Saturday, February 20, 2010


வங்கம் தந்த சிங்கம்!
- எஸ்.ஜி.ரமேஷ்பாபு-
வங்கம் தந்த சிங்கம்: ஜோதி பாசு['தோழரே, உங்கள் உடலுக்கு மட்டும் விடை தருகிறோம்' என்னும் தலைப்பில் அண்மையில் ம்றைந்த மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதி பாசு பற்றித் 'தடாகம்.காம்' இணையத்தளத்தில் வெளியான கட்டுரையின் மீள்பிரசுரமிது.] உலகினை புரிந்துக்கொள்வதற்கும் அதன் சூட்சுமங்களான தத்துவங்களை மக்களிடம் விளக்குவதற்கும் இறு வேறு தன்மைகள் உள்ளன என்று மனித குலம் நீண்ட நாள் நம்பி வந்தது. சாதாரண மனிதர்களால் உலகின் சூட்சுமங்களை அதன் அடிப்படையான தத்துவங்களை புரிந்துக்கொள்ள இயலாது என்றே பல தத்துவஞானிகள் நம்பினர், அவ்வாரே செயல்பட்டனர். ஆனால் கார்ல்மார்க்ஸ் மட்டுமே முதன் முதலாக அந்த வரட்டு நம்பிக்கையை உடைத்தெரிந்து, மக்கள் வாழ்நிலையை சார்ந்தே உலகின் சூட்சுமங்கள் என்று நம்பப்படுகிற தத்துவங்கள் இயங்கமுடியும் என்று நிருபணம் செய்தார். எந்த ஒரு தத்துவமும் சூன்யத்திலிருந்து பிறப்பதில்லை அது மக்கள் வாழ்நிலையை அதாவது பொருள் வயப்பட்ட வாழ்க்கையிலிருந்தே பிறக்கிறது என்பதை விஞ்ஞான அடிப்படையில் நிரூபணம் செய்தார்.

அந்த தத்துவர்த்த அறிவியல் நிரூபணங்களை முதலாய் கொண்டே லெனின், மாவோ, பிடல்காஸ்ட்ரோ, ஹோ-சி-மின் போன்றோர்களால் ஒரு புதுமையான, உழைக்கும் மக்களை முன்னணிப் படையாக கொண்ட ஆட்சிகளை வென்றெடுக்க முடிந்தது. மார்க்சியத்தை முன்னேறிய அறிவியல் துணையிடனும், நடைமுறை போராட்டத்துடனும் மேலும் வளர்த்தெடுத்தார் மாமேதை லெனின். நடைமுறையில் உள்ள முதலாளித்துவ பாராளுமன்றத்தை புரட்சிக்கான பாதையில் பயன்படுத்துவது குறித்து அவரால் சிறந்த வழிகாட்டுதல்களை செய்யமுடிந்தது.

இந்தியா போன்ற மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்ட நாட்டில், வர்க்க அணிதிரட்டலுக்கு தடையாய், ஆயிரக்கணக்கான சாதிகள் உள்ள நாட்டில் நினைத்த மாத்திரத்தில் ஆயுதம் தாங்கிய புரட்சியின் மூலம் மாற்றத்தை உருவாகிட முடியாது. அப்படி நினைப்பதும் நடப்பது மார்க்சிய மயக்கநிலை அல்லது வரட்டு சூத்திரம். "மாவோ பாதையே எங்கள் பாதை" போன்ற அறைவேக்காட்டுதனமான கோஷங்கள் பிறந்தது இந்த மயக்க நிலையால்தான். ஆனால் இந்தியாவில் முற்போக்கு அரசியலுக்கு மக்களை திரட்டும் அதே நேரத்தில், இடையில் பூர்ஷ்வா பாராளுமன்றத்தை, சட்டமன்றத்தை மக்கள் நலன் பயக்கும் மன்றமாக ஏன் பயன்படுத்தக்கூடாது? உழைக்கும் மக்கள் தத்துவமான மார்க்சியத்தை இந்தியா போன்றதொரு நாட்டில் கிடைக்கின்ற வாய்ப்பை வைத்து மக்களிடம் எப்படி கொண்டு செல்வது? இந்த கேள்விக்கு இந்தியாவில் வெற்றிகரமாக பதில் அளித்த கம்யூனிஸ இயக்கத்தின் தளகர்த்தாகளில் இ.எம்.எஸ் சும், ஜோதிபாசுவும் முக்கிய தலைவர் ஆவார்கள். இந்த பின்னணியில் தோழர் ஜோதிபாசுவின் பங்களிப்பை பார்பதுதான் அவரது பிரமாண்டமான ஆளுமையை புரிந்துக்கொள்ள உதவும்.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அடிநாதமாக திகழ்ந்த தோழர் ஜோதிபாசு. மேற்கு வங்கத்தில் நடைபெற்ற விவசாயிகளின் உரிமை கேட்ட போராட்டமான தோ - பாகா இயக்கத்தில், தேசப்பிரிவினை காலகட்டத்தில் மதவெறி கலவரத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், 1959 -ம் ஆண்டு பட்டினியால் வாடும் மக்களை பாதுகாக்க நடைபெற்ற மகத்தான உணவு இயக்கத்தில், 1960 -களில் நடைபெற்ற நிலப் போராட்டங்களில், அவசரநிலை பிரகடணத்தை இந்திரா காந்தி அமலாக்கிய அரைப் பாசிச பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிரிக்க முடியாத தலைவராக, மக்கள் ஊழியராக திகழ்ந்தார். அவரது தலைமையில் அந்த மாநில மார்க்ஸிட் கட்சி மதச்சார்பின்மையை உயர்த்திப்பிடித்தது. அதானால்தான் 1977க்கு பிறகு மதக்கலவரம் நடக்காத மாநிலமாக மேற்குவங்கம் திகழ்கிறது. 1984ல் இந்திரா காந்தியின் படுகொலையை தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கிய மக்கள் வேட்டையாடப்பட்ட போது மேற்குவங்கத்தில் அவர்கள் பாதுகாப்பாக இருந்தனர். தோழர் ஜோதிபாசுவின் குறிப் பிடத்தக்க பங்களிப்புகளில் ஒன்று, சட்டமன்றப் பணியை சட்டமன்றத்திற்கு வெளியில் உள்ள மக்கள் இயக்கங்களேடும், தொழிலாளர் போராட்டங்களேடும் ஒருங்கிணைத்தது.

1964-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்ட போது மேற்கு வங்கத்தில் பிரமோத் தாஸ் குப்தாவுடன் இணைந்து மிகச் சரியான உத்திகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி கட்சியை மாபெரும் சக்தியாக வளர்ப்பதில் மிக முக்கியப் பங்காற்றினார். கட்சியின் அரசியல் பிரச்சாரங்களில், வெகுமக்கள் இயக்கங்களில், சட்டமன்றத்தில் தோழர் ஜோதிபாசு மகத்தான தலைமைப் பாத்திரத்தை வகித்தார். 1964-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட 9 உறுப்பினர் கொண்ட கட்சியின் முதல் அரசியல் தலைமைக் குழுவில் கடைசியாக உயிர் வாழ்ந்த தலைவர் ஜோதிபாசு இப்போது இல்லை.

1946இல் மாகாண சட்டசபைத் தேர்தலில் தோழர் ஜோதிபாசுவின் சட்டமன்றப் பிரவேசம் நிகழ்ந்தது. தான் விரும்புகின்ற வரை வெல்ல முடியாதவராக அல்லது மக்களால் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படுபவாராக அவர் இருந்தார். அப்போது முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்றத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பினை கட்சியின் செல்வாக்கை வலுப்படுத்துவதற்கும், மேம்படுத்து வதற்கும், சட்டமன்றத்திற்கு வெளியே நடக்கும் இயக்கங்களை வலுப்படுத்து வதற்கும் சீரிய முறையில் பயன்படுத்தினார். இரண்டுமுறை அவர் துனை முதல்வராக பணியாற்றினார். 1967 - 70ம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் ஐக்கிய முன்னணி அரசில் உள்துறை அமைச்சராக இருந்த சமயத்தில், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களில் காவல்துறை தலையிடுவதை அவர் அனுமதிக்கவில்லை. வங்கத்தில் தீவிரமடைந்த நிலப்போராட்டத்தின்போது, பினாமி நிலங்களை கண்டறிந்து அவற்றை எடுத்துக் கொள்ளும் விவசாயிகளின் போராட்டத்திற்கு அரசு குறுக்கே நிற்காது என்று ஜோதிபாசு அறிவித்தார்.

1977 ஜூன் 21, சரியாக காலை 10.30 மணிக்கு முதலாவது இடது முன்னணி அரசின் அமைச்சரவை பதவியேற்றது. அதன் முதல்வராக தோழர் ஜோதிபாசு பதவியேற்றார். அந்த நிலையை அவர் இப்படி விளக்குகிறார்

"என்னைத்தவிர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கிருஷ்ணபாத கோஷ், டாக்டர் அசோக் மித்ரா, பார்வர்ட் பிளாக் சார்பில் கனய் பட்டாச்சார்யா, ஆர்எஸ்பி சார்பில் ஜதின் சக்ரவர்த்தி ஆகியோர் அன்று பதவி ஏற்றனர். மேலும் 16 அமைச்சர்கள் ஜூன் 23ஆம் தேதியன்று பதவி ஏற்றார்கள். மேலும் 7 பேர் பின்னர் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். புதிய அரசாங்கம் மேற்கொண்ட முதல் முடிவு, அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வது என்பதுதான். அமைச்சரவை பொறுப்பு களை விநியோகிப்பதில் அனுபவத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது.

ஒரு சிலரின் நலன்களுக்கு ஏற்ற வகையிலேயே இப்போதுள்ள சட்டங்கள் அனைத்தும் அமைந்திருந்த நிலையில், எங்களுக்கு முன்னால் கடுமையான நேரம்தான் காத்திருந்தது. மாநில அரசிற்கும் மிகக்குறைந்த அதிகாரமே இருந்தது. இவற்றிலும்கூட மத்திய அரசின் தலையீடு இருந்தது. முந்தைய அரசு பறித்த உரிமைகளை மீண்டும் மக்களுக்கு வழங்குவதுதான் எங்களது முதல் கடமையாக இருந்தது.

இதற்கு முந்தைய ஐக்கிய முன்னணி அரசுகளைப் போல இந்த அரசாங்கத்தை கவிழ்க்கவே, பதவியிலிருந்து இறக்கவே முடியாது என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம். முதலாவதாக, முந்தைய காலங்களை ஒப்பிடும்போது இந்த முறை எங்களது வலிமை பெரிதாக இருந்தது. அடுத்து, இந்த முறை இடதுமுன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே ஒற்றுமையும் அதிகமாக இருந்தது. மக்களும் எங்களேடு இருந்தார் கள். எனவேதான் தலைமைச் செயலகத்திலி ருந்து மட்டுமே ஆட்சி செய்ய மாட்டோம் என்ற கோஷத்தை நாங்கள் எழுப்பினோம்".

- இடதுமுன்னணியின் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்த 36 அம்சங்களில் 21 திட்டங்களை அவர்களால் அமல்படுத்த முடிந்தது. மீத மிருந்தவை ஓரளவிற்கு நடைமுறைப்படுத் தப்பட்டது. நிலச்சீர்திருத்தம்தான் அவர்களது முன்னுரிமை திட்டமாக இருந்தது. குத்தகைதாரர்களை பதிவு செய்யும் இயக்கம் தீவிரமாக நடத்தப்பட்டது.

- விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சக்கூலியும் நிர்ணயிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் கொத்தடிமை முறையானது கடுமையான வகையில் நசுக்கி ஒழிக்கப்பட்டது.

- காங்கிரஸ், நக்சலைட் கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 1700 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 10,000 வழக்குகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. அரசியல் அமைப்புச்சட்டம் 311(2) சி பிரிவின் கீழ் வேலைநீக்கம் செய்யப்பட்டோர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர்.

- இடது முன்னணி அரசானது ஜனநாயக உரிமைகளை மீண்டும் மாநிலத்திற்கு அளித்தது மட்டுமின்றி, அதை வலுப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொண்டது.

- தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உரிமை வழங்கப்பட்டதோடு, நியாயமான காரணங்களுக்காக தொழிலாளர்கள் மேற்கொள்ளும் எந்தவெரு வேலை நிறுத்தத்தையும் அடக்கி ஒடுக்க போலீஸ் அனுப்பப்படாது என்று அறிவித்தனர். போலீஸ்காரர்களும் தங்களுக்கான சங்கம் உருவாக்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

- நீண்ட நாட்களாகவே சுயாட்சி பெற்ற அமைப்புகளுக்கும் நகராட்சிகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. இதையும் செயல்படுத்தினர். மூன்றடுக்கு பஞ்சாயத்து முறையை அறிமுகப்படுத்தி, அதிகாரத்தை பரவலாக்குவதற்கான சரியான திசைவழியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

- 1978 ஜூன் 4ஆம் தேதியன்று பஞ்சாயத்துகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. மொத்தம் 55,952 மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்கள் சரியான நேரத்தில் திரண்டெழுந்தனர். கிராமங்களின் தோற்றமும் மாற்றத்தை நோக்கிச் சென்றது. இந்த பஞாயத்து களின் மூலமாகவே இடது முன்னணி அரசு தனது நிலச்சீர்திருத்த திட்டத்தை துவங்கியது. சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலங்கள் கைப்பற்றப்பட்டு, நிலமற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. மின்சாரம், பாசனம் போன்ற இதர துறைகளிலும் கவனம் செலுத்தப்பட்டது.

கடந்த 33 ஆண்டுகளாக அந்த மாநிலத்தில் இடது முன்னணி படைத்த சாதனைகளுக்கெல்லாம் இந்த முதல் அரசாங்கம் அடிநாதமாய் இருந்தது எனில் அது மிகையில்லை. இன்று இந்தியாவில் நிலச்சீர்திருத்த சட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ள நிலங்களில் சரிபாதி மேற்குவங்க அரசு கொடுத்திருக்கிறது என்பதோடு ஒப்பிட்டு இந்த மகத்தான சாதனையை நம்மால் புரிந்துக்கொள்ள இயலும். கொடிய உணவு பஞ்சம் தாக்கிய மாநிலம் உணவு உற்பத்தியில் தன்னிரைவு அடைவது மகத்தான சாதனை. இது மக்களுடன் இடையறாது தொடர்பு கொள்ளும் இடத்தில் மட்டுமே சாத்தியம்

தனது சொந்த வாழ்க்கையில் அவர் நினைத்திருந்தால் அன்றிருந்த வங்கத்தில் உள்ள பல செல்வந்தர்களைப் போல் வாழ்ந்திருக்க முடியும். லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெறுவது 1930 ஆம் ஆண்டுகளில் அத்துனை எளிதானதல்ல. ஆனால் அவைகளை ஒதுக்கி தள்ளினார். தனது பட்ட மேற்படிப்பை முடித்து திரும்பிய அவர் தொழிற்சங்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்தியாவில் இருந்த பலதொழிற்ச்ங்கவாதிகளைப் போல் அவர் செயல்படவில்லை. தொழிலாளர்களுக்கு வர்க்க அரசியலை போதித்தார். அதனால்தான் அவர் தொழிலாளர்களிடம் நிலைத்திருக்க முடிந்தது. அவரது எளிமையான அனுகுமுறை அவரது சித்தாந்தம் கொடுத்தது என்பதை அவர் பெருமையுடன் குறிப்பிடுவார். மிகப்பெரிய தத்துவ விஷயங்களை மக்களுக்கு புரியும் மொழியில் அவரால் விளக்க முடிந்ததால்தான் அவர் பின்னால் மக்கள் அணி திரண்டனர். வெறும் வார்த்தைகளால் அடித்தட்டு மக்களிடம் சுதந்திரத்தை சொன்ன காங்கிரஸ் இந்திய நாட்டின் முதலாளிகளின் நலனை விட்டுத்தரவில்லை அன்றும் இன்றும். ஆனல் உன்மையான சுதந்திரம் உழைக்கும் மக்கள் விடுதலைதான் என்று கம்யூனிஸ்டுகள் போராடினார்கள் அன்றும் இன்றும். விடுதலை போராட்டத்துடன் உழைபாளிகளின் போராட்டத்தையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தையும் ஒன்றினைப்பதில், சுதந்திரத்திற்கு பின் அந்த உழைப்பாளி மக்களின் வாழ்வியல் போராட்டத்தையும் தோழர் ஜோதிபாசு ஒன்றிணைப்பதில் வெற்றி கண்டார்.

ஒரு வலுவான இயக்கத்தை கட்டிட அவர் தனது வாழ்நாளை அர்ப்பணித்தார். அரசு கொடுத்த வீட்டில்தான் இறுதிவரை வாழ்ந்தார். தனது வருமானத்தை கட்சிக்கு கொடுத்துவிட்டு கட்சி கொடுக்கும் சம்பளத்தில் வாழ்ந்தார். சொத்துக்களை சேர்க்கும் நோக்கம் அவருக்கில்லை என்பது அவரது வாழ்க்கை நிருபணம் செய்துள்ளது. சென்னையில் நடந்த கட்சியின் அகிலைந்திய மாநாட்டில் இதர பிரதிநிதிகளுடன் வரிசையில் நின்று தேனீர் பருகியது அதிசய தகவலாக தமிழக செய்தி ஊடகங்கள் பிரசுரம் செய்தன. இவையெல்லாம் தோழர் ஜோதிபாசுவின் சொந்த குண்நலன் என்று புகழ்ந்துரைப்பதை அவர் ஏற்றுக்கொள்வதில்லை. அது தனது இயக்கத்தின் இயல்பு என்பார். தனிநபர்களுக்கு வராற்றில் முக்கிய பாத்திரமிருப்பது உண்மைதான் ஆனால் தனிநபர்களே வரலாற்றை படைக்க முடியாது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி என்பதை அவர் புரிந்திருந்தார்.

ஒருவகையில் உண்மையும் அதுதான். திரிபுராவின் முதலமைச்சாராக பத்து ஆண்டுகள் பணியாற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் நிருபன் சக்ரவர்த்தி தனது பதவி காலம் முடிந்ததும் கையில் இரண்டு பெட்டிகளுடன் சாலையில் நடந்து சென்றார். நிருபர்கள் எங்கே போகிறீர்கள் என்று கேட்ட போது எனது கட்சி அலுவலகத்திற்கு என்றார். ஏனெனில் அவருக்கு சொந்தமாய் வீடு கூட கிடையாது. சமீபத்தில் மறைந்த மதுரையில் பத்து ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராய் இருந்த மோகனுக்கு சொந்தமாய் வீடு இல்லை. அவர் வைத்திருந்த வாகனம் எம்.80 கட்சி வாங்கி கொடுத்தது. தனி மனிதர் எவ்வுளவு உயரிய குணத்துடன் இருப்பினும் அவர் சார்ந்திருக்கின்ற இயக்கம் சரியான தத்துவத்தை கொண்டிருந்தால்தான் அந்த தனி நபரால் அதை செழுமைபடுத்த முடியும்.

அதனால்தான் தனக்கு பிரதமர் பதவி வாய்ப்பு கிடைத்த போதுகூட கட்சியின் ஒப்புதலை பெறாமல் அந்த பொறுப்பை ஏற்க முடியாது என்று உறுதியாய் நின்றார். அந்த கட்டுப்பாடும். உறுதியும் அவரது ஆளுமையின் அடையாளம். அந்த ஆளுமைதான் அவரை அரசியல் சிகரத்தில் நிறுத்தியது. மதசார்பின்மைக்காக, சமூக ஒடுக்கு முறைக்கு எதிராக, நிலமற்ற மக்களுக்கு ஆதரவாக இறுதிவரை போராட வைத்தது. இந்தியா போன்ற முதலாளித்துவ நிலபிரபுத்துவ அரசமைப்பு அதிகாரத்தினுள் இருக்கும் ஒரு மாநிலத்தில் ஆட்சியில் இருந்துக்கொண்டே, அதில் கிடைக்கும் வாய்ப்பை, மத்திய அரசின் கடுமையான பழிவாங்கும் போக்கு இருந்தால் கூட மக்களுக்காக எப்படி இயங்கலாம் என்பதை நடைமுறையில் சாதித்துக் காட்டியவர் அவர். அவரது இழப்பு இந்திய இடதுசாரி இயக்கத்திற்கு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி இருப்பது உண்மைதான். ஆனாலும் வெற்றிடம் எப்போதும் நிரம்பும் தன்மை உள்ளது என்ற உண்மையும் உடன் வருகிறது.

அரசியல் என்றாலே சாக்கடை என்று தினம்தினம் இளைஞர்கள் மத்தியில் கருத்து பிரச்சாரம் நடத்தப்படுகிறது. தனியார்மயம், தாளாரமயம், உலகமயம் போன்ற மயங்கள் வித்தைத்துள்ள சுயம் சார்ந்த வளர்ச்சி அதற்கு உரம் சேர்க்கிறது. தனது வாழ்க்கை மட்டும் பாதுகாப்புக்குறியது மற்றவர் குறித்து எதற்கு கவலை? என்பது யாரும் போதிக்காமல் ஊடகங்களின் வாயிலாக பொது புத்தியில் அடித்து இறக்கப்படுகிறது. அரசியலில் பதவி பெற எதுவும் செய்யலாம் என்பது தனது வேலைக்கு லஞசம் கொடுப்பதை போல இயல்பானது என நம்பவைக்கப்பட்டுள்ளது. அவரச உலகின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் பணம் சம்பாதிக்க படைக்கப்பட்டதாக மின்னனு ஊடகங்கள் போதிக்கின்றன. நெருக்கடிகளில் உழலும் மக்களுக்கு புதிய புதிய வடிவில், தோற்றத்தில், பெயரில் சாமியார்களும் சாமிகளும் தேவையாய் இருக்கிறது. கஞ்சா சாமியார் முதல் கார்ப்ரேட் சாமியார் வரை கடந்த 15 ஆண்டுகளில் அதிகரித்திருப்பது உலகமயத்தின் விளைவு என்பதை புறம் தள்ள முடியாது உண்மையாகி உள்ளது.

இப்போது மீண்டும் துவக்கத்திற்கு வருவோம். சாதாரண மனிதன் தனது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள தனக்கு மேலான ஒரு சக்தியை நம்பத் துவங்கும்போது சூட்சுமங்கள் நிறைந்த தத்துவங்கள் வேகமெடுக்கின்றன. உன்னால் எதுவும் முடியாது, எல்லாம் அவன் செயல் என்று தனது பிரச்சனைகளுக்குகாக போராடாமல் மக்களை பார்வையாளர்களாக வைத்திட இந்த தத்துவங்கள் விரும்புகின்றன. ஆனால் ஜோதிபாசுகள் வேண்டுவது, எதுவும் மக்களை மீறி நடப்பதல்ல, மக்கள் பார்வையாளர்கள் அல்ல பங்கேற்பவர்கள். மக்கள் தங்கள் போராட்ட சக்தியின் மீது நம்பிக்கைவைக்க வேண்டும். அரசியல் சாக்கடை என்று போதிக்கப்படுவது இளம் தலைமுறையை அதிலிருந்து விலக்கிவைக்கதான். ஏன் நேர்மையான அரசியல் இல்லை. என்னைப்போன்றவர்கள் இருப்பது தெரியவில்லையா? என்று தனது வாழ்க்கை மூலம் வினா எழுப்புகிறார். பதில் சொல்வது இளம் தலைமுறையின் கடமை என கருதுகிறேன்.

உங்கள் உடலுக்கு மட்டும் விடை தருகிறோம்

தோழர் ஜோதிபாசு! வீரவணக்கம்.
நன்றி :தடாகம்

Friday, February 19, 2010

Thursday, February 18, 2010


"இராவணேசன் " (கூத்துருவநாடகம்) என் பார்வையில்
-தர்ஷாயணீ லோகநாதன் -

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு அவர்கள்.

இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை.
காலம்- சனி(13.02.2010) மாலை 6.30மணி.


சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார்.
இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன்.


நாடகங்கள் என்றவுடன் வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண்ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறைஇதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள்மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப்பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லைஎனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது.


எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்றுஇடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள் நலிந்து போன கலைகளைமறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு காட்சிப்படுத்த மாட்டார்களா என்றிருந்தஎனக்கு இது மிகப் பெரும் தாக சாந்தி.இந்த கலைச் சேவையை பேரவாவினால்கொழும்பு- கலையிலக்கியப் பேரவை' தொடர்ந்தும் செய்துகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
"இராவணேசன்" என்கிறது மரபு தழுவிய கூத்துருவ நாடகக்கூத்து,
மரபைத்தழுவிய ஒரு பரீட்சார்த்த நாடக முயற்சி என்பதால் இப் பெயர்வரவேற்கக் கூடியதே. தனியே கூத்து என்றால் மரபு சார்ந்த எதிர்ப்பையும் , நாடகம் என்றால் அதன் கூத்துருவையும் நிராகரிக்க வேண்டி வந்திருக்கும், இன்றைய காலத்திட்கேற்ப இரண்டையும் இணைத்து தந்திருக்கிறார்கள். நாடகத்துக்கு உதவி நெறியாள்கை விமல் ராஜ் அவர்கள்.
(நன்றி- கஜேந்திரன் அண்ணா -புகைப்படங்கள் )
பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் நினைவோடு தொடங்கப்பட்டது.1960 களில் பேராதனைப் பல்கலைக் கழக மாணவர்களைக் கொண்டு அரங்கடப்பட்டஇந்நாடகம், இன்று சுமார் 45வருடங்களின் பின்னர் எம்மவர் பார்வைக்காக, காலமாற்றத்தோடு புரையோடி, உருத்திருந்தி காட்சிப்படுத்தப்பட்டது.


மேடை நாடகங்களைப் பொறுத்த மட்டில் அவற்றின் த்திரத்தன்மையை காட்டக்கூடியவை, அவை தங்கியிருக்கும் மேடை,களரி,அரங்கு போன்ற மக்கள் சூழ்அமைப்பேயாகும்;இருந்த போதிலும் இவை யாவற்றையும் பொருட்படுத்தாதுஒரு எளிமையான அரங்கில், விருப்பம் நிறைந்த பார்வையாளர்களைக் கட்டிப்போட்டு, குறுகிய இடப்பரப்புக்குள்ளாகவே ஆடல்கள்,பாடல்கள், போர்க்காட்சிகள், துரித அரங்க மாற்றங்கள் யாவற்றையும் மட்டக்களப்பிலேஇருந்து குழுத்தாங்கி வந்து செயல்புயலாக்கி விட்டார்கள். இந்தஇடப்பற்றாக்குறை அரங்கம் ஐரோப்பிய அரங்கின் தாக்கத்தைத் தந்தது உண்மை ! முதற்கண் அந்த திருப்தியான அர்ப்பனத்திட்கு நன்றிகள். உள்ளடக்க நிலையிலும்சமகால அரங்கப் போக்கில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக்கொண்டுஇருப்பதினாலும் விமர்சனத்துக்குரிய நல்ல நாடகம் என்ற வகையில் இதனைப்பற்றி எழுத முற்படுகிறேன். மேடையமைப்பை திருமதி .காஞ்சனா அவர்கள்நிர்வகித்திருந்தார்.


இந்நாடகம்,
# பழங்கூத்தை புத்தாக்கம் செய்து மரபியல் நெறிகளை சேர்த்துக்கொண்டமை,
# கூத்துருவ நாடகம் என்ற சட்டத்துக்குள் நின்று நவீன சிந்தனைப் பாங்கில்உள்ளீட்டை அமைத்துக்கொண்டமை,
# காப்பியப் பொருளை சமகாலத்து மக்களின் உணர்வுக்குள் கொணர்ந்தமைபோன்ற ரீதியில் முதன்மை பெறுகிறது.
தமிழர்களின் மரபு வழிப்பட்ட தேசிய வடிவம் கூத்து என்பதில் எவ்வித ஐயமும்இல்லை, இந்த ஒரு தேசியம் என்கிற விடயத்தை நாடக அரங்காககாட்சிப்படுத்தியமையும், அதனுடன் பிரதேச மரபை இணைத்துவடமோடியாடலாக அமைத்துக் கொண்டமையும் வலிமையான விடயம்.


அங்கு, கட்டியமுரைத்தல், பாத்திர அறிமுகம் போன்றவற்றை எடுத்தும், கூத்தின்யாப்பு என்று கூறக்கூடிய காப்பு ,மங்கலம் போன்றவற்றை விடுத்தும், நாடக; கூத்து முறைக்குள் நவீனத்தை சொருகி இருந்தார்கள். கட்டியக் காரர் அதாவதுகதை சொல்லி சூத்திர தாரியைப்போல் நாடகத்தின் கதைப்போக்கைஎடுத்தியம்புகிற பாணி கிரேக்க 'ஹோரசின்' சாயல். இவ்வுத்தி எமது நாடகக்கலைக்கு புதிது.


இசையைப் பொருத்தமட்டில் மரபுக் கருவிகளே பெரும்பாலும் பாவிக்கப் பட்டன, எனினும் ஹார்மோனியம், வயலின்(சரஸ்வதி) போன்றவையும்பயன்படுத்தப்பட்டமை குறிப்படித்தக்கது. பம்பை, தபேலா ( வேணுதாஸ்) மத்தளம்,உடுக்கை, சிம்பல்,( பேரா.மௌனகுரு) மற்றும்ஹார்மோனியம்(ஐரோப்பிய நாடகக்கலையில் பாவிக்கப்படுவது)( ரோஜின் ) யுத்தக் குறியீடான போர் முரசை மட்டும் அண்ணாவியார் உபயோகித்தமை, இளஞ்சந்ததியிடம் போர் தவறு என்கிறதயுணர்த்துவதாகப் பட்டது, இதுவும் நவீனபடிமக் குறியீடே.!
நாடக வெற்றியில் இன்னுமொரு பங்களிப்பு பாத்திரப் பொருத்தமும் நடிப்பும். இலக்கியத்தின் பாத்திரங்களை ஒப்பனையிலும், உருவகத்திரும் அந்த பிரதேசவாரியான பாங்கிட்கமைய மிக யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இராவணன், மண்டோதரி, கும்பகர்ணன், இராகவன், லக்குமணன்,அங்கதன், இந்திரசித்து,அனுமன், நீலன்.. பாத்திரங்களோடு பௌதீக அமைப்பும்எதுவாயிருந்தது. தனிப்பட்ட ரீதியில் பாத்திரங்களை விமர்சிக்கப் போகையில்நடிகர்கள் அனைவரும் ஓரளவு இசையுடன் பாடக்கூடியவர்களாயும், ஜதியில்ஆடக் கூடியவர்களாயுமிருந்தது, நுணுக்கம்!
அரங்கு நிறைந்த பார்வையாளர்கள்.ஒரு கட்டத்தில் திறந்த வெளியரங்கில்அரங்காடுபவர்களுக்கு மிகக் கிட்டவாகவே பாய் போடப்பட்டு அதிலும் நிறைந்தரசிகப் பெருமக்கள். பெரும்பாலும் குழந்தைகள்,பள்ளி மாணவர்களைக் காணமுடிந்தது. கூடவே அவர்கள் குதூகலப் படுவதையும்.
அரங்காடலுக்கு முந்தியதாக நாடகப் பாத்திரங்கள் சிலரை அரிதாரஒப்பனைகண்டதும் ஒரு குழந்தையைப் போல மனம் குதூகலிக்கத்தொடங்கிவிட்டது!
நாடகம் தொடங்கு முன் கலைஞர்களின் மும்மொழியிலுமான அறிமுகம்,பின்இலங்கையின் நவீன சிங்கள நாடகத்துறையின் பிதாமகர்களில் ஒருவரான திருபராக்கிரம நிரிஎல்ல அவர்களின் அறிமுகஉரை.


தொடர்ந்து பேராசிரியர் மௌனகுரு அவர்கள் மட்டக்களப்புக் கூத்தை நவீனநாடக அரங்கிற்குள் கொண்டு வந்தவர், தன்னை ஒருஎழுத்துரு,ஆடற்பயிட்சி,ஒருங்கிணைப்பு,தயாரிப்பு,நெறியாள்கை எல்லாமும்சார்ந்த அண்ணாவியாராக இன்றைக்கு நிலைப்படுத்திக்கொண்டார்.
அழிந்து வரும் நம் இயல்பியல் கூத்துகள்,நாடகங்கள்,நாட்டுப்புற இசைகள், இசைக்கருவிகள் யாவும் ஆவணப்படும் வகையில் பல நூறு இறுவட்டுக்களைஆவணப்படுத்தி இவற்றுக்கெல்லாம் நிலைப்பாடு தேடித்தந்தவர். பேராசிரியர். சு. வித்தியானந்தன் அவர்களின் நினைவுகளோடு இற்றைக்கு நாற்பத்தைந்துவருடங்களுக்கு முன் இதே நாடகத்தில் கும்பகர்ணப் பாத்திரத்தில் தாம் தமதுவது வயதில் நடித்தமையையும் நினைவு படுத்திக் கொண்டார். அதேஇளமைத்துடிப்புடன் போர் முரசை உரக்க முழங்கிய போது, கலைகளைவாழவைக்கும் கலைஞன் என்றும் இதே இளமையுடன் வாழ வேண்டும் என்றுமனது சொல்லிக் கொண்டது!


ஒரு நாடகத்தின் பாத்திர வடிவமைப்பிட்கும் அதன் இசைவுக்கும் ஒப்பனைமிகவும் இன்றியமையத ஒன்றாகும். இப்பின்னணியிலேயே ஒப்பனைக்கலைபற்றி அணுகவேண்டும். நாடகத்தில் இருவகைப்பட்ட ஒப்பனைக் கலைத்திறன்வெளிப்படுகிறது. முதல் படியாக நாடகக் கலைஞர்களுக்கு ஒப்பனை செய்தல். இரண்டாவது படியாக நாடக அரங்கினை அழகுபடுத்துதல் என இருபடிகளில்ஒப்பனை அமைகிறது
மரபுவழி நாட்டுக்கூத்துக்கள் பெரும்பாலும் ஊர்களிலே வட்டக் களரிகளிலேதிறந்த வெளி அரங்கில் இரவிரவாக அதிகாலை வரை நடைபெறும் . ஒளிஅமைப்பு வசதிகள் குறைந்த அந்தக் காலத்தில் நடிகர்களின் ஒப்பனைதுலக்கமாகத் தெரியும் பொருட்டு மிகையாக இருக்கும். இன்று அப்படியல்ல; இயல்பாய் இருந்தது. . நவீன நாடகங்களில் குறியீட்டு முறையிலானஓப்பனைகளைச் செய்து பாத்திரத்தின் குணாம்சங்களே மிகைப்படுத்திக்காட்டப்பட்டது. .


ஒப்பனையில் மரபு ரீதியாக 'வடமோடிக் கூத்தின்' ஒப்பனைகளை நோக்கினால், அரச பாத்திரங்களுக்கு 'சகிட முடி' என்கிற ஆபரணம் அணிவிக்கப்படும்.அது, கூம்பிய கோபுரம் போன்ற அமைப்புடையது. அழகிய பெரிய வேலைப்பாடுகள்கிரீடத்தைத் தாங்கி காணப்படும். பாரம் குறைந்த மரத்தைக் குடைந்தே இதனைச்செய்வர். மினுங்கல் கடதாசிகளும்,வர்ணங்களும் பூசப்பட்டிருக்கும், பார்ப்பதற்கும் மிகவும் கவர்ச்சியாகவும் இது அமைந்திருக்கும். தலையை விடஅளவில் பெரிதாய் இருக்கும் அக் கிரீடத்தை தலையிலே துணியைச் சுற்றிஅதன்மேல் அசையாதவாறு கட்டிவிடுவர். இது தான் மரபு. ஆனால் இங்குதுணியினால் செய்யப்பட்ட ஆபரணங்களையே அரச வம்சத்தார்அணிந்திருந்தனர்.

வடமோடியில்(மட்டக்களப்பு) அரசர்களுக்கு இடுப்பில் அணியப்படுவதுகரப்புடை” எனப்படும்.இங்கு கரை வைத்த காலுடையே அணியப்பட்டிருந்தது. இடுப்பிலிருந்து முழங்கால் வரைக்கும் பிரம்பாலான வட்டங்கள் கட்டப்படும். இங்கு கழுத்தணியில் மட்டுமே இது உபயோகிக்கப் பட்டது. முழுவதுமாககூத்தை அடிப்படையாகக் கொண்டதல்லாதது என்பதினால் குறைகூறுவதற்கில்லை. இங்கு ஒப்பனையை மேற்கொண்டிருந்தவர், ஜனகரளியகுழுவின் கைதேர்ந்த ஒப்பனைக் கலைஞர், திரு . பாலித அபேலால் அவர்கள்.


இன்று இங்கு நாடகக் கலையில் "பார்சி" நாடக மரபு ஒப்பனையே கடை பிடிக்கப்பட்டது. நவீன நாடகங்களில் இம்முறையே இப்போது கடைபிடிக்கப் படுவதுகுறிப்பிடத்தக்கது.
நாடக ஆரம்பத்தில், அத்தனை குழு நபர்களையும் அரங்கத்தில் வட்டமாக நிறுத்திவைத்து,ஆட்டத்தின் போது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கக் கூடியஅசைவுப் பயிற்சியையும், மனதின் திடத்திட்கு 'ஓம்' என்கிற ஆழ்ந்தஉச்சரிப்பையும் பார்வையாளர்களுக்கு முன்பாகவே நிகழ்த்தி,ஒவ்வொருமாணாக்கருக்கும் கைலாகு கொடுத்து,, அண்ணாவியாருக்கும்மாணாக்கருக்குமுள்ள பரஸ்பரம் உணர்த்தப்பட்டது. இது வழமையான மரபுஎன்கிற போதும்,பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு எப்படியிருந்ததோ, எனக்குகண்ணீர் வரச் செய்கிற நெகிழ்வைத் தந்தது. இந்த மாதிரியான பாரம்பரியங்கள்தாங்கிய செயற்பாடுகள், இளையவர்களுக்கு எதையோ புரியவைக்கிறது மாதிரிக்கிடந்தது. இவை தான் ஒரு நெறி கடந்த கலையின் நீடித்த நிலைக்கு அத்திவாரம். கலை வளர்க்கும் சாதனங்கள்!


தட்டியினால் ஆன அரங்க மாற்றம், குறிப்பாக சொல்லப்பட வேண்டியதே, இராவண சபையிலே பச்சை வர்ணத்தில் இருந்தமை இலங்காபுரி பசுஞ்சோலைமிக்கது என்று காட்டுவதாயும்; இராகவனது சேனையைக் காட்டும் போது, வெண்தட்டியரங்காகவும் இருந்தது. அதுவே இராகவனது துணையிழந்தசோகத்தைப் பிரதிபலிக்கும் படிமமாயமைந்தது.

தட்டி தாங்கி யுத்த வீரர்களாக இறுதியில் அறிமுகமான நாடகத்தின் அரங்கமாற்றுகையாளர்கள் நிர்மலகாந்தன் , மதிராஜ், திருச்செந்தூரன் , நிராஜ் , கின்ஸ்லிபேரின்பாகினி , மற்றும் பிரதீப் ஆகியோரே. இவர்களது நடிப்பும் உயர்வானதே.


அடுத்த காட்சி மாறுகையில், மாய்ந்து கிடக்கிற இராவணனது வைரமார்பிலேமண்டோதரி புலம்பியழுகிற காட்சிகளில், அரங்கம் வெண்தட்டியாக மாறுகிறது; சோகத்தின் பிரதிபலிப்பு. துக்கத்தின் வர்ணம் வெள்ளையாகிறது அங்கு;இந்நிலைபெயருகின்ற அரங்க நுட்பம் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்குபெருவியப்பாயமைந்தது.
கட்டியம் கூறுபவர்கள்(காளிதாஸ் மற்றும் மோகனதாஸ் ) "இராவணேசன்" பெயர் விளக்கமும் ,கூத்தின் நாயகனையும் அறிமுகம் செய்கின்றனர்.
'Take this road' ஈழத்து சினிமாவில் அறிமுகமான முகமும், 'ஜனகரளிய' அமைப்பின் கைதேர்ந்த நடிகருமான காளிதாஸ் அவர்களின் மிடுக்கான கட்டியக்கதை எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது. மற்றுமொரு கதைசொல்லியானமோகனதாசுக்கு மொழியை விட பம்பை,மத்தளம் போன்ற வார்த்தியங்கள் உச்சக்கட்டக் காட்சிகளின் போது கைகொடுத்தது. போர்க்காட்சிகளில் அவருடையவேகமான உணர்ச்சிக் குரலும் வார்த்திய வாசிப்பும் பார்வையாளர்களைஇருக்கையின் நுனிக்குக் கொண்டுவந்ததென்னமோ உண்மை.


'இராமன் இல்லையென்றால் அவதாரம் இல்லை:இராவணன் இல்லைஎன்றிருந்திருந்தால் இராமாயணம் இல்லை' என்கிற யதார்த்தக்கட்டியவுரையுடன் நாடகமாரம்பமாகிறது..!


இராவணன் என்கிற கம்பீரத்தின் தோற்ற முதல்வாயும், கூத்தின் நாயகனுமகியதிரு. ஜெயசங்கர் ஒப்பனையின் செழிப்போடு ஒரு துரித ஜாதிப்பாடலோடுஅறிமுகமாகிறார். ஆரம்பத்திலேயே குரலில் ஒரு விதத் தொய்வு, எதிர்பார்ப்பைக்குறைகின்றது. இராவண கம்பீரம் குறைந்து விட்டது போலக் கொஞ்சம் நெருடல். அன்றைக்கு முன்னம் இரண்டு தடவை பாரம்பரிய முறைப்படி ஒத்திகைநடந்ததும் இதற்கொரு காரணமாயிருக்கலாம்.
அங்கதன்(பிறேம்) , இராவண சபைக்குள் நுழைந்த விதம் யார் முகத்திலும்ஈயாடவில்லை, காப்பியத்தில் அவனது குறும்புத்தனம் அருமையாக விளக்கப்பட்டிருக்கும் இருப்பினும், இராவண அங்கத ஏட்டிக்குப் போட்டியானஉரையாடல்கள் அவ்வளவு உணர்ச்சிக்குள் இட்டுச் செல்லவில்லை.
அடுத்து நாடகம் முழுக்க வரக் கூடிய அருமையான பாத்திரம் மண்டோதரி,(சுயானந்தி) ஒவ்வொரு காட்சிகளிலும் சிறப்பான கைதேர்ந்த நடிப்பு, நேர்த்தியான பயிற்சியைக் குறிக்கின்றது. குரலிலும் இனிமை, ஜாதியுடன்இசைந்த பாடலைப் பாடுகையில் ஒரு இடத்தில் தனும் சுருதி பிசகவில்லை, அதுவே பாத்திரத்துக்கு இன்னுமொரு பக்கபலம்.
" போருக்குப் போகாதே மன்னா" என்று இராவணனைத் தடுக்கும் காட்சியிலும், இந்திரசித்து மடிந்து கிடக்கிற காட்சியில் "அம்மா, அம்மா, என்று அழைத்தபடிதிரிந்த என் புத்திரன் போர்க்களத்தில் அலறி விழுந்த போது யார் பெயரைஉச்சரித்தானோ என்று கதறும் போதும், எனக்குப் பக்கத்திலிருந்த 'பெரிய மனிதர்' ஒருவர் 'உச்சுக் கொட்டிக்' கலங்கியதைக் கண்டேன் ;பாத்திரத்தின் வலிமையது. மண்டோதரியின் ஒப்பனையும், தாயையும், துணைவியையும் ஒருபாத்திரத்துக்குள் கொணர எடுத்த முயற்சியும், இன்னுங்கூட நாடகம் முடிந்தபின்னும் மண்டோதரி நினைவில் நிற்கிறார். இராவணன் இறந்து போனகாட்சிகளில் மண்டோதரி புலம்பல் என்ற தனிப்படலமே கம்பராமாயணத்தில்இருக்கிறது, இருப்பினும் அக் காட்சிகளின் நீளம் போதாது ஒரு குறை. சீதையாகட்டும்,பாஞ்சாலியாகட்டும்,கிரேக்கத்தின் ஹெலன் குமாரிஆகட்டும்பெண்களை வைத்துத் தான் ஆண்கள் போர் செய்கிறார்கள்............ -- மண்டோதரி கூறுகின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் சமகாலத்துக்குப்கச்சிதமாகப் பொருந்துகிறது.
கும்பகர்ணன்,(விமல் ராஜ்) இன்னுமொரு சிறப்பான நடிகன். ஆடைஆபரணங்களும், ஒப்பனையும் சிறப்பு. கையில் 'கதை' தவிர்த்து வேல்வைத்திருந்தமையின் படிமம் இறுதிவரைக்கும் புரியவேயில்லை. போருக்குப்புறப்பட்டெழும் போததன் நாட்டியம், தீவிர பயிற்சியும்,தேர்ச்சியும் இருந்திருக்கவேண்டும் அவையே நடுக்குகிறது;அத்தனை ஆர்ப்பாட்டம். சிறு பாத்திரம் தான்என்றாலும் அருமை.

அடுத்து இந்திரசித்து,(தவராஜா) இராவணனின் வீர புதல்வன் என்கிற கம்பீரம்எல்லா இடத்திலும் குறைவு. போர்க்களத்தில் விபீடனச்சிற்றப்பனைக் கண்டுதிரும்பிவந்து எடுத்துரைக்கிற காட்சிகளின் முகபாவனையால், அரங்கில்எதிர்பார்ப்பில்லை. அத்தனை மத்திமம்!
இராகவன் (தயாபரன்) அளவான நடிப்பு, இன்று போய் நாளை வா என்று இராமன், சொல்கிற தருவாயில் இராவணனுடைய முகம் அஷ்ட கோணலாக ஒருதினுசான முகபாவம் காட்டும்; தேர்ச்சி மிக்க நடிப்பது.

சிறிய பாத்திரமேயானாலும் இலக்குவனது ( விவானந்த ராஜா) பாத்திரம் நீண்டநேரம் மனதில் நிற்கிறது, போராடல்களின் போது கையாண்ட திறமான நாட்டியக்கட்டங்களும் அதன் போததன் இசையும் உயர் ரகம். எனக்கு முன்னால் இருந்தசுடு மூஞ்சி' நண்பரொருவரே கையில் தாளம் போடத்தொடங்கிவிட்டாரென்றால், பார்வையாளனை எந்தளவுக்கு இசைஆக்கிரமித்திருக்கென்பதை நீங்களே ஊகித்துவிடுங்கள்.


தேராக வந்த இரு பெண்கள், டிலகஷனா ஆங்கிலத்தில் ஆரம்ப உரை சொன்னலாவண்யா , தேர்க்குதிரைகள் போலவே துரிதம். ஒரு ஜதியில் அவர்கள் தருகிறவிறுவிறுப்பு, முகத்துக்கு முகம் இராகவனும், இராவணேசனும் சந்திக்கிறபொழுதுகளின் உச்சக்கட்டத்தை மெருகூட்டியது.
நாடகத்தில் பொதுவாகவே, இறுதிக் காட்சிகளே அடிக்கோடிட்டுக் காட்டக்கூடியவை. அந்த யுத்தக் காட்சிகள் ஒவ்வொருவரையும் இருக்கையின் நுனிக்குக்கொண்டு வந்ததென்றால் மிகையாகாது, யுத்த பேரிகைகளின் முழக்கமும், கொம்பு ஊதப்படுவதும், தட்டி தாங்கிய போர் வீரர்கள் அரங்கத்தைமாற்றியமைப்பதும், "'ஹோ"' என்கிற பேரிரைச்சலும் ஆயிரம்யுத்தக்களங்களைக் கண்ட தமிழர் நமக்கு அன்றைக்கும் புத்திதாகத் தானிருந்தது. ஒவ்வொரு அரங்காடட்காரர்களினதும் தீவிர உழைப்பு அந்த இறுதிநொடிகளிலேயே புலப்பட்டுப் போக, சுமார் பத்து நிமிடங்கள் அவை யுத்தபூமியாகிவிட்டது, அரங்கினுள் நுழைந்து, எழுந்து, சென்று ஜய கோஷம்போடவேண்டும் போல் உணர்ச்சி வசப்பட்டிருந்தேன் . (யாரும் பார்த்திருக்காவிட்டால் அதைதான் செய்திருப்பேன். )யுத்தத்தின் போததன், இராவணேசனின்மாயப்படையால் தான் மறைக்கப் படுதலும் ,வீரர்கள் தேடித் திணறுகின்றகாட்சியும், அம்புகளின் மலைக்குள் இராகவனை மறைந்து விடுகிற சாகசமும், இறுதியில் இராகவனது முகம் பார்த்தபடி இராவணன் நிலத்தில் வீழ்ந்து மாய்ந்துபோகிறதும், உண்மையிலேயே உணர்ச்சிமயமான தருணங்கள்..!


"வெம் மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க, மனம் அடங்க, வினையம் வீய,
தெவ் மடங்க, பொரு தடக் கைச் செயல் அடங்க, மயல் அடங்க, ஆற்றல் தேய,
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்கா, நிலை அடங்கச் சாய்த்த நாளின்
மும் மடங்கு பொலிந்தன, அம் முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள் அம்மா"

சமகால நிகழ்வு எதையோ கண்முன் கொணர்ந்து நிறுத்தின மாதிரிக்கும் ஒருசிலேடை எண்ணம்; நடிப்பின் வழியும் காட்சியின் தாக்கமும் நாடகம்சற்றைக்குள் முடிந்து விட்டதே என்று சலிப்பாகப் போய் விட்டது, இன்னும் விடியவிடிய பாரம்பரிய முறையில் அரங்காடியிருந்தால் பார்த்துக்கொண்டிருந்திருக்கலாம் போலத்தோணியது .

மேடைக்குப் பின் செயற்பட்டவர்களைப் பற்றிக் கூறவேண்டும், உடை, மேடைவடிவமைப்பு, மேடைப் பொருட்கள் போன்றவற்றை அழகிய முறையில் ஆவனசெய்திருந்தார் திருமதி. வாசுகி.ஜெய்சங்கர்.
காட்சி மாற்றங்களின் போததன் இசையமைப்பு, பாடல்களில் தொனித்ததெளிவும், இயல்பும் நாடகத்தோடு ஒன்றிவிட வைத்தது,மரபு தழுவிய இசையைகூத்துருவ நாடகம் முழுதுமாக ,நுணுக்கமாகத்தந்திருந்த திரு .பிரதீபன்அவர்களை பாராட்டுக்கள் சென்றடைகின்றது. இசையின் மற்றுமொருஅங்கமான , பின்னணிப் பாடகிகளை பின்னிணைப்பாக சொல்லி விடுவதில்எனக்கு உசிதம் இல்லை, குறிப்பாக செல்வி. கீதா அவர்களின் குரல், மண்டோதரியின் புலம்பல்க்காட்சிகளில்,

'அன்னேயோ! அன்னேயோ! ஆ, கொடியேற்கு அடுத்தவாறு! அரக்கர் வேந்தன்
பின்னேயோ, இறப்பது? முன் பிடித்திருந்த கருத்து அதுவும் பிடித்திலேனோ?
முன்னேயோ விழுந்ததுவும், முடித் தலையோ? படித் தலைய முகங்கள்தானோ?
என்னேயோ, என்னேயோ, இராவணனார் முடிந்த பரிசு! இதுவோ பாவம்! '
சோகத்தைப் பிழிகிறது போன்ற கணீர் குரல், யாரைத்தான் கலங்கடித்திராது?,
மேழும் அபிராமி, சிவகௌரி, துஷ்யந்தி, ரூபினா, ஜெகதா, இவர்களதும்குழுயிசைப்பு, இவர்கள் மட்டக்களப்பு விபுலானந்தா இசை நடனக் கல்லூரிபட்டதாரி மாணவிகள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.


அதர்மம் தோற்க, தர்மம் வென்றதென்ரும், பெண்ணால் கெட்டான் இராவணேசன், உயிர்களைப் பிறப்பித்துப் போடும் பெண்கள் போர் விரும்பாதவர்கள். என்கிறதுபோன்ற பல வியாபகமான இறுதிக்கருதுகோளகளையும் பார்வையாளனைசுமந்து செல்லவைத்தது, நாடகம்.
இவ்வாறாக இரண்டு மணி நேரம் பார்வையாளனைக் கட்டிப் போட்டிருந்தகூத்துருவ நாடகம், இளந்தலை முறையினருக்குப் புதிது என்ற போதிலும் அதன்தார்ப்பரியத்தையும் மரபு தழுவிய சாடல்களையும் அதனது உத்வேகப்போக்குடன் கைப்பற்றிக்கொண்டோம். இதுவே ஒரு சிறப்பான கலைப்படைப்பின் உச்சக்கட்டமும் கூட...!
உண்மையில் நலிந்து போகின்ற இவ்வாறான கலைகளை புதிய போக்கில், இளஞ்சமுதாயத்தினருக்கு இட்டுக் காட்டுவதும், ஊக்குவிப்பதுமே இன்றையமுன் சமுதாயம் செய்ய வேண்டிய தலையாய கடமையாகும். ஈழத்தமிழர்களின்முது சோம்' என்ற வகையில் கூத்துக்கள் அங்கீகரிக்கப் படுகின்றன. கிட்டத்தட்டதமிழ்த் தேசிய சிந்தனையாக்கத்தின் விளைவு இது என்று கூடச் சொல்லலாம். எனவே எமக்கான தனித்துவங்களையும், மரபுகளையும் பேணுகின்றவகையிலும், எதிர்வினைகளின் அழகியல் முனைப்பிலிருந்து விடுபட்டுத்தெளிவதற்கும் நாம் இவ்வாறான கலைகளை செம்மையாக ஆதரிக்க வேண்டும். இன்றைக்கு இதன் தேவை கட்டாயம் என்றும் கூறலாம்.

நாடகத்தோடையே ஒன்றிப் போய் விட்டதால் இறங்க வேண்டிய தரிப்பிடம்தாண்டி இறங்கி விட்டு நடந்தே வீடு போய்ச் சேர்ந்தேன் என்றால் நம்புவீர்களோஎன்னமோ?...
நன்றி : உறுபசி

