Wednesday, June 16, 2010

எதிராடல்

இறுகத் தழுவி எலும்பை நொறுக்கும் கபடம்

- ஆதவன் தீட்சண்யா -

சாதியம் குறித்து அளவற்றக் குழப்பத்துடனும் தன்னைசாதியுணர்வாளன் என்று தன் சொற்களே நிறுவிவிடுமோஎன்கிற பதற்றத்துடனும் ராஜன் குறை இருக்கிறார்என்பதை அவர் எழுதியுள்ள 10 பாயிண்ட் பதவுரைவெளிப்படுத்துகிறது. அவை எல்லாவற்றுக்கும் இறுக்கிச்சாத்தி எழுதமுடியும் என்றாலும் எடுத்தயெடுப்பில் அவர் பெரியாரைப் பற்றிகூறியுள்ளதற்கான மறுப்புரையிலிருந்து தொடங்குவோம்.
1. ‘‘சாதி நீக்கத்தை நியாயமான அரசியல் என்று நம்புவதாகச் சொல்கிறார் லீனா. பெரியார் ஐம்பதுகள் வரையிலாவது அந்த அரசியலை முன்வைத்தார்.’’ - ராஜன்குறையின் வாதப்படி 50 களுக்குப் பிறகு பெரியார் சாதியொழிப்பு அரசியலைவிட்டுவிட்டு வேறெதோ வெங்காயம் பார்க்கப் போய்விட்டார் என்பதுதான். ‘‘ உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்பு தொண்டுதான் என்றாலும், அதுநம்நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் ஒழிப்புப்பிரச்சாரமாகத்தான் முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடம்தான் சாதி ஒழிந்தஇடமாகும். இவற்றில் எது மீதியிருந்தாலும் சாதி உண்மையிலேயே ஒழிந்ததாகஆகாது, ஏன் எனில் சாதி என்பது இந்த நான்கிலிருந்தும் ஆக்கப்பட்டதே ஆகும்.’’ - இது பெரியார் 50களில் சொன்னதல்ல. அவரது 93வது பிறந்தநாள் விழா மலரில் ( 17.9.1971 ) எழுதியது. ஆகவே பெரியார் பற்றிய ராஜன்குறையின் அதிரடித் தீர்ப்புஆதாரமற்றது. மட்டுமல்ல, பெரியாரை சிறுமைப்படுத்துவதும்கூட.

2.ஒரு கருத்து வெளியான பின்னணியையும் காலத்தையும் மறைத்து மொட்டையாக சிலவரிகளைத் துண்டித்து எடுத்து விகாரப்படுத்திக் காட்டி தனக்கு பெரியாரைதுணைக்கழைத்திருக்கிறார் ராஜன்குறை. அதற்காக ‘‘பார்ப்பனன் என்று ஒருவன் இருந்தாலும், பறையன் என்று ஒருவன் இருந்தாலும் ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கவேண்டும் என்றார். அதாவது யார் சாதி அடையாளம் பேணினாலும் தண்டனை....’’ என்ற வாசகங்களே ஒரு சாதியசமூகத்திற்கான பெரியாரின் பரிந்துரை என்பதாக ராஜன்குறை முன்வைப்பதுவிஷமத்தனமானது. நெசவாளி இல்லாவிட்டால் துணி கிடைக்காது, உழவன் இல்லாவிட்டால்சோறு கிடைக்காது, ஆனால் ஒரு பார்ப்பான் இல்லாவிட்டால் இந்த சமூகத்திற்கு கிடைக்காமல்போகக்கூடியது ஒன்றுமில்லை என்று ஊரூராய் சொல்லி மாய்ந்த பெரியார், சாதியப்படிநிலையின் உச்சத்தில் தம்மை நிறுத்திக் கொண்டிருக்கிற பார்ப்பனர்களையும் அவர்களால்ஆகக்கீழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிற பறையர்களையும் ஒருநிறையாகப் பார்த்தார் என்றுவாதிடுவதன் மூலம் பெரியாரின் மிக அடிப்படையான புரிதல்களையும் அரசியலையும்கேவலப்படுத்தியிருக்கிறார் ராஜன்குறை. பார்ப்பான் என்று சொல்லிக் கொள்வதில் உள்ளஆணவத்தையும் தலித்துகளும் சூத்திரர்களும் தமது சாதிப்பெயரை சொல்லிக் கொள்வதிலுள்ளமனத்தடையையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெரியார் கண்டித்திருக்கிறார் என்பதே உண்மை. 1936 ஆகஸ்ட் 31 அன்று பெரியகுளத்தில் நடந்த தேவேந்திரர்களின் மாநாட்டில் கலந்துகொண்டபெரியார்சமஸ்கிருதமயமாக்கப்பட்ட பெயரான தேவேந்திரர் என்பதை பயன்படுத்தவேண்டாம்என்று கோரியிருக்கிறார் ( குழந்தைப்பருவ தேவேந்திரர் இயக்கம், கோ.ரகுபதி, புதுவிசை - இதழ் 28, பக்கம் 70). எந்தவொரு தொழிலுக்குப் பின்னாலும் சாதியே இருக்கிறதுஎன்று சொல்ல வந்த பெரியார், சலவைத்தொழிலாளர் என்றால் வண்ணார் சாதி, செக்குத்தொழிலாளர் என்றால் செக்காளர்கள்- வாணியர்கள், நகரசுத்தித் தொழிலாளர் என்றால்தோட்டி, தச்சுத்தொழிலாளர் என்றால் ஆசாரி சாதி என்று வெளிப்படையாக போட்டுடைக்கிறார். ‘‘சாதி கண்டுகொள்ள முடியாமல் போகின்றதனால், பார்ப்பனர்களே மீண்டும்உத்தியோகங்களிலும் கல்லூரிகளிலும் நிரம்ப இது ஏதுவாகின்றது. எனவேதான் நாம் இனிகல்வி, உத்தியோகங்களைப் பொறுத்தாவது விண்ணப்பிக்கும்போது சாதிப் பட்டத்தைப்போட்டுக்கொண்டால் அதன்மூலம் தேர்வு செய்பவர்களுக்குப் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார்திராவிடர்) என்று தெரிந்து கொள்ள முடியும். இதன்படிக் கூறலாமா என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்... ’’ - ( பெரியார் களஞ்சியம், தொகுதி- 13, பக்கம் 141 ) என்பது தான்பெரியாரின் நிலைப்பாடு. சாதிப்பெயரையே பயன்படுத்த வேண்டாம் என்பது பெரியாரின்நிலையல்ல என்பதற்கு இன்னும் பல ஆதாரங்களைத் தரமுடியும். ஆனாலுமென்ன, ‘இந்துமதத்தின் சீர்கேடுகளை எதிர்த்து அவற்றை சரிசெய்ய ஆயுள் முழுக்கப் போராடியபெரியாரை 64 வது நாயன்மாராக கொண்டாடவேண்டும்என்று பா...வின் 'ஒரேநாடு' பத்திரிகை கொஞ்சநாட்களுக்கு முன்பு எழுதியது. இப்போது ராஜன்குறை. இறுகத் தழுவிஎலும்பை நொறுக்கும் கபடம் இந்த நாட்டிற்குப் புதியதல்ல.

3.மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது மறுபடியும் அரசாங்கம் தயாரிக்கவிருக்கிற ஒருஅஜால்குஜால் புள்ளிவிவரம்தான். இதுவரை திரட்டப்பட்ட இப்படியான விவரங்களை இந்தநாட்டின் ஆளும் வர்க்கம் எதெதெற்கெல்லாம் பயன்டுத்திவருகிறது என்பது யாருக்கும்தெரியாத பூடகமாகவே இருக்கும் நிலையில்தான், இப்போதைய மக்கள்தொகைக் கணக்கெடுப்புதொடங்கியுள்ளது. இதில் சாதி பற்றிய தகவலைச் சேர்த்தாலும் சேர்க்காவிட்டாலும் சாதிஎன்பது இருக்கத்தான் போகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அந்த விவரங்களைவைத்துக்கொண்டு இந்த சாதிய சமூகத்தையே தலைகீழாய் புரட்டிவிடப்போவதாகஅரசாங்கத்தரப்பில் ஒருவரும் சொல்லவில்லை. அல்லது நிலம், தொழில், வணிகம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இதர பொதுச்சொத்துகளில் தமது எண்ணிக்கையைவிட கூடுதலாகஆக்கிரமித்திருக்கும் இடங்களைவிட்டு தாங்களாகவே வெளியேறிவிடுவதாக பார்ப்பனர்களும்அவர்களையொத்த ஆதிக்கசாதியினரும் வாக்குமூலம் கொடுத்திருப்பதாகவும் தகவலில்லை. ஏற்கனவே அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையங்கள் தெரிவித்தபுள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டே பெரிதாக எதையும் சாதித்துவிடாத சூத்திரர்கள்இப்போது சாதிவாரி கணக்கெடுப்பை வைத்துக் கொண்டு மட்டும் என்னத்த செய்துவிடப்போகிறார்கள்? பார்ப்பனீயக் கருத்துக்கு இரையாகி தலித்துகளை ஒடுக்கி வன்கொடுமைசெய்வதிலேயே நாட்டம் மிகக்கொண்டுள்ள இந்த சூத்திரச் சாதியினர் சாதிவாரிகணக்கெடுப்பின் விவரங்களையும் வைத்துக்கொண்டு முண்டா தட்டித் திரிவார்களேயாயின்அவர்களை யார் காப்பாற்ற முடியும்? சாதிய முறைமையின் அத்தனை அழும்புகளுக்கும்அவமதிப்புகளுக்கும் ஆளாகிப்போயுள்ள இந்த சூத்திரச்சாதிகளை சாதியமுறைமைக்கு எதிராகஅணிதிரட்டக்கூடிய தலைமை எதுவும் இல்லாத இன்றைய பரிதாப நிலையில் சாதிவாரிக்கணக்கெடுப்பு குறித்து .மார்க்ஸ் லும்பினியில் எழுதியுள்ளதை ராஜன்குறை பொருத்தமற்றவகையில் எடுத்தாள்கிறார்.

‘‘ஆனால் தற்போதைய நிலையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதியை சேர்க்கவேண்டும் என்று முற்போக்காளர்கள் உதாரணமாக .மார்க்ஸ் (எனக்கு அவர் கருத்தில்பெருமளவு உடன்பாடு உண்டு)- வலியுறுத்தும் காலம். ஆகவே தாற்காலிகமாகவேனும் சாதிஅடையாளம் தொடர்வதை அங்கீகரிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.’’ - என்றுகுறிப்பிடுகிற ராஜன்குறை, ‘சாதி என்பது ஒரு எதார்த்தம், ஒரு வரலாற்று உண்மையுங்கூடஎன்று .மார்க்ஸ் குறிப்பிடுவதை வசதியாக மறந்து - சாதி அடையாளத்தைதற்காலிகமாகவேனும் அங்கீகரிக்கத் தயாராகிறார். இதன்மூலம்சாதி என்பது பால், தொழில், ஊர் என்பது போன்ற ஒரு புறவயமான (Objectivity) அடையாளமல்ல. அது ஒருவகையில்ஒருவர் தன்னை எப்படி உணர்ந்துகொள்கிறார் என்கிற வகையில் ஒரு தன்வயமான (Subjectivity) அடையாளமும் கூட என்று மார்க்ஸ் மேலும் கூறிச்செல்வதை பின்தொடரமுடியாதவராகிவிடுகிறார்.

4.உள்ளிருந்து வழிநடத்தும் மூலகமாக சாதி இருப்பதை ஒப்புக்கொள்ள மறுப்பதனால்தான்சாதி என்பது இருக்கலாம் ஆனால் அவற்றினுள் உயர்வு தாழ்வு கிடையாது, படிநிலைகிடையாது என்று நாம் வலியுறுத்தியாகவேண்டும்.’’ என்று பரிந்துரைக்கிறார். நரகலை அள்ளிநடுவீட்டில் குமித்துக் கொள்ளலாம், ஆனால் நாறக்கூடாது என்று ஒருவர் சொல்வதுஎந்தளவிற்கு அறிவுக்குப் பொருந்தாததோ அதற்கு சற்றும் குறையாத வாதக்கேடுதான்இதுவும். சாதியத்தின் அடிப்படையே உயர்வு தாழ்வுதான். அது வெறும் படிநிலைகூட அல்ல, அம்பேத்கரின் மொழியில் சொல்வதானால் பன்மப்படிநிலை. இந்தப்படிநிலை கிடைமட்டமாகஅல்லாமல் செங்குத்துவாக்கில் இருக்கிறது- கோயில் போல. இந்தப்படிநிலையின் ஏறுவரிசைஉரிமைகளையும் இறங்குநிலை கடமைகளையும் தீர்மானிப்பதாயிருக்கிறது. சாதியடுக்கின்உச்சியில் இருக்கிற பார்ப்பனர்கள் மட்டுமே சாதியத்தின் கொடுமைகள் எதனாலும்தொல்லையுறாதவர்களாகவும் அதன் ஆதாயங்கள் அனைத்தையும் பெறுகிறவர்களாயும்இருக்கிறார்கள். ஒவ்வொரு சாதியும் பல உட்சாதிப்பிரிவுகளாக சிதைக்கப்பட்டு ஒன்றன்மீதுஒன்றாக அடுக்கப்பட்டுள்ள இந்தப்படிநிலையில் ஒவ்வொரு உட்சாதிக்கும் அல்லது சாதிக்கும்ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட அவ்விடத்திலிருந்து மேலேறிப்போகும்முயற்சியை மேற்கொள்கிறபோதே தனக்கு கீழிருக்கும் சாதியை மேலேறவிடாமல்தடுப்பதற்குரிய வேலையையும் ஒவ்வொரு சாதியும் மேற்கொள்வதன் மூலமாக இந்தப்படிநிலை தொடர்ந்து தக்கவைக்கப்படுகிறது. எனவே படிநிலை என்பதுதான் சாதியத்தின் மிகஅடிப்படை என்பது சாதியம் குறித்த பாலபாடத்தின் கொசுறுப்பகுதிகள். ஆனாலும்படிநிலையற்ற சாதி வேண்டுமென வாதாடுகிறார் ராஜன்குறை. எவ்வளவோ பூடகமானவிசயங்களையெல்லாம் கட்டுடைத்துப் பார்க்கத் துணிந்த ராஜன்குறை, இந்த சாதியத்தைகட்டுடைக்காவிட்டாலும் பரவாயில்லை, கான்கிரீட் வைத்தல்லவா பூசி மெழுகுகிறார். இவரைப்போலவே இதற்கு முன்பும் பலர் சாதியை அப்படியே வைத்துக்கொண்டு அதன்தீயவிளைவுகளை மட்டும் களைந்துவிடலாம் என்று நல்லெண்ணத்தை (?) வெளிப்படுத்தியிருக்கிறார்கள். காரணத்தை அப்படியே வைத்துக்கொண்டு விளைவுகளைமட்டும் எதிர்த்துப் போராடுவதால் பயனொன்றும் இல்லை என்பதற்கு ஆதாரங்களைத் தேடிஅலைய வேண்டியதில்லை. சாதியை அப்படியே வைத்துக்கொண்டு தீண்டாமையை மட்டும்ஒழித்துவிட முடியாது என்பதை மிகுந்த ஆதாரங்களோடு அம்பேத்கர் காந்திக்குசொன்னதையெல்லாம் ராஜன்குறைக்கு திரும்பச் சொல்வதற்கு இதுவல்ல இடம் என்றாலும்அந்த விவாதங்களையெல்லாம் அவர் ஒருமுறை ஆழ்ந்து படிக்கவேண்டும் என்பதை மட்டும்சொல்வது போதுமானதாயிருக்கும். சாதியத்தை அப்படியே வைத்துக்கொள்ளலாம் என்பதன்மூலம் இந்துமதத்தை அப்படியே வைத்துக்கொள்ளலாம் என்பதற்கும் மறைமுக வக்கீலாகிறார்ராஜன்குறை. மிகக்கீழே இருக்கும் கல்லை உருவினால் அதற்கு மேலே இருக்கும் கற்கள்சரிந்துவிழும் என்று முழங்கி தன்மக்களோடு இந்துமதத்தை விட்டு வெளியேறியஅம்பேத்கரின் நடவடிக்கையையும் நிராகரிக்கக்கூடியவராகிறார். அதற்கும் முன்னே போய்பௌத்தமும் சமணமும் இந்த மண்ணில் தோன்றியதற்கான நியாயங்களையும்மறுப்பவராகிறாகிறார்.

5. ‘‘அனைத்து சாதிகளும் புதிய அரசியல் அடையாளமெடுத்து நிலவும்போது பார்ப்பனர்கள்என்ன செய்யவேண்டும்? அவர்கள் மட்டும் சாதி நீக்கம் செய்துகொள்ள வேண்டுமா? சாதிஎன்பதே பிறப்பால் தீர்மானமாகும்போது எப்படி அதைச்செய்வது? அடையாளமென்பதே பிறர்நமக்குத் தருவதுதானே." ராஜன்குறையின் இந்த வரிகள் இந்த நாட்டின் நெடிய வரலாற்றைமறுதலித்து திடுமென நடந்துவிட்ட ஒரு நிகழ்வுக்கான எதிர்வினை போன்றுதோற்றமளிக்கின்றன. ‘‘அனைத்து சாதிகளும் புதிய அரசியல் அடையாளமெடுத்துநிலவும்போது பார்ப்பனர்கள் என்ன செய்யவேண்டும்?’’ என்ற கேள்வியில் உள்ள அபத்தத்தைஅவர் புரிந்துகொண்டாரா என்று தெரியவில்லை. இங்கு அரசு மற்றும் மத ஆதரவோடுநிறுவப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டிருந்த பார்ப்பன ஆதிக்கத்தையும் அதன் வழியேயானஒடுக்குமுறை மற்றும் சுரண்டலையும் எதிர்த்து தமது சுயமரியாதையையும் இந்த மண்ணின்மீதுள்ள தமது உரிமைகளையும் நிலைநாட்டுவதற்கான விழைவுகளிலிருந்தே பார்ப்பனரல்லாதபிறசாதிகளின் அடையாள அரசியல் தோன்றியது. பார்ப்பனர்கள் வெவ்வேறு அமைப்புகளில்முகாம்களில் சிந்தனைப்பள்ளிகளில் இருப்பதுபோல் தோற்றமளித்தாலும் தங்கள் சாதியின்முதன்மைக்கு அல்லது தனித்துவத்திற்கு ஒரு பிரச்னை என்றால் உள்ளுணர்வின்அடிப்படையில் உடனடியாகத் திரள்வதும் சூழலை தமக்குச் சாதகமாக மாற்றியமைப்பதற்கானவிவாதங்களைத் துவக்குவதும் அதற்காக அறங்களுக்குப் புறம்பான எந்த வழிமுறையையும்மேற்கொள்ள தயாராயிருப்பதும் தான் இங்குள்ள யதார்த்தம். அப்படியான பார்ப்பனஅணிதிரட்சியின் மூர்க்கமான விளைவுகளை களத்திலும் கருத்தியல்தளத்திலும்எதிர்வினையாக உருவானவையே பிறசாதிகளின் அணிதிரட்சிகள். ஆனால் வரலாற்றைதலைகுப்புற கவிழ்த்துப் படிக்கிற ராஜன்குறை, ஏதோ எல்லாச் சாதிகளும் சாதியஅடையாளத்துடன் எழுந்துவிட்டதாகவும், பார்ப்பனர்கள் இத்தனை காலமும் சமத்துவபோதனைகளில் மூழ்கிக்கிடந்து ஏமாந்துவிட்டது போலவும், இப்போதாவது சுதாரித்துஎழுந்துகொள்ளுங்கள் என்றும் உஷார்ப்படுத்துகிறார். சாதி என்பதே பிறப்பால்தீர்மானமாகும்போது எப்படி அதைச்செய்வது? அடையாளமென்பதே பிறர் நமக்குத்தருவதுதானே... என்று சாதியமைப்பின் உருவாக்கத்திலும் அதை நிலைநிறுத்தி வருவதிலும்பார்ப்பனர்களுக்கு யாதொரு பங்கும் பாத்தியதையும் இல்லை என்பது போன்ற பாசாங்குவெளிப்படுகிறது. சாதியை பிறப்பிலேயே தீர்மானிக்கப்பட்டதாயும் அது வாழ்வின் எல்லாஇயக்கங்களையும் வழிநடத்துவதாயும் கட்டுப்படுத்துவதாயும் உருவாக்குவதற்காகபார்ப்பனர்கள் இழைத்துவந்த எல்லா மனிதத்தன்மையற்ற குற்றங்களிலிருந்தும் அவர்களைவிடுவிப்பதற்கான இந்த எத்தனிப்பை வெறும் எழுத்தாக எடுத்துக்கொள்வதா? அடையாளம்என்பது பிறர் தருவதுதான் என்பது பார்ப்பனர்களுக்குப் பொருந்தாது. அவர்கள் தமக்கானதிருவுருவை துளியும் வெட்கமற்று தாமே கட்டியெழுப்பினர். அந்த அடையாளம் அவர்களதுகொண்டாட்டத்திற்குரியது. அது அவர்களுக்கு அதிகாரத்தையும் சொத்துகளையும் சமூகஅந்தஸ்தையும் வழங்கியிருக்கிறது. உழைக்காமல் சுரண்டி வாழ்வதற்கான வாய்ப்புகளைதிறந்து விட்டிருக்கிறது. உலகின் ஆகச்சிறந்த அனைத்தின்மீதும் அவர்களுக்குமுன்னுரிமையை வழங்கியிருக்கிறது. தமக்கான அடையாளத்தை தாமேகட்டியெழுப்பிக்கொண்ட பார்ப்பனர்கள்தான் பார்ப்பனரல்லாத யாவருக்கும் தங்களுக்குகீழானவர்கள் என்ற அடையாளத்தை வழங்கியிருக்கிறார்கள். அதன்மூலம்எழுத்தறிவற்றவர்களாக, சொத்தில்லாதவர்களாக, அதிகாரமற்ற அடிமைகளாகபார்ப்பனரல்லாதவர்கள் தாழ்த்தப்பட்டிருக்கிறார்கள். எனவே ஒருவர் தனது சுயத்தின் வழியேஉருவான அடையாளத்தின் வழியல்லாமல் மற்றவர்களால் சுமத்தப்பட்ட இழிவானஅடையாளத்தால் அறியப்படுவதன் துயரத்தை பார்ப்பனர்களால் ஒருபோதும் உணரமுடியாது. தனது எல்லா அடையாளங்களையும் அடித்துக் கழுவி துடைத்துவிட்டாலும் நீக்கிக்கொள்ளமுடியாத தோலைப்போல ஒவ்வொரு இந்தியரும் சாதியடையாளத்தை சுமந்துத் திரியும்அவலத்திற்குப் பின்னே பார்ப்பனர்கள் இல்லையா? சாதியமைப்புக்கும் முன்பானநால்வருணத்தை, நானே தோற்றுவித்தேன் என்று கொக்கரிக்கிற வேதத்தையும், சாதியை ஒருகோட்பாடாக மாற்றி அதன் வழியேயான அடையாளங்களை எழுத்துப்பூர்வமாக முன்வைத்தமநுஸ்மிருதியையும் அதனடிப்படையிலான புராணங்களையும் கட்டுக்கதைகளையும் பரப்பித்திரிகிற இந்துத்துவ தீவிரவாதிகளையும் சங்கராச்சாரன்களையும் கொண்டாடிகாலகாலத்திற்கும் தளமாற்றம் செய்துவருபவர்கள் பார்ப்பனர்கள்தானே?

6."எல்லா சாதியினரும் அவர்கள் கலாசாரம் சார்ந்த வாழ்வியல் சார்ந்த மொழியில் இலக்கியம்எழுதக்கூடாது என்றால் அப்போது ஆங்கிலத்தில் ஸ்காண்டிநேவிய சமூகங்களைப் பற்றித்தான்நாமெல்லாம் இலக்கியம் படைக்க முடியும். மொழி, வார்த்தைகள் எல்லாவற்றிலும் கருத்தியல்ஈஷிக்கொண்டிருக்கிறது என்பதை நிறுவமுடியாது. விதவன் என்ற வார்த்தை கிடையாது-என்பது போன்ற பிரத்யேகமான தருணங்களில்தான் அதை நிறுவமுடியும். ஒரு சாதிபயன்படுத்திய வார்த்தைகளையெல்லாம் மொழியிலிருந்து நீக்குவது என்பது “ethnic cleansing” போல ஒரு “linguistic cleansing” ஆகத் தோன்றுகிறது. இது யாரிடம் தொடங்கி எங்கு போய்நிற்கும் என்பதும் புரியவில்லை." - ராஜன்குறை

எல்லா சாதியினரும் அவர்கள் கலாசாரம் சார்ந்த வாழ்வியல் சார்ந்த மொழியில் இலக்கியம்எழுதக்கூடாது என்று யாரும் இங்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை. அவரவரது வாழ்வியல்பின்புலம் அவர்களுக்கு எதைக் கற்றுத்தந்திருக்கிறதோ அந்த இழவைத்தான் எழுதித்தொலைக்கிறார்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட குழுவின் உறுப்பினர் என்ற முறையில் தான்அறிந்துவைத்திருக்கிற அந்தக் குழுவைப் பற்றியதை எழுதிப்போட்டுவிட்டு அதையேஒட்டுமொத்த மனிதகுலத்துக்குமானதென்று நிறுவத்துடிக்கும்போதுதான் பிரச்னை வருகிறது. எழுத்தறிவு பெறுவதற்கான முன்னுரிமை பெற்றவர்கள் என்ற அடிப்படையில் இங்கு உருவானதொடக்கநிலை நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க்கங்களிலிருந்து உருவான எழுத்தாளர்களில்பெரும்பாலானவர்கள் பார்ப்பனர்கள்தான். அவர்களது உலகம் அக்ரஹாரமாயிருந்தது அல்லதுஅக்ரஹாரத்திற்குள் உலகத்தை சுருக்கிப் புதைத்தார்கள். தமிழ் கலை இலக்கிய உலகத்திலும்பின் பொதுவெளியிலும் அம்பி, அம்மாஞ்சி, அபிஷ்டு, ஆத்துக்காரர், ஓர்ப்படியாள், சாஸ்திரிகள்என்று எல்லோரும் அலம்பித் திரிந்தார்கள், ஃபில்டர் காபி குடித்து 'பேஷ் பேஷ் நன்னாயிருக்கு' என்றார்கள். பிறகென்ன, அவர்களுக்கு அடுத்தக்கட்டத்தில் வெள்ளாளர்கள் வந்து அவர்களதுவாழ்வை எழுதித் தீர்த்தார்கள். இவ்விரண்டு பிரிவினரும் எழுதியது பொதுமொழியென்றும்அவர்களையடுத்து மூன்றாம்கட்டத்தில் இடைநிலைச்சாதிகள் எழுத்தறிவு பெற்று இலக்கியம்படைத்தபோது அவை வட்டார இலக்கியம் என்று பேதப்படுத்தப்பட்டு குறுக்கப்பட்டதும்தற்செயலானதல்ல. இவர்களெல்லாம் இவர்களது சாதி தந்த அனுபவத்தையேஎழுதிவந்திருப்பினும் அவை பார்ப்பன இலக்கியம், வெள்ளாள இலக்கியம், நாயக்கமார்அல்லது செட்டிமார் இலக்கியம் என்று தனித்தறியப்படாமல் ஏதோவொரு வகையில்இலக்கியம் என்ற பொதுத்தலைப்பின் கீழ் அறியப்பட்டதற்கும் தலித்துகளின் எழுத்துகளைதலித் இலக்கியம் என்று தனியாக அடையாளப்படுத்தியதற்கும் பின்னுள்ள அரசியலைடி.தர்மராஜன் ஏற்கனவே போதுமான அளவுக்கு அம்பலப்படுத்தியிருக்கிறார். ( பார்க்க- புதுவிசை இதழ்- 25, எழுத்து அரசியல், நவீன தமிழ்ச்சூழலில் தலித் ) ஆனால்எல்லாவற்றையும் புறங்கையால் தள்ளிவிட்டு மொழி, வார்த்தைகள் எல்லாவற்றிலும்கருத்தியல் ஈஷிக்கொண்டிருக்கிறது என்பதை நிறுவமுடியாது என்று வாதிடுகிறார் ராஜன்குறை. எல்லாவற்றுக்கும் பின்னே ஒரு அரசியல் உள்ளது என்பதையும் எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே என்பதையும் அந்தப் பொருள்/ அர்த்தம் ஒருவரது அரசியல் பண்பாட்டுநிலையிலிருந்தே வருவிக்கப்படுகிறது என்பதையும் மறுக்கிற இந்தப் பார்வைஎவ்வகைப்பட்டதென அவர்தான் விளக்கவேண்டும். இந்த 'ஈஷிக் கொண்டிருக்கிறது 'என்ற ஒருவார்த்தையைப் பின்தொடர்ந்தால்ஆத்துக்குப் போயிடலாமோன்னோ?’ என்பதுதான் கேள்வி. உடனே பார்ப்பனர்களின் வார்த்தைகளை பார்ப்பனரல்லாதாரும் பேசிண்டிருக்காளே என்றுஒன்றிரண்டு உதாரணங்களை கடாசவும் அவர் தயாராகத்தான் இருக்கிறார். இப்படியானசிலநூறு வார்த்தைகளை பார்ப்பனர்கள் தமக்குள் குழுவுக்குறியாக புழக்கத்தில் வைத்திருப்பதுமட்டுமல்லாமல் அதை ஊடகங்கள் அலுவலகங்கள் என்று எல்லா இடத்திற்கும்பரப்பியிருக்கிறார்கள் என்பது யதார்த்தம். பார்ப்பனர்களைப் பார்த்து போலச்செய்வதுதானேஇந்திய/ தமிழ்ச்சமூகத்தைப் பீடித்திருக்கும் பெருவியாதி? இருக்கட்டும். மொழி, வார்த்தைவழியாக அல்லாமல் ஒரு கருத்தியல் எவ்வாறாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறதுஎன்பதையாவது அவர் விளக்கியிருக்கவேண்டும். ஒரு குழு தனது உறுப்பினரிடையேயும்அதற்கு வெளியேயுமான பரஸ்பர ஊடாட்டத்தை உடல் மொழி உள்ளிட்ட மொழியின்வழியாகவே நிகழ்த்துகிறது. இங்கு அதன் அர்த்தங்களைப் பின்தொடர்ந்து செல்லும்போது அதுசாதியத்தின் வகிபாகத்துடன் தொடர்புடையதாயிருக்கிறது என்ற எளிய உண்மையைஒப்புக்கொள்ள மனமின்றி குறியியல் அதுஇதுவென்று குழப்பியடிப்பதற்கு இங்கொருதேவையும் இல்லையென்ற போதும் ராஜன்குறை அதையே செய்கிறார். ஒரு உதாரணத்தைமட்டும் சொல்லிப் போகலாம்.

தந்தையர் நாடு என்று சொல்வது ஆரிய மரபு. சங்பரிவாரம்கூட அப்படித்தான் சொல்கிறது. ஆரியன் என்பதனாலேயே ஹிட்லரும் அவ்வாறே சொன்னான். ‘தந்தையர் நாடு' என்று ஒருதமிழ்க்கவியும் பாடுகிறார். ( 'தோப்பனார் நாடு' என்று பாடாமல் இருந்தாரே என்று வியப்புதெரிவித்தார் ஷோபா சக்தி). உடனே அப்பேர்ப்பட்ட கவியை ஹிட்லரோடு சேர்த்துவிட்டாயாஎன்று பதறுவதற்கு ஒன்றுமில்லை. இருவரையும் நான் சேர்க்கவில்லை. தந்தையர்நாடு என்றுவிளிக்கும் ஆரியமரபு அல்லது உள்ளுணர்வு அவர்களை இணைத்திருக்கிறது. (இப்படியெல்லாம் பார்ப்பது வக்கிரமல்ல, இருப்பதுதான் வக்கிரம் என்று தேவைப்பட்டால்பிறகு சொல்வோம்). இதுவும் விளங்கவில்லை என்றால் ஆச்சாரிக்கும் ஆசாரிக்கும் என்னவேறுபாடு என்று ராஜாஜியிடம் பாடம் கேட்கவும். ஆனால் ராஜாஜி, ராஜன்குறையைப் போலஒரு சாதியினர் பயன்படுத்தும் ஒரு சொல்லை ஒருவர் பயன்படுத்தினால் அது சுட்டி (index) என்ற குறியியல் வகைப்பாட்டில் அடங்கி அவர் அந்த சாதியைச் சார்ந்தவர், அல்லதுஅந்தச்சாதிக்கு பரிச்சயமானவர் என்பதையே சுட்டி நிற்கும். அந்த வார்த்தையினால்சாதீயத்திற்கு (Symbol) குறியீடு ஆக முடியாது. ஏனெனில் சாதியின் இருப்பு சாதீயத்தின்இருப்பாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது" என்று குழப்படி விளக்கம் தந்து தானும்குழம்பி ஊராரையும் குழப்புவதற்கு முயற்சிக்கவில்லை.

7.
‘‘பார்ப்பன மேன்மையை பார்ப்பனர்கள் உட்பட இன்று யாருமே நம்புவது கடினம்.... பார்ப்பனர்களை பிறப்படிப்படையில் ஒட்டுமொத்தமாகத் தனிமைப்படுத்தி கொடியவர்களாகசித்தரிக்கும் போக்கினால் இன்றைய சமூகத்திற்கு எந்தப் பயனும் கிடையாது. இன்றுபார்ப்பனர்களின் சமூக கலாசார செல்வாக்கென்பது பிற சமூகத்தினரும் பகிர்ந்துகொள்ளும்அளவில்தான் இருக்கிறது. ’’ என்று சொல்வதற்கு அசாத்தியத் துணிவும் பொய்சொல்வதுகுறித்து துளியும் குற்றவுணர்ச்சியற்ற மனமும் தேவை. சமூகத்தின் எந்தத் தளத்தில்பார்ப்பனர்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்திருக்கிறது என்பதை ராஜன்குறைதான்விளக்கவேண்டும். ஒருவேளை, அரசனாயிருந்தாலும் அவன் தன் மனைவியை கன்னிகழிக்கும் உரிமையை பார்ப்பனனுக்குத்தான் வழங்க வேண்டும் என்று இருந்த நடைமுறைவேண்டுமானால் ஒழிக்கப்பட்டிருக்கலாம். மற்றபடி அதிகாரம் மிகுந்த அரசுப்பதவிகள், கட்சிப்பதவிகள், ராணுவ உயர்ப்பதவிகள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் உயர்பொறுப்புகள் அல்லது உரிமையாளர்கள், நிலவுடைமையாளர்கள், ஊடகங்கள் என்று எல்லாஇடங்களிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கமே நீடித்துவருவதை அம்பலப்படுத்தும்நூற்றுக்கணக்கான ஆய்வுகள் நம்முன்னே குவிந்துக்கிடக்கின்றன. இன்றுவரையிலும்பார்ப்பனர்கள் தாங்கள் ஆட்டிக் கொண்டிருக்கும் இத்துனூண்டு கோயில்மணியைக்கூடமற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்க முன்வரவில்லை. சிதம்பரம் நடராசரே தீட்சிதர்களிடம்தான்மாட்டிக்கொண்டிருக்கிறார். இந்திய ஆட்சிப்பணிகளுக்கென்று மத்தியத் தேர்வாணையம்நடத்துகின்ற தேர்வுகளில் அகிலஇந்திய அளவில் முதலிடங்களைப் பிடிக்கிற தலித் மற்றும்பிற்படுத்தப்பட்டவர்களை பொதுப்பட்டியலில் இருந்து வெளித்தள்ளி அவர்களை அவரவர்க்கானகோட்டாவில் அடைக்கிற மோசடி இன்றும் தொடர்கிறது. இப்படியாக பார்ப்பனர்கள், சமூகஅரசியல் பொருளாதார மற்றும் பண்பாட்டுத்தளங்களில் தமது மேலாண்மையை தொடர்ந்துதக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இயல்பாகவே அவர்களது பண்பாட்டுநடவடிக்கைகளை பின்தொடர்வதும் போலச் செய்வதும் சமூகத்தின் போக்காகத் தொடர்கிறது. இன்று பல்வேறு சாதிகளிடையேயும் பார்ப்பனச் சடங்குகளும் புரோகிதங்களுமேமேன்மையானவை என்ற கருத்து மேலோங்கி வருவதை ராஜன்குறை அகலக்கண் கொண்டுபார்க்கவேண்டும். பார்ப்பனர்களின் சமீபத்திய உணவான சைவ உணவு உயர்வானது என்பதாககாட்டப்படுவதும், பிறரால் ஏற்படும் தீட்டுகளை போக்கவல்லது என்று பார்ப்பனர்களால் நம்பிஉடுத்தப்படுகிற பட்டாடை என்பது இங்கு வசதி அல்லது கௌரவத்தின் அடையாளமாகமாறியிருப்பதும், பார்ப்பனர்கள் கைப்பற்றிக்கொண்ட பரதநாட்டியமும் கர்நாடக சங்கீதமும்இந்தியக் கலைவடிவங்களாய் முன்னிறுத்தப்படுவதும், அரசாங்க நிகழ்வுகளில் பார்ப்பனர்களதுயாகங்களும் பூஜைகளும் இடம் பெறுவதையும் அவர் தன்னிலைகளுக்கு வெளியே வந்துபார்த்தாக வேண்டும். சாதியந்த புத்தி, குலமந்த ஆச்சாரம் என்பார்கள். இப்படி எல்லாப்பார்ப்பனர்களையும் கொடியவர்களென்று குற்றம்சாட்டுவதும் பார்ப்பனீயத்தின் ஒருகூறுதான்என்பதை அறிந்தேயிருக்கிறோம். ராஜாஜி எதைச் செய்கிறாரோ அதற்கு நேரெதிராகச் செய்தால்சரியாக இருக்கும் என்று செயல்பட்ட பெரியார் இறுதிவரை ராஜாஜியுடன் நட்புவைத்திருந்தார். சாதியத்திற்கு எதிரானப் போராட்டத்தில் ஜோதிராவ் பூலேவுடனும், அண்ணல்அம்பேத்கருடனும் பார்ப்பனர்கள் இணைந்து நின்று போராடியுள்ளனர். இன்றளவும்தம்மிடமுள்ள சாதியக்கூறுகளை களைந்துகொண்டு மனிதர்களாக வாழத்துடிக்கிறபார்ப்பனர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இந்திய இடதுசாரி இயக்கத்திலும் சீனிவாசராவ், .எம்.எஸ் போன்றவர்கள் தமது சொந்தசாதிகளுக்கு துரோகம் செய்வதில் முனைப்புடன்இருந்தனர். அவர்களையெல்லாம் சாதியொழிப்பு இயக்கங்கள் நினைவிற் கொண்டுள்ளன. ஆனால் விதிவிலக்கான இவர்களைக் காட்டி தங்களது குற்றங்களை இப்போதும் தொடரபார்ப்பனர்களுக்கு உரிமை கேட்பவராக ராஜன்குறை இருக்கமாட்டார் என்றே நம்புகிறேன். ஒருசாதி என்ற வகையில் பார்ப்பனர்களது சிந்தனையும் செயல்பாடும் சில தனிநபர்களின்நற்குணங்களால் ஈடுசெய்ய முடியாதவையாய் இருக்கின்றன.

8.
எந்த சாதியினர் பயன்படுத்திய சொல்வழக்குகளும், கலாசார சின்னங்களும் குழூஉக்குறிஅல்ல. தங்களைத்தவிர பிறர் அறியக் கூடாது என்று ஏற்படுத்துவதுதான் குழூஉக்குறி. ராணுவம், கொள்ளைக் கூட்டம் போன்றவற்றில் பயன்படும் சங்கேதங்கள்தான்அப்படிப்பட்டவை. ஈஷிக்கொண்டு போன்ற வார்த்தைகளை அனைவரும் ஒருவேளைபயன்படுத்தாவிட்டாலும், அதில் எந்த ரகசியமும் கிடையாது. உண்மையிலேயே அந்தசொல்லின் புழக்கத்தைப் பற்றி சமூக மொழியியல் சார்ந்து ஆய்வு செய்தால் பலசுவாரசியமான உண்மைகள் புலனாகலாம். தங்களைத் தவிர பிறர் அறியக்கூடாது என்பதுதான்குழூவுக்குறி என்றால் பார்ப்பனர்கள் சொல்கிற மந்திரங்களையும் அவ்வாறேவகைப்படுத்தலாம். இன்னும் மேலே சென்று ராணுவம், கொள்ளைக் கூட்டம் போன்றவற்றில்பயன்படும் சங்கேதங்கள்தான் அப்படிப்பட்டவை என்ற விளக்கமும்கூட பார்ப்பனர்களின்மந்திரங்களுக்கும் அர்ச்சனை ஸ்லோகங்களுக்கும் பரிகாரச் சடங்குகளுக்கும்பொருந்தக்கூடியவைதான். இவ்விசயத்தையாவது தெளிவுடன் சொன்னமைக்காகராஜன்குறையைப் பாராட்டத்தான் வேண்டும்.

9.
நவீனத்துவ இலக்கியம் போன்ற அதிகாரம் சாராத துறைகளில் ஒரு பிற்போக்கான, தேவையற்ற பிறப்படிப்படையிலான, தனிப்பட்ட நம்பிக்கைகள் சார்ந்த பார்ப்பன எதிர்ப்புசெயல்படத் துவங்கியுள்ளதை வரலாற்றுப் பின்னடைவு என்றுதான் பார்க்க முடியும். இதுதான்பார்ப்பனச் சாதியின் தந்திரம் என்று சொன்னால் ராஜன்குறை தனிப்பட்ட துவேஷம் என்றுவருத்தப்பட்டாலும் இதைச் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. பார்ப்பனர்கள் எப்போதுமேதமது பிரச்னையை நாட்டின் பிரச்னையாகத்தான் சொல்வார்கள். கோயில் இல்லாத ஊரில்குடியிருந்தால் அவர்களுக்கு போஜனம் கிடைக்காது. ஆனால் கோயில் இல்லாத ஊரில்குடியிருக்க வேண்டாம் என்று எல்லோரையும் கிளப்பிவிட்டது மாதிரிதான் எல்லாவற்றையும்செய்வார்கள். படித்த பார்ப்பனர்களுக்கு வேலை வேண்டும் என்று கேட்பதற்கு பதிலாகஅதிகாரத்தில் இந்தியருக்குப் பங்கு வேண்டும் என்று கேட்டுப் பெற்றார்கள். இடஒதுக்கீடுவந்தால் தங்களது ஆதிக்கம் பறிபோகும் என்பதால் நாட்டின் ஒற்றுமை பிளவுபடும்என்றார்கள். தகுதி திறமை குறைந்துவிடும் என்றார்கள். அவர்களது மூடத்தனங்களைஎதிர்த்தால் நாட்டின் கலாச்சாரத்திற்கும் மதநம்பிக்கைகளுக்கும் ஆபத்து என்பார்கள். பார்ப்பனர்கள் என்பதே ஒரு ஆதிக்க மனோபாவத்தை வெளிப்படுத்துவதுதான். போதாதென்றுஅவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளையும் புழக்கத்திற்கு கொண்டு வருவதைசுட்டிக்காட்டினால் அதை வரலாற்றுப் பின்னடைவு என்று ராஜன்குறை சொல்கிறார். இந்தநாட்டின் பெரும்பான்மை உழைப்பாளி மக்களின் மொழியையும் கலைஇலக்கியவெளிப்பாடுகளையும் இழிசனர் வழக்கு என்று ஒதுக்கிவைத்திருந்ததும், அவர்களதுபண்பாட்டுச் சின்னங்களையும் நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் தீட்டுக்குரியவைஇழிவானவை என்று ஒதுக்கிவைத்திருந்ததும் வரலாற்றை முன்னோக்கிச் செலுத்துவதற்குபார்ப்பனர்கள் ஆற்றிய அருந்தொண்டு என்று ஒருவேளை அடுத்தக் கட்டுரையில் ராஜன்குறைபாராட்டக்கூடும். சாதியை வைத்துக்கொண்டு சாதியத்தைத் தொலைத்துக்கட்டுவதற்கானஅபூர்வத்தாயத்துகளை அவர் இனியும் அடுத்தடுத்த பல கட்டுரைகள் வழியாகவினியோகிக்கவும் கூடும். இந்த அடிப்படையான கோளாறிலிருந்தே எல்லாவற்றையும் பார்த்துஎழுதப்போகும் அவருக்கு ஒரு தலித்தியச் சிந்தனையாளர் சொன்னதை மட்டும் நினைவூட்டிமுடிக்கிறேன்- நாய் தன்மீது எறியப்பட்ட கல்லைத் துரத்துவதில்லை. கல்லை எறிந்தவனையேதுரத்துகிறது. எதைத் துரத்தப்போகிறீர்கள் ராஜன்?

நன்றி: லும்பினிNo comments: