Sunday, February 20, 2011

மலேசிய வாசுதேவன் மறைந்தார்

மலேசியா வாசுதேவன்: மகத்தான திரைப்பாடகன்

 -சாஜி - தன் வாழ்க்கையே இசைக்கு அர்ப்பணித்த ஒரு மகத்தான பாடகன் 

தமிழில்: முபாரக்
பதினாறு வருடங்களுக்கு முந்தைய ஒரு பிற்பகல் நேரம். சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள பாடல்பதிவு கூடம் ஒன்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. 'இன்றும் புதிது' என்று பெயரிடப்பட்டிருந்த இசைத் தொகை ஒன்று அங்கு பதிவு செய்யப்பட்டு கொண்டிருந்தது. சில சிறந்த பழைய தமிழ் திரைப் பாடல்களை தேர்ந்தெடுத்து அதை தற்க்காலத்தில் பிரபலமாயிருக்கும் பாடகர்களை பாடவைத்து, நவீன தொழில்நுட்பத்துடன் ஒலிப்பதிவு செய்து வெளியிடும் முயற்ச்சி அது. நான் பணிபுரிந்து கொண்டிருந்த நிறுவனம் தான் அதைத் தயாரித்தது. ஆகவே மேற்ப்பார்வைக்காக நானும் அங்கிருந்தேன். டி எம் எஸ் பாடிய ஓரிரு பழைய பாடல்களை பாடகர் மலேசியா வாசுதேவன் பாடுவதாக இருந்தது. அவருக்காக எல்லோரும் காத்துக் கொண்டிருந்தனர். வரும் வழியிலே அவரை பார்த்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில் ஆர்வத்தோடு நான் வெளியே நின்றுகொண்டிருந்தேன். நான் அவரை அதற்கு முன் நேரில் சந்தித்திருக்கவில்லை.

அந்த கட்டடத்தின் முன்னால் இருந்த சந்தில் வெள்ளை ஒளி நிரப்பி ஒரு வெள்ளைநிற சொகுசுக் கார் உள்ளே நுழைந்தது. அதிலிருந்து மலேசியா வாசுதேவன் இறங்கினார். ஐம்பது வயது இருக்கும். திடகாத்திரம். நீள்வடிவ முகம், கூர்மையான கண்கள். சாயங்காலச் சூரியன் அவருடைய மூக்குக் கண்ணாடியில்ப் பட்டு எதிரொளித்தது. மேலே என் பக்கத்தில் அவரை வரவேற்க நின்று கொண்டிருந்த மாணிக்க விநாயகத்தைப் பார்த்து கைகளை அசைத்தார். அவர் உள்ளே நுழைய எல்லோரும் வணக்கம்
சொல்லி கைகூப்பினர். அவரும் பதிலளித்தவாறு உள்ளே வந்தார். நானும் வணக்கம் சொன்னேன். ஆனால் அவருக்கு பழக்கமான பலருக்கு
மத்தியில் புதிதாய் நின்று கொண்டிருந்த என்மீது கவனம் செலுத்தாமல் சென்றுவிட்டார்.

ஏற்கனவே தாமதமாகியிருந்ததால், நேரடியாக குரல் பதிவுக்கூடத்துக்கு சென்று ஹெட்ஃபோனை எடுத்து மாட்டிக்கொண்டார். பாடல்
வரிகளையும், இசைக்குறிப்புகளையும் கொடுப்பதற்காக மாணிக்க விநாயகமும் உடன் சென்றார். அந்த ஒலிப்பதிவின் இசை நடத்துனரும் ஒருங்கிணைப்பாளருமான மாணிக்க விநாயகம் பிறகு புகழ்பெற்ற பாடகர் ஆனார். எனது அபிமான பாடகரான மலேசியா வாசுதேவநனிடம் என்னை அறிமுகப்படுத்தி வைக்காமல் இருந்ததற்காக அன்று மாணிக்க விநாயகத்தின் மீது எனக்கு கடுமையான வருத்ததம்!

சிறிதுநேர ஆயத்தங்களுக்குப் பிறகு இசைத்தடம் ஒலிக்கத்துவங்க மலேசியாவின் குரல் ஒலிபெருக்கியில் தெளிந்து முழங்கியது."நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே..." நான் சிறுவனாக இருந்தபோது எனது செவியேறிச்சென்ற அதே குரல். எங்கள் பக்கத்து மலையடிவார
கிராமத்தில், தென்னங்கீற்று வேய்ந்த சினிமாக்கொட்டகையில் இருந்து எதிரொலித்த அதே குரல்! மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்க நான் ஏங்கிய மலேசியா வாசுதேவனின் பல பாடல்களின் நினைவுகளுக்குள் முற்றிலுமாக மூழ்கிப்போனேன். மனம் எனது பால்யகாலங்களுக்கு சட்டென்று தாவிப்போனது.

பனிரெண்டு அல்லது பதிமூன்று வயதிருக்கும் அப்போது எனக்கு. அந்த சினிமாக்கொட்டகையில் வாரயிறுதி நாட்களில் பிற்பகல் மூன்று
மணிக்கு ஒரு காட்சி இருக்கும். யாருமறியாமல் வீட்டை விட்டு சீக்கிரமாகவே கிளம்பிவிடுவேன். சிறிய உருவம் கொண்டிருந்த எனக்கு மலைப்பாதைகளின் வழியாக நடந்து சென்று சினிமாக்கொட்டகையை அடைவதற்கு ஒருமணி நேரம் ஆகிவிடும். முன்னதாகவே சென்று சேர்ந்து பாடல்கள் ஒலிக்கத்துவங்கும் நேரத்திற்காக வாசலிலே காத்திருப்பேன். சரியாக ரெண்டேகால் மணிக்கெல்லாம் அங்கிருந்த இரண்டு சாம்பல்நிறமான கூம்புவடிவ ஒலிபெருக்கிகளிலிருந்து பாடல்கள் ஒலிக்கத்தொடங்கிவிடும். "ஏய்... முத்து முத்தா மொட்டு விட்ட வாசமுல்லே..." உச்சஸ்தாயியில் ஒலிக்கும் மலேசியா வாசுதேவனின் குரல் சூழ்ந்திருக்கும் மலைமுகடுகளில் எதிரொலித்து சமவெளியெங்கும் பரவி நிறையும். அது எல்லாவற்றையும் மறக்க்ச் செய்து ஒரு கனவு உலகத்துக்கு என்னை அழைத்துச் செல்லும்.

என் விருப்பத்திற்குரிய பல தமிழ், மலையாளம், ஹிந்தி பாடல்கள் ஒலிக்க கொட்டகையை ஒட்டியுள்ள வளைவான சாலையின் வழியே மெல்ல மெல்ல பக்கத்து கிராமங்களிலிருந்து மக்கள் கூட்டம் வந்து நிறையத்தொடங்கும். வரிசையில் நின்று, கஸேரா 4.00ரூ, சாரு பென்ச் 3.00ரூ, பென்ச் 2.00ரூ, தறா1.00ரூ என்று எழுதியிருக்கும் குறுகிய அரைவட்டமான திறப்பின் வழியே கையை நுழைத்து அனுமதிச் சீட்டைப் பெற்றுச் செல்வார்கள். விரைவில் கொட்டகையின் கூரையில் கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கியில் பாடல்கள் நிறுத்தப்பட்டு உள்ளே இருக்கும் ஒலிபெருக்கியில் மட்டும் கேட்கும்.

சினிமாக்கொட்டகையின் அருகே நெருங்கிச் சென்று உள்ளேயிருந்து ஒலிக்கும் பாடல்களைக் கேட்டுக முயர்ச்சி செய்வேன். உள்ளே சென்று சினிமாவில் வரும் பாடல்களையும், இடைவேளையில் ஒலிக்கும் எனது விருப்பமான பாடல்களையும் கேட்க நினைப்பேன். ஆனால் பெரும்பாலும் என் பையில் ஒரு காசுகூட இருந்ததில்லை. பாடல்கள் முடிந்து படம் ஆரம்பித்ததும் வீட்டை நோக்கி மலைப்பாதையில் நடக்க ஆரம்பிப்பேன். கேட்டுக்கொண்டிருந்த பாடல்கள் உள்ளுக்குள் மீண்டும் மீண்டும் ஒலிக்க தலையை தாளகதியோடு அசைத்துக் கொண்டு அலுப்பை உணராமல் நடந்து செல்வேன்.

சினிமாக் கொட்டகைக்கு செல்ல முடியாத நாட்களில் வீட்டுக்கு அருகே இருக்கும் மலைக்குன்றில் ஏறிநின்று தூரத்திலிருந்து ஒலிக்கும் அந்த பாடல்களைக் கேட்டுக்கொண்டிருப்பேன். குன்றின் உச்சியில் இரைந்து வீசும் காற்று சிலநேரம் பாடல்களின் பல வரிகளைக் கொண்டு போய்விடும். எனினும் அங்கு நின்று கொண்டு தூரத்திலிருந்து மிதந்து வரும் பாடல்களைக் கேட்பது ஓர் அற்புதமான அனுபவம்.

மலேசியா வாசுதேவனின் பாடல்களைக் கேட்பதில் அப்போது என்ன காரணம் என்று விளங்காத வினோதமான மோகம் ஒன்றை கொண்டிருந்தேன். 'அவரது ஒத்த ரூபா ஒனக்கு தாரேன்', 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு', 'வெத்தல வெத்தல வெத்தலையோ', 'பட்டு வண்ண ரோசாவாம்', கூடையிலே கருவாடு போன்ற பாடல்கள் எல்லாம் எனக்கு உவகையையும் உற்சாகத்தையும் தந்தது. இப்பாடல்கள் பாடப்படிருந்த விதத்தின் மீது நான் ஒருவகையான காதலையே கொண்டிருந்தேன். 'தண்ணி கறுத்திருச்சி' பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஏற்பட்ட விவரிக்கமுடியாத உற்சாகம் இன்னும் நினைவினுள் இருக்கிறது. இன்றும் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் அப்பாடல் என்னைப் புல்லரிக்கச் செய்கிறது!

'செவ்வந்திப் பூமுடிச்ச', 'பொதுவாக எம்மனசு தங்கம்' போன்ற பாடல்கள் கூட துள்ளலான தொனியில் அவர் பாடியிருக்கும் விதத்திற்காக எனக்கு பிடித்திருந்தது. 'நிலா காயுது நேரம் நல்ல நேரம்', 'கண்ணத்தொறக்கணும் சாமி', 'வா வா வாத்தியாரே வா', 'ஆசை நூறுவகை' போன்ற பாடல்கள் அவரது பாடல்களின் மீதான எனது விருப்பத்தை முழுமைப்படுத்தியது. மலேசியா வாசுதேவனின் பாடும்முறையில் இருந்த இயல்பான ஆற்றலும், நேர்மையான பாங்கும் தான் அவரது பாடல்களின் மீதான மோகத்தை எனக்குள் ஏற்ப்படுத்தியது என்று பலகாலம் கழிந்து தான் எனக்குத் தெரிய வந்தது.

கேரளத்தில் பிரபல்மடைந்த அவருடைய பெரும்பாலான பாடல்கள் வேகமான துள்ளிசையோடு கூடிய டப்பாங்குத்துப் பாடல்களே. எனவே அவருடைய மெல்லிசைப் பாடல்களையும், வேறுவகையான இசை பாணிகளிலமைந்த பாடல்களையும் கேட்கும் சந்தர்ப்பம் அப்போது எனக்கு வாய்க்கவில்லை. பிறகு 'இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது' (சிகப்பு ரோஜாக்கள்), 'மலர்களே நாத ஸ்வரங்கள்' மற்றும் 'கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ' (கிழக்கே போகும் ரயில்), 'வான்மேகங்களே வாருங்கள் (புதிய வார்ப்புகள்), 'மலர்களிலே ஆராதனை' (கரும்பு வில்), 'பூவே இளைய பூவே' (கோழி கூவுது), 'பருவ காலங்களின் கனவு' (மூடுபனி), 'அடி ஆடு பூங்கொடியே'
(காளி), 'பட்டுவண்ண சேலைக்காரீ' (எங்கேயே கேட்ட குரல்), 'கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல' (உனக்காகவே வாழ்கிறேன்) போன்ற
பாடல்களைக் கேட்ட பின்னர், நமது காலத்தின் திறமைமிகுந்த தமிழ் சினிமா பிண்ணனிப்பாடகர் மலேசியா வாசுதேவனே என்ற முடிவுக்கு வந்தேன். பல்வேறுவகையான உணர்ச்சிகளை மிகை இல்லாமல் யதார்த்தமாக வெளிப்படுத்தி வெகு இயல்பாக பாடும் திறன் கொண்டிருந்தவர். எத்தனையோ ஆண்டுகள் கழித்தும் மீண்டும் அவரது பல பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் அவ்வெண்ணம் எனக்குள் மேன்மேலும் உறுதிப்படவே செய்கிறது.

டி எம் எஸ்ஸைப் போலவே, மலேசியா வாசுதேவனும் தமிழில் மட்டுமே அதிகம் பிரபலமடைந்த பாடகர். மற்ற மொழிகளில் பாடுவது இவரது பலமாக இருந்ததில்லை. தனது தாய்மொழியான மலையாளம் உட்பட மற்ற மொழிகளின் உச்சரிப்பையும், நுணுக்கங்களையும் தன்னால் கிரகித்துக் கொள்ள முடியவில்லை என்பதை அவர் நன்றாகவே அறிந்திருந்தார். எனவே பிறமொழிகளில் பாடும் வாய்ப்புகளை அவர் மறுத்துவிட்டார். ஆனால் நிர்ப்பந்தம் காரணமாக பத்துக்கும் குறைவான மலையாளப் பாடல்களையும், ஏறத்தாழ இருபது கன்னடப் பாடல்களையும், தெலுங்கில் ஓரிரு பாடல்களைப் பாடியிருக்கிறார். உச்சரிப்புப் பிழைகளையும் கடந்து மலையாளத்திலும், கன்னடத்திலும் அவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் பெரும் வெற்றியை அடைந்திருக்கின்றது. உதாரணத்திற்கு, பிரலயாந்தகா எனும் கன்னடப் படத்தில் இடம்பெற்ற 'நாளே பருவே நன்னா கொடுவே' என்ற நையாண்டிப்பாடல். இப்பாடலில் அவரது குரல் உருவாக்கிய இயல்பான துள்ளலும் பித்தும் கன்னடத்தில் கொடிகட்டிப்பறந்த மற்ற பல பாடகர்களைக் காட்டிலும் மிகுந்த திறமை வாய்ந்தவர் அவர் என்பதை
நமக்குணர்த்தும்.

சோகமான தத்துவப்பாடல்களில் ஆரம்பித்த மலேசியா வாசுதேவனின் திரையிசைப் பயணம் மென்மையான காதல் ஜோடிப்பாடல்கள்,
வலுவான கிராமியப்பாடல்கள், நெஞ்சையள்ளும் காதல்ப் பாடல்கள், பாசப் பாடல்கள், நகைச்சுவைப் பாடல்கள், டி எம் எஸ், சி.எஸ்.ஜெயராமன், திருச்சி லோகநாதன் போன்றோரின் குரலை நகல்செய்து பாடிய பாடல்கள், முற்றிலும் மேற்கத்திய இசையிலமைந்த பல பாடல்கள் போன்றவற்றின் வழியே தொடர்ந்தது. ஆனால் துர்ப்பாக்கியமாக அவரது குரல் டப்பாங்குத்துப் பாடல்களுக்கே அதிகமாக பொருந்தும் என்று எப்படியோ முடிவு கட்டப்பட்டுவிட்டது. இவ்வாறாகவே மலேசியா வாசுதேவனுடைய பல்வகையான, பல்சுவையோடு பாடும் திறன் பலரால் கவனிக்கப்படாமலே போய்விட்டது.

அவர் பாடிய எத்தனையோ நல்ல பாடல்களைக் காட்டிலும் டப்பாங்குத்து வகைப் பாடல்களே தமிழ்நாட்டிலும் மிகவும் பிரபலமடைந்தது. ஆகவே அவருக்கு ஒரு குத்துப் பாடகர் என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டது. தீவிர தமிழ் திரை இசை ரசிகர்கள் சிலர் கூட இன்றுவரை மலேசியா வாசுதேவன் ஒரு 6-8 (டப்பாங்குத்து தாளக்கட்டின் இசைச்சொல்) பாடகன் மட்டும் தான் என்றே நினைக்கின்றனர். தரமும் ஆழமும் குறைந்த இத்தகைய பாடல்களையே சங்கர் கணேஷ் போன்ற இசையமைப்பாளர்கள் அவருக்கு தொடர்ந்து வழ்ங்கி வந்தனர். ஆனால் எத்தகைய பாடல்களை வழங்கினாலும் மலேசியா வாசுதேவன் மிகுந்த அர்ப்பணிப்புடன் அவற்றை பாடி வெளிப்படுத்தினார் என்பதே உண்மை. அவர் ஒரு குத்துப்பாடகர் என்ற முத்திரை விழுவதற்க்கு இதுவும் காரணமாயிற்று. இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் சில பாடல்கள் இசையின் தரத்தில் மேன்மையானதாக இல்லாவிட்டாலும், அவற்றை அவர் உண்மையோடும், துள்ளலோடும் பாடியிருக்கும் விதத்தைத் தான் நாம் கவனித்தாக வேண்டும்.

முப்பது வருடத்திற்கும் மேலாக திரையிசையிலும், பிறவகையான இசை முயற்சிகளிலும் மலேசியா வாசுதேவனின் பல்லாயிரம் பாடல்கள் அவருக்கே உர்¢ய ஆற்றலோடு வெளிவந்திருக்கின்றன. வணிக வெற்றிகளை மட்டும் குறிக்கோளாக கொண்ட உலகின் போக்குகளில், குறிப்பாக சினிமா உலகின் போக்குகளில் அறியாமை நிரம்பியவராக இருந்த மலேசியா வாசுதேவன் மெதுவாகப் பேசும் குணம் கொண்ட மிக அன்பான மனிதர். எதையும் அடைவதற்காகவோ, உயர்ந்த நிலைக்குச் செல்வதற்காகவோ, ஒருபோதும் தன்னை முன்னிறுத்தி சந்தைப்படுத்தாமல் இருந்தவர் அவர். அதனாலேயே ஒரு பாடகராக அவருடைய தமிழ் சினிமாப் பங்களிப்புகள் புகழப்படாமலும், பரிசீலிக்கப்படாமலும் இன்றுவரை பலரால் முற்றிலும் குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கின்றது. மலேசியா வாசுதேவனின் வாழ்க்கையும் இசையும் கடந்து வந்த வழிகள் வியப்பூட்டுபவை.

ஏழைகளுக்கு வாழ்வதற்கு யாதொரு வழியும் புலப்படாமலிருந்த 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில், வெள்ளையரின் சென்னை
மாகாணத்துக்கு உட்பட்டிருந்த கேரளாவின் பாலக்காடு பகுதியிலிருந்து, பல குடும்பங்கள் வாழ வழி தேடி மலேசியாவுக்கு கப்பலேறிச் சென்றது. ஒற்றப்பாலம் பகுதியைச் சேர்ந்த பதினேழு வயதான சாத்து நாயரும் குடும்பத்தினரும், பொல்ப்புள்ளி கிராமத்தைச் சேர்ந்த
பனிரெண்டு வயதான அம்மாளு அம்மையும் அவரது குடும்பத்தினரும் மலேசியாவுக்கு இடம்பெயர்ந்த இந்த கூட்டத்தில் இருந்தனர். அக்குடும்பங்களுக்கு மலேசியாவில் க்ளாங் பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்த ரப்பர் காடுகளில் வேலை கிடைத்தது. சில ஆண்டுகளுக்குப்
பிறகு குடும்பத்தினரின் ஏற்பாட்டில் சாத்து நாயரும் அம்மாளு அம்மையும் திருமணம் செய்து, எட்டு குழந்தைகளின் பெற்றோர்களாயினர். அவர்களது எட்டாவது குழந்தையாக1944 ஜூன் 15ல் வாசுதேவன் பிறந்தார்.

தமிழர்கள் நிறைந்து வாழும் பகுதியாக க்ளாங் பள்ளத்தாக்கு இருந்ததனால் அவருடைய குடும்பத்தினரின் தொடர்பு மொழியாக தமிழ் மொழி ஆகிவிட்டிருந்தது. ஆகவே, தமிழே வாசுதேவனுடைய வளர்ப்பு மொழியாகவும் விருப்பமொழியாகவும் இருந்தது. பள்ளியிலும் தமிழ்வழிக்கல்வியே பயின்றார். சாத்து நாயர் இசையில் நாட்டம் கொண்டவராகவும், ஓரளவு இசையறிவு கொண்டவராகவும் இருந்தார். அவருக்குத் தெரிந்த இசையை குழந்தைகளுக்கு போதித்தார். அவருடைய எல்லாக் குழந்தைகளும் பாடவும், இசையை புரிந்துகொள்ளவும் கூடியவர்களாக இருந்தனர். சிறுவயதிலேயே வாசுதேவன் இசையிலும் நடிப்பிலும் அதிக ஆர்வமுடையவராக இருந்தார். தனது எட்டாவது வயதிலேயே பார்வையாளர்கள் முன் பாடத்தொடங்கினார்.

ரப்பர் தோட்டங்களில் வேலைசெய்பவர்களுக்காக ஊர் ஊராக சென்று தமிழ் சினிமா போட்டுக்காட்டும் வழக்கம் அங்கே நிலவி வந்தது. தொழிலாளர்கள் பாய் படுக்கையோடு சென்று சினிமா பார்ப்பவர்களாக இருந்தனர். தொலைதூர ரப்பர் தோட்டங்களுக்கு நண்பர்களுடன் சைக்கிளில் சென்று அங்கு காண்பிக்கப்படும் சினிமாக்களையும் பார்த்துக் கொண்டிருந்தார் வாசுதேவன். அந்த சினிமாக்களின் தாக்கத்தால் பாடவும் நடிக்கவுமான ஆசை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது அவருக்கு. நடிகர் சிவாஜி கணேசன் மற்றும் பாடகர் டி.எம்.எஸ்ஸின் தீவிர ரசிகராக மாறினார். வாசுதேவனின் விருப்பமான இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. இவர்கள் மூவரையும் ஒரு முறையேனும் சந்திக்க வேண்டும் என்பதே அவரது உக்கிரமான லட்சியமாக அப்போது இருந்தது.

வளர்ந்த பிறகு மலேசியாவில் இருந்த சில தமிழ் நாடகக் குழுக்களில் பாடக நடிகராக இணைந்துகொண்டார். இவ்வகையில், தமிழ் நாடக-சினிமாவின் பாடி நடிக்கும் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் தான் வாசுதேவன் என்று சொல்லலாம். 1967ல், தனது 23 ஆவது வயதில் அவர் நடித்த 'ரத்த பேய்' எனும் நாடகத்தை சினிமாவாக எடுக்க ஒரு மலேசிய தயாரிப்பு நிறுவனம் முன்வந்தது. அப்படத்தை சென்னையில் படமாக்க திட்டமிட்டிருந்தனர். அந்த படப்பிடிப்பு குழுவில் இணைந்து, முதன் முதலாக வாசுதேவன் தன் தாய்நாட்டுக்கு 1968 ல்
வந்திறங்கினார் வாசுதேவன். அப்படத்தில் நடிக்கவும், ஜீ கே வெங்கடேஷின் இசையமைப்பில் பாடவும் அவருக்கு வாய்ப்பும் கிடைத்தது.

படம் முடிந்ததும் தயாரிப்புக்குழு மலேசியா திரும்பிச்செல்ல, வாசுதேவன் சென்னையிலே தங்கியிருந்து சினிமாவில் பாடும் வாய்ப்புக்காக முயற்சி செய்ய முடிவெடுத்தார். அன்றிலிருந்து வாய்ப்புக் கேட்டு அலைந்து திரிந்த அவரது போராட்டம் பத்துவருட காலம் நீண்டது. தெரியாத ஊர், தெரியாத மக்கள், யாதொரு தொடர்புமில்லை, உதவி செய்யவும் யாருமில்லை! பாடுவதற்கு வாய்ப்புக் கேட்டு இசையமைப்பாளர்களையும், சினிமா கம்பெனி முதலாளிகளையும் சென்று பார்த்தார்.

தன்னை முன்னிறுத்தத் தெரியாதவராக இருந்ததனால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நடிக்கவும் பாடவும் வாய்ப்புத் தேடி மலேசியாவிலிருந்து வந்திருப்பதாகச் சொல்லும்போது, இங்குள்ளவர்களுக்கே வாய்ப்பில்லை அதனால் அங்கேயே திரும்பிப் போகும்படி பெரும்பாலானோர் சொல்லியிருக்கின்றனர். சென்னையில் தொடர்ந்து இருக்க வழியில்லாத நிலை வந்தபோதெல்லாம் மலேசியாவுக்கே திரும்பிப் போய்விடலாம் எனும் எண்ணம் பலமுறை வந்திருக்கிறது அவருக்கு. ஆனால் திரும்பிச் செல்லும் முன்னர் ஏதேனும் ஒரு நல்ல சினிமாவில் ஒரேயொரு பாடலாவது பாடிவிட்டுத்தான் செல்லவேண்டும் என்று உறுதியாய் இருந்தார்.

இசையமைப்பாளர் ஜீ கே வெங்கடேஷின் அலுவலகத்துக்கு தொடர்ந்து சென்று பார்த்துக்கொண்டிருந்த காலத்தில் அவரிடம் உதவியாளராக இருந்த இளையராஜாவைச் சந்தித்தார். இருவரும் நண்பர்களானார்கள். இளையராஜாவும் அவரது சகோதரர்களான கங்கை அமரனும் ஆர் டி பாஸ்கரும் சேர்ந்து பாவலர் சகோதரர்கள் என்ற பெயரில் இசைக்குழு வைத்திருந்தது. டி.எம்.எஸ் பாடல்களைப் பாடுபவராக அக்குழுவில் இணைந்து கொண்டார் வாசுதேவன். எம்.ஜி.ஆரால் அடிமைப்பெண் (1969) படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம், தன் முதல் பாடலே பெரும் வெற்றிபெற்று, ஒரு நட்சத்திரப் பாடகராக முன்வரத் தொடங்கியிருந்தார் அப்போது. அவரும் இளையராஜா சகோதரர்களின் குழுவில் பாடிக்கொண்டிருந்தார். பாரதிராஜா, கங்கை அமரன், ஆர்.டி.பாஸ்கர், இளையராஜா, எஸ் பி பி போன்றவர்களின் நண்பர்கள் குழுவில் ஓர் அங்கமாக மலேசியா வாசுதேவன் மாறிய காலமும் அதுவே.

பாட வாய்ப்புக்கிடைக்கும் முதல் படமே பெரிய நிறுவனத்தைச் சேர்ந்ததாக அமைந்து, எம் ஜி ஆர் போன்ற ஒரு உச்ச நட்சத்திரத்தின் நடிப்பில் அப்பாடல் பெரும் வெற்றி அடையும்போது, அப்பாடகரின் எதிர்காலத்தை, ஏறுமுகத்தைப் பற்றி சொல்லவே வேண்டியதேயில்லை! எஸ் பி பி யின் வளர்ச்சியைப் பார்த்தால் இது புரியும். மலேசியா வாசுதேவனை விட எஸ் பி பியின் வணிகரீதியான உயர்வுக்கும், புகழின் வளர்ச்சிக்கும் முக்கிய காரணம் அவர் எம் ஜி ஆரால் அறிமுகம் செய்யப்பட்டு அவரது ஆதரவை தொடர்ந்து பெற்றார் என்பதே. மலேசியா வாசுதேவனுக்கோ தமிழ் சினிமாவின் என்றென்றைக்குமான உச்ச நட்சத்திரம் எம் ஜி ஆரின் படங்களுக்கு பாடும் வாய்ப்பு கிடைக்கவேயில்லை! 'உன்னை விட மாட்டேன்' என்று ஒரு எம் ஜி ஆர் படம் இளையராஜாவின் இசையமைப்பில் வருவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. அதில் மலேசியா வாசுதேவன் பாடி பதிவு செய்யப்பட்ட நம்பிக்கையூட்டும் ஒரு பாடலும் இருந்தது. ஆனால் அந்தப் பாடலோ, படமோ கடைசிவரை வெளியாகவேயில்லை!

மலேசியா வாசுதேவனுக்கு முதல் பாடும் வாய்ப்பு விளம்பரங்களில் தான் கிடைத்தது. ஏ.வி.ரமணன் போன்றவர்கள் உருவாக்கிய சில விளம்பரப்படங்களில் பாடினார். ஒலிப்பதிவுக்கூடத்தின் ஒலிவாங்கிகளில் பாடிப்பழகும் பயிற்சிக்களமாக இது அவருக்கு அமைந்தது.
அப்பாடல்களை மீண்டும் மீண்டும் கவனித்துக் கேட்டு ஒலிப்பதிவுக்கு ஏற்ப பாடும் பயிற்சியைப் பெற்றார். தனது குறைகளைத் திருத்திக்
கொள்ளவும் செய்தார்.

இளையரஜா குழுவின் ஓர் மேடை நிகழ்ச்சியைக் கண்ட எம்.எஸ்.வி, வாசுதேவனின் சிறப்பான பாடும் முறையைப் பாராட்டி அவருக்கு
வாய்ப்பளிப்பதாக வாக்குறுதியளித்திருந்தார். ஆயினும் எதுவும் நடக்கவில்லை. பலமுறை அவரை நேரில் கண்டு வாய்ப்புக் கேட்டிருந்தும்
எம்.எஸ்.வியிடமிருந்து யாதொரு அழைப்பும் இல்லை. எம்.எஸ்.வியின் சொந்த ஊரான எலப்புள்ளி, வாசுதேவனின் தாயாரின் ஊரான
பொல்ப்புள்ளியின் பக்கத்து கிராமமே. வாசுதேவன், எஸ் ஜானகி போன்ற அற்புதமான பாடகர்களை எம்.எஸ்.வி பெரிய அளவில் கண்டு
கொள்ளாமல் இருந்ததும் அதே நேரத்தில் எஸ்.பி.பி மற்றும் வாணி ஜெயராம் போன்றவருக்கு அதிக அளவில் வாய்ப்புகளை வழங்கியதும்
ஒரு புரியாத புதிராக இருக்கிறது.

1972 ஆம் ஆண்டின் மத்தியில் வாசுதேவனுக்கு சினிமாவில் பாட முதல் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அவர் பொள்ளாச்சி ரத்னம் என்ற தயாரிப்பாளருக்கு தெரிந்தவராக இருந்தார். அவரின் மூலமாகவே அந்த வாய்ப்புக் கிட்டியிருந்தது. ஜெய்சங்கர் ஹீரோவாக நடித்த 'டெல்லி டூ மெட்ராஸ்' என்ற சிறிய படத்தில் இடம்பெற்ற நகைச்சுவைப்பாட்டு. 'பாலு விக்கிர பத்மா உன் பாலு ரொம்ப சுத்தமா?' என்ற அந்த பாடலுக்கு வி.குமார் இசையமைத்திருந்தார்.

1973ல் 'பாரதவிலாஸ்' படத்தில் வந்த 'இந்திய நாடு என்வீடு' என்ற டி.எம்.எஸ் பாடிய பாடலின் இடையில் வரும் சில வரிகளைப்
பாடவைத்தார் எம்.எஸ்.வி. அதுவும் ஹிந்தி மற்றும் பஞ்சாபியில் அமைந்த வரிகள்! இதே படத்தில் தான் 'சக்கபோடு போடு ராஜா, உன்
காட்டில மழை பெய்யுது' பாடலை டி.எம்.எஸ் பாடியிருந்தார். அதே வருடம் எம்.எஸ்.வியின் இசையில் தலைப்பிரசவம் எனும் படத்தில்
'மாலையிட்டு பூமுடித்து' என்ற பாடலை பாடினார் வாசுதேவன். ஆனால் அந்த வாய்ப்பும் பொள்ளாச்சி ரத்னத்தின் ஆதரவினால்
கிடைத்ததேயாகும்.

வயலின் வித்வான் குன்னக்குடி வைத்தியநாதனின் இசையமைப்பில் குமாஸ்தாவின் மகள் (1974) எனும் படத்தில் 'காலம் செய்யும் விளையாட்டு' என்ற பாடலைப் பாடும் வாய்ப்புக் கிட்டும் வரை பெயரில்லாத, முகமில்லாத ஒரு பாடகராகவே வாசுதேவன் இருந்தார். அப்படத்தின் இயக்குனர் ஏ.பி.நாகராஜன் வாசுதேவனை 'மலேசியா வாசுதேவன்' என்று பெயர்மாற்றி படத்தின் டைட்டில் கார்டில் பெயர் வெளிவரவும் செய்தார். சிவக்குமார் நாயகனாகவும், கமல்ஹாசன் எதிர்நாயககனாகவும் நடித்த படம் அது.

தன் ஆதர்ச இசையமைப்பாளர் எம்.எஸ்.வியின் இசையில் பல சிறந்த பாடல்களைப் பாடிவிட வேண்டும் என்பது பெரிய கனவாக மிஞ்சியிருந்தது. இக்கனவு அவருக்கு முழுமையாக நிறைவேறிவிட்டது என்று ஒருபோதும் சொல்லிவிட முடியாது. அவரது ஒட்டுமொத்த திரையிசைப் பயணத்தில் 15க்கும் குறைவான பாடல்களையே எம் எஸ் வியின் இசையில் பாடியிருக்கிறார். அதில் பில்லா (1980) படத்தில் இடம்பெற்ற 'வெத்தலையப் போட்டேண்டி' என்ற பாடலே பெரிதும் ரசிக்கப்பட்டது. ஒரு டப்பாங்குத்து ஆயிருந்தும் அப்பாடலை அபூர்வமான சுவையோடு பாடியிருப்பார்.

சமீபத்தில் வெளிவந்த பில்லா படத்தில் 'வெத்தலையப் போட்டேண்டி' ரீமிக்ஸ் பாடலைக் கேட்கும்போது சராசரிக்கும் மேலான ஒரு பாடகர் பாடுவதற்கும், ஒரு மேதை பாடுவதற்குமான வித்தியாசத்தை நம்மால் உணரமுடியும். புதிய தலைமுறைப் பாடகர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, மலேசியா வாசுதேவன் சாதாரணமாக நகலெடுக்கப்பட முடியாத ஒரு பாடகர். அவரது பாடல்களைப் பாடி மறு உருவாக்கம் செய்ய முயன்று உங்களை நீங்களே கேலிக்குரிக்குரியவர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம் என்பதே!

எம்.எஸ்.வி - வாசுதேவன் கூட்டணியில் உருவான 'எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை' (சரணாலயம்) அர்புதமான ஒரு இசை அனுபவம். இதுவரை இப்பாடலைக் கேட்டிருக்காவிட்டால் உடனே கேட்டுப்பார்க்கவும். வாசுதேவனின் ஒப்பிடவியலாத மெல்லிசை பாடும் ஆற்றலை
நிரூபிக்கும் அற்புதமான பாடல் இது என்பதை அறிய முடியும். இதே கூட்டணியில் அமைந்த மற்றுமொரு அருமையான பாடல் 'எண்ணியிருந்தது ஈடேற' (அந்த ஏழு நாட்கள்). துணைவி படத்தில் வரும் 'முத்து மாணிக்க கண்கள்' மிக அழகாக மலேசியா வாசுதேவன் பாடிய இன்னுமொரு எம் எஸ் வி பாடல். "இப்பாடல்கள் வேறு யாராலையும் இப்படி அற்புதமாகப் பாட இயலாது" என எம்.எஸ்.வியே வாசுதேவனைப் புகழ்ந்திருக்கிறார்!

1975-76 ம் வருடங்களில் அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. 1976 ல் அவருடைய நண்பர் இளையராஜா 'அன்னக்கிளி' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தனது நெருங்கிய நண்பர் இசையமைப்பாளராக அறிமுகமாகும்போது தனக்கும் ஒரு வாய்ப்புக்
கிடைக்கும் என்று நிச்சயமாக அவர் நம்பியிருந்திருக்கலாம். என்ன காரணத்தினாலோ அது கிட்டவில்லை. ஆனால் தனது இரண்டாவது படத்தில் இளையராஜா அவருக்களித்த 'ஒத்த ரூபா ஒனக்குத் தாரேன்' (பத்ரகாளி) என்ற பாடல் இன்றும் ரசிக்கவைக்கும், தமிழ்மண்ணின் கிராமிய உணர்ச்சிமிகுந்த பாடலாக இருக்கிறது.

இளையராஜா இசையமைக்க ஆரம்பித்த காலங்களில் அவரோடு அமர்ந்து இசையமைப்புப் பணிகளில் உதவியாக இருந்திருக்கிறார்
வாசுதேவன். இளையராஜாவின் முதல் 14 படங்களில் 'உறவாடும் நெஞ்சம்' என்ற படத்தில் 'டியர் அங்கிள்' எனத்தொடங்கும் சூழ்நிலைப் பாடல் ஒன்று வாசுதேவனுக்குக் கிடைத்தது. குழந்தைகளோடு சேர்ந்து பாடும் ஒரு பாடல் அது. எனினும் தனது வரிகளை மிகவும் உணர்வுபூர்வமாக பாடியிருப்பார். 'அவர் எனக்கே சொந்தம்' என்ற படத்தில் ஏற்கனவெ அனைவருக்கும் பரிச்சயமான 'சுராங்கனி சுராங்கனி' என்ற பைலா பாடலை பாடவைத்தார் இளையராஜா.

ரஜினிகாந்த் நடித்த 'புவனா ஒரு கேள்விக்குறி', சிவாஜிகணேசன் நடித்த 'தீபம்' படங்களுக்கு இளையராஜா இசையமைத்த பொழுது தனக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்பியிருந்திருக்கலாம், எனினும் பல காரணங்களால் அந்த வாய்ப்புகள் தரப்படவில்லை. தனது ஆதர்சமான நடிகர் சிவாஜிக்கு பிண்ணனி பாடவேண்டும் என்ற கனவும் அப்போது நனவாகவில்லை. ஆனால் பிறகு தனது எல்லாப் பாடல்களையும் மலேசியா வாசுதேவனே பாடவேண்டும் என்று சிவாஜி கணேசன் வற்புறுத்திய கதையும் நடந்தது. அதேபோல்
பின்னர் ரஜினிகாந்துக்காக மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்கள் அனைத்துமே அவரது குரலுக்கும் நடிப்புப் பாணிக்கும் மிகப்
பொருத்தமாக அமைந்தது.

தனது 'துர்காதேவி', 'துணையிருப்பாள் மீனாட்சி' படங்களிலும் சில பாடல்களை வாசுதேவனுக்கு வழங்கியிருந்தார் இளையராஜா.1978ல் வாசுதேவனின் அப்போதைய மற்றொரு நெருங்கிய நண்பரான பாரதிராஜா '16 வயதினிலே' என்ற தனது முதல்படத்தை இயக்கினார். அப்படத்தில் இடம்பெற்ற மற்ற பாடல்களுடன் 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு' மற்றும் 'செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்கா' தமிழ்கம் முழுவதும் புகழின் உச்சத்துக்குச் சென்றது. உண்மையில் 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு' ஜெயசந்திரனுக்கும் 'செவ்வந்திப்பூ முடிச்ச' எஸ் பி பிக்குமாக ஒதுக்கப்பட்டிருந்த பாடல்கள்! ஆனால் இப்படலகள் வழியாக தமிழ்சினிமாவின் ஆளுமைமிக்க பாடகராக வாசுதேவன் உருவானார். 16 வயதினிலே பாடல்கள் வெற்றிபெறும் வரை தானொரு பிண்ணனிப்பாடகராக வெற்றியடைவேன் என்று நம்பவே இல்லை என்று பின்னர் குறிப்பிட்டிருக்கிறார் வாசுதேவன்!

இளையராஜாவைப் பற்றி மலேசியா வாசுதேவன் எப்போதுமே "இளையராஜா எனக்கு பெரும் உதவிகள் செய்திருக்கிறார். புகழ்பெற்ற
பாடகனாக என்னை உருவாக்கியது அவரே. நான் நட்சத்திரப் பாடகனாக வரும்வரை எனக்கு பின்பலமாக இருந்தார். பல சந்தர்ப்பங்களில் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் எனது திறமையை சந்தேகித்தபோது அவர்களிடம் என்னை தீவிரமாகப் பரிந்துரைத்தவர் இளையராஜா தான். எனது பிண்ணனிப்பாடகராகும் போராட்ட வாழ்வில் நான் அடைந்த எல்லா வெற்றிக்கும் இளையராஜாவே காரணகர்த்தாவாக இருந்தார். எல்லாவகையான பாடல்களையும் பாடுவதற்கான வாய்ப்பு எனக்களித்தார். ரஜினிகாந்த் நடித்த 'மாவீரன்', 'அதிசயப்பிறவி' போன்ற படங்களில் வந்த எல்லாப்பாடல்களையும் எனக்கே அளித்தார். சிவாஜி நடித்த 'ராஜரிஷி' படத்தில் டி.எம்.எஸ் குரல் வேண்டுமென்று வற்புறுத்தப்பட்டும், எனது பெயரை உறுதியாக பரிந்துரைத்தவர் இளையராஜா" என்றவாறெல்லாம் மிகவும் நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

"இளையராஜா இசையமைத்த, உங்கள் குரலில் வந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கக் கூடிய பல பாடல்கள்
மற்ற பாடகர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறதே" என்ற கேள்விக்கு, "எஸ்.பி.பிக்கு சென்றிருக்க வேண்டிய 'இந்த மின்மினிக்கு',
'வான் மேகங்களே', கோவில் மணியோசை', 'வா வா வசந்தமே' போன்ற பாடல்கள் எனக்கும் வழங்கப்பட்டிருக்கிறதே" என்று பதிலளித்திருந்தார். ஒருபோதும் யாரையும் குறைசொல்லாத வாசுதேவன், தன் வெற்றிகளுக்காக இளையராஜாவை புகழ்ந்திருந்தாலும் அவருடைய குரலின் தீவிர ரசிகர்கள் பலரின் அபிப்ராயம் என்னவென்றால், முக்கியமான இன்னும் பல பாடல்களைப் பாட இளையராஜா அவருக்கு வாய்ப்பளித்திருக்கலாம் என்பதே. இளையராஜாவின் அணியில் இருந்த மிகச்சிறந்த பாடகர் இவரே என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

தான் பாடிய எல்லா கிராமியப் பாடல்களிலும் கிராமிய உணர்வின் துடிப்பும் வண்ணங்களும் வெளிப்படுத்தினார் வாசுதேவன். மேற்கூறப்பட்ட பல பாடல்கள் மட்டுமல்லாமல் 'ஏறாத மலை மேல (முதல்மரியாதை), 'ஏத்தமய்யா ஏத்தம்' (நினைவே ஒரு சங்கீதம்), 'தாலாட்ட நான்
பிறந்தேன்' (தூறல் நின்னுபோச்சு), 'உன்னப்பார்த்த நேரம்' (அதிசயப்பிறவி), 'அரிசிகுத்தும் அக்காமகளே' (மண்வாசனை), 'சொக்குப்பொடி கக்கத்தில' (மாவீரன்), 'ஆப்பக்கடை அன்னக்கிளி' (பாயும் புலி) 'ஆளானும் ஆளு' (பாலைவனச் சோலை) போன்ற பல பாடல்களை அவர்
பாடியிருக்கும் விதத்தில் நாம் தமிழ்க் கிராமியப்பாடல்களின் துள்ளல்களையும் உணர்வுகளையும் துல்லியமாய் உணரமுடியும்.

சமீபத்தில் வெளிவந்த 'ஆளானாலும் ஆளு' பாடலின் வடிவத்தை கேட்கநேர்ந்தால் துள்ளலான கிராமியப்பாடல்களை அதன் இயல்பான
பாவங்களுடன் பாடுவதற்கு அசாதாரணமான பாடும் திறமைகொண்ட வாசுதேவன் போன்ற ஒரு பாடகன் வேண்டும் என்பது உறுதியாகிவிடும். மலேசியா போன்ற நவீன பிரதேசத்தில் வளர்ந்த ஒருவருக்கு தமிழ்நாட்டு கிராமியப்பாடல்களைப் பாடுவதில் இருந்த ஆற்றல் என்பது
ஆச்சரியமான ஒன்றே. சிறுவயதில் ரப்பர் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பாடிய சில கிராமியப்பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தும், சென்னை வந்தபிறகு கங்கை அமரனும், இளையராஜாவும் மதுரையின் வட்டார வழக்கையும் பாடல் வகைகளையும் சொல்லிக்கொடுத்தும் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். கூர்மையாக அவதானித்து கற்றுக்கொள்வதும் பாடப்படும் உணர்வின் ஜீவனுக்குள் அகழ்ந்து செல்லும் மேதமையும் அவரிடம் இயல்பாக இருந்தது என்பதே நிதர்சனமாகும்.

நாட்டுப்புறப் பாணியில் அமைந்த மென்மையான பாடல்களான 'பொன்மானைத் தேடி' (எங்க ஊர் ராசாத்தி), 'பட்டுவண்ண சேலைக்காரி (எங்கேயே கேட்ட குரல்), 'குயிலுக்கொரு நெறம் இருக்கு' (சொல்லத் துடிக்குது மனசு), 'ஆத்து மேட்டிலே' (கிராமத்து அத்தியாயம்), 'ஆகாயம் பூமி என்றும் ஒன்றா' (சாமந்திப்பூ), 'கம்மாக்கரை ஓரம்" (ராசாவே உன்னை நம்பி), 'பெத்து எடுத்தவதான்' (வேலைக்காரன்), 'தானந்தனா கும்மி கொட்டி' (அதிசயப்பிறவி), 'தென்கிழக்குச் சீமையில' (கிழக்குச்சீமையிலே), 'வெட்டிவேரு வாசம்' (முதல்
மரியாதை) போன்றவற்றில் வெளிப்படும் உணர்ச்சிகளின் உயரத்தை அவர்காலத்தைச் சேர்ந்த எந்த ஒரு பாடகராலும் நெருங்க முடிந்ததில்லை. உதாரணத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைப்பில் வந்த 'பட்டுவண்ண ரோசாவாம்' (கன்னிப்பருவத்திலே) பாடலையும் இளையராஜா இசையமைப்பில் எஸ் பி பி பாடிய 'உச்சி வகிர்ந்தெடுத்து' (ரோசாப்பூ ரவிக்கைக்காரி) பாடலையும் உன்னிப்பாகக் கேட்டுப்பாருங்கள். இரண்டு பாடல்களுமே ஒரே கிராமியப்பாடலின் மெட்டில் அமைந்திருந்தும், ஏறத்தாழ ஒரே வகையான் ஏக்க உணர்வுகளை கொண்டிருந்தும், பாடப்பட்டிருக்கும் பாவத்தை ஒப்பிட்டு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

தனக்குக் கிடைத்த குறைவான செவ்வியல் இசை அடிப்படையில் அமைந்த பாடல்களையும் மேலான ஆர்வத்துடன் அனாயாசமாக
பாடியிருக்கிறார் மலேசியா வாசுதேவன். ராஜரிஷி படத்தின் 'புயல் என எழுந்ததடா', 'சங்கரா சிவ சங்கரா' பாடல்களும், மாவீரன் படத்தின் 'அம்மா அம்மா', பாட்டுக்கு ஒரு தலைவன் படத்தின் 'இசையாலே நான் வசமாகிறேன்', ஒருவர் வாழும் ஆலயம் படத்தில், 'மலையோரம்
மயிலே', மணிப்பூர் மாமியார் படத்தில், 'ஆனந்த தேன்காற்று' (இதில் சி.எஸ்.ஜெயராமன் குரலைப் போல்), மருமகளே வாழ்க படத்தில் 'அல்ங்காரம் அபிஷேகம்', ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் 'கதிரவன் எழுந்தான்', கரும்பு வில் படத்தில், 'மலர்களிலே ஆராதனை', தணியாத
தாகம் படத்தில் 'பூவே நீ யார் சொல்லி' போன்ற பாடல்கள் எல்லாம் கர்நாடக இசையின் ராக அடிப்படையில் அமைந்தவையாகும்.
சற்றும் வலிந்து பாடாமல் சிறப்பாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் இப்பாடல்களை அவர். இவற்றில், ஏ.ஏ.ராஜ் இசையமைப்பில் 'பூவே நீ
யார் சொல்லி' பாடலின் 'பூவே' எனதொடங்கும் வார்த்தையின் முடிவில் வரும் சிறிய ஆனால் கடினமான சங்கதியை அனாயாசமாக
அவர் பாடியிருக்கும் விதம் அவரது பாடும் மேதமைக்கு சான்று.

உச்சக்குரலில் பாடும் பல பாடல்களை எவ்வித தடுமாற்றங்களும், வீழ்ச்சிகளும் இல்லாமலே வெளிப்படுத்தியிருக்கிறார். மேற்சொன்ன
ராஜரிஷி, மாவீரன் பாடல்களும், 'எழுகவே' (மாவீரன்), 'மனிதன் மனிதன்' (மனிதன்), 'ஒரு தென்றல் புயலாகி' (புதுமைப்பெண்), 'மாமாவுக்கு குடுமா' (புன்னகை மன்னன்) போன்ற இன்னும் பல பாடல்களும் அசாதாரணமான உச்சஸ்தாயியில் அமைந்த பாடல்கள் ஆகும். 'மாமாவுக்கு குடுமா குடுமா' ஒரு மிகச்சிறந்த நையாண்டிப் பாடல். அதன் ஒவ்வொரு அடியையும் மிகவும் உற்சாகமான தொனியில் அனுபவித்துப்
பாடியிருப்பார்.

மேற்கத்திய இசைப்பாணியில் அமைந்த பாடல்களை அற்புதமாக பாடுவதில் வல்லவராக இருந்தார் வாசுதேவன். வேறு யாரால் 'கோடைக் காலக் காற்றே' (பன்னீர் புஷ்பங்கள்), 'தேடினேன் புதியசுகம்' (சங்கர் லால்), 'இந்த மின்மினிக்கு' (சிகப்பு ரோஜாக்கள்), 'பாட்டு இங்கே'
(பூவிழி வாசலிலே), 'பருவ காலங்களின் நினைவு' (மூடுபனி), 'ஏய் மைனா' (மாவீரன்) போன்ற பாடல்களை, இந்திய பாணியின் சாயல்
துளி கூட இல்லாமல் இவ்வளவு துல்லியமாகப் பாடமுடியும்? 'தேடினேன்' பாடலில் கிஷோர் குமாரின் பாடும்முறையில் சிலசமயம் வருவது போன்ற துலக்கமான மேற்கத்திய இசையுணர்வை அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார். இது போன்ற பாடல்களைப் பாடும் முறையில்
வாசுதேவனின் ஆற்றலை மதிப்பிடுவதற்கு யேசுதாஸ் பாடிய 'லோல ராக காற்றே' என்ற மலையாளப் பாடலைக் கேட்கவேண்டும். இது
'கோடைக் காலக் காற்றே' பாடலின் மலையாள வடிவமாகும்!

இதயத்தில் ஓரு இடம் எனும் படத்தில் இடம்பெற்ற 'காலங்கள் மழைக்காலங்கள்' எனும் பாடலில் வலிமையான அவர் குரல் மென்மையான காதல் உணர்வை பரவச்செய்வதைக் கேட்டுணரலாம். 'கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல' (உனக்காகவே வாழ்கிறேன்) எனும் பாடல் கடினமான தாளக்கட்டில் அமைந்த ஒன்று, எனினும் அதை மிகவும் உணர்வுபூர்வமாகவும் மென்மையாகவும் அவர் பாடியிருக்கிறார். 'கண்ணத்தொறக்கனும் சாமி', 'வா வா வாத்தியாரே வா', 'நிலா காயுது' போன்ற பாடல்களில் காம உணர்வு அற்புதமாக வெளிப்பட்டிருக்கும். 'ஒரு தங்க ரதத்தில்' (தர்மயுத்தம்) பாடலில் சகோதர பாசத்தின் கதகதப்பை நாம் உணரமுடியும். 'அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா' (படம்- நன்டு) பாடலை அவர் பாடும் விதமும் அதில்னவர் வெளிப்படுத்தும் பாவங்களும் கஸல் மேதை மெஹ்தி
ஹஸனின் பாடும்முறைக்கு நிகரானது என்றே சொல்வேன்!

இன்றுபோய் நாளைவா படத்தில் 'பல நாள் ஆசை' பாடலில் வரும் "இது மாலை சூடும் நேரம், இனி காண்போம் ராஜயோகம்" என்ற
வரிகளை பாடியிருக்கும் விதத்தைக் கேட்கும் போது அது நம்மை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தும். தைப்பொங்கல் படத்தில் 'பனிவிழும் பூ
நிலவே' பாடல் அவர் பாடிய மிகச்சிறந்த காதற்பாடலில் ஒன்றாகும். ராக அடிப்படையில் அமைந்த 'மலர்களே நாத ஸ்வரங்கள்' (கிழக்கே போகும் ரயில்) பாடலில் முதல் வார்த்தையான "மலர்களே" என்பதை அவர் வெளிப்படுத்தியிருக்கும் விதமே அப்பாடலில் பலநாள் லயித்திருக்கப் போதுமானது. மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வந்த 'பேர் வச்சாலும் வைக்காமப் போனாலும்' பாடலை எப்போது கேட்டாலும் ஆனந்தமே. இப்பாடலில் சரணத்தில் வரும் 'மந்தாரைச் செடியோரம் கொஞ்சம் மல்லாந்து நெடுநேரம்' போன்ற இடங்களில் அசாதாரணமான ஒரு பாவத்தை தொட்டு வெளிப்படுத்தியிருப்பார். 'வெட்டி வேரு வாசம்' பாடலில் வரும் "வேருக்கு வாசம் உண்டோ மா..னே" எனும் வரிகளில் மா....னே என விளிக்கும் இடத்தில் வரும் உணர்ச்சியின் வெளிப்பாட்டின் அருகில் சாதாரணமாக எந்த ஒரு பாடகராலும் நெருங்கிச் செல்ல இயலாது.

முதல் மரியாதை படத்தில் இரண்டு வேறுவிதமான உணர்வுகள் ஒரே பாடலில் சங்கமிக்கும்படியாக அமைக்கப்பட்டிருந்த "பூங்காற்று
திரும்புமா" பாடல் உணர்ச்சி வெளிப்பாட்டின் உச்சத்தை தொட்ட அவரது மற்றுமொரு பாடல். ஒரே மெட்டிலும், இசையமைப்பிலும் அமைந்திருந்த அப்பாடல் ஆரம்பிக்கும் போது வரும் சோகமான மனநிலையிலிருந்து பாடலின் இறுதியில் சந்தோஷமான மனநிலைக்கு மாறும் ரசவாதம் நிகழ்ந்திருக்கும். பாடல் வரிகளாலும் வாசுதேவன் பாடும் முறையாலும் தான் அந்த மாற்றம் நிகழும். அதிசயப்பிறவி படத்திந் 'ஒன்னப் பார்த்த நேரம்' மற்றும் 'தானந்தன கும்மி கொட்டி' பாடல்கள் முழுதும் சந்தோஷம் பொங்கிப் பரவும். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவர் பாடிய ஒரே முக்கியமான பாடல் 'தென்கிழக்குச் சீமையிலே' மட்டுமே. சாதாரணமான மெல்லிசையில் அமைந்த ஒரு பாடலை திறன்மிக்க பாடகர் ஒருவரால் எவ்வளவு உச்சத்துக்கு கொண்டுபோக முடியும் என்பதற்கு முத்தான உதாரணம் இந்தப் பாடல்.
இதுபோன்ற நூற்றுக்கணக்கான உதாரணங்களைச் சொல்ல முடியும். மலேசியா வாசுதேவனின் பாடும் விதத்தைப் பற்றி விரிவாக
சொல்லவேண்டுமென்றால் ஒரு தனிப்புத்தகமே எழுத வேண்டி வரும்.

அவருக்கு மிகவும் தனித்துவமான குரல் இருந்தும் டி.எம்.எஸ் போலவும் மற்ற பாடகர்களைப் போலவும் நகலெடுத்து அற்புதமாகப் பாடுவார். ஆனால் அவரது தனிப் பாணியை மற்றவர்கள் நகல் செய்து பாடுவது மிகவும் கடினமான காரியம். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தற்போது பிரபலமாக இருக்கும் க்ரிஷ் என்ற பாடகர் "பூவே இளைய பூவே" பாடலை மலேசியா வாசுதேவன் முன்னிலையிலே மிகமோசமாக பாடுவதை காணநேர்ந்தது! நீங்கள் ஒரு பாடகராக இருந்தால், "கோடை காலக் காற்றே" பாடலில் மலேசியா வாசுதேவன் வெளிக்கொணர்ந்த அதே உணர்ச்சியோடு பாடிக்காட்டுங்கள் பார்க்கலாம்! யேசுதாஸால் கூட அது முடியவில்லை!

மலேசியா வாசுதேவன் ஒருபோதும் போலியான கச்சிதத்தையோ, செயற்கையான இனிமையையோ தனது பாடலில் உருவாக்குவதில்லை. அவருடைய சமகாலத்தைச் சேர்ந்த மற்ற சில பாடகர்களைப் போல வலிந்து பாடப்படும் சங்கதிகளையோ, பாடலின் இடையிடையே தேவையில்லாமல் முனகுவது, முக்குவது, சிரிப்பது, அழுவது போன்ற செயற்கைகளையோ நாடியதில்லை. பாடும்போது ஏற்படும் இயல்பான மனிதக் குறைகளை அவர் பொருட்படுத்தியதுமில்லை. ஆனால் பாடலின் உணர்ச்சிக்கேற்றவாறு இயல்பாக பாடிச்சென்று நுட்பமான உச்சத்துக்குச் செல்ல ஒருபோதும் தவறியதுமில்லை. மெஹ்தி ஹஸன், நுஸ்ரத் ஃபதே அலிகான், கிஷோர் குமார், முகம்மது ரஃபி, டி.ஆர்.மகாலிங்கம், ஏ.எம்.ராஜா போன்ற மகத்தான பாடகர்களின் பாடும் முறையும் இவ்வாறானதாகவே இருந்தது எனபதை நாம் கவனிக்க வேண்டும்.

தனது விருப்பமான பாடகர்களாக லதா மங்கேஷ்கர், முகம்மது ரஃபி, கிஷோர் குமார், டி.எம்.எஸ், திருச்சி லோகநாதன், பி.சுசீலா, எஸ்.ஜானகி, யேசுதாஸ் ஆகியோரைக் குறிப்பிட்டிருக்கிறார் மலேசியா வாசுதேவன். ஆனால் ஆண் அல்லது பெண் ஜோடிப் பாடல்களில் பெரும்பாலும் சேர்ந்து பாடுபவர்களை விட சிறப்பாக பாடியிருக்கிறார் வாசுதேவன். எஸ்.ஜானகியைத் தவிர மற்றவர்களால் பலசமயம் இவருக்கு இணையாகப் பொருந்திப் போக முடிந்ததில்லை. 'என்னம்மா கண்ணு' பாடலாகட்டும், 'நண்பனே எனது உயிர் நண்பனே' பாடலாகட்டும் அல்லது அவரது எந்த ஒரு ஆண் ஜோடிப்பாடலாக இருக்கட்டும், அடுத்த முறை கேட்கும் போது இரண்டு பேர்
பாடுவதையும் கூர்ந்து கவனியுங்கள், நான் இங்கு என்ன சொல்லவருகிறேன் என்பது நன்றாகப் புரியும்.

முன்சொன்னது போல தற்போது நிகழ்ந்து வரும் ரீமிக்ஸ் கலாச்சாரத்தில் இரக்கமேயில்லாமல் தாக்கப்பட்ட பாடகர் மலேசியா வாசுதேவன். 'வெத்தலையப் போட்டேண்டி', 'ஆளானாலும் ஆளு' பாடல்களின் உதாரணத்தையும் மேலே சொல்லியிருக்கிறேன். டி.இமானின் இசை 'அமைப்புத் தவறில்' 'என்னம்மா கண்ணு' பாடலை எப்படி படுகொலை செய்திருந்தனர் என்பதை நாம் எல்லாரும் அறிவோம். தற்போதைய இளைய தலைமுறைப் பாடகர்களுக்கு இசை என்பது சுரங்களின் தொகுப்பு மட்டுமே என்றாகிவிட்டது போல் தோன்றுகிறது!

என்னை மிகவும் வருந்தியழவைத்தை கொடூரமான ரீமிக்ஸ் "தண்ணி கறுத்திருச்சி" பாடல்தான். பாடகனே அல்லாத சிம்பு அற்புதமான அந்தப்பாடலை கடைசித் துணுக்கு வரை கொத்திக் குதறியிருந்தார். இந்த புதிய தலைமுறை குப்பையர்கள் (junkies) எப்போதைக்குமான அந்த அர்புதப் பாடலை வன்புணர்ந்து கொலைசெய்து விட்டது போல் உணர்ந்தேன். எரியிற நெருப்பில் எண்ணெயூற்றுவது போல இடையிடையே மலேசியா வாசுதேவனின் குரலையும் அசல் பாடலிலிருந்து வெட்டி, ஒலிக்குறிப்பை மாற்றி கோரமாக ஒலிக்க ஒட்டியிருக்கின்றனர். 'ஆசை நூறுவகை' ரீமிக்ஸ் பாடலில் யுவன் சங்கர் ராஜாவும் மலேசியாவின் குரலை தனது தந்தையின் களஞ்சியத்திலிருந்து எடுத்து பயன்படுத்தியிருக்கிறார். நவீனம் என்ற பெயரில் கடந்த காலத்தின் இசைப்போக்குகளையே மாற்றியமைத்த பல பாடல்களின் மீது வெட்கங்கெட்ட வகையில் இந்த ரீமிக்ஸ் அநீதி இழைக்கப்பட்டுகொண்டேயிருக்கிறது!

சாமந்திப்பூ, இதோ வருகிறேன், பாக்கு வெத்தல, கொலுசு, உறவுகள் மற்றும் ஆயிரம் கைகள் போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் வாசுதேவன். இவற்றிலிருந்து சாமந்திப்பூ படத்தின் மூன்று பாடல்கள் மட்டுமே எனக்குக் கிடைத்து. இவற்றை வைத்து அவரது இசையமைக்கும் ஆற்றலை மதிப்பிட்டால், அவரை சிறந்ததொரு இசையமைப்பாளராகவே மதிப்பிடுவேன். ஏற்கனவே குறிப்பிட்ட "ஆகாயம் பூமி இரண்டும் ஒன்றா" என்ற பாடலை அவரே பாடியிருக்கின்றார். "மாலை வேளை." பாடலை எஸ் பி பியும், "கனவுகளே ஊர்கோலம் எங்கே" பாடலை எஸ்.ஜானகியும் பாடியிருக்கிறார்கள். மூன்றுமே அற்புதமான மெல்லிசைப் பாடல்கள். ஏறத்தாழ 85 படங்களில் நடிகராகவும் தோன்றியிருக்கிறார் வாசுதேவன். ஆனால் பாடகர் மலேசியா வாசுதேவன் தான் எட்டாத உயரத்தில் நிற்கிறார்.

தமிழ்ச்சினிமா இசையின் போக்குகள் மாறத்தொடங்கிய பின்னர், அவருக்கு பாடும் வாய்ப்புகளும் குறைந்துவிட்டன. இந்த பின்னணியில்1989ம் ஆண்டு "நீ சிரித்தால் தீபாவளி" என்ற படத்தை அவர் தயாரித்தார். அப்படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. சொந்த வீடு உட்பட எல்லா பணத்தையும் இழந்தார். அதன்பின்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில பாடல்களைப் பாடினார். அதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் "தென்கிழக்குச் சீமையிலே" பாடலும் அடங்கும். 1997ல் வந்த ரஹ்மானின் மின்சாரக் கனவு படத்தில் 'பூ பூக்கும் ஓசை' என்ற பாடலில் 'ஹில்கோரே... ஹில்கோரே' என்று அவரை கத்த வைத்ததையும் நாம் கேட்டோம்! அதற்க்குப் பிறகு அவரைப் பற்றி
அதிகம் நாம் கேள்விப்படவேயில்லை.

ஒரு பேட்டியின் போது "எனது காலத்தின் எல்லா இசையமைப்பாளர்களையும் நான் மிகவும் மதிக்கிறேன், ஆனால் வாய்ப்புக்காக அவர்களிடம் சென்றதில்லை. பிறருடைய வாய்ப்புகளைத் தள்ளிவிட்டு எனக்கு கிடைக்கவேண்டும் என்றும் நினைத்ததுமில்லை. யாரிடமும் எதையும் எதிர்பார்த்ததில்லை அதனால் வருத்தங்களும் இல்லை" என்று குறிப்பிட்டார். "ஒன்றிரண்டு பாடல்கள் சினிமாவில் பாடிவிட்டால் போதும் என்ற கனவோடுதான் இந்தியா வந்திறங்கினேன். ஆனால் ஏறத்தாழ ஐயாயிரம் பாடல்களைப் பாடிவிட்டேன். வெற்றி, புகழ், பணம் எல்லாம் பார்த்து விட்டேன். அதனால் வருத்தங்களோ வழக்குகளோ இல்லை. எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறவில்லையே என்ற குறை உணர்ச்சி எனக்கில்லை, பழனி மலையில் ஏறியிருக்கிறேன் என்ற நிறை தான் இருக்கிறது. அதுவே போதும். இவ்வாழ்வில் பெருமைப்படுவதற்கும் பெரிதாய் ஒன்றுமில்லை, வருத்தப்படுவதற்கும் ஒன்றுமில்லை. வாழ்க்கை போய்க்கொண்டேயிருக்கிறது. என்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து திருப்தியடையும் ஆள்தான் நான்." என்று அவர் சொன்னார்.

"பாடல்பதிவுக்காகவோ, மேடை நிகழ்ச்சிகளுக்காகவோ தரப்படும் பணத்தை நான் ஒருபோதும் எண்ணிப் பார்த்ததே இல்லை. மனிதர்களை நம்பினேன். சிலர் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக இருந்தார்கள், பலர் அப்படி இல்லை" என்றும் குறிப்பிட்டிருந்தார். பிரகு மேடை நிகழ்ச்சிகளையே வாழ்வின் இருப்பிற்காக நம்பி இருந்த காலத்தில் கூட சுத்தமாக பணமே வாங்காமல் அல்லது அரைகுறையாக வாங்கிக் கொண்டு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்!

2003 ஆம் ஆண்டில் மேடைநிகழ்ச்சிகளுக்காக மலேசியாவில் இருந்தபோது மூளையில் ஏர்பட்ட கோளாறினால் கடுமையான பக்கவாதத்தால் தாக்கப்பட்டு அவரது உடம்பு செயலிழந்தது. சினிமாத் துறையினரிடமிருந்து எஸ் பி பாலசுப்ரமணியத்தையும் கங்கை அமரனையும் தவிர ஆதரவான எந்த ஒரு குரலும் அவரை அழைக்கவே இல்லை. எந்தத் துறையில் பல பதிற்றாண்டுகள் பணியாற்றி அங்கு பலருக்கும் உதவி செய்திருக்கிறாரோ, அங்கிருந்து நலம் விசாரிக்கக் கூட எவரும் இல்லை. புகழின் உச்சியில் இருந்தபோது அவர் வீடு எப்போதும் விருந்தினர்கள், உறவினர்கள், ரசிகர்கள் என நிரம்பியிருக்கும். ஆனால் அவர் பொருளாதார ரீதியில் விழுந்து, புகழின் இறங்குமுகத்தில் இருந்தபோது எல்லோரும் மாயமாய் மறைந்துவிட்டிருந்தனர். அவரது உடல்நலமும் பாதிக்கப்பட்ட போது முற்றிலுமாக அவரைப் புறக்கணித்து தனிமையில் விட்டனர். மலேசியா வாசுதேவன் என்ற உச்சநட்சத்திரப் பாடகர் மறக்கப்பட்ட ஒருவராக ஆகிவிட்டார். அவரைப் பற்றி எந்தச் செய்தியும் இல்லாத நிலையில் அவரது ரசிகர்களும் கூட அவரைப் பற்றிச் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்கள்.

ஒருவழியாக கைவசம் இருந்த எல்லாச் செல்வங்களையும் செலவு செய்து கொஞ்சம் நலத்திற்கு மீண்டுவந்து அவ்வப்போது ஓரிரு மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வாழ்வு நகர்ந்தது. துரதிருஷ்டவசமாக மீண்டும் 2008 லும், 2009 லும் மீண்டும் நோயின் தாக்குதலுக்கு ஆளானார். நடக்கவோ, பேசவோ இயலாத நிலைக்கு தள்ளப்பட்டார். மாதக்கணக்கில் அவசர சிகிச்சைப் பிரிவிலேயே இருந்தார். தொடர்ந்த சிகிச்சை மற்றும் உடர் பயிற்சியின் காரணமாக சிரமத்துடன் நடக்கவும், சிரமமில்லாமல் பேசவும் முடிகிறது இப்போது. இடது கை மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சிறிய வரியைக்கூட, ஒரு சுரத்தைக் கூட அவரால் இப்போது பாட முடியவில்லை.

தன் வாழ்க்கையே இசைக்கு அர்ப்பணித்த ஒரு மகத்தான பாடகனுக்கு இதைவிட என்ன பெரிய துயரம் நிகழ முடியும்? உயர் சிகிச்சைகள் மீண்டும் நலத்தை கொண்டுவரக்கூடும். ஆனால் எப்படி? இதுவே அவர் தர்போது கேட்டுக் கொள்ளும் கேள்வியாக இருக்கும் எனப்படுகிறது.
நவீன தமிழ் சினிமா இசையின் மிகவும் அபூர்வமான பாடகர்.. மிதமிஞ்சிச் செல்லாத உணர்ச்சிகளோடும், இசையின் மீதான தீராத வேட்கையுடனும் ஆச்சரியகரமான முறையில் தனது பாடல்களை வெளிப்படுத்திய பாடகர்... திரைப்படப்பாடல்களைக் கேட்டுக்கொண்டே இருக்கும் நமது கலாச்சாரத்தில் எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர்... மலேசியா வாசுதேவன். அவரது இசையும் வாழ்வும் இதுவே...

எல்லோரும் பொறந்தோம்
ஒண்ணாக வளர்ந்தோம்
என்ன கொண்டு போகப்போறோம்?
கடைசியில எங்கே கொண்டு வைக்கப்போறோம்?

இது அகல்விளக்கு படத்தில் அவர் பாடிய பாடல் வரிகள்...

நன்றி : சாஜி

Saturday, February 19, 2011

Solidaritet



 Solidaritet

-Troels Ravn- ( Folketingskandidat -S)

Forargelse, bekymring og overraskelse var nogle af de følelser, mange danskere sad tilbage med efter at have set programmet Kontant på DR i sidste uge. To kvinder fortalte deres historie om, hvordan de som sygemeldte fra arbejdsmarkedet, efter 52 uger, har mistet retten til sygedagpenge.
Nu kan beskæftigelsesminister Inger Støjberg (V), og kommunerne så skælde ud på hinanden og diskutere, hvem der har fejlet, mens to fortvivlede kvinder må se deres privatøkonomi blive smadret. Det er ikke værdigt. Efter min mening burde de omtalte kvinder have ret til en midlertidig førtidspension, indtil deres sag er endelig afklaret.
Vi må også råbe vagt i gevær overfor følgerne at den arbejdsmarkedspolitik, som den borgerlige regering og DF fører. Starthjælp, 300 timers reglen, 52 ugers reglen og halvering af dagpengeperioden fra 4 til 2 år, betyder nemlig, at mange mennesker i det danske samfund kastes ud i et personligt og økonomisk kaos. I dagens Danmark er det således blevet muligt på ét år at gå fra at være fuld beskæftiget på arbejdsmarkedet til at være på kontanthjælp. Hvis uheldet er ude.
I deres noget mærkværdige forståelse af begrebet solidaritet, tror Løkke, Hjort Frederiksen og Støjberg, at man kan piske syge og ledige tilbage til arbejdet. En både usympatisk og menneskefjendsk politik. De borgerlige mener, at den bedste vej tilbage til arbejdsmarkedet altid er den hurtigste vej. Jeg mener, vi skal sadle om. Ledige kommer ikke i arbejde af at miste dagpenge. Der skal jobs til. Og syge mennesker, der er havnet i et lovmæssigt hul, bliver ikke raske af at miste deres økonomiske grundlag. Vi skal derimod tage udgangspunkt i det enkelte menneskes situation og yde en langt mere helhedsorienteret indsats, når skaden er sket.
I Danmark hylder vi begrebet sammenhængskraft. Det betyder, at vi ikke ønsker mennesker går til grunde. Vi vil det gode i livet, og vi vil et stærkt fællesskab, hvor mennesker og samfund træder til, hvis ulykken er ude. Se, det er solidaritet.

Thursday, February 17, 2011

அறிவித்தல்

நாடக ஆர்வலர்களுக்கு

நாடக ஆர்வலர்களுக்கு ஒரு அறிவித்தல் தர்மசிறி பண்டாரநாயக்கவின் நெறியாள்கையில் சோவியத் ரஷ்ய நாடகமான'மகராக்ஷ்சயா' 19/02/2011 சனிக்கிழமை பி.ப. 4:30 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் அரங்கேறுகிறது. இவ்வருடம் ஜனவரி மாதம் நடைபெற்ற இந்திய தேசிய நாடகவிழாவில் மேடையேற்றப்பட்டது இந்நாடகம்.

பிரவேசம்: இலவசம்.

Tuesday, February 08, 2011

உயிர் நிழல்

 உயிர் நிழல் 33வது இதழ் வெளிவந்து விட்டது 
-சு. குணேஸ்வரன்-


லஷ்மி. ந. சுசீந்திரன் ஆகியோரைத் தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு பிரான்சிலிருந்து வெளிவரும் புகலிடச் சிற்றிதழாகிய உயிர்நிழலின் ஜனவரி 2011 இதழ் வெளியாகியுள்ளது.
கவிதைகள், கட்டுரைகள், புனைவு, நேர்காணல்கள், எதிர்வினைகள், ஆகியவற்றுடன் மிகக் கனதியான இதழாக மிளிர்கிறது. உலக சினிமா மற்றும் அரசியல் சார்ந்த ஆழமான கட்டுரைகள் சிந்தனையைத் தூண்டக் கூடியனவாகவுள்ளன.

றிஸ்மினி, விசா, துவாரகன், பைசால், எம்.றிஷான் ஷெரீப், மருதம் கேதீஸ், பாலைநகர் ஜிப்ரி ஹஸன் ஆகியோரின் கவிதைகள் இதழை அலங்கரிக்கின்றன.
சிங்களத்தினூடாக சந்தியா எக்னெலிகொட, ஆங்கிலத்தினூடாக மாயா அஞ்சலோ ஆகியோருடனான உரையாடல்களுடன்; காலம் இதழில் வெளியாகிய து. குலசிங்கத்தின் உரையாடலும் திருத்தங்களுடன் மீளவும் இவ்விதழில் பிரசுரமாகியுள்ளன.

எடுவர்டோ கலேயனோ, ரதன், வி.சிவலிங்கம், கலையரசன், சார்ள்ஸ் சர்வன், உபாலி கூரே, எம். ரிஷான் ஷெரீப், பப்ரிஸ் ஹேர்விய வனே, சுல்பிகா, ஜோர்ஜ் குருஷ்சேவ் ஆகியோரின் கட்டுரைகள் உள்ளன.

இவற்றில் அற்றம் எகோயன் ‘உலக சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை’ என்ற ரதனின் கட்டுரை மிக விரிவான ஒரு பதிவாக உள்ளது. அத்தோடு அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச எழுத்தாளர் விழாவிலும் காட்சிப்படுத்தப்பட்ட பிரதீபனின் ‘நிசப்தத்தின் நிழல்’ SHADOW OF SILENCE குறும்படம் பற்றிய ஆழமாக கட்டுரையொன்றினை சார்ள்ஸ் சரவணன் எழுதியுள்ளார்.

இவை தவிர ச. இராகவனின் புனைவும், நந்தினி சேவியர், த. மலர்ச்செல்வன் ஆகியோரின் எதிர்வினைகளும் உள்ளடங்கியுள்ளன.

Sunday, February 06, 2011

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில்

இலக்கியக் களம்" நிகழ்ச்சியில் 'டானியல் நினைவலைகள்
-வி.ரி.இளங்கோவன்- 
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கடந்த 14-ம் திகதி வெள்ளிக்கிழமை (14 - 01 - 2011) மாலை இடம்பெற்ற 'இலக்கியக் களம்" நிகழ்ச்சியில் 'டானியல் நினைவலைகள்;" என்ற தலைப்பில்   எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் (பிரான்ஸ்) நிகழ்த்திய உரையின் சுருக்கம். 'ஞானம்" சஞ்சிகை ஆசிரியர் டாக்டர் தி. ஞானசேகரன் இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்தார்.
டானியல் யார்? என்ன அவர் சாதனை? அவரை  இன்றும் நினைத்துக்கொள்ள, அவர் என்ன செய்துவிட்டார்?
டானியல் ஓர் அற்புதமான மனிதர் - கலைஞர் - மனிதாபிமானி - எல்லாவற்றுக்கும்மேலாய் தமிழில் ஓர் அருமையான படைப்பாளி - நாவலாசிரியர் - சமூக விடுதலைப் போராளி - தடம்புரளாத அரசியல்வாதி.
ஈழத்தமிழர் மத்தியில் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் பிறந்து வறுமையோடு தவழ்ந்து, சமூகக் கொடுமைகளுக்கு முகங்கொடுத்து, கடுமையாகப் போராடி, ஒடுக்கப்பட்ட மக்களின் தளைகளை அறுத்தெறிந்து அவர்களைச் சகமனிதர்களுடன் சமானமாக நிலைநிறுத்துவதற்குத் தன் உடல் பொருள் ஆவி என அத்தனையையும் அர்ப்பணித்துப் பணியாற்றியவர் தான் டானியல்.
என் இளமைக் காலத்தில் என் சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்திச் சரியான சமூகப் பார்வையுடன் பேனா பிடிக்க        வழிகாட்டியவர்களில் முக்கியமானவர் கே. டானியல். சுமார் பதினான்கு ஆண்டுகள் அவரோடு    இணைந்து பணியாற்றியதும், அவரது இறுதி மூச்சு பிரியும் வேளையுpலும் உடனிருந்து உதவியதும் என்னால் மறக்க முடியாதனவாகும்.
தலித் இலக்கியம் தற்போது தமிழ் இலக்கியப் பரப்பில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. விவாதிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்த   நாடுகளிலும் நம்மவர் மத்தியில் இதுகுறித்து சர்ச்சைகள் நோக்குகள் கூர்மையடைந்து விவாதத்திற்குரியனவாகின்றன. தலித் இலக்கியப் பிதாமகர், முன்னோடி எனத் தமிழக விமர்சகர்களாலும்  ஈழத்து இலக்கியக்காரர்  பலராலும் டானியல் விதந்துரைக்கப்படுகிறார். இதில் ஒரு விடயம் சுலபமாக மறக்கடிக்கப்படுவதாகத் தெரிகிறது.
டானியல் ஒடுக்கப்பட்ட மக்களில் அடிமட்டச் சமூகத்தில் பிறந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே போராடியவர், எழுதியவர் என்பதாக மட்டுமே உணர்த்தப்படுகிறது. அவரது பொதுவுடமைக் கட்சிப் பணி மறைக்கப்படுவதாக    எண்ணத் தோன்றுகிறது. டானியல் இன்று உயிருடன் இருந்தால் நிச்சயமாக இத்தகைய பார்வையை ஏற்றுக்கொள்ளமாட்டார்.
டானியல் பொதுவுடமைக் கட்சியின் தொடர்பு காரணமாகவே சமூகப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியவர்.  பொதுவுடமைக் கட்சியினை    வடபகுதிக்கு அறிமுகஞ்செய்து மக்கள் மத்தியில் பரவலாக்கி இறுதிவரை அதற்காகவே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர் தோழர் மு. கார்த்திகேசன். அவரது தொடர்பு டானியலைப் பொதுவுடமை அரசியல் ரீதியாகவும், எழுத்துத்துறையிலும் வளப்படுத்தியது எனலாம்.
இளமைக் காலத்தில் வறுமையில் துவண்டபோதிலும், திருமணத்தின் பின்பும் வறுமையும், இடர்பாடுகளும் வாட்டிவதைத்தபோதிலும் அவர் கட்சிப் பணிகளிலிருந்து தன்னை ஒதுக்கிக்கொண்டவரல்ல. பொதுவுடமைக்கட்சியினது வடபிரதேசக் கிளையின் முழுநேரச் செயற்பாட்டாளராகப் பல வருடங்கள் பணியாற்றிவர் டானியல்;.
60-களின் நடுப்பகுதியில் சர்வதேசரீதியாகப் பொதுவுடமை இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு இலங்கையிலும் எதிரொலித்தது. இதன் காரணமாகச் சோவியத்சார்பு, சீனச்சார்பு எனப் பிளவு இலங்கைப்  பொதுவுடமை இயக்கத்திலும் ஏற்பட்டது. பெரும்பாலான உழைக்கும் மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், கலை இலக்கியவாதிகள் தோழர் என். சண்முகதாசன் தலைமையிலான சீனச்சார்பு கட்சியினை ஆதரித்தனர். டானியலும் தோழர் சண் பாதையிலேயே இயங்கியவர்,
1971-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விஜயவீரா தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியினர் தொடங்கிய கிளர்ச்சியினால் பொதுவுடமைக்கட்சி (சீனச் சார்பு) பல பின்னடைவுகளை, அடக்குமுறைகளை, சீர்குலைவுகளை எதிர்கொண்டது. முன்னணித் தலைவர்கள் பலரும் சிறையிடப்பட்டனர். டானியலும் சுமார் ஒரு வருடம் சிறையிடபட்டார். நீரிழிவு நோயாளியான அவர் பல வேதனைகளை சிறையில் அனுபவித்தார். சந்தர்ப்பவாதிகளால் கட்சியில் பிளவுகள் ஏற்பட்டபோதிலும் நேர்மைமிக்க தலைவரான தோழர் சண்முகதாசனின்  ;பாதையிலேயே டானியல் இறுதிவரை செயற்பட்டார்.
1979-ம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் பிரமாண்டமான முழுநாள் மாநாடு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளால் மண்டபம் நிரம்பி வழிந்தது. இம்மாநாட்டின் வெற்றிக்காக இரவுபகலாக டானியல் இயங்கியதை யான் அறிவேன். தோழர் சண் வாழ்த்துச்செய்தி அனுப்பியிருந்தார். டானியல், எஸ். ரி. என். நாகரத்தினம், கே. கிருஸ்ணபிள்ளை ஆகியோர் சிறப்புரையாற்றினர். பேராசிரியர் நந்தி, பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன், லைஞர் சிசு நாகேந்தரா, கலைஞர் குத்துவிளக்கு பேரம்பலம் உட்படப் பல கலை இலக்கியவாதிகள் மாநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.
ஷஎனக்கு ஓர் அரசியல் பாதை உண்டு. அதற்கு உந்துசக்தியாகவே எனது படைப்புகளைத் தருகிறேன்| என டானியல் சொல்வதுண்டு. டானியல் அரசியல் செயற்பாட்டாளர். சமூக விடுதலைப் போராளி. எழுத்தாளர். பேச்சாளர். ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அந்த வடிவத்தை அடையாளம் கண்டு எதிர்க்கின்ற பக்குவமும் துணிவும் ஆற்றலும் டானியலுக்கு இருந்தது. அதனால் யாழ் குடாநாட்டில் எந்தக் குக்கிராமத்தில் வாழும் மனிதனும் தனக்குச் சாதியின் பெயரால் அல்லது ஏதாவது வகையில் ஒடுக்குதல் - நெருக்கடி ஏற்பட்டால் அதற்கான பரிகாரம்தேடி ஆலோசனைபெற, ஆதரவுபெற டானியலைத்தேடி வருவதை  யான் பல வருடங்களாகப் பார்த்திருக்கிறேன். அந்தவகையில் ஒடுக்கப்பட்ட மக்களின் மனதில் நிறைந்த ஒரு மனிதனாக டானியல் விளங்கினார். அவரது செயற்பாடுகளுக்கு பேருதவியாகக் கட்சித் தோழர்கள் இருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சமூக குறைபாடுகள் ஒழிப்புச் சட்டத்தை அமுல்படுத்தக்கோரி 1966-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ம் திகதி சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட வரலாற்றுப் புகழ்மிக்க அந்த ஊர்வலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுடன் முற்போக்கு எண்ணங்கொண்ட சகல மக்களும் - முஸ்லீம் மக்களுட்படக் கலந்துகொண்டனர். பொலிசாரின் தாக்குதலுக்குள்ளாகியும் நிலைகுலையாத ஊர்வலம் யாழ்நகர் நோக்கிச்சென்றது. இந்த ஊர்வலத்திற்குத் தலைமை கொடுத்துச் சென்றவர்களில் டானியலும் ஒருவர்.
இதன் பின்னரே தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் உதயமானது. இது ஒரு சாதிச்சங்கம் அல்ல. சாதியத்தையும் தீண்டாமையையும் எதிர்த்துநின்ற சகல முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைத்த ஒரு பரந்த வெகுஜன இயக்கமாகவே முன்னெடுக்கப்பட்டது. பல வெற்றிகளைக் கண்டது. கட்சி தென்னிலங்கை முற்போக்கு சக்திகளின் ஆதரவைப் பெற்றுக்கொடுத்தது. அன்று இலங்கைப் பாராளுமன்றம் முதல் சீன வானொலிவரை இந்த இயக்கத்தின் செயற்பாடுகள் பேசப்பட்டன. குடாநாட்டின் இருண்ட பகுதிகளுக்குள் வெளிச்சம் பாய்ச்சப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்தச் செயற்பாடுகள் அத்தனையிலும் டானியலின் பங்களிப்பு முக்கியமானது.
தலித்துகள் மட்டும் தான் தலித்துகளுக்காகப் போராடவேண்டும் என்ற சிலரது கூற்று சரியானதல்ல. வடபகுதியில் அன்று நடந்த தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராட்டம் அத்தகைய கருத்தைக் கொடுக்கவில்லை. அது தோழர் சண்முகதாசன் தலைமையிலான பொதுவுடமைக் கட்சியின் பூரண ஆதரவுடன் சகல முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைத்து நடைபெற்றது. பல்வேறு கலை இலக்கியப் படைப்பாளிகள் இதற்கு உறுதுணையாகச் செயற்பட்டார்கள். பேராசிரியர் கைலாசபதி, பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன், முருகையன், இளங்கீரன், அம்பலத்தாடிகள் குழுவினர் மற்றும் இளந்தலைமுறையைச் சேர்ந்த பல கலை இலக்கியப் படைபாளிகள் தலித்துகள் அல்ல. ஆனால் அவர்கள் உறுதுணையாகச் செயற்பட்ட மார்க்ஸிசவாதிகள்.
இலங்கையில் ஈழகேசரி, மறுமலர்ச்சி மற்றும் வீரகேசரி, தினகரன் ஆகியவற்றில் எழுதத்தொடங்கிய டானியல் தமிழ்நாட்டில் வெளிவந்த சிறந்த இலக்கிய இதழான சரஸ்வதியிலும் தம் படைப்புகளை வெளியிட்டார். சரஸ்வதியின் மிக முக்கியமான மூன்று படைப்பாளிகளில் ஒருவராய் ஜெயகாந்தன், சுந்தரராமசாமி ஆகியோருடன் இலங்கை எழுத்தில் முதற் படைப்பாளியாய் சரஸ்வதியில் தொடர்ந்து சிறுகதைகளைப் படைத்தாரெனப் பிரபல எழுத்தாளர் தஞ்சைப் ப்ரகா~; குறிப்பிட்டுள்ளார். சரஸ்வதி இதழில் டானியலின் உருவம் முகப்புப் புகைப்படமாய் அட்டையில் 1951-ல் பிரசுரம் செய்யப்பட்டு பாராட்டப்பட்டார்.
அத்துடன் ப. ஜீவானந்தம் அவர்களை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த தாமரை கலை இலக்கிய ஏட்டிலும் எழுதினார்.
டானியல் கதைகள் (சிறுகதைத் தொகுதி) பஞ்சமர் - நாவல் இருபாகங்கள்) உலகங்கள் வெல்லப்படுகின்றன (சிறுகதைத் தொகுதி) போராளிகள் காத்திருக்கின்றனர் - நாவல், இலங்கையிலிருந்து ஓர் இலக்கியக் குரல் - பேட்டி, மற்றும் கோவிந்தன், அடிமைகள், கானல், தண்ணீர், பஞ்சகோணங்கள் ஆகிய பஞ்சமர் வரிசை நாவல்கள், நெடுந்தூரம், மையக்குறி, முருங்கையிலைக் கஞ்சி, பூமரங்கள், சா நிழல் ஆகிய குறுநாவல்கள், என் கதை - கட்டுரை என்பன நூலுருவில் வெளிவந்த டானியலின் படைப்புகளாகும்.
டானியலின் படைப்புகள் ஜப்பான், இந்தியா, இலங்கை பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு ஆய்வுக்குள்ளாக்கப்படுகின்றன. டானியலின் படைப்புகளை ஆய்வுசெய்து பண்டிதர் செ. திருநாவுக்கரசு உட்படப் பலர் கலாநிதிப் பட்டங்களையும், முதுகலைமாணிப் பட்டங்களையும் பெற்றுள்ளனர்,
1981-ம் ஆண்டு சென்னை கிறிஸ்தவ இலக்கிய சபை (சி. எல். எஸ்) சாதியமும் வறுமையும் என்ற பொருளில் நடாத்திய கருத்தரங்கில் டானியலின் பஞ்சமர் நாவல் (முதலாம் பாகம்) தனிஅமர்வில் ஆய்வுக்கெடுத்துக்கொள்ளப்பட்டது, பேராசிரியர் கா. சிவத்தம்பி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யான் டானியலின் படைப்புகள் குறித்து கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றினேன். டானியல் தனது அனுபவங்கள் - படைப்புகள் குறித்துச் சிறப்புரையாற்றினார்.
டானியலின் படைப்புகளில் குடாநாட்டின் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேற்பட்ட பகுதியின் வரலாற்று ஓட்டத்தைச் சமூக நகர்வைக் கவனிக்கலாம். குடாநாட்டின் யாரும் காட்டியிராத இருண்ட பகுதிகளை வெளிச்சம் போட்டுக்காட்டியவர் டானியல். இதனால் தானோ சிலருக்கு அவர் வேண்டாதவராக ஒதுக்கப்படவேண்டியவராகத் தென்பட்டார் போலும்... அவரை ஒழித்துக்கட்டவும் பல முயற்சிகள் நடந்ததுண்டு. அவரோடு பல இடங்களுக்கும் சென்றுவந்தபோது இத்தகைய ஒருசில நடவடிக்கைகளை என்னாலும் உணர்ந்துகொள்ள முடிந்தது.
சிறை வாசத்தையும், பல மாதங்கள் தலைமறைவு வாழ்க்கையையும் கண்டவர்.
1981-ம் ஆண்டு தமிழகம் சென்றபோது தஞ்சைப் ப்ரகா~pன் அழைப்பின்பேரில் தஞ்சை சென்றதும் அவர் பார்க்க விரும்பியது உயர்ந்த கோவில்களோ, அரண்மனைகளோ பெரிய மனிதர்களென இருந்தவர்களையோ அல்ல. கீழ்வெண்மணியில் உயிருடன் கொளுத்தப்பட்ட ஏழைமக்களின் நினைவிடத்தைத் தான் பார்க்க விரும்பினார். தஞ்சைப் ப்ரகா~;, எழுத்தாளர் சி. எம். முத்து ஆகியோருடன் அங்கு சென்று பார்த்தோம். பலமணி நேரம் அங்குள்ள நசுக்கி ஒடுக்கப்பட்ட கிராமத்து மக்களைச் சந்தித்து அவர் பேசியமை இன்றும் எனக்கு ஞாபகம்.
இறுதிக் காலத்தில் கண்பார்வை குன்றிவந்த நிலையில் நீரிழிவு நோய்க்கு வைத்திய சிகிச்சை பெறும்பொருட்டு;ம் கானல், பஞ்சகோணங்கள் நாவல்களை அச்சேற்றும் பொருட்டும் பேராசிரியர் அ. மார்க்ஸ் மற்றும் தோழமை பதிப்பகத் தோழர்களின் அழைப்பின்பேரில் தமிழகம் செல்ல முடிவெடுத்தார். தமிழகம் செல்லும் முன்னர் கொழும்பில் தோழர் சண் வீட்டில் தங்கியிருந்து பல்வேறு விடயங்கள் குறித்து உரையாடினார். பஞ்சகோணங்கள் நாவல் குறித்து தோழர் சண் குறிப்பிட்ட விடயங்களையும் கவனத்திலெடுத்துக்கொண்டார்.
உடல்நலம் குன்றிய நிலையிலிருந்த அவரை 30- 01 - 1986-ல் தமிழகம் அழைத்துச் சென்றேன். நீரிழிவு நோயின் முதிர்நிலைப் பாதிப்புகள் அவரை வாட்டின. தோழர்களின் ஏற்பாட்டின்படி சிகிச்சைகள் நடந்தன. உடனிருந்து கவனித்து வந்தேன்.
உடல்நிலையைப் பாராது பல்வேறு இடங்களுக்கும் சென்று தோழர்களைச் சந்திக்க ஆவலாயிருந்தார். திருச்சி, தஞ்சை, சென்னை, மதுரை, பாண்டிச்சேரி, கும்பகோணம் ஆகிய இடங்களுக்குச் சென்றோம். கூட்டங்களில் உரையாற்றினார். பலரையும் சந்தித்து உரையாடினார்.
தஞ்சை தங்கசாரதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டானியலுக்கு 23 - 03 - 86 காலை 8. 30 மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டார். டாக்டர்களும் தாதிமாரும் உடனின்று சிகிச்சையளித்தனர். எனது கையைப் பற்றிப்பிடித்தவாறு தம்பி.... தம்பி....| என ஏதோ சொல்ல விழைந்த முடியாத நிலையில் அவரது உயிர் பிரிந்தது. இந்நிகழ்வு என்மனதில் என்றுமே மறக்கமுடியாத வேதனைப் பதிவாகிவிட்டது.
படைப்பாளிகளை மிகவும் நேசித்தவர் டானியல். இளம் எழுத்தாளர்களை அரவணைத்து வழிப்படுத்தியவர். பலருக்கு விளம்பரமின்றி நல்ல உதவிகள் செய்துள்ளதை என்னால் அறியமுடிந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் படைப்பாளிகளை வரவேற்று உபசரித்தவர். இதனை எழுத்தாளர்கள் வ. அ. இராசரத்தினம், லெ. முருகபூபதி, அந்தனி ஜீவா ஆகியோருட்படப் பலர் டானியல் காலமாகியதை அறிந்ததும் கண்ணீர் சிந்த எழுதியுள்ள பதிவுகளில் காணலாம்.
இறுதிவரை இலட்சியம் குன்றாத, எந்தவித விட்டுக்கொடுப்புகளுமற்ற நம்பிக்கையான போராளியாகப் படைப்பாளியாகத் திகழ்ந்த டானியல் மறைவு குறித்து இலங்கைப் பொதுவுடமைக் கட்சிப் பொதுச்செயலாளர் என். சண்முகதாசன்   அன்று  எழுதியுள்ள வரிகள் குறிப்பிடத்தக்கன.
இளமைக்காலம் முதல் பொதுவுடமைக் கட்சியின் வடபிரதேசக் கிளையின் நடவடிக்கைகளில் முக்கிய பங்களிப்புச் செய்தவர் டானியல். அறுபதுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட வெகுஜன இயக்க எழுச்சிக்குத் தலைமை கொடுத்தவர்களில் ஒருவர். அவரது இழப்பு இந்த நாட்டின் இலக்கியத்துறைக்குப் பேரிழப்பு. அவர் துணிவுமிக்க போராளி. நேர்மைமிக்க தோழர். நான் நல்ல தோழனை, அன்பு நண்பனை இழந்துவிட்டேன்" எனத் தோழர் சண் குறிப்பிட்டுள்ளார்.
அந்த மானிட நேசனின், மக்கள் விடுதலைப் போராளியின், கூர்ந்த சமூகப் பார்வையுள்ள படைப்பாளியின் நாமம் என்றும் நிலைத்து நிற்கும்.

Monday, January 24, 2011

பிரகித் எக்னலிய கொட

பிரகித் எக்னலிய கொட இலங்கை அரசால் 


கடத்தப்பட்டு இன்றுடன் ஒரு வருடமாகின்றது.



-உமா-  
ஊடகவியலாளரும், கேலிச்சித்திர ஓவியருமான, மனித உரிமைவாதியுமான பிரகித் எக்னலியகொட இலங்கை அரசால் கடத்தப்பட்டு இன்றுடன் (24.01.2011) ஒரு வருடமாகிறது.

இலங்கையில் கருத்துச்சுதந்திரம் மறுதலிக்கப்பட்டு, ஊடாகவியலாரினதும், மாற்றுக்கருத்தாளர்களினதும் வாழ்வு அச்சம் தருவதாகவுயுள்ளது. அரசின் மனிதவுரிமை மீறல்களிற்கு குரல்கோடுப்போருக்கு எதிரான தாக்குதல்கள் மும்முரப்படுத்தபட்ட சூழலில் சுதந்திரமாக கருத்து வெளியிடும் உரிமை மறுக்கப்பட்டுவருகின்றது. 2006 ஆண்டிலிருந்து 14 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல ஊடகவியலாளர்கள் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும், தாக்குதல்களிற்கு உள்ளாக்கப்பட்டுமுள்ளனர்.Sunday Leader   ஆசிரியர் லசந்த விஜேதுங்க கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகள் மறைந்துள்ளன.

ஊடகவியலாளரும், கேலிச்சித்திரகாரருமான, மனித உரிமைவாதியுமான பிரகித் எக்னலியகொட இலங்கை அரசால் கடத்தப்பட்டு இன்றுடன்(24.01.2011) ஒரு வருடமாகிறது. பிரகித் பல ஆண்டுகாலமாக தனது செயற்பாடுகள் மூலம் இலங்கையில் நிலவும் அரசபயங்கரவாதத்திற்கும், மனிதவுரிமை மீறல்களிற்கும் எதிராக குரல் கொடுத்து வந்தவர். இவரது மனைவி சந்தியாவிற்கும், அவரது இரண்டு மகன்மாருக்கும் இவர் பற்றிய எந்தத் தகவலும் இன்றுவரை கிடைக்கவில்லை. இவரது மனைவி சந்தியா, தனது கணவனைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் அதேசமயம்;, யுத்தத்தத்தினால் வன்னியில் இடம்பெயர்ந்து வாழும் மக்களினதும் உரிமைகளிற்காகவும்;, யுத்தத்தின் போது காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க அவர்களின் உறவுகளுடன் இணைந்து பல போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தியாவிற்கு . .

எங்கோ தொலைவில் கேட்கும்
துப்பாக்கிச் சன்னம்,
திடீரென்று ஒலிக்கும் தொலைபேசி
வாசலில் கேட்கும் வாகனச்சத்தம்,
அச்சம் தரும் நிகழ்வுகளாக . .
வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும்
எழுதப்படும் ஒவ்வொரு வரியும்
கீறப்படும் ஒவ்வொரு சித்திரமும்
மௌனிக்கப்படும்
துர்ப்பாக்கிய தேசத்தின்
புதல்வி நீ

உனது கனவுகள் நொருக்கப்பட்டு
உனது சிறு குருவிக்கூட்டின் அழகு சிதைந்தது.
துயரும், கண்ணீரும் கலந்த
வெறுமையும் உன்னை நெருக்க,
அப்பாவைப் பற்றிக் கேட்கும்
உன் குழந்தைகளிற்கு பதில்களைத் தேடும்
உன் பிரயத்தனங்கள்.

உனது கணவனைத் தேடியும்
உன்னைப் போன்ற தோழிகளின்
சுமையையும் சுமந்து
நீ எடுக்கும் எத்தனங்கள்,
சீற்றத்துடனும் நம்பிக்கையுடனும்
எழுந்து வரும் அலையென
அதிகாரப ;பாறையிற்;பட்டு
நிசப்தமாய் மீளவும் தொடர்கின்றன.


உனது உறுதியும்,
நம்பிக்கையும, கோபமும்
நீதித் தாயின் கண்கட்டைக்
கிழித்தெறிந்து
அசமத்துவ தராசுகளை
உடைத்தெறியும்.


அந்தப் பொழுதில்
உதிக்கும் சூரியனின் கதிர்களின் வெப்பம்
விழிநீர் பொசுக்கி
உனது முகத்தில்
புன்னகையின் சித்திரங்களைக் கீறிச் செல்லும்.

24 .11 .2011











Thursday, January 20, 2011


வாழும், வாழவிடும்

-வ.அழகலிங்கம்-


துனெசியாவில் தற்கொலை செய்த மாணவனான மோகமட் பவ்ஆசிசி இனிமேல் வறுமையும் இல்லை, வேலையில்லாத் திண்டாட்டமும் இல்லை' என்ற தனது மரணசாசனத்தை எழுதி வைத்துவிட்டே தற்கொலை செய்தார். படித்துவிட்டு வேலையில்லாமல் றோடுடோக அலைந்து திரியும் உலகம் முழுதுமுள்ள இளைஞர்களைத் தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறது இவ்வாசகம்.
2010.12. 17 ந்தேதி படித்த பட்டதாரியான 26 வயதேயான மொகமட் பவ்ஆசிசி பலநூறு தடவை வேலைகளுக்கு மனுப்போட்டுக் கிடைக்காததால் ஈற்றில் தெரு ஓரத்தில் காய்கறி பழங்கள்விற்று அதால் கிடைக்கும் சிறு வருவாயால் உயிர் தப்பிப் பிழைத்துக்கொண்டிருந்தார். பொலீஸ் அவர் சரியான அனுமதிப் பத்திரம் பெறமால் தெருவியாபாரம் செய்தார் என்ற பேரில் அவரது அற்ப தளபாடங்களையும் அவரது காய்கறி பழங்களையும் பறித்துவிட்டது. இந்தக் கொடுமையைத் தாங்காத அந்த இளைஞன் உள்துறை அமைச்சின் காரியாலயத்திற்கு முன்னால் தனக்குமேல் பெற்றோல் ஊற்றிக் கொழுத்தித் தற்கொலை செய்து கொண்டான். உலகிலுள்ள லட்சோப லட்சம் இளைஞர்கள், இந்த நிலமையானது தங்கள் எல்லோருக்கும் உள்ள பரிதாப நிலமை என்றே உணருகின்றனர்.
துனெசியாவில் 17 வீதம் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது. வேலையில்லாத படித்த பட்டதாரிகள் மட்டும் 200000 பேர் ஆகும். புதுமை என்னவெனில் இன்றய துனேசிய எழுச்சியில் இஸ்லாம்வாதம் முன்னணிக்கு வரவில்லை.
'சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்
வேலையற்றதுகளின் சிந்தையிலே விபாரீத எண்ணங்கள். இது தான் காலக் குறி'
சி.என் அண்ணாத்துரையின் பிரபல்யமான அடுக்குமொழி இதுவாகும்.
மோகமட் பவ்ஆசிசியின் தற்கொலைச் சம்பவத்தை அடுத்து மடைஉடைத்த காட்டாற்று வெள்ளம்போல மாணவர்கள் றோட்டுக்கு இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யத் தலைப் பட்டனர். அவர்கள் போராடத் தயாராக இருப்பதிலும்பார்க்கச் சாவதற்குத் தயாராக இருந்தனர். இதுவே புரட்சியின் காலக் குறியாகும்.
துனேசியாவை விட்டோடிய ஜனாதபதி 23 வருடமாக ஆட்சியில் உள்ளார். கடைசியாக வந்த 1990 ஆம் ஆண்டுத் தேர்தலில் அவர் 90 வீதப் பெரும்பான்மையால் வென்றார். 13 ஜனவரியில் அவர் தொலைக்காட்சியில் உரையாற்றும்போது பொலீஸ் ஒடுக்குமுறைக்காக மன்னிப்புக் கேட்டதோடு மக்களின் வேதனைகளைத் தான் செவிமடுத்ததாகவும் தான் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு தேர்தலி;ல் நிற்கப்போவதில்லை என்றும் கெஞ்சினார்.
சர்வாதிகாரியை அகற்றுவது போல சர்வாதிகார ஆட்சியதிகாரத்தை உற்பத்தி செய்யும் முதலாளித்துவ அமைப்புமுறையை அகற்றுவது இலகுவானதல்ல. அதற்கு மிக அரசியல் உணர்மையுள்ள சமுதாயம் ஒன்று உருவாக வேண்டும். புரட்சி ஒன்றன் குழப்பம், நிலநடுக்கத்தைப் போன்றோ, பெரு வெள்ளப் பெருக்கைப் போன்றோ, சுனாமியைப் போன்றோ இருந்தாலும் அதையடுத்து புதிய ஒழுங்குமறையொன்று உடனடியாக உருவாகத் தொடங்கும். மக்களும் கருத்துக்களும் இயற்கையாகவே தம்மைப் புதிய செல்வழியில் செலுத்திக் கொள்வர். பாட்டாளி வர்க்கம் எதிரியை மிதித்துத் துவைத்துத் தூளாக்கித் தூர எறிய ஓர் இறுக்கமான ஸ்தாபனமும் இரக்கமற்ற முயற்சியும் தேவை என்பதைக் கண்டறிவதற்கு முன்னர் பிற்போக்குவாதிகள் ஆழம்வர்க்கத்தின் மற்றொரு கன்னையை அல்லது கட்சியை ஆட்சியில் அமர்த்திவிடுவர். ரூசிய ஒக்டோபர் புரட்சி ஒன்று விதிவிலக்காக இதுவே மீண்டும் மீண்டும் நடந்தேறிய வரலாறாகும்.

துனெசியவின் நோய் முழு மத்திய கிழக்கிலும் தொற்றுகிறது. இதுவே இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஸ்சவுக்கும் ஓர் எச்சரிக்கையாகும். அவர் அண்மையில்தான் 18 வது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து தான் காலம் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கக் கனவு கண்டார். ராஜபக்ஸ்சவின் ஆட்சியை ஏதோ அசைக்க முடியாத பலமான ஆட்சி என்று புழுகுகின்ற ஒரு தமிழர் கூட்டத்திற்கு துனெசியாவின் நிகழ்ச்சியை ஞாபகப் படுத்துகின்றோம்.
உலகத்திலே இப்படிப் பல பலமான ஆட்சிகளை மக்கள் வெள்ளம் துடைத்தெறிந்துள்ளது.
1905 இல் ரூசியாவின் சாருக்கு கிறீஸ்தவப்பாதிரி கோபன் என்றவரின் தலைமையில் ஒரு மகயரை மக்கள் கொண்டு சென்றார்கள். ஊர்வலத்தில் சென்றவர்கள் பைபிள் நூல்களையும் போகும்பொது கிறீஸ்தவ கீதங்களையும்தான் பாடிக் கொண்டு சென்றனர். சாரின் அருண்மனைக்கு முன்னால் போலீஸ் மக்களைச் சுடவே முதலாவது றைஸ்சியப் புரட்சி வெடித்தது. ஊர்வலத்தைத் தயாரிக்கும்போது பாதிரியார் கோபன் சொன்னார், சார் நல்ல மனிதர். உங்களது துன்பங்களை அரச அதிகாரிகள் சாருக்குச் சொல்வதில்லை. ஆதலால் சார் மன்னனுக்கு அது தெரியாமல் இருக்கிறது. தான் போய் நேரில் மன்னனைப்பார்த்து உங்களது துன்பங்களை எழுதிய இந்த மகயரைக் கையளிக்கிறேன் எனறு சொல்லியே ஊர்வலம் தொடங்கப் பட்டது.
1953 இல் ட்டலி சேனனாயக்காவின் ஆட்சி பலமான ஆட்சியாக இருந்தது.
1952 தேர்தலில் யூ.என். பி மிகப்பெரும்பான்மையால் ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பாராளுமன்றப் பெரும்பான்மை அரசியல் அமைப்புச்சட்டத்தையே மாற்றக் கூடிதாக இருந்தது. ஆனால் தேர்தலிலே நாட்டின் பொருளாதார நிலமையை மறைத்துத் தன்னால் நிறைவேற்ற முடியாத பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது யூ.என்.பி. அன்றய இலங்கைமக்கள் பொய்களைச் சகிக்காத கலாச்சார மேன்மை உடையவர்களாக இருந்தார்கள். தேர்தலிலே தமது ஆட்சிக்காலம் முழுவதும் அரிசி விலையை 25 சதமாக வைத்திருப்பதாக உறுதி கூறியது.
ஆட்சிக்கு வந்ததும் அரிசி விலை 72 சதமாகவும் சீனியின் விலை 15 சதத்தாலும் கூட்டப்பட்து. 1953 ஆகஸ்ட் 12 இல் சமசமாஜக்கட்சி இந்த நடவடிக்கையை எதிர்க்க கர்த்தாலுக்கு அறை கூவியது.
கர்த்தாலிலே முதலாளி வர்க்கத்தைத் தவிர எல்லா வர்க்கங்களும் பங்குபற்றின. எல்லாத் தேசிய இனங்களும் பங்கு பற்றின. எல்லா மதங்களும் பங்கு பற்றின. எல்லாச் சாதிகளும் பங்கு பற்றின. எல்லா மனிதசமுதாய ஓடைகளும் சிற்றாறுகளும் வர்க்கப்போராட்டம் என்ற பேராறாக நீக்மறக் கலந்து ஏகவினப் பெருக்காகப் பெருக்கெடுத்து டட்லி சேனனாயக்காவையும் அவரது மந்திரி சபையையும் வாரிக் கொண்டுபோய் கொழும்புத் துறைமுகத்தில் தயார் நிலையில் நங்கூரமிட்டிருந்த பிரித்தானியக் கடற்படைக் கப்பலினுள் போட்டது.
அவர்கள் அவசரகாலச் சட்டப் பிரகடனத்தையும் நாட்டின் எல்லாச் சட்டங்களையும் துச்சமாகத் தூறு செய்தனர். வரலாற்றில் ஒரேயொரு தடவை அதில் யாழ்ப்பாணமும் பங்கு கொண்டது. மந்திரி சபைக் கூட்டம் கப்பலிலேயே நடைபெற்றது. இன்று பென் அலி துனேசியாவை விட்டுப் பறந்தது போல அன்று திடீரென்று பறப்பதற்கு விமான வசதி இருக்கவில்லை. துர் அதிஷ்டம் அன்று சமசமாயக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் முன்னோக்கு அற்று இருந்தது. வர்க்கமும் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் முன்னேறி இருந்த மட்டத்திற்கு சமசமாஜக் கட்சி முன்னேறி இருக்கவில்லை. புரட்சிக்குத் தலைமைதாங்கும் தகுதியையும் அது அதனோடு இழந்துவிட்டது.

பென் அலியின் விமானத்தை அவரின் எஜமான நாடான பிரான்சில் தரை இறங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதுதான் வெகு சீக்கிரத்தில் ராஜபக்ஸ்சவுக்கும் நடக்க இருக்கிறது. 1953 போல அல்ல. 1917 ஒக்டோபர் போல.
1968 மே 10 இல் அன்றய பிரெஞ்சு ஜனாதிபதி மாணவர் போராட்டத்தின் மடைதிறந்த காட்டாற்றுக்குப்  பயந்து பறந்தோடி ஜேர்மனியில்; அன்று நிலைகொண்டிருந்த பிரெஞ்சுப் படைத்தளத்தில் ஒழித்துக் கொண்டார்.
1979 டிசெம்பரில் ஈரானின் பல்லவி ஷ நாட்டைவிட்டு ஓடினார். அவரை அவரது எஜமான நாடான அமெரிக்கா அனுமதிக்க மறுத்தது.
1986 இல் பிலிப்பைன் ஜனாதிபதியாக இருந்த பேர்டினன் மார்க்கஸ் நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டார். அவரும் சர்வாதிகாரியாக ஊழல் நிறைந்து மனித உரிமைகளை மீறுபவராக இருந்தார். ஈற்றிலே நாட்டிலே இருக்க முடியாமல் ஹவாய்தீவில் தஞ்சம் புகுந்து கொண்டார். அவரதும் அவரது மனைவியின்பேரிலும் பில்லியன் கணக்கான டொலர் நாட்டுச் செல்வங்கள் சூறையாடப்பட்டு அமெரிக்காவிலும் சுவிற்சலாந்திலும் மற்றும் 20 நாடுகளிலும் இருந்தது பின்னாளில் அம்பலமானது.
இதுவே வெகு சிக்கிரத்தில் மிகப்பலசாலி ராஜபக்ஸ்சவுக்கும் நடக்க இருக்கிறது. ராஜபக்ஸ்சவையும் அவரது குடும்பப் பரிகலங்களையும் ஏற்றிக் கொண்டுபோக இலங்கையிலுள்ள விமானங்கள் காணுமோ தெரியாது. அவர் இன்று ஆசியாவின் முதலாவது பணக்காரராகிவிட்டார் என்று பலரவலாக இலங்கை மக்கள் கதைக்கிறார்கள். அவரது ஊழலின் கணக்கு வழக்குகழும் எதிர்காலத்தில் வராமல் போகாது. பிரபாகரனுக்ககு அமைந்தது பொலவே ராஜபக்ஸ்சவுக்கும் உடன் பிறந்த பகையாளியாகத் தன்னைப் பற்றி மிகைப்படுத்திக் கொள்ளும் கர்வம் இருக்கிறது. அழிவின் தேவதூதன் மேட்டுமையாகும். ராஜபக்ஸ்சவின் தன் மூப்பாட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. மக்களின் கருத்தாணையையும் அவர் சட்டைசெய்வதில்லை.
பென்னலி விழுவதற்குச் சிலநாட்கள் முன்னரே அமெரிக்கா துனேசியாவுக்கு 12 மில்லியன் டொலர்களை இராணுவ உதவியாக வழங்கி இருந்தது. அது உள் நாட்டு யுத்தத்தை முடுக்குவதற்காகும்.
துனேசிய சம்பவம் காட்டுத் தீயாக உலகம் முழுவதும் தொற்ற இருக்கிறது. அரபுத் தேசங்களில் ஆட்சிக்கு வாற சர்வாதிகாரிகள் ஒரு நாளும் தாங்களாக விலகுவதில்லை. விலகுவதற்கு அவர்களது ஏகாதிபத்திய எஜமானர்களும் அனுமதிப்பதில்லை. துனேசியாவின் பக்கத்து நாட்டு அல்ஜீறியாவில் வியாதி ஏற்கனவே தொற்றிவிட்டது. அங்கே வேலையில்லாத்திட்டத்திற்கு எதிராகவும் உணவு விலையேற்றத்திற்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்துவிட்டன. அங்கே 5 பேர் கொல்லப் பட்டுள்ளார்கள். சீனிவிலையும் சமையல் எண்ணெய் விலையும் திடீரெனக் குறைக்கப் பட்டுள்ளது.
எகிப்திலே 'பென்னலியெ சொல்லு முபாரக்குக்காகவும் விமானம் ஒன்று காத்திருக்கிறதென்று.
துனேசிய எழுச்சியானது உலக அரசியலின் திருப்பு முனையாகும். 2008 ஆகஸ்ட் வங்கி நெருக்கடி தோற்றுவித்த அதிர்ச்சியின் முதலாவது எதிரொலியாகும். இந்த அதிர்ச்சியானது பூகோளம் முழுவதையும் அதிர வைத்தது. பூகோளம் முழுவதுமே நெருக்கடிகள் ஏற்பட்டன. பூகோளம் முழுவதுமே வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியது. பூகோளம் முழுவதுமே நிதிமந்திரி  கடன்  சுமையைப் பெருக்கினார்கள். ஏல்லாமே வோல்ஸ்றீற என்ற ஒரு நிதிநிறுவத்தால் ஏற்படுத்தப்பட்டு உலகம் முழுவதும் சூறாவளியாகப் பரவியது. பூகோளம் முழுவதுமே நிதிச் சூதாட்டங்கள் நிகழ்ந்தன.
அண்மையில் ஊலகச் சந்தையில் உணவு விலையோ உயர்ந்தது. சோழத்தின் விலை 60 வீதத்தால் உயர்ந்தது. சோயாவின் விலை 45 வீதத்தால் உயர்ந்தது. எண்ணையினதும் சீனியினதும் விலை அரிசிவிலை என்று கட்டுக் கடங்காமல் உயர்ந்தன. மனிதர்களின் உழைப்பின் 60 தொடக்கம் 70 வீதமானது உணவுப்பொருட்களை வாங்கச் செலவாகிறது. இந்தியா சீனா முழு ஆபிரிக்காவும் இந்தோனெசியா என்று பலநூறு மில்லியன் மக்கள் வரலாறு கண்டு கேட்டிராத வறுமையில் வாடுகிறார்கள். இலங்கையில் இது சொல்லும் தரமன்று. அதன் மத்தியில் இயற்கை அனர்த்தம். ராஜபக்ஸ்சவின் கொண்டாட்டத்திற்கோ  குறைவில்லை.

இந்த சர்வவியாபக நெருக்கடியை எப்படித்தீர்ப்பதென்று எவருக்கும் தெரியாத போதும் பிஸ்னெஸ் ஆஸ் யூசுவல் (Buissiness as usual) என்றே முதலாளித்துவ உலகம் மக்களுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. அதன் விளைவாக 2010 இல் மட்டும் அமெரிக்காவில் 157 வங்கிகள் வங்குறோட்டு அடைந்துள்ளது என்று அமெரிக்கசேமிப்பக் காப்பீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது. சராசரி மாதத்திற்குப் 13 வங்கிகள் வீதம் மூடப் பட்டுள்ளன. நிதி நெருக்கடிக்குப் பிறகு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்ததே இதற்குக் காரணம் என்று அந்தச் செய்தி கூறியுள்ளது.
இந்தியாவிலே ஜி2 ஸ்பெக்றம் 8 பிலியன் அமெரிக்க டொலர் ஊழலையடுத்து பாராளுமன்றம் மூன்றுமாதத்திற்கு மேலாகக் கூட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ஊழலை விசாரிக்க ஒரு பாராளுமன்றக் கொமிசனை ஏறபடுத்தும்படி கேட்டதை மன்மோகன் அரசாங்கம் மறுத்து வருகிறது.
இலங்கையில் 34 வருடம் அவசரகாலச் சட்டத்தின் கீழும் பயங்கரவாதத் தடைச் சட்டத்த்தின் கீழும் ஆட்சி நிலவுகிறது. துரையப்பா கொலையையடுத்து 1979 இல் பண்ணைப்பாலத்தின் கீழ் இன்பம் விசுவசோதிரத்தினம் என்ற இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடக்கம் இன்று வரைக்கும் இரண்டு  லட்சம் தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் சட்டவிரோதமாகக் கொல்லப்பட்ட போதும் இன்றுவரை கொலைஞர் ஒருவராவது சட்டத்தின் முன் நிறுத்தப் படவில்லை.  இதுதான்  இன்றய இலங்கையின் ஜனனாயகம். தமிழ் அரசியற் கட்சிகளோ தேர்தற் கும்மாளத்தில் குதூகலிக்கின்றன.
எந்த மேற்கத்தைய, தம்மை ஜனனாயக நாடென்று சொல்லி மார் தட்டுகின்ற நாடோ அன்றேல் ஐக்கிய நாடுகள் சபையோ இந்தியாவோ இலங்கையின் அவசரகாலச் சட்டத்தை எடுக்கும்படி கோரியது கிடையது. அண்மையில் அமெரிக்க ராஜதந்திரி ஒருவர் பட்டும் படாததுமான ஒரு கருத்தைத் தெரிவித்து ஓய்ந்து விட்டார். மேற்கு நாடுகளின் நேரடி முதலீடுகளுக்கும் எல்லைகள் அற்ற சுறண்டலுக்கும் இலங்கையில் முடிவில்லாத காலத்திற்கு அவசரகாலச் சட்டம் நிலவ வேண்டும். நித்திய நிரந்தர கொலை நிகழ்வுகளும் நீடிக்க வேண்டும்


பூகோளமயமாக்கல் என்ற நிகழ்வுப்போக்கானது உற்பத்தி வளர்ச்சியையும் வாழ்க்கைத்தர உயர்ச்சியையும் மாத்திரம் தந்ததல்ல. அது கட்டுக்கடங்காத முட்டிமோதல்களையும் பொருளாதார அரசியல் ராஜதந்திர நெருக்கடிகளையும் தந்துள்ளது.

பாராழுமன்ற ஜனனாயகமானது தவிர்க்கமுடியாதபடிக்கு சுதந்திரமான போட்டி என்ற பாதுகாப்பு அரணாலும் சுதந்திரமான சர்வதேச வர்த்தகம் என்ற பாதுகாக்கப்பு அரணாலும் பாதுகாக்கப் படுவதாகும். இது தங்குதடையின்றி நடைபெறும் காலங்களில் முதலாளித்துவமானது வேலைநிறுத்தம் பேச்சுச் சுதந்திரம் எழுத்துச் சுதந்திரம் கூட்டம் கூடும் சுதந்திரம் போன்றவற்றைச் சகிக்கும். உற்பத்திச் சக்திகள்மேலும் வளரக்கூடிய சூழலும் விற்பனைச் சந்தையானது தொடர்ந்து வளர்ந்தும் கொண்டு போனால் மாத்திரம்தான் முதலாளித்துவ தேசங்கள் வெகுசனங்களின் கல்வி, வைத்தியசேவை, ஓய்வுசூதியம் ஊனமுற்றோர்உதவி போன்ற சமூகசேவைகளைப் பாதி அழவுக்காவது அனுமதிக்கும். அப்பொழுது முதலாளித்துவம் தானும் வாழும். மக்களையும் வாழவிடும். இப்பொழுதோ இந்த நிலமைகள் முற்றாக மாறி விட்டன.
துனேசியாவில் ஒரு இளைஞன் தன்னை எரித்ததைத் தொடர்ந்து நாட்டின் ஜனாதிபதியோ விட்டோடும் சூழல் ஏற்பட்டுவிட்டது. அவனது சுலோகத்திலே மற்றய சக மனிதன் எவனுக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை. எத்தனை புலிகள் எரிந்தார்கள். வெடித்துச் சிதறினார்கள். ராஜபக்ஸ்ச இன்னும் நாட்டைவிட்டு ஓடவில்லை. காரணம் துனேசிய இளைஞன் எரியும்பொழுது அவன் எழுதிவிட்டுப்போன சுலோகம் 'இனிமேல் வறுமையும் இல்லை. வேலையில்லாத் திண்டாட்டமும் இல்லை.' இதையடுத்து வேலயற்றவர்களும் வறுமையில் வாடுபவர்கள் நாம் எல்லோரும் ஒருமித்துத் தற்கொலை செய்வதா? என்ற கேள்வியை எழுப்பி ஈமெயில் மூலமும், இண்டர் நெற்மூலமும் சர்தேச வலத்தளங்கள் மூலமும், பேஸ் புக் மூலமும் பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். கட்சியும் இல்லை. இயக்கங்களும் இல்லை. ஆயுதமும் இல்லை. எல்லோரையும் பாதிக்கும் சமூகப் பிரச்சனையை மையமாகவைத்து அறைகூவல் விடுத்தார்கள. நாமோ, நமது தமிழர்களது சுலோகமோ, 'தமிழரது தாகம் தமீழத்  தாயகம் இன்றுவரை இலங்கை அரசு ஒரு மில்லிமீட்டரால் கூட அசையவில்லை.  இலங்கையில் மொத்த சமூகங்களின் தலையாய உடனடி வாழ்க்கைப் பிரச்சனைகளை மையமாக வைத்துப் போராடும் காலம் அதாவது மீண்டும் 1953 கர்த்தால் போன்ற கர்த்தாலை அறைகூவுவதற்கான அத்தனை புறநிலைச் சூழல்களும் கணனிபோன்ற தொழில் நுட்பமும் தயாராகவே உள்ளது. அந்தக் கட்டுப்படுத்த முடியாத வெகுசனக் காட்டத்தீயைப் பற்றவைப்பதற்கு ஒரு பொறி தேவைப் படுகிறது.
வாழு!வாழவிடு!!
2011.01.18

Sunday, January 16, 2011

மாட்டுப்பொங்கல் நினைவாக 
-ஜீவமுரளி -


தடைசெய்தல், நிராகரித்தல் என்ற உளவியல் மூலங்களை கண்டடைதல்



எல்லாவற்றையும் நிராகரித்தல் என்ற அரசியல் உளவியலின் மூலங்களும், எல்லாவற்றையுமே தடைசெய்தல் என்ற அரசியலின் மூலகங்களும், எங்கிருந்து தொடங்குகின்றன என்ற கேள்விகள் என்னை பாடாய் படுத்திக்கொண்டிருக்கின்றன.

கண்ணை மூடினால் போதும் மாடுகள் மட்டும்தான் என் கனவில் அடிக்கடி வந்து போகின்றன. அவைகள் ம்ம்மா என்று மட்டுமே தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன. ம்ம்மா என்று மட்டுமே கதறுகின்றன. ம்ம்மா என்றுமட்டுமே தங்கள் பசியை வெளிப்படுத்துகின்றன. ம்ம்மா என்ற மாடுகளின் மொழி இனிமையாகவும் வாஞ்சையாகவும் முன்னொருகாலத்தில் என் காதுகளில் ஒலித்தன. இப்பொழுதெல்லாம் கனவுகளில் வந்துபோகும் மாடுகளின் "ம்ம்மா" என்ற மொழி குரூரமாகவும், ஈனமாகவும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. என் பொருங்குடலையும், சிறுகுடலையும் வாயால் வாந்தி எடுப்பது போல் உணர்கிறேன்.

மாடு ஒரு சாதுவான பிராணி
மாடு ஒரு தாவர பட்சணி
மாட்டிற்கு நான்கு கால்கள் உண்டு
ஒரு வால் உண்டு
இரண்டு காதுகள் உண்டு
மாடு புல் தின்னும்
மாடு அசை போடும்
மாடு குட்டி ஈனும்
மாடு பால் தரும்
மாடு அம்மா என்று கத்தும்
என முதலாம் வகுப்பிலிருந்து ஆசியர் சொல்லித்தரவும் அதையே மனப்பாடம் செய்து முதலாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை கட்டுரையாக எழுதி சித்தியடையும் பாடசாலைக் கலாச்சாரத்தை தமிழர்கள் கொண்டிருநதனர். ஆறாவது வகுப்பில் புலிகள் எங்களுக்கு ஆசிரியர்களாயினர். அதன்பின்பு புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது எனவும் சிங்கம் பதுங்கி நின்று பாயும் எனவும் மனப்பாடம் செய்து பல்கலைக்கழகம் வரை கட்டுரைகள் எழுதி சித்தியடையும் பாய்க்கியத்தை தமிழர்கள் பெற்றனர். ஆனல் மனிதர்களின் வரலாற்றோட்டத்தில் புலி புல் தின்றது. சிங்கம் பதுங்காமல் பாய்தது. பழமொழிகள் ஏன் மனிதர்களிடம் தோற்று போகின்றன என யோசிக்கும் பொழுதெல்லாம் ம்ம்மா என்ற மாடுகளின் மொழி ஈனக்குரலாகவும் கடூரமாகவும் குரூரமாகவும் கலந்து ஒலிக்கின்றன.

ஒரு சனநாயக அரசியல்ச் சூழல் எப்படி இருக்க வேண்டும்? ஒரு மாற்றுக்கருத்தை, கருத்தை தெரிவிப்பதற்கான அல்லது எதிர் கொள்வதற்கான அரசியல் சூழல் எப்படி இருக்கவேண்டும்? ஒரு ஒற்றைத்தனிமனிதன் தனக்குத்தானே சுயதணிக்கை செய்து கொள்ளாமல் தும்மலும் கொட்டாவியும் விடுவதற்கான ஒரு சனநாயகச்சூழல் எப்படி இருக்க வேண்டும்? என்ற கனவும் ஏக்கமும் விருப்பமும் ஆசையும் ஒவ்வொரு தனிமனிதர்களுக்கும் இயல்பாகவே இருக்கின்றன.

ஆடுகிற மாட்டை ஆடித்தான் கறக்க வேண்டும் பாடுகிறமாட்டை பாடித்தான் கறக்கவேண்டும் என்ற புகழ் பெற்ற தமிழ்ப்பழமொழி ஒன்று உண்டு. ஒரு மாட்டினுடைய சனநாயக உரிமைகள் குறித்தும் அடிப்படை வாழ்வுரிமை குறித்தும் முன்னொரு காலத்திலே தமிழ்பேசும் சமூகம் சிந்தித்தும் பேசியுமிருக்கிறது. இந்தப் பழமொழியை நான் மனதில் மீட்கும் பொழுதெல்லாம் தமிழ் பேசும் மக்களிடம் இவ்ளவு செளிப்பான சிந்தனைமுறையும் உறவுமுறைகளும் இருந்திருக்கின்றனவா? என ஆச்சரியமும் திகைப்பும் ஏற்படுகின்றன.

ஒருமாட்டினுடைய அடிப்படை வாழ்வுரிமையை மதித்த ஒரு சமூத்தினது, கன்றுக்குட்டி பால்குடித்த பின்தான் மாட்டிலிருந்து தன் தேவைக்காக பால் கறந்த ஒரு சமூகத்தினது மனித விழுமியங்கள் எப்படி காணமல்போய்விட்டது? யாரால் இல்லாது ஒழிக்கப்பட்டன? என்ற கேள்விகளை நாம் திரும்பத்திரும்ப கேட்பதன் மூலம் இல்லாதொழிக்கப் பட்டவையை மீட்டெடுக்கவும் காணாமல் போனவையை கண்டடைவதற்குமான வாய்ப்புக்களை ஒருக்கால் பெற்றுத்தரலாம் என்றே நம்புகிறேன்.

இலங்கையில் தமிழ் சிங்கள தேசியவாத அரசியலின் எழுச்சியின் பின்னால்தான் ஆடுகிறமாட்டை அடித்துக் கறக்கின்ற, பாடுகிற மாட்டை பயமுறுத்திக் கறக்கின்ற அரசியல்கலாச்சாரம் தொடங்குகிறது. மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான பாலை உதாசினப்படுத்திவிட்டு தமிழ்மொழி பேசுபவர்களுக்கு தமிழ்ப்பாலும் சிங்களவர்களுக்கு சிங்களப்பாலும் அருந்தக் கொடுக்கப்பட்டது. பாலுக்கு பிரதியீடாக தமிழும் சிங்களமும் இரு தேசியவாதிகளினால் பரிந்துரைக்கப்பட்டன. பாலுக்கு பாலகர்கள் அழுதிட பாற்கடலை புலிகளும் சிங்கங்களும் கடைந்து கொடுத்தன. பாலுக்குப் பதிலாக விசத்தைதான் இரு தேசியவாதிகளும் அருந்தக்கொடுத்தார்கள் என்பதை இன்றுள்ள இனமுரண்பாட்டு அரசியலின் தலைகீழ்வளர்ச்சி மிகத் தெளிவாக காட்டியிருக்கின்றது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை இலங்கையிலுள்ள சிறுபான்மை இன மக்கள் எல்லோரும் இன்று நன்றாகவே அனுபவித்து உணர்ந்திருக்கின்றார்கள்.

புலிகளுக்கான புதைகுழியை தமிழ்த் தேசியவாதிகள் எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்தே வெட்டிக் கொடுத்தார்கள். ஆடுகிறமாட்டை அடித்தும் பாடுகிறமாட்டை பயமுறுத்தியும் பால்கறந்த புலிகளை விசிலடித்தும் கைதட்டியும் காசும் கொடுத்த தமிழ் அரசியல் கலாச்சாரம் கடைசியில் பாலே குடிக்காத பலவீனமான அரசியற் குழந்தைகளை சர்வதேசமெங்கும் பிரசவித்திருக்கின்றது. ஆடுகிற மாட்டையோ பாடுகிற மாட்டையோ இவர்கள் தங்களின் வாழ்நாளில் பார்த்தே இருக்க மாட்டார்கள். ஆடுகின்ற பாடுகின்ற மாடுகள்பற்றிய பழமொழியின் அந்த அற்புதமான எல்லாச் சாத்தியங்களையும் புலிகளும் சிங்கங்களும் நஞ்சை உண்ட பாலகரை வைத்தே இலங்கையில் இல்லாதொழித்துவிட்டன.

இந்த வரலாற்று சூழலில்தான் கொழும்பில் சர்வதே தமிழர் மாகாநாடு நடந்து முடிந்திருக்கின்றது. சர்வதேசத்தமிழரை முதலில் குத்தகைக்கு எடுத்தவர் தமிழ்நாட்டை சேர்ந்த மு.கருணாநிதி என்பவர். அதற்குபோட்டியாக குத்தகை எடுத்தவர் வே பிரபாகரன். கருணாநிதி தனது பங்குக்கு தமிழ் உணர்வுமாடுகளை உருவாக்கினார். பிரபாகரன் தனது பங்கிற்கு தமிழ் வெறிமாடுகளை உருவாக்கினார். இதில் நகைச்சுவை என்னவென்றால் உலகத்தில் உள்ள எல்லா மாடுகளாலும் ஒரு பொதுவான மொழியே பேசப்படுகின்றது. அவை பாலைமட்டுமே மனிதர்களுக்கு கொடுக்கின்றன விதிவிலக்காக கருணாநிதியும் பிரபாகரனும் மட்டுமே தமிழ்மொழி பேசும் மாடுகளையும் தமிழுக்காக உயிரைக் கொடுக்கும் மாடுகளையும் உருவாக்கிக் காட்டினார்கள். இப்படி உருவாக்கப்பட்ட மாடுகளால்தான் ஆடுகிற மாடும் பாடுகிற மாடும் ஆடிபாப்பாடி பால் கறக்கின்ற சனநாயக விழுமியங்களும் அடியோடு இல்லாததொழிக்கப்பட்டன. ஆடுகிற மாட்டை ஆடிக்கறத்தல், பாடுகிறமாட்டை பாடிக்கறத்தல் என்பது தந்திரம் என்பதன் குறியீடாக கற்பிக்கப்பட்டது. ஆடுகிறமாட்டை அடித்துக் கறத்தல் பாடுகிறமாட்டை பயமுறுத்திக் கறத்தல் வீரத்தின் குறியீடாக கொள்ளப்பட்டது.

இந்தத் தமிழ் தலைமாடுகளால் உருவாக்கப்பட்ட தமிழ்க்குத்தகை உளவியல் நோய்தான் இன்றுள்ள சர்வதேசத்தழிழர்கள் ஒவ்வொருவரையும் பீடித்திக்கின்றது. இந்த நோயின் முதன்மையான அறிகுறி என்னவென்றால் எவற்றையுமே வரவேற்காது. ஒரு ஒற்றைத் தமிழனுக்கு இந்த நோய் ஏற்பட்டால் அது சர்வதேசத் தமிழர்களின் சிந்தனைகளை தடைசெய்யும் அல்லது நிராகரிக்கும்.

தமிழனெண்டு சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்ற வசனமும், புலிகளின் துப்பாக்கிகளும் முள்ளிவாய்காலில் தமிழ்போசும் மக்களுக்கெதிராக திரும்பிய பின்னர், கருணாநிதி தனது தமிழ்ப்பற்றையும், சர்வதேசத்தமிழ் குத்தகையையும் மறுஉறுதி செய்வதற்காக உலகத் தமிழர் மாநாட்டை கூட்டினார். உடனேயே சர்வதேசத் தமிழ்புலிகள் நிராகரித்தனர்.

நிராகரிப்பு அரசியல் தடைசெய்யும் அரசியல் என்பது புலிகளின் காலத்தில் அபரிமிதமாக வளர்ச்சியடைந்தது. ஒவ்வொரு தனிமனிதனின் சிந்தனைகளையும் அசைவுகளையும் நிராகரித்தது. அடிப்படை வாழ்வுரிமைகளான தொழில்செய்தல், கல்வி கற்றல், ஓட்டுப்போடுதல், கட்சி கட்டுதல், கூட்டம் போடுதல், மறுவார்த்தை பேசுதல் எல்லாவற்றைம் நிராகரித்தது. தடைசெய்தது.

ஒவ்வொரு தனிமனிதனின் அசைவியக்கத்தையும் புலிகள் கட்டுப்படுத்தினார்கள். அது தன்னை மையப்படுத்தியே உலகத்தை பார்த்தது.
சுயாதீன இயக்கங்களை சுயாதீனக்கூட்டத்தை எல்லாவற்றையுமே நிராகரித்தது.
இந்த நிராகரிப்பு தடை அரசியலில் புலிகள் கொடிகட்டிப்பறந்த காலங்களில் எதிர்ப்பரசியலும் எதிர்ப்பிலக்கியங்களும் மக்கள் மத்தியில் தோன்றத் தொடங்கிவிட்டன. இவ்வளவுகால எதிர்பிலக்கியத்தினது ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே கொழும்பில் நடந்த இன்னுமொரு சர்வதேச தமிழ்மாகாநாட்டை பார்க்கமுடிகிறது.

தமிழ்ப்பால் குடித்த பண்டிதர்களென்ன, தமிழ்பால் குடித்த புலிகளென்ன யார் நிராகரித்தாலும் தடைசெய்தாலும் மாநாட்டை நடத்திக் காட்டுவேன் என்ற எதிர்ப்பரசியலுக்கான முருகபூபதியின் அறைகூவல் ஒரு வரலாற்று பதிவு.
அதை ஒருவர் வரவேற்பது சர்வதேச தமிழ் குத்தகை நோய் பீடிக்காதவர் என பொருள்படும். முருக பூபதி மகிந்தவிடம் காசுவாங்கி மாநாட்டை நடத்தியிருந்தால் அதன் பலாபலன்களை எப்படி திரும்பப் பெற்றுக்கொள்வது என்பது மகிந்த அரசுக்கு நன்றாகவே தெரியும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். புலிகளுக்கு மகிந்த அரசு கொடுத்த கோடி ரூபாய்களை வட்டியும் முதலுமாகச் சேர்ந்து பெற்றுக்கொள்ளவில்லையா??

எதிர்காலத்தில் சிறூபன்மை மக்களை மீள உறவுகொள்ளவும், புரிந்து கொள்ளவும் ஒரு தொடக்கப் புள்ளியாக இந்த மாநாடு கொள்ளப்படவேண்டும் என்ற கோட்பாடு சாத்தியமாக்கப்பட வேண்டுமென்றால், இந்த தமிழ்ப்பற்றாளர்கள் முதலில் ஆறுமுகநாவலரையும், தமிழ்மொழி வெறியையும், சாதித்திமிரையும், திருநீற்றுப்பட்டையையும், கோமணத்தையும், கோமணத்தின் உள்ளே இருப்பதையும் தூக்கி குப்பைக்குள் போடவேண்டும். யாழ்மையவாத அரசில் சர்வதேசத் தமிழர்களையும் தமிழையும் குத்தகைக்கு எடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இலங்கையிலுள்ள சிறபான்மையினங்களை யாழ்மையவாதம் துருப்புச்சீட்டாக பாவித்து அரசியலாட்டம் போடாத வரைக்கும் தமிழ் தண்ணி ஊற்றாமல் தானக வளரும்.
என் கனவு கூட நீர்மேல் எழுதிய எழுத்துப்போல் தொடர்கிறது.
மாடு ஒரு சாதுவான பிராணி என்ற பழமொழி ஒருநாள் பொய்த்துப் போய்விட்டது என்ற கனவின் வருகைக்காகவும், அவை ஆடிப்பாடும் காலத்திற்காகவும் நான் காத்திருக்கிறேன்.

Wednesday, January 12, 2011

Ranjith Heneyaka வின் நாவல் பற்றி



இருப்பை தொலைத்தல் Ranjith Heneyaka வின் நாவல் 


Mit dem Wind fliehen
தேவா- ஜேர்மனி

அதிகாரத்தின் கொடுவாள் தனக்கு எதிராக நிலைப்பாடு எடுக்கும் ஒவ்வொருத்தரின் கழுத்திலும் விழுகிறது என்பதற்கு இந்த அரசபயங்கரவாதம் ஒரு அத்தாட்சி -ரஞ்சித் 

ரஞ்சித் Henayaka அவர்கள் முதன்முதலாய் ஜெர்மன் மொழியில் எழுரஞ்சித் Henayaka அவர்கள் முதன்முதலாய் ஜெர்மன் மொழியில் எழுதிவெளிவந்திருக்கும் முதல்நாவல் இது. இவர் ஏற்கனவே சிங்களத்திலும் ஜெர்மன் மொழியிலும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 1968லிருந்து அரசியல்தீவிரசெயற்பாட்டயளராய் இருந்தவர். 1971யிருந்து ஜே.வி.பியின் இளைஞர்அணியில் பங்குபற்றியிருந்ததால் 1977வரை சிறைவாசத்தில் இருந்தது மட்டுமல்லாமல் சித்திரவதைகளையும் அனுபவித்தவர்.திவெளிவந்திருக்கும் முதல்நாவல் இது. இவர் ஏற்கனவே சிங்களத்திலும் ஜெர்மன் மொழியிலும் ஆயஇந்த நாவல் உருவத்தில் ஒரு கற்பனைக்கதையை முன்வைத்திருக்கிறது. யதார்த்தத்தை அது தன்னுள் கொண்டி ருக்கிறதை ஒரு வாசகனுக்கு எளிதில் புரியும். கற்பனைக்கும், நிஐத்துக்கும் இடையில் சங்கிலித்தொடர் இருப்பதாலேயே எழுத்தாளனுக்கு -கலைஞனுக்கு படைப்பு சாத்தியமாகிறது.

1980க்குப் பின்னான இலங்கை அரசியல் நிலைவரங்களிலிருந்து ஆரம்பிக்கிறது; இந் நெடும்கதை. கதைநாயகனோடு-நாயகியோடும் பயணிக்கும் கதை ஐரோப்பாவரை நீண்டு பின்னர் தொடர்ந்தும் அதனுடைய அரசியல் பார்வையோடு வாழ்தல்தான் இதன் சிறப்பு. பொதுவாகவே அரசியல் நெடுங்கதையாடல்களின் வாசிப்பில் ஒரு மந்தநிலைமை உள்ளது;. சிக்கலான அரசியல் சம்பவங்கள்-நிலைமைகளை ஒரு கோர்வைக்குள் கொண்டுவருவதற்கு விசேடமாய் வாசகன் புரிந்துகொள்ளக்கூடிய இலகுமொழி அவசியமானது. கரடுமுரடான வார்த்தைகளை கொடுத்து வாசிப்புக்கு ஒரு எரிச்சலை தரக்கூடாது. ஒரு கதைக்குள் இன்னொரு கதையைப்பொருத்தி அதற்குள் வேறொன்றை புகுத்தி உருவாக்கும் ஒரு மகாபாரத சிக்கலை ரஞ்சித் புனையவில்லை. தன்னுடைய பிரச்சார தொனியை புகுத்தவில்லை.

ஒரு அமைதியான வேகத்தோடு அதேசமயம் கொண்டிருக்கும் அரசியல் கொள்கையோடு கொஞ்சமும் விட்டுக்கொடுத்தல் இன்றி இந்நெடுங்கதை நகர்கிறது. நாவலின் இறுதியிலும்  கூட அது தொடர்ந்து நகர்ந்துகொண்டிருப்பதான உணர்வே மேலோங்கி நிற்கிறது.

கதை இதுதான்,

இனத்தின் உரிமைக்காக ஆயதமேந்தி போராடும் தமிழ்இளைஞனாக நாதன் அறிமுகப்படுத்தப்படுகின்றான். பல்வேறு இயக்கங்களும் தமக்குள் மோதி அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டிருக்கும் காலகட்டத்திலிருந்து நாவல் தொடங்குகிறது. இவன் சார்ந்த குழுவும் நாதன் நேசித்த விடுதலையை நோக்கி நகரக்கூடவில்லை என்பதை புரிந்துகொள்ள நேர்கிறது. ஆனால் இயக்கங்களின் மூர்க்கமான அதிகாரவெறி இவனது தாமதமான புரிதலுக்காக காத்திருக்கவில்லை. சொந்த ஊரிலிருந்து தப்பிஓடவேண்டியதான கட்டாயம் நாதனுக்கு ஏற்படுகிறது. தோழன் கண்ணிவெடியால் உயிர் இழக்கின்றான். காட்டிக்கொடுப்புகளின் கோரம் நாதனை துரத்துகிறது. தன் உயிரையும் காப்பாத்திக்கொள்ளவேண்டி அவனது முதலாவது தப்பியோடுதல் தலைநகரைநோக்கி ஆரம்பிக்கிறது. கொழும்புக்கு போகிறான். அங்கு தன் மனைவியையும்  குழந்தையையும் அழைப்பித்து ஒரு நிம்மதியான வாழ்வு தொடரலாம் என்றால் அது தொடரு முன்னமேயே நாதன் இலங்கை ராணுவத்தால் வீதிச் சோதனையிடும் ஒரு சந்தர்ப்பத்தில் கைது செய்யப்படுகின்றான். சித்திரவதைமுகாமுக்கு கொண்டு போகப்படுகின்றான்

இங்கு நடைபெறும் கற்பனைக்கு  கூட எட்டமுடியாத பயங்கரங்களை வாசிக்க ரஞ்சித்தின் நாவலுக்குள் நுழைந்துபாருங்கள். சித்திரவதைமுகாமின் குரூரங்கள் நம் நினைவிலிருந்து கழற்ற முடியாதவையாகின்றன.

அதிகாரத்தின் கொடுவாள் தனக்கு எதிராக நிலைப்பாடு எடுக்கும் ஒவ்வொருத்தரின் கழுத்திலும் விழுகிறது என்பதற்கு இந்த அரசபயங்கரவாதம் ஒரு அத்தாட்சி.
ஓன்று உயிர்வாழ்தல் வேண்டி நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் அதாவது உயிரைப்பணயம் வைத்து தப்பிஓடவேண்டும் இதுவும் அதிட்டம் இருந்தாலே முடியும். இது நடக்காவிட்டால் சித்திரவதைமுகாமிலே இறுதிமூச்சை விடவேண்டும்.

தன் இளமைக்காலத்திலேயே அதிகாரவர்க்கத்தின் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருந்த ரஞ்சித் இந்த  நாவலை எழுதுவதற்கு மிகதகுதியானவர். காயம்பட்டவனுக்குத்தான் தெரியும் வலியின் வேதனை. வேதனையின் முனகல்களை துயரங்களின் இறுதிமூச்சுகளை நாவலில் உணரக்கூடியவாறு மிக அருகாமையில் அல்ல உங்களுக்குள் கேட்கின்றது. இம்மரணவேதனைகள் எதற்காக? ஏன் இந்த துன்பங்கள்? காரணங்களே இல்லாமல் ஒருமனிதனை அதிகாரவர்க்கம் காவுகொண்ட நிஐங்களை; இங்கு மிகநெருக்கத்தில் உணரலாம்.. வக்கிரபுத்தி கொண்ட அடக்குமுறையாளர்கள் கைதுசெய்திருந்த ஆண்பெண்பாலாருக்குமேல் நடாத்திய பாலியல்வன்முறைகளை; வாசிக்கும்போது மனிதக்கொடூரங்கள் இப்படியும் நடக்கின்றனவா-நடைபெற்றதா-நடைபெறுமா-என உயிர் கலங்குகிறது.

நாதன் என்கிற இலங்கை இளைஞன் ஒரு கேவலம்கெட்ட அரசியல் சகதியில் மூழ்கடிக்கப்பட்டு அதிலிருந்து அவன் மீட்டெழுந்தாலும் அந்த சாக்கடை அவனை அதிலேயே புரட்டி எடுக்கிறது. அதிலிருந்து தப்புதல் என்பதாவது இறுதியில் நாட்டைவிட்டே தப்பியோடுதலில் முடிகிறது. நாவல் இத்தோடு; முற்றுப்பெற்றிருந்தால் அதனுடைய அரசியல் நுணுக்கமே அரைகுறையாய் போயிருக்கும். 315பக்கங்களை தன்னுள் கொண்டுள்ள இந்நாவலின் தனித்தன்மையே அரசியல் பேசுவது. மனிதவாழ்வே அரசிய்ல் நீரோட்டத்தில் சுழல்வது;; அதிலிருந்து அவன் விடுபடமுடியாதபடி போராட்டங்கள் தொடருகின்றன..

ஈழத்தில் தமிழினத்துக்கென்று பொதுவான பயங்கரமொன்று நடைபெற்றதும்-பெறுகிறதும்-பத்திரிகைசுதந்திரமறுப்பு;- அரசுக்கு எதிரான கருத்துமறுப்புகளையும் தன்னுள் கொண்டு இந்த நாவல் ஆவணமாக உங்கள் முன்னே விரிகிறது.

வாழ்வுக்கும் எழுத்துக்கும் கொண்ட கொள்கைக்கும் இடையே முரண்பாடற்ற ஒரு பாதையை ஒரு எழுத்தாளன் கொண்டிருந்தால் அது அவனின் படைப்பாற்றலுக்கு குறுக்கே வராது. ரஞ்சித் நாவலில் விபரித்துக்கொண்டுபோகும் சம்பவங்களை; சம்பவங்கள் என்பது சரியான வார்த்தையில்லை. அவைகள் வரலாறு.

கிட்லருடைய ஆட்சியின் இனஅழிப்பை மறுக்கிறவர்கள் மறைக்கமுயல்பவர்கள் அதன் தடயங்களை திரிபுபடுத்துபவர்கள் இன்னும் தர்க்கரீதியும் நியாயமும் இல்லாத வாதங்களை முன்வைக்கிறார்கள். இலங்கையில் போர் ஓய்ந்துபோனாலும் இனஅழிப்பு வேறொரு கோணத்தில் கையாளப்படுகின்றது என்கிற உண்மை எமக்கு முன்னாலிருக்கும் யதார்த்தம். எல்லாதரப்பிலுமே அடாவடித்தனமாக நிகழ்த்தப்பட்ட கொலைகளுக்கும் கைதுகளுக்கும் பாலியல்சித்திரவதைகளுக்கும் யார் பொறுப்பு? ஆயுதம்-அதிகாரங்களின் சுவடுகளை- அதன் கொடுமைகளை எதிர்காலசந்ததிக்கு அறிவிப்பதில் ஒரு முக்கிய பொறுப்பு சமூகநலனில் அக்கறை கொண்டவர்களுக்கு உண்டு.

ரஞ்சித்துடைய நாவல் ஈழத்தின் தற்போதய நிலைப்பாட்டை புரிந்துகொள்வதற்கு ஒரு புரிதலை தருகிறது.

சுவிசின் சிலமாநிலங்களிலேயும் ஜெர்மன் ஆசுரேலிய்நாடுகளிலே வளரும் இளைஞருக்கு அவர்களுடைய தாய்மொழியான ஜெர்மன் மொழியில் ;(இந்தமொழியில்தான் அவர்களால் சிந்திக்கிறார்கள் என்பது தெரிந்தவிடயமே)வாசிக்க வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறதன் மூலம் இவர்களுக்கு பெரியவர்கள் தெரியப்படுத்தும் அவர்களது தாய்நாட்டுஅரசியல்-சமூகபார்வைகளை பிறிதொரு கோணத்தில் பார்ப்பதற்கு வழிசமைத்திருக்கிறது. இங்குவாழும் இளம் சந்ததி இந்நாவல்பற்றி தங்கள் கருத்துபரிமாறலை செய்வது ஆரோக்கியமானது. பாடசாலைகளில்- கருத்தரங்குகளில் இப்புத்தகம் பற்றிய விமர்சனம் மேற்கொள்ளப்படவேண்டும். இவர்கள் உலகில் சந்திக்கும்- சந்திக்கப்போகும் இனத்துவேசரீதியான நடைமுறைகளை எவ்வாறு கையாளலாம் என்கிற சிந்தனைக்கும்- செயல்பாட்டுக்கும் வழிஏற்படுத்தலாம். தவிரவும் வாழும்நாட்டின் மொழிப்யிற்சி இல்லாத பெற்றோரிகளிடத்தும் கலந்துரையாடலும்-விழிப்புணர்வு நிகழ்வுகளும்கூட ஒழுங்குசெய்யலாம். புகலிடங்களில் நடாத்தப்படும் தமிழ்பாடசாலைகள் மூலம் இவ்வாறான நிகழ்வுகள் நடாத்துவதற்கு வாய்ப்புண்டு.

இந்நாவலின் கதாநாயகன் வடகிழக்கை தாயகமாக கொண்டு வாழந்தபோது இவனிடம் இருந்த இனஉணர்வு தலைநகரில் வாழநேர்கையில் அவனுக்கு கிடைக்கும் நட்புகளால்- பெரும் உதவிகளால் அவன் தலையில் திணிக்கப்பட்டிருந்த கருத்துக்களுக்கு எதிராக நடைமுறை இருப்பது புலனாவது மட்டுமல்ல. இனத்துவேசம் பரப்பப்படும் அரசியல் ஆதாயங்களின் நச்சுக்கொள்கையை வெளிச்சமாக்குகிறது. மனிதநேயம் இனம்-மொழி-சாதி என்பவைகளை கடந்து நிற்பது. நாதனை இலங்கையிலிருந்து தப்பிக்கவைப்பதற்காக சிங்களநண்பர்கள் செய்யும் செயற்கரிய உதவிகள் செய்கின்றனர். தம்முடைய உயிரையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் நாதனை தப்பிக்க வைக்கின்றனர். காலம்காலமாய் இவ்விரு இனங்களும் ஒற்றுமையோடு வாழ்ந்ததும்-இன்னும் வாழுவதும் நாவலில் அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு பொருளாதார கேந்திர நிலையமாக தலைநகர் இயங்குவதால் பல்லினமக்களும் ஒன்றுகூடும்- பழகும் வாய்ப்பினை அது பெற்றுத்தருகிறது. பெருநகரங்களில் வாழ்வோர் எல்லாவர்க்கத்திலும்- பல்கலப்பினமக்களோடும் நெருக்கமாய் வாழ்வதை பார்க்கலாம். ஒருஇனத்தோடு இன்னொருஇனம் சேர்ந்து வாழவோ பழகவோ வாய்ப்பில்லாததையும்-இன-மத-சாதிவெறியையும் இத்தோடு கலந்து பயன்படுத்தி-அரசியல்ஆதாயம் பெறுவதற்காக எதிரியாக மற்றவனை கொல்வதற்கான சாணக்கியங்களை இனவெறிஅரசுகள் மேற்கொள்ளும் தந்திரங்களை உலகம்பூராக உதாரணங்களாக காட்டலாம்.

இனக்கலவரம் என்ற நச்சுஅரசியல்கொள்கையால் மக்கள் தூண்டிவிடப்படுகின்றனர். இனவெறி மனிதனிடத்து பரம்பரைபரம்பரையாய் ஊட்டபட்டிருக்கும் ஒரு விசம் என்றே புரியப்படவேண்டும். தாயகத்திலே 55.னதும் 83னதும் கலவரங்களின்போதான அட்டூழியங்கள் இந்த விசத்தினால் கக்கப்பட்டவை.

மனிதஉரிமை என்பதை அடிப்படையான சட்டமாக உருவாக்கிவைத்திருக்கும் ஜெர்மன் நாட்டிலே இனத்துவேசம் தொடர்ந்து வளர்க்கப்படுகிறது என்பதற்கு போதிய சாட்சியங்கள் உண்டு. நீறுபூத்த நெருப்பாய் இவ்வரசு கொண்டிருக்கும் நிலைப்பாட்டை 90களில் இங்கு அரசியல் அகதியாய் வாழநேர்ந்திருக்கும் நாதனுக்கு இழைக்கப்படும் அநீதியான செயல்பாடுகளில் இருந்து வெளிச்சமாக்கப்படுகிறது. நிறத்தில்- மொழியில்- இனபாகுபாட்டில் வேறுபட்ட அனைவருக்குமே; இந்நாடு கொண்டிருக்கும் சூழ்ச்சியான அரசியலை புரிந்துகொள்ளமுடிகிறது. மேலும் இக்காலகட்டத்தில் அகதிமுகாம் தீ வைக்கப்பட்டது- அகதிகள் உயிர்தப்பமுயன்றபோது சொந்தநாட்டின் இனவெறியின் குரூரமுகம் வேடிக்கை பார்த்தது- இத்தீவைப்பை கைகொட்டி சிரித்து வரவேற்றது ஆகியவை செய்திகளில் இடம்பெற்றன. இவ்வுண்மைநிகழ்வுகளை மீண்டும் வாசிக்கும்போது இனவெறி தன் முகத்தை வேறொருகோணத்தில் வெளிப்படுத்துவதை கவனிக்கமுடிகின்றது. ஈழத்திலே 83களில் நடைபெற்ற இனக்கலவரத்தையும் யூதர்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு- இரவுக்கொடுமைகளையும் இவைகள் நினைவுபடுத்துகின்றன.

பொதுவாகவே வளர்ந்த நாடுகளிடம் தம்மிடம் அகதியாய் வந்துசேரும் அகதிகளைப்பற்றி வஞ்சனையான கருத்துக்கள் உள்ளன.அரசியல் அகதி அல்ல.பொருளாதாரஅகதி,எங்கள் வேலைவாய்ப்பு பறிபோகிறது,எங்கள் பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது, எங்கள் கலாச்சாரம் அழிந்துபோகிறது,, என இனவாதமொழி கூப்பாடு போடுகிறது. இனவாத அரசியல்பின்னணி பற்றிய கேள்வி எழுப்பப்படவேண்டும். என்ற சிந்தனைகளை, இதற்கெதிரான போராட்டங்களை முன்னெடுக்கிற உள்ளூர்-வெளியூர் அமைப்புக்களின் முன்னெடுப்புக்களையும் நாவல் முன்வைக்க தவறவில்லை.

ரஞ்சித்தின் மொழியில் சம்பவங்கள் நேர்மையோடு பேசப்பட்டுள்ளன.

வாழ்ந்த நிலத்தைவிட்டு வெளியேறும் நிர்ப்பந்தமே கொடூரமானது. அதுவும் தாய்நாட்டிலிருந்து உயிர் தப்புவதற்காக வெளிநாடொன்றுக்கு எப்பாடுபட்டாவது வந்துசேர (இந்தப்பாட்டை அனுபவித்தோருக்கு தெரியும!) என்னென்ன மனிதக்கொடுமைகள் வழிநெடுக காத்திருக்கின்றன என்பவைகளும் தப்பிக்கிறவரை மன-உடல்ரீதியாக அழிக்கிற ஆக்கினைகளும் அகதிகளை துரத்திக்கொண்டே இருப்பவை. ஈழஅரசியல் பெண் அகதிகளின் அகதிப்பயணத்தின்போதான பாலியல்வன்முறைகள் பெண்ணின் உயிரையே உறிஞ்சுபவன. நாதனின் மனைவி கமலாவும் மிகமோசமானபாலியல் வன்முறைக்குள்ளாகுகிறாள். இயக்கங்களின் அதிகாரபோட்டியின்போதும் இவள் உடல்மீதான வன்முறை ஆயதமாக்கபட்டுள்ளது. போரற்ற சூழ்நிலையிலும்கூட இவளும் இன்னும் ஆயிரமாயிரம் பெண்களும் தம்முடல்களை வன்முறைக்கு காவு கொடுத்திருப்பதை-இன்னும் கொடுப்பதை நாவல் தோல் உரித்துக்காட்டுகிறது. நாவல்பாத்திரங்களாக நம்முன்னே தோன்றியிருக்கும் இபபெண்களுக்கு மேல் நிகழ்த்தப்படும் பாலியல்கொடுமைகள் இதயத்தை வருத்துகின்றன.

ரஞ்சித்தின் இவ்ஆக்கம் மிக இலகுவான நடையில்-மொழியில்; உருவாக்ப்பட்டிருக்கிறது. ஜெர்மன் மொழியில் ஆரம்பவாசிப்புடையோராலும் இந்நூல் கவனம் பெறவேண்டும்.

நாவலாசிரியர் தன் ஆக்கத்தை தன்சொந்தமொழியிலும் அதேசமயம் தமிழிலும் வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. இது ஒரு பாரிய வேலை. சிலவேளை இப்பணி ஒரு மொழிபெயர்ப்புமாதிரி தோற்றம் கொள்ளக்கூடியதாக தெரியப்படலாம். பல்வேறு பரிமாணங்களுடைய இந்நாவல் புகலிட- அரசியல் -விவாதங்களுக்கு பலதிறப்பட்ட கருத்தாளர்களையும் ஈர்க்க முனைகிறது.


கதை சொல்லும்பாணி-வேடிக்கை உரையாடல்-சொந்த நாட்டுப்பண்புசார் ஒழுக்கம்- ஒரு ஆற்றங்கரையோடு நடந்துசெல்லல் போன்ற நிதானமான வேகம்- ஆகியவைகள் ஒரு ஆசிய எழுத்தாளக்குரிய தனித்தன்மையாக(முத்திரையாக) நாவலில் புரியப்பட்டுள்ளது.

தாய்நாட்டை துறந்து காற்றில் - வானத்தில் தத்தளித்து திரியும் காற்றாடி போல கடைசியில் எங்கோயோ விழுந்து வாழ நேர்ந்த அகதியின் வாழ்வுப்பயணம்-எதிர்கொள்ளும் அவலம்-அனுபவம் புகலிடத்திலும் (தாயகத்திலும்தான்!) பேசப்படவேண்டிய அவசியம் உண்டென்பதை மறுக்கமுடியுமா?.

நாவலிலே உண்மைகள் உருவம் பெற்றிருக்கின்றன என்பதுதான் உண்மை.