Sunday, March 24, 2013

பரதேசி-திரை விமர்சனம்

-அமிர்தம் சூர்யா- 

 நாம் குடிக்கும் கதகதப்பான காலை நேரத் தேநீர் உருவாக எத்தனை ஆயிரம் மக்களின் வாழ்வு சிதைக்கப்பட்டு அவர்களின் ரத்தமும் வியர்வையும் தேயிலைத் தோட்டத்துக்கு எப்படி உரமாகிறது என்பதைச் சொல்லும் கதை ‘பரதேசி’. பஞ்சம் பிழைக்க 1939ல் சாலூரிலிருந்து நாற்பத் தெட்டு நாட்கள் கால்கடுக்க பச்சை மலைக்கு வேலை தேடி நடக்கிறது ஒரு சமூகம். அதில் கதை நாய கன்(அதர்வா) ஒட்டுப் பொறுக்கியும் ஒருவன். போகிற போதே சிலர் செத்து வீழ்கிறார்கள். தேயிலைத் தோட் டத்தில் பனி, அட்டைக்கடி, உணவு பற்றாக்குறை, பாலியல் கொடுமை, தப்பிக்க நினைத்தால் கால் நரம்பு துண்டிப்பு, இவற்றோடு கொள்ளை நோயும் தொடர்ந்து கொள்ள... கொத்து கொத்தாக மடிகிறார்கள் மக்கள். தன்னுடைய அங்கம்மாவை (வேதிகா) பார்க்கவே முடியாத சூழலில் ‘நியாயமாரே’ என்று அழுகிறார் அதர்வா. குழந்தையோடு கொத்தடிமையாக வேதிகா வும் வந்துசேர ‘ஓ’வென வானம் பிளக்கும்படி ‘இந்த நரகுழியில் நீயுமா வந்திட்ட?’ என்று கதறுகிறான் - கதை முடிகிறது. இந்தப்படம் டேனியலின் எரியும் பனிக்காடு நாவலின் தழுவல், தாக்கம் என்று சொல்லப்பட்டாலும் அது இல்லை. அதைவிட கால குளறுபடி, தெளிவாக நிலம் குறித்தான தகவல் இன்மை, கருத்து மோசடிகளை இந்தப் படத்தில் வரிசையாக அடுக்கலாம்.

 1. சாதிக்கொடுமையையும் கூலி கொடுக் காத சுரண்டலையும் அதனால் ஏற்பட்ட வறுமை யையும் ஒரே ஒரு காட்சியில் போகிற போக்கில் காட்டுகிறார். ஆனால் அதுதான் அன்று பிரதானமாக இருந்தது. அதனால்தான் விளிம்பு நிலை மக்கள் மட்டும் புலம் பெயர்கிறார்கள். பிறசாதியினர் புலம் பெயரவில்லை. இதைக் காட்ட தவறிவிட்டார்.

 2. கிறிஸ்துவர்களால்தான் அம்மக்களுக்கு கல்வியும் மருத்துவமும் கிடைத்தது என்பதே உண்மை. ஆனால் கிறிஸ்துவ டாக்டரை கோமாளியாக, ரொட்டித் துண்டுகளை வீசியெறிபவராகப் பதிவு செய்வது என்ன நியா யம்?

 3. மரணத்தைக் கொண்டாடும் சமூகமாக இருக்க லாம், அதற்காக நல்ல சாப்பாட்டுக்காக பெரியப்பா (விக்கிரமாதித்யன்) பிணத்தைக் கோணியில் மூடி வைத்துவிட்டசந்தோஷமாக சாப்பிடும் மக்களைக் காட்டும் பாலாவின் மீதான பார்வையை எப்படிப் புரிந்து கொள்வது?

 இதையெல்லாம் மீறி... * பெற்றோர்களால் கைவிடப்பட்ட தன் மகனின் (வேதிகா) காதலியை தன் வீட்டுக்கு அழைத்து வந்து காப்பாற்றும் கச்சம்பாள்.

 * திருமணத்துக்கு முன்பாக கர்ப்பமானதால் மகளை அடித்துத் துவைக்கும் வேதிகாவின் அம்மா

 * கால் நரம்பு துண்டிக்கப்பட்ட ஒட்டுப் பொறுக்கியை (அதர்வா) அணைத்து அலறும் தன்ஷிகாவின் மானுட அழுகை என பண்பாட்டைப் பறைசாற்றும் சில நல்ல அம்சங்களும் ஆறுதலாயிருக் கின்றன.

 இந்தக் கதை வெள்ளைக்காரன் மீது கோபத்தை உண்டாக்காமல் தமிழனை தமிழன் உறிஞ்சிய கதை யாக, தமிழ் இனத்தில் ஒரு சமூகத்தைப் புலம்பெயர வைத்து வாழ்வு பறித்த மேட்டுக்குடி கங்காணி தமிழர் களின் முகமூடி உரித்துக் காட்டிய கதையாக, இன்றைய தமிழர்கள் வெட்கி மானசீகமாக மன்னிப்பு கோர வைக்கும் கதையாக உணர வைத்ததற்காக பாலாவைப் பாராட்டலாம்.

 இளையராஜாவின் முக்கியத்துவத்தை உணர வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.பி. பிரகாஷ்.
நாஞ்சில் நாடனின் வசனமும் சி.எஸ்.பாலசந்திரனின் கலையும் கிஷோரின் படத்தொகுப்பும் பரதேசியை, பார் புகழும் தேசியாக்கி இருக் கிறது.

 தங்க மகுடமாக உருமாற வேண்டிய படைப்பு கருத்தியல் அலட்சியத்தால், வெள்ளிக் குடமாகத் தேங்கிவிட்டது. இதை மறந்து விட்டால்... புதிய கதை, புதிய கதையாடல், மரத்துப்போன வெகுஜன ஃபார்முலா ஒதுக்கல், உலகத்தரத்திலான காட்சி, அசத்தலான நடிகர்களை உருவாக்கித் தந்தது, தீர்வு சொல்லாமல் குற்ற உணர்வை, விவாதத்தை ரசிகனுக் குள் ஏற்படுத்தியது பொன்ற அம்சங்களால் இந்தப் படம் தமிழ் சினிமாவில் சாதனைக் கல்வெட்டுதான் என்று சொல்ல வேண்டும். 

No comments: