Saturday, September 12, 2015

யாழ்.சர்வதேசத் திரைப்பட விழா.

04. 09. 2015 இல், யாழ்ப்பாணம் மஜெஸ்ரிக் கூட்டுத் தொகுதியில் நடைபெற்ற, பத்திரிகையாளர் மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கை!


தொனிப்பொருள்: குடாநாட்டில் சுயாதீன திரைப்படங்களைக் கொண்டாடுதல். 
விரைவில் யாழ்ப்பாணத்தில் சர்வதேசத் திரைப்பட விழாவானது ஆரம்பமாகிறது. 

விழாத் திகதிகள்: 2015  செப்ரெம்பர் 15ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை. 
யாழ். பல்கலைக்கழக நுண்கலைத்துறை மற்றும் சிலோன் தியேட்டர்ஸ்  என்பவற்றோடு  அஜன்டா 14 ஆகியன இணைந்து, முதலாவது யாழ்ப்பாண சர்வதேசத்  திரைப்பட விழாவினை ஏற்பாடு செய்துள்ளன. இத்திரைப்பட விழாக் காட்சிகள் அனைத்தும் இலவசமாகக் காட்டப்படுகின்றமை முக்கியமானதாகும். 

விழாவின் இயக்குநரான அனோமா ராஜகருணா, குடாநாட்டில் சுயாதீனமாக திரைப்படங்களினைக் கொண்டாடுவது என்பதே எங்களுடைய அடிப்படையான நோக்கமாகும். இவ்விழாவானது 30 வருடகால ஆயுத முரண்பாடு மற்றும் போரின் அழிவுகளிலிருந்து நிகழும் மீண்டெழுதலாக அமைவதோடு, கலையைப் பயன்படுத்தலானது, மக்களைச் சென்றடைதலாகும் என நாங்கள் நம்புகின்றோம். அத்துடன் இந்த விழாவானது, சினிமாவினூடாகச் சமூகங்கள் தமது எல்லைகளினைக் கடந்து, ஒருவர் மற்றவருடன் இடைவினை புரிவதற்கான ஒரு வெளியினை உருவாக்கும் எனவும் நாம் எண்ணுகின்றோம். எனக் கூறுகிறார்.


மேலும் அவர்களது விழாக் குழுவானது, கடந்த மூன்று வருட காலமாக இளந்தலைமுறையினருக்குப் பயிற்சியளித்தல் மற்றும் அவர்களோடு இணைந்து குறும்படங்களினை உருவாக்குதல் மூலம், குடாநாட்டின் இளந்தலைமுறையினருடன் சேர் செயற்பட்டதாகவும், அவர்குறிப்பிடுகிறார்யாழ். சர்வதேசத் திரைப்பட விழாவானது, வடக்கில் தயாரிக்கப்பட்ட 15க்கும் மேற்பட்ட குறும்படங்களினை முதலாவது யாழ். சர்வதேசத் திரைப்பட விழாவின் போது வெளியிடவுள்ளது.
ந்து துடிப்புடன்

யாழ். சர்வதேசத் திரைப்பட விழா, சர்வதேச ரீதியாகப் பாராட்டப்பட்ட - உலகு எங்கணுமுள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களினை, அவர்களது திரைப்படங்களினை, யாழ்ப்பாணத்தில் காட்சிப்படுத்துவதற்கும் அழைக்கின்றது. 
விழாவின் இந்த முதலாவது வெளியீட்டில், ஏறக்குறைய 20 நாடுகள் பங்குபற்றவுள்ளதோடு, விருதினை வென்ற மற்றும் விமர்சனபூர்வமாகப் பாராட்டப்பட்ட, 22 ஐரோப்பியத் திரைப்படங்களினையும் காட்சிப்படுத்துவதற்காக, யாழ். சர்வதேசத் திரைப்பட விழாவுடன், இலங்கையின் ஐரோப்பியத் திரைப்படவிழாவும்  இணைந்துகொள்கிறது.  
விழாவில் 45 கதைப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. 

யாழ். சர்வதேசத் திரைப்பட விழாவின் விருதுகள்

மூத்தவர்களினைக் கௌரவித்தல் மற்றும் இளந்தலைமுறையினை ஊக்குவித்தல் என்றவகையில், யாழ். சர்வதேசத் திரைப்பட விழாவானது, மூன்று விருதுகளினை அதனது முதலாவது வெளியீட்டில் வழங்கவுள்ளது.

வாழ்நாள் சாதனை விருது : திரு. அத்தனாஸ் யேசுராசா.

திரு. யேசுராசா யாழ்ப்பாணத்திலுள்ள மிக மூத்த திரைப்பட விமர்சகர்களுள் ஒருவர்இவர், கடந்த சில தசாப்தங்களாக, யாழ்ப்பாணத்தின் திரைப்படக் கழக இயக்கத்துடனும்  இணைந்து செயற்பட்டவர்.

மிகச்சிறந்த அறிமுகத் திரைப்படத்துக்கான விருது: இலங்கையிலிருந்தும் மற்றைய நாடுகளிலிருந்தும் காட்சிப்படுத்தப்படவுள்ள 12 அறிமுகத் திரைப்படங்கள், மிகச்சிறந்த அறிமுகத் திரைப்படத்துக்கான் திறனாய்வு விருதுக்காகப் போட்டியிடுகின்றன. 

மிகச்சிறந்த குறும்படத்துக்கான பார்வையாளர் விருது: யாழ்ப்பாணத்திலுள்ள பார்வையாளர்கள், இந்த விழாவின் போது அவர்களுக்கு விருப்பமான குறும்படத்தினைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கலாம். 
  
யாழ்ப்பாணம் 
யாழ்ப்பாணம் இலங்கையின் வடமாகாணத்தின் தலைநகரமும், அதே பெயருடைய ஒரு குடாநாடாகவும்அமைந்துள்ளது. இது ஓர்;இசைக்கருவியின் பெயருடன் இணைந்து வரும் பெயரினைக் கொண்ட, உலகிலுள்ள ஒரே ஒரு நகரமுமாகும். யாழ்ப்பாணம் என்பது யாழ் என அழைக்கப்படும் புராதன இசைக்கருவி ஒன்றிலிருந்து பெறப்பட்டது. யாழ் என்பது நரம்பினால் இசை எழுப்பத்தக்க ஒரு;வகை நரம்பிசைக் கருவியாகும். இந்த இசைக்கருவியின் தண்டுப்பகுதியின் தலைப்பகுதியில் புராணிக விலங்காகிய யாழி செதுக்கப்பட்டுள்ளது. 

யாழ். சர்வதேசத் திரைப்பட விழா

யாழ். சர்வதேசத் திரைப்பட விழாவானது, சினிமாவில் புத்தாக்கமான வெளிப்பாட்டின் சமகால வடிவங்களினைக் கண்டடைவதற்கான, பாகுபாடற்ற ஓர் அடித்தளமாக அமையும்.

எமது பிரதான நோக்கம், குடாநாட்டில் சுயாதீனமாக திரைப்படத்தினைக் கொண்டாடுகின்ற அதேவேளை,  திரைப்படங்களினூடாக மற்றைய பண்பாடுகளினைப் பற்றிய புரிந்து கொள்ளலையும், ஒருங்கிசைவுத் தன்மையை மேம்படுத்தலையும், சினிமாவூடாகச் சமூக நல்லிணக்கத்தினை ஊக்குவித்தலையும் நோக்கமாகவுடையது.  
இந்த விழாவானது இளந்தலைமுறையினரது அறிமுகத் திரைப்படங்களினையும், குறுந் திரைப்படங்களினையும் காட்சிப்படுத்துவதன்மூலம் இளந்தலைமுறையினரை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் முனைகிறது. 
இளந்தலைமுறையினரின் சுயாதீனமான திரைப்படங்கள் உருவாக்கும் அனுபவங்களினைப் பெற்றுக் கொள்வதற்கு, யாழ்ப்பாணத்திற்கு வருகை தருமாறு,  இலங்கை மற்றும் சர்வதேசத் திரைப்பட ஆர்வலர்களை நாங்கள் அழைக்கின்றோம். 


யாழ். சர்வதேசத் திரைப்பட விழா இலச்சினை

யாழ். சர்வதேசத் திரைப்பட விழாவுக்கான இலச்சினையானது, யாழ்இசைக்கருவியின் வடிவிலிருந்து தூண்டுதல் பெற்றதாகும்.

விழாக்குழு: பாக்கியநாதன் அகிலன், கலாநிதி. சு. ரகுராம், கலாநிதி. பவித்திரா கைலாசபதி, இரா. சிவச்சந்திரன், இ. கிருஷ்ணகுமார்,  கோ. கேதாரநாதன், முரளீதரன் மயூரன்.

விழாக்குழுத் தலைவர்: பாக்கியநாதன் அகிலன்.
விழா இயக்குநர்: அனோமா ராஜகருணா

மேலதிக தகவல்களுக்கு : www.jaffnaicf.lk
முகநூல் பக்கம் :Jaffna international Film Festival
விழா இயக்குநர் தொடர்பு : +94777879911, director@jaffnaicf.lk, info@jaffnaicf.lk

நன்றி: தகவல்; அ.யேசுராசா

No comments: