-அருந்ததி ராய்-
'' இன்று உலகெங்கிலும்
பரபரப்பாக பேசப்படும் புத்தகமான Capital in the 21st Century என்கிற தனது புதிய
புத்தகத்தில் ஃபிரெஞ்ச்எழுத்தாளரும் பேராசிரியருமான தாமஸ் பிகெட்டி அமெரிக்காவில்
’தங்க முலாம் யுகம் ’ என அழைக்கப்பட்ட 19 ஆம் நூற்றாண்டின்
இறுதிப் பகுதியில் இருந்ததையொத்த பொருளாதார சமநிலையின்மை இப்போதும் உலகில் உருவாகி
வருவதை சுட்டிக்காட்டியிருக்கிறார். வங்கிகளும்நிறுவனங்களும் கோலோச்சும் இந்த
காலகட்டத்தில் கூட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சமமற்ற தன்மையை உருவாக்கும்
எந்திரமாக இருப்பது குடும்ப சொத்துக்களும் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த
தலைமுறைக்கு (வாரிசுகளுக்கு)அவை கை மாறுவதும் என்பதை வலுவான ஆதாரங்களோடு
நிறுவியிருக்கிறார் பிகெட்டி. இதன் படி பார்த்தால் சொத்து, அறிவு,சலுகைகள் எல்லாம்
வாரிசுரிமை அடிப்படையில்தான் என்கிற கோட்பாட்டைப் புனிதப்படுத்தியிருக்கும் இந்து
சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய்.''