Wednesday, February 17, 2010



தோழர் கே .டானியலின் கல்லறை இருக்கிறது- கல்வெட்டு மட்டுமே காணவில்லை
-ஆதவன் தீட்சண்யா
எழுத்தாளர் தோழர் கே.டானியல் அவர்களின் கல்லறையை கண்டுவர முடியாத என் ஆதங்கத்தை நண்பர்கள் பலரும் தங்களது வலைப்பூக்களிலும் இணையதளங்களிலும் வெளியிட்டிருந்தார்கள். தீக்கதிர் நாளிதழும் வெளியிட்டிருந்தது. இன்னும் சில நண்பர்கள் இந்தக் கட்டுரை வேறுசில இணையதளங்களில் வெளியிடப்பட்டிருக்கிறதே என்று புருவத்தை உயர்த்தி தமது தளத்தில் வெளியிட முடியாதென உதட்டைப் பிதுக்கியிருந்தனர். எல்லாவற்றுக்கிடையிலும் டானியலின் கல்லறை பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. டானியல் கல்லறை குறித்த விசயம் இப்போது அந்த சுடுகாட்டில் மண்டியுள்ள புதர்களை சுத்தப்படுத்தும் வேலையை கிளப்பிவிட்டிருக்கிறது.
பிப்ரவரி 2 ம் தேதி வாக்கில் ஊருக்குப் போகவிருப்பதாகவும் அப்போது இதுகுறித்து விசாரிப்பதாகவும் தோழர் மார்க்ஸ் தெரிவித்ததையடுத்து ‘...இடுகாடு முழுவதும் மண்டிக்கிடக்கும் முட்புதருக்குள் டானியலின் கல்லறை சேதமின்றி இருக்கிறது தோழரே, நீங்கள்தான் சரியாய் தேடிப்பார்த்திருக்க தவறிவிட்டீர்கள் என்று மார்க்ஸ் சொல்ல வேண்டுமேன்று விரும்புகிறேன்...’ என்று முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.
நான் விரும்பி எதிர்பார்த்த அந்த தகவல் கிடைத்திருக்கிறது. டானியலின் கல்லறை என்னவானது என்று பார்த்தறியுமாறு தன்னிடம் அ.மார்க்ஸ் தெரிவித்ததன் பேரில் பொ.வேல்சாமி தஞ்சை இடுகாட்டுக்குப் போய் பார்த்துவிட்டு 08.02.10 அன்று அங்கிருந்து என்னை தொடர்பு கொண்டார். டானியலின் கல்லறை அவ்விடத்தில் இருப்பதாகவும் ஆனால் கல்லறையின் மீதிருந்த கல்வெட்டை யாரோ பெயர்த்தெடுத்துள்ளதால்தான் உங்களால் அடையாளம் காண முடியாமல் போயிருக்கிறது என்றும் தெரிவித்தார். ஆறுமாதங்களுக்கு முன்பும்கூட அந்த கல்வெட்டு இருந்ததாகவும், வேண்டுமென்றே ( அதாவது வேண்டாமென்று) பெயர்த்தெடுப்பதைப் போலிருப்பதாகவும், கல்வெட்டு இருந்த இடத்தில் தாறுமாறாக சிமெண்ட் பூசப்பட்டிருப்பது ஏனென்று தெரியவில்லை என்றும் வருத்தப்பட்டார். கல்லறையுள்ள பகுதியை யாரோ சிலதினங்களுக்கு முன்பு செதுக்கி சுத்தப்படுத்தியிருப்பதாகவும் கூறினார். எப்படியாயினும் தனது நண்பர் செல்வபாண்டியன் மூலமாக மீண்டும் புதிதாக கல்வெட்டு பதிக்க ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். டானியல் கல்லறையை அடையாளம் காட்டியமைக்காக அ.மார்க்ஸ்- பொ.வேல்சாமி ஆகியோருக்கு நன்றி.
காணவில்லை- டானியல் கல்லறை என்ற எனது முந்தைய கட்டுரையிலுள்ள கீழ்க்காணும் தகவல் பிழைகளுக்கு வருந்துகிறேன்.
1. கல்லறை எழுப்பியதில் அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி ஆகியோரது பங்களிப்பு குறித்து விடுபட்டிருந்தது. ‘டானியலின் கல்லறையை மக்கள் கலைஇலக்கியக் கழகம் கட்டியெழுப்பியிருந்ததாக தோழர்கள் சிலர் கூறினார்கள். அ.மார்க்ஸூக்கும், பொ.வேலுசாமிக்கும் இதில் கூடுதல் பங்களிப்பு இருந்திருக்கிறது...’ என்ற திருத்தத்தை கவின்மலர் மூலமாக நிச்சாமம்.காம், உயிர்மெய்.காம் உள்ளிட்ட தளங்களுக்கும் அனுப்பிவைத்தேன். சிலர் அந்த திருத்தங்களை வெளியிட்டுள்ளனர்.
2. மக்கள் கலைஇலக்கியக் கழகம் கல்லறையை எழுப்பியது என்ற குறிப்பும் பிழையானது. அந்த அமைப்பு இதனோடு யாதொருவகையிலும் தொடர்புபடவில்லை. உடன் வந்த தோழர்கள் சொன்ன இந்த தகவலை தோழர்.மார்க்ஸ் போன்றவர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளாமல் நானும் குறிப்பிட்டிருக்கக்கூடாது. உண்மையில் தானும் தனது சகோதரர்களுமே இக்கல்லறையை எழுப்பியதாக பொ.வேல்சாமி 08.02.10 அன்று என்னிடம் தெரிவித்தார்.
3. டானியல் பற்றிய வி.ரி.இளங்கோவன் கட்டுரையில் வெண்மணிக்குப் போய்விரவேண்டும் என்ற அவரது விருப்பம் நிறைவேறவில்லை என்பதான தொனி இருந்ததை வைத்து அதை அவ்வாறே குறிப்பிட்டிருந்தேன். டானியல் வெண்மணிக்கு சென்று வந்திருக்கிறார் என்ற தகவலை கரவைதாசனிடம் வி.ரி.இளங்கோவன் குறிப்பிட்டிருக்கிறார்.

Labels:

Tuesday, February 16, 2010


யுத்ததிற்குப் பின்னான இன்றைய சூழலில் புதிய ஜனநாயக கட்சியின் அழைப்பு.
ஊடகங்களுக்கான அறிக்கை 15.02..2010

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெறுமனே பாராளுமன்றப் பதவிகளைப் பெறும் குறுகிய பதவி ஆசையில் தனித்தனியே பிரிந்து நின்று போட்டியிடுவதால் ஜனநாயக இடதுசாரி முற்போக்கு சக்திகள் எவ்வித பலாபலன்களையும் பெற்றுக் கொள்ள முடியாது. அதேவேளை மக்களுக்கு மாற்று அரசியல் தெரிவும் இல்லாது போய்விடும். அத்துடன் இது வரையான காலத்தில் வெற்றி பெற முடியாத கொள்கைகளை முன் வைத்து உழைக்கும் மக்களையும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களையும் ஏமாற்றி பாராளுமன்ற ஆதிக்க அரசியல் சுகம் அனுபவித்து வந்த பழைமைவாத பிற்போக்கு மேட்டுக்குடி உயர் வர்க்க சிந்தனை கொண்ட அரசியல் சக்திகளை மக்கள் முன் அம்பலப்படுத்தி முறியடிக்கவும் முடியாது. எனவே மக்களுக்கான புதிய மாற்று அரசியல் கொள்கை வேலைத்திட்டத்துடன் ஐக்கியப்படக் கூடிய அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிடுவதே பயன் தரத்தக்க மக்களுக்குரிய அரசியல் மார்க்கமாக அமைய முடியும். இதனையே யுத்தத்திற்குப் பின்னான இன்றைய சூழலில் புதிய-ஜனநாயக கட்சி வற்புறுத்தி ஜனநாயக இடதுசாரி முற்போக்கு சக்திகளுக்கு அழைப்பு விடுக்கின்றது.

இவ்வாறு புதிய- ஜனநாயக கட்சி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பங்குபற்றறுவது பற்றி அதன் மத்திய குழு எடுத்துள்ள முடிவை கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல். வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ் அறிக்கையில், இன்றைய சூழலில் கடந்த அறுபத்தி மூன்று வருடகால முதலாளித்துவ பாராளுமன்ற ஆட்சி முறையின் கீழ் உழைக்கும் மக்களும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் எவற்றை அனுபவித்து வந்தார்கள் என்பது சிந்தித்துப்பார்க்கப்பட வேண்டியதாகும். வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும் பாராளுமன்றப் பதவிகளைப் பெறுவதிலும் அதன் மூலமான சுயநல சுக போகங்களை அனுபவிப்பதிலும் தமிழ் முஸ்லிம் மலையகத் தலைமைகள் முன்னின்ற அளவிற்கு மக்களின் அடிப்படை வாழ்வில் எவ்வித மாற்றங்களையும் பெற்றுத்தரவில்லை. அதற்குக் காரணம் ஆதிக்க அரசியலை முன்னெடுத்த பழைமைவாத பிற்போக்கு கொள்கைகளைக் கொண்ட கட்சிகளினதும் தலைமைகளினதும் செயற்பாடேயாகும்.

குறிப்பாக வடக்குக் கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த தவறான அரசியல் மார்க்கமே இன்றைய அவலங்களுக்கும் மக்கள் தவித்து நிற்பதற்கும் காரணமாகும். அத்தகைய பழைமைவாத பிற்போக்குத் தமிழ்த் தேசியவாதத் தலைமைகளின் தவறான தலைமையையும் வழிகாட்டலையும் மக்கள் இவ்வேளை உற்று நோக்க வேண்டும். அதனாலேயே பாராளுமன்றப் பாதையாலும் போராட்டப் பாதையாலும் மக்களுக்கு விமோசனம் பெறும் வழிகளைக் காட்ட முடியவில்லை. அதே பழைமைவாத பிற்போக்குத் தமிழ்த் தேசியவாத சக்திகளே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஊடாக மீண்டும் தமது ஆதிக்க அரசியலை முன்னெடுக்க முனைந்து நிற்கின்றன. இதனை இத் தேர்தலில் முறியடிக்கவும் புதிய மாற்று அரசியல் கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் முன் வைக்கவுள்ள ஒரே வழி மக்கள் சார்பு மிக்க ஜனநாயக, இடதுசாரி, முற்போக்கு சக்திகள் ஐக்கியப்பட்டு ஒரே அணியாகி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டு நிற்பதேயாகும். அதன் மூலம் பழைமைவாத பிற்போக்கு சக்திகளையும் அவர்களது குறுகிய ஆதிக்க அரசியல் நிலைப்பாட்டையும் அம்பலப்படுத்தி எதிர்க்க முடியும். அத்துடன் புதிய மாற்று அரசியலை மக்கள் மத்திக்குக் கொண்டு செல்லவும் மக்களை ஒரு வெகுஜனப் போராட்ட அரசியல் மார்க்கத்தில் அணிதிரளச் செய்வதற்கும். இது நல்ல ஒரு சந்தர்ப்பமாகும்.

தமிழ் முஸ்லீம் மலைய மக்களைப் பிளவுபடுத்தி குறுக்கு வழிகளையும் இனவாத உணர்ச்சிகளையும் குறுகிய சாதிவாதத்தையும் கிளறிவிட்டு வெறுப் பாராளுமன்ற ஆசனங்களைப் பெறும் சுயநல நோக்கங்களை தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும். அதன் மூலம் புதிய மாற்று அரசியலை முன்னெடுக்க முன் வரல் வேண்டும். அதுவே தமிழ் சிங்கள முஸ்லீம் மலையத் தமிழ் உழைக்கும் மக்களை ஓரணியில் அணிதிரட்ட வல்லதுமாகும்.

அதனாலேயே ஜனநாயக இடதுசாரி முற்போக்கு சக்திகளும் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரே அணியாக நின்று இத்தேர்தலில் பங்கு கொள்ள வேண்டும். அதன் மூலமே பேரினவாத ஆளும் வர்க்க முதலாளித்துவ சக்திகளையும் அவற்றின் இன, வர்க்க, சாதிய, பால் ஒடுக்கு முறைகளையும் அவற்றுக்கு துணை நிற்கும் ஏமாற்றுத் தலைமைகளையும் நிராகரித்து ஒரங்கட்டி உழைக்கும் மக்களுக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கும் விடுதலை பெறக் கூடிய புதிய மாற்று அரசியல் திசை மார்க்கத்தில் பயணிக்க முடியும் என்பதை எமது கட்சி வற்புறுத்தி நிற்கிறது.

- சி.கா.செந்திவேல் -

Saturday, February 13, 2010


சர்வதேச புகழ்பெற்ற பொதுவுடைமை தத்துவ ஆசான் தோழர் சண்முகதாசன். அசலகேசரி

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஓருவரும், சர்வதேச ரீதியாக மதிக்கப்படும், ‘மாஓ பாதை” கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிரேஸ்ட ஆலோசகராக விளங்கியவருமான தோழர் என். சண்முகதாசன் காலமாகிப் பதினேழு வருடங்களாகின்றன.

இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோதே, பல்கலைக்கழகப் படிப்பைமுடித்து வெளியேறி கட்சியின் முழுநேர ஊழியனாகச் சேர்ந்துகொண்ட தோழர் சண்முகதாசனின் அரசியல் வாழ்வு இலங்கைப் பொதுவுடமை இயக்கத்துடன் சமாந்தரமானது.

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஸ்ராலின் – ரொட்ஸ்கி தத்துவார்த்தப் பிரச்சினை எழுந்தபோதும், பின்னரும் ஸ்ராலின் கொள்கைகளை வலியுறுத்தி, முன்னெடுத்து தோழர் சண் புகழ்பெற்றார். அன்று வலிமைமிக்க தொழிற்சங்கமாக விளங்கிய இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக விளங்கினார்..

1960களின் முற்பகுதியில் சர்வதேசப் பொதுவுடமை இயக்கம் சோவியத் யூனியன் சார்பாகவும், சீனா சார்பாகவும் பிளவுபட்டபோது, இலங்கைக் கம்யுனிஸ்ட் கட்சிக்குள் சீனச்சார்பாக தத்துவார்த்தப் போராட்டத்தை முன்னெடுத்தார். சோவியத் யூனியனின் போக்கைத் ‘திரிபுவாதம்” எனக் கண்டித்தார்.

குருசேவ் முன்வைத்த ‘சமாதான சகவாழ்வு” என்ற சோவியத் பொதுவுடமைச் சித்தாந்தம் மார்க்சிஸக் கோட்பாடுகளை, புரட்சிகரத் தத்துவத்தைத் திரிபுபடுத்திவிட்டதாகக் குற்றஞ்சாட்டி நிராகரித்தார். சீனப் பெருந்தலைவர் மாஓசேதுங் சிந்தனைகளும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதல்களும் சரியானவை என்ற இவரது வாதங்கள் சர்வதேச ரீதியான கவனத்தைப் பெற்றன.


1964ம் ஆண்டளவில் கட்சி பிளவுபட்டது. கட்சியின் தொழிற்சங்க, வாலிபர் சங்க, கலை இலக்கியப் பிரிவுகளின் பெரும்பகுதியினர் சீனச்சார்பு அணியினராயினர். வடபகுதியிலும் கட்சியின் பெரும்பான்மையினர் இவர்களையே ஆதரித்தனர்.

சோவியத்சார்புப் பொதுவுடமைக் கட்சியினர் அன்று முதலாளித்துவப் பாராளுமன்றப் பாதையூடாக சோசலிச சமுதாயத்தைக் காணலாம் என்று கூறி வர்க்க சமரசமாகியதைச் சண் கடுமையாகச் சாடினார். தொழிலாளி – விவசாயி வர்க்கம் ஒரு வர்க்கப் போராட்டத்தின் – புரட்சியினூடாகவே விடுதலை பெறமுடியும் என்பதை வலியுறுத்தினார்.

1964-ல் இடதுசாரிகள் என்று சொல்லப்பட்டவர்கள் அரசுடன் இணைந்துகொண்டதை கடுமையாக விமர்சித்த சண், இது தொழிலாளி வர்க்கத்திற்கு மிகப்பெரிய துரோகம், இடதுசாரி இயக்கம் கண்ட மோசமான பின்னடைவு எனக் கண்டித்தார்.


மொஸ்கோவில் படித்துக்கொண்டீருந்தவரான ரோகண விஜயவீரா இடைநடுவில் நாடுதிரும்பி கட்சியில் இணைந்து தீவிர சீனச்சார்பாகக் காட்டிக்கொண்டார்.

கட்சி வாலிபர் சங்கத்தின் முக்கிய பொறுப்பிலிருந்தவாறு, கட்சி விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டார்.. மலையக மக்களுக்கெதிரான பிரச்சாரத்தையும் (இந்திய விஸ்தரிப்பு வாதம் என்றவகையில்) மேற்கொண்டார். இதனால் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்ட நிலையில் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.. பின்னரே அவர் ‘ஜே. வி. பி.” என்ற இயக்கத்தை உருவாக்கினார்.

அந்த இயக்கத்தின்மீதும், விஜயவீராமீதும் சண் முன்வைத்த கடுமையான விமர்சனம் குறிப்பிடத்தக்கது. ஜே. வி. பி. என்பது மார்க்ஸிச கொள்கைகளுக்கு எதிரான ஒரு பேரினவாத சக்தியென, அன்று சண் அடையாளங்காட்டியிருந்தமையைப் பின்னர் அரசியல் விமர்சகர்கள் பலரும் ஏற்றுக்கொண்டனர்.


சீனச்சார்பானதாக, பலம்பொருந்தியதாக வளர்ந்துவரும் கட்சியைப் பிளவுபடுத்தி அழிக்கவென சோவியத் உளவு நிறுவனத்தினால் பயிற்சியளிக்கப்பட்டு அனுப்பப்பட்டவரே விஜயவீரா எனச் சண் ஓரிடத்தில் குறிப்பிட்டார்.

அன்று சண் தலைமையில் கட்சி பெரும்வளர்ச்சிபெற்று வந்தது. தொழிலாளர்கள், விவசாயிகள், பல்கலைக்கழக மாணவர்கள், கலை இலக்கியவாதிகள் பலரும் கட்சி ஆதரவாளராகினர்.


அன்று இடதுசாரி இயக்கத்திலும், பாராளுமன்ற அரசியலிலும் ஜாம்பவான்களெனச் சொல்லப்பட்ட கலாநிதி என். எம். பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வா, பேர்ணாட் சொய்சா, டாக்டர் விக்ரமசிங்கா, பீட்டர் கெனமன் ஆகியோருக்குச் சித்தாந்தரீதியாகச் சவால்விடக்கூடிய அறிவாற்றல், ஆழ்ந்த புலமை, எழுத்தாற்றல், பேச்சாற்றல் மிக்கவராக, அவர்களுக்கெல்லாம் ‘சிம்மசொப்பனமாக” சண்முகதாசன் விளங்கினார். ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மும்மொழிகளிலும் ஆழமான அரசியல் பேருரைகளை நிகழ்த்தும் வல்லமையுள்ளவராக மதிப்புப்பெற்று விளங்கினார்.


இலங்கையெங்கும் நூற்றுக்கணக்கான மார்க்ஸிச வகுப்புகளை, கருத்தரங்குகளை மும்மொழிகளிலும் நடத்தியுள்ளார். ‘சண்முகதாசனின் வகுப்புகளில் கலந்துகொண்டேன்” என்பது அன்று பெருமைமிக்க அரசியல் தகுதியாகச் சிங்கள, தமிழ் மக்களால் கருதப்பட்டது.

மூத்த தொழிற்சங்கவாதியாகவும், தொழில் சம்பந்தமான சட்ட விடயங்களில் நிபுணராகவும் விளங்கிய இவர், இலங்கையெங்கும் தொழில் சம்பந்தமான வழக்குகளில் தொழிலாளர் சார்பில் ஆஜராகி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உதவியுள்ளார். வடபகுதியிலும் சினிமாத் தொழிலாளர் சங்கம், மில்க் வைற் சோப் தொழிற்சாலைத் தொழிலாளர் சங்கம், சிமெந்துத் தொழிற்சாலைத் தொழிலாளர் சங்கம் ஆகியனவுட்படப் பல சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சார்பில் வழக்குகளில் ஆஜராகி வெற்றிகண்டவர். இந்த வழக்குகள் பலவற்றில் முதலாளிகள் – நிர்வாகத்தினர் சார்பில் தமிழரசு – தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த சட்டத்தரணிகளே ஆஜராகினர் என்பது குறிப்பிடத்தக்கது. மலையகத்தில் ‘செங்கொடிச் சங்கம்” பின்னர் ‘புதிய செங்கொடிச் சங்கம்” ஆகியனவற்றின் மூலம் தொழிலாளார் ஐக்கியத்தைக்கட்டி வளர்க்கப் பாடுபட்டார்.


வடபகுதியில் தீண்டாமைக் கொடுமைக்கெதிரான பேராட்டம் கட்சிக்குப் பெருமை சேர்த்தது எனலாம். அன்றைய பாராளுமன்றப் பிரதிநிதிகள் தமது பதவிகளையும், வர்க்க நிலைப்பாட்டையும் காப்பாற்றிக்கொள்ள துரோகமிழைத்துவந்தவேளை, 1966 அக்டோபர் 21-ம் திகதி யாழ் முற்றவெளிப் பொதுக்கூட்டத்தில் சண் விடுத்த அறைகூவல் வடபகுதில் ஆலயப்பிரவேசப் போராட்டங்களுக்கும், தேநீர்க்கடைப் பிரவேசப் போராட்டங்களுக்கும் உந்துசக்தியானது.

சங்கானை – நிற்சாமம், கரவெட்டி – கன்பொல்லை, நெல்லியடி, சுன்னாகம், காங்கேசந்துறை, மட்டுவில், கொடிகாமம் உட்படப் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. இப்போராட்டங்கள் குறித்து இலங்கை வானொலி மௌனம் சாதித்தவேளைகளில் பீக்கிங் வானொலி உண்மைநிலை குறித்து தொடர்ந்து செய்திகளை ஒலிபரப்பியது. தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் மகத்தான வெற்றிகளைக் கண்டது. சண் தலைமையில் கட்சி இதற்கு உறுதுணையாகவிருந்து பூரண ஆதரவு வழங்கியது. தென்னிலங்கை மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொடுத்தது. இலங்கைப் பாராளுமன்றத்திலும்,தமிழ்த் தலைவர்களது வர்க்க நிலைப்பாடு அம்பலமானது..


1969-ல் மேதினம் கொண்டாடத் தடைவிதிக்கப்பட்டபோது அத்தனை அரசியல் கட்சிகளும் பின்வாங்கிய நிலையில், தடையை மீறி கொழும்பு, யாழ்ப்பாணம், மலைநாடு ஆகிய இடங்களில் படையினருடன் மோதி ஊர்வலமும் கூட்டமும் நடாத்தி வெற்றிகண்டது சண் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியாகும்.


1971 ஏப்ரலில் விஜயவீரா தலைமையிலான ஜே. வி. பி இயக்கத்தினரது காட்டிக்கொடுப்பிலான கிளர்ச்சியின்போது சண்முகதாசனும், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், அனுதாபிகள் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இக்காலத்தில் வடபகுதியிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசத் தலைவர்கள் தேடுதலுக்குள்ளாகியதால் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டனர்.. மக்கள் எழுத்தாளர் கே. டானியல் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். கட்சி சிதறடிக்கப்பட்டது. கட்சி அலுவலகங்கள், சொத்துக்கள் சூறையாடப்பட்டன. சுமார் ஒரு வருடத்தின் பின்னரே சண், டானியல் ஆகியோர் விடுதலையாகினர்.


வெளிநாட்டவர் எவரும் அனுமதிக்கப்படாத, கட்டுப்பாடு மிகுந்த கலாச்சாரப் புரட்சிக் காலகட்டத்தில் சண்முகதாசன் சீனா சென்றார். தலைவர் மாஓவைச் சந்தித்து உரையாடினார். உலக நாடுகள், கட்சிகளின் தலைவர்களில், தலைவர் மாஓவைப் பலமுறை சந்தி;த்து உரையாடிய பெருமைக்குரியவர் தோழர் சண்முகதாசன் மட்டுமே…


சீனப் பெருந்தலைவர் மாஓசேதுங் காலமாகியபின் ஆட்சிபீடத்தைக் கைப்பற்றிக்கொண்டவர்கள் அங்கு மாஓவின் கொள்கைகளைப் பின்பற்றியவர்களை ஒதுக்கத்தொடங்கினர். மாஓவின் ஆதரவுடன் மகத்தான கலாச்சாரப் புரட்சியை முன்னின்று நடாத்திய மாஓவின் மனைவியுட்படப் பலரைச் சிறையிட்டனர். இக்காலப்பகுதியில் சீன ஆட்சிபீடத்தினரால் வலியுறுத்தப்பட்ட ‘மூன்று உலகக் கோட்பாடு” சீரழிவுப் பாதையைக் காட்டுகிறது என சண் விமர்சித்தார் – நிராகரித்தார். இது பின்னர் உலக நாடுகளிலுள்ள புரட்சிகர இயக்கங்களின் கவனத்தை ஈர்த்தது. சண்ணின் அறிவாற்றல் மதிப்புக்குள்ளாகியது.


எழுபதுகளின் பிற்பகுதியிலும் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இது சண் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.


மாஓவின் கொள்கைகளையும், புரட்சிப்பாதையையும் முன்னெடுக்க உலகமெங்குமுள்ள மாஓ பாதைக் கட்சிகளுடன் நெருங்கிய தொடர்புகளை மேற்கொண்டார். அவர்களை ஒருங்கிணைத்து மாநாடுகளை நடாத்தி கொள்கைகளை முன்னெடுத்துச்செல்ல ஒத்துழைப்பும், ஆலோசனைகளும் வழங்கினார்.


இலங்கையின் தலைசிறந்த அரசியல் விமர்சகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் பலரும் அன்று கட்சியின் உறுப்பினர்களாக, ஆதரவாளர்களாக, அனுதாபிகளாக சண்முகதாசனின் பாசறையில் வளர்ந்தவர்களாவர்.


கட்சியின் ஆதரவுடன் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களில் தம்மை இணைத்து நின்ற, ஆதரவுச் சக்திகளாகத் திகழ்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்களில், பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சி. தில்லைநாதன், பேராசிரியர் என் சண்முகரத்தினம், கலாநிதி சி. மௌனகுரு, கே. டானியல், சுபைர் இளங்கீரன், இ. முருகையன், எச். எம். பி. மொகைதீன், சில்லையூர் செல்வராசன், செ. கணேசலிங்கன், என். கே. ரகுநாதன், நீர்வைப் பொன்னையன், எம். கே. அந்தனிசில், செ. யோகநாதன், செ. கதிர்காமநாதன், கே. தங்கவடிவேல், யோ. பெனடிக்ற் பாலன், சுபத்திரன், இ. செ. கந்தசாமி, கே. ஆர் டேவிட், புதுவை இரத்தினதுரை, எஸ். ஜி. கணேசவேல், எஸ் வில்வராஜ், க. தணிகாசலம், செல்வ பத்மநாதன், இ. சிவானந்தன், கே. பவானந்தன், வி. ரி. இளங்கோவன், நந்தினி சேவியர், தேவி பரமலிங்கம், நல்லை அமிழ்தன், பொன் பொன்ராசா, பாசையூர் தேவதாசன், குமார் தனபால், இராஜ தர்மராஜா, முருகு கந்தராசா, எஸ். முத்துலிங்கம், எஸ். கனகரத்தினம், க. இரத்தினம், கு. சிவராசா, அண்ணாவியார் கணபதிப்பிள்ளை, எஸ் சிவபாதம், ஆ. தங்கராசா, நா. யோகேந்திரநாதன், செல்லிதாசன், எம். செல்லத்தம்பி, முருகு இரத்தினம், நவின்டில் சிவராசா, சோதி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.


யாழ்ப்பாணம் – நவாலியைப் பிறப்பிடமாகக்கொண்ட சண்முகதாசன், பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர். பல்கலைக்கழகத்தில் அன்று சகல மாணவர்களையும் உள்ளடக்கிய மாணவர் சங்கத்தின் தலைவராக விளங்கிய காலம் முதல் புரட்சிவாதியாகச் செயற்பட்டு வந்தவர்.


யான், பிலிப்பைன்ஸ் நாட்டில் ஐக்கிய நாடுகள் தொண்டராகப் பணியாற்றிவிட்டு நாடு திரும்பியதும் தோழர் சண்முகதாசனைச் சந்தித்து உரையாடச் சென்றேன். அப்போது பிலிப்பைன்ஸ் நாட்டு அனுபவங்கள், அங்குள்ள அரசியல் நிலைமைகள், மக்களின் வாழ்நிலை, போராட்டங்கள் குறித்துப் பேசினேன் . என்னே.. ஆச்சரியம்… அங்குள்ள அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு, கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாடு, ‘புதிய மக்கள் படையின்” போராட்டம், மின்டனாவோ மாநிலத்தில் இயங்கும் ‘மோரோ தேசிய விடுதலை முன்னணி”யின் போராட்டம், மேற்கு மின்டனாவோவில் முஸ்லிம் மக்களுக்கான, பெயரளவிலான சுயாட்சி அரசு என்பன குறித்தெல்லாம் அற்புதமாக எடுத்துச் சொன்னார். அங்கு நேரில் பார்த்துவந்த எனக்கு அவரது விளக்கங்கள் ஆச்சரியத்தைக் கொடுத்தன. ஆம்.. அது தான் அவரது அறிவாற்றல்…! உலகின் எந்த நாட்டினதும் அரசியல் வரலாறு, நடப்பு நிலைமை, பொருளாதாரம், போராட்டங்கள் குறித்துக்கேட்டாலும் மூன்று மொழிகளிலும் விளக்கமளிக்கும் அற்புத ஆற்றல் அவருக்கிருந்தது.


தோழர் சண் கலை இலக்கியப் படைப்புகள் குறித்தும் மதிப்பிட்டு நெறிப்படுத்தும் தகமையுள்ளவர். ஒருமுறை, அமெரிக்க கறுப்பின மக்களின் வரலாற்றை ஓரளவு வெளிப்படுத்தும் ‘வேர்கள்” ( Roots)) நாவல் குறித்தும், முன்னர் வடசீனாவில் ஏற்பட்ட வரட்சி – பஞ்சம் குறித்து நெக்குருகச் சித்தரிக்கும் (தமிழிலும் வெளிவந்தது, பெயர் ஞாபகத்தில் இல்லை) ஒரு நாவல் குறித்தும் அவரோடு பேசிக்கொண்டது ஞாபகம்.


டானியலின் படைப்புகளை அவர் தொடர்ந்து வாசிப்பவர். டானியல் இறுதியாகத் தமிழகம் புறப்பட முன்னர் கொழும்பில் சண் வீட்டில் ஒரு சில தினங்கள் தங்கியிருந்தார். முன்னதாக சண்ணிடம் தனது அச்சேறாத ‘பஞ்சகோணங்கள்” நாவல் பிரதியைப் படிக்கக் கொடுத்திருந்தார். நாவலை முழுதாகப் படித்து முடித்த சண், அந்த நாவலின் முடிவில் மாற்றம் செய்வது நல்லது என டானியலிடம் குறிப்பிட்டது எனக்கு இன்றும் ஞாபகம். அதன்படியே டானியல் நாவலின் முடிவில் சிறிது மாற்றஞ்செய்து பிரசுரத்திற்கெனப் பேராசிரியர் அ. மார்க்ஸிடம் கொடுத்தார்.


1983-ம் ஆண்டுக்குப் பிறகு பேரினவாத ஒடுக்குமுறையின் உக்கிரம் தமிழ் மக்களைப் போராட்டப்பாதைக்கு உந்தித் தள்ளியதிலுள்ள நியாயத்தைச் சண் ஆதரிக்கத் தவறவில்லை. ஆனால், இதற்கும் சிங்கள முற்போக்குச் சக்திகளைப் புறம்தள்ளிய, தமிழ்த் தேசிய வாதத்திற்குள் மூழ்கிய சில தளம்பல் இடதுசாரிகளின் செயற்பாட்டிற்கும் மிக்க வேறுபாடு உண்டு.

சண் என்றும் ஒரு சர்வதேசியவாதியாகவே விளங்கியவர். மனித சமத்துவம், ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் எழுச்சி, போராட்டங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்ற கொள்கையிலிருந்து அவர் வழுவியதில்லை.


சர்வதேச தொழிற்சங்க அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான டொலர்கள் சம்பளத்தில் பணிபுரிய அழைப்புகள் கிடைத்தும், கொள்கையிலிருந்து கொஞ்சம் வழுவிக் கோடீஸ்வரனாக வாழ வழியிருந்தும், கொண்ட கொள்கைக்காக இறுதிவரை நேர்மைமிக்க சாதாரண மனிதனாகவே வாழ்ந்தவர். இவரது மனைவியும் இறுதிவரை இவரது இலட்சியங்களுக்கு ஏற்ப உற்றதுணையாகவே கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வாழ்ந்தவர்.


தோழர் சண் எழுதிய தமிழ், ஆங்கில, சிங்கள மொழிகளிலான மார்க்ஸிச விளக்கக் கட்டுரைகள் ஏராளம். பல நூல்களையும் இம்மொழிகளில் எழுதியுள்ளார். அவற்றுள் ‘மார்க்ஸிச நோக்கில் இலங்கை வரலாறு, தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைப் பாதை எது, வாழ்க்கை வரலாறு குறித்த நூல்” என்பன மிக முக்கியமான நூல்களாகும். சண் காலமாகிய பின்னரும் அவரது பல கட்டுரைகள் நூலுருப் பெற்றுள்ளன.


இருதய நோயினால் பாதிக்கப்பட்ட சண் இறுதிக் காலத்தில் இங்கிலாந்திலுள்ள மகளுடன் தங்கியிருந்தபோது 1993-ம் ஆண்டு மாசி மாதம் 8-ம் திகதி திங்கட்கிழமை காலை… ..74-வது வயதில் காலமானார்.

தோழர் சண் வாழ்நாள் எல்லாம் எந்த இலட்சியத்திற்காக உழைத்தாரோ, அந்த தத்துவத்தைத் தந்த பேராசான் கால்மார்க்ஸ் 1883-ல் இங்கிலாந்திலுள்ள ‘கைகேற்” பக்கத்திலுள்ள சமாதிப் பூங்காவில் அடக்கம்செய்யப்பட்டார். சண்ணும் கால்மார்க்ஸ் காலமாகி 110-வது ஆண்டில் பேர்மிங்காம் நகரில் அடக்கமானார்.

சர்வதேசப் புகழ்பெற்ற, ஒரு நேர்மையான அரசியல், தொழிற்சங்கவாதி, மார்க்ஸிசத் தத்துவ ஆசான் சண்முகதாசன். அவரது இழப்பு மார்க்ஸிச அறிவுலகுக்கு மட்டுமன்றி இலங்கைத் தொழிலாள, விவசாய வர்க்கத்திற்கும், ஒடுக்குமுறைக்குள்ளான சகல மக்களுக்கும் பேரிழப்பு என்பதில் ஐயமில்லை.


கொழும்பில் இயங்கும், ‘மார்க்ஸிச கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம்” சண் எழுதிய நூல்கள், கட்டுரைகளின் தொகுப்புகள் ஆகியவற்றை வெளியிட்டுவருவதுடன் கருத்தரங்குகள், அவரது நினைவுச் சொற்பொழிவுகளையும் ஒழுங்குசெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: பதிவுகள்


Thursday, February 11, 2010

Knipler mod demonstranter hovedsted på Srilanka

Politiet i Sri Lankas hovedstad Colombo brugte knipler mod hundredvis af demonstranter, som var på gaden for at støtte den tidligere hærchef og præsidentkandidat Sarath Fonseka. Han blev anholdt tidligere på ugen.

Det var anden dag i træk, at der blev demonstreret til fordel for Fonseka, og situationen bliver stadig mere spændt.

Opfordret til ro

Mindst otte personer blev såret under optøjer i dag.

Fonseka havde ellers opfordret sine tilhængere og de væbnede styrker til at forholde sig roligt og ikke lade sig provokere af, at han er blevet anholdt.

- Myndighederne forsøger at knække ham, men det vil ikke lykkes, siger hans kone.

Stod tidligere sammen
Myndighederne anklager Fonseka for landsskadelig virksomhed, men der er endnu ikke udarbejdet et anklageskrift. Præsident Rajapakse mistænkes for at stå bag.

Fonseka og Rajapakse stod side om side for et år siden, da de nedkæmpede oprørsgruppen De Tamilske Tigre. Men efter præsidentvalget er de to raget uklar. Især efter at Fonseka anklagede Rajapakse for at have snydt sig til sejren i præsidentvalget.