Showing posts with label சித்ரா நாகநாதன். Show all posts
Showing posts with label சித்ரா நாகநாதன். Show all posts

Monday, May 12, 2014

ஈழத்துப் பெண் எழுத்தாளர் சித்ரா நாகநாதன்


-மைகேல் கொலின்-
தாகம் கலைஇலக்கிய காலாண்டிதழின் மூலம் பரவலாக அறியப்பட்ட சித்ரா நாகநாதன் ஈழத்து பெண் எழுத்தாளர்களில் தனித்துவமானவர். அவரது முதல் சிறுகதைத் தொகுதி “ கிராமத்து மண்கள் சிவக்கின்றன “ தாகம் வெளியீடாக 1990 இல் வெளிவந்து அந்த வருடத்தின் வட-கிழக்கு மாகாண தமிழ் சாகித்திய விருது பெற்றது. இதன் வெளியீட்டு விழா (1990 சித்திரை ) திருகோணமலையிலும் ஆணி மாதம் அறிமுக விழா யாழ் – நாவலர் மண்டபத்திலும் நடைபெற்றது. இதில் பிரபல எழுத்தாளர்கள் அமரர் செம்பியன் செல்வன், அ.யேசுராசா (இன்னும் ஒரு எழுத்தாளர் பெயர் ஞாபகம்வரவில்லை) அக் காலத்தில் இளம் கவியாக அறியப்பட்ட செல்வி மைதிலி அருளையா ஆகியோர் விமர்சன உரைஆற்றினர். அன்றைய காலத்தின் போர்க்கால சூழ்நிலைகளின் காரணமாக பிரான்ஸுக்கு புலம் பெயர்ந்த சித்ரா நாகநாதன் 1990 களின் போர் நிலைகளை வைத்து எழுதிய “தாகம்” என்ற சிறுகதை “தாகம்’எட்டாவது ஆண்டு மலரில் (20 இதழில்) வெளியானது. கலாநிதி செங்கை ஆழியான் “ஈழத்துச் சிறுகதை வரலாறு” என்ற தனது ஆய்வு நூலில் சித்ரா நாகநாதன் பற்றி இவ்வாறு எழுதுகிறார். 
சித்ரா நாகநாதன் எழுதிய சிறுகதைகள் ஒரு காலகட்டத்தின் மறைக்கப் படக் கூடாத ஆவணங்களாகவுள்ளன . கிழக்கிலங்கையில் இந்திய அமைதிப் படையின் காலகட்டத்தில் நடந்தேறிய சோக நாடகங்களை அப்படியே தனது சிறுகதையில் சித்ரா நாகநாதன் தந்துள்ளார். இலக்கியம் ஒரு காலகட்டத்தின் கண்ணாடி எனின் சித்ராவின் சிறுகதைகள் அவ்வாறானபணியினைச் செய்கின்றன.கலாபூர்வமெனும் போது இச் சிறுகதைகள் அடிபட்டுப் போனாலும் சமுகவியலாவணமாக இவை மிளிர்கின்றன.