Thursday, January 26, 2006

நூல் அறிமுகம்: குழந்தைகள் இளையோர் சிறக்க

-வேதா லங்காதிலகம்
தன் பிள்ளைகளை வளர்த்தெடுத்த அனுபவத்துடன் புகலிய விஞ்ஞான பிள்ளை பராமரிப்புக் கல்வி அறிவினை பிசைந்து எடுத்து இந்நூலில் உள்ள கட்டுரைகளை மொழி பெயர்த்துத் தந்துள்ளார்.-வி.சிறீ கதிர்காமநாதன் (உளவியல் நிபுணர்.டென்மார்க்)
தொகுப்பிலிருந்து:- மரணம் -இறப்பு என்பதுநாம் கதைப்பதற்கு கஷ்டமான ஒரு விடயம்தான்.ஆயினும் மரணம் என்பது நாம் கதைக்க முடியாத விடயம் அல்ல. ஒரு குடும்பத்தில் பிரியமாக நன்கு நேசிக்கப்படுபவர், பாரிய நோய்வாய்ப்படுவதோ, அன்றி மரணமடைவதோ, ஒரு குழந்தையின் வாழ்வில், இயற்கையாக அப்பிள்ளை இயங்குவதை தவிர்க்கச் செய்கின்றது. குழந்தையின் வாழ்வில் இந்த வெறுமை நிலை மிகவும் குழப்பம் தரக்கூடியது.பிரிய சகோதரர்கள், பெற்றோர், தாத்தா, பாட்டி, நண்பர்கள் என்று குழந்தையின் நெருங்கிய அன்புக்கு உரியவர்கள் உயிருக்குப் போராடும் நோய் வாய்ப்படுவது உண்டு. அன்றி மரணமடைவதும் உண்டு. பாடசாலையிலோ, பாலர் நிலையங்களிலோ, இப்படியான நிலைக்கு ஆளாகும் பிள்ளையின் நிலைமையை சிலர் கருத்துக்கு எடுப்பதில்லை. பிள்ளைக்கு கிடைக்கும் ஆதரவு, நெருக்கம் என்பன மிக எளிதாக விலகிப்போகிறது. ஒரு பொதுவான அனுதாபம் கூட அப்பிள்ளைக்கு கிடைக்கும் நிலையிலிருந்து விலகிப்போகிறது. தன் நேசத்திற்கு உரியவர்கள், பாரிய நோயில் விழும்போது அன்றி மரணமடையும்போது ஒரு பிள்ளை, ஏக்கம், துக்கம், கோபம், குற்ற உணர்வு எனும் பல உணர்வுகளை அடைகின்றது. இதைவிட குடும்பச் சூழல் - சுற்றுச் சூழல் நிலைகளும் மிகப் பாதிப்பை உண்டாக்கின்றது. உதாரணமாக தாயின் இழப்பால் தந்தை வருந்தும்போது, அல்லது தந்தையின் இழப்பால் தாய் வருந்தும்போது, பிள்ளையை- அல்லது பிள்ளையின் மனநிலையை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. அவரவர் துன்பமே அவரவர்க்குப் பெரிதாக நினைக்கத் தோன்றுகிறது. இதனால் பிள்ளைக்கு கிடைக்கும் ஆதரவு குறைகிறது. வேறு குடும்பத்துப் பெரியவர்கள் குடும்பத்தின் உள்ளே நுழைந்து குடும்ப உதவிகள் செய்யும்போது பல தாக்கங்களுக்கு, பழக்கமற்ற சூழல், குழப்பங்களுக்கு குழந்தை ஆளாகின்றது. இப்படி ஒரு சோகநிலை பிள்ளைக்கு நடந்துள்ளது என்பது பாடசாலையில், பாலர் நிலையங்களில் கூறப்பட வேண்டும். சாதாரணமாக எல்லோருக்கும் தெரிய ஏற்றுக் கொள்ளக் கூடியதாக தெரிவிக்க வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட பிள்ளைக்கு எல்லோரும் தனது துயரத்தில் பங்கு கொள்கிறார்கள் எனும் ஒரு உணர்வு வரும். வுழமையாக அப்பிள்ளையைத் தொந்தரவு செய்யக்கூடாது. ஆமைதியாக இருக்கவிடுங்கள் - எனும் நிலைமையையே நாம் கொடுப்போம். ஆனால் இப்படியான அனுபவம் அந்தப்; பிள்ளைக்கோ, பிள்ளையுடன் நெருங்கிய பாதிப்புக்கு உள்ளானவருக்கோ வர இடம் கொடுக்கக் கூடாது. பிரச்சினை என்பது யாவருக்கும் பொதுவானது எனும் நோக்கில், பரந்த அளவில் நடந்தவற்றைக் கதைத்து பிரச்சினையைப் பகிரங்கப்படுத்த வேண்டும் இப்படிச் செய்வதால் பிரச்சினையை மூடிவைத்துப் பெரிதாக்காமல், அதில் ஓட்டைபோட்டு, சிறுதுண்டுகளாக்குகின்றோம். மிக எளிதானதாக ஆக்குகின்றோம: இப்பிள்ளைக்கு பல செயல்பாட்டு முறையில் நாம் உதவிகள் செய்யலாம். உதாரணமாக, படம் வரைவது: இது ஒரு நியாயமான, இயற்கையான செயல்பாடு. தந்தை இறந்த பிள்ளையானால் அவனிடம் உன் குடும்பத்தை வரைந்து காட்டுகிறாயா? அப்பாவின் கல்லறையை வரைந்து காட்டுகிறாயா? ஊhரசஉhஐ கீறிக் காட்டுகிறாயா? என்னும்போது பிள்ளை தன்னால் வார்த்தையால் கூற முடியாது மனதில் புழுங்குவதைப் வரைந்து காட்டுவான். தன் உணர்வை படமாக்கிக் காட்டுவான். பின்பு அதன் தொடர்பாக உரையாட வேண்டும். அப்படி உரையாடுவது அவனது நினைவு உலகினுள் நுழையும் ஒரு நுழைவாயிலாக இருக்கும். மற்றப் பிள்ளைகளும். அவனுடன் சேர்ந்து உள்ளே நுழைந்து பங்கு பற்றும் நிலைமை உருவாகும். பல கேள்விகள், பதில்களென சம்பாஷனை அவர்களுக்குள் நீளும். கதை வாசித்தல்: இறப்புகள் பற்றிய கதைகளை வாசிப்பது பொருத்தமாக இருக்கும். நம்பிக்கை தரும் சமய புத்தகங்கள் வாசிக்கலாம். ”எனது சொந்தப் புத்தகம்” எனும் தலைப்பில்பிள்ளை வரைந்த படங்களின் மூலம் விளக்கங்களை கேட்டு எழுதி, அதை ஒரு புத்தகமாக்கி வாசிக்கலாம். இது அவர் சொந்த எண்ணங்கள் வெளிவரும் வடிகாலாக உருவாகலாம். நாமாக எடுத்துக் கட்டி: கற்பனை மூலம் பிள்ளையின் நிலைமைக்கு ஏற்ப கதை கூறலாம். புpன் பிள்ளையையும் அப்படி கூறும்படி கேட்டும் மனம்திறந்து கூற வழி வகுக்கலாம். இதில் தனது நிலை - கற்பனையும் மனதில் இருப்பதும் சேர்ந்து வெளியே வர இடமுண்டு. கனவு: இது ஒரு ராஜபாதை. படம் கீறி முயற்சித்தோம். கற்பனைக் கதை கூறினோம். இப்பொழுது உணர்வு மூலம் முயற்சி. உதாரணமாக, இரவு நான் இப்படிக் கனவு கண்டேன். நீ கனவு கண்டாயா? எனும்போது பிள்ளையின் பய நினைவு கனவாக, அதை ஒரு பெரியவர் எதிர்கொண்டு கேட்பதாக உரையாடலாம். இங்கும் மூடிவைத்த உணர்வுகள் வெளிவரும். விளையாட்டு: சவ அடக்கம் செய்வது போல விளையாடலாம். ஒரு பறவை இறந்துவிட்டது போல, இதில் பெரியவர்களும் கலந்து கொள்ளலாம். அதோடு நாமும் ஒரு கவனிப்பாளராக இருந்த பிள்ளையின் நடவடிக்கையையும் கவனிக்கலாம் - கிரகிக்கலாம். பொம்மைகள் வைத்து விளையாடுதல்: நாம் இதில் பிள்ளை போல பங்கு கொண்டு, உள் ஆளாகவும், பார்வையாளராக, வெளி ஆளாகவும் இருந்து பங்கு கொள்ளலாம். இன்னும் இசை கேட்பது போன்று பலவகையாக ஈடுபடுத்தலாம். இதில் குழந்தை அறிய வேண்டுவது யாதெனில், மரணம், இறப்பு என்பது பற்றி நாம் கதைக்க முடியும். இது யாருமே கதைக்க கூடாத விடயம் அல்ல என்பதே. முடிந்தால் நாம் அக்குழந்தையின், அந்த உறவினரின் சவ அடக்கத்திற்கு செல்வது, ஊhரசஉhலோ அன்றி வீட்டிலோ பூச்சோடனைகளில் பங்குபெறுவது. பூச்செண்டுடன் விஜயம் செய்வது என்று பிள்ளையின் தனிமையை தவிர்த்தல் நலம். அதேபோல சம்பந்தப்பட்ட பெரியவர்களின் தனிமையும் தவிர்க்கப்படவேண்டும். மனம்விட்டுக் கதைத்து “அழுது” துயரங்களை தூரத்தள்ள வேண்டும். இப்படி துயரம் துடைக்க உதவலாம்.

No comments: