Tuesday, April 15, 2014

இருண்டிய யாழ்ப்பாணத்தின் ஒரு பாகம் - சீவல் தொழில் கூட்டுறவு சங்கங்களின் வெற்றிகளும் சவால்களும்.

-அகல்யா பிரான்சிஸ்கிளைன் அகிலன் கதிர்காமர் -

பரம்பரையாக சீவல் தொழில் செய்து வரும் ஒரு சமூகம் வரலாற்றில் சாதிரீதியான ஒடுக்கு முறைகளுக்கும் போர்காலத்தின் அழிவுகளுக்கும் முகம் கொடுத்தனர். அதற்கு கடந்த கால போராட்டங்கள் மற்றும் சமூக முயற்சிகளுடன் அமைக்கப்பட்டகூட்டுறவு சங்கங்களின் ஒத்துழைப்பு முக்கியமானது. ஆனால் அந்த சமூகம் இன்று சிக்கலான பொருளாதார நிலமைக்குள் தள்ளப்படுகின்றது.

1972ம் ஆண்டு தொடக்கம் 40 வருடத்திற்கு மேலாக இயங்கிக் கொண்டிருந்த பனை தென்னை வள அபிவிருத்திகூட்டுறவு சங்கங்கள் போர் முடிந்த 4வருடத்திற்கு பின்னர் திறந்த பொருளாதாரத்தாலும் சந்தையின் தாக்கத்தாலும் உடைந்து போகுமா?; யுத்தம் முடிவடைந்த பின்னர் ஏ-9 பாதை திறந்ததை தொடர்ந்து தெற்கிலிருந்து வருகின்ற சாராயம் பியர் என்பவற்றின் சந்தைப்படத்தல் மற்றும்; பார்களின் அதிகரிப்பு போன்றவற்றினால் கள் சாரயம் போன்ற உள்ளுர் உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியா நிலை காணப்படுகின்றது.மற்றும் அண்மைக் காலங்களில் விவசாய அழிவுகளினால் வருமானங்கள் வீழ்ச்சியடைந்திருப்பதால்; கள்ளுக்கான கேள்விகள் குறைந்துள்ளது. அத்துடன்இளம் தொழிலாளர்கள் இத் தொழிலை ஒரு சிலர் செய்த போதும் அவர்களும் குறிப்பிட்ட சில நாட்களுக்கு பின் கலாச்சாரம் சுய கௌரவம்சாதிரீதியிலான பார்வை போன்றவற்றினால் இன்று சீவல் தொழிலை கைவிடுகிறார்கள்.
இலங்கை வரலாற்றில் கல்வி சுகாதாரம் வறுமை ஒழித்தல் போன்ற சமூக முன்னேற்றங்களுக்கு தொழிற்சங்கங்களினதும் கூட்டுறவு சங்கங்களினதும் தாக்கம் முக்கியமானது. இன்று வடமாகாண விவசாயிகள் உட்பட பொதுமக்கள் கடன்களில் மூழ்கியிருந்த போதிலும்; பனை தென்னை கூட்டுறவின் செயற்பாடுகளினால் சீவல் தொழில் சமூகம் இந்த கடன் கலாச்சாரத்தில் அகப்படவில்லை. இந்த கண்னோட்டத்தில்பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் சவால்களுக்கு ஓர் தீர்வு காண்பதென்பது நெருக்கடிக்கடியின் மத்தியில் இயங்கும் தற்கால இலங்கை பொருளாதாரத்திற்கும் சில முக்கியமான கருத்துக்கல் மற்றும் தீர்வுகளாக அமையலாம்;.

ஒருசீவல்தொழிலாளியின் அனுபவங்கள்: தர்மபாலசிங்கம் 67 வயது
(நான் 18வயதில் எனது மச்சானிடமிருந்து சீவல் தொழிலை பழகினேன். 1991ம் ஆண்டு இடம்பெயர்ந்து வன்னியில் சிராஞ்க்குளத்தில் வசித்தேன்.அங்கும் சீவல் தொழிலை செய்தேன்;. பின்னர்;2002ம் ஆண்டு அச்சுவேலிக்கு திரும்ப வந்து சீவல் தொழிலை செய்தேன் நான் 60வது வயதில் ஓய்வூதியத்தினை பெற்றேன.; ஓய்வூதியம் எடுத்துக் கொண்டும் சீவுகின்றேன். தற்போது நான்; பொச்சுக்கட்டி; மரம் ஏறுகிறேன். 10 தென்னை மரம் சீவுகின்றேன்.
காலை 4 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை முடித்து சீவலுக்கு சென்று 9.30க்குள் கள்ளு இறக்கிக் கொண்டந்திடுவேன.;; பாளை தட்டுற முறை என்றால் கொஞ்சம் நேரமாகும் ஒன்றவிட்ட ஒரு நாள் பாளை தட்ட வேண்டும். பின் 11.30க்கு முன்னர் தவறணைக்குள் கள்ளு கொண்டு போய் கொடுக்க வேண்டும.; பின்னர் தோட்டத்தில் போய் வேலை செய்வேன்.மாடு கொண்டு போய் கட்டுவேன். பின்னர் மாலை 4.30க்கு திரும்பவும் சென்று 10 தென்னையும் ஏறி சீவி 6.30க்கு முன்னர் தவறணைக்கு கள்ளு கொண்டு செல்வேன. ஓரு நாளைக்கு 15 போத்தல் கள்ளுக்குகிட்ட கொண்டு போய் கொடுப்பேன். எனக்கு வருத்தம் வருகில் கால்களில் அதிக காயங்கள் வரும் நெஞ்சு வருத்தங்கள் வரும்.
கத்தி ஆரம்பத்தில் நல்ல கூராகவும் பெரிதாகவும் இருந்தது இப்போது எப்படி தேய்ந்து இருக்குது என்று பாருங்கோ. இதனைப் போல தான் நாங்களும் தேய்ந்து போகிறோம். மரத்தில் ஏறும் போது சீவிலிகூடு கத்தி பாளைதடடு;ம் பொல்லு கள்ளு ஊத்த போத்தல் என்பன கொண்டு செல்வேன். முந்தி நான் பொச்சு மட்டை கட்டாமல் சீவும் போது கால் சரியாக காச்சுப் போய் இருக்கும்.தற்போது பொச்சு கட்டி சீவுவதால் பறவாயில்லை. தோட்டமும் செய்வதால் ஆரம்பத்தில் வருமானம் பறவாயில்லாமலலிருந்தது. தற் போது வெங்காயம் எல்லாம் அழிவடைந்ததால் பெரிதாக வருமானம் இல்லை.
நான் 18 வயதில் கள்ளு சீவேக்க மரவரி முறை இருந்தது. நாங்கள் 5 பேர் இணைந்து மரம் சீவுவதாக அனுமதி எடுப்போம்100ரூபா கட்டி. நான் ஆரம்பத்தில 90 போத்தல் கள்ளு ஒரு நாளைக்கு சீவி கொடுப்பேன.; அப்போது கள்ளு 10சதம்;. பின்னர் 1972ம் ஆண்டு கூட்டுறவு சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்ட போது நான் 552வது உறுப்பினராக வேலை செய்தேன். 
கூட்டுறவு சங்கங்கள் வந்ததால் எங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. தொழில் விடுற காலத்தில் சமாசத்திலிருந்த எங்களுக்கு ஊதியத் தொகை வழங்கப்படும.; மரவரி இருந்த காலத்தில் கள்ளு எல்லாம் சீவி முதலாளிக்கே கொடுக்கனும்.ஆனால் கூட்டறவு வந்தபின் எங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது.
விபத்து நதி கட்டாய சேமம் என்று சொல்லி எங்கட கள்ளிலிருந்து 1ருபா கழிப்பார்கள.; சேமப் பணம் மூன்று மாதத்திற்கு ஒருக்கா தருவார்கள.; தொழில் விடேக்க கட்டாய சேமப்பணம் தருவார்கள். விபத்து நிதி தந்போது ஓய்வூதியத்திட்டமாக மாற்றப்பட்டு 60 வயதிற்கு பிற்பாடு தருவார்கள.; நான் ஓய்வூதிய பணமும் எடுத்துக் கொண்டு சீவி வருகின்றேன். சீவல் தொழிலை எனது அப்பு மாமா மற்றது நான் செய்கிறேன் எனி எனக்கு பிறகு ஒருவரும் செய்ய மாட்டார்கள் இளம் தலை முறையினர் படிக்கிறார்கள்.படிக்காதவர்கள் கூலி வேலைக்கு போகிறார்கள். 
1960ம் ஆண்டு இடம் பெற்ற சாதி எதிர்ப்பு போராட்டங்களுடன் நானும் இணைந்து செயற்பட்டேன.; தேனீர் கடை எதிர்ப்பு போராட்டங்களுடன் எல்லாம் இணைந்து செயற்பட்டேன். எங்கட வாசகசாலையில் ரஷ்யா கொமினிஸ்ட் சீனா கொமினிஸ்ட் என்று இரண்டு கொமினிஸ்ட்கள் இருந்தன.இதில் சீனா கொமினிஸ்டுடன்; நானும் ஒரு உறுப்பினராக அங்கம் வகித்தேன்.)
சீவல் தொழில்
சீவல் தொழில் என்றால் பனை தென்னை மரங்களில் ஏறி கள்ளினை இறக்கின்ற தொழிலாகும். இத் தொழில் ஆண்களினால் மட்டும் செய்யப்படுகின்றது. இவர்கள் காலை 6 மணியிலிருந்து பின்னர் 10.30க்குள் கள்ளினை தவறணைக்குள் ஒப்படைக்க வேண்டும.;இது போலவே மாலை 4 மணிக்கு மீண்டும் சீவச் சென்று 6.30க்குள் தவறணைக்கு கள்ளினை ஒப்படைக்கிறார்கள். இடைப்பட்ட நேரங்களில் சிலர் தோட்ட வேலை செய்கின்றார்கள். ஒருவர் ஒரு நாளைக்கு 5-15க்கிடைப்பட்ட மரங்கள் காலையும் மாலையும் சீவுகிறார்.
இவ்வாறு மரத்தில் ஏறி இறங்குவதால் தொழிலாளர்கள் பல சிரமங்களை எதிர் கொள்கிறார்கள். மழை காலங்களில் மரங்களில் ஏறுவதென்பது இவர்களுக்கு பெரிய சவாலாகவுள்ளது. மற்றும் இத் தொழிலானது உடலை வருத்தி செய்கின்ற ஒரு கடினமான தொழிலாகவுள்ளதனால் பாரிய பல நோய்களுகுள்ளாகிறார்கள். அத்துடன் இவர்கள் மரம் ஏறும் போது விழுந்தால் உயிர்க்கும் ஆபத்துண்டு;. மேலும் இத் தொழிலானது குறிப்பிட்ட சாதி சமூகத்தினர் மட்டும் செய்யும் தொழிலாக இன்று வரையுள்ளது.
சீவல் தொழிலாளர்கள் ஆரம்ப காலங்களில் முதலாளிக்கு நன்மை பயக்கும் மரவரி முறையின் கீழ் சுரண்டப்பட்டு மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து வந்தார்கள். 1972ம் ஆண்டு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டறவு சங்கங்களின் தோற்றங்களின் பின்னர் இவர்களுடைய பொருளாதார நிலை வளர்ச்சியடைநதத்து. அக் காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 7230க்கு மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டிருந்த கூட்டுறவு சங்கம்; இன்று 3924 உறுப்பினர்களாக குறைவடைந்ததுள்ளது. இளம் தொழிலாளர்கள் மும்முரமான வேலையினூடாக அதிக மாதாந்த வருமானத்தை பெறக்கூடியதாக இருந்த போதும் சீவல் தொழிலின் கடுமையான சூழ்நிலை காரணமாக நீண்ட காலம் தொழில் செய்ய முடியாதுள்ளது. மேலும் ஒரு தனிநபர் தன் வருமானத்தை முதலீட்டுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதனாலும் சமூகஅணிதிரட்டலுக்கான சந்தர்ப்பங்கள் இல்லாத காரணங்களாலும் தொடர்ந்து பொருளாதார சமூக சவால்களை எதிர் கொள்கிறார்கள்.
கூட்டுறவு சங்கங்களின் வரலாறு
யாழ்ப்பாணத்தில் சாதிக்கெதிராக 60ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் பின் ஆரம்பிக்கப்பட்ட பனைதென்னை வள அபிவருத்தி கூட்டுறவு சங்கங்களின் பங்கு பரந்து பட்டதாக விளங்குகின்றது. மூடிய பொருளாதார காலத்தில் 1972ம் ஆண்டில் நிதியமைச்சராகவிருந்த என்.எம.; பெரேரா அவர்களினால்இலங்கை கூட்டுறவு சட்டத்தின்கீழ் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டன. இவை கூட்டுறவு திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு; கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளாரின்; வழிகாட்டலின் கீழ் தெரிவு செய்யப்பட்ட நிர்வாக சபையின் கீழ் இயங்குகின்றன.
இச் சங்கங்கள்கிராமப்புறமக்களின் பல அடிப்படை தேவைகளினை நிறைவு செய்கின்றன. ஒவ்வொரு தவறணையின்கிளை முகாமையாளருக்கு கீழ் காலை 11-2 மணிவரை மாலை 5-8 மணிவரை திறந்து நடாத்தப்படுகிறது. சீவல் தொழிலாளர்கள் கொண்டுவரும் கள்ளின் அளவு பெறுமதி தரம் மற்றும் கணக்குகள் எல்லாவற்றிற்கும் பொறுப்பாக இவரே இருக்கின்றார். மேலும் சீவல் தொழிலார்களினைஓர் ஒழுங்கு முறையின் கீழ்; கூட்டிணைந்து செயற்படஇச் சங்கங்கள் உதவுகின்றன. யாழ் மாவட்டத்தில் 19 சங்கங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 4 சங்கங்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 சங்கங்களும் வவுனியாவில் 3 சங்கங்களும் மன்னாரில் 5சங்கங்களும் திருகோணமலையில் 2 சங்கங்களும் மட்டக்களப்பில் 8 சங்கங்களும் உருவாக்கப்பட்டு வடக்கு கிழக்கில் இயங்கி வருகின்றன. இவற்றில் யாழ் மாவட்டத்தில்; வலிகாமம் 13 வடமராட்சி 3 தென்மராட்சி 3 ஆகும்.
கூட்டுறவு சங்கங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான தொடர்;பு
ஜனநாயத்திற்கான ஓர் உதாரணமாகவிளங்கும்பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் முழு அதிகாரமும் தொழிலாளர்களால் நியமிக்கப்படும் தலைவர்களிடமே காணப்படுகின்றது. இங்கு நிர்வாகத்திலுள்ள கூட்டுறவு பணியாளர்கள் அனைவரும் இவர்களின் தீர்மானங்களின் அடிப்படையிலையே இயங்க முடிகிறது. அத்துடன் சீவல் தொழிலில் ஈடுபடுபவர் மட்டுமே இங்கு அங்கத்தவர்களாக இயங்கலாம.; இவர்கள் இச் சங்கங்களின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கிளை அங்கத்தவர் கிளைக்குழு கிளைத்தலைவர் கிளைச் செயலாளர் என தெரிவு செய்யப்பட்டு பின்னர் பொதுச்சபை நெறியாளர் குழு தலைவர் உபதலைவர் செயலாளர் பொதுமுகாமையாளர் பணியாளர் குழு என்னும் கட்டமைப்பின் ஒழுங்கு முறையின் கீழ் செயற்படுகிறார்கள். 
ஆரம்ப காலங்களில் தொழிலாளர்கள் வீட்டில் வைத்து இத் தொழிலை செய்ததால்; பல சமூக கலாச்சார பிரச்சனைகளினை எதிர் கொண்டார்கள்.ஆனால்; கூட்டுறவு அமைப்பின் மூலம் தங்களுக்கென நிரந்தரமான பாதுகாப்பான தொழிலினை ஏற்படுத்தி கொண்டார்கள். இத் தொழிலை செய்கின்ற தொழிலாளர்கள்; ஓரு மாதத்தில் 30000 – 80000 ரூபா அளவு ஊதியத்தினை பெறுகின்றனர். அதிகளவு ஊதியத்தினை பெறும் தொழிலாக காணப்பட்ட போதும் பெரும்பாலும் இளம் வயதினர் இத் தொழிலை செய்வதில்லை. 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் செய்கிறார்கள். 
தொழிலாளர்கள் தவறணையில் கள்ளினை கொடுத்த பின்னர் தவறணையில் ஒரு போத்தல் தென்னங்கள்ளு 75ரூபாவிற்கும் பனங்கள்ளு 50ரூபாவிற்கும் விற்கப்படுகின்றது. விற்பனை செய்யப்படாது மீதியுள்ள கள்ளினை வடிசாலைகளுக்கு அனுப்புகின்றார்கள். வடிசாலைகள் 10ரூபாவிற்கு கள்ளினை வாங்குகின்றது இதனால் தொழிலாளர்களுக்கும் கூட்டறவிற்கும் நஷ்டம் ஏற்படுகின்றது. ஒரு போத்தல் சாராய உற்பத்திக்கு ஏறத்தாள 10-14 போத்தல் கள்ளு தேவைப்படகின்றது. வடிசாலையிலிருந்து 660 ரூபாவுக்கு கடைகளுக்கு விற்கப்படும் ஒரு போத்தல் சாரயத்திற்கு 445ரூபா அரசாங்கத்;திற்கு வரி செலுத்துகிறார்கள். மீதி 215 ரூபாவிலும் தான் தொழிலாளர் ஊதியம் மற்றும் கள் வாங்குதல் வடிசாலைகள் இயங்கும் செலவுகள் என பயன்படுத்துவதால் இலாபம் கிடைப்பது குறைவாகவுள்ளது. மேலும் சாராயத்தின் உற்பத்தியில் வரும் இலாபங்கள் மிகவும் குறைவாக இருப்பதனால் கள்ளுக்கான கேள்வி குறைந்துள்ளது. 
யாழ்மாவட்டத்திலுள்ள வடிசாலைகள் சாரயத்தை கடைகளுக்கு விற்கும் விலை கடைகள் விற்கின்ற விலைகளினை அட்டவணை;;.
வடிசாலைகள் வடிசாலைள் விற்கும் விலை கடைகள் விற்கும் விலை 
வலிகாம வடிசாலை 650ரூபா 700ரூபா 
திக்கம் வடிசாலை 660ரூபா 710ரூபா
வரணிவடிசாலை 610ரூபா 670ரூபா
தற்காலத்தில் இக் கூட்டுறவு சங்கங்கள் பல நெருக்கடியின் மத்தியில் சில முயற்சிகளைமுன்னெடுக்கின்றன அவற்றுள் முக்கியமாக குடிசைகளாக இருந்த தவறணைகளை புதிய கட்டிடங்களாக மின்சார பான் வசதியுடன்;; கதிரையில் அமர்ந்து குடிக்க கூடிய வசதிகளுடன் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.
போர்க்கால சூழலில் பல பனைகள் அழிக்கப்பட்ட போதிலும் மீதியுள்ள பனைகளிலிருந்து விழுந்த பனம் விதைகள் மூலம் பனைமரங்கள் மீண்டும் முளைத்துள்ளன. மற்றும் 1996ம் ஆண்டு இடப் பெயர்வின் போது பண கொடுப்பனவுகளை கூட்டுறவு சங்கங்கள் தொழிலாளருக்கு வழங்கியுள்ளது. பல்வேறுபட்ட இடங்களில் தொழிலாளர்கள் வசித்த போதும் இத் தொழிலை செய்யக் கூடிய வசதிவாய்ப்புக்களை சங்கங்கள் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் செயற்பாடுகள் 
• 183 ஆசிரியர்களுடன் 120 பாலர் பாடசாலைளை நடாத்தல்
• பாலர் பாடசாலைக்கு சீருடை சத்துணவு
• சிறந்த அங்கத்தவர்களினை கௌரவித்தல்
• ;பிள்ளைகள் புலமைபரீட்சை சித்தி எனின் 5000ரூபா
• பல்கழைக்கலகம் சித்தி; 10000ரூபா
• வருடாந்தம் பிள்ளைகளுக்கு கொப்பிகள் வழங்கள்;
• வேலை வாய்ப்புக்கள்வழங்கள் 
• இழப்பீட்டு தொகை வழங்கல்
• சித்த மருத்துவ கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தல்
• கிராமிய வங்கிகள் மூலம் சேமிப்பு கடன் வழங்கள்
• ஓய்வூதியம் மகளீர் சுயதொழில் முயற்சித் திட்டங்கள் 
பெண்களின் பங்களிப்பு
சீவல் தொழலிலை பெண்கள் செய்வதில்லை. ஆனால்; சங்கங்களில்; பனங்கட்டி உற்பத்தி பனாட்டு உற்பத்தி மற்றும் போத்ததலில் கள் அடைத்தல்;;;; கூட்டுறவு சங்கங்களில்; பணிபுரிதல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். இருந்தும் பெண்களின் பங்களிப்பு மற்றும் தலைமைத்துவம் கூட்டுறவுகளில் போதாது.
சீவல் தொழிலாளர்களின் பெண்கள்; கூறுவதுஇஆரம்ப காலங்களில்; அதிக வருவாயை பெற கூடியதாக இருந்த போதிலும்; தற்போது ஓரளவு வருமானம் தான் பெறக்கூடியதாகவுள்ளது. மற்றும்; மரத்தில் ஏறும் போது உடல் ஆபத்தக்கள் ஏற்படுவதால் தொழிலுக்கு கணவர்கள்; செல்வதுபயமாகவுள்ளது. மேலும்; சில காலங்களில் கள்ளு குறைவடைவதனால் வருமானம் போதுமானதாக இருப்பதில்லை இதனால் பெண்களும் ஆண்களும் கூலி வேலைகளுக்கும் செல்கிறார்கள்;;.
இத் தொழில் புரிபவர்களின்; பிள்ளைகள்படித்துநல்லநிலைக்கு வந்த பின் பிள்ளைகளோ இவர்களின் மனைவிகளோh சீவல் தொழிலை கணவர்கள் மற்றும் தந்தைகள் செய்வதை விரும்பவில்லை.;மேலும்; கிராமப்புற பாடசாலைகளின் சில ஆசிரியர்கள் சீவல் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி மேல் அக்கறை கொள்வதில்லை மற்றும் இவர்கள் உயர் சாதி மாணவர்களினாலும் புறந்தள்ளப்படுகிறார்கள். இத் தொழில் பற்றி மற்றும் பாடசாலைகளில் தொடரும் பாகுபாடு தமிழ் சமூகத்தை நெருக்கும் சாதியத்தின் ஒரு அம்சமாகும்.
சவால்கள்
சாதியடிப்படையில் தவறணைகளின் பதிவுகளுக்கு அயலவர்களின் எதிர்ப்புக்களும் முறைப்பாடுகளும்; கூட்டுறவு சங்கங்களுக்கு சிரமத்தை கொடுக்கின்றது. கள்ளினால் உடலிற்கு ஏற்படுகின்ற பாதிப்பு குறைந்ததாக இருந்த போதிலும்; கூடிய அற்ககோல் வீதத்தை கொண்ட சாராயத்தை விநியோகிக்கும் பார்களிலும் பார்க்க தவறணைகளுக்கே இவ்வாறான எதிர்ப்பு நிலவுகின்றது.
இன்று திறந்த பொருளாதார சந்தையில் போட்டி போடுவதற்கு தமது பொருட்களினை நவீனப்படுத்த வேண்டிய நிலையிலுள்ளனர். உதாரணமாக வெள்ளத்தின் உற்பத்தியின் பின் பொதிகளில் அடைத்து விற்ககூடிய வசதி வாய்ப்புகள் இல்லை. மற்றும் தெற்கிலிருந்து வருவம்; சாரயத்துடன் போட்டி போடக் கூடிய வடிசாலைகளின் தொழில்நுட்ப முன்னேற்றம் அவசியம். அத்துடன் கள்ளை போத்தல்களில் அடைக்கும் நவீனத்துவம் தேவைப்படுகின்றது. மேலும் வெளிநாடுகளுக்கு சாராயம் மற்றும் கள்ளினை ஏற்றுமதி செய்து கூடிய வருமானத்தைபெறக்கூடிய வாய்ப்புக்கள் தேவை. இவை சீவல் தொழிலாளர்களதும் கூட்டுறவு சங்க உறுப்பினர்களதும் வேண்டு கோளாகவுள்ளது.
ஆரம்ப காலத்தில் உயர்சாதி; முதலாளிகளின் நிலமானிய ஆதிக்கத்தின் கீழ் சீவல் தொழிலாளிகள் சுரண்டப்பட்டார்கள். சங்கங்களின் தோற்றத்தின் பின்கூட்டுறவின் ஒழுங்கின் அடிப்படையில் தொழிலாளர்கள் சுயாதினமாக செயற்படார்கள். தற்கால முதலாளித்துவ பொருளாதார மாற்றங்கள் குறிப்பாக திறந்த சந்தையின் தாக்கம் மற்றும் போரின் பின் இறுக்கும் சாதியத்தினால் இவர்கள்; ஒரு சமூக பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படுகிறார்கள்.
தொழிலாளர்களின் எதிர்காலத்தை நோக்கி
சீவல் தொழிலாளர்கள் சிலருடன் உரையாடிய போதுஇ தம்முடன் இத் தொழில் முடிவடைந்து விடும் என்றும் தம் பிள்ளைகள் இத் தொழில் செய்வதை தாம் விரும்பவில்லை எனவும் கூறினார்கள். மேலும் அவர்கள் அனைவரும் கல்வி ரீதியில் முன்னேற்றம் அடையலாம் என்று நம்புகிறார்கள். ஆனால் ஒரு சில தொழிலாளர்களின் பிள்ளைகளினை தவிர ஏனைய பிள்ளைகள் கல்வியினை இடைநிறுத்தி விட்டு கூலி வேலை செய்கிறார்கள். இவ்வாறான சூழ்நிலையில் இவர்களின் எதிர்காலம் பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது.
தற்கால வடமாகாண சபை தேர்தலில் சீவல் தொழில் சமூகத்தினை சேர்ந்த ஓர் கூட்டுறவு தலைவர் வேட்பாளராக இருந்தாh.; ஆனால் அவரால் கூட சீவல் தொழிலாளிகள் மற்றும கூட்டுறவு சங்கங்கள் எதிர் கொள்ளும் சவால்களை பிரசரிக்க முடியவில்லை. இது தமிழ் அரசியல் மற்றும் தமிழ் ஊடகங்கள் அத்துடன் இன்று வரையுள்ள சாதிய நிலைப்பு என்பவறற்றின் குறைபாடுகளை காட்டுகிறது.வரலாற்றை பார்க்கும் போது யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய உயர் சாதி ஆதிக்கத்துடன் வந்த அரசியல் இவ் சமூகத்தின் சுரண்டலுக்கே கை கொடுத்தன. ஆனால் பல தசாப்தங்களுக்கு முன் இச் சமூகமும் இடதுசாரிகளும் முன் கொண்ட போராட்டங்களால் பல சமூக முன்னேற்றங்கள் மற்றும்; கூட்டுறவு சங்கங்கள்; தோன்றின.
இந்த கண்னோட்டத்தில் தற்கால புத்திஜீவிகள் தமிழ் மக்களுடன் வெளிப்படையாக கலந்துரையாடி இச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பார்களா? மற்றும் வட மாகாணசபை இந்த சமூக முன்னேற்றத்திற்கும் அவர்கள் முகம் கொடுக்கும் சவால்களுக்கும் தீர்வினை கொண்டு வருமா?
1972ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கூட்டுறவு சங்கத்துடன் சீவல் தொழில் சமூகம் பல முன்னேற்றங்களை கண்டு வந்தது. ஆனால் இந்த தொழிலை தொடர முடியாமல் கூலி வேலைக்குள் தள்ளப்பட்டுமுதலாளிகளினால் மேலும் சுரண்டப்படலாம். இது உடமை இழப்பிற்கும் சாதிரீதியான சமூக புறந்தள்ளலுக்கும்வழிவகுக்கும் அபாயமுண்டு. இந்த சவால்களுக்கு சீவல் தொழிலாளர்களும் கூட்டறவு சங்கங்களும்அவர்களின் வரலாற்று அனுபவங்களிலின் அடிப்படையில் சமூகத்தை மாற்றும் ஒரு இயக்கத்திற்குதலைமை தாங்க வேண்டியுள்ளது.

இக் கட்டுரை எழுதவதற்கு தகவல்களை தந்துதவிய அச்சவேலி பிரதேசத்தை சேர்ந்தசீவல் தொழிலாளர்களுக்கும் மற்றும் அச்சுவேலி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க பணியாளருக்கும்இஅத்துடன்; யாழ்ப்பாண பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கசமாசபணியாளர்களுக்கும்; மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
நன்றி: அகல்யா பிரான்சிஸ் 

No comments: