-ராஜா ஸ்ரீகாந்தன்-
பிரேம்ஜியின் வாழ்க்கைச் சுவடுகளைப் பதிவு செய்யும் வகையில் அவர் குறித்து, எழுத்தாளரும் முன்னாள் தினகரன் ஆசிரியருமான அமரர் ராஜ ஸ்ரீகாந்தன் எழுதிய ஒரு கட்டுரையும், இன்னும் சில பதிவுகளும் பிரேம்ஜியின் நினைவாக ...
வரலாற்று நிகழ்வுப் போக்குகளும் காலத்தின் தேவைகளும் பொருத்தமான சூழற்புலங்களும் சமாந்தர சிந்தனைப் போக்குள்ளவர்களின் கூட்டு முயற்சிகளும் தனிப்பட்ட முன்னெடுப்புகளுமே சங்கங்களையும் இயக்கங்களையும் உருவாக்குகின்றன. இருந்த போதிலும் கொள்கைப் பற்றுள்ளஇ இலட்சிய வீறுகொண்டஇ மனித நேயமும் ஜனநாயகப் பண்பும் கொண்ட 'ஒரு சில மனிதர்களின்' இடையறாத முயற்சிகளும் அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகளுமே இந்த இயக்கங்களை வெற்றியின் நெடுஞ்சாலையில் ஆர்முடுகலுடன் உந்திச் செலுத்துகின்றன. இந்த வகையைச் சேர்ந்த 'ஒரு சில மனிதர்களில்' ஒருவராக பிரேம்ஜி ஞானசுந்தரன் திகழ்கின்றார். இந்த 'ஒரு சில மனிதர்களின்' சொந்த வாழ்க்கையினைப் பயின்றறிதல் கூட பயன்மிக்க பாடமாயிருக்கும்.
யாழ்ப்பாணத்திற்கு வடக்கேஇ சந்நிதி முருகன் ஆலயத்திற்கு முன்னே ஓடாது நிற்கும் தொண்டமான் ஆற்றிற்கு அண்மையில்இ பனைமரங்களும் பயிர்ச்செய்கை நிலங்களும்இ பழத்தோட்டங்களும் நிறைந்த பசுமை கொஞ்சும் அழகிய கிராமம் அச்சுவேலி. அங்கே நடராஜா பவளம்மா தம்பதிகளின் மூன்றாவது மகனாக 1930.11.17 ஆந் திகதி பிறந்தார் பிரேம்ஜி. பெற்றோர் சூட்டிய பெயர் ஸ்ரீP கதிர்காம தேவ ஞானசுந்தரம். மூத்த தமையனார் மாணிக்க நடராஜா. சிறுவர் நலன்புரி ஆணையாளராகப் பணியாற்றியபின் காலமாகிவிட்டார். இரண்டாவது தமையனார் ஞானசம்பந்தர். அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்று தற்போது ஐக்கிய ராஜ்யத்தில் வாழ்ந்து வருகிறார். இவர்கள் மூவரதும் ஒரே சகோதரியான திருமதி கருணாதேவி சிவகுருநாதன் தற்போது கந்தர்மடத்தில் வாழ்ந்து வருகிறார். நெடுங்காலம் வாழ்ந்தஇ கடைசிமகனில் கொள்ளையன்பு வைத்திருந்த அன்னையார் பவளம்மா அண்மையில் காலமாகி விட்டார்.
பிரேம்ஜி தனது ஆரம்பக் கல்வியை அச்சுவேலி கிறீஸ்தவக் கல்லூரியில் தொடங்கி கனிஷ்ட பாடசாலைப் பத்திர வகுப்பு வரை கற்றார். 10-15 வயதிற்கிடைப்பட்ட இக் காலத்தில்; 'வீரகேசரி' செல்லத்துரை அவர்கள் மூலமாக பாரதி கவிதைகள்இ பகவத் கீதைஇ சத்திய சோதனை உட்பட பல பல நூற்றுக்கணக்கான நூல்களைப் பெற்றுப் படித்தார். திரு.வி.க. வினதும் சுவாமிநாத சர்மாவினதும் நூல்கள் இவரது பிஞ்சு உள்ளத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தின.
யாழ். பரமேஸ்வராக் கல்லூரியில் சிரேஷ்ட பாடசாலைப் பத்திர தயார் நிலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது இளம் ஆசிரியர் ஒருவர் பிரேம்ஜியிடமும் இன்னொரு மாணவனிடமும்இ 'நீங்கள் இருவரும் வகுப்பில் மிகவும் திறைமைசாலிகளாக இருக்கிறீர்கள். எனவே அடுத்த ஆண்டில் எடுக்க வேண்டிய இறுதிப் பரீட்சையை நீங்கள் இருவரும் இந்த ஆண்டு இறுதியிலேயே எடுக்க வேண்டும்' என்று மகிழ்வுடன் கூறினார்.
பிரேம்ஜிக்கு இது பிடிக்கவில்லை. நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு 'நான் இங்கு படிக்க வந்தது பரீட்சை எழுதுவதற்காகவல்லஇ அறிவை வளர்ப்பதற்காகவே' என்றார்.
கடுங்கோபமுற்ற ஆசிரியர் வெகுண்டெழுந்தார். 'அப்படியானால் உனக்குரிய இடம் இதுவல்ல' என்று கூறினார்.
பிரேம்ஜியின் உள்ளத்தில் இது ஒரு சலனத்தை ஏற்படுத்திவிட்டது. அப் பாடசாலையிலிருந்து வெளியேறினார். 1947 இல் சகபாடி கீர்த்திசிங்கம் உட்பட தனது மாணவத் தோழர்களுடன் சேர்ந்து 'சுதந்திர இளைஞர் சங்கத்தை' உருவாக்கினார். சாதி ஒழிப்புஇ பெண் விடுதலைஇ சமூக நீதிஇ பரிபூரண சுதந்திரம் என்ற இலட்சியங்களைக் கொண்ட சங்கத்தின் யாப்பினை உருவாக்கி அப்பேரவையில் ஏற்கச் செய்தார்.
'சுதந்திர இளைஞர் சங்கம் அச்சுவேலி கிறிஸ்தவக் கல்லூரியில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழாவொன்றை ஏற்பாடு செய்தது. நாடு முழுவதிலும் ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும் தடை செய்யப்பட்டிருந்தன. காந்தி ஜயந்தியையொட்டி சுதந்திர இளைஞர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பேரணி ஊர்வலத்திற்கு போலீஸார் அனுமதி வழங்க மறுத்து விட்டார்கள். இருந்த போதிலும் இத் தடையையும் மீறி பேரணி ஊர்வலம் சிறப்பாக நடாத்தப்பட்டது. விழாவிலும் பெருந்தொகையானோர் கலந்து கொண்டார்கள். சுபாஸ் சந்திரபோஸின் அணியைச் சேர்ந்த எஸ்.எம்.சரஸ்வதியும்இ உடுப்பிட்டித் தோழர் தர்மகுலசிங்கம் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள். சகல ஏற்பாடுகளையும் இளைஞர் பிரேம்ஜியே முன்னின்று நடாத்தி முடித்தார்.
பின்னர் கொழும்பு சென்று பெம்புறூக் கல்லூரியில் சேர்ந்து கொண்டார். அப்போது வீரகேசரி ஹரன்இ ஒட்டப்பிடாரம் குருசாமிஇ ராஜாராம் போன்றவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். 1947 இல் தேசியக் கவி நாமக்கல் கவிஞர் கொழும்பு வந்திருந்தபோது ஹரன் வீட்டில் அவருக்கு ஒரு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் இளைஞர் பிரேம்ஜி நாமக்கல் கவிஞரைச் சந்தித்து உரையாடினார். ஏகாதிபத்திய மொழியான ஆங்கிலத்தைக் கற்க விரும்பவில்லை என்றும் தென்னிந்தியாவுக்கு வந்து தமிழைக் கற்க விரும்புவதாகவும் கூறினார். நாமக்கல் கவிஞரும் இளைஞர் பிரேம்ஜியை இந்தியாவிற்கு வருமாறு மனமகிழ்வுடன் அழைத்தார். அக்காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் விஸா நடைமுறைகள் இருக்கவில்லை. தனது நண்பர் தம்பிப்பிள்ளை என்பவருடன் பிரேம்ஜி தென்னிந்தியா சென்றார். நாமக்கல் கவிஞர் வீட்டிலிருக்கவில்லை. அவருடைய சீடர் யாழ். அரியரத்தினம் சென்னையில் கவிஞர் தங்கியிருக்கும் விலாசத்தைக் கொடுத்தார். ஆனால் கவிஞர் அங்கிருந்து போய்விட்டார். சென்னையில் திரு.வி.க.இ வ.ரா.இ சுவாமிநாதசர்மா ஆகியோரை இளைஞர் பிரேம்ஜி சந்தித்தார்.
