அமரர் பெ.சந்திரசேகரனின் 57 வது பிறந்த தினம் (16.04.2014) நேற்றைய தினமாகும் நினைவாக 2004 ஆம்ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத்திட்டத்தில் கல்வியமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் ஆற்றிய உரையின் ஒருபகுதி
மலையக மக்களின் கல்வி முன்னேற்றத்தில் அரசு பாராபட்சம் காட்டி வருகிறது.தோட்டப் பாடசாலைகளுக்கு சில அரச சார்பற்ற நிறுவனங்களால் சில வளங்கள் வழங்கப்பட்டாலும் அவற்றை தொடர்ந்து பராமரிக்கக்கூட அரசு நிதி ஒதுக்குவதில்லை.ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதிலும் தொடர்ந்து பாராபட்சம் காட்டப்படுகிறது. என மலைய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பெ.சந்திரசேகரன் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலைவிவாதத்தில் டிசம்பா; 2004 இல் பேசுகையிலேயே அவர இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும்பேசுகையில் கல்வி அமைச்சின் குழுநிலை விவாத்தில் மலையக கல்வி தொடர்பான சிலஉண்மை நிலைமையை தெளிவுபடுத்த விரும்புகிறேன். மலையக சமூகம் சகல மட்டத்திலும்பின்தங்கிய சமூகமாகவே இருக்கின்றதுஇ கல்வி தொழில் வாய்ப்பு பொருளாதார வருவாய்அதிகரிப்பு வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் என சகல அம்சங்களிலும் இந்தசமூகத்தின் நிலைமையை புரிந்து கொண்டு வரையறுக்கப்பட்ட கால எல்லைக்குள்முழுமையான திட்டத்தை ஏற்படுத்த வேண்டியது மிக அவசியமாகும்.இதில் கல்விக்கு முதலிடம் கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது, ஆனால் பாடசாலைகளைபொறுத்த வரையில் வெளிநாட்டு உதவியினால் ஓரளவு தோட்டப் பகுதிகளுக்கு பாடசாலைகட்டிடங்கள் கிடைத்ததை தவிர அதை பராமரிக்க கூட அரச நிதி ஒதுக்கப்படவில்லை.