மலைகளை பொசுக்கும் வாலிபம்
-கலைச்செல்வன்-
இருள் அடர்ந்த என் உலகத்தில்
துயரத்தின் ஒளிக்கீற்றுக்கள் தான்
என் பாதங்களுக்கு வழி கொடுத்தன.
மலைகளும் அருவிகளும் நிறைந்த
இந்தப் பாலை வனத்தில்
பசி எனக்குச் சோறூட்ட
வறுமை ஆதரவோடு வளர்த்தெடுத்தது...
அவை பாலை வனங்களா?
இல்லை!
இன்னும் இன்னும் கொடியது.
ஈரலித்த மண்ணில்
ஆழப் பதிந்த சோகத்தின் சுவடுகள்
என் வரலாற்றை
மறுபதிப்புச் செய்து கொள்ளும்
இன்னும் இன்னும்
ஏன்?
காலம் வட்டமான வரிக்கோடுகளாக
வலம் வந்து கொண்டிருக்க
இன்பம்
அவை எட்ட நின்று சிரித்து விட்டு
கிட்ட வந்து சோகச் சூட்டுக்குள்
எரிந்து போகின்றன.
அடிக்கடி துடிப்பிழந்து போகும்
என் இதயத்திற்கு அந்த இன்பங்கள்தான்
"வாழ்விருக்கு"
என
வாழ்வை இழுத்து வருகின்றன.இருக்கிறதா?
இருக்கு என்ற ஏக்கம்தான்!
வாழ்வா?
அன்பு காதல் ஊடல் உறவு எல்லாமே
எனக்கும் இருக்கிறதே- ஆயினும்
இவற்றைப் பாய்ச்சுவதற்கு
இத்தனை கடத்தற்கரிய சுவர்களா?
ஓடிவரும் குழந்தையின் உச்சி முகர்விற்காக
ஏங்கி ஏங்கி எத்தனை தரம் கைகளை
நீட்டி ஒடித்துக்கொண்டு விட்டேன்
இந்தப் பெரு மதில்களை எழுப்பியவர் யார்?
அதைத் தூசி தட்டி பழுது பார்க்கும் வாரிசுகள் யார்?
-கலைச்செல்வன்-
இருள் அடர்ந்த என் உலகத்தில்
துயரத்தின் ஒளிக்கீற்றுக்கள் தான்
என் பாதங்களுக்கு வழி கொடுத்தன.
மலைகளும் அருவிகளும் நிறைந்த
இந்தப் பாலை வனத்தில்
பசி எனக்குச் சோறூட்ட
வறுமை ஆதரவோடு வளர்த்தெடுத்தது...
அவை பாலை வனங்களா?
இல்லை!
இன்னும் இன்னும் கொடியது.
ஈரலித்த மண்ணில்
ஆழப் பதிந்த சோகத்தின் சுவடுகள்
என் வரலாற்றை
மறுபதிப்புச் செய்து கொள்ளும்
இன்னும் இன்னும்
ஏன்?
காலம் வட்டமான வரிக்கோடுகளாக
வலம் வந்து கொண்டிருக்க
இன்பம்
அவை எட்ட நின்று சிரித்து விட்டு
கிட்ட வந்து சோகச் சூட்டுக்குள்
எரிந்து போகின்றன.
அடிக்கடி துடிப்பிழந்து போகும்
என் இதயத்திற்கு அந்த இன்பங்கள்தான்
"வாழ்விருக்கு"
என
வாழ்வை இழுத்து வருகின்றன.இருக்கிறதா?
இருக்கு என்ற ஏக்கம்தான்!
வாழ்வா?
அன்பு காதல் ஊடல் உறவு எல்லாமே
எனக்கும் இருக்கிறதே- ஆயினும்
இவற்றைப் பாய்ச்சுவதற்கு
இத்தனை கடத்தற்கரிய சுவர்களா?
ஓடிவரும் குழந்தையின் உச்சி முகர்விற்காக
ஏங்கி ஏங்கி எத்தனை தரம் கைகளை
நீட்டி ஒடித்துக்கொண்டு விட்டேன்
இந்தப் பெரு மதில்களை எழுப்பியவர் யார்?
அதைத் தூசி தட்டி பழுது பார்க்கும் வாரிசுகள் யார்?
No comments:
Post a Comment