இலட்சியப் பற்றுமிக்க இளைஞர் பிரேம்ஜியை நோக்கி திரு.வி.க. அவர்கள் 'நல்லை நகர் ஆறுமுகநாவலரின் நாட்டிலிருந்தா வருகிறீர்கள்? வாருங்கள்! வாருங்கள்! என்று கூறி வரவேற்றார்.
இந்த வார்த்தைகள் பிரேம்ஜிக்கு உவகையூட்டுபவையாக அமைந்திருந்தன. காந்தியக் கொள்கைகளாலும் கோட்பாடுகளாலும் பெரிதும் கவரப்பட்டிருந்த இளைஞர் பிரேம்ஜிக்கு வ.ரா. அவர்கள் வர்க்கங்களைப் பற்றிஇ வர்க்க வேறுபாடுகளைப் பற்றி எடுத்துரைத்தார்.
'மத பேதம்இ சாதி பேதம்இ பெண்ணடிமைத்தனம்இ மூட நம்பிக்கை என்பவை நிறைந்த இப்போதுள்ள சமூக அமைப்பைச் சுட்டெரித்து அவற்றின் சாம்பலின் மீது புதிய சமதர்ம சமுதாயத்தை நிர்மாணிக்க வேண்டும்' என்று வ.ரா. கூறிய வார்த்தைகள் இளைஞர் பிரேம்ஜியின் மனதில் ஆழப் பதிந்தன.
கம்யூனிஸ்டுகளுடன் தொடர்பு ஏற்பட்டது. குயிலன்இ பேராசிரியர் ராமகிருஷ்ணன்இ இஸ்மத் பாக்ஷாஇ அற்புதக் கவிஞரான தமிழொளி ஆகியோர் அறிமுகமானார்கள். பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளருமான முல்லை முத்தையா அவர்களின் அறையில் பிரேம்ஜி சிறிது காலம் தங்கியிருந்தார். பின்னர் குயிலனின் 'தென்றல்' பத்திரிகைச் செயலகத்தில் கவிஞர் தமிழொளியுடன் தங்கினார். இச் செயலகத்திற்கு எதிரே சுவாமிநாதசர்மாவின் வீடு இருந்தது.
இளைஞர் பிரேம்;ஜி சுவாமிநாதசர்மாவுடன் நீண்ட நேரம் உரையாடுவார். தனது மனதிலுதிக்கும் சந்தேகங்கள் பலவற்றிற்கு விளக்கம் கேட்டறிவார். இவர்களுடைய உரையாடல்கள் பெரும்பாலும் அரசியல் பற்றியதாகவே இருக்கும். தான் எந்த அரசியற் கட்சியிற் சேர்ந்தியங்குவது பொருத்தமாக இருக்குமென்று ஒரு நாள் சுவாமிநாத சர்மாவிடம் கேட்டார். அவரே ஆழ்ந்த சிந்தனையின் பின்னர் பிரேம்ஜியை கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து செயற்படுமாறு அறிவுறுத்தினார்.
சுவாமிநாத சர்மாவின் அறிவுரையை முழுமனதுடன் ஏற்று பிரேம்ஜி கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து கொண்டார். இக் காலப்பகுதியில் கன்னிமாரா நூலகத்திலிருந்து நல்ல பல நூல்களைத் தேர்ந்தெடுத்து நிறைய வாசித்தார். குறிப்புக்களை எழுதிக் கொண்டார்.
அதிகாரி அவர்களால் எழுதப்பட்ட 'சோவியத் ஒன்றியத்தில் தேசிய இனப் பிரச்சினையின் தீர்வு' என்ற நூல் பிரேம்ஜியைப் பெரிதும் கவர்ந்தது. அந்நூலின் இரண்டாவது அட்டையிலிருந்தஇ 'லெனின் போன்ற ஓர்; ஒப்பற்ற மாமனிதனுடைய சிந்தனைகளும் கருத்துக்களும்இ அவருடைய அற்புதமான தோழர்களின் தியாகங்களும் ஒரு போதும் வீண் போகமாட்டா'இ என்ற காந்திஜியின் மேற்கோள் பிரேம்ஜியை முழு வீச்சுள்ள கம்யூனிஸ்ட்டாக்கியது.
இக் காலப் பகுதியில் தடைசெய்யப்பட்ட இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியினர் 'முன்னணி' என்ற பெயரில் பத்திரிகையொன்றை வெளியிடுவதெனத் தீர்மானித்தனர். குயிலன்இ கவிஞர் தமிழொளிஇ பிரேம்ஜி ஆகியோரை ஆசிரியர் குழுவாகக் கொண்டு 1948 ஆம் ஆண்டில் 'முன்னணி' வெளிவந்தது. கம்யூனிஸ்ட் தலைவர்கள் தலைமறைவாயிருந்த இடங்களுக்குச் சென்று அவர்களைச் சந்தித்துஇ தகவல்களைப் பெற்று 'முன்னணியில்' வெளியிடும் பொறுப்பு பிரேம்ஜிக்குத் தரப்பட்டது. பிரேம்ஜியின் வாழ்க்கையில் இது ஓர்; அற்புதமான அனுபவம். இந்த ஆபத்தான பணியின் போது ஒரு முறை துப்பறியும் பொலீஸாரிடம் அகப்பட்டுத் தப்பிக் கொண்டார்.
1949 இல் இலங்கை திரும்பியதும் 'தேசாபிமானி' ஆசிரியர் தோழர் கே. ராமநாதன் அவர்கள் தேசாபிமானியில் பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்தார். தோழர் வைத்திலிங்கம் அவர்களைச் சந்திக்குமாறு தெரிவித்தார். அந் நாட்களில் யாழ்ப்;பாணம் சென்ற கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமாகிய கே.கணேஷ் அவர்கள் இளைஞர் பிரேம்ஜியைச் சந்தித்து உரையாடினார். இந்த வயதில் அரசியலில் ஈடுபட வேண்டாமென்றும் படிப்பைத் தொடர்ந்து முடித்த பின்னர் அது பற்றிச் சிந்திக்கலாமென்றும் அறிவுரை கூறினார். ஆனால் இதனை இளம் பிரேம்ஜி ஏற்கவில்லை. தான் விரும்பிய 'பார் அற் லோ' படிப்பை இங்கிலாந்து சென்று மேற்கொள்ளுமாறு தாயார் சொன்ன ஆலோசனையையும் நிராகரித்தார்.
தோழர் வைத்திலிங்கத்தைச் சந்திக்கஇ அவர் தேசாபிமானியிற் பணியாற்றுமாறு கூறினார். அங்கே தேசாபிமானி ஆசிரியர் அவர்களுடன் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். தேசாபிமானியை வெளியிடுவதில் சிரமங்கள் எழுந்த போதுஇ கே.ராமநாதன் அவர்கள் பிரேம்ஜியை 'வீரகேசரி' பத்திரிகையிற் சேர்ந்து பணியாற்றுமாறு ஆலோசனை கூறினார்.
'நான் எழுதுவதை பூர்ஷுவா பத்திரிகைகள் வெளியிட மாட்டா. பூர்ஷுவா பத்திரிகைகள் விரும்புவதை என்னால் எழுத முடியாது' என்று ஜுலியஸ் பியூஜிக் 'தூக்குமேடைக் குறிப்பில்' எழுதியிருந்ததை நினைவுபடுத்திய பிரேம்ஜி தேசாபிமானி ஆசிரியரின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை.
1951 இல் பத்திரிகையொன்றினை ஆரம்பிக்கும் நோக்குடன் கட்சித் தோழர் வலிவிற்றிகொட என்பவருடன் சேர்ந்து கொட்டா றோட்டில் 'சூரியா அச்சகத்தினை' ஆரம்பித்தார். இந்த நோக்கம் வெற்றியடையவில்லை. அச்சகம் மூடப்பட்டது.
இக் காலத்தில் வெளியிடப்;பட்ட 'வாலிப முன்னணி' என்ற பத்திரிகையில் 'பிரேமா' என்ற புனைபெயரில் இவர் எழுதி வந்தார். இதன் சகோதரப் பத்திரிகையான 'நவ சக்தி' என்ற மலையாளப் பத்திரிகையில் எழுத்துக் கோர்ப்பவராகப் பணியாற்றிய ராமகிருஷ்ணன் என்ற மலையாளத் தோழர் 'பிரேமா' என்பதற்குப் பதிலாக 'பிரேம்ஜி' என்ற பெயரை அறிமுகஞ் செய்து வைத்தார். பெற்றோர் வைத்த பெயரை விட மலையாளத் தோழர் ஒருவர் வைத்த பெயரே இன்று பரவலாக வழங்கப்படுகிறது. 'பிரேம்ஜி' என்ற புகழ்பெற்ற மலையாளக் கவிஞர் ஒருவர் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1953 இல் 'சுதந்திரன்' பத்திரிகை ஆசிரிய பீடத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்ட பொது கட்சித் தோழர்களின் ஆலோசனையுடன் அதற்கு விண்ணப்பித்தார். எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் நேர்முகப் பரீட்சை நடாத்தினார். பிரேம்ஜி ஆசிரிய பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். அப்போது எஸ்.ரி.சிவநாயகம் 'சுதந்திரன்' ஆசிரியராகப் பணியாற்றினார். பிரேம்ஜி பெருந் தொகையான அரசியற் கட்டுரைகளை எழுதினார். எழுத்தாளர் பலரை சுதந்திரனில் எழுத வைத்தார். செ.கணேசலிங்கம் 'எழுத்தாளர் அறிமுகம்' என்ற பகுதியில் பல எழுத்தாளர்களை வாசகர்கள் முன் கொண்டு வந்தார். பிரேம்ஜி 'தேச பக்தன் குறிப்பு' என்ற தொடரில் விறுவிறுப்பான கருத்துக்களை எழுதி வந்தார். பல இலக்கியக் கட்டுரைகளையும் எழுதினார். இவற்றில் 'பாரதியும் பாரதிதாசனும்' என்ற தொடர் கட்டுரை இலக்கிய உலகில் பெரிதும் பேசப்பட்டது.
1953 இல் சுமார் எண்ணாயிரம் பிரதிகள் விற்பனையாகிய 'சுதந்திரன்' 1956 இல் இருபத்தெண்ணாயிரம் பிரதிகள் வரை விற்பனையாகியது. 'சுதந்திரன்' இலங்கையின் 'ஜன சக்தி' எனப் பேசப்பட்டது. முழுமையான ஏகாதிபத்திய விரோதக் கருத்துக்களை தமிழ் மக்களிடையே எடுத்துச் சென்றது. இலங்கையில் ஐக்கிய முன்னணி அரசொன்றை அமைப்பதற்குத் தமிழ் மக்களைத் தயார் செய்ததில் இக் காலகட்டச் சுதந்திரன் பெரும் பங்கு வகித்தது.
கம்யூனிஸ்ட்; கட்சியின் அரசியற் பத்திரிகையான தேசாபிமானியிலும் 'தேசபக்தன் கண்ணோட்டம்' வெளிவரத் தொடங்கியது. பிரேம்ஜியே அக் கட்டுரைத் தொடரையும் எழுதி வருகிறாரெனக் குற்றஞ் சுமத்தப்பட்டது. திருகோணமலையிலும்இ வவுனியாவிலும் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டங்களில்; இப் பிரச்சினை பூதாகரமாகக் கிளப்பப்பட்டது.
பெரியவர் (எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களை பிரேம்ஜி இவ்வாறு தான் குறிப்பிடுவார்)இ 'சுதந்திரன் எனது பத்திரிகை. அதில் யாரை வைத்திருக்க வேண்டும்இ யாரை வைத்திருக்கக் கூடாது என்பதனை நான் தான் தீர்மானிப்பேன். தமிழரசுக் கட்சி இதனைத் தீர்மானிக்க முடியாது' என்று உறுதியாகக் கூறிவிட்டார்.
இறுதியில்இ தேசாபிமானியிலும் 'தேசபக்தன் கண்ணோட்டம்' தொடரை பிரேம்ஜியே எழுதுகிறார் என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட போது 1956 டிசம்பர் 31 ஆந் திகதியிலிருந்து பிரேம்ஜியை பதவி நீக்கஞ் செய்யும் கண்ணியமான ஆங்கிலக் கடிதமொன்றை பெரியவர் அனுப்பி வைத்தார்.
இக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட பிரேம்ஜிஇ 'நீங்கள் ஆங்கிலத்தில் எழுதியனுப்பிய கடிதம் கிடைத்தது. நன்றி. இனவாதத்தை எதிர்த்த போராட்டத்தில் எனது பங்களிப்பைச் செலுத்த வாய்ப்பளித்தமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தமிழில் பதிற் கடிதமொன்றை பெரியவருக்கு அனுப்பி வைத்தார்.
'கத்தோலிக்கரையும் கம்யூனிஸ்டுக்களையும் சுட்டெரித்தாலும் அவர்களுடைய சாம்பல் கூட அவற்றைத்தான் பேசும்' என்று ஒரு தடவை பிரேம்ஜியிடம் பெரியவர் கூறினார்.
பிரேம்ஜி சுதந்திரனில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள் சுபைர் இளங்கீரன் இவரிடம் வந்து எம்.ஏ.அப்பாஸ்இ எம்.பீ.பாரதிஇ கலைதாசன் ஆகியோருடன் சேர்ந்து எழுத்தாளர் சங்கமொன்றை உருவாக்கவிருப்பதாகவும்இ இந்த ஆரம்பக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார். ஆயினும் பிரேம்ஜி இக் கூட்டத்திற்குச் செல்லவில்லை.
இதற்கு ஒரு வாரத்தின் பின்னர் 1954 ஜுன் 27 ஆந் திகதி மருதானை வீரரத்தின கட்டிடத்தில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பிரேம்ஜி சங்கத்தின் பொதுச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் விரிவான கருத்துப் பரிமாற்றத்தின் பின் இவரே இ.மு.எ.ச.வின் நோக்கங்களையும் வேலைத்திட்டத்தையும் வகுத்தார்.
1954 ஒக்ரோபர் 25 ஆந் திகதி இ.மு.எ.ச. வெளியிட்ட கொள்கைப் பிரகடனத்தில் 'மனித குலம் யுக யுகாந்திரமாகக் கண்ட இலட்சியக் கனவைச் சாதனையாக்கஇ வர்க்க பேதமற்ற ஒப்பிலாச் சமுதாயத்தை சிருஷ்டிக்கஇ மனித இனம் நடத்தும் போராட்டத்தையும் அதிற் தோன்றும் புதிய சமுதாய அமைப்பையும் பிரதிபலிக்கும் சோஷலிஸ யதார்த்தவாதம் என்ற இலக்கியத் தத்துவத்தை இ.மு.எ.ச தனது இறுதி இலட்சியமாக ஏற்றுக் கொள்கிறது' எனக் குறிப்பிட்டார்.
தேசிய இனப்பிரச்சினையைப் பற்றி பிரேம்ஜி கொண்டிருந்த தீர்;க்க தரிசன நோக்கைஇ இற்றைக்கு நாற்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவர் வகுத்தளித்த வேலைத்திட்டத்தின் ஐந்தாவது பகுதி தெளிவாகப் புலப்படுத்துகிறது.
'5. இந்நாட்டிலுள்ள தேசிய இனங்களின் பிரதேச ரீதியான சுய நிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டு அதற்காக அவர்கள் நடத்தும் போராட்டங்களை ஆதரிப்பது. இதன் மூலமே ஒவ்வொரு தேசிய இனத்தின் கலைஇ கலாசாரம்இ மொழிஇ பொருளாதார வளர்ச்சிக்கு உத்தரவாதம் செய்ய முடியும் என்பதை விளக்குவது'. 1957 இல் கொழும்பு 'கிராண்ட் ஒரியன்ரல் ஹோட்டலில்' (தற்போது 'தப்ரபேன் ஹோட்டல்') நடைபெற்ற 'உலக சமாதான மகாநாட்டில்' பிரேம்ஜி தமிழ் பிரிவிற்குப் பொறுப்பாளராகப் பணியாற்றினார். சிலி நாட்டுக் கவி மன்னன் பாப்லா நெரூடா உட்பட பல உலகப் பிரமுகர்கள் இம் மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.
1958 இல் தாஷ்கென்றில் நடைபெற்ற ஆசிய – ஆபிரிக்க எழுத்தாளர் மகாநாட்டில் பிரேம்ஜி பிரதிநிதியாகப் பங்கு கொண்டார். மகாநாடு முடிந்ததும் கிரெம்ளின் மாளிகையின் அரசாங்க வரவேற்பு மண்டபத்தில் மகாநாட்டு பிரதிநிதிகளை நிக்கிற்ரா குருச்சேவ் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மண்டபத்தில் பிரதிநிதிகள் லாட வடிவத்தில் நின்று கொண்டிருந்தார்கள். குருச்சேவ் வரவேற்பு மண்டபத்தினுள் பிரவேசித்ததும் இந்தியஇ ஆபிரிக்கப் பிரதிநிதிகள் ஒழுங்கிற்கு மாறாக முண்டியடித்துக் கொண்டு குருச்சேவை நோக்கி ஓடினார்கள். பிரேம்ஜியின் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய ஒக்ஸானா என்ற மூதாட்டி குருச்சேவைச் சந்திக்க வருமாறு நச்சரித்துக் கொண்டிருந்தார். பிரேம்ஜி ஒழுங்கை மீறி நடந்து கொள்ள விரும்பவில்லை. மூன்றாவது தடவையும் அந்த அம்மையார் நச்சரித்தார். எனினும் அமைதியாகஇ 'குருச்சேவ் பதவிக்கு வரலாம் அல்லது போகலாம்இ ஆனால் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி நிலைத்திருக்கும்' என்று பவ்வியமாகக் கூறினார். பிரேம்ஜி இலங்கை திரும்பிய சில மாதங்களுக்குள் குருச்சேவ் பதவியிழந்தார்.
1958 முதல் 1972 வரை 'சோவியத் செய்திகளும் கருத்துகளும்' நாளாந்தச் செய்திமடல் ஆசிரியராகப் பணியாற்றினார். இக் காலப்பகுதியில் 1959 ஜுன் 20 ஆந் திகதி இவருடன் பணியாற்றிய கமலி பெனடிக்ரா பெர்னான்டோ என்ற கத்தோலிக்க மங்கையை திருமணஞ் செய்து கொண்டார். இது ஒரு காதல்இ கலப்புத் திருமணம். 1961 ஜுன் 7 ஆந் திகதி மூத்த மகள் மனோஜா பிறந்தாள். மூன்றாண்டுகளுக்குப் பின்னர் 1964 மார்ச் 11 ஆந் திகதி இளைய மகள் ஜனனி பிறந்தாள்.
1961-1975 காலப்பகுதியில் 'தேசாபிமானி'இ 'புது யுகம்' ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1964 இல் லெனின் நூற்றாண்டையொட்டி லெனின் கிராட்டில் நடைபெற்ற சர்வதேச பத்திரிகையாளர் மகாநாட்டில் பங்கு கொண்டார். சிறந்த பத்திரிகையாளருக்கான லெனின் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
ஈழத்து எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு 1964 இல் 'எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம்' ஸ்தாபி;க்கப்பட்டது. பிரேம்ஜி இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவராகப் பின்னர் தெரிவு செய்யப்பட்டார்.
சோவியத் தூதரக செய்திப் பிரிவினரால் வெளியிடப்பட்ட 'சோவியத் நாடு' சஞ்சிகையின் ஆசிரியராக 1972 முதல் 1991 வரையிலும்இ 'சோஷலிஸம்: தத்துவமும் நடைமுறையும்' என்ற அரசியற் சித்தாந்தச் சஞ்சிகையின் ஆசிரியராக 1978 முதல் 1989 வரையிலும்இ 'சக்தி' பத்திரிகையின் அரசியல் விமர்சகராக 1980 முதல் 1989 வரையிலும் பணியாற்றினார். யுனெஸ்கோ நடாத்திய கள ஆய்வின்படி இலங்கையில் மிக அதிகமான வாசகர்களால் படிக்கப்பட்ட சஞ்சிகை 'சோவியத் நாடு' என்பது குறிப்பிடத்தக்கது.
1971 முதல் 1975 வரை இலங்கை தமிழ் ஆலோசனைச் சபையின் செயலாளராகவும்இ யாழ் பல்கலைக்கழக அமைப்புக் குழுச் செயலாளராகவும்இ 1973இல் பத்திரிகை கமிட்டியின் உறுப்பினராகவும்இ 1972 முதல் 1974 வரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆலோசனைச் சபை உறுப்பினராகவும் சேவையாற்றினார்.
1975 இல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் பிரேம்ஜியின் தலைமைத்துவத்துடன் இ.மு.எ.ச. நடாத்;திய 'தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிங்கள – தமிழ் எழுத்தாளர் மகாநாடு' இலங்கை வரலாற்றில் ஓர் எழுத்தாளர் நிறுவனம் இதற்கு முன்னரும்இ இன்று வரையும் இதற்குப் பின்னரும் நடாத்தியிராத ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது. இம் மகாநாட்டில் முன்வைக்கப்பட்டு மாநாட்டாலும் அரசாலும் அன்றைய அரசாலும் ஐக்கிய முன்னணியாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 அம்சத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இலங்கையின் இனப்பிரச்சினை கால் நூற்றாண்டிற்கு முன்னரே தீர்த்து வைக்கப்பட்டிருக்கும்.
1991 இல் சோவியத் சோஷலிஸக் குடியரசுகள் ஒன்றியம் சிதைவடைந்ததும் சோவியத் தூதரக செய்திப் பிரிவு மூடப்பட்டது. பிரேம்ஜி நண்பர் சிலரைப் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொண்டு 'லங்கேசியா' என்ற அச்சகமொன்றை உருவாக்கினார். வியாபாரத்துறை என்றைக்குமே இவருக்கு அடிபணிந்ததில்லை. வழக்கம் போல கொழுத்த நஷ்டத்துடன் இழுத்து மூடிக்கொண்டது.
1995 ஆம் ஆண்டில் பிரேம்ஜி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணிப்பாளர் சபை உறுப்பினராகவும்இ அதன் தமிழ்ச்சேவை ஆலோசகராகவும் 1996 இல் இலங்கை தேசிய நூலகச் சபை மதியுரைக் குழு உறுப்பினராகவும்இ தினகரன் ஆசிரியர்பீட ஆலோசகராகவும்இ 1997 இல் இன விவகாரங்கள் சம்பந்தமான உயர்மட்ட ஊடகக் கமிட்டி உறுப்பினராகவும் நியமனம் பெற்று பலதுறைச் செயற்பாடுகளை நிகழ்த்தியுள்ளதைக் குறிப்பிட வேண்டும்;.
கனடாவில் குடியுரிமை பெற்று வாழும் குழந்தைகள் இருவரும் பெற்றோர் இருவரையும் வயோதிப நாட்களில் தம்முடன் வந்து வாழும்படி அன்புக் கட்டளையிட்டு சித்திரை மாதத்தில் கனடாவிற் குடியேற ஏற்பாடுகளைச் செய்து விட்டார்கள்.
இந்த மாமனிதர் இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். இவருடைய தீர்க்க தரிசனம் வாய்ந்தஇ ஆரோக்கியமான வழிகாட்டல்கள் சிக்கல் மிக்க இக் காலகட்டத்தில் நமது நாட்டிற்கு மிக்க அவசியம்.

நன்றி: தகவல் க.நவம் (கனடா)
No comments:
Post a Comment