-சிதம்பரநாதன் ரமேஸ்-
எனக்குப் பிடித்த கதை சொல்லிகளில் ஒருவரான பிரபஞ்சனுக்கு இன்று 69வது பிறந்த தினமாகும்
சாரங்கபாணி வைத்தியலிங்கம் எனப்படும் பிரபஞ்சன் ஏப்ரல் 27, 1945-ல் புதுச்சேரியில் பிறந்தார். . புதுச்சேரியில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்த இவர் பின்னர் கரந்தை கல்லூரியில் கற்று தமிழ் வித்வான் பட்டத்தைப் பெற்றார். தஞ்சாவூரில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய பிரபஞ்சன் குமுதம், ஆனந்த விகடன் , குங்குமம் ஆகிய வாரப் பத்திரிக்கைகளில் பணிபுரிந்தார். பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட பிரபஞ்சனின் முதல் சிறுகதையான ‘என்ன உலகமடா’ 1961இல் ‘பரணி’ இதழில் வெளியானது. அதனைத் தொடர்ந்து பல்வேறு கதைகளும், கட்டுரைகளும் தாமரை, தீபம், கண்ணதாசன், கணையாழி போன்ற இதழ்களில் வெளிவந்தன. 1982-ல் வெளியிடப்பட்ட இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்’ தமிழக அரசின் பரிசைப் பெற்றது. 1995இல்ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டு பிரபஞ்சனால் எழுதப்பட்ட வரலாற்றுப் புதினமான வானம் வசப்படும் நாவலுக்கு தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைக்கப் பெற்றது. இதுவரை 46 புத்தகங்களுக்கும் அதிகமாக எழுதியுள்ளார்.புதுச்சேரி வரலாற்றைக் கூறும் இவரது மானுடம் வெல்லும் சிறந்த நாவல்களில் ஒன்று.இந்நூல் இலக்கியச் சிந்தனை விருதையும் பெற்றுக் கொண்டது.இப்பின்னணியில் புதுவையின் வரலாற்றைப் பதிவு செய்யும் இன்னொரு நாவல்'கண்ணீரால் காப்போம்',
புதுவையில் ஹரிஜன சேவா சங்கத்தைத் தோற்றுவித்த வ. சுப்பையாவைதத் தலைவராகக் கொண்டு எழுதப்பட்டஇப்புதினம் புதுவையின் விடுதலைப் போரின் தொடக்கக் காலம் (1890 - 1934) பற்றியது. பிரெஞ்சு காலனி ஆதிக்கத்திடமிருந்து புதுச்சேரி விடுதலை பெற்ற 1954-ஆம் ஆண்டு வரை நடக்கும் சம்பவங்களைக் கொண்டு இந்நாவல் பின்னப்பட்டுள்ளது.இவை தவிர கனவுகளைத் தின்போம் இருட்டின் வாசல் , முதல் மழைத்துளி,பெண்மை வெல்க, ஒரு சினேகத்தின் கதை, திரை, மகாநதி
முதலான படடப்புக்களும் முக்கியமானவை.இவரது படைப்புகள் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் சுவீடிய மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. இவரது நாடகமான ‘முட்டை’ டெல்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலுள்ளது. இவரது சிறுகதைத் தொகுப்பான ‘நேற்று மனிதர்கள் ‘ பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment