தமிழ்ச் சூழலில் காத்திரமான கலந்துரையாடல்கட்கும் அறிவுப்பகிர்வுக்குமான களமாக தேசிய கலை இலக்கியப் பேரவை பௌர்ணமி தோறும் நிகழ்த்தும் 'உரையாடல்கள்' நிகழ்வின் இம்மாத நிகழ்வு'பிரிக்ஸிட்டும் இலங்கையும்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் வெளியேற்றமும் இலங்கையில் அதன் தாக்கமும்;' என்ற தலைப்பில் நிகழவிருக்கிறது
காலம்: செவ்வாய்க்கிழமை 19ம் திகதி மாலை 05.00 மணிக்கு
இடம் : 121. ஹம்டன் லேன், வெள்ளவத்தையில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடம்.
தயாபரன் ரெஷாங்கன் நெறியாள்கை செய்ய கருத்தாளர்களாக சுதாகரன் பேரம்பலமும் அனோஜன் திருக்கேதிஸ்வரநாதனும் பங்குபற்றுகின்றனர்.
பொதுவெளியில் பயனுள்ள உரையாடல்கள் நிகழ்தற்கான களத்தை உருவாக்கும் முயற்சியில் பங்கேற்கவும் கலந்துரையாடவும், கருத்துப் பரிமாறவும் தேசிய கலை இலக்கியப் பேரவை அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.
No comments:
Post a Comment