வரும் பாராளுமன்றத் தேர்தலில் சிறுபான்மைத் தமிழர் மகாசபையும் சுயேட்சையாக போட்டியிடுகின்றது. அச்சுயேட்சைக் குழுவின் பிரச்சாரப் பிரிவு. தோழர் தெணியான் தலைமையிலே செயல்பட்டுவருகின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பாரளுமன்றதேர்தலில் சுயேட்சை குழுவாக போட்டியிடும் இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திட்கு தெரிவு செய்யபட்டால் தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுக்கும் அதேவேளை சிறுபான்மைத் தமிழரின் இனப்பிரச்சினை முன்வைக்கப்படும் என தோழர் தெணியான் ஐரோப்பிய தமிழ் வானொலி ஒன்றில் நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலின் போது செய்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளாக ஒடுக்கபட்ட மக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அதேவேளை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இடதுசாரிகட்சிகள் சிறுபான்மை தமிழர்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் எனவும் அந்த நிலமை தற்போதைக்கு இல்லை எனவும் இதனால் தான் ஒடுக்கபட்ட மக்களின் உரிமைகளையும் அவர்களின் நலன்களையும் பாதுகாக்கும் பொருட்டு ஒரு அரசியல் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்காகவே இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் பாரளுமன்றதேர்தலில் சுயேட்சை குழுவாக போட்டியிடுகிறது என தோழர் தெணியான் ஐரோப்பிய தமிழ் வானொலி ஒன்றில் நடைபெற்றஅரசியல் கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலின் போது புலிகளின் பலத்துடன் பின்கதவால் பாராளுமன்றம் சென்றவர்கள் இன்று நான்கு அணிகளாக பிளவுபட்டு இத்தேர்தலில் போட்டியிடும் போது சிறுபான்பை தமிழர்கள் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதன் மூலம் தமிழ்மக்களின் வாக்குகள் பிரிக்கபட்டு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் சிதைக்கபடுகிறது என்ற குற்றசாற்றை அவர் நிராகரித்தார்.
ஒடுக்கபட்ட மக்களின் உரிமைகளை அங்கீகரிக்காமல் தமிழ்மக்களின் ஒற்றுமைபற்றி பேசுவது தங்களின் பாராளுமன்ற கதிரைகளை பாதுகாத்து கொள்ளுவதற்காகவேதான் என தெரிவித்த தோழர் தெணியான் இவர்களிடையே ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த முடியாமால் தமிழர்கள் தமிழ் தேசியத்திற்க்காக வாக்களிக்க வேண்டும் என கேட்பது தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் ஓரு நடவடிக்கை எனவும் தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஒரு முற்போக்கு அரசியல்வாதி எம்மை அணுகி பாரளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுவது என பேசினார். ஆனால் தேர்தல் அறிவிக்கபட்ட பிறகு எமக்கு எம்முடன் எந்தவிதமான தொடர்பையும் அவர் மேற்கொள்ளவில்லை. அதன் பிறகு தான் இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை பாரளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக பத்திரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன் பிறகு கூட இடதுசாரி செயல்பாட்டாளர்களோ அல்லது முற்போக்கு சிந்தனையாளர்களோ எங்களை அணுகவில்லை.
அதனுடைய தாக்கம் தான் இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை பாரளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவது என முடிவினை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment