தலித் பேந்தர் இயக்கத்தின்
தலித் பேந்தர்ஸ் இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், மராட்டிய மண்ணின் புரட்சிகர கவிஞருமான தோழர் நாம்தியோ தாசல் அவர்கள் தன்னுடைய 63ஆம் வயதில் உடல் நலக் குறைவால் நேற்று (15.1.14) மரணமடைந்துள்ளார்.
தன்னுடைய 23ஆம் வயதில் மற்றும் இரு நண்பர்களுடன் இணைந்து அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக தோன்றிய கருஞ் சிறுத்தைகள் அமைப்பின் தாக்கத்தில் 'தலித் பேந்தர்ஸ்' என்னும் அமைப்பை தொடங்கினார். அம்பேத்கரிய இயக்கத்தின் புதிய போராட்ட வடிவமாக 'திருப்பி அடி' என்னும் முழக்கத்தை தன்னுடைய எழுத்துக்களிலும் அமைப்பின் செயல்பாடுகளிலும் அறிமுகப்படுத்தினார். இந்த சமூகத்தால் ஒடுக்கப்படும் பெண்கள் உள்ளிட்ட அனைவருமே தலித்துகள் தான் என்று தலித் பேந்தர்ஸ் அமைப்பின் கொள்கையாக பிரகடனம் செய்தார். அவருக்கு இந்திய அரசு 'பத்மஸ்ரீ' விருதும், சாகித்ய அகாடெமி 'வாழ்நாள் சாதனையாளர்' விருதும் வழங்கி சிறப்பித்தது.
No comments:
Post a Comment