-விஜய பாஸ்கரன்-
1966ம் ஆண்டு சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவோடு தொடங்கப் பட்ட போராட்டத்தில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது .இதை எமது பகுதியில் முன்னெடுக்க மீசாலை வடக்கு வேம்பிராய் பாரதி வாசிகசாலையில் ஒரு கருத்தரங்கை அப்பகுதி மக்கள் நடத்தினர்.இதற்கு எமது ஊருக்கும் அழைப்பு விடுத்தனர்.இதில் முன்னாள் பனம்பொருள் அபிவிருத்திச் சபைத் தலைவர் நடராசா இரத்தினம் என்பவரையும் அழைத்துச் சென்று கலந்துகொண்டார் .இந்தப் போராட்டத்தை இரத்தினத்தை தலைமை தாங்குமாறு வேண்டிக் கொண்டனர்.மிகுந்த தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டார்
மீசாலை பள்ளர் சமூகத்தையும் மந்துவில் நளவர் சமூகத்தையும் கொண்டது.மீசாலையைச் சேர்ந்தவர்கள் இது ஒரு சாதாரண போராட்டம் என நினைத்தே இதை தொடங்க நினைத்தனர்.சாவகச்சேரியைப் பொறுத்தவரை சாதியமைப்பு மிகவும் தளர்வு நிலையில் இருந்தது.ஒரு சில சலூன் உரிமையாளர்கள் மட்டும் உயர்சாதியினருக்கு சேவகம் பண்ணினார்கள்.கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை அடுத்து எல்லா உணவகங்களும் திறந்துவிட்டனர்.உண்மையில் அங்கே பாகுபாடு பொது இடங்களில் இல்லை.
கொடிகாமத்தில் சிலர் மறுப்புத் தெரிவித்தனர்.எமது ஊரில் இரண்டு கோவில்கள் இருந்தன.கேலத்து அம்மன் கோவில்.இது அய்யருக்கே சொந்தமானது.அவர் பூரண சம்மதம் தெரிவித்தார்.இன்னொன்று தெருவாரம் பிள்ளையார் கோவில்.இவரகளும் சம்மதித்தனர்.ஆனால் கோவில் பூசைகள் நிறுத்திவிட்டார்கள்.இந்த கடும் எதிர்ப்பாளர்கள் வெள்ளாளர் அல்ல.கோவியர்களே.அதில, முக்கியமானவரகள்அந்த சமூகமே மரியாதை தராதவரகள்.வழிப்பறி திருட்டு சம்பந்தப்பட்டவர்கள்.மீசாலை தெருவாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இந்தப் போராட்டத்துக்கு எமது ஊரிலும் அதிக ஆதரவு இருக்கவில்லை .எமது ஊரிலும் இரு பிரிவுகள் இருந்தன.ஒரு பிரிவு விலகிவிட்டது.கொடிகாமத்தில் போராட முடிவு எடுக்கப்பட்டது.இதை தொடங்கிய மீசாலையைச் சேர்ந்தவர்கள் தலைமறைவாகி விட்டனர்.எனினும் இரத்தினமும் அவரது சகாக்களும் திட்டமிட்டபடி தேனீர்கடை பிரவேசம் செய்தனர்,.இரத்தினம் ஏற்கனவே பிரபலமானவர்.அவரை எதிர்க்க எவரும் முன்வரவில்லை .ஆதரவும் தரவில்லை.கொடிகாம்ம் அய்யா இரத்தினத்தின் நண்பர்.அவரும் மதில்மேல் பூனையாக நின்றார்.
கொடிகாமத்தில், ஒரு கடையில், மல்லாகத்தான் கடை என்னும் சிறீசிவாய கபே இல் எதிர்ப்பு தெரிவித்து கொதித்த எண்ணையை ஊற்ற முயன்றனர்.இதனால் கடை அடித்து நொருக்கப்பட்டது.(இந்தக் கடையே யாழ்ப்பாணத்தில் அசுத்தமான கடை)
கொடிகாமத்தில் எதிர்கப் பயந்த சாதிவெறியரகள்(கோவியர்)எமது ஊரவர்களை ஊருக்கு வரும் வழியில், மறித்து தாக்குதல்களை நடத்தினர்.இதனால் பலரும். பாதிக்கப்படவே எல்லோரும் இரத்தினத்தின் பின்னால் இணைந்தனர்.ஊர் ஒன்றுபட்டது.போராட்டம் வேகம் கொண்டது.வெள்ளாளர் சமூகம் தாங்கள் சம்பந்தப்படவில்லை என மறைமுகமாக அறிவித்தது.சில சண்டித்தனமான கோவியர் விலகுவதாக சொன்னார்கள்.அதாவது எம்முடன் மோதவிரும்பவில்லை.அவ்வளவுதான்.
இந்நிலையில் கோவியர்கள் சீவல் தொழிலாளர்களின் பனை தென்னை மரங்களை பாளைகளை வெட்டினர்.இவரகளை வெள்ளாளர் அடையாளம் காட்டித் தந்தனர்.அடுத்த இரவு சாதிவெறியர்களின் தோட்டங்கள் அழிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து மீண்டும் வழிமறித்து தாக்குதல்கள் நடாத்தினர்.இதை அடுத்து இரத்தினம் அவரகள் பகுதிக்குள் நுழைந்து எச்சரித்துவிட்டு வந்தார்.
இதைத் தொடர்ந்து சங்கானை,அச்சுவேலி ,மாவிட்டபுரம் போராட்டங்களில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.இங்கேயும் எமது ஊரின் சார்பாக பலர் கலந்து கொண்டனர்.(தொடரும்)
No comments:
Post a Comment