-நாவுக் அரசன்-
யாழ்பானத்தில் இளவயதில் வாசித்த எழுத்தாளரில், கொஞ்சம் ஜனரஞ்சகமா சுவாரசியமா , தினசரி பத்திரிகை ,மல்லிகை போன்ற முற்போக்கு பத்திரிகை , வேறு பல இலக்கிய வெளியிடுகளில் நாவல் ,சிறுகதை எழுதிய ஒருவர் செங்கை ஆழியன் என்ற புனைபெயரில் எழுதிய, குணராசா மாஸ்டர் என்ற பெயரில புவி இயல் படிப்பித்த , உதவி அரசாங்க அதிபரா இருந்து ,பின்னர் யாழ் பல்கலைகழக பதிவாளரா, புவியியலில் டாக்டர் பட்டம் பெற்ற கலாநிதி கந்தையா குணராசா. அவர் எப்படியான இலக்கிய வகை எழுத்தாளர் எண்டு எனக்கு சொல்ல முடியவில்லை ,பலராலும் அதிகம் வாசிக்கப்பட்ட ஒரு எழுத்தாளர் , 30 வருடங்களின் முன் அவர் எழுதி ஏறக்குறைய 30 வருடங்களின் முன் நான் படித்த சில நாவல்கள் பற்றி சொல்லுறேன் .
அவர் எழுதிய ஒரு முக்கியமான நாவல் வாடைகாற்று, நெடுந் தீவில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிபடையில்,அவர் அந்த தீவில் அரசாங்க அதிகாரியா வேலை செய்த பொது எழுதிய கதை. மன்னாரில் இருந்து வாடைகாத்து சீசனுக்கு, வாடி அமைத்து தற்காலிகமா தங்கி , தங்கு தொழில் செய்யவந்த ஒரு மீனவ இளைஞனுக்கும்,உள்ளுரில் இருந்த ஒரு இளம் மீன்கொத்திப் பெண்ணுக்கும் இடையில் வந்த காதலில்,சம்மடியார் ,கரைவலை ,கருவாடு சகிதம்,வில்லன்களும், வில்லங்களும் வர ,அந்தக் கதையைப் பின்னர் இலங்கை இந்திய தயாரிப்பா படம் ஆகினார்கள் "வாடைக்காற்று" என்ற நாவலைச் சினிமா ஆக்குமாறு முன் மொழிந்தவர் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்த பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா என்கிறார்கள்!