Wednesday, January 25, 2006

ஒரு பன்முக படைப்பாளி ஏ.சிவானந்தன்


-எம்.ஏ.ஜே-

-அரசியல,; இலக்கியம், சிந்தாந்த தளங்களில் இனம், மொழி, நாட்டின் எல்லை இவற்றைக் கடந்து சர்வதேசியவாதியாக வாழும் மனிதர்
Race and Class ஏ.சிவானந்தம். இவர் இலங்கைத்தமிழர். இலங்கையில் மிகச் சொற்பமாக பட்டதாரிகள் இருந்த காலகட்டத்தில் பட்டதாரியானவர். ஆனாலும் இந்த நிறவாத சமூகத்தின் சமரச அமைப்புக்களான பல்கலைக் கழகங்கள், Racial Equality Commission போன்றவற்றில் பதவி பெற அலையவில்லை. அல்லது தகவல் தொழில் நுட்ப சாதனங்களில் பேட்டியளிக்கின்ற அல்லது தோன்றுகின்ற (media figure) பெரிய மனிதராகவும் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. இவரது எழுத்துக்கள் ஆரம்பத்தில் கையெழுத்துப் பிரதிகளாகவே வெளிவந்திருக்கின்றன. எண்பதுகளின் ஆரம்பத்தில் தான் இவரது எழுத்துக்கள் VERSO, PLUTO பதிப்பகங்களால் நூல் வடிவில் கொண்டுவரப்பட்டுள்ளன. A Different Hunger, Writings on Black Struggle for Socialism, When memory Dies , Where the Dance is ஆகிய நூல்களையும் 40ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து Race and Class சஞ்சிகையையும் வெளிக்கொண்டு வரும் ஏ.சிவானந்தம் அவர்கள் தன்னை ஓர் எழுத்தாளானக சொல்வதை மறுக்கின்றார். தன்னை ஓர் கதை சொல்லி என்றே சொல்லிக்கொள்கிறார். இலக்கியம், கவிதை, ரீ.எஸ்.எலியட்,ஸீபர்ட், பீத்தோவன் என்று ஆழ்ந்து போகும் சிவானந்தன் சொல்கிறார். நாம் நிறைய எழுத்தாளர்களைப் படிக்கிறோம். ஆனால் பாருங்கள் அவர்கள் அநீதி பற்றி, ஏகாதிபத்தியம் பற்றி எதுவும் சொல்வதில்லை. ஆனால் எனக்கு கோபத்தில் அல்சர் வந்துவிட்டது. என்கிறார். மேலும் தன்னை ஓர் நடவடிக்கையாளன்

(Activist) என்று சொல்லிக் கொள்ளவே விருப்பமுள்ளவராக காணப்படுகிறார். மேற்கத்திய உலகத்தின் Social project வேறு. மூன்றாம் உலகத்தின்
project வேறு. லண்டனில் வாழ்ந்து வரும்போதும் அந்த மூன்றாம் உலக சமூக செயல்போக்கு பற்றியே சிந்திப்பதாகவும், தான் தன்னை ஒரு மூன்றாவது உலகத் தவனாகவே உணருவதாகவும் கூறுகிறார். இவரைப் பற்றி இவரது நண்பரும் கலை விமர்சகருமான John Berhein குறிப்பிடும்போது “சிவா ஒரு கவி, சிவா ஒரு அரசியல்வாதி, சிவா ஒரு கதை சொல்லி, சிவா ஒரு உபசரிப்பாளன், வெற்று அரசியலில் சிவா எப்பொழுதுமே வீழ்ந்ததில்லை. உருக்கு ஆலைத்தொழிலில் ஈடுபடுபவன் போன்றவன் சிவா” என்கிறார். National Civil Rights இன் செயற்பாட்டாளரான சுரேஸ் குரோபர், ஏ.சிவானந்தனின் எழுத்துக்கள் தன்னை பெரிதும் ஆகர்ஷித்தன என்கிறார்.
Race and Class காலாண்டிதழ் அல்லது அவரது ஏனைய படைப்புகள் பற்றிய தொடர்புகளுக்கு
INSTITUTE OF RACE RELATIONS2-6 LEEKE STREET,KING‘S CROSS ROADLONDON WC1X 9H5,U.K

No comments: