Thursday, January 26, 2006

ஹிட்லரின் “எனது போராட்டம்” நூல் மேலான விமர்சனம்


-தமிழரசன் (ஜெர்மனி)
ஜெர்மனிய மாக்சியவாதிகளால் kannibalen bibel (மனிதமாமிசம் புசிப்போரின் வேதம்) எனப்பட்ட ஹிட்லரின் mein kampf நூல் மலேசிய கோலாலம்பூரைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு சென்னை சாந்தி பதிப்பகத்தால் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் மனித விரோத படைப்பு என்று கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தடை செய்யப்பட்ட புதிய நாசிகள் மத்தியில் மட்டுமே ரகசியமாய் உலாவும் ஒரு வெளியீடு, தமிழில் துணிவோடும,; பெருமையுடனும், பாசிசியக் கருத்துக்களை சுமந்து வந்துள்ளது. கடந்த பத்து வருடங்களில் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் புதிய நாசிகளும் பாசிசக் கருத்துக்களும் பலமடைந்து வரும் வேளையில் இந்தியாவில் இந்துசமயம் சார்ந்த பாசிசச் சிந்தனைகள் செழித்து வரும்பொழுதில் இந்த புத்தகம் வெளிவந்திருக்கிறது. இதை தற்செயல்களின் தற்செயல் ஏதோ விபத்தால் எம்தலை மீதும் தமிழ்மீதும் பொறிந்துள்ளது என நம்பியிருக்க இடமில்லை. கொடிய மனித விரோதிகளும் பொய்யர்களும் மனிதநாகரிக சிதைப்பாளர்களுமான நாசிகளின் வேதம் கருத்தியல் வழிகாட்டி.. சுப்பிரமணியத்துக்கு மாபெரும் மனிதக் கவனத்துக்கும், அரசியல் கண்டெடுப்புக்கும், பிரமிப்புக்கும் உரியதாகிவிடுகிறது. ஹிட்லரின் எழுத்து மனிதம் மேலான அவமதிப்பு ஆரோக்கிய அரசியல் சிந்தனைகள் மேலான தாக்குதல் என்பதெல்லாம் அவரின் பேரறிவுக்கு கிட்டவில்லை. கிடலர் என்ற பாசிச இனவெறியனின் மனச்சிதைவு நூலான என்னுடைய போராட்டம் சுப்பிரமணியத்தின் காலவழக்கொழிந்தமொழி, உயிரிழந்த ஓட்டமற்றநடை என்பவற்றோடு எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஹிட்லரின் எழுத்திலுள்ள கொம்யூனிசம், ய+தர் மேலான பாசிச நஞ்சுகள் அவரால் கடுமையும், தீவிரமும் குறைக்கப்பட்டுள்ளதோடு மொழிபெயர்ப்பும் பூரணமற்ற கோணத்தில் எம்முன் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மொழிமாற்றம் செய்ததுடன் மட்டும் சுப்பிரமணியம் தன் எழுத்துக்கடனை முடித்துக்கொள்ளாமல் பாசிசத்தையும், ஹிட்லரையும் புகழ்ந்தேற்றி ஒரு முன்னுரையும் வழங்கியுள்ளார். விமர்சனம், வரலாற்றுணர்வு இவைகளோடு தொடர்பற்ற உயர்ந்த மதிப்புரையும,; கௌரவமும் ஹிட்லருக்கு கொடுத்து மனிதகுலத்துக்கு வழங்க ஹிட்லரிடம் ஏதோவுள்ளது என்ற சிந்தையை நிரூபணம் செய்ய முயன்றுள்ளார்.
ஆரியப் பெருமையும் உயர்வுள் குறுகிய ஹிட்லரின் பாசிச எழுத்தை மனிதகுலம் கற்றுத்தேற வேண்டிய சிந்தனையாக ஜெர்மனிய மேலாண்மைக் கருத்தே சகல மக்களினங்களும் ஆராதித்து பூண்டொழுகத்தக்கதாய் சுப்பிரமணியத்தின் எழுத்துப்படையல் பேசுகிறது. ஹிட்லர் முதல் இன்றைய புதிய நாசிகள் வரை இந்நூலை ஆரியருக்கு மட்டுமே முக்கியமாய் ஜெர்மனிய உயர் இனத்தின் பெருமைக்கானது என்று கருவதுதோடு ஆசியா, ஆபிரிக்கா, லத்தீன்அமெரிக்க பூர்வகுடிகள் என்போரும் கிழக்கு ஐரோப்பிய இனம்களும்கூட அடிமைகொள்ளப்பட்டு அழிக்கப்பட வேண்டியவர்களாகவே கருதினர். செயற்பட்டனர். இந்தியர்களை ஹிட்லர் மதித்ததே கிடையாது. ஆரியரான பிரிட்டிஸ்காரர் அவர்களை அடக்கி ஆள்வது பொருத்தமானது என்றே அவன் கருதினான். இந்தியரை அவன் சாதாரண ஆரியப்பிரிவினுள் கூட ஒப்புக்கொள்ளவில்லை என்பதும் அவனால் கீழ் நிலையிலுள்ள ஆரியராய் கருதப்பட்ட சிந்தி, ரோம இன மக்கள்கூட பூண்டோடு அழிக்கப்பட்டனர். வரலாறு அப்பபடி இருக்க இந்தியர்களும் இந்தியாவும் ஹிட்லரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை உண்டு என்கிறார் சுப்பிரமணிம், இவரிடமுள்ள பாசிச துர்நாற்றத்துக்கு இவருள்ளே சீவிக்கும் இந்து ஆத்மா மலேசியாவிலுள்ள கொம்யூனிச எதிர்ப்பு வெறி, சாதாரண முதலாளிய ஜனநாயகத்துடன் கூட உறவற்ற நிலை@ காரணம் எனலாம். உயிர்களை நேசிப்பதென்பது மனிதர்களின் கற்பனா சக்தியால் உருவானது என்ற ஹிட்லரின் கருத்து இரண்டாவது உலக யுத்தத்தில் 50 மில்லியன் மக்களின் மரணத்துக்கு காரணமானது என்ற உண்மை சுப்பிரமணியத்தின் பகுத்தறிவை திடுக்கிட வைக்கவில்லை. மனிதம் என்று சிந்திக்க முடியாத ஒருநாசி போலவே அவர் சிந்தித்து எழுதுகிறார். ஹிட்லரை மாபெரும் மனிதராக கட்டமைப்பவா,; அழிபட்ட மில்லியன் கணக்கான யூத உயிர்களைப்பற்றி முன்னுரையில் ஒரு சொல்லில் கூட இரக்கம் காட்டவில்லை. புதிய நாசிகள் இன்று ஹிட்லரை:- தலைவா,; மாமனிதர் என்று பாடிக்கொண்டு இருக்கையில் சுப்பிரமணியமும் அதே வழியில் வீரபுருசன் அஞ்சா நெஞ்சுடையான் என்று அதிசயப்படதக்க வகையில் தன் பாசிச உணர்வைக் காட்டுகின்றார். முன்னுரை இறுதியில் ஜெர்மனிய பாசிஸ்டுகளின் ஆண்டு கணக்கிடும் முறையைப் பின்பற்றி 2001 ஆண்டை 2603 எனக்குறிக்கும் சுப்பிரமணியம் ஹிட்லர் எவ்வாறு முழுமனித இனத்தையே காயப்படுத்தினான் என்பதையோ, பாசிசத்தின் வெற்றி என்பது முழுமனிதகுல நாகரீகத்தின் தோல்வியாக முடியுமென்பதையோ மதிப்பிட முடியாத பாழடைந்த மனிதராக எம்முன் நிற்கிறார். இவரை ஒரு மொழிபெயர்ப்பாளராகவோ! எழுத்தாளராகவோ! ஏன் சாதாரண மனிதப்பிறவியாகக் கூட அங்கீகரிக்க எந்த மானிடப் பார்வை கொண்ட மனிதனும் விரும்பான்.
ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்களான எபர்காட் யேக்கல்
(Eberhard Jåekel) (Sebastien Huffner) செபஸ்டியான் கூவ்னர் யோகிம் பெஸ்ற்
(Joachim Fest) இவர்களோடு இறுதியாக ஹிட்லரின் சரிதியை எழுதியுள்ள கூர்ட் பட்சோல் (Kurt Påtzold) மான்பிரன்ட் வைஸ் பேக்கர் (
(Manfred Weissbcker) உட்பட பலதரப்பட்ட மதிப்பீடுகள் இருந்தபோதும் இவை ஆதரிப்பு, பாராட்டுகளைக் கடந்து விமர்சன மதிப்பீடுகளுக்கு உட்பட்டு எழுதியவர்கள். 1938ல் ஹிட்லர் குண்டுத்தாக்குதலில் இறந்திருந்தால் ஜெர்மனியின் மிகப் பெரும்தலைவனாக பிஸ்மார்க் வரிசைக்கு உயர்த்தப்பட்டு இருப்பான் என்று யோகிம் பெஸ்ற் (Joachim Fest) குறிப்பிடுகிறார். பாசிசத்தை மாக்சிய இயக்கங்களின் எதிர்வினை என்பவர்களும் பாசிசத்தையும் சோசலிசசிந்தனையையும் சமப்படுத்திவிடும் முதலாளித்துவ சீர்திருத்தவாதப் புனிதர்களும் உள்ளனர். பாசிசத்தின் பேரழிவை மனிதகுலம் தன்னைத்தானே அழித்துக்கொள்ள எடுத்துக்கொண்ட முயற்சியாக சகலதையும் சகலமனிதர் தலைமீதும் சுமத்திவிட்டுக் கதறும் அவநம்பிக்கைவாதிகளும்; இருக்கின்றார்கள். தமிழ்ப் பரப்பில் பாசிச விசக்கிருமியைப் பரப்பும் மனித அழிவுக் கோட்பாட்டை பரிந்துரை செய்யும் அற்பவாத மிகைவுணர்வுடன் வரும் சுப்பிரமணியத்தை அவரின் இந்து பாசிச உள்ளுணர்வையும் கண்டறிவது அவசியம்.

எனது போராட்டம் நூலின் பின்புலங்கள்.
எதுவித அரசியல் சமூகத்தகுதியுமற்ற அலைந்து திரியும் இலக்கற்றவனான ஹிட்லருக்கு 1914 ஆண்டின் முதலாவது உலகயுத்தம் ஜெர்மனிய இராணுவ வீரன் என்ற அடையாளத்தை பெற்றுத் தந்தது. அவன் யுத்தமுனையில் எந்தச் சாதனையும் படைத்துவிட வில்லை. ஆனால் ஜெர்மனிய இராணுவத்தின் பாசிச ஆக்கிரமிப்புக் கருத்துக்களே அவனது அரசியல் அடிப்படையாயிற்று. இதனுடன் அவனது நாடோடி வாழ்க்கையுள் பொறுக்கிக் கொண்ட ஜெர்மனிய தேசியவாதப் பெருமைகளும் சேர்ந்து கொண்டன. ஓஸ்திரியாவின் பழைமைவாத கத்தோலிக்க வாழ்வியலின் பெறுபேறாக விமர்சனச்சுதந்திரம், தனிமனிதக்கருத்தியல் என்ற போக்குகளை கண்டறியாதவனாகவே இருந்தான். அவனது வாழ்வின் தொடக்கம் கட்டளைக்குப் பணிதல், ஏவல்மனிதனின் வாழ்வு இவைகளில்தான் பயிற்றப்பட்டு இருந்தது. யுத்தம் முடிவடைந்து 1919ம் ஆண்டில் இவன் தீவிர பாசிசக் கட்சியான DAPயில் சேருமுன்பு தொழிலாளர் இயக்கங்கள், அதன் தலைவர்கள் பற்றி அரசு உளவுத்துறைக்கு தகவல் தரும் வேலையில் ஈடுபட்டமையால் Acht groschen junge (எட்டு குரோசன் நாணயத்துக்கு காட்டிக் கொடுப்பவன்) என்று அழைக்கப்பட்டவன். அரசுக்கு எதிராய் பின்பு சதிப்புரட்சியல் இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த காலத்திலேயே எனது போராட்டம் நூல் எழுதும் வேலை ஹிட்லரால் தொடங்கப்பட்டது. ஹிட்லர் சிறையிருந்த பயான் (Bejern) பிரதேசத்தில் 1918 - 1924 காலத்தில் குடியரசுப் புரட்சிவாதிகள், மாக்சியவாதிகள், தொழிலாளர்கள் பலர் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். முக்கிய 20 புரட்சியின் தலைவர்களுக்கு மரணதண்டனையும் பல நூறு பேருக்கு ஆயுட்தண்டனையும் விதிக்கப்பட்டது. பலர் விசாரணைகள் இன்றியே சுட்டுக் கொல்லப்பட்டனர். மோசமான மனிதவதைக் குள்ளாயினர். ஆனால் சதிப்புரட்சி செய்து அரசைக்கவிழ்க்க முயன்ற ஹிட்லருக்கும் அவனது கூட்டாளிகளுக்கும் கிடைத்தது ஒருசில வருட சிறைத் தண்டனையே. பல இராணுவ பாசிஸ்டுகள் உடனடியாகவே விடுவிக்கப்பட்டனர். அந்த மட்டத்துக்கு பயானின் இராணுவ பாசிஸ்டுகளும் சகல அதிகார சக்திகளும் ஹிட்லரை ஆதரித்தன சலுகை வழங்கின.
சிறையில் ஹிட்லர் மிகவும் சுதந்திரமாய் செயற்பட்டான் தினசரிப் பத்திரிகைகள் வாசிக்க, வாசிகசாலையை உபயோகிக்க, கடிதங்கள் எழுத, பிறந்தநாள் கொண்டாட, வெளியே இருந்து வரும் பரிசுகளை பெற என்று அக்காலத்தில் சிறைவாழ்வில் நினைத்துக்கூட பார்க்க முடியாத உபசரிப்புகள் அவனுக்கு சிறையில் இருந்தது. தன் அரசியல் நன்பர்களையும், ஏனைய கைதிகளையும் சந்திக்க, உரையாடவும், பியர் குடிக்கவும் அவனால் முடிந்தது. இந்த சுதந்திரமான சிறை நிலைமைகளில்தான் ஹிட்லரின் எனது போராட்டம் எழுதப்பட்டது. அதை எழுத சிறைப் பொறுப்பதிகாரியின் தட்டச்சுயந்திரம் ஹிட்லருக்கு வழங்கப்பட்டது. உண்மையில் இந்த நூலை ஹிட்லர் தனியே எழுதும் ஆற்றலை பெற்றிருக்கவில்லை. இவனுடன் சிறையிருந்த பாசிஸ்டுகளான கெஸ் (Hess) எமில் (Emil Mauricce) என்போரின் உதவி, தகவல்கள் ஆலோசனைகள் இவைகளுடன் கூட்டுமுயற்சியாக எழுதப்பட்டது, என்பதோடு நூலில் பெரும்பகுதி ஹிட்லரின் மேடைப் பேச்சுகள், கட்சியின் தீர்மானங்கள் ஆகியவைகளின் தொகுப்பாகவே இருந்தது. இருந்தபோதும் ஹிட்லர் சிறையிலிருந்த 1924 டிசம்பர் 20ந் திகதி முதல் 1928 நவம்பர் 17ந் திகதி வரையிலான 4 வருடகாலத்தில் கூட இச்சிறிய நூல் எழுதி முடிக்கப்படவில்லை. ஹிட்லர் விடுதலை அடைந்த பின்பே இவை மீண்டும் கூட்டாகச் சேர்ந்து எழுதி முடிக்கப்பட்டது என்றே கொள்ளப்பட வேண்டும். ஆனால் உலகம் அறியாப் பூச்சியான சுப்பிரமணியம் ஹிட்லர் அதனை தனியே எழுதினான் என்பதாய் எம்மிடம் ஒப்புவிக்கிறார்.
இந்த நூலில் ஹிட்லர் யூதர்களையும் ஜெர்மனியர் அல்லாதோரையும் கோழைகள், மடையர்கள் என்பதோடு தொழிலாளர் இயக்கங்களில் முக்கிய தலைவர்களாக இருந்த யூதர்களை ஜெர்மனிய வெறியை மூட்டுவதன் மூலம் எதிர்கொள்ளமுயன்றான். கொலனிகள் எம்மால் வெல்லப்பட வேண்டும் இதற்கு யூதத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஹிட்லர் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு தத்துவ ஊட்டம் வழங்கினான். யூதர்களுக்கு எதிராய் மட்டுமல்ல மனிதர்களை வெள்ளை, கறுப்பு, மஞ்சள் என்று பாகுபடுத்தி வெள்ளை ஆரியருக்கு முதன்மை இடமும் ஜெர்மனியருக்கு உயர்ந்த இனம், எசமான இனம், இனப்பெறுமானம் மிக்கவர்கள் என்று பாசிசவர்ணனை செய்வது ஹிட்லரை வரைமுறையற்றுப் புகழும் இந்தக் கறுப்பு மனிதரான சுப்பிரமணியத்துக்கு எவ்வாறு உறைக்காமல் போனது. ஹிட்லரின் கருத்துக்கள் மானுடவியல் ரீதியில் பொருளற்ற இனவெறியே என்பது ஹிட்லர் காலத்திலேயே மாக்சியவாதிகளாலும், தொழிலாளர் இயக்கங்களாலும் துலாம்பரமாகக் காட்டப்பட்ட ஒன்றாகும்.
வர்க்கப் போராட்டத்தையும் வர்க்கம் சார்ந்த சமூக இருப்பையும் எதிர்க்க தொழிலாளிகளின் எழுச்சிக் கோலத்தை தகர்க்க சமூகமானது ஆரியா,; யூதர்கள் இடையேயான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாய் பேசும் ஹிட்லர், ஆரியரின் தொன்மையான இயற்கை வாழ்வுக்கு அழைப்பது பாசிசத்தின் மூத்தோர்களில் ஒருவனான நீட்சேயின் ஞாபகத்திலாகும். ஹிட்லருக்கு பேச்சாளியாகும் சுப்பிரமணியம் ஹிட்லரின் சுயசரிதைபோல் உலகில் வேறு எந்த சுயசரிதையும் பிரசித்தி பெறவில்லை என்று இறும்பூதெய்துகிறார். எனது போராட்டத்தின் முதலாவது பாகம் 1930வரை 23,000 பிரதிகளும் இரண்டாம் பாகம் 13,000 பிரதிகளும்தான் விற்பனையாகியது. 1933 ஹிட்லரின் கட்சியான NSDAP யில் ஒருமில்லியனுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தபோது கூட மொத்தமாக விற்கப்பட்ட தொகை 287,000 இதழ்களைத் தாண்டவில்லை. (விற்பனையில் பதினைந்து வீத வருமானம் ஹிட்லருக்கு கிடைத்தது). பின்பு பாசிஸ்டுக்கள் பதவிக்கு வந்த பின்னரே இந்த நூல் அச்சிட்டு எங்கும் பரப்பப்பட்டது. இன்றுவரை இந்த நூல் 16 மொழிகளில் கிட்டத்தட்ட 10 மில்லியன் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. இப்போது கிழக்கு ஐரோப்பிய நாட்டு மொழிகளில் புதிய பாசிஸ்டுக்கள் இதை அச்சிட்டு பரப்புகின்றனர். இதற்கான பெருமளவு நிதிகள் ஜெர்மனிய பாசிச இயக்கங்களாலும் அமெரிக்க பாசிச இயக்கங்களாலும் வழங்கப்படுகின்றன.
ஹிட்லரின் எனது போராட்டத்தில் தனது சிறை வாழ்வு பற்றிய சித்தரிப்புக்கள் பெரும்பகுதி பொய்களால் நிரம்பியது. அவன் சிறையில் துன்பங்களைக் கண்டதாய்ப் பேசுவது இத்தகையதே. 1925 ஜனவரியில்; ஹிட்லர் 3 தடவை பயான் அரசுத் தலைவனான கைன்றிச் கெல்ட் (Heinrich Held) சந்தித்துப் பேசினான். மாக்சியத்தை எதிர்க்கும் போராட்டத்தில் தான் அவர்களுடன் முழுமையாய் இணைவதாக உடன்பட்டதோடு தன்னுடைய சதிப்புரட்சி முயற்சியானது தவறானது என்றும் ஒப்புக்கொண்டான். இதையடுத்து 1925 பெப்ரவரியில் NSDAP மேலான தடை நீக்கப்பட்டது. 1924 களிலேயே பல பயான் அரசியல்வாதிகள் ஹிட்லர் இனி அரசுக்கு ஆபத்தானவன் இல்லை என்று பேசி வந்தனர். இச்சம் பவங்கள் ஹிட்லருக்கு மேல்மட்டத்துடன் இருந்த உறவைக் காட்டுகின்றன. மேலும் ஹிட்லர் தான் சிறையில் இருந்து வெளியே வந்தபோது பிச்சை எடுக்கும் வறுமை நிலையாய் இருந்ததாகக் கூறுகின்றான். ஹிட்லர் சிறை செல்ல முன்பே அவன் பொருளாதாரநிலை சிறப்பாகவிருந்தது. அவன் 1928 இல் சிறையிலிருந்து விடுதலையாகி வந்தவுடன் 20,000 Nஐர்மனிய மாக்குகளுக்கு புதிய பென்ஸ் கார் வாங்கியதோடு வருடம் 1,000 மார்க் வாடகைக்கு குடியிருந்த வீட்டைவிட்டு 4176 ஐர்மனிய மாக்குகள் வருட வடகை கொண்ட புதிய வீட்டுக்கு குடி பெயர்ந்தான். இதே வீட்டை 1929ல் ஒபர்சால்பேக்கில் (Obersalzberg) விலைக்கும் வாங்கினான். இதே வருடம் முன்சன் நகரில் 9 அறை கொண்ட பெரிய வீட்டை வாடகைக்கும் எடுத்தான். தனது செயலாளர் கென்சுக்கு மாதாமாதம் 300 மார்க்குகளும் தனது மெய்ப்பாதுகாவலருக்கு 200 Nஐர்மனிய மாக்குகளும் சம்பளம் வழங்கியதோடு தன் காதலிக்கு பல ஆயிரம் மார்க் பெறுமதியில் நகைகள் வாங்கி பரிசாக வழங்கவும் மிகவும் விலை உயர்ந்த ஓவியங்கள் வாங்கி சேமித்து வைக்கவும் ஹிட்லருக்கு நிதித்தட்டுப்பாடு இருக்கவில்லை. 1929இல் இவன் அரசவரிவதிப்புப் பகுதிக்கு சமர்ப்பித்த தனது வருடாந்த வருமானமாக 15,448 Nஐர்மனிய மாக்குகள் என்று காட்டியிருந்தான். இக்கால கட்டத்தில் nஐர்மனிய பெருநிறுவனங்களிடமிருந்து பெற்ற பல மில்லியன் Nஐர்மனிய மாக்குகள் அவனிடம் இருந்தன. எனவே ஹிட்லரின் நூல் விபரிப்புக்கள் உண்மையோடு எந்த தொடர்புமற்றவை.
ஹிட்லர் தான் DAP என்ற பாசிசக் கட்சியில் 7வது உறுப்பினராக சேர்ந்ததாகவும் அக்கட்சியின் மிக முக்கிய தலைவராகத்தான் இருந்ததாகவும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் ஹிட்லர் DAP கட்சியில் 555வது உறுப்பினராக இணைந்ததோடு அதில் முக்கியமற்ற உறுப்பினராகதான் இருந்தான். பெண்கள் புனிதமாக யூத மற்றும் அந்நிய கலப்பற்று இருக்க வேண்டும.; ஆரிய இனப் பெருமை பேணவேண்டும். என்று எனது போராட்டத்தில் எழுதிய ஹிட்லர் தனது ஒன்றுவிட்ட சகோதரியின் மகளும் காதலியுமாகிய காலிரவுபல் (Gali Raubel) ஐ ரகசியமாக கண்காணிப்பது சவுக்கால் அடிப்பது என்று சித்திரைவதை செய்யத் தயங்கியதில்லை. 1931ல் இவளது மரணம் தற்கொலையல்ல ஹிட்லர் இவளை கொலை செய்தான் என்ற சந்தேகங்களும் நிலவின.
கலப்பு இரத்தம் உடையோர் கசநோயாளிகள் பரம்பரை வியாதி உடையோர், உடல் ஊனமுற்றவர்கள் மனப்பிறழ்வு நோயுடையோர். மனித வர்க்கத்தின் பெருமையைக் குலைக்கும் சைத்தான்கள் என்று எழுதினான் ஹிட்லர். ஆனால் இவனோ சொந்தமாய் யூத nஐர்மனிய கலப்புக் கொண்டவன். இவனின் நெருங்கிய பாசிஸ்ட் நண்பனான கோபல்ஸ் உடல் ஊனம் கொண்டவன். இவ்வாறு பாசிசம் பொய்களை போலி நம்பிக்கைகளை புனிதப்படுத்தியே தன்னைக் கட்டிக் கொண்டது.
முதலில் ஹிட்லரின் எனது போராட்டம் நூல் பொய், மடத்தனம், கோழைத்தனம் இவைகட்கு எதிரான மூன்றரை வருடப்போராட்டம்; (Diereinhalb Jahre kampf gegen luge dummheit und feigheit) என்று பெயரிடப்பட்டு பின்பே பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

No comments: