்க அன்னாரின் புகழ்
Labels:
கந்த முருகேசனார்
Sunday, March 29, 2020
உலர் உணவும் முதல் உதவிப்பொருட்களும் தவம்அறக்கட்டளை
‐----‐-‐---------‐--------------------------------------------

தவம் அறக்கட்டளையினரால் உலர் உணவும் முதல் உதவிப்பொருட்களும் வழங்கப்பட்டன. ஒழுங்கு கவனிப்புக்கு நெல்லியடி பொலிசும் இராணுவமும் கிராம அலுவலரும் பணியில் இருந்தார்கள். பலவகையில் உதவிய யாழ்.நண்பர்கள் வட்டத்தினைச்சேர்ந்த நண்பர் Dr.சி.மோகன் அவர்களுக்கும் கிராம அலுவலர் க.ரதீசன் அவர்களுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் கிராமத்து இளைஞர்களுக்கும் தவம் அறக்கட்டளைச் செயற்பாட்டாளர் இ. சாள்ஸ் மற்றும் வை.திலக், அ.சாளினி அவர்களுக்கும் நன்றிகள். கூட்டமாக கூடாமல் எமது உறவுகள் ஒத்துழைத்தார்கள்.
Labels:
karavaithasan,
கன்பொல்லை
Saturday, January 18, 2020
புத்தாடையும் பொங்கலுமென..

14.01.2020 அன்றைய தினம் எமது கரவெட்டி மேற்கு j363 கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட எழுபது குடும்பங்களுடன் புத்தாடையும் பொங்கலுமென மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டோம் . இதனை சாத்தியப்படுத்திய கிராம அலுவலர் கணேசராசன் ரதீசன் அவர்களுக்கும் பல்வேறு கிராம நல அமைப்பைச் சேர்ந்த அ.சாளினி, வை.திலக், ந.நகுலேஸ்,ல.பமிலன், சி.குரு, யோ.பிரசீலன், கா.ஜெயரஞ்சி, இ.சாள்ஸ் இன்னும் உறுப்பினர்களுக்கும் மான்புடை நன்றி. நிகழ்வில் யாழ் நண்பர்கள் வட்டத்தின் தலைவர் . Dr.சிதம்பரம் மோகன் அவர்களும் அதிபர் க.இராசரத்தினம் தம்பதிகளும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஒருங்கமைப்பு அனுசரணை தவம் அறக்கட்டளையினர்.
Labels:
kanpollai,
karavaithasan
Sunday, December 15, 2019
-குந்தர் கிராஸ் (1999) நோபல் பரிசு ஏற்புரை.
தமிழில் : ஜி. குப்புசாமி
மதிப்புமிகுந்த ஸ்வீடிஷ் அகாதெமியின் உறுப்பினர்களே, சீமாட்டிகளே, கனவான்களே:
இந்த அரங்கும், என்னை இங்கு அழைத்திருக்கும் ஸ்வீடிஷ் அகாதெமியும், எனக்கு அந்நியமானவர்களில்லை. ஏறத்தாழ 14 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த எனது நாவலான “The Rat” இன் பிரளயமான கதையோட்டத்தில் , கோணல்மாணலான தளங்களில் செல்லும் சுற்றி வளைத்த நடையில், இதைப் போன்றதொரு சபையோரின் முன்னால் நிகழ்த்தப்படும் ஒரு புகழுரை இடம்பெறுவதை எனது ஒரு சில வாசகர்கள் இப்போது நினைவுப்படுத்திக்கொள்ளலாம். ஓர் சோதனைக் கூடத்தில் பயன்படுத்தப்படும் வெள்ளெலிக்கு – அங்கே புகழாரம் சூட்டப்படுகிறது.
அந்த எலிக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ‘அப்பாடா, கடைசியில் தரப்பட்டதே’ என்று ஒருவர் சொல்லலாம். அதன் பெயர் பல வருடங்களாக பட்டியலில் இருந்து வருகிறது. இறுதிப்பட்டியலில் இடம் பெற்றிருந்த இலட்சக்கணக்கான சோதனைக்கூட விலங்குகளிலில் – கினிப்பன்றியிலிருந்து ரீஸஸ் குரங்குவரை – வெள்ளை ரோமமும், சிவப்புக் கண்களும் கொண்ட இந்த எலி இறுதியில் உரிய கெளவரத்தைப் பெறுகிறது. எனது நாவலில் கதை சொல்லியின் அபிப்பிராயத்தின் படி, நோபல் பரிசிற்குகந்த மருத்துவ ஆராய்ச்சியிலும், மரபணு ஆராய்ச்சியிலும் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை விரித்து வைத்த ‘வாட்ஸன்’ மற்றும் ‘க்ரிக்கின்’ ஆய்வுகளிலும் மற்றெந்த பிராணிகளை விடவும் இந்த வெள்ளெலிகளே உபயோகப்படுத்தப்பட்டு, வெற்றிபெற உதவியிருக்கின்றன. இதற்குப் பிறகே சோளத்திலும் மற்ற காய்கறிகளிலும், இதர சோதனைக்கூட விலங்களிலும் படிபடியாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட சட்டபூர்வமான அனுமதி கிடைத்திருக்கிறது. இதனாலேயே, இந்நாவல் முடிவிற்கு வரும்போது மனிதகுலத்தின் இறுதிநாட்களில் உருவான ‘வாட்ஸன் க்ரிக்குகள்’ எனப்படும் ‘எலிமனிதர்கள்’ இவ்வுலகை கோலோச்சத் துவங்குகின்றனர். இவர்களிடம் மனித, விலங்கினத்தின் இரு நற்பண்புகளும் கலந்திருக்கின்றன. மனிதர்களிடம் பெரும்பான்மையாக எலியும், எலியிடம் பெரும்பான்மையாக மனிதனும் இருக்கின்றனர். உலகம் இக்கலப்பின் மூலம் தனது ஆரோக்கியத்தை மீட்டெடுத்துக் கொள்கிறது. மாபெரும் அண்ட வெடிப்பிற்குப் பின் வெறும் எலிகளும், கரப்பான் பூச்சிகளும் ஈக்களும் ஒருசில மீன், தவளை முட்டைகளுமே எஞ்சியிருக்கின்றன. அதனால், இக்களேபரத்திலிருந்து மீண்டும், ஒரு ஒழுங்கிற்கு கொண்டுவர, ஆச்சரியகரமாக பிழைத்திருக்கும் இந்த ‘வாட்ஸன் க்ரிக்குகள்’தான் அனைத்திற்கும் தலைமையேற்க வேண்டியிருக்கிறது.
Labels:
குந்தர் கிராஸ்,
ஜி. குப்புசாமி
Tuesday, November 26, 2019
எங்கள் தோழர் சண்முகம் வல்லி காலமானார் ..
-கரவைதாசன்-
இலங்கைத்தீவினில் இனவாதமே அரசியலின் மூலதனமாக போயுள்ள சூழலின் இடையே, அறுபதுகளில் கார்ல்மாக்சின் மூலதனத்தினை செவிவழியே உள்வாங்கிக்கொண்டு பொதுவுடைமைச் சமுதாயத்தின் முதல் படி சோஷலிச சமூகமே எனும் அரசியல் பட்டறிவில் வடபகுதியின் கன்பொல்லைக் கிராமத்தில் சமத்துவத்துக்கான போராட்டத்தில் தனது ஆற்றல் மிகு கரத்தில் ஆயுதம் ஏந்தி மாற்றம் வேண்டி நின்றவர் எங்கள் தோழர்.
1966களில் தொடங்கிய போராட்டம் 1971வரை நடைபெற்றது. அன்று தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் தலைமறைவாக வாழவேண்டிய சூழல். தலைமறைவில் ஒருநாள், அப்போது அவர் வாழ்ந்த வீடு ஸ்ரீநாரத வித்தியாலயத்தின் மைதானத்தினை ஒட்டியிருந்தது ஒரு மாலை வேளை போலீஸ்காரர்கள் அவரை கைது செய்ய சூழ்ந்து கொண்டார்கள். ஒரு சாஜனும் இரண்டு கான்ஸ்சடுபிளுமென மூவர் அவரை சூழ்ந்து நின்றனர். வேறு வழியின்றி மூவரையும் அடித்து சாய்த்து விட்டு தப்பித்துக் கொண்டார். அவ்வழக்கு உட்பட சிவானந்தன் எனும் சாதிவெறியனை நெல்லியடிச் சந்தியில் வைத்து தாக்கியது, சாதியம் பேசிய வல்லிபுரம் அவர்களின் மஹாத்மா சினிமா தியேட்டரினை சேதப்படுத்தியது, நெல்லியடி தேனீர்க்கடைப் பிரவேசம், ஆனையிறவில் வைத்து சாதிவெறியர்களின் வாகனங்களைத் தாக்கி திருப்பிவிட்டது, கொடிகாமத்திலும் சாவாகச்சேரியிலும் சாதிவெறியர்களின் வாகனங்களைத் தாக்கி திருப்பிவிட்டது என இவர் மீதும் இவரது தோழர்கள் மீதும் எட்டு வழக்குகள் போடப்பட்டிருந்தன. 1) முத்தன் தவராசா. 2)ஆழ்வான் சிவகுரு. 3)நல்லதம்பி இளையதம்பி. 4)இராசன் மார்க்கண்டன். 5) சண்முகம் வல்லி. 6)பசுவர் செல்வராசா. 7)வேலுப்பிள்ளை கிருஸ்ணபிள்ளை என எழு பேர் மீது கைக்குண்டு தயாரித்து தாக்கிய வழக்குகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டதில் இவர் ஐந்தாம் எதிரியாக அடையாளம் காணப்பட்டார்.
வடமராட்ச்சிப் பகுதியில் நெல்லியடி, மந்திகை, பருத்தித்துறை போன்ற நகரங்களில் இரட்டை குவளை முறை ஒழிக்கபட்டு பொதுஇடங்களில் இன்று சமத்துவம் பேணப்பாடுகின்றதென்றால் இவர் சிந்திய இரத்தமும் வேர்வையும் கூட ஆகுதியாகிப் போயிருக்கின்றது. அவரது குடும்பத்தின் துயரில் பங்குகொண்டு தோழருக்கு செங்கொடியினை தாழ்த்தி கனத்த இதயத்துடன் அஞ்சலிகள்.
Labels:
கரவைதாசன்,
சண்முகம் வல்லி
சி.கா. செந்திவேல் 76 அநுபவப்பகிர்வு...
-கரவைதாசன்-
தோழர்களும் நண்பர்களும் கூடுங்கள்! பயணத்தின் பகிர்வில்.....
கன்பொல்லையில் சமத்துவத்துக்கான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை தோழர் அடிக்கடி கிராமத்துக்கு வருவார், சிலவேளையில் பொழுது சாய்ந்துவிட்டால் இரவு தங்கி நின்று செல்வார். அப்போது கிராமத்தின் சனசமூக நிலையம் கனுவில் சனசமூக நிலையம் என்னும் பெயரில் பதிவு செய்யப்பட்டு முதலியார் கோவிலடியில் இயங்கி வந்தது. இரண்டு பெரிய வாங்கில்களும் ஒரு பெரிய வாசிப்பு மேசையும் அங்கிருந்தது. அங்கிருந்த ஒற்றை வாங்கிலில் தான் தோழர் தூங்குவார். அநேகமாக அப்போராட்ட காலத்தில் ஆண்கள் யாருமே வீடுகளில் தூங்குவது இல்லை அங்கிருந்த கோவில்களிலும் ஸ்ரீ நாரதா பாடசாலையிலும் பூவரசமரங்கள் குடைபிடித்து நின்ற இருண்ட ஒழுங்கைகளிலும் ஆண்கள் இரவிரவாக விழித்திருப்பார்கள். வாசிகசாலை கிராமத்தின் நடுப்பகுதியிலும் போலிஸ் வாகனம் உள்வரமுடியாத ஒழுங்கையுடன் அமைந்திருந்ததாலும் அங்கே தான் ஊருக்கு வரும் தோழர்களை தங்கவைப்பார்கள். காலையில் ஒரு குண்டுசீனிப்பாணும் தேனீரும் அல்லது இரண்டு தோசையும் தேனீரும் பாடசாலை வளவில் எல்லோருக்கும் போல் தோழருக்கும் கிடைக்கும் மதியம் யராவது ஒரு முக்கிய தோழர் ஒருவரின் வீட்டில் உணவருந்துவார். பின் நெல்லியடித் தோழர்கள் அவரை வந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்வார்கள். அந்நாட்களில் தோழருக்கும் எனது தந்தையார் தவத்தாருக்கும் இடையில் நடந்த சம்பாசனைகளின் அநுபவங்களை கடிதவாயிலாக எனக்கு எழுதியுள்ளார். அவற்றை நான் பாதுகாத்து வைத்துள்ளேன்.
Labels:
karavaithasan,
கரவைதாசன்,
சி.கா.செந்திவேல்
Monday, October 14, 2019
புத்தகங்கள் பறப்பைத் தருகின்றன...
-கரவைதாசன்-
நான் தனியாகவில்லை, புத்தகங்கள் என் தோழன். அவை எனக்கு பறப்பைத் தருகின்றன. புத்தகங்களை கொண்டாடினால் நீ என் தோழன் என் உறவு எல்லாம்.
" ஒரு வயோதிபன் மறையும்போது ஒரு நூலகம் மறைகிறது" என்கின்ற பிரக்ஞை ஆபிரிக்க மக்களிடம் இருக்கின்றது, எனில் அவர்களிடம் அந்த வழக்காற்றுமொழி இன்றும் வாழ்கின்றது என எழுத்தாளர் சினுவா அச்சுவா பறைகிறார்.
"லத்தீன் அமெரிக்க எழுத்தாளன் ஒவ்வொருவனும் தன் மக்கள் கடந்தகாலம் மற்றும் தேசியம் தேசிய வரலாறு என்றாகப்பட்ட கனத்த உடலை இழுத்துக்கொண்டு வருபவன்" என கவிஞர் பாபிலே நெருடே பறைகிறார்.
தொல்காப்பியம் குறைந்தது மூவாயிரம் வருடங்கள் பழமையானது என்கின்ற பறைதல் தமிழர்களிடம் இருக்கின்றது. சிங்கத்திடம் இருந்து வந்தவர்கள் நாம் என கூச்சத்துடன் உரைக்கிடினும் மகாவம்சம் எனும் நூலினை இலங்கையின் வரலாற்று நூல் என பறைகின்ற போக்கு சிங்கள மக்களிடம் இருக்கின்றது.
டன் எனும் ஒரு கிழவன் மலைக்குகை ஒன்றிலிருந்து டெனிஸ் மொழியின் இலக்கணத்தினை வகுத்தான் என்று பறைதல் டெனிஸ் மக்களிடம் இருக்கின்றது.
இப்படியாக மனித சமூகம் நூலினை நேசிப்பதால் பல விடயதானங்களை தெரிந்துகொள்ளவும் சில விடயதானங்களை அறிந்துகொள்ளவும் வழியாகின்றன
நூல்கள் தங்களின் சிறந்த தோழன் என நான் வாழுகின்ற வயன் நகரத்து மக்கள் கடந்த 01.10.19 அன்று டென்மார்க்கினிலே வாழ்கின்ற சகல இன மக்களுக்கும் பிரசங்கித்துள்ளார்கள். நூல்களின் நேசர்களுக்கு அன்று பொன்னான நாள். சுமார் பதின்நான்கு வருடங்களுக்கு முன்பாக றீப (Ribe) மற்றும் தெற்குஜூலன்ட் (Sønderjylland ) மாவட்டங்கள் கலாசார மண்டபம் ஒன்று கட்டுவத்துக்கு ஒதுக்கிய 32.6 மில்லியன் குறோணர்களை மூலதனமாக வைத்து 29 மீற்றர் உயரம் 7500 சதுர அடி பரப்பளவினையும் கொண்ட டென்மார்க்கின் புதியதும் நவீனத்துவதுமான நூலகம் மக்கள் பாவனைக்காக அன்றைய தினம் பி.ப.4.00 மணிக்கு வயன் நகர மேயர் ஈகோன் வ்பிராயர் (Egon Fræhr) அவர்களின் பிரதமஉரையுடன் திறந்து வைக்கப்பட்டது. அவரைத்தொடர்ந்து. கட்டடத் தொகுதியின் பகுதி உரிமையாளர் Morten Oxlund, பிரதம நூலகர்Kasper Østergaar Grønkjær, சிறப்புவிருந்தினர் Jacob Steglmann உரையாற்றினார்கள். மாலை 7.00 மணி கடந்தும் நிகழ்சிகள் நடந்தன.
ஒரு வாசகன் என்ற முறையில் எனக்கு அழைப்பு மின்னஞ்சல் ஊடாக கிடைத்தது. உண்மையில் நிகழ்ச்சி மதியம் 12.30 மணிக்கே தொடங்கியிருந்தது. அங்கே நூலகர் மேற்றவும் நூலகர் ஹன்னேயும் பத்து நூல்களை அறிமுகம் செய்து வைத்தார்கள். அவை
Tysklandsarbejderen Frederiks valg.
Katte øje
Høstkarl i himlen
Dansk,Dænsk,Darnsk
Hungerhjerte
Vinter
Mit navn er Lucy Barton
Lone star
Insekternes Planet
Hjertebank
நூல்கள் பற்றிய அவர்களது அறிமுக உரைகள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன. அஸ்கோ உயர் நிலைக்கல்லூரியின் முதல்வர், முன்னாள் நகரசபை மேயர் எனது முன்னாள் வரலாற்று விவுரையாளர் ஹான்ஸ் ஜோர்ன், அரசியலாளர்கள் நண்பர்கள் என பலரை சந்தித்து உரையாடும் வாய்ப்பும் கிட்டியது அன்றைய நாள் எங்கள் எல்லோர்க்கும் கொண்டாட்டமான நாளாக கழிந்தது .

Vejen bibliotek,
கரவைதாசன்
Thursday, October 10, 2019
அசுரன் திரைப்படம்
கிளர்த்திய நினைவுகள்......
-கரவைதாசன்-
சென்ற சனிக்கிழமை 05.10.19 வம்றுப் தியேட்டரில் "அசுரன்" திரைப்படம் பார்க்க கிடைத்தது. பூமணியின் வெக்கை நாவலின் கதைக்கருவினை இயக்குனர் வெற்றிமாறனும் அவரது குழுவினரும் திரையில் பேசுபொருள்
ஆக்கியிருந்தனர்.

நடிகர் தனுஷ் தொடக்கம் பசுபதிவரை நடிகர்கள் அப்பாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தார்கள்.
திரைக்கு வெளிச்சம் பாச்சியபோது பூமணியின் கதா பாத்திரங்கள் விம்பமாக துலாம்பரமாக தெரிந்தன, இல்லை வாழ்ந்தன. ஆரவாரமில்லாமல் எரிச்சலுட்டாத இசை. கிராமங்களை அச்சொட்டாக உருவகப்படுத்தியிருந்த கலை, பார்த்துப் பார்த்து செதுக்கியிருந்தார் வெற்றிமாறன். தொகுப்பு சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. சண்டைக்காட்சியில் சில சினிமாத்தனங்கள் இருந்தன வர்த்தக நோக்கில் அவை தவிர்க்க முடியாதவை. அதனிடையும் தனுஷ் தன் நடிப்பாற்றலை தெறிக்கவிட்டுள்ளார்.
தனுசும் அவரது சின்ன மகனும் போலீசிடம் அகப்பாடாமல் காட்டையண்டிய நீர்நிலைக்கூடாக பதுங்கிப் பதுங்கி செல்வதுடன் படம் தொடங்குகிறது. நீரில் நனையாமல் கையில் வைத்திருக்கும் பைகளை அவர்கள் பத்திரப்படுத்துகிறார்கள். உருண்டை கவனம் எனும் கதையாடல் அவர்களுக்கிடையில் நடக்கின்றது. பார்வையாளர்களுக்கு பின்பு தான் தெரிய வரும் உருண்டை என்பது தனுஷின் மகனால் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகள் என .
விரியும் கதையும் கதை காட்சிப்படுத்தப்பட்ட இடங்களும் என் நினைவுகளை கிளர்த்தி என்னை நிலைகுலைய வைத்துவிட்டன. ஆனையிறவு உப்பளம் , குறிஞ்சாத்தீவு அதையொட்டிய சிறு பத்தைக் காடுகள் அதே மணல்தரை அதை தெரிந்தவர்களுக்கு படம் காட்சிப் படுத்தப்பட்ட இடங்களை ஒத்துப் போவதை அவதானிப்பர். மட்டுமன்றி ஓலைகளால் வேயப்பட்ட வீடுகள் திரைப்படத்தில் காட்டப்பட்ட கிராம மக்களிடையே காணப்பட்ட ஒற்றுமை, சொந்தமாக தயாரிக்கப்பட்ட குண்டு என்பன நான் வாழ்ந்த கன்பொல்லைக் கிராமத்தினையும் அறுபதுகளில் அவர்கள் நடத்திய சாதியத்துக்கு எதிரான போராட்டங்களையும் நினைவுக்கு கொண்டுவந்தன. இன்று கன்பொல்லையில் ஒரு ஓலைவீடுகூட இல்லை என்பது வேறு கதை.
தனுஷின் பாத்திரம் கன்பொல்லைக்கிராமத்தின் சமத்துவத்துக்கான முன்னணிப் போராளிகள் மு.தவராசா, ஆ.சிவகுரு, இ .மார்கண்டன், ப.செல்வராசா, ந.இளையதம்பி, ச.வல்லி, வே.கிருஸ்ணபிள்ளை சி.காசியன் யாவரையும் ஒத்துப் போவதை நான் உணர்ந்தேன்.
ஆயினும் திரைப்படத்தின் இயங்கு நிலை எனது ஒரு பத்து வயது காலத்துக்கு என்னை பின்னோக்கி சரித்தது. தனுஷ் எனது தகப்பனார் தவத்தாராகவே (மு.தவராசா ) எனக்குத் தெரிந்தார். 1966 தொடக்கம் 1971 வரை சவாகச்சேரி, கொடிகாமம், பலாலி, தையிட்டி, ஆனையிறவு, எழுதுமட்டுவாள், சங்கானை, வன்னி என அவர் தலைமறைவாக வாழ்ந்த இடங்களையும் அந்த வாழ்வையும் எனக்கு நினைவு மீட்டின.
அப்போது அவருக்கு அக்கா, நான், தங்கை என மூன்று பிள்ளைகள் இருந்தோம். தலைமறைவான இடங்களுக்கு ஆண் பிள்ளையான என்னை மட்டும் அழைத்துப் பார்ப்பார். அவரது மூத்த சகோதரர் அபிமன்யு அவரிடம் என்னை அழைத்துச் செல்வார்.
ஆனையிறவு குறிஞ்சாத்தீவு உப்பளம் அவர் அதிக காலம் தலைமறைவாக இருந்தவிடம் அங்கு அவரது உறவினர்கள் நிறையப்பேர் இருந்தார்கள். நான் ஐயாவை பார்க்கப் போகும்போது இயக்கச்சியிலேயே பஸ்சிலிருந்து இறங்கிவிடுவோம் . அங்கு எங்களை அழைத்துச் செல்ல நடராசா மாமா, லக்குணம் மாமா அல்லது செல்வநாயகம் அத்தான், அல்லது சின்னராசா அத்தான் அநேகமாக வந்து நிற்பார்கள். காட்டு வழியால் எங்களை அழைத்துச் செல்வார்கள். அந்த நிலச்சாயல் அப்படியே திரைப்படத்தில் ஒட்டியிருந்தது. செய்தியறிந்த போலிஸ் ஒரு தடவை நடராசா மாமாவை பிடித்து நையப்புடைத்தார்கள் அப்போதும் அவர் மறைவிடத்தினை காட்டிக்கொடுக்கவில்லை. திரைப்படத்தில் இந்த ஒத்துப் போன பாங்குகள் தொண்டையை அடைத்து கண்ணீரை வரவழைத்தன.
தமிழ்திரையுலக இயக்குநர்கள் கற்பனைகளை புனைந்து சினிமா ரசிகர்களை உணர்வு தொற்றுதலுக்குள் ஆட்படுத்தி வைத்திருக்கின்றனர். அந்த வாலாயத்துள்ளும் சில செய்திகளை வைத்திருக்கும் வெற்றிமாறனை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. கல்வியும் ஒரு சிறந்த ஆயுதம் தான். (இதனை அடைய நாம் பெளத்தத்தில் சேர வேண்டியிருந்தது. என்பது எங்கள் கதை.) என் நினைவுகளைக் கிளர்த்திய படம். நன்றி வெற்றிமாறன்.....
Labels:
அசுரன்,
கரவைதாசன்,
கன்பொல்லைத்தவம்
Monday, September 02, 2019
எங்கள் தோழர் தங்கராசா அண்ணா
-கரவைதாசன்-
தோழர் தங்கராசா அவர்களின் நினைவுகளை எங்கிருந்து தொடங்குவது ?
ஒவ்வொன்றாக அவரது தோழர்கள் வே.பரமகுரு, கே.எஸ்.இரத்தினம், சீ .செல்லக்கிளி, ஆ.சுந்தரம் என இன்னும் பலர் அந்த மண்ணில் உதிர்ந்தபோதும் ஒற்றைப் பனைமரமாக அந்தக் கிராமத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தனித்துவமிக்க தோழராக அவர் வலம் வந்தார். கோட்பாட்டு ரீதியில் தனது கட்சியின் கோட்ப்பாடுகளுடன் அவர் தன்னை அடையாளப்படுத்தியபோதும். சமூகத்தில் தானும் ஒருவராக தன்னை இணைத்துக்கொண்டு அவர் தோப்பாகவே வாழ்ந்தார். ஒரு சோஷலிசவாதிக்குரிய அரிய பண்புகளுடன் கிராமத்தில் எரிந்துகொண்டிருக்கும் எந்த முதற் பிரச்சினையிலும் சிநேகமாக தீர்வு தேடும் ஒருவராக அவரை நான் அடையாளம் கண்டேன். அது கோவிலோ , சுடுகாடோ, கழகங்களோ அல்லது பாடசாலையோ பொதுச் செயற்பாடுகளில் பகை முரண்பாடுகளை களைந்து சினேகா முரண்பாடுகளை கண்டறிந்து அவற்றை இளைஞர் மத்தியில் பேசு பொருளாக்கி ஐக்கியத்தினை வலியுறுத்தும் நல்ல முன்னோடியாக அவரைக் கண்டேன். அவர் இல்லாத கிராமத்தில் கிராமத்தின் வளர்ச்சியில் எனது நம்பிக்கைகளில் நான் பயம் கொண்டுள்ளேன்.

தோழர் ஆ .தங்கராசா
Thursday, August 22, 2019
Monday, June 10, 2019
கன்பொல்லைக் கிராமத்தில் குடிநீர்ப் பிரச்சினை
-கரவைதாசன்-

கன்பொல்லைக் கிராமத்துக்கு ஏன் இலங்கை இராணுவம் தண்ணீர் கொண்டு வந்து தருகிறது? இதற்கு ஏன் தவம் அறக்கட்டளை அனுசரணை வழங்கியது?
கன்பொல்லைக் கிராமத்தில் பல்வேறு குறைபாடுகள் இன்றும் காணப்படுகிறது. அவற்றில் குடிநீர்ப் பிரச்சினை இன்று முதன்மை பிரச்சினையாகவுள்ளது . கடந்த ஏப்ரல் மாதம் நெல்லியடி பிரதேச சபையிலிருந்து கிராமத்தில் கிராமத்தின் அபிவிருத்தி என்னும் பெயரில் கிராமத்திலுள்ள அனைத்து பதிவு செய்யப்பட்ட பதிவு செய்யப்படாத பொதுநிறுவனங்கள் அழைத்து கலந்துரையாடப்பட்டது . அனைவரும் ஒருமித்த குரலில் குடிநீர்ப் பிரச்சினையினை முதன்மை பிரச்சினையாக முன்மொழிந்துள்ளனர் . அதனை கவனத்தில் எடுப்பதாக உறுதி அளித்தவர்கள், அசமந்தப் போக்காக நடந்துள்ளனர் . ஏற்கெனவே மாதிரிக்கிராமத்தில் பாவனையில் வைக்கப்பட்டிருந்த 500லீட்டர் கொள்ளவு கொண்ட ஒரு தாங்கி பிரதேச சபையிடம் இருக்கின்றது, ஆகவே இன்னுமொரு தாங்கியை கிராமத்தவர்கள் தங்களது முயற்சியில் சேகரித்துக்கொண்டால் இரண்டு தாங்கியிலும் தாங்கள் தண்ணீர் வழங்குவதாக கூறி வந்துள்ளனர் .இதற்கிடையில் மாதிரிக்கிராமத்தில் பாவனையில் வைக்கப்பட்டிருந்த 500லீட்டர் கொள்ளவு கொண்ட அந்த தாங்கியையும் அவர்கள் அப்புறப்படுத்திவிட்டார்களாம். இந்த விடயத்தினை எனது கவனத்துக்கு கிராமத்தின் முன்னேற்றச்சங்க செயலாளர் வெ.யோகராசா கொண்டு வந்தார். கூடவே ஏன் எங்களது அறக்கட்டளை ஒரு தாங்கியை எனது தந்தையாரின் நினைவாக வாங்கித்தரக் கூடாது எனவும் வினாவினார். முதலில் மறுத்த நான் அவரின் வைப்புறுத்தலின் பேரில் வாங்கிக்கொடுக்க சம்மதித்தேன்.அதன் பிரகாரம் 1000 லீற்றர் கொள்ளளவு கொண்ட ஒரு தாங்கியை எனது தந்தையாரின் நினைவாக தவம் அறக்கட்டளையினால் வாங்கிக்கொடுத்தோம் . அந்த தாங்கி ஸ்ரீ நாரதா வீதியில் வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியில் அவர்களிடமுள்ள தாங்கியிலும் எங்களால் வழங்கப்பட்ட தாங்கியிலும் குடி நீர் வழங்கும் படி பலமுறை கேட்டபோதும், பிரதேச சபையினரிடம் அசமந்தப் போக்கே காணப்பட்டதாக எனக்கு எட்டியது .இது விடயமாக நான் எனது நண்பர்களுடன் கதைத்து வடமாகாணத்தின் இராணுவ கட்டளைத் தளபதி கெட்டியாராச்சி தர்சன அவர்களுடன் கலந்து கதைத்தோம். அவர் எங்களிடம் அக்கறையோடு இந்த விடயத்தினை கேட்டறிந்தார். தாங்கள் 15,000 லீற்றர் குடிநீரினை கிழமைக்கு இரண்டு தடவை தந்து உதவுவதாக வாக்குத் தந்தார். அதன் அடிப்படையில் மேலும் இரண்டாயிரம் லீற்றர்கள் கொள்ளக்கூடிய இரண்டு தாங்கிகளை வாங்கி மாதிரிக் கிராமத்தில் கிராமமுன்னேற்ற சங்கத்துக்கு முன்பாக ஒன்றும் நாரதாவீதியில் ஒன்றும் விகாரைக் காணிக்கு முன்பாக கிராமத்தின் நடுப்பகுதியில் ஒன்றும் தாங்கிகளின் பாதுகாப்பு கருதி எங்களுக்கு தெரிந்தவர்களின் வளவுகளில் தாங்கிகளினை வைத்து விட்டு தண்ணீர் வடி குழாயினை பொதுவெளியில் சகலரும் பாவிக்கும் படியாக வெளியே வைத்தோம். இதுதான் நடந்த கதை. மேலதிகமாக எந்த பொது நிறுவனமும் தாங்கிகளை வாங்கி கிராமத்தில் வைத்தால் இராணுவம் தொடர்ந்து குடிநீர் வழங்கி உதவும் . தவம் அறக்கட்டளையினால் நிறுவப்பட்ட மூன்று தாங்கிகளும் எங்களது சொந்தப் பணத்தில் வாங்கப்பட்டது. நாங்களே உதவும் கரங்கள் பணவிடயத்தில் எங்களுக்கு வேறு உதவும் கரம் இல்லை . பொது சேவை என்பது
" வழித்தேங்காயை எடுத்து தெருப்பிள்ளயாருக்கு அடிப்பதல்ல! " இந்த வார்த்தை எங்களுக்குப் பொருந்தாது. நாம் எமக்கு நாமே வகுத்த பொது வழியில் பொறுப்புடன் இயங்கி வருகிறோம். நாம் நல்ல நண்பர்களுடன் கலந்தாலோசித்து முயற்சித்து குடிநீரினை கிராமத்துக்கு கொண்டு வந்துள்ளோம் .குடி நீர் எல்லோருக்கும் பொதுவானது அதனை எல்லோரும் பெற்று பயனடைவீர். இந்த விடயத்தில் கிராமத்துக்கு இரண்டு தடைவையாக நேரில் வந்து நிலைமையினை அவதானித்து உதவிய மதிப்புக்குரிய Dr.சி.மோகன் அவர்களை நான் பெரிதும் கெளரவப்படுத்துகின்றேன் . நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து சமயப் போதகர்களையும் பெரிதும் மதித்து கெளரவப்படுத்துகின்றேன் . அசமந்தப்போக்கோடு நடக்கும் அரசியல் சக்திகளை கேட்க வக்கத்தவர்கள் . அவர்கள் போடும் எலும்புத்துண்டுக்காக எங்களை குறை கூற முயற்சிக்க வேண்டாம். இதற்குள் சாதியரீதியான புறக்கணிப்பு இருப்பதான சந்தேகம் எமக்கு இருக்கிறது. மற்றையது புகலிடத்தில் சாட மாடையாக எங்களை சாடுகிறவேலையை விட்டுவிடவும் . இல்லையேல் உங்களை யாரென பொதுவெளியில் பகிரங்கப்படுத்த வேண்டி வரும்! நாகரீகம் கருதி இப்போது விட்டு விடுகிறேன்.
ஆனால் நாம் எமது பொது சேவையில் தொடர்ந்தும் மானிட நேசிப்புடன் வழிகொள்வோம்.

கன்பொல்லை,
குடிநீர்,
தவம் அறக்கட்டளை
யாழ்ப்பாண முஸ்லிம்களின் அன்புக்குரியவர் அமரர் கார்த்திகேசன்.
- எம். ஏ. சி. இக்பால்-
இந்தக் கட்டுரை 2002 -ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் 25 -வது ஆண்டு நினைவு மலரில் பிரசுரிக்கப்பட்டது. இக் கட்டுரையை வரைந்த எம். ஏ. சி. இக்பால் அவர்களுக்கு நன்றிகள். 2019ம் ஆண்டு ஜூன் 25
மு. கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மு. கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் என்று யாழ்ப்பாண மக்களால் அன்பாக அழைக்கப்பட்ட அமரர் மு. கார்த்திகேசன் ஒரு சிறந்த ஆங்கில ஆசிரியராகவும், சமூக சேவையாளராகவும், சுவாரசியமான ஹாஸ்ய பேச்சாளராகவும், சிறந்த அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார் என்பது சகலரும் அறிந்ததே.
அன்னார் காலமாகி பல வருடங்கள் கடந்துவிட்டாலும், அவருடன் சேர்ந்து வாழ்ந்தவர்கள், சேர்ந்து செயற்பட்டவர்கள், நெருங்கிப் பழகியவர்கள், அவரிடம் கல்வி கற்றவர்கள் பலர் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் சகலரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அமரர் கார்த்திகேசனுடனான தமது தொடர்புகளை நினைவுபடுத்தி தமக்கிடையில் பேசி அகமகிழ்ந்து அன்னாரைப் புகழ்ந்து அவரது நினைவுடன் பிரிந்து செல்வது வழக்கமான ஒரு விடயமாகும்.

அவருடைய பணிகளில் மிகவும் சிறந்த பணியாக அன்று அமைந்தது அவரது அரசியல் பணி என்றால் அது மிகையாகாது.
யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை அறிமுகப்படுத்தியவர்களில் மிக முக்கியமானவர் அமரர் கார்த்திகேசன் அவர்கள். பிரபுத்துவ கலை கலாச்சார ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த யாழ்ப்பாணத்தில் மார்க்ஸிஸ லெனினிஸ கொள்கையைப் பரப்புவதில் பல கொடூர கஷ்டங்களை எதிர்கொண்ட கார்த்திகேசன் அவர்கள், அதனை அவரது தோழர்களான காலஞ்சென்ற வைத்திலிங்கம் மாஸ்டர், அரியரட்ணம் மாஸ்டர், M.C. சுப்பிரமணியம், கே. டானியல், சுபைர் இளங்கீரன் போன்றவர்களின் உதவியுடன் துணிவுடன் எதிர்கொண்டு மார்க்ஸிஸ லெனினிஸ கொள்கையைப் பரப்புவதில் முன்னின்று உழைத்தார்.
அதன் மூலம் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்ற கார்த்திகேசன் அவர்கள் 1955 -ம் ஆண்டு இடம் பெற்ற யாழ். மாநகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். சாதி, மத பேதங்களுக்கு எதிராக செயற்பட்ட கார்த்திகேசன் அவர்கள் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்கள் மத்தியிலும், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் பெரும் ஆதரவைப் பெற்றிருந்தார்.

Thursday, September 20, 2018
"மலையக அபிவிருத்தி அதிகாரசபை" நாடாளுமன்றத்தில் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
பெருந்தோட்டப் பிராந்தியத்தில் புதிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ‘பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை’
(மலையக அபிவிருத்தி அதிகாரசபை) நாடாளுமன்றத்தில் இன்று (19) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அத்துடன், 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தில் பெருந்தோட்ட அபிவிருத்திக்கு தடையாக இருந்த சரத்துகளை நீக்குவதற்குரிய சட்டமூலமும் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட மலையக அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலத்திலுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,
பெருந்தோட்டப் பிராந்தியத்தில் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திமூலம் பெயர் குறிக்கப்பட்ட இடப்பரப்புகளிலுள்ள பெருந்தோட்டச் சமுதாயத்தினரைச் சமூக நீரோட்டத்தினுள் சேர்ப்பதனை உறுதிபடுத்தல்.
பெருந்தோட்டச் சமுதாயத்தினர், தேசிய அபிவிருத்திச்செய்முறைக்குப் பங்களிப்பதனை இயலச் செய்யும் பொருட்டு சமுகரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அவர்களுக்குத் தத்துவமளித்தல்.
அதிகாரசபையானது, இச்சட்டத்தின்கீழான அதன் தத்துவங்களையும், கடமைகளையும், பயணிகளையும் பயனுள்ள வகையில் பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும், நிறைவேற்றுவதற்கும் அதனை இயலச்செய்வதற்கு – ஓர் அரசாங்கத் திணைக்களம், உள்ளுரதிகாரசபை, ஒரு பகிரங்கக் கூட்டுத்தாபனம் அல்லது வேறெதேனும் தனியார் அல்லது பகிரங்க நிறுவனம் உள்ளடங்கலாக எவரேனுமாளுடன் ஒப்பந்தங்களை அல்லது உடன் படிக்கைகளை செய்துகொள்ளுதல்.
இலங்கையினுள் அல்லது இலங்கைக்கு வெளியேயுள்ள ஆட்களிடமிருந்து அல்லது ஆட்கள் குழுக்களிடமிருந்து காசாக அல்லது வேறுவகையாக மானியக்கொடைகளை, கொடைகளை அல்லது நன்கொடைகளை ஏற்றுக்கொள்ளலாம் என்பதுடன், இச்சட்டத்தின்கீழான அதன் பணிகளை நிறைவேற்றுவதிலும் அவற்றைப் பயன்படுத்தலாம்.
அதிகார சபையினால் தீர்மானிக்கப்படக்கூடியவாறாக ஏதேனும் அரச வங்கியில் அல்லது அரச நிதி நிறுவனத்தில் நடப்பு, சேமிப்பு அல்லது வைப்புக் கணக்குகளைத் திறந்து பேணலாம்.
அதிகாரசபையின் நோக்கங்களுக்காக உடனடியாகத் தேவைப்படாத எவையேனும் நிதிகளை அரச வங்கிகளிலும் அரச நிதி நிறுவனங்களிலும் முதலீடு செய்யலாம்.
அதிகாரசபையின் நோக்கங்களுக்காக உடனடியாகத் தேவைப்படாத எவையேனும் நிதிகளை அரச வங்கிகளிலும் அரச நிதி நிறுவனங்களிலும் முதலீடு செய்யலாம்.
அதிகாரசபையின் பணிகள்….
1. அமைச்சரின் கலந்தாலோசனையுடன் பெயர்குறிக்கப்பட்ட இடப்பரப்புகளில் புதிய கிராமங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கத்தின் திட்டங்களையும், நிகழ்ச்சித் திட்டங்களையும் கருத்திட்டங்களையும் அமுலாக்குதல்.
‘
2. ஆதிகாரசபையின் குறிக்கோள்களை எய்துமுகமாகப் பணியாற்றுகையில் பெருந்தோட்டப் பிராந்தியத்திலுள்ள வேறு தேசிய, மாகாண மற்றும் மாவட்ட மட்ட அமுலர்கல் முகவராண்மைகளுடன் ஒருங்கிணைத்தல்.
‘
2. ஆதிகாரசபையின் குறிக்கோள்களை எய்துமுகமாகப் பணியாற்றுகையில் பெருந்தோட்டப் பிராந்தியத்திலுள்ள வேறு தேசிய, மாகாண மற்றும் மாவட்ட மட்ட அமுலர்கல் முகவராண்மைகளுடன் ஒருங்கிணைத்தல்.
3. புதிய கிராமங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கத் திட்டங்களையும், நிகழ்ச்சித்திட்டங்களையும் கருத்திட்டங்களையும் பெயர்குறிக்கப்பட்ட இடப்பரப்புகளில் வகுத்தமைப்பதிலும் அமுலாக்குவதிலும் பெருந்தோட்டப் பிராந்தியத்திலுள்ள சமூதாய அடிப்படையிலான ஒருங்கமைப்புகளின் பங்குபற்றுகையை உறுதிப்படுத்தல்.
4. தோட்டங்களிலுள்ள வீடுகளின் சட்டப்படியான இருப்பாட்சியாளர்களுக்கு அத்தகையை வீடுகளின் சொத்தாண்மையை வழங்குவதற்காக அவர்களுக்கு உரித்துறுதிகள் வழங்கப்படுவதனை வசதிப்படுத்தல்.
5. இளைஞர்களுக்கு, அவர்களின் கல்வி அபிவிருத்திக்காக மூன்றாம்நிலை மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்குள் பிரவேசிப்பதற்கு உதவி வழங்குதல்.
நன்றி : மலைநாடு
Labels:
மலைநாடு
Subscribe to:
Posts (Atom)