Friday, October 21, 2011

இந்திய மண்ணில் சிங்கள நூலுக்கு விருது

 -மேமன்கவி-
இந்திய மண்ணில் சிங்கள மொழி நூல் ஒன்றுக்கு நான் அறிந்த மட்டில் முதல் முதலாக விருதும்பரிசும் வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதுக்கும் பரிசுக்கும்; உரியவர் நம் நாட்டு சகோதர சிங்கள மொழிப் படைப்பாளியும் தமிழ் சிங்கள் மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டு வருபவருமான திரு உபாலி லீலாரட்ன ஆவார்.

இவர் சிங்களத்தில் மொழிபெயர்த்த தமிழகப் படைப்பாளியான கு.சின்னப்ப பாரதியின் ‘சுரங்கம்’ நாவலின் சிங்கள மொழிபெயர்ப்பு நாலுக்கு தமிழகத்தில் மொழிபெயர்ப்புத் துறையை ஊக்குவிக்கமுகமாக செயற்படும் நல்லி திசை எட்டும் எனும் அமைப்பினால் அப்பரிசு வழங்கப்பட்டது.

நல்லி குப்புசாமி செட்டியா அவர்களின் அனுசரணையுடன் செயற்படும் அவ்வமைப்பின் 2011 ஆம் ஆண்டுக்கான மொழியாக்க விருதுகள் வழங்கும் விழா கடந்த செப்டம்பர் 17ந்திகதி திருச்சியில் நடைபெற்ற வேளை
உபாலி லீலாரட்ன சமூமளிக்க முடியாது போனதால்; ஓக்டோம்பர் 3ந்திகதி திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத்தில்; நடைபெற்ற வைபவம் ஒன்றில் வைத்து, நல்லி திசை எட்டும் விருது அந்த அமைப்பின் சார்பாக உபாலி அவர்களுக்கு, நம் நாட்டு புரவலர் ஹாசிம் ஒமர் அவர்களால் வழங்கப்பட்டது.

நல்லி திசை எட்டும் என்ற அமைப்பை பொறுத்த வரை மொழிபெயர்ப்பு படைப்புகள் அடங்கிய ‘திசை எட்டும்’ என்ற காலாண்டிதழ் ஒன்றினை வெளியிட்டு வருகிறது, அத்தோடு இவ்வருடம் TransFire என்ற பேரில் ஆங்கிலத்திலும் ஒரு காலாண்டிதழ் ஒன்றினை வெளியிட தொடங்கியுள்ளது.

அதனை தொடரந்து சமீபத்தில் நாமக்கலில் நடந்த 2011 ஆண்டுக்கான கு,சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் இலக்கிய விருது வழங்கும் விழாவிலும், நம்நாட்டு தமிழ் படைப்பாளிகளுடன் இணைந்து உபாலி லீலாரட்ன அவர்கள் சிங்கள மொழியில் மொழிபெயர்த்த கு.சின்னப்ப பாரதியின் ‘சுரங்கம்’, ‘தாகம்’ ஆகிய இருநாவல்களின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல்களுக்கும் மொழிபெயர்ப்புக்கான விருதும் பரிசும் வழங்கப்பட்டது.

இவ்விரு நால்களும் கொடகே நிறுவனத்தால் வெளியிடப்பட்டவை என்பது கொடகே நிறுவனத்திற்கு  பெருமை சேர்க்கும் ஒரு நிகழ்வாகும்.

அத்தோடு இந்திய மண்ணில் முதல் முதலாக ஒரு சிங்கள் மொழி நூல் ஒன்றுக்கு விருது என்ற சாதனைக்குரியவரான மூவின சமூங்களிடையே புரிந்துணர்வு ஏற்படுத்தும் வகையில் பணியற்றும் உபாலி லீலாரட்ன திகழ்கிறார் என்பதில் அவ்வாறான உணர்வுடன் செயற்படும்இலங்கையர்களான  எல்லா படைப்பாளிக்கும் பெருமை சேர்க்கும் ஒரு சாதனை எனலாம்.

No comments: