Monday, March 08, 2010

Sunday, March 07, 2010

Tamiler holder fest



For 25 år siden kom 16 tamilske familier til Vejen. Familierne holder stadig sammen, og i dag fejrede de så med tamilsk musik, traditionel tamilsk dance og en tamilsk tilberedt jubilæumsmiddag, at de kan se tilbage på det første kvarte århundrede i Danmark.

I første omgang blev de tamilske flygtninge i 1985 indkvarteret på Hansens Hotel i Vejen.

Flere af dem var børn dengang.

Som en af de første fik Rulan Sangar Rajendram, der blot var et halvt år gammel, lov at få borgmesterkæden på, da flygtningene blev modtaget af Vejen Kommunes tidligere borgmester, Lis Altonen.

Tæt kontakt

I dag er Rulan Sangar Rajendram 25 år, og bor i Odense, hvor han er ansat som »System Specialist« i en entreprenørvirksomhed.

Også mange af de andre børn fra dengang har gennemført videregående uddannelser, men de holder alle tæt kontakt til hinanden.

Velkomsttale

-Allan-

Mine damer og herrer

Jeg er i dag blevet bedt om at sige et par bevingede ord som velkomst.

Vi fejrer i dag at det er 25 år siden at en lille gruppe af primært unge mænd kom til Vejen og hurtigt blev en del af lokalmiljøet i Vejen. Og lad os bare for en kort stund ligge den jyske beskedenhed til side og konstatere at det har været en succes. En stor succes. Deres familier blev hurtigt sammenbragt og man kunne endelig begynde en ny tilværelse i Vejen. Mange af familierne kom hurtigt ud på arbejdsmarkedet og oplevede ligesom resten af den danske befolkning de gode 90’ere. Deres børn kom på Østerbyskolen eller Bakkelyskolen, på gymnasiet eller handelsskolen og videre i uddannelsessystemet og på arbejdsmarkedet. Det er da om noget den danske drøm, som statsministeren kalder det. En drøm om at man kan komme hertil med en positiv indstilling om at skabe sig en tryg tilværelse for sin familie og give sine børn nogle muligheder man ikke selv har haft. Hvor vores forældre startede deres tilværelse som bistandsklienter er deres børn nu godt på vej til at blive bankdirektører, igen med reference til en tidligere statsminister - dem skal vi jo ikke glemme.

Tamilernes styrke har på trods af noget modvilje i begyndelsen været deres ukuelige tro på at det her skulle lykkedes og deres respekt for det land og den by de kom til. Jovist, mange ting skulle læres både af de dengang unge herrer men også af vejengenserne, men det er nu gået godt alt sammen og i dag er der ingen tvivl om at den unge generation af tamilere er en god og positiv del af lokalmiljøet her i Vejen.


Rulans Tale

Jeg vil gerne byde jer alle sammen rigtig hjertelig velkommen til tamilernes 25års jubilæumsfest for Vejen og omegn.

Kære alle fremmødte heriblandt venner, familier, tidligere borgmester Lis Aaltonen, viceborgmester Hardy Høll Nielsen, og kulturudvalgsformand Troels Ravn, og alle tidligere lærer fra sprogskolen.

Det er med glæde og stolthed at jeg kan stå foran jer alle sammen her i dag i denne betydningsfulde anledning. Dette er en mærkedag både for tamilerne og samfundet, men dette er i særdeleshed også en mærkedag i integrationens tegn!

Min familie og jeg kom til vejen den 29. januar 1985 da jeg blot var 10 måneder gammel. Vi var ledsaget af 16 andre familier, som ligeledes var nødsaget til at flygte fra vores hjemland Sri Lanka. Dette var en rejse ind i en tid og et samfund, hvor man her i Danmark endnu ikke havde stiftet de største bekendtskaber og erfaringer med modtagelsen af folk med fremmede kulturer.

Vi blev mødt med åbne arme i denne lille provinsby af indbyggerne og såvel af borgmesteren som viste os den gæstfriheden at lade mig bære borgmesterkæden og den stolthed som ligger heri. Jeg blev uofficielt dødt navnet ’Vejens lille trold’ af Lis Aaltonen. Dette er begivenhed som vi stadig ikke glemmer og værdsætter den dag i dag.

Efterhånden som mulighederne bød sig blev det muligt for resten af tamilerne at genforene sig med deres elskede familier. Folk var heldige at komme i arbejde efter kort tid og lærte sproget hurtigt. Vi børn blev samlet i trygge institutioner, og allerede der dannede vi et fælles sammenhold og dannede indbyrdes relationer med de andre børn fra både vores egen og den danske kultur.

Vores forældre var indstillet på at vi skulle bruge de muligheder som det danske samfund kunne tilbyde os, og som de aldrig selv havde haft muligheden for. Skolen var vejen frem til at få en uddannelse og et godt job. Både institutionerne og vores forældre motiverede os til at yde vores bedste. De motiverede os, og dannede indbyrdes en sund konkurrence blandt tamilere, da alle var bevidste om at det var vejen frem til succes, og fundamentet til en sikker og bæredygtig fremtid.

I dag er jeg som de fleste tamiler, der er nået så langt i deres uddannelsesforløb, færdig uddannet og jeg selv har en stilling som ingeniør i NCC Roads. Det er en generel tendens som ses i hele landet og ligeledes i Vejen og omegn. Flere og flere unge tamiler formår at få en uddannelse og klarer sig sikkert og stabilt igennem hele deres uddannelsesforløb, indtil de solidt planter sig på arbejdsmarkedet. I 2007 blev der fremlagt en statistik som viste hvor mange af de arbejdsdygtige tamiler i Danmark, som var i beskæftigelse. Konklusionen på denne undersøgelse lød således:

”… Srilankanere som helhed, har den højeste beskæftigelse blandt alle flygtninge og indvandre i Danmark.”

Denne succeshistorie, kan vi blandt andet takke de mange integrationsfremmende projekter for, men også klappe os selv på skulderen for at have formået, at skille os ud som mønsterbrydere og et godt eksempel på integreret flygtninge og indvandrere.

Frem for at assimilere os, så har vi formået at integrere os, og bevare de normer og værdier som vores forældre har formået at tage med sig til Danmark, hele vejen fra Sri Lanka. Og dette er i sandhed integrationens sande mål.

Hvad byder fremtiden os så? Vores forhåbninger er mange, og lige så individuelle som vi er som mennesker. Dog kan jeg, på vegne af alle os der er repræsenteret her i dag, med sikkerhed sige, at vi alle er indstillet på at bidrage til og videreudvikle det danske, såvel som det tamilske samfund. Ligeledes at styrke de danske og tamilske relationer, og bruge de kompetencer som vi blandt andet har fået tilegnet af det danske samfund.

Jeg vil gerne på vegne af os alle sammen, sige tak for den støtte, åbenhed og mangfoldighed som vi er blevet taget imod med og stadigvæk føler den dag i dag. Igennem tiderne har der været mange gode forbilleder, både fra det tamilske og det danske samfund, og ikke mindst vores forældre, hvis hårde arbejde vi den dag i dag høster frugten af. Og vi håber at vi bliver ligeså gode forbilleder for vores familier og medmennesker.

Tak, skal i have alle sammen.

Friday, March 05, 2010

இலங்கையில் தற்பொழுது நடைமுறையிலுள்ள பாரளுமன்றத்தேர்தல் முறை
-எம். ஏ . அச்சிமுகமட் -

1978 ஆம் ஆண்டின் இரண் டாம் குடியரசு யாப்பின் கீழ் பாராளுமன்ற பொதுத் தேர்தலானது விகிதாசார பட்டியல் முறையின் அடிப்படையில் நடைபெறுகின்றது. யாப்பின் 95 வது சரத்தின் முதலாம் பிரிவு ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழு தேர்தல் மாவட்டங்களைப் பிரிக்கும் எனவும், 96 வது சரத்து இலங்கையை 20க்கு குறையாமலும், 24க்கு மேற்படாததுமான தேர்தல் மாவட்டங் களாகப் பிரித்து அம்மாவட்டங்களுக்குரிய பெயரைச் சூட்டுதல் வேண்டும் எனவும் கூறுகின்றது.
1980 களின் ஆரம்பப்பகுதியில் இருந்து இலங்கையின் 25 நிர்வாக மாவட்டங்கள் 22 தேர்தல் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய நிர்வாக மாவட் டங்கள் இணைக்கப்பட்டு யாழ் தேர்தல் மாவட்டமாக ஆக்கப்பட்டுள்ளது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய நிர்வாக மாவட்டங்கள் இணைக்கப்பட்டு வன்னித்தேர்தல் மாவட்டமாக ஆக்கப்பட்டுள்ளது.
98 வது சரத்தின் முதலாம் பிரிவு பாராளுமன்றம் 225 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் எனவும், இவர்களுள் 196 உறுப்பினர்கள் 22 தேர்தல் மாவ ட்டங்களிலிருந்து மக்களால் தெரிவு செய்யப்படுவர் எனவும், இவர்களுள் 36 உறுப்பினர்கள் ஒரு மாகாணத்துக்கு நான்கு பேர் என்ற அடிப்படையில் 9 மாகாணங்களுக்கும் பிரித்தளிக்கப்படுவர்.
ஒவ்வொரு மாகாணத்திலுமுள்ள சகல தேர்தல் மாவட்டங்களுக்கும் குறைந்தது ஒரு உறுப்பினரையாவது பெற்றுக் கொள்ளும் வகையில் இது பகிர்ந்தளிக்கப்படுகிறது.
எஞ்சிய 166 உறுப்பினர்களும் மாவட்டங்களில் வாக்காளர்களது விகிதாசாரத்துக்கேற்ப மாவட்டங்களுக்கு பிரித்தளிக்கப்படும். இதற்காக முழு இலங்கையினது மொத்த வாக்காளர் தொகையை 160 இனால் பிரிப்பதன் ஊடாக தேசிய கோட்டாத் தொகை அல்லது தகைமை பெறு தொகை பெற்றுக்கொள்ளப்படும். அத்தொகையி னால் ஒவ்வொரு தேர்தல் மாவட்டங் களினதும் மெத்த வாக்காளர் தொகையை வகுப்பதன் ஊடாக மாவட்டங்களுக்கான ஆசன ஒதுக்கீடு செய்யப்படும்.
தேசிய கோட்டாத் தொகை = பதிவு செய்யப்பட்ட இலங்கையின் மொத்த வாக்காளர் தொகை
(தகைமை பெறு தொகை) 160
மாவட்டத்துக்குரிய ஆசனம் = மாவட்டத்தின் மொத்த வாக்காளர் தொகை
தேசிய கோட்டாத் தொகை
இவ்வெண்ணிக்கையோடு மாகாணத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 04 ஆசனங்களில் மாவட்டத்துக்குரிய ஆசனத்தையும் சேர்க்கும் போது கிடைக்கப்பெறுகின்ற ஆசனங்களின் எண்ணிக்கையே அம்மாவட்டத்துக்குரிய மொத்த ஆசனத்தொகையாகும். மீதமாக உள்ள 29 உறுப்பினர்கள் தேசியப்பட்டியல் ஊடாக நிரப்பீடு செய்யப்படுவர்.
விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் யாரும் தனித்துப் போட்டியிட முடியாது. அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சி ஒன்றின் மூலம் அல்லது சுயேட்சைக் குழு ஒன்றின் மூலமே போட்டியிட முடியும். வேட்பு மனுக்களை கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் பெயர்ப் பட்டியல் ஒன்றின் மூலமே தாக்கல் செய்தல் வேண்டும். குறித்த மாவட்டத்தில் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையோடு மூன்றைச் சேர்த்து வரும் எண்ணிக்கையைக் கொண்ட பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்படுதல் வேண்டும்.
இதை முன்னுரிமைப்பட்டியல் என அழைப்பர். அவ்வேட்புமனு மாவட் டத்தின் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் சம்பந்தப்பட்ட கட்சியின் செயலாளரினால் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட ஒரு பிரதிநிதியினால் கையளிக்கப்படுதல் வேண்டும். ஒரு சுயேட்சைக் குழுவின் பட்டியல் ஒரு சமாதான நீதவானால் உறுதிப்படுத்தப்பட்டு அக்குழுவின் தலைவரால் கையளிக்கப்பட வேண்டும். ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் கட்சிகளினதும் சுயேட்சைக்குழுக்களினதும் பட்டியலில் உள்ள பெயர்கள் சிங்கள அகரவரிசைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டு கட்சிகளினதும் சுயேட்சைக் குழுக் களினதும் ஒவ்வொரு வேட்பாளர்க ளுக்குமான இலக்கங்கள் வழங்கப்படும். இம்முறையில் வாக்காளர் ஒருவர் வாக்களிப்பின் போது முதன் முதலில் தான் விரும்பும் கட்சியின் அல்லது சுயேட்சைக் குழுவின் சின்னத்திற்கு எதிரே புள்ளடி இடுதல் வேண்டும். அதன் பின்னர் அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலிலுள்ள மூன்று வேட்பாளர்களுக்கு தனது மூன்று விருப்பத்தேர்வு வாக்குகளை அளிக்க வேண்டும்.
வெட்டுப்புள்ளி :- எந்த ஒரு தேர்தல் மாவட்டத்திலாவது அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் 5% க்கு குறைவான வாக்குகளைப் பெறுகின்ற கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் போட்டியில் இருந்து நீக்கப்படும். அதை வெட்டுப்புள்ளி என அழைப்பர்.
இயைவான வாக்கு:- ஒரு தேர்தல் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் இருந்து வெட்டுப்புள்ளி வாக்குகளை கழித்ததன் பின்வருகின்ற மீதமாகவுள்ள வாக்குத் தொகையே இயைவான வாக்கு என அழைக்கப்படுகின்றது.
போனஸ் ஆசனம்:- தேர்தல் மாவட்டம் ஒன்றில் போட்டியிடும் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களில் எந்தக் கட்சி அல்லது சுயேட்சைக் குழு அம்மாவட்டத்தில் அதிக வாக்கைப் பெறுகின்றதோ அக்கட்சிக்கு அல்லது குழுவிற்கு மேலதிகமாக ஒரு ஆசனம் வழங்கப்படும். அதை போனஸ் ஆசனம் என அழைப்பர். இப் போனஸ் ஆசனம் அம்மாவட்டத்தில் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையிலிருந்தே வழங்கப்படும்.
விழைதொகை அல்லது கோட்டாத் தொகை:- தேர்தல் மாவட்டம் ஒன்றில் அளிக்கப்பட்ட செல்லுபடியான மொத்த வாக்குகளிலிருந்து வெட்டுப்புள்ளி வாக்குகள் கழிக்கப்பட்டு பெறப்படுகின்ற இயைவான வாக்குத் தொகையை அம்மாவட்டத்தில் தெரிவு செய்யப்படவேண்டிய உறுப்பினர் தொகையில் போனஸ் ஆசனத்தை கழித்துவரும் தொகையினால் பிரிப்பதன் மூலம் கிடைக்கப்பெறுகின்ற தொகை விழை தொகை எனப்படும். இதை பாராளுமன்ற அங்கத்தவர் ஒருவரை தெரிவு செய்வதற்கான ஆகக்குறைந்த வாக்குத் தொகை எனவும் கூறலாம். இவ்வாக்குத்தொகையினால் அம்மாவட்டத்தில் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தாம் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குத் தொகையோடு வகுப்பதன் மூலம்கட்சிகளுக்கும் சுயேட்சைக் குழுக்களுக்கும் உரிய ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஒவ்வொரு கட்சிகளுக்கும் சுயேட்சைக் குழுக்களுக்கும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் யார் என்பது அக்கட்சியின் அல்லது குழுவின் வேட்பாளர்கள் பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். அதாவது கூடிய விருப்பு வாக்கைக் கொண்டிருப்பவர்கள் வரிசைப்படி தெரிவு செய்யப்படுவர். உறுப்பினர் பதவி வெற்றிடமாகின்ற போது அப்பட்டியலில் விருப்புவாக்குகளின் அடிப்படையில் அடுத்த நிலையில் உள்ளவர் உறுப்பினராக தேர்தல் ஆணையாளரால் அறிவிக்கப்படுவார்.
தேசியப்பட்டியல்:- 1978 ஆம் ஆண்டு யாப்பின் 14 வது திருத்தம் கொண்டுவந்ததன் மூலம் தேசியப் பட்டியல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி 29 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களின் தலைவர்கள் 29 பெயர்கள் அடங்கிய தேசியப்பட்டியலை தேர்தல் ஆணையாளருக்கு சமர்ப்பித்தல் வேண்டும். அகில இலங்கை ரீதியாக அளிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குத் தொகையினை மொத்தத் தேசியப்பட்டியல் தொகையினால் வகுப்பதன் மூலம் ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்துக்குரிய வாக்குத் தொகை பெறப்படும். இவ்வாக்குத் தொகையினால் கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் அகில இலங்கை ரீதியாக தாம் பெற்ற மொத்தவாக்குத் தொகையுடன் வகுப்பதன் மூலம் கட்சிகளுக்கும் சுயேட்சைக் குழுக்களுக்குமுரிய தேசியப் பட்டியல் ஆசன எண்ணிக்கை ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாசனங்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையாளர், கட்சிகளின் செயலாளர்களுக்கும் சுயேட்சைக் குழுக்களின் தலைவர்களுக்கும் குறிப்பிட்டு அவ்விடத்துக்கு நியமனம் பெற இருப்பவர்களின் பெயர்களை சிபார்சு செய்யுமாறு கேட்டுக்கொள்வார்.
இவர்களால் சிபார்சு செய்யப்படுகின்றவர்களே தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். தேசியப்பட்டியலில் பெயரில்லாதவர்களுக்கும் தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கும் தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்குவதற்கான ஏற்பாட்டு முறைகளும் உண்டு.

Wednesday, March 03, 2010


கறுப்பாகிக் கிடந்த ஈழமண்ணில்எழுந்து பழுத்து வீழ்ந்த விதை!
அமரர்
சின்னத்தம்பி செல்லையா

1932
-2007
-கரவைதாசன்-

யாழ்ப்பாணத்து நிலவுடைமைச் சமூகத்தின் முரண்பாடுகளை விளங்கிக்கொண்டு, அச்சமூகத்தில் அசைவியகத்தினை ஏற்படுத்திய கருத்துப் பொறிகளில் மார்க்சிய வழியில் 1950ம் ஆண்டு காலப்பகுதிகளில் தோன்றிய அமைப்பாளர்கள், மாதிரி உருவை வடிவமைத்தவர்கள், மார்க்கத்தினை கண்டறிந்தவர்கள், வாழ்ந்து பணி செய்த தோழர்கள் வரிசையில் இந்த ஆண்டில், முதலில் அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபையைச் சேர்ந்த மா.செல்லத்தம்பி அவர்களை இழந்து தவித்து நின்றபோது மகாசபையைச் சேர்ந்த இன்னொரு தோழர் துன்னாலையைச் சேர்ந்த தலைவர் செல்லையாவையும் இழந்துவிட்டோம் என்ற செய்தி வந்து சேர்ந்தது.

தோழர் செல்லையா அவர்கள் அமரத்துவம் அடைந்துவிட்டார். அவர் நிகழ்வுகளை புனைவின்றி பதிவு செய்வதினூடே ஐம்பதுகளில் அடக்கு முறைக்கெதிராக கிளர்ந்தெழுந்த ஒரு சமூகத்தின் வரலாற்றினையும் பதிவு செய்யும் வாய்ப்பு கிட்டுவதை உணர்கிறேன். அன்று ஈழத்திலே ஒரே மொழியைப் பேசி ஒரே பிரதேசத்தில் ஒரே மாதிரியான வாழ்வை வாழ முடியாமற் தடுத்து, நாகரிகமற்ற முறையில் எங்கள் மண்ணின் மைந்தர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டபோது, கிளர்ந்தெழுந்த வரலாற்றினை பதிவு செய்யும் முயற்சியாகவும் இதனைக் கொள்ளலாம். எனில் எனக்கு எட்டியவரை கிடைத்த தகவல்களின் வழி நான் வாழ்ந்த கிராமத்தில் வாழ்ந்த இவரோடொத்த தோழர்களையும் இவர்களது செயற்பாடுகளையும் ஆவணப்படுத்த நினைக்கிறேன்.

அமரர் சின்னத்தம்பி செல்லையா அவர்கள் ஈழத்தின் வடமராட்சிப் பகுதியில் துன்னாலை மேற்கில் 22-04-1932ல் சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் இளைய மகனாகப் பிறந்தார். யாழ் /ஞானசாரியார் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய இவர் தொடர்ந்து அரசினரால் நடத்தப்பட்ட பாடசாலை, நெல்லியடி மத்தியமகாவித்தியாலயத்தில் ஆங்கில மொழிமூலம் தனது இடைநிலைக் கல்வியினை கற்று தேறினார். தனது ஊரைச் சேர்ந்த பூங்கிளி என்ற பெண்ணை வாழ்க்கைத் துணையாகச் சேர்ந்து ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்று ஐவரையும் ஆசிரியைகளாக உருவாக்கியுள்ளார்கள்.

அமரர் அவர்கள் இடைநிலைக் கல்வியினை கற்று தேறிய காலத்திலேயே வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலையில் கணக்காளராக வேலைக்கமர்த்தப்பட்டார். சமூகச் சீர்திருத்த எண்ணமும் அடக்குமுறைக்கெதிரான போராட்டச் சிந்தனையும் இவரை கம்யூனிசக் கட்சியிலும் அதனைத் தொடர்ந்து எம்.சி.சுப்பிரமணியம் அவர்களை தலைமையாகக் கொண்ட சிறுபான்மைத் தமிழர் மகாசபையிலும் இணைந்து செயற்பட வைத்தது. வடமராட்சியில் மகாசபையின் கிளையினை அமைத்து செயற்பட்ட தோழர்கள் அமரர்கள் ஆ.ம.செல்லத்துரை, கவிஞர் பசுபதி, மு.செல்வபாக்கியம், கிருஸ்ணபிள்ளை, ஜீ.ஜீ.மகாலிங்கம், முருகேசு, மா.செல்லத்தம்பி, ஆ.குலேந்திரம், வ.சின்னத்தம்பி, ஆ.வன்னியசிங்கம், வீ.எஸ்.சிவபாதம், வ.தங்கமணி, மற்றும் இரகுநாதன், தெணியான், க.இராசரத்தினம் ஆகியோருடன் இணைந்து முன்னணியில் நின்று செயற்பட்டார். மகாசபையின் பொதுக் காரியதரிசியாக சட்டத்தரணி பீ.ஜே. அன்ரனி அவர்கள் இருந்து உழைத்துக் கொண்டிருந்தபோது அமரர் அவர்கள் நிர்வாகக் காரியதரிசியாக இருந்து செயற்பட்டார். அப்போது உத்தியோகமா? சமூகப்பணியா? எனக் கேள்வி எழுந்தபோது உத்தியோகத்தினை விட்டு வந்து சமூகப்பணியிலே முழுவதுமாக ஈடுபட்டார்.

இப்டியாக இவர் மட்டுமன்றி எம்.சி.சுப்பிரமணியம் எலிபன்ட் கவுசில் பார்த்த உத்தியோகத்தை துறந்தார். கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த வ.தங்கமணி அவர்கள் பொலிஸ் உத்தியோகத்தினை துறந்துவிட்டு இவர்களுடன் சமூகப்பணியில் சேர்ந்து செயற்பட்டார். அது போலவே கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த வீ.எஸ்.சிவபாதம், ஆ.சிவகுரு இருவரும் கூட தாங்கள் அக்குறனையில் வகித்து வந்த பண்டகசாலைப் பொறுப்பாளர் உத்தியோகங்களை விட்டு வந்து (இப்படிப் பலர்) சமூக மாற்றத்திற்காக எழிச்சியுடன் ஈடுபட்டு உழைத்தார்கள்.
அமரர் அவர்கள் 1956ல் பொன்.கந்தையா அவர்களின் தேர்தல் வெற்றிக்காக கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரக் கூட்டங்களில் ஈடுபட்டார். சிறந்த பேச்சாளரான இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் கனல் பறக்க அரசியல் மேடைகளில் பேசிவந்தார். இவர் போன்ற தோழர்களின் தொடர்ச்சியான உழைப்பு வடக்கு கிழக்கிலிருந்து பாராளுமன்றத்திற்கு கம்யூனிஸ் கட்சியிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட ஒரே ஒரு பராளுமன்ற உறுப்பினர் தோழர். பொன்.கந்தையா அவர்கள்தான் என்ற வரலாற்றினை உருவாக்கியது.


இதே1956ல் பிற்றர் கெனமன் வடமராட்சிக்கு வருகை தந்து மாலிசந்தியில் பிரமாண்டமான கூட்டமொன்று நடைபெற்றது. அதனையொட்டி வடமராட்சியில் சைக்கிள் ஊர்வலம் ஒன்றும் நடைபெற்றது அதில் பீற்றர் கெனமனும் பங்குபற்றினார். வடமராட்சியின் முன்னணித் தோழர்களுடன் அமரர் தலைவர் செல்லையா அவர்களும் இரண்டிலும் கலந்து கொண்டார். அச்சைக்கிள் ஊர்வலத்தில் பெண்களும் கலந்துகொண்டிருந்தனர். கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த வீ.எஸ்.சிவபாதம் அவர்களின் சகோதரி லட்சுமி அவர்களும் அவ்வூர்வலத்தில் சேர்ந்திருந்தார். அப்போது வீ.எஸ்.சிவபாதம் அவர்கள் s.s.c படித்துக் கொண்டிருந்த மாணவன். இவர் அடுத்த நாள் பாடசாலைக்கு போகும் வழியில், வட்டவிதானை என அழைக்கப்படும் சாதி வெறியர்களுடைய சண்டியன் சித்தன் என்பவன் (அக்காலங்களில் வட்டவிதானை என அழைக்கப்படும் அரச அதிகாரமற்ற உயர்சாதி கட்டப் பஞ்சாயத்துக்காரர்கள் ஒவ்வொரு வட்டாரத்திலும் இருந்திருக்கிறார்கள்.) வீ.எஸ்.சிவபாதம் அவர்களை வழிமறித்து அவரிடம் அவரது சகோதரியை மிக அவதூறாகப் பேசி அவரை துவரந்தடியால் தாக்கியும் உள்ளார். பதிலுக்கு வீ.எஸ்.சிவபாதம் அவர்கள் அவர் பென்சில் சீவுவதற்காக வைத்திருந்த பேனாக் கத்தியால் சித்தனை தாக்கியுள்ளார். இச்சம்வமானது அன்று சாதி அதிகாரச் சண்டித்தனத்தினை உசுப்பிய சம்பவமாக அமைந்திருந்தது. அன்று மாலை சிவபாதம் அவர்களுடைய வீடு தீக்கிரை ஆக்கப்பட்டது. சேதியறிந்து எம்.சி அவர்களுடன் அமரர் செல்லையா அவர்களும் அவ்விடம் வந்து தோழைமையுடன் அவர்களுடன் சேர்ந்து எதிர் நடவடிக்கைகளில் செயற்பட்டுள்ளார். கன்பொல்லையின் எல்லையை அண்டி இடைக்குறிச்சியில் வாழ்ந்து வந்த வீ.எஸ்.சிவபாதம் அவர்களது பெற்றோர், குடும்பமாக பாதுகாப்புக் கருதி கன்பொல்லையின் மையப் பகுதிக்கு அவரது பெரிய தகப்பனாரின் காணிக்கு இடம் பெயர்ந்தார்கள். இப்படி பாதுகாப்புக் கருதி இடம் பெயர்ந்த ஒரு சம்பவம் சங்கானை நிச்சாமம் கிராமத்தில் தோழர் மான் நா. முத்தையா அவர்களுக்கும் நேர்ந்தது.


ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் பருத்தித்துறைதொகுதி எம்.பியாக இருந்தபோது, சோல்பரி கொமிசன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தது. அப்போது சாதிக் கலவரங்களினால் பாதிக்கப்பட்ட கிராமங்களை கொமிசனரை அழைத்துச் சென்று காட்டுவதென சிறுபான்மைத்தமிழர் மகாசபை முடிவெடுத்திருந்தது. ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. இருந்தபோதும் சோல்பரி கொமிசனரை இரகசியமாக அழைத்து வந்து கன்பொல்லைக் கிராமத்தில் எரிந்த வீடுகளை புகைந்துகொண்டிருக்கும் நிலையில் காட்டியுள்ளார்கள். இதற்குப் பின்னணியில் கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த ஆசையண்ண என அழைக்கபடும் தோழர் இராசையா அவர்களும், டி.ஜேம்ஸ், வி.டி.கணபதிப்பிள்ளை, எம்.சி.சுப்பிரமணியம் இருந்தார்கள். கூடவே தலைவர் செல்லையாவும் கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த இன்னொரு சமசமாசித்தோழர் பைரவன்.மாசிலாமணி அவர்களும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. வீடு திரும்பும் வழியில் நெல்லியடிச்சந்தியில் வைத்து வி.டி.கணபதிப்பிள்ளை, எம்.சி.சுப்பிரமணியம், டி.ஜேம்ஸ் ஆகிய மூவரும் சாதிவெறியர்களால் நையப்புடைகப்பட்டார்கள் என்பது பல இடங்களில் பதிவாகியுள்ளது.

பொன்.கந்தையா அவர்களின் காலத்தில் அவர் கல்வி அமைச்சர் டபிள்யு. தகாநாயக்க அவர்களின் உதவியுடன் சிறுபான்மைத்தமிழர் மகாசபையின் அனுசரனையுடன் தமிழ்ப் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல பாடசாலைகளை உருவாக்கினார். கூடவே உள்ளுராட்சிசபைகளின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவிற்காகப் பாடுபட்டடார். உள்ளுராட்ச்சி சபைகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். அப்போது நெல்லியடி பட்டினசபைத் தேர்தலில் கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த தோழர்.ஆ.சிவகுரு தொடர்ந்து இரண்டு தடவையாக வேட்பாளராக நிறுத்தப்பட்டு நட்சத்திரச் சின்னத்தில் போட்டியிட்டார். முதற் தடவை 22வாக்குகள் வித்தியாசத்திலும் இரண்டாவது தடவை பத்திற்குட்டபட்ட வாக்குகள் வித்தியாசத்திலும் அவர் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. அப்போதெல்லாம் அத்தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அமரர் செல்லையா அவர்கள் கலந்து கொண்டு தோழர் ஆ.சிவகுரு அவர்களுக்கு ஆதரவு தேடி பேசி வந்துள்ளார். (பின்பொருதடவை கன்பொல்லையைச் சேர்ந்த தோழர்.ஆண்டி.சுந்தரம் அவர்களும் நெல்லியடி பட்டினசபைத் தேர்தலில் போட்டியிட்டார்). சமகாலத்தில் சங்கானைப் பட்டினசபையில் போட்டியிட்ட மான் நா.முத்தையா, பி.நாகலிங்கம், வி.வைரமுத்து, ப.பசுபதி, வல்வெட்டித்துறை பட்டினசபையில் போட்டியிட்ட தோழர்.திருப்பதி, சுன்னாகம் பட்டினசபையில் போட்டியிட்ட செனட்டர் நாகலிங்கம் ஆகியோர் வெற்றிபெற்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
எம்.சி.அவர்களின் வலுமிக்க தோழராக அமரர் செல்லையா அவர்கள் விளங்கினார். மகாசபையின் வாலிப முன்னணியில் வடமராட்சியில் ஆசிரியர் ஜி.ஜி.மகாலிங்கம் அவர்களுடன் சேர்ந்து தலைமை தாங்கி முனைப்புடன் செயற்பட்டார். அந்நாட்களில் வடமராட்சிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஏற்படுத்தப்பட்ட எழுச்சி மிக்க சயிக்கிள் ஊர்வலத்தினை ஒழுங்கு செய்து தலைமை தாங்கி நடத்திச் சென்றார். இவ் ஊர்வலத்தில் யாழ் அணி, கரவெட்டி கிழக்கு அணி, பருத்தித்துறைஅணி, துன்னாலைஅணி;, மட்டுவில்அணி, மானிப்பாய்அணி, காங்கேசன்துறை அணி, தீவு அணி, இமையாணன் அணி, கம்பர்மலை அணி, என நூற்றுக்கணக்கான அணியினருடன் கன்பொல்லைஅணியும் ஆசிரியர் க.இராசரத்தினம் அவர்களின் முனைப்பில் அணிவகித்து நின்றது. அந்நாட்களின் வரலாறு. இச்சயிக்கிள் ஊர்வலம் சிறப்புற நடந்தேறியமைக்காக அமரர் செல்லையா அவர்கள் அவ்வேளை பெரிதும் பாராட்டிப் பேசப்பட்டார்.


1966
மாசி மாதம் 14ந் திகதி கன்பொல்லைக் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் கல்வி கற்பதை முன் வைத்து ஓர் பாடசாலை (யா/சிறீநாரதவித்தியாலயம்) க.இராசரத்தினம் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. அப்பாடசாலையை நிறுவுவதற்கு நிலத்திற்கு சொந்தமானவர்கள் நிலத்தினை வழங்கி ஒத்துழைத்தபோது ஒருவர் மட்டும் மறுத்து குழப்பம் விளைவித்தார். அவ் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் தலைவர் செல்லையா அவர்களும் கலந்திருந்தார். எப்பொழுதும் பிரச்சினைகள் வரும்போது அதற்கு முகம் கொடுக்கும் அமரர் அவர்கள் குளப்பம் விளைவித்தவரை அணுகி சமாதானம் பேசியுள்ளார். விடயம் முற்றி விவகாரமாகி கைகலப்பு அளவிற்கு போனபோது கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த கட்டுரையாளரின் தந்தை மு.தவராசா (தவம்)அவர்கள் இடையில் தலையிடவே பொலீஸ் வந்து அமரர் செல்லையா அவர்களையும் தவம் அவர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தடுத்து வைத்திருந்தது. மறுநாள் எம்.சி.அவர்களும், வ.தங்கமணி அவர்களும் பொலிஸ் நிலையம் சென்று வ.தங்கமணிஅவர்கள் பிணைக்கையெழுத்திட்டு இருவரையும் அழைத்து வந்தார். பின்பு அரசு இப்பாடசாலையை பொறுப்பேற்றபோது இப்பாடசாலைக் ஊடாக பன்னிரண்டு சிறுபான்மைத்தமிழர்களுக்கு ஆசிரிய நியமனம் கிடைத்தது. இன்று பத்தாம் வகுப்புவரை இங்கே மாணவர்கள் கல்வி கற்றுவருகிறார்கள்.
கன்பொல்லைக் கிராமமக்கள் தொடர்ச்சியாக சாதியப்போராட்டத்தினை நடத்திவந்தபோது ஒரு கம்யூனிஸ்ட் என்ற வகையிலும் அனைத்திலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபையின் முன்னணி உறுப்பினர் என்ற வகையிலும் தோழைமையோடு அவர்களுடன் அமரர் செல்லையா அவர்கள் இணைந்து செயற்பட்டு வந்துள்ளார்.



தொடர்ச்சியாக சிறுபான்மைத் தமிழர் மகாசபை, தீண்டாமைஒழிப்பு வெகுசன இயக்கம் முன்னெடுத்த தேனீர்க்கடைப் பிரவேசம், ஆலயப்பிரவேசம் என பஞ்சமர்களின் சமத்துவத்திற்கான அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். ஒரு சமயம் மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் பிரவேசத்தின்போது மண்டையில் பலமாக அடிப்பட்டார். இவரது கிராமத்தினை அண்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள வல்லிபுரக்கோவில் பிரவேசத்தின்போது எம்.சியும், அமரர் அவர்களும், தவயோகம், மற்றும் துன்னாலையை சேர்ந்த ஊ.வு.டீ செல்லையா, அரசடி குழந்தையப்பா, க.இராசரத்தினம் மற்றும் தானும் முன்வரிசையில் கோவிலுக்குள் சென்றபோது எங்களின் வீட்டு அர்ச்சனைத் தட்டைத்தான் எம்.சி அவர்கள் வாங்கி முதல் முதலாக அர்ச்சனை செய்வித்தார் என எனது தந்தையார் மு.தவராசா சொல்லி மகிழ்வார். அங்கு கோயில் உள் மண்டபத்தில் துவக்குகள் சாத்தி வைக்கப்பட்டிருந்தை தாங்கள் கண்டதாகவும் கோயில் மணியம் வே.க.வல்லிபுரமும் சில அடியாட்களும் இரண்டாம் மண்டபத்தில் நின்றதாகவும், எம்.சி யின் ஏற்பாட்டில் பொலிசும் ஆமியும் பந்தோபஸ்திற்கு வந்து நின்றதாகவும். இருந்தபோதும் தாங்களும் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்குள் ஆயுதங்களை கொண்டு போன அதே பாணியில் பொங்கல்ப் பானைக்குள் கைக்குண்டுகளை கொண்டுபோனதாகவும் ஆமி நின்றபடியால் எந்தவித அசம்பாவிதமுமின்றி ஆலயப் பிரவேசம் நடந்ததாகவும் அவர் கூறினார்.
எம்.சி அவர்கள் நியமன எம்பியாக இருந்தபோது அமரர் அவர்கள் சிபார்சு செய்து தனது கிராமத்தில் ஆட்டுப்பட்டிக் குறிச்சியில் சாதிமான் அருமைத்துரை என்பவனுக்கு சொந்தமாயிருந்த எழுபத்தைந்து பரப்பு காணியினை அரசினால் சுவீகரித்து அங்கு வாழ்ந்த பஞ்சமர்களுக்கு உரிமையாக்கினார். சாதியச் சண்டையில் ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த தன் கிராமத்தினைச் சேர்ந்த மாம்பழன், சீனியன் சகோதரர்களை பிரதம மந்திரி சிறீமாவோ பண்டாரநாயக்கா அவர்களின் பொது மன்னிப்பின் பேரில் விடுதலை வாங்கிக் கொடுத்தார். மேற்கொண்ட காரியங்களுக்காக இவரது உயிருக்கு அச்சுறுத்தல் வந்தபோதும் அதனை துச்சமாக மதித்து எம்.சிக்கூடாக இவற்றை செய்து முடித்தார்.


அமரர் அவர்களின் தொடர்ச்சியான பணிகளினூடே சிறுபான்மைத்தமிழர் மகாசபையின் நிர்வாகக் காரியதரிசியாகவும், கட்டைவேலி நெல்லியடி.ப.நோ.கூ.சங்க பணிப்பாளர்சபைத் தலைவராகவும், கட்டைவேலி. உடுப்பிட்டி. தெங்குப்பனம்பொருள். உற்பத்தி விற்பனவு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகவும், பனை அபிவிருத்தி பணிப்பாளர்சபை பணிப்பாளராகவும், கடற்தொழில்அமைச்சின் பணிப்பாளர்சபை உறுப்பினராகவும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் உத்தியோகப்பற்றற்ற மேற்பார்வையாளராவும், சமாதான நீதிவானகவும் பயணித்துள்ளார்.
இவர் போன்ற சமூக விடுதலைப் போராளிகளின் இரத்தம், வியர்வை, சிறைவதைக் கொடுமை இவற்றினூடேதான் இன்றைய ஈழத்தில் வாழும் பஞ்சம இளம் சந்ததி இன்றுவரையுள்ள சமத்துவத்தினை அனுபவிகின்றது. இப்போராளிகள் கருப்பாகிக் கிடந்த ஈழமண்ணில் எழுந்து பழுத்து வீழ்ந்தாலும், எல்லாம் விலகிப்போச்சு என்ற வெறும் தோற்றப்பாடு இருக்கும் வரை, என்றும் புதிய விதைகளே!

தகவல்: க.இராசரத்தினம், மு.தவராசா(தவம்)
துணைநூல்கள்: சி.கா.செந்திவேல், „இலங்கை இடதுசாரி இயக்கத்தின் 50 ஆண்டுகள்“,
போ.சிறீபவன்,“நந்தா விளக்கு“


இக் கட்டுரை முதலில் „உயிர்மெய்“ (இதழ் 4, ஐப்பசி-மார்கழி 2007) வெளியாகியுள்ளது.