Friday, December 31, 2010


தகவல்

மனம் மாறிய மன்னர்கள்(வடமோடிக் கூத்து)
கூத்து மிகச் சிறப்பாக அரங்கேறியது.

தகவல்:பேராசிரியர் சி.மெளனகுரு

பாடசாலை மண்டபத்துள் பழையமரபினடியாக
நவீனமுறையினில்   அமைக்கப்பட்ட வட்ட மேடையில்(வட்டக் களரியில்)
சுற்றி வரப் பார்வையாளரை அமரப் பண்ணி நாம் இதனை அரங்கேற்றினோம்

வட்டக்களரி அமைக்கப்பட்டு அதன் தூண்கள் பழைய மரபுப்படி
தென்னங்குருத்து ஓலைகளாலும் சேலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்ததும்
சுற்றிவர வாழைத்தண்டுகள் நடப்பட்டு அவற்றின் மீது
தேங்காய்பாதிக்குள் எண்ணையிட்டு ஒளியேற்றப்பட்டுப்
பழைய மரபினடிப் படையில் மண்டபத்துள் அரங்கம் அமைத்திருந்ததும்
வட்டக்களரி மரபு அறியாதோருக்கும் கணாதோருக்கும் ஓர் புதிய அனுபமாக அமைந்திருந்தது.

சுற்றிவர ஆற்றுகை நிகழ்ந்ததும் சுற்றிவர அமர்ந்திருந்து
நாடகம் பார்த்ததும் பலருக்கு ஓர் புதிய அனுபவம்

பார்வையாளர்களில் வயது சென்றோர் தாம் தமது
பால்ய நாட்களுக்குள் சென்று மீண்ட உணர்வு ஏற்பட்டதாகக்கூறினார்கள்

பொதுவாகக் கூத்து பெரும் பராட்டுக்களையே பெற்றது.
சிலர் தமது விமர்சனங்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்டனர்.
ஆக்கபூர்வமாக சில பகிர்வுகள் அழிவு பூர்வமாகச் சில பகிர்வுகள்.

இது எனக்குப் பழக்கமானதே

இந்நாடகப் படைப்புச் செயற்பாடு எனக்கோர் சவால் மாத்திரமன்று
புதிய அனுபவமும் ஆகும்.

ஆடல் பாடல் பரிச்சயம் அதிகமற்ற
40 வயதுக்கு மேற்பட்ட ஆட்களைப் பயிற்றி எடுப்பது மிகச் சிரமமானமுயற்சி.

கல்லில் நார் உரிப்பதற்குச் சமம்.
2010இல் 3 கூத்துக்களையேனும் அரங்கேற்ற வேண்டும் என்ற உற்சாகம் எனக்குப் பிறந்துள்ளது.

இக்கூத்தினால் நான் பெற்ற இலாபம் இது.

கிழக்குப் பல்கலைக் கழகத்திலும் விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்திலும் நாடகம்-அரங்கியல் பயிலும் மாணவர்கள் கூத்தை ஒரு பாட நெறியாகப் பயிலுகிறார்கள்.
பாடசாலைகளில் 6ஆம் ஆண்டிலிருந்து 13ஆம் ஆண்டுவரை நாடகத்தைப் பாடமாக எடுக்கும் மாணவர்கள் கூத்தையும் அறிந்து கொள்ளும் வகையில் கலைத்திட்டம் தயாரிக்கப்படடுள்ளது.
இவ்வகையில் இதற்கொரு கல்வி நோக்கமுமுண்டு
பிரதி ஆக்கம்,ஆடல் பாடல் பயிற்சி உடை ஒப்பனை அனைத்தையும் நானே செய்ய வேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டார்கள்.




Thursday, December 30, 2010

அறிவித்தல்

சிவனு லெட்சுமணன் நினைவுப் போட்டி

மலையக தியாகி சிவனுலெட்சுமணனின் நினைவுத் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நாட்டார் பாடல் சேகரிப்பு போட்டியொன்றினை நடாத்த முச்சந்தி இலக்கிய வட்டம் தீர்மாணித்துள்ளது.

மலையக மக்களின் வரலாற்று ஆவனமாகவும் சான்றாதாரமாகவும் திகழும் மலையக நாட்டார் பாடல்கள் பழமொழிகள் என்பனவற்றினை சேகரித்து வெளியிடவும் அவை சேகரிப்பு தொடர்பில் மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தவும் இம் முயற்சி ஆதர்சனமாக அமையும் என எதிபார்க்கப்படுகின்றது. தெரிவு செய்யப்படும் பாடல், விடுகதை, பழமொழிகள் என்பனவற்றுக்கு எதிர்வரும் சிவனுலெட்சுமணன் நினைவுப்பேருரையின் போது பரிசில்கள் வழங்கப்படும். அத்துடன் தொகுக்கப்படும் நூலில் பாடியவர், தொகுத்தவர் விபரம், பெயர், என்பனவும் பிரசுரிக்கப்படும்.
இதற்கான பரிசில்கள் 2011 மே மாதத்தில் நடைப்பெறவுள்ள சிவனுலெட்சுமணன் நினைவுப் பேருரையின் போது வழங்கப்படும்.
போட்டியில் பங்குபற்றும் மாணவர்கள் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும். போட்டியின் விதியின்படி  10 நாட்டார் பாடல்களுடன் 10 பழமொழிகள் அல்லது விடுகதைகளையும் சேகரித்து அனுப்புதல் வேண்டும். அனுப்பபடும் பாடல்கள் பழமொழிகள், விடுகதைகள் நேரடியாக மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டவையாக இருத்தல் வேண்டும்.

போட்டியாளர் மாணவர் என்பதை உறுதிப்படுத்த அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்( உத்தியோக முத்திரை இடப்படல் வேண்டும்) யாரேனும் ஒருவரால் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். தொடர்புக் கொள்ள வேண்டிய முகவரி: திரு. சு. உலகேஸ்பரா, அமைப்பாளர், முச்சந்தி இலக்கிய வட்டம், 19 / 10, திம்புல்ல வீதி, ஹட்டன்.  

Saturday, December 25, 2010

டிசெம்பர் 25 தேவகுமாரன் மித்ராவின் பிறந்தநாள் ! 

-கலையரசன்-  


"அனைவருக்கும் யால்டா (Yalda) நல்வாழ்த்துக்கள்!"
என்ன? ஒன்றுமே புரியவில்லையா? "கிறிஸ்துமஸ் தினம்" என்று சொன்னால் தான் தெரியுமா?
டிசம்பர் 25 ம் தேதி, தேவகுமாரன் இயேசு கிறிஸ்து பிறந்தார். அவரது பிறந்தநாளை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடுவதாக எல்லோரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். கிறிஸ்தவ சகோதரர்களே, நண்பர்களே, பெரியோர்களே, இயேசு கிறிஸ்து டிசம்பர் 25 அன்று தான் பிறந்தார் என்று விவிலிய நூலில் எங்கேயும் எழுதப்படவில்லை. பல அறிஞர்கள் பைபிளில் ஒவ்வொரு சொல்லாக தேடிப் பார்த்து விட்டார்கள். இயேசு எந்த தேதியில் பிறந்தார் என்ற விபரம் கூட அங்கே இல்லை. அப்படியானால் எதற்காக டிசம்பர் 25 ஐ, இயேசு பிறந்த தினம் என்று கூறுகிறார்கள்? இதற்கான விடை ரோமர்களின் வரலாற்றில் தேடிப் பார்க்கப் பட வேண்டும். ஆதி கால கிறிஸ்தவர்கள், பிற ரோம பிரஜைகளை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றிக் கொண்டு வந்தனர். அவர்களுக்கு இருந்த ஒரு பெரிய பிரச்சினை, கிறிஸ்தவத்துக்கு முந்திய ரோம மதத்தின் பண்டிகை நாட்கள். டிசம்பர் 25 ம், வேற்று மதம் ஒன்றின் புனித தினம். அதற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.

ரோமர்கள் டிசம்பர் 17 முதல் 25 வரை, "Saturnalia" என்றொரு பண்டிகையை கொண்டாடுவார்கள். ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட நாட்களில் சட்ட ஒழுங்கு தளர்த்தப்படும். "மக்கள் தெருவில் பாடிக் கொண்டே நிர்வாணமாக வீடு வீடாக செல்வார்கள். பாலியல் பலாத்காரங்கள் சாதாரணமாக நடக்கும். மனித உருவத்தில் செய்யப்பட்ட பிஸ்கட் புசிப்பார்கள்." இவ்வாறு, தான் அவதானித்தவற்றை லூசியான் என்ற கிரேக்க சரித்திர ஆசிரியர் குறித்து வைத்துள்ளார். ஜெர்மனியர்களும், ஆங்கிலேயர்களும், இப்போதும் கிறிஸ்துமஸ் காலத்தில், மனித உருவத்தில் செய்யப்பட்ட பிஸ்கட்கள் தயாரிப்பார்கள். டிசம்பர் மாத பண்டிகை, தீமையை அழிப்பதாகவும் பொருள் கொள்ளப் படுகின்றது. ஒவ்வொரு ஊரிலும், தீய ஒழுக்கம் கொண்ட ஒரு ஆண்/பெண், பாவியாக தேர்ந்தெடுக்கப்படுவார். ஊர் மக்கள் யாரை "பாவி" என்று சுட்டிக்காட்டுகிறார்களோ, அந்த நபர் கொடூரமாக கொலை செய்யப்படுவார். டிசம்பர் 25 அன்று தான் தீர்ப்புக் கூறும் நாள். பிற்காலத்தில், ரோமர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறினாலும், பழைய பண்டிகை தினத்தை கொண்டாடாமல் விடவில்லை. கிறிஸ்தவ சபை, டிசம்பர் 25 ம் திகதியை, இயேசுவின் பிறந்த தினமாக அறிவித்ததால், அது கிறிஸ்தவ புனித தினமாகி விட்டது.

டிசம்பர் 25, இன்னொரு கடவுளின் பிறந்த தினமாக கொண்டாடப் பட்டது. ஒரு காலத்தில் மித்ரா என்ற கடவுளை வழிபடும் மதம், இன்றைய ஈரான் முதல் ரோமாபுரி வரை பரவியிருந்தது. ரிக் வேதத்தில் எழுதப் பட்டிருப்பதால், வட இந்தியாவிலும் மித்ரா வழிபாடு இருந்திருக்க வேண்டும். குறிப்பாக ரோம படையினர் மத்தியில் மித்ரா வழிபாடு பிரபலமாக இருந்தது. பண்டைய ரோமர்களுக்கு மித்ரா கடவுளின் தோற்றம் பற்றிய கதை பரிச்சயமானது. ஆச்சரியப்படத் தக்கவாறு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பு குறித்த கதையும், மித்ராவின் பிறப்பு குறித்த கதையும் ஒரே மாதிரி உள்ளன. கிறிஸ்தவம் தோன்றுவதற்கு முன்பு (கி.மு.600)பல நூறாண்டுகளாக, மித்ரா வழிபாடு இருந்துள்ளது. ஆகவே இது ஒன்றும் தற்செயல் அல்ல. பிற்காலத்தில் கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபன மயப் படுத்தியவர்கள், மித்ராவின் கதையை, இயேசுவின் கதையாக திரித்திருக்க வாய்ப்புண்டு. இன்று மித்ராவின் கதை யாருக்கும் தெரியாது. ஆனால் அன்றிருந்த நிலை வேறு. இன்று எவ்வாறு ஏசு பிறந்த கதை சாதாராணமாக எல்லோருக்கும் தெரியுமோ, அதே போல பண்டைய ரோம மக்கள் அனைவருக்கும் மித்ரா பிறந்த கதை தெரிந்திருந்தது. ஆகவே ஒன்றை இன்னொன்றிற்கு மாற்றாக கொண்டு வந்ததன் மூலம், பழைய மத நம்பிக்கைகள் அடியோடு அழிக்கப் பட்டன.

ஆண்டவரின் குமாரனான மித்ரா, டிசம்பர் 25 அன்று, பூமியில் பிறந்ததாக கூறப் படுகின்றது. ஏசுவை ஈன்ற கன்னி மரியாள் போன்று, மித்ராவின் தாயான Anahita வும் கன்னியாகவே கடவுளின் குமாரனை பெற்றெடுத்தார். மித்ரா மரணமுற்ற போது, ஒரு குகைக்குள் புதைக்கப் பட்டார். சில நாட்களின் பின்னர் உயிர்த்தெழுந்தார். ஏசுவின் மரணம் பற்றிய கதையும், இந்த இடத்தில் ஒத்துப் போகின்றமை அவதானிக்கத் தக்கது. ஈரானில் சாரதூசர் என்ற தீர்க்கதரிசி, ஓரிறைக் கோட்பாட்டை கொண்டு வந்ததால், பல தெய்வங்களில் ஒன்றான மித்ரா முக்கியத்துவம் இழந்தது. சரதூசர், "இறைவன் ஒருவனே, அவன் பெயர் மாஸ்டா," என்று புதியதொரு மத சம்பிரதாயத்தைக் கொண்டு வந்தார். கிறிஸ்துமஸ் என்ற சொல்லில் உள்ள "மஸ்", மாஸ்டாவில் இருந்து திரிபடைந்த சொல்லாகும்.
அன்றிருந்த போப்பாண்டவர் லயோ(கி.பி. 376), மித்ரா வழிபாட்டுத் தலங்களை அழித்தார். அது மட்டுமல்ல, மித்ராவின் பிறந்த தினமான டிசம்பர் 25 ஐ, இயேசு பிறந்த தினம் என்றும் அறிவித்தார். ஈரானுக்கு அயலில் உள்ள ஆர்மேனியாவில் மித்ரா வழிபாடு நீண்ட காலத்திற்கு தொடர்ந்தது. கிறிஸ்தவ மதத்தை அரசு மதமாக ஏற்றுக் கொண்ட முதலாவது நாடு ஆர்மேனியா என்பது குறிப்பிடத் தக்கது. அவர்களது கலண்டரின் படி, ஜனவரி 6 , இயேசுவின் பிறந்த தினமாக கொண்டாடப் பட்டது. (இன்றைக்கும் ரஷ்யா, கிரேக்கம் போன்ற நாடுகளில் அன்று தான் கிறிஸ்துமஸ்.) "கிறிஸ்துவுக்கு முன்", "கிறிஸ்துவுக்கு பின்" என்ற கால அளவீட்டுக்கும், இயேசு கிறிஸ்துவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ரோம சாம்ராஜ்ய கிறிஸ்தவர்கள், மதப் பிரச்சாரத்துக்கு வசதியாக, அவ்வாறு காலத்தை அளந்து வந்தனர். (தற்போது மதச் சார்பற்ற நாடுகளில் "நமது கால அளவீடு" என்று குறிப்பிடுகின்றனர்.)
பண்டைய ஈரானில் "ஒளி பிறக்கும் தினம்" கொண்டாடப்பட்டது. (இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளி போன்றது. இதுவும் வருட இறுதியில் தான் வரும்.) ஈரானில் அந்த தினத்தை, யால்டா (Yalda) என்று அழைத்தனர். பார்சி மொழியில் "யால்(Yal )" என்றால் பிறப்பு, "டா(Da )" என்றால் நாள் என்று அர்த்தம். நாள் என்பது வெளிச்சம் என்றும் பொருள்படும். அதே நேரம் "டா" என்ற சொல், பல ஐரோப்பிய மொழிகளில் காணப்படுகின்றன. நெதர்லாந்து மொழியில் "Dag"(டாக்), ஸ்கண்டிநேவிய மொழிகளில் "Dag " (டே), ஆங்கிலத்தில் "Day ". எல்லாமே நாளைக் குறிக்கும் சொல் ஒரே மாதிரி தோன்றுவதை அவதானிக்கலாம். கிறிஸ்துமஸ் தினத்தைக் குறிக்கும், ஈரானிய சொல்லான "Yalda " கிட்டத்தட்ட அதே உச்சரிப்பில் ஸ்கண்டிநேவிய மொழிகளில் பயன்படுத்தப் படுகின்றது. ஸ்கண்டிநேவிய நாடுகளில் கிறிஸ்துமஸ், "Juledag" (உச்சரிப்பு "யூலே டெ") என்று அழைக்கப்படுகின்றது. பின்லாந்தில் "Joulu" (உச்சரிப்பு: "யவ்லு") என்று அழைக்கின்றார்கள். ஸ்கண்டிநேவிய நாடுகளில் டிசம்பர் 25, ஏசுவின் பிறந்த தினம் என்பதனை விட,
அறுவடை நாள் என்ற அர்த்தத்திலும் கொண்டாடப் படுகின்றது. ஸ்கண்டிநேவிய நாடுகளில் உங்கள் நண்பர்கள் வசித்தால், அவர்களிடம் கேட்டு தகவலை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.
மேலதிக தகவல்களுக்கு:
Merry Mithra
Yalda
Mithra
Saturnalia

நூல் அறிமுக விழா

கனடாவில், இளங்கோவன் கதைகள், 
தமிழ் இலக்கியக் களஞ்சியம்
நூல்கள் அறிமுக விழா
 - தொகுப்பு: கெவின் ஆனந்த் (கனடா)
                                                      
'புலம்பெயர்ந்த எம்மக்களது வாழ்வுச் சிக்கல்களை வி. ரி. இளங்கோவனது சிறுகதைகள் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளன. பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல அவரது கதைகள் 'நிர்த்தாட்சண்யமான யதார்த்தம்" என்பது உண்மைதான். புகலிட வாழ்வின் அனுபவங்கள் மாத்திரமன்றி தாயகத்தில் வாழ்ந்த அனுபவப் பதிவுகளாகவும், ஒரு மனிதநேயவாதியின் படப்பிடிப்பாகவும் அவரது கதைகள் பளிச்சிடுகின்றன. கலை இலக்கிய அரசியல், மருத்துவ, சட்டத் துறைகளில் சாதனை படைத்த குடும்ப பாரம்பரியத்தில் வந்த இளங்கோவனிடமிருந்து மேலும் பல படைப்புகளை எதிர்பார்க்கிறோம்."
இவ்வாறு கனடா ரொறன்ரோ மாநகர நெல்சன் வீதியில் அமைந்துள்ள முதியோர் சமூக நிலைய மண்டபத்தில், கடந்த ஞாயிறு (12 - 12 - 2010) மாலை நடைபெற்ற இரு நூல்களின் அறிமுக விழாவில் உரையாற்றிய கலாநிதி பால. சிவகடாட்சம் குறிப்பிட்டார்.
பாரிஸ் மாநகரில் வாழ்ந்துவரும் எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் 'இளங்கோவன் கதைகள்" (சிறுகதைத் தொகுதி) அவர் பதிப்பித்து வெளியிட்ட கவிஞர் த. துரைசிங்கம் அவர்களின் 'தமிழ் இலக்கியக் களஞ்சியம்" ஆகிய நூல்களின் அறிமுக விழா கனடா ரொறன்ரோ மாநகரில் பிரபல எழுத்தாளர் என். கே. மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

த. துரைசிங்கம் அவர்களின் அசுர சாதனை
'தமிழ் இலக்கியக் களஞ்சியம்"

இவ்விழாவில் கலாநிதி இ. பாலசுந்தரம் பேசுகையில் குறிப்பிட்டதாவது: 'கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி ஓய்வுபெற்ற கவிஞர் த. துரைசிங்கம் அவர்களின் வாழ்நாள் முயற்சியின் வெளிப்பாடாக, அசுர சாதனையாக வெளிவந்திருப்பது 'தமிழ் இலக்கியக் களஞ்சியம்". தனிமனிதனின் இந்தச் சாதனையை மெச்சி அவருக்குச் சாகித்திய மண்டலப் பரிசு மாத்திரமல்ல, அதற்கும் மேலான பரிசினை இலக்கிய அமைப்புகள், தமிழ் மக்கள் வழங்கிக் கௌரவிக்க வேண்டும். தமிழகத்தவர் எம்மவரது சாதனைகளை, படைப்புகளைத் தொடர்ந்தும் இருட்டடிப்புச் செய்துவரும் வேளையில் இத்தகைய ஆவணப்படுத்தும் முயற்சிகள் பாராட்டுக்குரியதாகும். நெருக்கடி மிக்க சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டு, பலவருடத் தேடுதலின் பலனாக இந்த நூலைத் தந்துள்ள த. துரைசிங்கம் அவர்களின் பணி இலக்கியத்துறையில் மிகவும் போற்றத்தக்கதாகும். அவரது அசுர சாதனையான இப்பணிக்கு எம் தமிழறிஞர்கள் தலைசாய்த்து வாழ்த்த வேண்டும். இந்நூலின் அடுத்த பதிப்பும் சிறப்புற அமைய எம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்" என்றார்.
ஆசிரியர்; த. சிவபாலு பேசுகையில், துரைசிங்கம் அவர்களின் கல்விப் பணி குறித்து நன்கறிவேன் எனவும், அவரது ஆலோசனைகள், செயற்பாட்டு முன்மாதிரிகள், தாயகத்தில் கொத்தணி அதிபராகத் தான் கடமையாற்றவும், கல்வித்துறை - நிர்வாகம் குறித்துப் பல விடயங்களைப் புரிந்துகொள்ளவும் உதவியது என்றும், 'செய்யும் தொழிலே தெய்வம்" என அர்ப்பண சிந்தையுடன் செயலாற்றும் அவரது தமிழ் இலக்கியக் களஞ்சியம் நூலின் இரண்டாம் பாகம் அவசியம் வெளிவர வேண்டுமென எதிர்பார்ப்பதாகவும், அவரது குழந்தைப் பாடல்களைக் கனடாவில் கற்பித்துக் கொடுப்பதில் மகிழ்வுறுவதாகவும் குறிப்பிட்டார்.
'தீவகத்தில் கல்வித்துறையிலும் மருத்துவத்துறையிலும் புகழ்பெற்ற பாரம்பரியமிக்க குடும்பத்தில் வந்த இளங்கோவன் கல்லூரிக் காலம் முதல் மனிதாபிமானியாக, முற்போக்கு இலக்கியவாதிகளுடன் இணைந்து நடந்தவர். புகழ்பெற்ற நாவலாசிரியர் கே. டானியலின் தோழனாக, அவருடன் கலை இலக்கிய அரசியல் பணியாற்றியவர். இவரது மூத்த சகோதரர் நாவேந்தன் தலைசிறந்த பேச்சாளர். தமிழரசுக் கட்சியின் அன்றைய பிரச்சாரப் பீரங்கி. அவர்களது இலக்கியப் பிரதிநிதி. அடுத்தவர் துரைசிங்கம். ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர். சிறுவர் இலக்கியத்திற்காக நான்குமுறை சாகித்திய மண்டலப் பரிசில்களையும் மற்றும் பரிசில்கள் பலவற்றையும் பெற்ற சாதனையாளர். அடுத்தவர் சிவானந்தன். மருத்துவத்துறையில் பணியாற்றும் இலக்கிய அபிமானி. மற்றவர் வி. ரி. தமிழ்மாறன்.  கொழும்பு பல்கலைக்கழகச் சர்வதேச சட்டபீடத் தலைவர். கலை இலக்கிய அரசியல் விமர்சகர். பல நூல்களை எழுதியவர். இவர்களது தந்தையார் புகழ்பெற்ற சித்த ஆயுர்வேத வைத்தியர். இவ்வாறு ஒரு குடும்பத்தில் அத்தனைபேரும் புகழ்பெற்றவர்களாக விளங்குகின்ற பாரம்பரியத்தில் வந்த இளங்கோவனது நூலைக் கனடாவில் அறிமுகப்படுத்தும் இவ்விழாவில், அவரது கலை இலக்கிய அரசியல் நண்பர்கள், உறவினர்கள் பெருமளவில் இங்கு வந்து சிறப்பிப்பது எதிர்பார்த்தது தான்" என விழாவிற்குத் தலைமை வகித்த பிரபல எழுத்தாளர் என். கே. மகாலிங்கம் குறிப்பிட்டார்.
கலாநிதி க. தேவமனோகரன் பேசுகையில், இளங்கோவன் கதைகளில் தனக்குப் பிடித்த கதைகளின் சிறப்புகள் குறித்தும், அவரது தோழமை, மனிதாபிமானம், நட்பு என்பன அவரது கதைகளில் பளிச்சிடுவதை வாசகர்கள் அறியலாமெனவும், அவரது கதைகளின் சிறப்புக்கருதியே, இலங்கை இலக்கியப் பேரவை - இலக்கிய வட்டம் அவரது கதைத் தொகுதிக்குப் பரிசளித்துக் கௌரவித்தது எனவும், அவருடன் ஏற்பட்ட நட்புக் காரணமாக விஞ்ஞானப் பட்டதாரியான தானும் இலக்கிய ஆர்வலனாக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
யாழ். பல்கலைக்கழகப் பொருளியல்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ந. பேரின்பநாதன் பேசுகையில், தனது நண்பர் இளங்கோவனோடு சமகாலத்தில் கல்விகற்ற நாட்களை நினைவுகூர்ந்ததோடு, அவரது மனிதாபிமான செயற்பாடுகள், சமூக மேம்பாட்டு எண்ணங்கள், தாயகப்பற்று, இலக்கியப் படைப்புகள் தம்மைக் கவரந்தன எனக் குறிப்பிட்டு பாராட்டுத் தெரிவித்தார்.
கனடா - புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு. சோம. சச்சிதானந்தன் பேசுகையில், 'இளங்கோவன் சிறப்புகளை நன்குணர்ந்து, புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் இவ்வருட ஆண்டுவிழாவான 'பூவரசம் பொழுது" நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பாரிஸ் மாநகரிலிருந்து அவரை அழைத்தமை தமக்குப் பெருமையளிப்பதாகவும், அவர் எம்மோடு மாத்திரமல்ல, எனது தந்தையின் நண்பராகவும் சமூகப் பணியாற்றியவர் எனவும், அவரது சிறப்புகளை இங்கு பார்த்தும் எம் ஊரவர் பெருமைப்படலாமெனவும் குறிப்பிட்டார்.
கனடா 'உதயன்" பிரதம ஆசிரியர் என். லோகேந்திரலிங்கம் பேசுகையில், தாயகத்தில் நண்பர் இளங்கோவனது கலை இலக்கிய அரசியல் செயற்பாடுகளை நன்கறிவேன் எனவும்,  அவர் மார்க்ஸிச சிந்தனை வழி செயற்பட்டவர் எனவும், தமக்கிடையேயான அனுபவங்களைக் குறிப்பிட்டு நட்புரையாற்றினார்.
ஈற்றில் ஏற்புரையாற்றிய வி. ரி. இளங்கோவன் கனடா வந்தது முதல் பல வழிகளிலும் தமக்கு உதவிய நண்பர்களுக்கு நன்றி கூறியதுடன், தமது கதைகள்pன் உண்மைத்தன்மைகள், சம்பவங்கள் குறித்தும், உளக் கொதிப்புகள் - உணர்வுகள் எவ்வாறு எழுதத் தூண்டின எனவும் விளக்கினார்.
நூல் அறிமுக விழாவினை சிறப்புற ஏற்பாடு செய்த 'நண்பர் வட்டம்" சார்பில் திரு. சூசை மார்க் நன்றியுரை வழங்கினார்.
நூல்களின் முதற்பிரதிகளைப் பிரபல தொழிலதிபர் திரு. குணா செல்லையா பெற்றுக்கொண்டார். மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டமாக விழா சிறப்புற அமைந்ததும், விழாவுக்குக் கொண்டுவரப்பட்ட நூல்கள் யாவும் முடிவடைந்துவிட்டதால் சிலர் நூல்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் வீடு திரும்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

'பூவரசம் பொழுது" கலை விழாவில்
பிரதம விருந்தினராக வி. ரி. இளங்கோவன்

முன்னதாக, 04 - 12 - 2010 சனிக்கிழமை மாலை வெகு சிறப்பாக நடைபெற்ற, கனடா - புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 'பூவரசம் பொழுது" ஆண்டு விழாவிற்கு வி. ரி. இளங்கோவன் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார். இந்த ஆண்டு விழாவிலும் வழமைபோல பெருந்தொகையானோர் கலந்துகொண்டனர்.

Thursday, December 23, 2010

மத வரலாற்றை பின்னுக்குத் தள்ளும் சமூக வரலாறு 
-கவின் மலர்- 

இந்திய வரைபடத்தின் ஒரு மூலையில் சிறு புள்ளியாகத் தெரியும் ராமேஸ்வரம் தீவை செயற்கைக்கோள் வழியே இணையத்தில் உற்று நோக்க-அதன் பரப்பளவும், சூழ்ந்திருக்கும் கடலும் கண்களுக்குள் விரிகிறது. அது போலவே 92 பக்கங்களை உள்ளடக்கிய "சேதுக் கால்வாய் திட்ட மும் ராமேஸ்வரத் தீவு மக்களும்' நூலை வாசிக்க வாசிக்க-ராமேஸ்வரம் தீவின் மக்கள், அம்மக்களிடையே நிலவும் சாதி அடுக்குகள், சேது சமுத்திரத் திட்டம், மீனவர்கள், ஆதம் பாலம் எனப் பல்வேறு கோணங்களில் அத்தீவு நம் கண்முன் நிற்கிறது.

சேதுக் கால்வாய் திட்டத்தின் ஆதரவு இயக்கங்கள், தேர்தல் அறிக்கையில் மட்டுமே "சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவோம்' என சூளுரைப்பவையாக உள்ளன. அதிகபட்சம் துண்டறிக்கைகள் கொடுத்து பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளும் அளவிற்குதான் இத்திட்டத்திற்கான முன் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சுற்றுச்சூழல் சார்ந்து இத்திட்டத்தை எதிர்க்கும் இயக்கங்கள் பெரும்பாலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களாகவே இருக்கின்றன. மீனவர்களின் நலன் சார்ந்து திட்டத்தை எதிர்க்கும் இயக்கங்கள் சொற்பமே! ஆனால் இல்லாத ராமன் பெயரைச் சொல்லி, இல்லாத பாலத்தைச் சொல்லி, அரசியலும் ஆன்மீகமும் நடத்தும் இந்து மதவாதிகள் இத்திட்டத்தை நிறுத்தி வைக்கும் அளவிற்கு செல்வாக்குப் பெற்றிருக்கின்றனர்.

சர்வ வல்லமை பொருந்திய மத்திய அரசையே நீதிமன்றத்தில் தலைகீழாகப் பேச வைத்தது பார்ப்பனியம். சமூகத்தின் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரையிலும் பார்ப்பன அதிகாரம் கோலோச்சுவதன் அடையாளமே இது. பாவலர் ஓம்முத்து மாரி கூறுவது போல, கண்ணுக்குத் தெரிந்த பாபர் மசூதியை இடித்த கும்பல், கண்ணுக்குத் தெரியாத பாலத்தை இடிக்கக்கூடாதென்கிறது! பார்ப்பனியம் வெல்லுமா, சேதுக் கால்வாய் திட்டம் வெல்லுமா என்ற கேள்வி ஒருபுறம், மீனவர் நலன் முக்கியமா, சேது திட்டம் முக்கியமா என்ற கேள்வி மறுபுறம். இவ்விரண்டையும் மிக நுணுக்கமாக அலசுகிறது "கருப்புப் பிரதிகள்' வெளியீடாக வந்துள்ள குமரன்தாசின் நூல்.

ராமேஸ்வரத் தீவு பார்ப்பனர்கள் கோயிலை மூலதனமாக வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பது; இடைநிலை சாதிகள் பார்ப்பனரை அண்டிப் பிழைப்பு நடத்துவது; தாழ்த்தப்பட்ட சாதிகளின் தொழில்கள் என எல்லாவற்றையும் விவரிக்கிறது இந்நூல். சாதியாய் பிரிந்து கிடக்கும் ராமேஸ்வர தீவை விழித்திரை முன் விரிய விடுகிறார் நூலாசிரியர். ஒவ்வொரு ஊருக்கும் இப்படி ஒரு நூல் வெளிவந்தால், பார்ப்பனியம் எப்படி நம் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் அடிமைப்படுத்தி, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது என்பது அம்பலமாகிப் போகும்.

சிறுவயது முதல் பார்க்க விரும்பிய ராமேஸ்வரம் தீவினையும், தனுஷ்கோடியையும் சுற்றுலா பயணியாக சென்று பார்த்த போது கண்முன் விரிந்த ராமேஸ்வரம் வேறு. அப்போது பார்த்த மக்கள் வேறு. குமரன் தாசுடன் பயணித்து அவர் அழைத்துச் சென்று காட்டும் போது விரியும் ராமேஸ்வரம் வேறு. ஓர் அழகிய தீவின் வரலாற்றையும் சமூக நிலையையும் எடுத்துரைக்கிறார் ஆசிரியர். அங்கேயே வாழ்ந்து வருபவர் என்பதால் சொந்த அனுபவங்களில் இருந்தும் அவ்வப் போது செய்திகளை விவரிக்க முடிகிறது.

"சேது பந்தன்' என்ற ராமன் பாலக் கதையை கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தீவுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கூறி பிழைப்பு நடத்தும் சிலரையும், அவர்கள் விடும் கதைக்கு துணை போகும் வணிகர்களையும் தோலுரிக்கிறது இந்நூல். இந்நூலில் உள்ள கட்டுரைகளுக்காக திரட்டப்பட்டுள்ள புள்ளி விவரங்களும், அவை ஆங்காங்கே கட்டுரைகளுக்கிடையே வாசகனை தொல்லை செய்யாமல், அயர்ச்சியுற விடாமல் தெளிக்கப்பட்டுள்ள விதமும்-வழக்கமாக கட்டம் கட்டி அட்டவணை போடும் புள்ளிவிவரங்களைப் பார்த்து சலித்த கண்களுக்கு வேறுபட்டு நிற்கின்றன.

ஒவ்வொரு ஊருக்கும் "தல வரலாறு' என்று ஒன்று இருக்கும். ராமேஸ்வரம் சென்று பார்த்தால் "ராமேஸ்வரத்தின் தல புராணம்' என்ற பெயரில் கதை விட்டிருப்பார்கள். ராமன் இங்கேதான் வந்தான், குளித்தான், சாப்பிட்டான், தூங்கினான், குறட்டை விட்டன்; அனுமன் இங்கேதான் "பைலட் ட்ரெயினிங்' எடுத்து பறக்க கற்றுக் கொண்டான் என்றெல்லாம் கதை கதையாக அளப்பார்கள். இந்த கட்டுக்கதைகளே இன்று உச்ச நீதிமன்றம் வரை எதிரொலித்து இருக்கின்றன என்றால், அவற்றுக்கு உள்ள ஆற்றல் எப்பேர்ப்பட்டது என்று நம்மால் புரிந்து கொள்ள முடியும். உண்மையில் ராமேஸ்வரத்தின் "தல வரலாறு' என்று இந்த நூலை இனிமேல் சொல்லலாம். அந்த அளவிற்கு ராமேஸ்வரம் குறித்த வரலாறு மற்றும் தகவல்கள் இந்நூலில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இலங்கையின் நிகழ்வுகள் இங்கேயும் எதிரொலிப்பது எப்போதும் நடப்பதுதான். ஈழத்தின் போரோடு ராமேஸ்வரம் மீனவர்களின் வாழ்வும் பின்னிப் பிணைந்திருக்கிறது. சிங்களப்படையினரால் அவர்களுடைய வாழ்வும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரம் தேடி ஆழ்கடலுக்குள் பயணிக்கும் மீனவர்களின் உயிர் இலங்கை கடற்படையினரின் கையில் உள்ளது. உயிருக்குப் பயந்து பயந்து இவர்கள் தொழில் நடத்தும் நிலையில், அவர்களை காப்பதற்காக குரல் கொடுக்கக்கூடிய இயக்கங்கள் எவ்வளவுதான் ஆவேசப்பட்டாலும், இலங்கை கடற்படை அதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் இதுநாள் வரை, மீனவர்களின் தலை தெரிந்தவுடன் சுட்டுக் கொல்லும் கொடூரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

குமரன்தாசின் நூல் ராமேஸ்வரம் மீனவர்களின் கையறு நிலை குறித்தும், அவர்களின் வாழ்நிலை குறித்தும் விரிவாகப் பேசுகிறது. அவர்களுடைய துயரங்கள், சேது திட்டத்தின் விளைவுகள் என அனைத்தையும் விளக்குகிறது. உலக வரலாற்றில், மண்ணின் மைந்தர்கள் என்று கூறப்படும் பூர்வக்குடிகள், வந்தேறிகளால் அடக்குமுறைக்கு ஆளாகி ஒடுக்கப்பட்டு, அவர்களுடைய வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்டு, சுரண்டப்பட்டு, தங்கள் மண்ணையும் வாழ்வையும் இழந்து நிற்பது என்பது, பல பகுதிகளிலும் பல்வேறு காலகட்டங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ராமேஸ்வரம் தீவிலும் இதுவே நடந்திருக்கிறது. தீவின் பூர்வகுடிகளான பரதவர் என்ற மீனவ இனம், வந்தேறிய சாதிகளிடம் தங்களுடைய உரிமைகளை இழந்து நிற்கும் வரலாறை இந்நூல் பதிவு செய்கிறது.

குமரன்தாஸ் கூறுவது போல, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் சேரியை வைத்திருப்பது போன்று ஒட்டுமொத்த தமிழகத்தின் சேரியாக மீனவ கிராமங்கள் உள்ளன. நாகரிக உலகின் நவீனங்களை உள்வாங்கிக் கொண்டாலும், இன்னும் பழங்குடிகளாகவே இருப்பவர்கள் மீனவர்கள். நாகப்பட்டினம் நம்பியார் நகர் மீனவர்கள் "வடக்கே போயிட்டு வந்தேன்' என்று சொன்னால், அவர்கள் அதிகம் கொள்வினை கொடுப்பினை வைத்துக் கொள்ளும் தரங்கம் பாடி, பூம்புகார், சந்திரப்பாடி அல்லது சாமந்தாங்குப்பத்தைக் குறிக்கும். "தெற்கே போயிட்டு வந்தேன்' என்றால் தென்திசையில் உள்ள அக்கரைப்பேட்டை, செருதூர் அல்லது விழுந்தமாவடியை குறிக்கும். இடம் பொருள் ஏவலுக்கேற்ப திசை சுட்டும் இடம் மாறும். ஆனால் இதை கேட்கும் நகர மனிதனுக்கு எந்த ஊரைப் பற்றி சொல்கிறார்கள் என்பது விளங்காது. "கிழக்கே' என்றால் "கடலுக்கு' என்று பொருள். "மேற்கே' என்றால் "நகருக்கு' என்று பொருள். இப்படி திசைகளை வைத்தே அவர்கள் இடங்களைக் குறிக்கிறார்கள். ஆனால் கடலோர நகர்ப்புறங்களில் மக்கள் திசைகளைக் குறிப்பதில்லை. இயற்கையோடு இயைந்து வாழும் தொல்குடியினராக மீனவர்கள் இருப்பதற்கான சான்று இது.

தமிழகத்தை சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை தாக்கியபோது, வீடிழந்து, உடைமை இழந்தவர்களில் பெரும்பாலானோர் மீனவர்கள். கடலில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்கு மீனவர்களின் குடியிருப்புகள் இருந்தால் ஆபத்து எனக் கூறி அவர்களை அப்புறப்படுத்த எத்தனித்தது அப்போதைய அ.தி.மு.க. அரசு. கடலும் கடல் சார்ந்த பகுதிகளும் ஆதியிலிருந்தே மீனவர்களின் சொத்தாக இருந்திருக்கின்றன. இந்த சொத்தை அவர்களிடமிருந்து அபகரிக்க முயன்ற அ.தி.மு.க. அரசு, அவ்விடங்களை "ரிசார்ட்டு' களாக மாற்றும் திட்டத்தை முன்வைத்தது. இதே அரசு 500 மீட்டர் தொலைவை காரணம் காட்டி, ராமேஸ்வரம் கோயில் மீது கை வைக்க முடி யுமா? அங்கிருக்கும் ஆதிக்க சாதியினர் விட்டு விடுவார்களா? கோயில் அவர்களுக்கு எந்தெந்த வழிகளில் அமுதசுரபியாய் இருக்கிறதென இந்நூல் மிகத் தெளிவாக விளக்குகிறது.

அழிந்துபோன தனுஷ்கோடிக்கு சென்றபோது அங்கேயே இருக்கும் மூதாட்டி, தனுஷ்கோடியை கடல் கொள்ளை கொண்ட நாளில், தான் உயிர் தப்பிய விதத்தை எங்களிடம் கூறியதைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போனோம். தாங்கள் ஏர்வாடியில் இருந்து தனுஷ்கோடிக்கு பஞ்சம் பிழைக்க வந்ததாகக் கூறிய அந்தக் கிழவி, ஏர்வாடி தர்கா இருக்கும் திசையை நோக்கி, தான் தினமும் வழிபட்டு வருவதாகக் கூறினார். தனது மகன் மாரியம்மன் கோவில் பூசாரி என்கிறார். "தினமும் என் மருமகளும் மகனும் மாரியம்மனுக்கு விளக்கேத்துவாங்க' என்று கூறிய அந்தக் கிழவியின் மாசுமருவற்ற மனம், கேடுகெட்ட ராமனின் பெயரால் பிழைப்பு நடத்துபவர்களுக்கு இல்லாமல் போனதே என்கிற ஆதங்கம், இந்த நூலை வாசிக்க வாசிக்க எழுந்து கொண்டே இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், பார்ப்பன அடக்குமுறைக்கு எதிராகவும் ஓங்கி ஒலிக்கிறது, குமரன்தாசின் "சேதுக் கால்வாய் திட்டமும் ராமேஸ்வர தீவு மக்களும்” நூல்.

நன்றி : தலித்முரசு  

Saturday, December 11, 2010

பேராசிரியர் கைலாசபதியும் இலக்கிய அமைப்புகளும் 

- பாரதி தீட்சண்யா -

1950 களுக்கு பின்னர் தான் இலங்கை அரசியலிலும் இலக்கியத்திலும் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருந்தன. இக்கால சூழலில் ஆசியா - ஐரோப்பா மற்றும் உலகலாவிய ரீதியிலே தொழிலாளர் வர்க்கம் சார்ந்த உணர்வுகளும் போராட்டங்களும் வலிமை பெறத் தொடங்கின. பாஸிசத்திற்கு எதிராக பலமான மக்கள் இயக்கங்கள் தோற்றம் பெற்று வளர்ச்சி பெற்றிருந்தன. 1930 களில் ஸ்பானியர்கள் உள்நாட்டு யுத்தத்திற்கு எதிராக போராடியதுடன் கம்யூனிஸ்ட் கட்சியும் உருவாகி ஆயிரக் கணக்கான மக்கள் சமத்துவமான சமூதாய அமைப்பை உருவாக்குவதற்காக போராடிக் கொண்டிருந்தார்கள். இக்காலப்பின்னனியில் ஆஸ்திரியா, பிரான்ஸ் முதலிய நாடுகளிலும் பல விடுலை இயக்கங்கள் தோற்றம் பெற்றிருந்தன. இவ்வாறே ஆசியாவிலும் குறிப்பாக சீனா இந்தோனேசிய  முதலிய நாடுகளில் ஜப்பானிய பாஸியத்தை எதிர்த்து வீறு கொண்ட போராட்டங்கள் தோன்றி மக்களிடையே அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. பல்லாயிரக் கணக்கான மக்கள் விடுதலை இயக்கங்களில் தம்மை இணைத்துச் செயற்பட்டனர். இலட்சிய பிடிப்பும் முற்போக்கு உணர்வும் மிக்க எழுத்தாளர் பலர் தோன்றிக் கொண்டிருந்தார்கள். சிலர் பாஸிச வெறியாளர்களாரல் ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டார்கள். தன் மரண வாயிலில் நின்றுக் கொண்டும் மனித குலத்தின் நாகரிகத்தை நம்பிக்கையுடன் மட்டுமல்ல கூடவே கர்வத்துடனும் தன் எழுத்துக்களின் ஊடாக பதிவு செய்த ஜீலியஸ் பசிக்கின் பின்வரும் வாசகம் இக்காலத்தே எழுந்த மக்கள் இலக்கிய கர்த்தாக்களின் உணர்வுகளை அழகுற எடுத்துக் காட்டுகின்றது. ~~ இன்பத்திற்காகவே பிறந்தோம். இன்பத்திற்காகவே வாழ்கிறோம் . இன்பத்திற்காகவே போராடினோம். அதற்காகவே சாகின்றோம். துன்பத்தின் சாயலானது இறுதி வரை எம்மை அணுகாதிருக்கட்டும்”
இவ்வகையான இலட்சிய பீடிப்பும் இலக்கிய தாகமும் கொண்ட எழுத்தாளர்கள் உலக இலக்கியத்தில் தோன்றிக் கொண்டிருந்தார்கள். இதன் பிரதிபலிப்பை நாம் இலங்கை தமிழ் இலக்கிய செல்நெறியிலும் காணக் கூடியதாக உள்ளன.
இக்காலப்பகுதியில் இலங்கை அரசியல் வரலாற்றினை பொறுத்தமட்டில் நாற்பதுகளின் இறுதியிலும் 50 களிலும் பொதுவுடமை இயக்கமானது வீரியத்துடன் செயற்படத் தொடங்கியது. 1953 இல் சகல இடதுசாரி ஜனநாயக சக்திகளும் ஒன்றினைந்து மாபெரும் ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுத்தனர். அவ்வியக்கம் ஏற்படுத்திய கலாசார பண்பாட்டுத் சூழலில் தோற்றம் பெற்றதே முற்போக்கு எழுத்தாளர் சங்கம். முற்போக்கு கலை இலக்கியம் சார்ந்த செயற்பாடுகளையும் கொள்கைகளையும் முன்னெடுப்பதில் இவ்வணியினருக்கு முக்கிய பங்குண்டு. இதன் பின்னணியிலே மக்கள் சார்பான இலக்கியங்களும் இலக்கிய கோட்பாடுகளும் தொற்றம் பெறலாயின.

1950 களுக்கு பின்னர் இலங்கை இலக்கியத்தில் புதியதோர் பரிமாணத்தை தரிசிக்க கூடியதாக அமைந்திருந்தது. இலங்கையில் தேசிய இலக்கியம் எனும் குரல் எழுந்தது. தேசியம், தேசிய கோட்பாடு என்பன தத்துவார்த்த போராட்டங்களாக முன்னெடுக்கப்பட்டன. அதன் விளைவாக இலங்கை மண்ணுக்கே உரித்தான பிரச்சனைகள் இலக்கியத்தில் இடம் பெறத் தொடங்கின. இது குறித்து கைலாசபதி அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
~~தேசியப் பின்னணியில் வளரும் சமுதாயத்தின் போக்கை அனுசரித்து வாழ்க்கைக்கு கலைவடிவம் கொடுக்கவும் சரித்திரத்தின் தன்மையை உணர்ந்து அதற்கு ஈடுகொடுக்கவும் திறமையிருந்தால் சிறந்த - உலக இலக்கியத்தில் இடம்பெறத்தக்க உயர்ந்த சிறுகதைகளைப் படைக்க எமது எழுத்தாளாரால் முடியும் என்றே நம்புகிறேன். பொழுதுபோக்கிற்காக எழுதுவதா அல்லது பொது நலத்திற்காக எழுதுவதா என்னும் முக்கியமான கேள்வி இன்றைய எழுத்தாளர் பலரையும் எதிர்நோக்கி நிற்கிறது. இது புதிய கேள்வியன்று. வெவ்வேறு  வடிவத்திலும் உருவத்திலும் இலக்கிய சிருஷ்டி கர்த்தாக்களை விழித்துப் பார்த்த கேள்விதான். ஆனால் இன்று மிக நெருக்கடியான நிலையிலே இக்கேள்வி எழுத்தாளரை நோக்கிக் கேட்கப்படுகிறது. ஈழத்துச் சிறுகதையாசிரியர்கள் தமது கலாச்சாரப் பாரம்பரியத்தையுணர்ந்து நாட்டு மக்கள் நலமுற்று வாழவும் நானிலத்தவர் மேனிலையெய்தவும் மூட்டும் அன்புக் கனலோடு எழுத முடியுமா முடியாதா என்பதைப் பொறுத்திருக்கிறது எதிர்கால இலக்கிய வாழ்வும் தாழ்வும்”

இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்த தெளிவும் அவசியமானதாகும், ஒரு நாட்டின் பூலோக பண்பாடு பொருளாதாரம் அரசியல் முதலிய அம்சங்கள் சமூக வாழ்க்கையை உருவாக்குவதில் முக்கிய தாக்கம் செலுத்துகின்றன. அவ்வகையில் பிரதேசம், மண்வாசனை என்ற அடிப்படையில் எழுகின்ற இலக்கியங்களை மேலோட்டமாக அர்த்தப்படுத்திப் பாரக்கின்றபோது குறுகியவாதகமாக படலாம். சற்று ஆழமாக நோக்கினால் தான் அதன் பின்னனியில் அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தம் சாதனங்களாகவும் அவை அமைத்துக் காணப்படுகின்றன . மறுப்புறமாக அவை தேசிய எல்லைகளை கடந்து சென்று சர்வதேச இலக்கியமாகவும் திகழ்கின்றன. இவ்வாறுதான் ரசிய புரட்சியின் முன்னோடியாக திகழ்ந்த மாக்ஸிம் கோக்கியும் , இந்திய தேசியவிடுதலைப் போராட்டத்தில் முக்கிய பாத்திரம் வகித்த பாரதியும் இன்னும் இத்தகையோரும் எமக்கும் அரசியல் இலக்கிய முன்னோடிகளாக திகழ்கின்றனர்.
இ.மு.எ.ச நிறுவப்பட்ட காலத்தில் கைலாசபதி; பேராதனை பல்கலைகழக மாணவராக இருந்தார். அவர் இத்தகைய இயக்கத்தின் தோற்றத்தை உள்ளுற வரவேற்றதுடன் காலப்போக்கில் அதனால் கவரப்பட்டு அதன் நிகழ்வுகளிலும் பங்கேற்றார். அத்துடன் அதன் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரானதுடன் இ.மு.எ.ச வின் யாப்பு, கொள்கை  வகுத்தல் முதலிய செயற்பாடுகளிலும் ஆர்வத்துடன் ஈடுப்பட்டார். 1957 ஆம் ஆண்டு கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த இ.மு.எ.ச வின் முதலாவது பேராளர் மாநாட்டில் பிறநாட்டு முற்போக்கு எழுத்தாளர்கள், கவிஞர்கள் பங்குபற்றினர். இம்மநாட்டில் உலக புகழ்பெற்ற கவிஞர் பாப்லோ நெருடாவின் உரையை மொழிப்பெயர்த்தவர் கைலாசபதி. இம்மநாட்டில் மக்கள் கலை இலக்கிய கோட்பாடு குறித்த விவாதங்கள் தோன்றியுள்ளன. யாதார்த்தவாதம் ,சோசலிச யதார்த்த வாதம் குறித்த விவாதங்கள் இடம்பெற்றபோது அத்தகைய அனுபங்களையும் உள்வாங்கி நமது சூழலுக்கான இலக்கிய கோட்பாட்டை உருவாக்கியதில் இ.மு.எ.ச முக்கியபங்குண்டு. ‘கியூபாவின் ஜூலை 26 இயக்கமும், நிகாரகுவில் சான்டினிஸ்டா முன்னணியும் தங்களது போராட்டங்களில் வெல்ல முடிந்ததற்கு ஏற்கனவே இருந்த தேசிய விடுதலைப்போராட்ட மரபை அவை முன்னெடுத்து சென்றது ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். யாரோ கூறியது போல, அவர்கள் தங்களது புரட்சிகளை ஸ்பானிய மொழியில் நடாத்தினர்: ரசிய மொழியில் அல்ல. மார்ட்டியும், சான்டினோவும் அவர்களது ஆன்மீக முன்னோடிகள். சமீபத்திய வெனிசுலா புரட்சியிலும் இது நடந்துள்ளது. தலைவர் ஹியுகோ சாவேசுக்கு சைமன் பொலிவார், சைமன் ரோட்ரிக்ஸ் ( பொலிவாரின் ஆசிரியர்) மற்றும் எஸ்குயேல் ஜமாரா ஆகியோரின் சிந்தனைகளுக்கு எப்படி புத்துயிர் அளிப்பது என்பது தெரிந்திருந்தது”( மார்த்தா ஹர்னேக்கர், தமிழில்: அகோகன் முத்துசாமி, (2010), இடதுசாரிகளும் புதிய உலகமும், பாரதி புத்தகாலயம், சென்னை, ப.75)
இவ்வகையில் சோசலிச யதார்த்தவாதம் குறித்த சிந்தனைகள் முன்வைக்கப்பட்ட போது அது அன்றைய சூழலில் இலங்கைக்கு பொருத்தமற்றதொன்றாகவே காணப்பட்டது.; பண்பாட்டுத்துறையில் சமூகமாற்றததிற்கான போராட்ட வடிவமானது மண்வாசனை இலக்கியம் அமைந்திருப்பதனையும் அதன் தர்க்க ரீதியான வளர்ச்சியாகவே தேசிய இலக்கியம் அமைந்திருப்பதனையும் வரலாற்று அடிப்படையிலும் சமூதாய நோக்கிலும் உணர்ந்து செயற்பட்டமையே இ.மு.எ.ச.த்தின் முக்கியமான சாதனையாகும். அவ்வியக்கத்தில் இத்தகைய கோட்பாடுகளை உருவாக்குவதில முன்னணியில்  செயற்பட்டவர் கைலாசபதி; என்பதை ஆய்வாரள்கள் சுட்டிக் காட்டுவர்.  அத்துடன் இ.மு.எ.ச.த்தின் பணிகளை தமது மாணவர்கள், நண்பர்களுக்கு மத்தியில் முன்னெடுத்துச் சென்றதுடன் அவர்களை இவ்வியக்கத்தில் சேர்ப்பதிலும் முக்கிய கவனமெடுத்துள்ளதையும் அறிய முடிகின்றது.
இவ்வகையில் செயற்பட்டுவந்த இ.மு.எ.ச மானது 1960 களின் ஆரம்பத்திலேயே அது சித்தாந்த ரீதியாகவும் இயக்க ரீதியாகவும் சிதைய தொடங்கியது என்பதனையும் கவனத்திலெடுக்க வேண்டும். இலங்கையின் பொதுவுடமை இயக்கத்தில் அறுபதுகளின் ஆரம்பத்தில் ஏற்பட்ட தத்துவார்த்த முரண்பாடுகளும் பொதுவுடமை இயக்கத்தை பிளவுக்குள்ளாக்கியது. இ.மு.எ.ச. பல தேசிய ஜனநாயக சக்திகளை தன்னகத்தே கொண்டிருந்த போதினும் அவ்வியக்கத்தில் அங்கம் வகித்த பலர் இடதுசாரி கட்சி உறுப்பினர்களாக இருந்தவர்கள்.மேற்படி பிளவும் அணி பிரிதலும் இ.மு.போ.எ.ச.த்தையும் பாதித்தது. அதன் தலைமை பொறுப்பினை ஏற்றிருந்தவர்களின் போக்கு இவர்களை சித்தாந்த ரீதியாக சிதைத்து பின் இயக்க ரீதியான சிதைவுக்கு வழிவகுத்தது.
மனுக்குல விடுதலைக்கான பரந்துப்பட்ட ஐக்கிய முன்னனிப் போராட்டத்தில் இவ்வியக்கத்தின் பலம் பலவீனம் குறித்து ஆழமான ஆய்வொன்றினை காய்த்தல் உவத்ததலின்றி செய்தல்; காலத்தில் தேவையாகும்.
இ. மு. போ. எ. ச வீறுக்கொண்டெழுந்த காலத்திலும், பின்னர் அதன் தளர்வுற்றக் காலத்திலும் இவ்வியக்க செயற்பாடுகளில் கைலாசபதி பங்கெடுத்தார். தன்னால் முடிந்த மட்டும் அதனை முற்போக்கான திசையில் வைத்திருப்பதற்கே அவர்  பெரும் முயற்சியெடுத்திருந்தார்.
இத்தகைய இ.மு.எ.ச.த்தின் சிதைவுக்கு பின்னர் அன்றைய காலத்தின் தேவையை அடியொட்டி உருவாக்கபட்டதே தேசிய கலை இலக்கிய பேரவையாகும். அதன் வெளியீடாக தாயகம் என்ற சஞ்சிகையும் வெளிவந்தது. கைலாசபதி தேசிய கலை இலக்கிய பேரவையின் நிகழ்வுகளில் கலந்துக் கொண்டதுடன் தாயகம் சஞ்சிகைக்கும் கட்டுரைகள் எழுதினார். ‘பாரதி பன்முக ஆய்வு’ என்ற தொணிப்பொருளில் நடைப்பெற்ற இலக்கிய அமர்வுகளில் அவரது கட்டுரைக்கும் மற்றும் இறுதி அமர்வையும் (சுகயீன முற்றிருந்ததால்) தவிர ஏனைய சகல அமர்வுகளுக்கும் அவரே தலைமையேற்று நாடாத்தியதுடன் கட்டுரைகளை நெறிப்படுத்துவதிலும் அவர் முக்கிய பங்காற்றி வந்துள்ளதை அறிய முடிகின்றது. இவ்வமைப்பின் நிகழ்வுகளில் கலந்துக் கொண்டார் என்பதற்காக அதில் அங்கம் வகித்திருந்தார் என வலிந்துக் கூறுகின்ற அபத்தமாகும். பின்னாட்களில் இவ்வமைப்பில் ஏற்பட்டுவந்த மாற்றங்கள் அவற்றினால் முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களும் அதி தீவிரவாத சிந்தனைகள் யாவும் இவ்மைப்பு தனது பாதையிலிருந்து தடம் புரண்டுள்ளதை எடுத்துக்காட்டுகின்றது. பத்து வருடங்களுக்கு முன்னர் இ.மு.எ.ச. எப்படி இயங்கியதோ அதே பாணியில் தான் இன்று இவ்வமைப்பு இயங்கிக் கொண்டிருபபதை காணலாம். வருடந்தோறும் கைலாசபதிக்கு  விழா எடுத்துக் கொண்டே கைலாசபதியின் அடிப்படைகளிலிருந்து விலகியுள்ளமையும் சகல தேசிய ஜனநாயக சக்திகளின் மீதும் ஆதாரமற்ற அவதூறுகளை மேற்கொள்ளவதாலும் இப்பணியினை சிறப்பாகவே செய்து வருகின்றனர். இப்போக்கானது உழகை;கும் மக்கள் குறித்த எவ்வித கரிசனையும் இன்றி வெறுமனே தளம் தேடி அலைய முற்பட்ட அதித புத்திஜீகளின் சுயரூபத்தைக் காட்டி நிற்கின்றது.
அவ்வாறே கைலாசபதி மலையக கலை இலக்கிய பேரவையுடனும் தொடர்புக் கொண்டிருந்தார். அதன் செயலாளரான அந்ரனி ஜீவாவை நெறிப்படுத்தியதுடன் அவ்வமைப்பின் கலை இலக்கிய நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பித்துள்ளார்.
ஒருவருடைய முயற்சிகள் போராட்டங்கள், எப்படியிருந்தாலும் அவர் பற்றிய மதீப்பீடுகளை செய்ய நோக்கங்களை மட்டும் பார்க்க கூடாது. அவர்களின் செயற்பாடுகளின் விளைவுகளையும் நோக்க வேண்டும். இந்த வகையில் கைலாசபதியை பொறுத்தமட்டில் இலக்கிய அமைப்புகளுடன் கொண்டிருந்த தொடர்பானது ஒரு நாகரிகமானதொரு சமூதாயத்திற்காகவும், புதியதோர் தென்றலுக்காகவும், தமது செயற்பாடுகளை, ஆக்க இலக்கிய முயற்சிகளினூடாக முன்னெடுத்து வருவதாகவே அமைந்திருந்தது. ஒவ்வொரு காலக் கட்டங்களிலும் தாம் உறவுக் கொண்டிருந்த இலக்கிய அமைப்புகளினூடாக முற்போக்கான சிந்தனைகளை மக்கள் மத்தியில் முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றி வந்துள்ளார்.
உலகலாவிய ரீதியில் உருப்பெற்று வரும் தமிழ் இலக்கிய ஆய்வு விருத்தியின் ஒரு பகுதியாகவே கைலாசபதி பற்றிய ஆய்வும் கடந்த சில வருடங்களாகவே பரிணமித்துவந்துள்ளது. கால் நூற்றாண்டு காலமாக தமிழியல் ஆய்வுத் துறையிலும் பிற சமூதாயம் சார்ந்த செயற்பாடுகளிலும் பல்வேறு விதங்களில் கைலாசபதி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். கைலாசபதியின் வரலாற்றினையும் அவரது மரபின் வரலாற்றினையும் ஊன்றிக் கவனிக்கின்ற போது ஓர் உண்மை புலனாகின்றது.
இலக்கியத்தை மக்கள் மயப்படுத்தல், ஏகாதிபத்தியம் முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்ட உணர்வை கட்டியெழுப்புதல், அடித்தள மக்கள் பற்றிய இலக்கியங்களை படைப்பதும் அவர்களின் மேம்பாட்டிற்காக போராடும் உணர்வை கட்டியெழுப்புதல் முதலிய குறிக்கோள்களை மையமாக வைத்தே தமது சமூக செயற்பாடுகளை முன்னெடுத்தார். கைலாசபதியின் தாக்கத்தினை அவரை தொடர்ந்து வந்த ஆய்வுகளிலும் ஆக்க இலக்கிய படைப்புகளிலும் காணக் கூடியதாக உள்ளது. ஒருவகையில் புதிய ஆய்வுப் பார்வைகளும் புதுமை இலக்கியங்களும் தோன்றி வளர்வதற்கு  வெவ்வேறு  வகையில் கைலாசபதி உதவியுள்ளார். இன்று இலங்கை தமிழ் இலக்கியத்தின் போக்குகளை அவதானிக்கின்ற போது ஒர் உண்மை புலனாகாமற் போகாது. தனிமனிதவாதம், தனிமனித முனைப்பு என்பன காரணமாக சகல முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் உணர்ச்சி அடிப்படையில் தகர்த்து அதனூடாக தனக்கான மன்றாடி நிற்கின்ற ஆராய்ச்சி மணிகளையும் எந்திரவியலாளர்களும் ஆர்பரித்து நிற்கின்ற இன்றையநாளில் மக்கள் இலக்கியங்களும் அது சார்ந்த இலக்கிய கர்த்தாக்களும் தாக்குதல்களுக்குட்படுவது தற்செயல் நிகழ்ச்சி அல்ல. “பல பதர்கள் இருக்க நெல்லை கொண்டு போனானே” என்ற வ. ஐ. ச. ஜெயபாலனின் வரிகள் எவ்வளவு தீர்க்கதரிசனமாய் இருக்கின்றது.
இதனை மனதில் கொண்டு தொடர்ந்து ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டியது நமது கடமையாகும். கைலாசபதி வெறும் நாமம் மட்டுமல்ல. அவர் ஒரு இயக்க சக்தி. அதனை  மார்க்சிய முற்போக்கு இலக்கிய கர்த்தாக்கள் விளங்கிக் கொள்ளும் விதமும் தமதாக்கிக் கொள்ளும் விதமும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க முடியும், இருக்கவேண்டும்.

Friday, December 10, 2010

Wednesday, December 08, 2010

மஹிந்தவின் மந்தைமேய்ப்பு

மஹிந்தவின் மந்தைமேய்ப்பு மார்தட்டுகிறது.
-வ .அழகலிங்கம் -


 புலியின் பொங்குதமிழ்  மந்தைமேய்ப்பால் பட்டது போதுமென்றிருந்தால் இப்பொழுது மஹிந்தவின் மந்தைமேய்ப்பு மார்தட்டுகிறது. கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் இந்த மந்தைமேய்ப்பு, நடந்ததாகச் செய்திகளும் படங்களும், உதைச்ச காலை முத்தமிடுவதில் இன்பங்காணும் ஊடகவியலாளர்களால் உலகுக்கு வந்திருக்கிறது.
யாழ்பாணத்தில் எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் அங்கயன் இராமநாதன் என்பான் மேய்பானாகச் செயற்பட்டார். மேய்ச்சுத் தண்ணிக்கு விட்டார். கிளிநொச்சியில் அருவத்திருமேனியர்களான அரச உளவுபடை, பொத்துவாய் சொன்தைச் செய்  என்ற தோறணையில் எல்லாமாறத் தம்மையிழந்த தெய்வம் பகைத்த அந்த ஏதிலித் தமிழர்களை மேய்த்துள்ளது.   

கிளிநொச்சியில்  ஊர்வலம்.     புலிப் பினாமிகளுக்கு எதிராக வடக்கிலே ஆர்ப்பாட்டம் என்ற தலைப்பில் சண்டே ஓப்சேவர் என்ற அரச ஊடகம் பின்வரும் செய்தியை வெளியிட்டுள்ளது. 
கிளிநொச்சி முல்லைத்தீவு, மற்றும் ஒட்டிசுட்டான் வாழ் தமிழ்மக்கள் 4.12.2010 இல் ஐக்கிய ராச்சியத்தில் உள்ள புலிமூலங்கள் சிறீலங்காவிரோத ஆர்ப்பாட்டங்கள் செய்ததற்கு எதிராக ஓர் ஆர்ப்பாட்டத்தையும் பிரபாகரன் பொட்டு அம்மானது கொடும்பாவிகளையும் எரித்தார்கள். விசுவமடு வல்லிபுரத்திலுள்ள மக்களும் அதிலே அடங்குவர், எண்ணிலடங்காத மக்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் உற்சாகத்தோடு கலந்து கொண்டார்கள் என்றும் அவர்களுள் பெண்களும் பிள்ளைகளும் கூட அடங்குவர் என்றும் அவர்கள் புலிக்கெதிரான பதாகைகளைத் தாங்கிச் சென்றனர் என்று ஒப்சேவர் எழுதியுள்ளது.
அந்த மக்கள் கூட்டம் பிரபாகரனதும் பொட்டம்மானதும் கொடும்பாவிகளை எரித்தனர். அவர்கள் மிஞ்சியுள்ள வெளிநாடுகளில் வாழும் புலி உறுப்பினர்களை திட்டித் தீர்த்துச் சபித்தனர். வர்த்தகர்களும் தமது கடைகளைப் பூட்டிவிட்டு கறுத்தக் கொடிகளை உயர்த்திப் பிடித்தனர்.
    பலபதாகைகளில் தங்களது சுதந்திரத்தைப் பறித்து தம்மை அடிமையாக்கிய, தங்களுக்குச் சொல்லவொண்ணா துன்பங்களைத் தந்த, புலியை அழித்தொழித்து ஜனாதிபதி ராஜபக்ஸ்ச தமக்குச் சமாதானத்தை எடுத்துத் தந்ததாக எழுதப்பட்டிருந்தது. ஜனாதிபதியால் நாம் இப்பொழுது சமாதானமாக வாழ்கிறோம் என்று ஆர்ப்பாட்டக் காரர்கள் சொன்னார்கள். 'ஜனானாதிபதி அவர்களே! உங்களாலேயே நாம் இப்பொழுது நிம்மதியாக நித்திரை கொள்கின்றோம்.' என்று என்னொரு சுலோகத்தில் இருக்கிறது. வடக்கிலே மீள்குடியேற்றம் அதிகாமாக நடந்து முடிந்து விட்டது.
    முதலில் கொடும்பாவை எரித்தல் உயிரோடு வாழும் ஒடுக்குமுறையாளருக்கு எதிராகத்தான் எரிப்பது வழக்கம். ஏன் கொல்லப்பட்ட பிரபாகரனது கொடும்பாவியை எரிக்க வேண்டும். அதை விட்டுவிடுவோம்.
       எப்பொழுதோ நடந்திருக்க வேண்டிய ஊர்வலம் காலங்கடந்து நடக்கிறது. 2009 மே நடுப்பகுதில் முள்ளிவாய்க்கால் சரணாகதி நாடகத்தினதும் சர்வதேச சதியின் பின் 19 மாதங்கள் உருண்டோடி விட்டன. தமிழ் மக்களை, ராஜபக்ஸ்சவை ஜனாதிபதியாகக் கொண்ட இலங்கை அரசாங்கம் முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கி சிறைசெய்யாமல் விட்டிருந்தால் தமிழ் மக்கள் புலிப்பாசிவாதிகளையும் ஏன் பிரபாகரனையும் கூட றோடு றோடாக இழுத்துக் கொண்டு திரிந்து முசோலினியினது உடலைத் தலைகீழாகத் தூக்கி ஊனம்வடிய நாறவிட்டது போல விட்டிருப்பார்கள். அவர்களும் சிங்கள முஸ்லீம் மக்களோடு சோந்து றோடு றோடாகக் குதூகலித்துக் கொண்டாடி புலியும் அவனியில் இல்லாமற்  போவதோடு சிங்கள,  தமிழ் மக்களின் மத்தியில்  புதிய ஒரு அன்னியோன்னியம் வளர்ந்திருக்கும். அது சிலவேளை நாடுதழுவிய எழுச்சியாக மாறி இலங்கை அரசையும் எமலோகம் அனுப்பியிருக்கும்.
 ஜேர்மனியில் கிட்லர் தோற்கடிக்கப் பட்டதன் பின்பு கிட்லரின் 2500 வதை முகாங்களும் மக்கள் பார்வைக்குத் திறந்த விடப் பட்டன. அந்தச் சித்திரவதை முகாங்களை இன்றும் பார்வையிடலாம். அதன் தலைமை முகாமாக இருந்த டாகவ்வுக்கு வருடாவருடம்  800000 யிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் பார்வையிடுகின்றனர். இதைப் பார்வையிட்டதால் மிகப் பெரும்பான்மை ஜேர்மானிய மக்கள் இன்றுங்கூடக் கிட்லருக்கும் மற்றும் அத்தனை பாசிசவாதிவாதிகளையும் வெறுப்பவர்களாக இருக்கிறார்கள்.  நாசிகளால் கொல்லப் பட்ட யூதர்களுக்கு இப்பவும் நினைவாலயங்கள் வைக்கப்பட்டுள்ளன. பெர்ளினில் இந்த ஜனவரியிற் கூட ஓர் உலகப் பிரசித்தி பெற்ற கட்டிடக் கலைஞரால் ஓர் நினைவாலயம் வைக்கப் பட்டுள்ளது. அதற்குள் போபவர்கள் மனவியாகூலமடைந்து திக்குத் திசை தெரியாமற் போகும் உணர்வைப்பெறும் வகையில் அவை ஒரே மட்டத்தில் இல்லாமல் மேலுங்கீழும் அலைபோன்ற பீடத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இப்பொழுதும் பெர்ளினில் நாசிபற்றிய புதிய நூதனசாலையொன்று திறக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் இலங்கை அரசாங்கத்திற்குத் தெரியாததல்ல.
இலங்கை அரசுக்கு என்னுமொரு தடவை புலிப்பாசிசத்தின் உதவி தேவைப்படும். அவர்கள் விரும்பிய நேரத்தில் அது மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். இதுவே புலியின் எந்த இரகசியத்தையும் அரசாங்கம் வெளியிடாமல் மறைத்ததற்கான காரணமாகும். புலியோடும் ஏகாதிபத்திய எஜமானர்களோடும் இலங்கை ஒடுக்குமுறை அரசோடும் தரகுபோன அத்தனை பேரும் மறைக்கப்பட்டு விட்டார்கள். புலியின் நாணயக் கொடியைப் பிடித்து வைத்திருந்தவர்கள் இன்றும் நமக்கு மத்தியில் வெள்ளை வேட்டிக் கனவான்களாக நடமிடுகிறார்கள்.
என்ன செப்படி வித்தை. அரசாங்கமே இன்றும் புலியைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அரச ஒட்டுண்ணிகள் புலியால் கொழுக்கிறார்கள். மேற்கு நாடுகள் முழுவதும் ஆயிரக்கணக்கில் பிடிபட்ட புலிகள் 30 தொடக்கம் 40 லட்சம் காசை உச்சியிலுள்ள இராணுவத்தினருக்குக் கட்டி  வந்து அரசியற் தஞ்சம் கோருகிறார்கள். தூதரகங்களுக்கு அடிக்கடி போகும் சில தமிழர்களது வேலை இந்த பயணங்களை ஒழுங்குபடுத்திக் கொடுப்பது. தெரிந்த இடமெல்லாம் தொலைபேசி செய்து ஆரும் காம்பிலிருந்தால் சொல்லுங்கள் எடுத்துவிடாலம் என்று அவர்களே ஒழுங்படுத்துபவர்களாகும். அவர்களோடு சேர்ந்து வேலைசெய்வதற்காக தூதரகம் எங்கும் இராணுவ இணைப்பு அதிகாரிகள் பணியில் அமர்த்தப் பட்டுள்ளார்கள். இப்படிக் காசுகட்டி வந்த புலிகளில் அனேகர் ஆர்ப்பாட்டத்திற்குச் சென்றவர்களாகும். ராஜபக்ஸ்ச அரசு இதையும் செய்கிறது. தமிழர்களையும் மேய்க்கிறது. பகிடி என்னவென்றால் ஜேர்மனியிலுள்ள பிறாங்போர்ட் தூதரகத்தில் இரண்டுதடவை தனிப் புலிகளுக்கென்றே கூட்டம் நாடத்தி பிஸ்சினெஸ் முதலீடு செய்ய உதவும் வழிகளை ஆராய்ந்திருக்கிறார்கள.  அதிலே மிகக் கவனமாக முன்பு புலிக்கெதிராக வேலைசெய்த எவருக்கும் சொல்லாமல் அழைப்புகளை விடுத்து இப்படிக் கூட்டத்தை நடாத்தியிருக்கிறார்கள். இதையும் அரசாங்கம் செய்து கொண்டு புலிக்கெதிராகப் போராடிற சுமையை வன்னி யாழ்ப்பாண மக்கள் தலையிற் திணிக்கும் அனாகரீகச் சம்பவங்கள்  நடந்துகொண்டிருக்கிறது. இந்தப் புதிய தமிழ் தரகர்களைப் பற்றியும் இவர்களோடு இணைந்து இலங்கையில் கொள்ளையடித்துவாழும் புதிய தமிழ் குழக்களைப் பற்றியும் வாய்ப்பிருந்தால் இன்னுமொருதடைவை எழுத முயற்சிக்கிறோம்.
             உண்மையில் ஆளும்வர்க்கம் எம்மைவிட எவ்வளவு தூரதிருஷ்டியோடு செயற்படுகிறது  என்பது இப்பொழுதுதான் மெல்ல மெல்லத் தெரியவருகிறது. முள்ளிவாய்க்கால்  சரணாகதியை அடுத்துப் புலியின் இரகசியங்களையும் அம்பலப் படுத்தி அதன் வதை முகாங்களையும் தமிழ் மக்களுக்குக் காட்டியிருந்தால் இன்று அவனியில் புலி என்ற பேச்சுக்கே இடமில்லை. புலி கொன்று விட்டு அரசாங்கத்தின் மேல் போட்ட பொய்ப் பழிகளும் அரசாங்கம் கொன்று தள்ளிவிட்டு புலியின் மேல் சுமத்திய பழிகளும்  அவர்களின் சர்வதேச எஜமானர்கள் யார் என்பதையும் தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் கண்டிருப்பர்.

இன்றய உலக வங்கி நெருக்கடிகளும் யுத்தச் சூழ்நிலைகளும் இலங்கையில் மீண்டும் சோஷலிச இயக்கங்கள் வளர ஏதுவானதாகும். 1929 உலக பொருளாதார நெருக்கடியையும் இரண்டாம் உலகயுத்த நெருக்கடியையும் அடுத்தே இலங்கையில் சமசமாயக் கட்சி தோன்றியது. இலங்கையில் மாத்திரம்தான் ரொக்ஸ்சியக் கட்சியொன்று எதிர்க்கட்சி மட்டத்திற்குப் பலம் வாய்ந்ததாக இருந்தது. அதற்கு ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான அரிய சந்தர்ப்பங்களும் கிடைத்தன. அதுவே இலங்கையில் அதி கூடிய ஜனநாயகமும்  சமூகசேவைகளும் வெல்லப் பட்டதற்கான ஒரே காரணமாகும். இந்த சமூகநலத் திட்டங்களைப் பிரேரித்து அமுல்நடத்தியதற்காகவே 1959 இல் பிலிப் குணவர்த்தனா பண்டார நாயக்கா மந்திரிசபையிருந்து நீக்கப்டார். வெல்லப்பட்ட இந்த சமூகக் காப்புறதிகளைப் பறிக்க விடாது தடுத்தத்றகாக 1976ல் சீறீமா பண்டாரநாயக்கா மந்திரி சபையிலிருந்து என்.எம்.பெரேரா கொல்வின் ஆர்.டீ.சில்வாக்கள் துரத்தப் பட்டனர்.
ஏதோ சிறீமா பண்டாரனாயக்கா வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியாதவரென்று அடுத்த பொய்யையும் புழுகையும் இன்று ராஜபக்ஸ்ச சொல்லியிருக்கிறார் . உண்மை என்னவென்றால் 1976 இல் என்.எம்.பெரேராவை நிதிமந்திரி பதவியிருந்து தட்டும்பொழுது பீலிக்ஸ் டயஸ் பண்டாரனாயக்கா அமெரிக்காவிலிருந்தே சத்தியப் பிரமாணம் எடுத்தார். அமெரிக்க ஏகாதிபத்தியன் நெருக்குவாரத்திற்கு அடிபணிந்ததாலேயே அது நடைபெற்றது. உண்மையான இடதுசாரி இயக்கம் வளரவிடாமல் தடுப்பதற்காகவே சிறிலங்கா சுதந்திரக்கட்சியை ஏகாதிபத்தியங்கள் நடாத்துகின்றன.

    கிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களுக்கு ஜேர்மன் அரசாங்கம் எண்ணற்ற நினைவாலயங்களைக் கட்டியுள்ளது. இலங்கை அரசாங்கமோ ஏன் புலியால் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு சின்ன அடையாளத்தைக் கூட வைக்கவில்லை. பொல்பொட் கொன்றவர்களின் மண்டையோடுகளைக் குவித்துக் காட்டியது போல் ஏன் புலியாற் கொல்லப்பட்ட லட்சக் கணக்கான தமிழ் மக்களின் மண்டையோடுகளைக் குவித்துக் காட்டாதது, மாத்திரமல்ல அவைகளை மறைத்தும் வைத்தார்கள். ஜேர்மனியில் அமெரிக்க றைஸ்சிய பிரித்தானிய பிரெஞ்சுப்படைகள் ஆக்கிரமித்த பகுதிகளிலும் அவர்கள் ஏதும் ஒரு வெற்றிச் சின்னத்தை நாட்டவில்லை.
யுத்தம் முடிந்ததுதான் தாமதம் ஒரு அவுன்சு தங்கம் அதாவது 32 கிறாம் தங்கம் 35 அமெரிக்க டொலர் பெறுமதியான காலத்தில் 40000 பிலியன் அமெரிக்க டொலர்களை மார்சல் திட்டத்தின் கீழ் முதலிட்டு ஜேர்மனியை மீள ஒரு நவீன நாடாகத் திட்டமிட்டுக் கட்டிக்கொடுத்தார்கள்.
    தமிழர் பிரதேசத்தில் என்ன நடக்கிறது. ராஜபக்ஸ்ச, ராஜபக்ஸ்ச என்று ஒரு நாளைக்கு ஆயிரம்தடவை உச்சாடனம் செய்யும் தமிழ் கோமளிகளுக்கு இது ஏன் விளங்கவில்லை.
    இன்று முதன் முதலாக தமிழ் மக்கள் வன்னியில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடாத்திவிட்டார்கள். எதிர்காலத்தில் ஏன் இரண்டொரு கிழமைகளில் அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக தமிழ் மக்கள் ஓர் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தைச் செய்யப் புறப்பட்டால் நிலமை என்னவாகும். இருந்த போதும் இது ஒரு வெகுஜனப் போராட்ட வடிவை எடுத்தது நல்ல சகுனமே. எதிரி தனது தேவைக்கு இதைப் பயன்படுத்த முயன்றாலும் இது 2009 மேயின் பின் முதன் முதல் ஒரு வெகுஜன ஆர்பாட்ட வெள்ளோட்டம் நடைபெற்றுள்ளது. ஜனனாயகம் தனது பாஷையில் அதைப் பேசுகிறது. அது தனது இரும்பாலும் நெருப்பாலும் அமைத்து கண்ணீரல் கழுவி மானிட ஆவிகளால் செப்பனிட்ட தனது வழியில் வரலாற்றை முன்னோக்கி நகர்த்தும்.

ஏன் அவசரகாலச் சட்டத்தை எடுக்கும்படி சிங்கள மக்கள் ஓர் ஆர்ப்பாட்ட ஊர்வலம் செய்ய விடுவார்களா? இலங்கை ஓர் இராணுவ பொனப்பாட்டிச சர்வாதிகாரத்தை நோக்கி நகருகிறது. இன்றய உலக பொருளாதார அரசியல் நெருக்கடியில் இலங்கை மக்களே முதலில் இந்தப் பூகோளத்தில் பட்டினியாலும் நோயாலும் சாவார்கள் என்பதை எச்சரிக்கின்றோம். கட்டுக்கடங்காக் கடனில் மூழ்கியுள்ள இலங்கை இறக்குமதிக்கே வெளிநாட்டுச் செலவாணி இல்லாமல் தத்தளிக்கிறது. அண்மையில் கொழும்பு ஊடகமொன்றில் வரவு செலவுத் திட்டம்  பற்றிய ஒரு கட்டுரையில் கொழும்பில் வாழும் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்திற்கு மாதாந்தம் ரூபா100000 வேண்டும் என்று கணித்திருக்கிறார்கள். சராசரி ரூபா 20000 உழைக்கும் வலு இல்லாத மக்கள் எப்படி வாழ்வது. நாட்டில் 30 வருட யுத்த நெருக்கடியின் பின்பு வரியாகப் பெறப்படும் நிதி ஆயுதப் படைகளைப் பராமரிக்கக் கூடப் போதாது.
    ஏறத்தாள மீளக் குடியேறிய வன்னி மக்கள் 10 சதுர மீற்றர் விஸ்தீரணமுள்ள கிடுகுக் கொடில்களில் அல்லது பொலித்தீன் போர்த்த கொட்டில்களில் வாழ்கிறார்கள். இரணைமடுக் குளத்தில் அவர்களை  மீன் பிடிக்க இராணுவம் விடுவதில்லை. நீர்ப்பாசன இலாகாவின் கட்டிடத்துள் இராணுவம் குடி கொண்டதோடு அங்கே ஓரு புதிய புத்த விகாரையும் கட்டப் பட்டுள்ளது. புத்த கோயில் எழும்பினால் அந்த முகாம் நிரந்தர முகாம் என்பதே அர்த்தம். இந்தக் குடிசைகள் காற்றடித்தால் பறந்துவிடும். வன்னியில் 6 மாதங்களுக்கு முன்புதான் மக்கள் குடிறேற்றப் பட்டார்கள். அவர்கள் உழைப்பதற்கு ஏதும் வழியில்லை.
    இங்கே ஒரேயொரு டிஸ்பென்சரியே உண்டு. அதுவும் ஒரு நாளைக்கு 3மணித்தியாலமே திறக்கும். வட்டக் கைச்சி இராமநாதபுரம் கல்மடுவுக்கும் இதுதான் டிஸ்பென்சரி. கிளிநொச்சிக்கும் வட்டக்கைச்சிகும் இடையில் ஒரேயொரு பஸ் ஓடுது. அதிலே நோயாளிகளை எடுத்துச் செல்லவே இடம் இல்லை. இங்குள்ள மாயவனூர் கிராம மக்கள் தண்ணி அள்ள  ஒரு கில்லோ மீற்றர் போக வேண்டும். 3 கில்லோ மீற்றர் நடந்து போனால்தான் பஸ் ஓடும் பாதைக்குப் போகலாம். முன்பு சைகிளில் பயணம் செய்வார்கள். இன்று அதுவும் இல்லை.
 முன்பு இந்த மக்களுக்கு ரூபா 3000 மானியமாகக் கொடுத்தார்கள். இன்று அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது அல்லது வினியோகிக்கும் அதிகாரிகள் அதைக் கொள்ளையடிக்கிறார்கள். அரசாங்கம் சொல்கிற பொய்களைக் கேட்டுக் கேட்டே  சலித்துபோய் இருக்கிறார்கள் இம் மக்கள். இந்த மக்கள் சொல்வார்கள், முன்பு புலி அடக்கி ஓடக்குவதனால் கதைப்பதில்லை. இப்பொழுது இராணுவத்திற்குப் பயத்தில் ஓம் என்ற ஒரு வார்த்தையைச் சொல்வதைத்  தவிர வேறு ஒன்றும் சொல்வதில்லை. யுத்தம் முடிந்துவிட்டது. ஆனால் நாய்க்கு நடுக்கடலிலும் நக்குத் தண்ணிதான்.
    அண்மையில் சனல்-4 ஒளிபரப்பில் புலிப்பெண் பேராளிகளும் மற்றும் அனேக தமிழ்பெண்களும் கொடூர பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு சித்திரவதை செய்யப் பட்டு நூற்றுக்கணக்கில் நிர்வாணமாக வீசியெறியப்பட்ட காட்சி காட்டப்பட்டது. என்ன மாதிரி கருணா பிரிந்த போது கிழக்குமாகாணப் பெண் பேராளிகள் பாலியல் வல்லுறவால் சீரழிக்கப்பட்ட காட்சியைப் பாசிசப் புலியின் ஊடகங்கள் காட்டி கிழக்குமாகாண சமூகத்தை மானபங்கப் படுத்தி வடகீழ் மாகாணங்களை நிரந்தரமாகப் பிரித்ததோ அதே போன்றே இலங்கை இராணுவமும் புலிபாசிசத்திலிருந்து தாம் வித்தியாசப் படவில்லை என்பதை நிரூபித்து சிங்கள தமிழ் பாட்டாளிகளது ஐக்கியத்திற்காககசு; சளைக்காது போராடுபவர்க்கு மேலும் ஒரு மாபெரும் தடையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் ஒளிப்படங்களின் தரிசனமானது, சரணடைந்த 600 போலீசைப் புலி கொன்றது என்று கூப்பாடு போடுவதற்கு இலங்கை அரசுக்கு எந்தத் தார்மீக உரிமையும் இல்லாது போய்விட்டது என்பதைப் பறைசாற்றுகிறது. இந்தத் தமிழ் பெண்களை நூற்றுக்கணக்கில் மசவாசு பண்ணிக் கொலைசெய்து அதைப் பெருமையாகக் காட்டப் படமெடுத்த இந்த இராணுவம்தான் தமிழர் பிரதேசம் எங்கும் ஆக்கிரமித்துள்ளது என்பதை குறிப்பாகச் சிங்கள தொழிவர்கத்திற்கும் உலகதொழிலாளர்கட்சிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் மற்றய மனிதமானபங்கங்களைச் சகிக்காத மனித நேய விரும்பிகளுக்கும் சொல்லி வைக்க விரும்புகின்றோம்.
மகிந்தா ராஜபக்ஸ்சவின் ஆட்சி பொனப்பாட்டிச சர்வாதிகாரத்திலிருந்து பாசிசமாகப் பரிணாமம் அடைவதை ருசுப் படுத்தும் காட்சி இது. 2009 மேயில் யுத்தம் முடிந்த போது அன்றய இராணுவ ஜெனரலான சரத்பொன்சேகா உச்சியிலுள்ள புலித் தலைவர்கள் எல்லாம் கொல்லப் பட்டு விட்டார்கள் என்றும் நடுநிலைப் புலிகளுக்குமேல் இலங்கைச்; சட்டத்திற்கு அமைய நீதிவிசாரணை செய்யப் பட்டு தண்டிக்கப் பட்டோ அன்றேல் விடுவிக்கப் படுவர்ர்கள் என்றும் மற்றையோருக்குப் புனர் வாழ்வு அளிக்கப்படுமென்றும் கூறினார். அண்மைய சனல்-4 ஒளிப்படங்கள் அந்தக் கூற்று நிதர்சனமறற்தென்பதை நிரூபிக்கிறது.
    தமிழ் மக்களுக்கு துர் அதிஷ்டத்தில் ஓர் அதிஷ்டமாக சரத்பொன்சேகாவுக்கும் ராஜபக்ஸ்ச குறுங்குழு குடும்ப அதிகாரத்திற்குமிடையே ஒரு  பிளவு ஏற்பட்டதானது தமிழ் மக்கள் மூச்சுவிடுவதற்கு ஒரு  சின்ன அவகாசத்தைக் கொடுத்தது. அதைக்கூட சம்பந்தன் சிவாஜிலிங்கம் போன்ற அரசியல் அயோக்கியர்கள் சமியோதமாகப் பாவிக்க விடாது தடுத்துவிட்டார்கள்.
    2004 சுனாமியின் போதும் 2009 முள்ளிவாய்க்கால் வெகுஜனக் கொலையை அடுத்துத் தமிழ்மக்கள் முட்கம்பி வேலிகளுள் மந்தைகளிலும் கேவலமாக அடைக்கப்பட்ட போதும் சிங்கள முஸ்லீம் மக்கள் பெருமளவில் தமிழ் மக்களுக்கு உதவினார்கள் என்பதை தமிழ் சமுதாயம் வாழையடி வாழையாக மறக்கவே கூடாது. அந்தச் சம்பவங்கள் எமது எதிர்காலச் சந்ததியின் பாடவிதானங்களிலே பதிப்பிக்கப்பட்டு எமது எதிர்கால சந்ததியினரை அதற்கான பிரதிஉபகாரம் செய்யக் கடமைப்பட்டவர்களாகப் பயிற்றிப் பண்படுத்த வேண்டும்.
'செய்யாமற் செய்த உதவிக்கு  வையகமும்
வானகமும் மாணப் பெரிது' என்பான் வள்ளுவன்.

சீரோடு வாழ்ந்தோம். வேரோடு சாய்ந்தோம்.
    இன்று இலங்கைத்தமிழ் மக்கள் நிர்க்கதியாகிக் கையறு நிலையிற்தான் உள்ளார்கள். வரலாறு முன்னுரையை அப்படியே எழுதியிருந்தது. அப்படியே நடந்தும் விட்டது. தவிர்க்க முடியாதவற்றைத் தலைதாழ்த்தி வரவேற்றுத்தான் தீரவேண்டியிருக்கிறது. ஊர் உலகமெல்லாம் பகைத்து சூரிய சந்திர கோள்களெல்லாம்  பகைத்து தெய்வங்கள் எல்லாம் பகைத்தால் உய்வுண்டோ என்று புகழேந்தி கூறுகிறார்.
இந்த நிலையிற்தான் எமது வைராக்கியத்தையும் நிர்ணயத்தையும் எந்த மட்டத்திற்கு உயர்த்திப்பிடிக்க முடியுமோ அந்த மட்டத்திற்கு உயர்த்திப் பிடிக்க வேண்டும்  இலங்கை இனவாத அரசங்கத்தில் எந்த நம்பிக்கையும் வைக்காமல் எமது சொந்த முயற்சியால் எவ்வளவு அந்தச் சுமூகத்தை உயர்த்த முடியுமோ அந்த மட்டத்திற்கு உயர்த்த வேண்டும்.
பைபிளிலே உள்ள ஒரு கூற்றை நினைவு படுத்துகிறேன். ஒரு  தனி மனிதன் மற்ற எல்லோருக்குமாக வாழ வேண்டும். எல்லோருமே ஒரு தனிமனிதனுக்காக வாழ வேண்டும். எல்லோரும் எல்லாருக்காகவும் வாழவேண்டும். இன்று வெளிநாடுகளிலுள்ள நாம் இலங்கையிலுள்ள தமிழர்களுக்காக வாழ வேண்டும். தனக்கெனவாழாப் பிறர்க்குரியாளனாக வாழ்வதுதான் சிலப்பதிகாரத்தின் கடைந்தெடுத்த ரசமாகும். பரோபகாரத்தில் சமூகவாழ்வில் அரசியலில் இதுவே தாரக மந்திரமாகவேண்டும்.
    ஒன்றைமட்டும் தமிழ் மக்கள் மறக்கக் கூடாது. முள்ளி வாய்க்கால் சரணாகதியை அடுத்து முள்ளி வேலிக்குள் தமிழ்மக்கள் மந்தைகளிலும் கேவலமாக அடைக்கப்பட்ட பொழுது புனர் நிர்மாணத்திற்கென்று ராஜபக்ஸ்ச இருபது முப்பது பேர்கொண்ட ஒரு குழுவைக் கூட்டினார். அதிலே ஒரு தமிழர் பிரதிநிதி கூட அங்கம் வகிக்க விடவில்லை. ஏன்? தமிழ் மக்கள் விரோதத்திற் காகவல்ல. புனருத்தாரணத்திற்கென்று கிடைக்கும் நிதிகளைக் தமக்குள்ளே கொள்ளையடிக்கும் பொழுது ஒரு தமிழருக்கும் தெரியக் கூடாது என்பதுதான். எடுத்தியம்ப முடியாத துன்பத்தில் அந்த மக்கள் வதைபடும்பொழுது அந்தமக்களுக்கென்று வந்த பணத்தை தகாத முறையில் அகரிப்பதை புத்திபேதலிப்பு அற்ற எந்தத் தமிழனும் ஒத்துக்கொண்டிருக்க மாட்டான்.
பிரச்சனையோ தமிழர் புனர்வாழ்வு. தமிழர் பிரதிநித்தித்தவம் இருந்தால் பொல்லாங்கு. அப்படியான ஒரு தமிழரில்லாத குழுவால் அந்தப் புனர்நிர்மாணம் செவ்வனே நடந்திருந்தால் தமிழினமே வெட்கித் தலை குனிந்திருக்கும்.
 அடுத்தது இலங்கையில் ஏற்படும் ராஜபக்ஸ்ச முதலாளித்துவ இனவாத அரசுக்கெதிரான ஒவ்வொரு சம்பவத்தையும் அரசாங்கத்தைத் தோற்கடிக்கும் திசையில் எமது செயற்பாடுகள் மிகத் திட்டவட்டமான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
    தமிழ் அரசியல் வாதிகளை ராஜபக்ஸவோடு இரகசியப் பேச்சுவார்த்தைக்குப் போகவிடாமற் தடுக்க அத்தனை முயற்சிகளையும் செய்ய வேண்டும். றைஸ்சியப் புரட்சி முடிந்த வுடன் லெனின் சார் மன்னள் செய்த எல்லா இரகசிய ராஜதந்திர ஒப்பந்தங்களையும் அம்பலப் படுத்தினார். அப்பெழுது லெனின் ஓர் அற்புதமான கூற்றைக் கூறினார். ஜனனாயகத்தின் முதற் தடைக்கல் இரகசிய ராஜ தந்திரமும் இரகசிய பேச்சவார்த்தைகளுமாகும். தமிழினம் அழிந்ததே செல்வனாயகம் அமிர்தலிங்கம் மற்றும் புலிகளின் இரகசியப் பேச்சுவார்த்தைகளாலும் இரகசிய ஒப்பந்தங்களாலுமென்பதை மறந்து போகக் கூடாது.
    ராஜபக்ஸ்சவோடு இரகசிய பேச்சுக்குப் போபவர்கள் திண்டு குடிச்சுப் பெட்டிவாங்கி வெளியில் வந்து தாம் தமிழ் மக்களுக்கு ஆனைசேனையை அள்ளி வந்து விட்டோம் என்பதும் அதைப்பாவித்து ராஜபக்ஸ்ச தான் தமிழரோடு தொடக்கமும் முடிவுமில்லாமல் பேசுகிறேன் என்பதும் தேவைதானா? இதே தொடர்கதைதான் இந்திய வியாபாரமும்
     இரண்டாம் உலக  யுத்தம் முடிந்த பிறகு ஸ்டாலின், றூஸ்வல்ற், வின்சன் சேர்ச்சில் போஸ்டாம்  யால்டா இரகசிய ஒப்பந்தத்தின் போது வின்சன் சேர்ச்சில் கூறினார்:'நடந்து முடிந்த போர்தான் இனிமேல் உலகத்தில் வரப்போகும் எல்லாப் போரையும் முடிவுக்குக் கொண்ட வந்த போராகும்'.
வர்க்கப் போராட்டம் யூகோஸ்லாவிய மற்றும் சீனத் தொழிலாளர்களை றோட்டுக்கு இறக்கியதுதான் தாமதம் அவரது கூற்று நீர்க்குமிழி ஆகியது.
ராஜப்பக்ஸ்சவும் முள்ளிவாய்கால் வரலாற்றுக்கருச்சிதைவோடு இனிமேல் தமிழ் தேசியப் போராட்டம் தலை தூக்கவே முடியாது. அந்த இறுமாப்போடுதான் ; இன்றுவரை செயற்படுகிறார்கள். தமிழ்மக்கள் இன்றாவது வர்க்கப் போராட்டத்தை அங்கீகரித்தால், வரலாறு வர்க்கப் போராட்த்தின் மூலம்தான் முன்னேறும் என்பதை விளங்கிக் கொண்டால் நடந்து முடிந்தவையெல்லாம் தற்காலிகத் துர்அதிஷ்டம்தான். அது நிரந்தரமாகாது. நீர்க்குமிழி வயதை எட்டிவிடும்
    என்னமாதிரி சந்திரிகா குமாரத்துங்கா சிங்கள மக்களிடம்போய் இலங்கையிலே தமிழ்மக்களுக்கு ஒரு பிரச்சனை இருக்கின்றது என்று வெளிப்படையாகக்கூறித் தமிழ்மக்களுக்கான தீர்வையும் பாராளுமன்றதில் எழுத்துமூலம் வைத்தார். அந்த சாசன வரைபில் தமிழர் பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்தார்.
    ராஜபக்ஸ்ச இனப்பிரச்சனைக்கு இதுதான் தீர்வு என்று இலங்கை மக்களுக்கு வெளிப்படையாக என்று சொல்கிறாரோ அன்றே அவரது அரசியல் வரலாறு முற்றுப் புள்ளி வைத்ததாகிவிடம். அது தமிழ் மக்களது உரிமையின் வெறும் அற்பமாகவும் இருந்தாலும் பரவாயில்லை. இதுதான் அவரின் அரசியல் தலைவிதி. ஒரு  கடைகெட்ட தமிழினவிரோதியின் அரசியற் சாணக்கியம் அதுதான். தீர்வு வைக்க மாட்டேன் என்று சொல்ல மாட்டார். ஒருகாலமும் எந்தப் பிரேரணையையும் மக்களுக்கு முன் வைக்க மாட்டார் என்பது மிகமிக நிர்ணயமானது.
    ஆதலால் தமிழ் மக்களைப் பாதுகாக்க ஒரேயொரு மார்க்கம்தான் உண்டு. ராஜபக்ஸ்சவோடு அல்லது எந்த அரசியற் கனவான்களோடோ ஒரு நாளும் இரகசியப் பேச்சுவார்த்தைக்குப் போகக் கூடாது. இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போமென்று இந்தச் சபதத்தை எடுக்க வேண்டும்.
    ராஜபக்ஸசவின் முழு அரசியல் வரலாறும் பவுத்த சிங்கள தேசிய வெறியைத் தூக்கிப் பிடித்த அரசியற் போராட்ட வரலாறாகும். ராஜபக்ஸ்சவின் ஆட்சியின் கீழ் தமிழ்மக்கள் எந்த அற்ப முன்னேற்றத்தைக்கூட அடைய மாட்டார்கள் என்பது டக்ளஸ் தேவானந்தா கருணா உட்பட அரசின் மந்திரிசபையில் உள்ளவர்களுக்குக் கூடத் தெரியும். தமிழ் நடுத்தரவர்க்கம் இரண்டு கருத்தியல்களை மிகப் பிடிவாமதமாகச் சொல்லுவார்கள். ஒன்று  சோஷலிசம் ஜன்மத்தில் வராது. அடுத்தது இலங்கையில் எந்த அரசாங்கம் வந்தாலும் தமிழ் மக்களது பிரச்சனை தீராது. அறுபது வருட முதலாளித்துவ ஆட்சி மீண்டும் மீண்டும் நிறுவிக் காட்டியுள்ளது. இருந்தபோதும் முதலாளித்துவ அரசாட்சியில் தமிழர்களது சாணக்கியத்தைப் பாவித்து மெல்ல மெல்ல ஏதோவிதத்தில் உரிமையை வெல்லப் பார்க்கவேணுமேயொளிய வேறு வழியில்லை. நாப்பது ஐம்பது வருட இலங்கைத் தமிழரது அரசியல் வரலாற்றில் இதை ஆயிரம் லட்சம் முறை நாம் கேட்டிருக்கிறோம்.
    சில வருடங்களுக்கு முன்பு பிபாகரனையும் புலிப் பாசிசத்தையும் உலகமே பிரண்டாலும் தோற்கடிக்க முடியாது என்றார்கள். இது புலிகள் சொல்லவில்லை. புலியல்லாத இயக்கங்களைச் சேர்ந்தவர்களது நிரந்தர நித்திய உச்சானடனங்கள். இன்று இதே கும்பல் ராஜபக்ஸ்சவை உலகமே பிரண்டாலும் தோற்கடிக்க முடியாது என்று  சொல்கிறார்கள். அமெரிக்காவுக்குப் 13 றில்லியன் கடன். கிரேக்கம் அயர்லாந்து ஸ்பானியா என்று திவாலுக்குமேல் திவாலகிப் போகும் வேளையிலும் இவைகள் எல்லாம் இலங்கை அரசியலில் எந்தத்தாக்கத்தையும் விளைவிக்காது. இப்படிப் பட்டவர்களிடமிருந்து நாற்பது ஐம்பது வருடமாக வேண்டிக்கட்டிச் சுதாகரித்த வைராக்கியத்தோடுதான் சொல்கிறோம். ராஜபக்ஸ்சவின் அரசியல் ஆயுள் மிக மிக அற்பமானது. அவரது பொய் புரட்டு ஏமாற்று வித்தையெல்லாம் சிங்கள மக்களுக்கே அலுத்துப் போய் விட்டது. அதன் ஒருபாகமாகவே அண்மய சனால் -4 ஒளிப்படமும் ஒக்ஸ்போர்ட் ஒடிசியும் மேடையேறியது.
ஒரு வரலாற்று உண்மையை மட்டும் சொல்லி வைக்க விரும்புகின்றோம். எந்த ஒடுக்குமுறைச் சட்டமோ அரசாணையோ  மக்கள் ஆழமாகக் கொண்ட நம்பிக்கையை நிறுத்த முடியாது. அது கனன்று கொண்டிருக்கும். அதற்குச் சாதகாமான வரலாற்றுச் சூழ்நிலமைகள் ஏற்படும் பொழுது அது மீண்டும் சுவாலை விட்டு எரியும்.

Tuesday, December 07, 2010

பேராசிரியர் காஞ்சா அய்லைய்யா அவர்களின் பேட்டி


காம சூத்திரக் கோயில்களை தரைமட்டம் ஆக்க 
வேண்டும் 
கீற்று இதழில்  வெளிவந்த பேராசிரியர் காஞ்சா அய்லைய்யா அவர்களின்  பேட்டி 
நீங்கள் பல தடைகளைக் கடந்துஉலக அளவில் உங்களை நிரூபித்திருக்கிறீர்கள்இளம்ஆய்வாளர்களுக்கும்சமூக ஆர்வலர்களுக்கும் முன்மாதிரியாகவும் திகழ்கிறீர்கள்அவர்கள்அறிவுத்தளத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?
இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை என்பது, இன்னமும் உலகத்தால் விளங்கிக் கொள்ளப்படாத, அறியப்படாத ஓர் அறிவுக் களஞ்சியமாகவே இருக்கிறது. இந்திய மக்களின் மனங்களில் உலகத்திற்கான அறிவு கொட்டிக் கிடக்கிறது. நான் கிராமங்களை கூறுகிறேன். அறிவியல், தொழில்நுட்பம், உற்பத்தி, இந்து மத எதிர்ப்பு ஆகியவை நூல்களில் கொண்டுவரப் படுவதில்லை; பதிவு செய்யப்படுவதில்லை. என்னைப் பொருத்தவரை, அய்ரோப்பா, சீனா போன்றவை சோர்ந்து விட்டன. நல்லவேளையாக சுயநலமிக்க பார்ப்பனியத்தால் - படைப்பாற்றலையும், அறிவாற்றலையும் தரமுடியாமல் போனதால், இன்னும் இந்தியாவின் கிராமங்களிலுள்ள தலித் - பெரும்பான்மை சமூகங்களில் அறிவுச் சுரங்கங்கள் இருக்கின்றன. பார்ப்பனியத்தையும், இந்து மதத்தையும் வென்று விட்டால் மிஞ்சுவது எதிர்காலத்தில் அறிவியலே. உங்கள் கிராமத்தில் அமர்ந்தோ, அறிவியல் சோதனைக்கூடத்தில் அமர்ந்தோ இவ்வுலகை மாற்ற முடியும். இதைத்தான் இணையம் சாத்தியமாக்கியிருக்கிறது. இருப்பினும், உலக அறிவியலின் பார்வையில் படாமல் இன்னமும் மறைவாக இருக்கும் ஒரு பகுதி இருக்கிறது. அதுதான் இந்தியா. தலித் - பெரும்பான்மை இந்தியா! இதைத்தான் நான் இந்நூலில் சொல்லியிருக்கிறேன். 
நாம் நம் மக்களின் மனங்களிலிருந்து பார்ப்பனியத்தை களைந்தெறிய வேண்டி இருக்கிறது. பார்ப்பனியத்தைவிட, இந்து மதத்தையே தூக்கியெறிய வேண்டியிருக்கிறது. நம் நாட்டை இந்து மதத்திலிருந்து விடுவிக்க வேண்டும். இதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். இந்தியா ஒரு கிறித்துவ நாடாகவோ, பவுத்த நாடாகவோ, இஸ்லாமிய நாடாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். எனக்குக் கவலையில்லை. ஆனால், அது ஓர் இந்து நாடாக மட்டும் இருக்கக் கூடாது என்பதே முக்கியமானது. ஏனெனில், இந்து மதம் அறிவியலுக்கெதிரானது. மனித இனத்திற்கெதிரானது. உற்பத்திக்கெதிரானது.
மதச்சார்பற்ற இந்துக்களையும் நாம் கையாள வேண்டியிருக்கிறது. வகுப்புவாத இந்துக்களிடம்கூட அத்தனை பிரச்சனையில்லை. ஆனால், மதச்சார்பற்ற இந்துக்கள்தான் இந்து மதத்தை காப்பாற்றுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத்காரர்கள் கூட இந்து மதத்தைக் காப்பாற்ற முடியாது. எடுத்துக்காட்டாக, "தேசிய இந்து மதசார்பற்ற உதவித் தொகை'யை எடுத்துக் கொள்ளுங்கள். அவை மேற்கு வங்கத்திலிருந்து, மகாராட்டிராவிலிருந்து, தமிழ் நாட்டிலிருந்து வருகின்றன. மகாராட்டிரா பவுத்தத்தோடு தொடர்புடையது. தமிழ் நாடு பெரியாரோடு தொடர்புடையது. மேற்கு வங்கம் கம்யூனிஸ்டுகளோடு தொடர்புடையது. ஆனால், வங்கம் இன்று உலகின் மிக ஏழ்மையான பகுதியாகிவிட்டது. ஆப்பிரிக்காவிலுள்ள நாடுகளை விட வங்கம் இன்று ஏழ்மையான இடமாகிவிட்டது. வங்கத்தில் தலித் அறிவுஜீவி என்று எவரும் கிடையாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்துகூட ஓர் அறிவுஜீவிகூட இல்லை. இந்த மதச்சார்பற்ற இந்துக்களை, மிதவாத இந்துக்களை கையாளாமல் விட்டால், இந்து மதத்தை ஒழிக்க முடியாது. அவர்கள் இந்து மதத்தை காப்பவர்களாக மாறிவிட்டனர். “வகுப்புவாத இந்து மதம் நல்லதல்ல. ஆனால், இதற்கு இந்து மதத்தை குற்றம் சொல்ல முடியாது’ என்கின்றனர்.
இந்து மதத்தில் உள்ளவற்றைப் பாருங்கள். கொலை செய்யும் தெய்வங்களெல்லாம்கூட இருக்கின்றன. தெய்வீகம் என்று சொல்லப்படக்கூடிய இடத்திலிருந்து வரும் நேர்மறையான அன்பைக்கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒழுக்கத்தை அறிவுறுத்துபவையாக அவை மாறும்போது - நான் இந்த இந்து தெய்வங்களைவிட புத்தர், ஏசு, நபிகள் ஆகியோர் அறிவுறுத்திய ஒழுக்கங்களையே பரிந்துரைப்பேன். நிச்சயமாக பிரம்மன், இந்திரன், ராமன், கிருஷ்ணன் ஆகியோர் செய்த கொலைகள், பாலியல் வன்முறைகள், திருட்டுத்தனங்கள் ஆகியவற்றை அல்ல. நான் வாத்சாயனாரின் காமசூத்திரத்தை பரிந்துரைக்க மாட்டேன். 64 வகைகளில் பாலியல் தொழிலாளியுடன் பாலுறவு கொள்வது எப்படி என்பதை விளக்கும் இவைகளை கற்றுக் கொடுத்தால், எய்ட்ஸ்தான் பரவும். ஆண் - பெண் உறவு நிலைமைகள் ஏசு கூறியதைப் போல இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். புத்தரைப் பொருத்தவரை, இந்த விஷயத்தில் அவருடைய கருத்து என்னவாக இருந்தது என்பது குறித்து போதுமான தகவல்கள் இல்லை. ஆனால், ஏசு என்ன சொல்கிறார் என்றால், “கடவுள் கணவனையும் மனைவியையும் சரிபாதியாக ஓருடலில் படைத்தார்’ என்கிறார். இதில் ஒரு நீதி இருக்கிறது. அதனால்தான் அய்ரோப்பாவிலும், அமெரிக்காவிலும் தங்கள் துணையை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறையுள்ளது.
ஆனால், இந்தியாவில் உள்ள இந்து மதத்தில், சாதியை அடிப்படையாகக் கொண்டு நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள்தான் நடக் கின்றன. காதல் திருமணங்களும், இந்து மதமும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க முடியாது. என்னுடைய போர், இனி மதச்சார்பற்ற இந்துக்களிடம்தான். இந்து மதத்தை தோற்கடிக்கவில்லையெனில், அதை அழிக்க முடியாது. கிறித்துவத்தைப் பரப்புவதை சுதந்திரமான மனித உரிமையாக விரிவுபடுத்த வேண்டும். நல்ல மதங்கள் மக்களிடையே போட்டி போட வேண்டும். போட்டி என்பது அடிப்படை உரிமை. இந்த இடத்தில் மார்க்சிஸ்டுகளோடு நான் ஒத்துப்போகவில்லை. நமக்கு இந்தியாவில் உலகளாவிய ஆன்மிகப் போட்டி ஒன்று தேவை.
உங்களுடைய இந்தக் கூற்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறதுகொஞ்சம் விளக்குவீர்களா?
நான் ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன். இந்தியாவிலும், இந்தியாவிற்கு வெளியிலும் மக்களை பணம் கொடுத்து கிறித்துவத்திற்கு மதமாற்றம் செய்வதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. மதம் பரப்புதல் என்றாலே கிறித்துவம் மட்டும்தான் செய்கிறது என்று நினைக்கிறார்கள். முஸ்லிம்கள் தங்கள் மதத்தைப் பரப்புவதில்லை. சூபி இனத்தவரே தங்கள் மதத்தைப் பரப்புகிறார்கள். பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் உள்ள தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் மதத்தைப் பரப்புவதில் ஈடுபட்ட சூபியிஸத்தினால் இஸ்லாமுக்கு மாறினார்கள். அவர்கள் குரானோடு மக்களிடம் போனார்கள். அதனால்தான் மக்கள் மதம் மாறினார்கள். ஆனால் எங்கே முதலில் மதப் பரப்புரை நடந்திருக்கும்? உலகின் முதல் மதப்பரப்புரையாளர் அசோகர்தான். தன் மகனை, மகளை, தன் படைகளை புத்த மதத்திற்கு மாற்ற - அவர்களை சீனாவுக்கும், இலங்கைக்கும் அனுப்பவில்லையா? ஆகவே, கிறித்துவம் தான் முதலில் மதப் பரப்புரை செய்யப்பட்ட மதம் என்று ஏன் நினைக்க வேண்டும்? இந்தியாவில் வாழும் மதச்சார்பற்ற இந்துக்கள், இந்திய வரலாற்றை சரியாகத் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.
அசோகரின் மதம் பரப்பும் நடவடிக்கைகள் குறித்து ஒரு முழுநீளப் படம் எடுக்க வேண்டும். வெகுமக்கள் ரசனைக்கேற்ற வகையில் ஒரு நல்ல படம் அசோகரைப் பற்றி எடுக்க வேண்டும். ஹாலிவுட் ஆட்களிடம் இந்த கோரிக்கையை வைக்கப் போகிறேன். ஹாலிவுட் ஆட்கள் எடுத்தால் அது ஹிட் தான். சீனா, இலங்கை, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் உள்ள மக்களை யார் புத்த மதத்திற்கு மாற்றியது? அசோகர்தான். பார்ப்பனியத்திற்கு படைப்பாற்றால் கொண்ட மூளை கிடையாது. பார்ப்பானின் மூளை பாறை போன்றது. அதிலிருந்து படைப்பாற்றல் வராது. தலித் - பெரும்பான்மை மக்களின் மூளை பச்சை மண் போன்றது. அதிலிருந்து என்ன வேண்டுமானாலும் விளையும்.
புத்த மதம், கிறித்துவ மதம், சூபியிசம் ஆகியவை போட்டியில் இருக்கட்டும். மக்கள் தேர்ந்தெடுக்கட்டும் தங்கள் மதத்தை. சந்தையில் நல்ல பொருளை வாங்குவதை மார்க்சியம் ஆதரிக்கிறது. பின் ஏன் அது மத விஷயத்திலும் நடக்கக் கூடாது? இந்து மதம் தோற்றுப் போய் நிற்கிறது. அது தலித்துகளையோ, பிற்படுத்தப்பட்டவர்களையோ கவரவில்லை. நேர்மறையான பிரதிகளே அதில் இல்லை. மனிதத் தன்மையுடைய கடவுள்களே இந்து மதத்தில் இல்லை. இருக்கும் எல்லா கடவுளர்களும் - பெண்ணை பாலியல் வன்முறை செய்பவர்களாகவும், கொலை செய்பவர்களாகவும்தான் இருக்கிறார்கள்.
ஆகவே என் மக்கள் ஏசு, புத்தர், நபிகள், மார்க்ஸ், அம்பேத்கர் ஆகியோரில் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்தத் தேர்வின் மூலம் மார்க்சிஸ்டுகளாக சிலர் மாறலாம். அவர்களுக்கு மதமில்லை. பெரியார் இருந்தார். நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், பெரும்பான்மையான மக்கள் மதத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இது, மதங்களின் காலம். முதலாளித்துவமும், முதலாளித்துவத்திற்குப் பிந்தைய காலகட்டமும் மதங்களை அழிக்கவில்லை. இன்னமும் இஸ்லாமும் கிறித்துவமும் தங்கள் மதத்தை விரிவாக்கம் செய்ய வும், ஜனநாயகப்படுத்தவும் போட்டியிடுகின்றன. புத்த மதமும் போட்டியில் இருக்கிறது. ஆகவே, இளம் ஆய்வாளர்களுக்கு நான் கூற விரும்புவதெல்லாம் இந்தியா மற்றும் இந்திய கிராமங்களில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் ஆன்மிகம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு கவனம் செலுத்துங்கள் என்பதே.
இந்திய மக்களிடையே போதுமான வாசிப்புத் திறன் இல்லை. பார்ப்பனியம் மக்களுக்கு வாசிப்பை மறைத்தும் மறுத்தும் வைத்திருந்தது. அதோடு பார்ப்பனியம் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும். ஒருபோதும் வாசிக்காது. திருமணமாக இருந்தாலும், ஏரோபிளேன் முதன்முதலில் விடும் பூஜையாக இருந்தாலும் சரி, அங்கே போய் மந்திரங்களை ஒப்பித்துவிட்டு வருவார்கள் புரோகிதர்கள். பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் இவர் என்ன சொல்கிறார் என்றே தெரியாது. "சமர்ப்பயாமே' என்றும் "ஸ்வாகா' என்றும் சொல்லி, அவர்களின் சொத்தை சுருட்டிக் கொள்வார்கள். அவர்களை ஒன்றாக வாழச் சொல்கிறாரா அல்லது நாளைக்கே விவாகரத்து பெற்றுக் கொள்ளச் சொல்கிறாரா அல்லது குழந்தை பெற்றுக் கொள்ளச் சொல்கிறாரா என்றுகூட நமக்குத் தெரியாது.
பவுத்தத்திலும்கூட பெரிதாக வாசிக்கும் பழக்கம் இருப்பதாக சொல்ல முடியாது. கிறித்துவமும், இஸ்லாமும் அப்படியல்ல. வாசிக்க வைப்பவை. அதனால்தான் கிறித்துவ உலகத்தில் கல்வி பரவுகிறது. அரசாங்கங்களால் அல்ல, தேவாலயங்களால் பரவுகிறது. சொல்லப் போனால், அரசைவிட தேவாலயங்கள்தான் அதிக மக்களுக்கு கல்வியறிவு அளித்திருக்கிறது. இஸ்லாமில் மதரசாக்கள் மசூதிகளால் கட்டப்பட்டன. ஆனால் நாம் இதில் கோட்டை விட்டோம். வாசிப்பதில் உள்ள முக்கியத்துவத்தை உணரத் தவறினோம். இன்றைக்கு இந்தியாவில் யாரும் வாசிப்பதேயில்லை. இது, மிகவும் வருத்தத்திற்குரியது. எனவே, வாசிப்புப் பழக்கத்தை மக்களிடையே அதிகரிப்பதற்கான செயலில் ஈடுபட வேண்டும். பைபிள் அனுபவங்கள் வழி நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. முதல் அச்சு எந்திரம் உருவானதே பைபிளை அச்சிடுவதற்காகத்தான். அச்சுத் தொழில்நுட்பம் வளர்ந்ததே பைபிள்களை வெவ்வேறு முறைகளில் அச்சிடுவதற்காகத்தான். கத்தோலிக்க பெண் துறவிகளும், அருட்தந்தைகளும் மதவுணர்வினால் செய்த தியாகத்தில் விளைந்தவைதான் இவையெல்லாம். எழுதுபவர் ஒருவராக இருக்கலாம்; ஆனால் விநியோகித்தவர்கள் பலர்.
நான், "போஸ்ட் இந்து இந்தியா' (இந்து இந்தியாவுக்குப் பிறகு) அல்லது "நான் ஏன் இந்து அல்ல' போன்ற நூல்களை எழுதும்போது, அதை வாசிக்க ஆளில்லையென்றால் நான் எழுதி என்ன பயன்? மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த ஊழியர்களை நியமித்தால் மட்டும் போதாது. வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டுவதற்கான பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். அம்பேத்கரின் "சாதி ஒழிப்பு', புலேவின் "குலாம்கிரி', "நான் ஏன் இந்து அல்ல', "போஸ்ட் இந்து இந்தியா' போன்ற சில குறிப்பிட்ட நூல்களை எடுத்து, ஒரு பத்து லட்சம் மக்களையாவது வாசிக்க வைக்க வேண்டும். இதோடு சேர்த்து தலித் - பெரும்பான்மை மக்களில் ஒரு பகுதியினரை ஆங்கிலம் வாசிக்கவும், எழுதவும் கற்றுக் கொடுக்க வேண்டும். பிராந்திய மொழிகளில் உள்ள அறிவு என்பது ஒரு பகுதி அறிவுதான். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள மக்களுக்கு இது பயனளிக்காது. இந்தியாவை ஆங்கிலமயப்படுத்த வேண்டும்.
பிராந்திய மொழிகளின் ஆதிக்கத்தைப் பார்த்தோ, பார்ப்பனியத்தைப் பார்த்தோ நாம் அச்சப்படத் தேவையில்லை. ஏனெனில், அவை ஏற்கனவே சமஸ்கிருதமயமாகி இருக்கின்றன. நாம் நம்முடைய இந்திய ஆங்கிலத்தை வளர்ப்போம். அமெரிக்க ஆங்கிலமும் அய்ரோப்பிய ஆங்கிலமும் வெவ்வேறானவை. ஆங்கிலம் ஏற்கனவே நம்முடைய தேசிய மொழி. ஆகவே, ஆங்கிலத்தை நமது தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ள நாம் அச்சப்படக் கூடாது. நம் பழங்குடியின மக்களின் மொழிக்கு மீண்டும் நாம் போவது என்பது சாத்தியப்படாது. நாம் முற்போக்காகவும், உலக நடப்புகளை, அறிவியல் வளர்ச்சிகளை அறிந்து கொள்ளவும் ஆங்கிலத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும். ஆங்கிலம் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சொற்களைக் கொண்டுள்ளது. வருங்காலத்தில் குழந்தைகள், அரசுப் பள்ளிகளில் ஏன் ஆங்கில வழிக் கல்வி கற்றுக் கொடுக்கப்படவில்லை என்று கேள்வி கேட்கத் தொடங்குவார்கள்.
ஆகவே "பாம்செப்' போன்ற அமைப்புகள் பிரச்சாரம் செய்தால், 25 ஆண்டுகளில் இந்தியாவை தலித் மயமாக்கலாம். ஆங்கிலமயமாக்கலாம். எந்த மாதிரியான அறிவாளிகள் உலகில் உருவாவார்கள் என்று யாரும் முன்கூட்டியே கணிக்க முடியாது. ஒரு குக்கிராமத்திலிருந்து ஒரு காஞ்சா அய்லைய்யா இதுபோன்றதொரு ஆங்கிலப் புலமையையும், எழுத்துத் திறனும் கொண்டு உருவாவாரென்று அம்பேத்கர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். மார்டின் லூதர் கிங், ஒபாமாவைப் பற்றி நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ஆனால், அவர்கள் அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். கல்வித் துறையில் பாடத் திட்டத்தில் நம்முடையவை வரவேண்டும். அதனால்தான் கல்வியில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்கிறேன். என்னுடைய Turning the pot tilling the land என்ற நூல்தான் இலக்கியப் பின்னணியில் வந்த கல்வி தொடர்பான நூல். நம்மிடம் நிறைய நூல்கள் வேண்டும். கதை நூல்கள் வேண்டும். அதன்பிறகுதான் நாம் பாடத்திட்டத்தில் நம்மைப் பற்றிய பாடங்களை சேர்க்க முடியும். எல்.கே.ஜி. முதல் சொல்லித்தரப்படும் A for applie கதை, A for ant என்றாக வேண்டும். B for buffalo, C for cattle என்றாக வேண்டும். C for cow நீக்கப்பட வேண்டும். நமக்கான சொற்களை அந்த கட்டத்திலிருந்தே உருவாக்க வேண்டும்.
பார்ப்பன இலக்கணங்களை ஒழிக்க வேண்டும். அவை Subject, object, predication என்று தான் இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்கின்றன. அதை எப்படி சொல்லித் தருகிறார்கள் என்று பாருங்கள். Rama killed Ravana இதில் ராமன் Object, ராவணன் Subject. செய்யும் செயல் கொல்வது இளம் வயதிலேயே கொலை செய்வதையா சொல்லித் தருவார்கள்? அதற்கு பதில், அவை இப்படி மாற்றப்பட வேண்டும். Farmer is tilling the land அல்லது Mother is cooking the food, Father is looking after the cattle என்பது இப்படி மாற வேண்டும் : Father should also cook the food and Mother should also look after the cattle. நாம் இப்போது ஆண் இருக்கும் இடத்தில் பெண்ணையும், பெண் இருக்கும் இடத்தில் ஆணையும் மாற்றிக் கற்றுக் கொடுக்க வேண்டும். இது, மிகவும் முக்கியம். Rama killed Ravana என்று இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்கும் இந்த தேசம் மாற வேண்டும். Krishna has stolen the butter. ஆக, கடவுளே திருடுகிறார் என்று தொடக்கத்திலேயே சொல்லிக் கொடுக்கிறார்கள். இதுவா தேவை? இல்லை. இந்தியாவிலிருந்து இந்த கடவுளர்களை முற்றாக நீக்க வேண்டும்.
வாத்சாயனாரின் காமசூத்திரத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட சிலைகளைக் கொண்ட கோயில்களை தரைமட்டமாக்க வேண்டும். இது, நமது குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய பண்பாடு அல்ல. பாலுறவு என்பது இயல்பானதாக இருக்க வேண்டும். இந்த பாழாய்ப்போன வாத்சாயனாருக்கு முன்பிருந்தே தலித் - பெரும்பான்மையினர் மத்தியில் மகிழ்ச்சியான பாலுறவு வாழ்க்கை பல நூற்றாண்டுகளாக நீடித்து இருந்து வந்தது தானே? நாம் பாலுறவை அறிவியலாகக் கற்றுக் கொள்ளலாம். அதை எதற்கு வாத்சாயனாரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்? பாலுறவு குறித்த நமது பிரதிநிதிகளை நாம் உருவாக்குவோம். அம்பேத்கரை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். காந்தி இளம் பெண்களுடன் ஆடையின்றி நிர்வாணமாக உறங்கினார். அம்பேத்கரோ இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதுதான் இயல்பான வாழ்க்கை. ஆக, ஒவ் வொரு விஷயத்திலும் நாம் சாத்தியமான மாற்று ஒன்றை உருவாக்க வேண்டி இருக்கிறது.
ஆன்மிகப் பாசிசத்தின் (இந்து மதம்) உருவாக்கம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நான் பின்னோக்கிப் பார்க்கிறேன். பாசிசம் என்றால் என்ன? ஒடுக்கும் தன்மை யுடைய, அழிக்கக்கூடியது, உலகளாவிய அளவில் எடுத்துக் கொண்டால், போருக்கு இட்டுச் செல்வது பாசிசம் என்று பிரதிகள் நமக்கு பாசிசம் பற்றிக் கூறுகின்றன. ஜெர்மனியிலிருந்தும், இத்தாலியிலிருந்தும் இது தோன்றியதாக நாம் அறிகிறோம். ஹிட்லரும், முசோலினியும் எடுத்துக்காட்டுகள். உற்று நோக்கினால், இந்து மதத்திற்கும் நாஜிக்களின் தத்துவத்திற்கும் "ஸ்வஸ்திக்' சின்னம் உட்பட நிறைய தொடர்பிருக்கிறது.
ஹிட்லரே நாஜிக்களை ஆரியர்கள் என்றுதான் குறிப்பிட்டார். நான் இந்திய ஆரியர்களை நாஜிக்களோடு பொருத்திப் பார்த்தேன். ஜெர்மனியில் ஆரியர்களுக்கு தொன்மையான வேர்கள் கிடையாது. ஆனால், இந்தியாவில் உள்ளது. பார்ப்பனர்கள் ஜெர்மனியிலிருந்து வந்தார்களா அல்லது ஈரானிலிருந்தா என்பது குறித்து குழப்பம் நிலவுகிறது. பாசிசத்தின் தன்மைகளாக அடக்குவதையும் ஒடுக்குவதையும், போருக்கு இட்டுச் செல்வதையும், பாலியல் வல்லாங்கு செய்வதையும் வைத்துப் பார்க்கும்போது, இவையெல்லாம் ரிக் வேதத்திலும் இருக்கின்றன. "ஏற்றத்தாழ்வுகளோடு மனிதர்களைப் படைக்கிறார் கடவுள்' என்கிறது ரிக்வேதம். இது எல்லா காலத்திற்கும் பொருந்தும் என்றும் சொல்கிறது வேதம். அதுமட்டுமல்ல, சிலர் காலில் பிறந்தார்களாம். சிலர் தலையில் பிறந்தார்களாம். சிலர் பிறக்கவேயில்லையாம்! ஆகவே மதத்தின் பெயரால், ஆன்மிகத்தின் பெயரால் கடவுளே ஒரு பெரிய ஒடுக்குமுறையை கடைப்பிடிக்கிறார்.
புருஷசுத்தம் என்பது சமமற்ற தன்மை எனும்போது, அது எப்படியெல்லாம் இந்து மதத்தோடு பொருந்திப் போகிறது என்பது மிகவும் முக்கியம். ஆகவே, இந்து மதத்தின் இந்தத் தன்மையை எப்படி விளக்குவது என்று நான் யோசித்தேன். அப்போது ஒரு விஷயம் புரிந்தது. நாஜியிசமோ, பாசிசமோ அரசியலோடு தொடர்புடையது என்பது புரிந்தது. அங்கே ஆன்மிகமோ, மதமோ வரவேயில்லை. ஏனெனில், அங்கு கிறித்துவப் பின்னணி இருந்தது. இது குறித்து ஆழ்ந்து யோசிக்கையில் இங்கிருப்பது ஆன்மிகப் பாசிசம் என்று புலப்பட்டது. பாசிசத்தின் மீது ஆன்மிகத்தை கட்டியெழுப்பினால், அதற்கு வலிமை அதிகமாகி, நீண்டகாலம் நீடிக்கும். இந்த ஆன்மிக பாசிசத்தன்மையினால் தான் இந்து மதம் இத்தனை காலம் தாக்குப்பிடித்து வந்திருக்கிறது. பெரிய அளவு இழப்புகளோடு குறுகிய காலத்தில் அய்ரோப்பாவில் அரசியல் ரீதியான பாசிசத்தை ஒழித்துவிட முடியும்.
ஆனால் ஆன்மிகப் பாசிசத்தை அழித்துவிட முடியாது. அதன் முக்கியமான பரிமாணங்களை மக்கள் புரிந்து கொள்வதும் கடினம்தான். ஒரு மதத்தை அல்லது அரசை புரிந்து கொள்ள ஒரு காலகட்டம் தேவை. நமது காலத்தில்தான் இந்த ஆன்மிகப் பாசிசம் என்கிற சொல் பிடிபட்டிருக்கிறது. ஏனெனில், பாசிசத்தின் பல கோணங்களை நாம் உணர்ந்திருக்கிறோம். அன்று தேசியம், காலனித்துவம் போன்றவை முக்கியப் பங்கு வகித்தன. காலனியாதிக்கத்திற்கெதிரான போராட்ட காலத்தில் அம்பேத்கரால் கிறித்துவம் குறித்த ஒரு சாதகமான பார்வையை வைத்திருக்க முடியாது. இப்போது செய்தாலே குற்றவாளியாக்குகிறார்கள். அன்றைக்கு அப்படி அவர் செய்திருந்தால், அவரை யும் குற்றவாளியாக்கி இருப்பார்கள்.
ஆனால் எந்த விருப்பு வெறுப்புமின்றி, என்னால் பவுத்தத்தை வெளியிலிருந்து ஆராய முடிகிறது. ஆனால், நான் அம்பேத்கரின் தோள்களில் நின்று கொண்டு பார்க்கிறேன் என்பதுதான் முக்கியமானது. ஒவ்வொரு காலகட்டமும் அந்த காலத்திற்கேற்ப ஒரு சிந்தனையாளரை உருவாக்குகிறது. அம்பேத்கரின் "நவயான' பவுத்தத்திற்குப் பிறகு, இந்து மதத்திற்கு சவாலாக கிறித்துவமும், இஸ்லாமும்தான் இருக்கின்றன. இஸ்லாத்தைப் பொருத்தவரை சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் போல விமர்சிப்பவர்களும் உண்டு. ஆனால் இந்து மதத்திற்கு சவால் விட ஒரே ஒரு நூல் "நான் ஏன் இந்து அல்ல' மட்டுமே வந்திருக்கிறது. ஆனால், இஸ்லாத்திற்குள்ளேயே அதற்கு சாவல் விட்டு நிறைய நூல்கள் வந்திருக்கின்றன. கிறித்துவத்திற்கும் இது பொருந்தும். இந்த நிலைமையில்தான் ஒரு கருத்தியல் ரீதியான முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. ஆன்மிக ஜனநாயகம் என்கிற புதிய சொல்லாடல் இங்கே சாத்தியமாகிறது. பவுத்தம், கிறித்துவம், இஸ்லாம் ஆகியவற்றை ஒரு செவ்வகத்திற்குள் அடைக்கலாம். இவற்றுக்கிடையே வேறுபாடுகளும் உண்டு. அது குறித்த விவாதங்களும் உண்டு. இந்த விவாதங்கள் தொடர வேண்டியது அவசியம்.
   நன்றி :கீற்று