Wednesday, January 11, 2012

குவாண்டனமோ கரி நாள் இன்று

-கரவைதாசன்-

குவண்டனமோ (Guantánamo) வதைமுகாம் தொடங்கப்பட்ட பத்து ஆண்டுகளின் கரி நாள் இன்று . இந்நாளை அமெரிக்க ஏகாதிபத்தியம் முகாமின் பிறந்த நாளாக வெட்கமின்றி கொண்டாடுகின்றது, இந்த வதை முகாம் அமெரிக்காவிற்கு சொந்தமான கியூபாதீவின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.

மட்டக்களப்புக்குப் போகையில் மறிக்கப் படுவோரது அடையாள அட்டைகள்
இஸ்ரேலியப்  படையினனிடம் ஒரு பலஸ்தீனியனால் நீட்டப்படுகின்றன...... 

உலகின் எல்லாத் தடுப்பு முகங்களிலும் உள்ளவர்கள்      
ஒரே மொழியில்தான்  இரவில் அலறுகிறார்கள் .....

என்ற  சி. சிவசேகரம் அவர்களின் கவிதை  வரிகளில் குறிப்பெய்தியதுபோல்  இன்றுவரை இந்த வதைமுகாமில் இன்னும் விடப்படாமல் எஞ்சியுள்ள 171 மனிதர்களின் அலறல்கள் பயங்கரவாதிகள் என்ற சுவரின் பின்னால் மறைக்கப்படுகின்றது.


1991ல்  சோவியத்தின் கலைப்புக்குப்பின்  அமெரிக்க ஏகாதிபத்தியம்  தான் உலகெலாம் பெரிய அண்ணனாய் வலம் வருவதற்காய் அன்றைய அமெரிக்க  ஜனாதிபதி டபிள்யு. புஸ் அவர்களின் கண்டு பிடிப்புத்தான் "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்"  என்னும்  அரசியல் செப்படி வித்தை. தன்னை உலகுக்கு கதாநாயகனாக காண்பிப்பதற்காக  முஸ்லீம் அடிப்படை வாதிகளை  தனக்கு வில்லனாக உலக அரங்கில் தானே உருவகித்து  அவர்களை  ஒரு அரசியல் சக்தியாக உருவாக்கிவிட்டு விட்டு "பயங்கரவாதம் அதற்கு எதிரான போர்" என்ற நாடகத்தினையும் தானே அரங்கேற்றியது. உலகமெங்கும் பரவி வைத்திருக்கும் தன் தரகர்களுக்கு பணம் கொடுத்து அப்பாவிகளை கடத்தி வந்து சிறை வைத்து  சித்திரவதை செய்கிறது.

இச்சிறையினில் சித்திரவதைக்கு உள்ளாகி ஐந்து வருடங்களின் பின் வெளியில் மீண்டு வந்த, துருக்கி பெற்றோருக்கு பிறந்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த முரட். குர்நாஸ் அவர்களை 2007ம்  ஆண்டு அவர் கொப்பநேக்கன் வந்திருந்தபோது. அவரை சந்தித்து பேசும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. முரட். குர்நாஸ் அவர்கள் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஹெல்முட் குஹ்ன் அவர்களுடன் சேர்ந்து, தான் ஐந்து வருடங்கள் குவண்டனமோ வதைமுகாமில்  பட்ட துன்பங்களை விவரித்து "ஐந்து வருடங்கள் என் வாழ்வில்" என்னும் புத்தகத்தினை வெளிக் கொண்டு வந்துள்ளார். இதன் டெனிஸ் மொழியிலான மொழிபெயர்ப்பு "Fem år af mit liv" கன்ஸ் யோன் பியர்க்மொஸ் அவர்களால் வெளிக்கொணரப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு நிகழ்வில்தான் குர்நாஸ் அவர்களை சந்தித்தேன். தான் பாக்கிஸ்தானுக்கு இஸ்லாமைப்  பற்றி படிக்க சென்றபோது 3000 யூ.எஸ் டொலர்களுக்கு  பாகிஸ்தான் போலீஸ் அதிகாரிகள் தன்னை  அமெரிக்கர்களிடம் விற்றதாகவும் அங்கிருந்து பிரத்தியேக விமானமூலம் குவண்டனமோ வதைமுகாமிற்கு கடத்தி வந்து சித்திரவதை செய்யப்பட்டதாகவும் கூறினர். இப்படியாகத்தான் மனிதர்கள் இங்கு கடத்தி வரப்படுகிறார்கள். 


மனித உரிமைக்கு  சவாலாக  செயல்படும்  இவ் வதைமுகாமில் இதுவரை  779 மனிதர்கள் சித்திரைவதைக்கு உள்ளாகிவெளியே வந்துள்ளனர் . இக்கைதிகள்  மனித உரிமைப் போராளிகளின் தொடர்ச்சியான போராட்டத்தினாலும் கிளர்ச்சிகளினாலும் சட்ட  மேல் முறைஈடுகளின்  பேறினாலும் வெளியே கொண்டு    வரப்பட்டு ள்ளனர்.  எஞ்சியுள்ள 171 கைதிகளையும்  காலவரையின்றி தடுத்து வைத்து விசாரணை செய்யலாம் என வெள்ளை அமெரிக்காவின் கருப்பு ஜனாதிபதி பாரக் ஒபாமா அவர்கள் கடந்த டிசெம்பர் மாதம் உத்தியோகபூர்வமான  அனுமதியை கையெழுத்திட்டு  ஒப்புதல் செய்துள் ளார்.

Udsigten til en lukning af den amerikanske fangelejr i Guantánamo Bay, som kan fejre ti års jubilæum den 11. januar næste år, er skubbet endnu længere ud i fremtiden. Præsident Obama underskrev den 31. december en lov – National Defense Authorization Act (NDAA) – som gør det muligt at tilbageholde mistænkte på ubestemt tid i militær varetægt uden adgang til domstolene.
          
முகாமின் காணொளி இணைப்பு:-

No comments: