-நாவுக் அரசன்-
அண்மையில் பின்லாந்து சும்மா சுற்றிப் பார்க்கப் போன போது,கொஞ்சம் சீரியஸ் ஆக பார்க்க நினைத்த ஒரு இடம் " பின்லான்டியா " என்ற ஒரு சிம்பொனி இசை வடிவத்தை இசை அமைத்த ஜோன் சிபிலிஸ் என்ற பின்லாந்து நாட்டவரின் நினைவிடம். அந்த நாட்டின் தலை நகரம் ஹில்சின்கியில் உள்ள அவரின் வீட்டை. வார இறுதி விடுமுறை நாளில் போனதால் தற்சமயம் முயூசியம் ஆக்கப்பட்டுள்ள அவரின் அந்த வீடு மூடி இருந்தது.
" பின்லான்டியா " சிம்பொனி எவளவு அதிசயமோ, அவளவு அதிசயம் அதை இசை அமைத்த ஜோன் சிபிலிஸ் இன் வாழ்க்கை, அதைவிட அதிசயம் அதை இசை அமைக்க அவர் பட்ட கஷ்டம். அதன் பின்னால் உள்ள அடக்குமுறை சர்வாதிகார பழிவாங்கல்கள். பிராந்திய வல்லரசுகளின் அட்டகாசம்.
பொதுவாக நாடுகள் சுற்றிப் பார்க்கப் போனால் அந்த நாடுகளின் பெண்டுகளை வேடிக்கை பார்பது தான் எப்பவும் முக்கியமா இருக்கும். கொஞ்சம் அங்கே இங்கே படித்த உலக விசியங்களை நேரம் இருந்தால் ஆர்வக்கோளாரில நோண்டிப் பார்ப்பது." பின்லான்டியா " என்ற பெயரில் ஒரு மயக்கும் வோட்கா குடிவகை உலகப் பிரசித்தம் என்று என்னைப் போன்ற கவுரவமான பெருங் குடிமக்களுக்கு நல்லாத் தெரியும்,ஆனால் அந்த " பின்லான்டியா " என்ற பெயரில் வோட்காவை விட மயக்கும் ஒரு உலகப் புகழ் சிம்பொனி இருக்கு எண்டு பலருக்கு தெரியாது. அதுக்கு முக்கிய காரணம் அதை உருவாக்கியவர் வாழ்ந்த பின்லாந்து வடக்கு ஐரோப்பாவின் தொங்கலில் ,பால்டிக் கடல் விளிம்பில் உள்ள பின்லாந்து அதிகம் சென்ற நுற்றாண்டில் மத்திய ஐரோப்பா கவனிக்கப்பட்ட அளவு கலை இலக்கிய வெளிச்சம் அதன் மீது விழாமல் இருந்தது எண்டு நினைக்கிறன். வெறும் எட்டு நிமிடம் மட்டும் இசைக்கப்படும் " பின்லான்டியா " மூலம் அந்த வெளிச்சத்தை இன்று உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்கள் மீது தாராளமாகவே வீச வைத்தார் ஜோன் சிபிலிஸ்.
ஜோன் சிபில்ஸ் அவர் இசை அமைத்த " பின்லான்டியா " பற்றி கேள்விப்பட்டு,அதைக் கேட்டும் இருக்குறேன்,ஹெசின்கிக்கு நான் போன பகல் வேளை மழை வெளிய பெய்ய ஒரு பப்பில போய் இருந்து ஒரு பியரை வேண்டி உறிஞ்சிக் கொண்டு இருத்த நேரம் அந்த பப்பில சிபிலிஸ் இசை அமைத்த " லேக் சுவான் " என்ற இசை கோர்வையும்,வேறு சில கிளாசிகல் இசையும் மெதுவாக யாருக்கும் நோகாமல் ஒலிக்க விட்டு இருந்தார்கள்,அங்கே வேலை செய்த பெண்ணிடம் ஆங்கிலத்தில் சிபிலிஸ் பற்றியும் பின்லான்டியா பற்றியும் கேட்டேன்,அவள், கொஞ்சம் சொன்னாள், " சிபிலிஸ் இன் வீடு இங்கே அருகில தான் , கொஞ்சம் தள்ளி கொர்ர்ப்பி சதுக்கத்தின் முடிவில் வரும் நடைபாதையின் முடிவில் இருக்கு,ஒரு பத்து நிமிடம் நடந்தால் போய்ப் பார்க்கலாம் " எண்டு சொன்னாள், " பின்னிஷ் மக்கள் நேரம் காலம் இல்லாத தண்ணிச் சாமிகள் எண்டுதான் கேள்விப்பட்டேன்,இப்படி உலகத்தரமான ஆட்கள் உன்னோட நாட்டில் இருந்து இருகுரார்களே,ஆச்சரியம் " என்றேன், அதுக்கு அவள் " அப்படி ஒரு வதந்தி பின்ட்லாண்டுக்கு வெளிய தான் உலாவுது " எண்டு முகத்தில அடிச்ச மாதிரி சொன்னாள் சிரித்துக்கொண்டே.
" பின்லான்டியா " ஒரு சுதந்திர விடுதலைக் குரல் வழிந்தோடும் சிம்பொனி , பின்லாந்தை ரசியப் பேரரசு மறைமுகமாக அடக்கி ஒடுக்கிக்கொண்டு இருந்த நேரம் இசை அமைக்கப்பட்ட இசை வடிவம்,அதால ரசியா அதை தடை செய்தது, பல பின்லாந்து கலாசார விளிமிய அடையாளங்கள் அங்கங்கே அள்ளித் தெளிக்கப்பட்ட " பின்லான்டியா " இசை அருவியை ஜோன் சிபிலிஸ் அதை முறிஞ்சு முறிஞ்சு எழுதியது மட்டும் தான் ,அதை மேடை ஏற்ற பின்லாந்தில் தடை இருந்தது. எப்படியோ அது வேறு பெயரில் பல ஐரோப்பிய நகரங்களுக்கு கசிய,அதன் பெறுமதி கொஞ்சம் கொஞ்சமா வியன்னா வரை பிரபலம் பெற்று இருக்கு. அந்த இசையின் கோலங்கள் நாடுகள், எல்லைகள்,மொழிகள் தாண்டி அமுத மழை பொழிந்து இருக்கு .
பின்லாண்டியாவை இசை அமைத்த ஜோன் சிபிலிஸ் டாக்டர் வேலை செய்த பெற்றோருக்கு கொஞ்சம் வசதியான குடும்பத்தில் பிறந்தவர், சின்ன வயசிலேயே இசை ஆர்வம் இருந்ததால் தேவாலயத்தில் இருந்த ஒரு பியானோவில் வாசித்து இசைக் குறிப்புகளை எழுதி எழுதி வீட்டுக்கு வந்து அதை மனத்தால இன்னும் மெருகு ஏற்றிக்கொண்டு அடுத்தமுறை தேவாலயம் போய் இன்னும் வாசித்து, இப்படிதான் பலவருடம் அதை உருவாக்கி இருக்குறார். சொந்தமாக ஒரு பியானோ வேண்டுவரை அப்படிதான் தேவாலய பியானோவில் இசை அமைத்து அதை நோட் வடிவில் எழுதி இருக்குறார்.
முதல் முதல் ஒரு பழைய பியானோ வேண்டி அந்த பியானோ வேண்டியபின், பல இசைக் கருவிகள் போட்டு ஒகேச்டிரா ஸ்டைலில் வாசிக்கும் முறையில் எழுதிய பின்லாண்டியாவை, அதன் பின் ஜோன் சிபிலிஸ் ஒரு பியானோவில் வாசிக்கும் ஒரு முறையில் ,முழு நேரமா பின்லான்டியா சிம்போனியை உருவாக்கி உள்ளார் .ஜோன் சிபிலிஸ் ஏழு சிம்பொனிகள் இசை அமைத்து உள்ளார்,அதில் " பின்லான்டியா " தான் பின்லாந்தின் உயிரை அதில பிடிச்சு வைச்சு இருக்கு எண்டு சொல்லுறார்கள். அவரின் தேசிய சேவையைக் கவுரவிக்க பின்லாந்தின் காசில் அவர் படம் வந்து இருக்கு, ஆனால் பின்லாந்து காசு ஈய்ரோ என்ற ஐரோப்பிய யூனியன் காசாக மாறிவிட்டது சில வருடங்களில்.
பின்லாந்தின் ஆர்டிக் இயற்கை, குளிர் காலநிலை, சாமே கலாசாரம் , எல்லாத்தையும் இசை ஆக்கிய பின்லான்டியா சில வருடம் பின்லாந்தின் தேசிய கீதம் போல இருந்து இருக்கு. அதை உருவாக்கியா ஜோன் சிபிலிஸ் அதை மத்திய ஐரோப்பாவின் மிகச்சிறந்த ஒபேரா இசை அரங்குகளில் அது இசைக்கபடுவதை பார்க்க விரும்பினார், பல வருடம் ரசியா அதை தடை செய்து வைத்திருந்தது,வேறு சில தனிப்பட்ட காரனம்களால் அவரால் அதை பார்க்கவே முடியாமல் போக, தனிமையில் யாரையுமே சந்திக்காமல் வாழ்ந்து ,வயதாகி, பின்லாந்தின் ஒரு சிறிய நகரத்தில் ஒரு விண்டர் இரவு நேரம் அமைதியாக இறந்து, அவரின் இசைப் பயணம் முடிந்து போக, ஜோன் சிபிலிஸ்ன் சரஸ்வதிக் கைகளில் உருவான அவரின் " பின்லான்டியா " உயிர் பெற்று உலகம் முழுவதும் அதிசயிக்க வைக்கத் தொடங்கியது....
No comments:
Post a Comment