மனம் மாறிய மன்னர்கள்(வடமோடிக் கூத்து) கூத்து மிகச் சிறப்பாக அரங்கேறியது. தகவல்:பேராசிரியர் சி.மெளனகுரு பாடசாலை மண்டபத்துள் பழையமரபினடியாக நவீனமுறையினில் அமைக்கப்பட்ட வட்ட மேடையில்(வட்டக் களரியில்) சுற்றி வரப் பார்வையாளரை அமரப் பண்ணி நாம் இதனை அரங்கேற்றினோம் வட்டக்களரி அமைக்கப்பட்டு அதன் தூண்கள் பழைய மரபுப்படி தென்னங்குருத்து ஓலைகளாலும் சேலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்ததும் சுற்றிவர வாழைத்தண்டுகள் நடப்பட்டு அவற்றின் மீது தேங்காய்பாதிக்குள் எண்ணையிட்டு ஒளியேற்றப்பட்டுப் பழைய மரபினடிப் படையில் மண்டபத்துள் அரங்கம் அமைத்திருந்ததும் வட்டக்களரி மரபு அறியாதோருக்கும் கணாதோருக்கும் ஓர் புதிய அனுபமாக அமைந்திருந்தது. சுற்றிவர ஆற்றுகை நிகழ்ந்ததும் சுற்றிவர அமர்ந்திருந்து நாடகம் பார்த்ததும் பலருக்கு ஓர் புதிய அனுபவம் பார்வையாளர்களில் வயது சென்றோர் தாம் தமது பால்ய நாட்களுக்குள் சென்று மீண்ட உணர்வு ஏற்பட்டதாகக்கூறினார்கள் பொதுவாகக் கூத்து பெரும் பராட்டுக்களையே பெற்றது. சிலர் தமது விமர்சனங்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்டனர். ஆக்கபூர்வமாக சில பகிர்வுகள் அழிவு பூர்வமாகச் சில பகிர்வுகள். இது எனக்குப் பழக்கமானதே இந்நாடகப் படைப்புச் செயற்பாடு எனக்கோர் சவால் மாத்திரமன்று புதிய அனுபவமும் ஆகும். ஆடல் பாடல் பரிச்சயம் அதிகமற்ற 40 வயதுக்கு மேற்பட்ட ஆட்களைப் பயிற்றி எடுப்பது மிகச் சிரமமானமுயற்சி. கல்லில் நார் உரிப்பதற்குச் சமம். 2010இல் 3 கூத்துக்களையேனும் அரங்கேற்ற வேண்டும் என்ற உற்சாகம் எனக்குப் பிறந்துள்ளது. இக்கூத்தினால் நான் பெற்ற இலாபம் இது. கிழக்குப் பல்கலைக் கழகத்திலும் விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்திலும் நாடகம்-அரங்கியல் பயிலும் மாணவர்கள் கூத்தை ஒரு பாட நெறியாகப் பயிலுகிறார்கள். பாடசாலைகளில் 6ஆம் ஆண்டிலிருந்து 13ஆம் ஆண்டுவரை நாடகத்தைப் பாடமாக எடுக்கும் மாணவர்கள் கூத்தையும் அறிந்து கொள்ளும் வகையில் கலைத்திட்டம் தயாரிக்கப்படடுள்ளது. இவ்வகையில் இதற்கொரு கல்வி நோக்கமுமுண்டு பிரதி ஆக்கம்,ஆடல் பாடல் பயிற்சி உடை ஒப்பனை அனைத்தையும் நானே செய்ய வேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டார்கள். |
Friday, December 31, 2010
தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment