Thursday, January 26, 2006

விளம்பரம் (அல்ல)


அன்பின் அப்துல்லா,
உசிரை மசிராய்
உழுத மண்ணிலே - நான்
உன்னை எங்கு தேட...

நீங்கள் இருந்த வளவும்
எங்களது வீடும்
உனது நிக்காவில் நின்ற
எனது தலையைப் போலத்தான்...

குற்றமற்றவர்களை அறியாமலே
கற்கள் வீசப்பட்டதால்
நானும் சிலுவையை
சுமந்து கொண்டுதான் நிற்கிறேன்.
மன்னித்துக்கொள்!

சேதி! அறிந்திருப்பாய்,

ஓரு மத்தியானம்
நடுமுற்றத்தில் விழுந்து நொருங்கிய
அதே! சூரியன்தான்
எங்களது இரவுகளிலெல்லாம் - இப்போ
வரத்தொடங்கிவிட்டான்.

இது, விளம்பரமல்ல
விபரம் அறிந்தால்
உடனே பதில் போடு.

-கரவைதாசன் 1996

No comments: