Tuesday, March 09, 2010


நவீன இலச்சியப் பெண்ணியவாதி மார்லின் பிரெஞ் அவர்கள் இறப்பெய்தினார்.
-கரவைதாசன்-
(இனி இதழ் ஐந்திலிருந்து )
1929 - 2009

இலச்சிய நவீனப் பெண்ணியவாதி மார்லின் பிரெஞ் அவர்கள் தனது 79வது வயதில் ஒரு சனிப்பொழுதில் மாரடைப்பால் மான்காட்டன் நகரில் அமைந்திருந்த தனது இல்லத்தில் இறப்பெய்தினார். எல்லா ஆண்களுமே தமது கண்களாலும் அவர்களால் எழுதிவைக்கப்பட்ட சட்டத்தினாலும் அதனால் கொண்ட அதிகாரத்துவத்தினலும் வன்புணர்ச்சியாளர்களே (The War against Women 1992) என பிரகடனப்படுத்திய இவரது வைரம் பாய்ந்த இதயம் தனது துடிப்பினை நிறுத்திக்கொண்டது. தொடர்ச்சியான புகைப்பிடிக்கும் பழக்கத்தினைக் கொண்ட இவர் தனது 61வது வயதிலிருந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உபாதைகளுக்கு உள்ளாகியிருந்தபோதும் உலகமயமாகிப்போயிருக்கும் ஆணாதிக்க கலாசாரத்திற்கெதிராக தனது 79வது வயதிலும் சித்த சுவாதினமான நிலையில் தொடர்ந்து எழுதியும் இயங்கியும் வந்தார்.


உலகின் சிறந்த மாக்சிய பெண்ணியவாதியான ரோசா லக்சம்பேர்க் அவர்களை ஈர்ந்த போலந்து தேசத்தினைச் சேர்ந்தவர்கள் இவரின் தாயும் தந்தையுமாவர். இடம் பெயர்ந்து அமெரிக்காவில் வாழ்ந்தவேளை நியூயோர்க் நகரில் 1929ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ந் திகதி மார்லின் பிரெஞ் அவர்கள் பிறந்தார். Hofstra College i Long Island 1951ல் தனது இளநிலைப் பட்டப் படிப்பினை பெற்ற இவர் தொடர்ந்து முதுநிலைப் பட்டப்படிப்பினை முடித்துக் கொண்டு Harvard பல்கலைக்கல்லூரியில் 1972ல் தனது கலாநிதி பட்டத்தினை கொண்டார். இடையே வழக்கறிஞரான எம்.றோபேட் அவர்களை காதல் மணம்புரிந்து இரண்டு பிள்ளைகளை பெற்றெடுத்தார். காதல்திருமண வாழ்வு கசந்துபோகவே அவரை விவாகரத்துச் செய்து கொண்டார். சுய ஆற்றலுள்ள பெண்களுக்கு இன்பமான காதல் மணவாழ்க்கை அமைவதில்லை என (I Her Mother’s Daughter 1987) குறித்து வைத்துள்ள இவர் ஆண்களுக்கு மட்டும் சுய ஆற்றலும் காதலும் சாத்தியப்படுவதாக இவ்வுலக நியதிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.

1957களில் இருந்து எழுதத்தொடங்கியிருந்தபோதும் இவரது கலாநிதிப் பட்டப்படிப்பின் பின் இவரால் எழுதப்பட்ட The Women’s Room 1977 என்ற நாவல் உலகப்பிரசித்தி பெற்றது.
இருபது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நாவல் பதினொரு மில்லியன் பிரதிகள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 1950களில் அமெரிக்காவின் மீரா என்கின்ற இள வயதுப் பெண்ணுக்கும் மருத்துவரான நோமுக்கும் ஏற்பட்ட காதல் வாழ்க்கையை விவரிக்கிறது இந் நாவல். மீரா தனது படிப்பினை இடைநிறுத்தி இல்லக்கிழத்தியாகி மருத்துவருக்கும் தனக்கும் ஏற்பட்ட காதலின் பேறாக இரண்டு மகன்களைப்பெற்று அறுபதுகளின் வீட்டுப்பெண்ணாக வாழ்ந்து வரும் நாளில் மருத்துவருக்கு மாடலின் செய்யும் ஒரு பெண்ணின்மீது தாபம் ஏற்படவே அவரை விவாகரத்துச் செய்து கொண்டு இரண்டு மகன்களையும் அவரிடமே விட்டுவிட்டு தனது பட்டப்படிப்பினை தொடரும் மீரா தொடர்ந்து பெண்ணிய அமைப்பொன்றில் உறுப்பினராக சேர்ந்து கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளும் போக்குடையதாக இந்நாவல் அமைந்திருந்தது. இந் நாவல் இவரின் வாழ்க்கைக் கூறுகளை முழு அளவு இல்லாது விடினும் பலவகையில் பல கூறுகள் ஒத்துப்போவதாக சில விமர்சகர்கள் கருத்துச் சொல்கிறார்கள்.

சிறந்த கல்வியாளரும் பெண்ணியவாதியுமான மார்லின் பிரெஞ் அவர்கள் புனைவுகளுக்கு அப்பால் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அவை உலகமயமாகிப்போயிருக்கும் ஆணாதிக்க கலாசாரத்திற்கெதிராக பெண்ணிய விழிப்புணர்வினை ஏற்படுத்தி நிற்கின்றன.


இவரின் டெனிஸ் மொழியாக்கம் பெற்ற படைப்புகள்.

Marilyn Frenchs forfatterskab
I dansk oversættelse:
•’Kvinder’. Roman 1978
•’Det blødende hjerte’. Roman
1980
•’Om kvinder, mænd og moral’.
Essays 1985
•’Sin mors datter’. Roman
1987
•’Krigen mod kvinder’. Afhandling
1992
•’Fader vor’. Roman 1994
•’Min sommer med George’.
Roman 1996
•’En tid i helvede’. Essay 1998
Ikke oversatte bøger:
•’From Eve to Dawn’. Historie
2002
•’In the name of Friendship’.
Roman 2006

No comments: