-கோவை நந்தன்-
பிரான்சில்
கடந்த வாரம் இடம் பெற்ற பிராந்திய நிர்வாக அமைப்புகளுக்கான தேர்தலில் (Élection
Départementale en France) வலது சாரிக்கட்சிகள் பெற்ற
பெரு வெற்றியானது, ஜனாதிபதி
பிரான்சுவா கொலண்ட் (François
Hollande) தலைமையிலான ஆளும்
சோசலிச அரசுக்கு பெரு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் தொடர்ந்தும் அதிகரித்து வரும் வேலையற்றோர்
எண்ணிக்கையே இந்தத்தோல்விக்கு காரணம் எனவும் இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்த
முடியா விட்டால் வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என ஜனாதிபதி
அறிவிக்கும் அளவிற்கு இடதுசாரிகளின் நிலைமை மோசமடைந்து வருகிறது.
குறிப்பாக அதிதீவிர வலதுசாரிய கட்சியும் இனவாதத்தை தமது
அடிப்டை கொள்கையாகவே கொண்டுள்ளதுமான தேசிய முன்னணி (Front
National)நாட்டின்
இரண்டாம் நிலைக்கு வளர்ந்து வருவதை, இந்தத் தோதல் மேலும்
உறுதிப்படுத்தியுள்ளது.
மரின்
லுப்பன் (Marine Le Pen)தலைமையிலான இந்த தேசிய முன்னணியின் வளர்ச்சியை
தடுக்கவேண்டுமானால், இன்றைய
நிலையில் முன்னாள் ஜனாதிபதி நிக்கொல சாக்கொசி மீண்டும் ஜனாதிபதியாக முன்னிலைப்
படுத்தப்படுவார் என எதிhபார்க்கப்படும்
UMP (Union Pour Un Mouvement Populaire) கட்சியை ஆதரிப்பதுதான்
இங்கு வாழும் வெளிநாட்டவர்க்கும், ஜனநாயக வாதிகளுக்கு மான ஒரே
தெரிவாக இருக்க முடியும்.
இவர்களும் வலதுசாரிய சிந்தனா கட்சியாக இருந்தாலும் கூட , இனவாதிகளாக இல்லாமல்
இருப்பதும், ஜக்சிராக்
(Jacques Chirac) மற்றும் நிக்கொல சாக்கொசி(Nicolas
Sarkozy) ஆகியோரது
கடந்தகால ஆட்சிகள், நடுநிலையாளர்
களாக இவர்களை இனம்காட்டியதும் குறிப்பிடத் தக்கது.
இந்த வகையில் இடம்பெற்ற பிராந்திய தேர்தலில் 95வது நிர்வாக அலகின்,கார்ஜ் லெ கொணேஸ் (Garges
les gonesse ), மற்றும்
அர்னோவில் (Arnouville ) ஆகிய பகுதிகள் இணைந்த கன்ரோனில், UMP சார்பில் போட்டியிட்ட
சேர்ஜியா மகேந்திரன் பெற்ற பெரு வெற்றியை பாராட்டியே ஆகவேண்டும்.
பொதுச் சேவையில் கடின உழைப்புடனும், நடுநிலையுடனும் தன்னை
ஈடுபடுத்திக் கொண்டுள்ள, தமிழ்
சமூகத்தின் இளம் தலைமுறைப் பெண் சேர்ஜியா மகேந்திரன் பெற்ற இரண்டாவது வெற்றி இது.
2014ம் ஆண்டு இடம்பெற்ற
கார்ஜ் லெ கொணேஸ் (Garges les gonesse ),பகுதி நகரசபைத் தேர்தலில் வெற்றிபெற்று அங்கு துணை
மேயராக (Maire Adjoint), தெரிவு செய்யப்பட்ட சேர்ஜியா தற்போது பிராந்திய
சபைக்கும் (Conseil Départemental )தெரிவு செய்யப்பட்தனை அவரது
பொதுப்பணியின் அடுத்தபடியாகவே நோக்க வேண்டும்.
இளமையின் துடிப்புடன் புதிய பொறுப்பினை ஏற்றுள்ள சோஜியா
தனது கடமைகளில் சுறசுறுப்பாக ஈடுபட்டுள்ளார்.
கார்ஜ்
லெ கொணேஸ் (Garges les Gonesse ) பகுதியிலிருந்து, டுனி (Dugny)
ஊடாக
லி புர்ஜே (le bourget) வரை Tram சேவை, இந்தப் பகுதியின்
பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் சீரமைப்பு உட்பட்ட பல வாக்குறுதிகளுடன்
தெரிவாகியுள்ள UMP இன் பிராந்நிய நிர்வாக குழுவினதும் குறிப்பாக சேர்ஜியா
மகேந்திரனிதும் பணிகள் சிறக்க வாழ்த்துவோம்.
No comments:
Post a Comment