Sunday, January 18, 2015

பெருமாள் முருகனிடம் போலீசார் நடத்திய கட்டப்பஞ்சாயத்து - அதிர்ச்சித் தகவல்கள்

எழுத்தாளர் பெருமாள் முருகனை பலவந்தப்படுத்தி நாமக்கல்லை விட்டு வெளியேறுமாறு செய்ததது அந்த மாவட்டத்தின் போலீசாரே என்று எழுத்தாளரின் வழக்கறிஞர் ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளர்ர்.சில நாட்களுக்கு முன்னதாக `மாதொருபாகன்’ என்ற நாவல் எழுதியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகன் சாதி ஆதிக்க அமைப்புகளினாலும் ஆர்எஸ்எஸ் மதவெறி அமைப்புகளினாலும் மிரட்டப்பட்டு மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டு, அவர் எழுதிய நாவல்களை திரும்ப பெறுமாறு நிர்பந்திக்கப்பட்டார்.
இது மாவட்ட நிர்வாகத்தின் முன்பாகவே பேச்சுவார்த்தை என்ற பெயரில் நடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் நாமக்கல் ஊரை விட்டு தனது குடும்பத்தினருடன் வெளியேறிச் சென்று விட்டார். பின்னர் அவர் தான் எழுதுவதை நிறுத்தப்போவதாகவும் தனது நாவல்களை திரும்ப போவதாகவும் தனக்குள் இருக்கும் எழுத்தாளர் இறந்து விட்டதாகவும் மனம் நொந்து அறிவிப்பு வெளியிட்டார். ஒரு எழுத்தாளர் இப்படிப்பட்ட முறையில் நிர்பந்திக்கப்பட்டு எழுதுவதையே நிறுத்தும்படி செய்வதும் ஊரைவிட்டு விரட்டியடிப்பதற்கும் தமிழகம் முழுவதும் கண்டனம் எழுந்தன.

Friday, January 16, 2015

நாங்கள் பெருமாள் முருகனுடன் தான் இருக்கின்றோம்

  • புலம்பெயர்ந்த இலங்கை எழுத்தாளர்களது கூட்டறிக்கை:

எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவலான 'மாதொருபாகன் 'பிரதிமீது இந்துத்துவ - சாதிய சக்திகள் கோரும் தடையையும், அவர்கள் கொடுக்கும் நெருக்கடியிலிருந்து பெருமாள் முருகனைக் காப்பாற்றத் தவறியிருக்கும் தமிழக அரசையும் புலம்பெயர்ந்த இலங்கை எழுத்தாளர்களான நாங்கள் எங்களது இந்தக் கூட்டறிக்கை வழியே  வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கருத்துச் சுதந்திரத்திற்கு எல்லைகள் கிடையாது. அவ்வாறு எல்லைகள் இருப்பின் அவை உண்மையில் ஒழுங்கமைக்கப்பட்ட மறைமுகத் தடைகளே. மதம் அல்லது சாதி போன்ற சமூக பிற்போக்கு அமைப்புகளால் கருத்துச் சுதந்திரத்தின் மீது வைக்கப்படும்  தடைகள் மட்டுமல்லாது; அரசு இறைமை, இன விடுதலை, புரட்சி, சமத்துவம் போன்ற முற்போக்கு முழக்கங்களுடன் வைக்கப்படும் கருத்துச் சுதந்திரம் மீதான தடைகளும் முழுமையாகக் கண்டிக்கப்படவேண்டியவை என்பதை நாங்கள் அனுபவபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் நன்கறிவோம்.

மதவாத - சாதிய சக்திகளின் நெருக்குவாரங்களை எதிர்கொள்ள முடியாத நிலையில் எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது முழு இலக்கிய எழுத்துகளையும் மீளப்பெற்றுக்கொள்வதாகவும் இனிமேல் தான் இலக்கியம் எழுதமாட்டேன் எனவும் அறிவித்திருப்பது சமூகத்தின் கூட்டு அவமானமும் துயருமாகும்.

எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது முடிவை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக இருக்கும் அனைத்துச் சக்திகளிடமிருந்தும் கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்றும் பொறுப்பைத் தமிழக அரசு உணர்ந்து செயற்படவேண்டுமெனவும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

மு.நித்தியானந்தன்  (இங்கிலாந்து )
எஸ்.ரஞ்சகுமார்  (அவுஸ்திரேலியா) 
இளவாலை விஜேந்திரன் ( நோர்வே) 
நிர்மலா ராசசிங்கம் (இங்கிலாந்து )
ஷோபாசக்தி (பிரான்ஸ்) 
நட்சத்திரன் செவ்விந்தியன் (அவுஸ்திரேலியா) 
புஷ்பராணி (பிரான்ஸ்)
மெலிஞ்சி முத்தன் (கனடா) 
உமா (ஜேர்மனி)
ஹரி ராஜலட்சுமி (இங்கிலாந்து) 
சயந்தன் (சுவிற்சர்லாந்து) 
கவிதா (நோர்வே) 
சுமதிரூபன்  (கனடா) 
தர்மு பிரசாத் (பிரான்ஸ்)
தேவன் (சுவிற்சர்லாந்து) 
ஏ.ஜி. யோகராசா (சுவிற்சர்லாந்து) 
நற்கொழுதாசன் (பிரான்ஸ்) 
கற்சுறா (கனடா) 
தர்மினி (பிரான்ஸ்) 
பதீக்அபூபக்கர் (இங்கிலாந்து) 
விஜி (பிரான்ஸ்) 
கரவைதாசன் (டென்மார்க்) 
தமயந்தி (நோர்வே) 
சுரதா யாழ்வாணன் (ஜேர்மனி)
எம். ஆர்.ஸ்டாலின் (பிரான்ஸ்) 
புதியவன் இராசையா (இங்கிலாந்து) 
ராகவன் (இங்கிலாந்து) 
க.சுதாகரன் (சுவிற்சர்லாந்து)
ச.தில்லை நடேசன்( பிரான்ஸ் )
பானு பாரதி (நோர்வே) 
ஜீவமுரளி (ஜேர்மனி) 
அதீதா (கனடா) 
தேவிகா கெங்காதரன் (ஜேர்மனி) 
விஜயன் (சுவிற்சர்லாந்து) 
கோமகன் (பிரான்ஸ்) 
சஞ்சயன் (நோர்வே) 
அசுரா (பிரான்ஸ்) 
பத்மநாதன் நல்லையா (நோர்வே) 
இளங்கோ (கனடா )
காருண்யா கருணாகரமூர்த்தி (ஜெர்மனி) 
சரவணன் நடராசா (நோர்வே) 
கலையரசன் (நெதர்லாந்து) 
திருமாவளவன் (கனடா) 
பத்மபிரபா (சுவிற்சர்லாந்து)
சந்துஸ் (இங்கிலாந்து) 
தேவதாசன் (பிரான்ஸ்) 
மீராபாரதி (கனடா) 

Saturday, January 03, 2015

எஸ்.பொ. அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

ஈழம் ஈன்றெடுத்த பிரபல எழுத்தாளரான எஸ்.பொ. அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 04.01.2015 ஞாயிறு மாலை 15.30 வயன் நகரத்தில் சிறப்பாக நடைபெற இருக்கிறது.
அனைவரும் அழைக்கப்படுகிறார்கள், இது குறித்த அறிவித்தல் வருமாறு :
sun

Friday, January 02, 2015

செய்வதெல்லாம் எதிர்ப்பு அரசியல் என்றோ, புரட்சிகர அரசியல் என்றோ பதாகை எழுதித் திரியும் தேவை இதுவரைக்கும் ஏற்பட்டதில்லை.

-ந.சுசீந்திரன்- 
முற்கற்பிதங்களையும், விசமப் பிரச்சார உள்நோக்கங் கொண்ட வதந்திகளையும், தனித்த வெறுப்புக்களையும் அடிப்படையாகக் கொண்டும் நிகழ்வுகள் புரிந்து கொள்ளப்படுகின்றன.
அப்படித்தான் ஜம்பவான்கள் போன்று தோரணைதரும் பலரது புரிதல்களும் காணப்படுகின்றன. அவ்வாறான புரிதல்களில் இருந்தே ஒரு கருத்துருவாக்கத்தை, அக் கருத்துருவாக்கம் நியாயமற்றது, எல்லாப் பரிமாணங்களில் நோக்கினாலும் தலைகீழானது, இயங்கா நிலைதேடிச் செயலிழக்கச் செய்வது என்பதை தெரிந்து வைத்திருந்தும், அக் கருத்துருவாக்கத்தைச் சிருஷ்டித்து விடுகின்றனர். பின்னர் அதனை நிலைநிறுத்த, மிகவும் மலினமான தர்க்கங்களை, அவசர அவசரமாக இறைத்து விடுகின்றனர்.
நாம் செயற்படுவதென்பது மற்றவர்கள் எதை விரும்புவார்கள், எவ்வாறு பொருள் கோடல் செய்வார்கள் என்பதைப் பொறுத்ததல்ல. அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் போல, இப்படிப்பட்டவர்களது புறநிலைப் பார்வை சகிக்கமுடியாதபடி முற்றிலும் அபத்தமானதாக இருக்கின்றது, நாம் சற்றே குலைந்துவிடும்போது, எமக்கு பெரிய மனச் சோர்வினையையும் அவை தந்துவிடுகின்றன.
ஆனால் கிசுகிசுச் சமாச்சாரங்களில், கள்ளச் சந்தோஷமடைகின்ற பேர்வழிகள், பேரில்வழிகளுக்கு இவை உற்சாகத்தைக் கொடுக்கின்றன போலும்.
போருக்குப் பின்னர் புகலிடத்தில் இடம்பெற்ற பல சிறு-, பெருவிடயங்கள் குறித்து இலங்கை அரசுக்கு உளவுச் செய்தியாகச் சென்றுவிடச் சாத்தியங்கள் உள்ளதால் பலவற்றைச் சிலகாலங்கள் வரை எழுதமுடியாது. அப்படி எழுதுவது பொறுப்பற்றது. பல நண்பர்களின் பெயரைச் சொல்லமுடியாது.
முஸ்லிம் பெண்ணொருவர், இலங்கையின் வடபகுதியில் தமிழ்ப் பெண்கள், தமிழ் பெண் போராளிகள், போராளிகளின் விதவை மனைவிகள் எதிர்கொள்ளும் இன்னோரன்ன பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க, வெளிக்கொணர, அவர்களுக்கு வாழும் துணிவை ஏற்படுத்தத் தன்னால் முடிந்ததைச் செய்துகொண்டிருக்கின்றார். அவரது வழங்கும் தகவல்கள் எங்களை உறைய வைத்து விடுகின்றன.
இலங்கை அரசு இரசாயன ஆயுதங்களைப் பிரயோகித்துள்ளதா என்பதைக் கண்டறிய போர் நடந்த சில இடத்து மண் பரிசீலிக்கப்பட்டிருகின்றது.
நான் இலங்கை அரசினதோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளினதோ ஆதரவாளானாக ஒரு போதும் இருந்ததில்லை. இலங்கையில் நடைபெற்ற, நடைபெறுகின்ற சிறுபான்மை இனங்களின் மீதான அடக்குமுறைக்கு எதிரான செயற்பாடுகள் தொடக்கம் அண்மைய, சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்களின் விடுதலை வரை, அது எள்ளின் அளவேயாயினும், எமது சக்திக்கேற்பச் செய்து கொண்டிருகின்றோம். வண. நந்தன அவர்கள் கண்டியில் இருந்து சிறைக் கைதிகளுக்காக ஆற்றும் பணிக்கு நான் தலை வணங்குகின்றேன். எக்னாலிகொட காணாமற் போகச் செய்ததன் பின்னர், சந்தியாவின் போராட்டம் தொடர்கின்றதல்லவா, அவர் சந்திக்கும் அவதூறுகள், குழிபறிப்புக்கள் சொல்லி மாளாது. போர்க் குற்றவாளி ஜெனரல் டயஸ் ஜெர்மனியின் தூதுவராகச் சிலகாலம் இருந்தபோது அவரைக் கைது செய்து சர்வதேச நீதி மன்றத்தின் முன் நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான பங்களிப்புக்கள் எப்படி இருந்திருக்கும்!
அண்மையில் றுக்கி பெர்னாண்டோ ஒரு கருத்தினைத் தெரிவித்திருந்தார். இனி, “ஐ.நா வை நம்பிப் பிரயோசனமில்லை.” அவரது அனுபவத்தில் சொல்கின்றார். இது எமக்கு எப்பவோ தெரியும் என்று இலகுவாகக் கூறிவிட எம்மால் முடியாது. இலங்கை அரசு பொய் சொல்கின்றது என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்த மேற்கொண்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் பலவகை அச்சுறுத்தல்கள் இலங்கையில் இருந்தபோதும் நிமல்கா பெர்னாண்டோ, சுனந்த தேசப்பிரிய, போன்ற சிங்கள இனத்தவர்களும் தான் என்பதை எத்தனை தமிழ்ப் புத்திஜீவிகள் தெரிந்து வைத்திருக்கின்றனர் எனபது கேள்வியாகவே இருக்கின்றது. இவர்கள் செய்யும் எதிர்ப்பு அரசியலின் மதிபீட்டுக்காக எங்கள் அன்றாட வாழ்வும் இல்லை. சமூகமும் இல்லை.
இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கான ஒரு அரசியல் தீர்வை எப்பொழுதும் வலியுறுத்தி, அதிகாரப் பரவலாக்கம், சமஷ்டி என்று சொல்லப்படுகின்ற மாநிலங்களின் சுயாட்சி போன்ற தீர்வுகளைப் பற்றி தென்னிலங்கை மக்களுக்கு மத்தியில் கொண்டு செல்ல முயற்சித்தவர்கள், இலங்கையின் அரசியல் யாப்புக்கள் அதிலும் 1972, 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்புக்கள், எப்படி ஒரு சர்வாதிகார அரசினை உருவாக்கி நிற்கின்றது என்பது பற்றியெல்லாம் கருத்தரங்குகளை நிகழ்த்தியியவர்கள், இவற்றில் உரை நிகழ்த்தியுள்ள வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் உதாரணமாக வெலியமுன, எஸ்.ஜி.புஞ்சிஹேவா, ஜயம்பதி விக்கிரமரட்ன, வி.ரி.தமிழ்மாறன் போன்றவர்கள் எவ்வகைப் பங்களிப்பினைச் செய்து கொண்டிருக்கின்றனர் என்று நோக்குகின்றோமா?