Showing posts with label அகல்யா பிரான்சிஸ். Show all posts
Showing posts with label அகல்யா பிரான்சிஸ். Show all posts

Tuesday, April 15, 2014

இருண்டிய யாழ்ப்பாணத்தின் ஒரு பாகம் - சீவல் தொழில் கூட்டுறவு சங்கங்களின் வெற்றிகளும் சவால்களும்.

-அகல்யா பிரான்சிஸ்கிளைன் அகிலன் கதிர்காமர் -

பரம்பரையாக சீவல் தொழில் செய்து வரும் ஒரு சமூகம் வரலாற்றில் சாதிரீதியான ஒடுக்கு முறைகளுக்கும் போர்காலத்தின் அழிவுகளுக்கும் முகம் கொடுத்தனர். அதற்கு கடந்த கால போராட்டங்கள் மற்றும் சமூக முயற்சிகளுடன் அமைக்கப்பட்டகூட்டுறவு சங்கங்களின் ஒத்துழைப்பு முக்கியமானது. ஆனால் அந்த சமூகம் இன்று சிக்கலான பொருளாதார நிலமைக்குள் தள்ளப்படுகின்றது.

1972ம் ஆண்டு தொடக்கம் 40 வருடத்திற்கு மேலாக இயங்கிக் கொண்டிருந்த பனை தென்னை வள அபிவிருத்திகூட்டுறவு சங்கங்கள் போர் முடிந்த 4வருடத்திற்கு பின்னர் திறந்த பொருளாதாரத்தாலும் சந்தையின் தாக்கத்தாலும் உடைந்து போகுமா?; யுத்தம் முடிவடைந்த பின்னர் ஏ-9 பாதை திறந்ததை தொடர்ந்து தெற்கிலிருந்து வருகின்ற சாராயம் பியர் என்பவற்றின் சந்தைப்படத்தல் மற்றும்; பார்களின் அதிகரிப்பு போன்றவற்றினால் கள் சாரயம் போன்ற உள்ளுர் உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியா நிலை காணப்படுகின்றது.மற்றும் அண்மைக் காலங்களில் விவசாய அழிவுகளினால் வருமானங்கள் வீழ்ச்சியடைந்திருப்பதால்; கள்ளுக்கான கேள்விகள் குறைந்துள்ளது. அத்துடன்இளம் தொழிலாளர்கள் இத் தொழிலை ஒரு சிலர் செய்த போதும் அவர்களும் குறிப்பிட்ட சில நாட்களுக்கு பின் கலாச்சாரம் சுய கௌரவம்சாதிரீதியிலான பார்வை போன்றவற்றினால் இன்று சீவல் தொழிலை கைவிடுகிறார்கள்.