-க.கைலாசபதி-
கீழைத்தேசங்களைப் பற்றியும், அதன் வரலாறு, மொழி, இலக்கியம், சமயங்கள், கலைகள் முதலியன பற்றியும், மேல்நாட்டு அறிஞர்கள் பலர் சிறப்பாக ஆராய்ந்துள்ளனர் என்னும் கருத்து பலரிடையே ஆழமாக வேரூன்றியுள்ளது. இக்கருத்து முற்றுமுழுதாக உண்மையல்லவெனினும், சிற்சில துறைகளில், ‘விஞ்ஞானபூர்வமான’ ஆய்வுகளை மேல்நாட்டு கல்விமான்கள் சிலர் நடத்தியுள்ளனர் என்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே. இன்று, சோசலிச நாடுகள் சிலவற்றிலும், ஆசிய - ஆபிரிக்க கலை இலக்கியங்கள் குறித்து சில பல கனமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆயினும் ஆரம்பத்திலிருந்தே ஒரு விசயம் தெளிவாயிருந்து வந்துள்ளது. மேலைத்தேசங்கள் “உலகையாண்ட” காலத்திலேயே, அந்நாடுகளில் கீழைத்தேய ஆராய்ச்சிகள் தொடங்கப் பெற்றன. விசித்திரமான விசயங்களைக் கற்க விரும்பும் ஒரு சிலர் எல்லாக் காலத்திலும், எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். மேல்நாடுகளிலும் அத்தகைய “பைத்தியங்கள்” சில, சமஸ்கிருதம், தமிழ், இந்தி, யப்பானிய மொழி போன்ற அயல் மொழிகளையும், இலக்கிய இலக்கணங்களையும், கற்பதில் பெருங்காதல் கொண்டிருந்தனர். ஆனால் கீழைத்தேயங்கள் சம்பந்தமான ஆய்வுகளில் ஈடுபட்டோரிற் பெரும்பாலானோர், ஏதோ ஒரு வகையில் மேல்நாட்டு அரசாங்கங்களுடன் நெருங்கிய தொடர்புடையோராயும் அவற்றின் ஆதரவை வேணடி நின்றோராயும் இருந்தனர்.
பிரித்தானியர், பிரெஞ்சுக்காரர் முதலியோர் தாம் ஆண்ட நாடுகளில், தமக்கு உதவக்கூடிய வகையிலேயே, இத்தகைய ஆய்வுகளைப் பிரதானமாக நடத்துவித்தனர். தொடக்கத்திலேயே விவிலிய வேதத்தைப் பரப்புவதற்காகக் கற்கப்பட்ட கீழைத்தேய மொழிகள், பின்னர் அவற்றைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர் பரம்பரை ஒன்றை உருவாக்குவதற்காகப் பயன்பட்டன. கீழைத்தேய சமுதாயங்களின் வரலாறு, சமூக அமைப்பு, நம்பிக்கைகள், முதலியவற்றை ஆராய்ந்து, மேல்நாட்டு ஆய்வாளர்கள் அவற்றின் மீதுள்ள பற்றினால் மட்டும் அப்படிக் கற்கவில்லை. அவர்களது வெளிநாட்டு அமைச்சுக்கும், நிர்வாகிகளுக்கும் பிரயோசனப்படும் வகையிலேயே, தமது ஆய்வுகளை மேற்கொண்டனர். இலண்டன் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட கீழைத்தேய- ஆபிரிக்கக் கல்லூரி இத்தகையதொன்றேயாகும். அக்கல்லூரியில் தமிழ் கற்ற பல ஆங்கிலேயர், அக்காலத்தில் நிர்வாகிகளாயும், யுத்த காலத்தில் ஒற்றர்களாயும், பல்வேறு சதிகளைத் தீட்டுபவர்களாயும் பணிபுரிந்து வந்திருக்கின்றனர். இன்றும் அக்கல்லூரியின் தமிழ் பகுதிக்கும், பிரிட்டிஸ் வெளிவிவகார அமைச்சிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. இரண்டாவது உலகப் போருக்குப் பின், பிரிட்டன் வல்லரசு அந்தஸ்தை இழந்து, குடியேற்ற நாடுகளில் நேரடியான ஆட்சிச் செல்வாக்கைக் கைவிட்ட பொழுது, தொடர்ந்து பெருமளவில் கீழைத்தேய ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லாது போயிற்று. பல்கலைக்கழகங்களில் குறைந்தபட்ச தேவைகளுக்காகவும், பிரிட்டனின் வர்த்தகத் தேவைகளுக்காகவும், கீழைத்தேய ஆய்வுகள் தேவைப்பட்டனவேயன்றி, முன்னர் போல் “உலகை ஆள்வதற்காக” அவை அவசியமாய் இருக்கவில்லை.
கடந்த பத்துப்பதினைந்து வருட காலத்தில், ஆசிய நாடுகள் பற்றிய ஆய்வுகளை விட, ஆபிரிக்க நாடுகள் பற்றிய ஆய்வுகளே பிரிட்டிஸ் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இதற்குக் காரணம், அந்தக் கண்டத்திலேயே இப்பொழுது பிரிட்டனின் அக்கறைகள் (கூடுதலான முதலீடு, ஏற்றுமதி, செல்வாக்கு) உள்ளன. அதாவது ஒரு வரியில் சொல்வதானால், மேலைத்தேய நாடுகளின் அரசியல் - பொருளாதார -ராஜதந்திர தேவைகளுக்கு ஏற்பவே அங்கெல்லாம் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன.இந்த வரலாற்றுப் பின்னணியிலேயே, இரண்டாவது உலகப் போருக்குப் பின், அமெரிக்கா அதிகம் அதிகமாக கீழைத்தேய ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியது. பிரிட்டன், பிரான்ஸ், ஒல்லாந்து முதலிய குடியேற்ற நாடுகள், இரண்டாவதுஉலகப் போருக்குப் பின், பலங்குன்றி மெல்ல மெல்ல சுருங்கிப் பின்வாங்கத் தொடங்கிய வேளையில், அவற்றின் ஸ்தானத்தை அமெரிக்கா பிடித்துக் கொண்டது. இன்று, பிரெஞ்சுக்காரர் ஆண்ட இந்தோ சீனத்திலும், டச்சுக்காரர் ஆண்ட இந்தோனேசியாவிலும், அமெரிக்க ஏகாதிபத்தியமே பெருஞ் செல்வாக்குடன் அந்நாடுகளின் பொருளாதாரத்தை சுரண்டுவதை நோக்குவோர்க்கு, ஐரோப்பிய காலனித்துவத்தை அமெரிக்கக் காலனித்துவம் பொறுபN;பற்றுக்; கொண்டமை புலனாகும். (இதில் சோவியத் யூனியனும ; அண்மைக்காலஙகளில் பங்குப் போட முனைகிறது) அரசியல,; பொருளாதார, ராஜதந்திர, இராணுவத் துறைகளில், கீழைத்தேயங்கள் பலவற்றில் அமெரிக்கா ஊடுருவல் செய்ததையொட்டிப் பற்பல புதிய கலாசார நிறுவனங்கள் தோன்றின: தோற்றுவிக்கப்பட்டன. வெளித்தோற்றத்துக்கு, ஆபத்தற்ற, தூய கலாசார விசயங்களைத் தழுவிய விசயங்களையே ஆராய்கின்ற பல கழகங்கள் எழுந்தன. சிலவற்றை அமெரிக்கரே நேரடியாக நடத்தினர். தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் ஆதரவிலே பல நூதன ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில்,இலங்கையர் மூலம் சில ஸ்தாபனங்கள் நடத்தப்பட்டன. உதாரணமாக, இப்பொழுதுகாலாவதியாகிவிடட் ஸமான் பிரசுராலயம,; ஒரு காலத்தில்; இலங்கையில்; ஏசியாபவுண்டேசன் நிறுவனத்தின் ஆதரவில் இயங்கியது பலரும் அறிந்த செய்தியாகும்.
இவ்வாறு அமெரிக்கச் செல்வாக்கில், பெருந்திட்டத்துடன், ஆசிய - ஐரோப்பிய “கல்வியாளர்” உதவியுடன் ஆரம்பிக்கப் பெற்றதே அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம். தென்கிழக்காசிய நாடுகள் சிலவற்றில் தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றமையாலும், அவர்களுக்கு “சிறுபான்மையினர்” பிரச்சினைகள் இருப்பதனாலும், அவர்கள் மத்தியில் ஊடுருவி வேலை செய்யப் போதிய வாய்ப்பு ஏற்படும் என்றெண்ணி, அமெரிக்க ஆசிய ஆராய்ச்சிக் கழகத்தின் பங்குபற்றலுடன் நெறிப்படுத்தப்பட்டதே அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம். அமெரிக்க ஆதரவு இருந்து வந்ததினால், இம்மன்றத்துக்கு என்றுமே நிதிப் பிரச்சினை இருந்ததில்லை. அடிப்படையில், தென்னிந்தியாவிலே திராவிடக் கழக இயக்கம், தமிழரசுக்கழகம், நாம் தமிழர் இயக்கம் முதலியவற்றின் விளைவாகப் பொதுவாக மக்கள் மத்தியில் காணப்படும் மொழி உணர்ச்சிக்குத் தூபம் போட்டு, அதை அதிகப்படுத்தி, சர்வதேசத் தொடர்புகளை ஏற்படுத்தி, அதன் மூலம் அங்கு பிரிவினைச் சக்திகளுக்கும், பிற்போக்குச் சக்திகளுக்கும் வலுவூட்டுவதே, அமெரிகர்களின் தந்திரோபாயங்களில் ஒன்றாகும். இவற்றைச் சாதிப்பதற்குத் திரையிட்டு மறைக்கக்கூடிய “ஆராய்ச்சி” நிறுவனமாகப் பயன்படுத்தப்பட்டதே, அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மன்றம். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற தேசங்களிலும் மற்றும் பல்வேறு நாடுகளிலும், தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய அத்தனையையும் ஏகாதிபத்தியம் செய்து வந்துள்ளது: வருகிறது. Divide and Rule“பிரித்தாள்” என்பது, பிரித்தானியர் வெகு திறமையாயும், நுட்பமாயும் கையாண்ட ஆட்சி உபாயம். இந்தியாவிலே, இந்து - முஸ்லீம், ஆரியர் - திராவிடர், பிராமணர் - தாழ்த்தப்பட்டோர் என்றும், இலங்கையில் தமிழர் -சிங்களவர், இந்துக்கள் - பௌத்தர், பௌத்தர்கள் - கிறிஸ்தவர்கள், மலைநாட்டுச்சிங்களவர் - சமநிலச் சிங்களவர் என்றெல்லாம், பாகுபாடுகளையும், பேதங்களையும் ஏற்படுத்திய அந்நியர், மக்கள் ஒற்றுமைப்பட்டு, ஜனநாயகத்துக்கும், சோசலிசத்துக்கும் போராடுவதைத் தடுக்க முயன்றனர். இதற்கான பல்வகைப்பட்ட சதிகார ஸ்தாபனங்களில் ஒன்றுதான், அண்மைக்காலத்தில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் என்னும் பெயரில், இந்தியா, இலங்கை, மலேசியா, மொரிசஸ், பிஜித்தீவு முதலிய தேசங்களில் தமிழ் மக்கள் பலரைக் கொண்டு நடாத்தப்படும் கழகம்.இனம், மொழி, மதம் முதலிய உணர்ச்சிக்குரிய விசயங்களில், “ஆராய்ச்சி” என்ற பெயரில் மோசமான, விபரீதமான கருத்துக்களைத் தூவுவதும், தனிநாடு, சுயாட்சி என்ற எண்ணங்களைத் தூண்டுவதும், இம்மன்றத்தின் தலையாய குறிக்கோள்களில் ஒன்றாக இருந்து வந்திருக்கின்றது. இதை இலகுவில் சாதிப்பதற்காக, இம்மன்றத்தின் தலைமைப்பீடம் வெகுசாதுரியமாக, முற்போக்குச் சிந்தனை படைத்தவர்களை அணுகுவதில்லை. அவர்களை முக்கியமான விசயங்களுக்கு அனுமதிப்பதுமில்லை. தென்னகத்தில் இரண்டாவது மாநாடு நடந்த பொழுது, தி.மு.க வின் ஒத்துழைப்புடனும், பக்க பலத்துடனும் அது வழி நடத்தப் பெற்றது. நான்காவது மாநாடு, இந்நாட்டில் தமிழர் கூட்டணிச் சக்திகளின் முழுப் பலத்துடனும் நடத்தப் பெற்றது. இதில் நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டியது, திட்டமிட்டே சோசலிஸ்ட்டுகளையும், முற்போக்காளர்களையும் விலக்கி வைத்து, அவர்களைத் தமிழின விரோதிகள் எனக் காட்ட முயல்வதாகும்.
எனினும் ஏகாதிபத்திய சார்பும், முற்போக்கு எதிர்ப்பு நோக்கமும் கொண்ட மன்றத்தினர், தமது திட்டங்களை நிறைவேற்றுவதற்குப் பக்கத்துணையாக அணிதிரட்டியோரைப் பார்த்தவுடனேயே, அவர்களது சுயரூபம் தெளிவாகி விடுகிறது. வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு உண்டியும் உறையுளும் அளிக்க வேண்டும் என்ற சாக்கில், உள்ள+ர் பண மூட்டைகள், மேனாட்டுத் தாக்கம் தமிழில் எவ்வாறு அமைந்தது என்பதைக் காட்ட வேணடும் எனற் பெயரில் கத்தோலிக்க பாதிரிமாரின் பஙகளிப்பு, இளைஞர்களின் பங்களிப்பு என்ற கோசத்தில் தமிழரசு வாலிபரின் பங்குபற்றல், இவற்றோடு காலங்காலமாக யாழ்ப்பாணத்தில் செல்வாக்குடன் விளங்கிய சில குடும்பங்கள், முகர்களின் முக்கியத்துவம், இவையே யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட மாநாட்டின் வெளிப்படையான அம்சங்கள். ஆனால் இவற்றுக்குப் பின்னால் சர்வதேச சதி ஒன்றே இடம் பெற்றது என்பதில் ஐயமில்லை.கிழக்கு பாகிஸ்தான் (இன்று பங்களாதேஸ்), இந்தோனேசியா போன்ற நாடுகளில் இளைஞர்களைத் தூண்டிவிட்டுப் பயன்படுத்தியது போல, யாழ்ப்பாணத்திலும், மொழியுணர்ச்சியில் வளர்க்கப்பட்ட இளைஞர்களைப் பகடைகளாக உருட்டி, அசம்பாவிதங்களை ஏற்படுத்தி, பிரிவினைச் சக்திகளுக்கு மேலும் வலுவளிப்பதே தலைமைப்பீடத்தின் பிரதான குறிக்கோளாக இருந்திருக்கிறது. இத்தகைய பிற்போக்கு அரசியல் திட்டங்கள் அடிப்படையான குறிக்கோளாய் இருந்தபடியாலேயே, மாநாட்டிற்கு உண்மையான தமிழறிஞர்களை அழைக்கவோ அல்லது பரந்துபட்ட முறையில் பிரதிநிதிகளை வரவழைக்கவோ, தலைமைப்பீடம் கவனஞ் செலுத்தவில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் முற்போக்காளர்களையும், தேசியவாதிகளையும் ஒதுக்கித் தள்ளி வைத்தது. இந்தியாவிலிருந்து ஜனார்த்தனம் போன்ற ‘கழிவுகளை’யே திட்டமிட்டு இறக்குமதி செய்தது. இன்றைய நிலையில், இந்த நாட்டைப்பற்றி உலகின் பல பாகங்களில் அவதூறு செய்யவும், குழப்பமான கருத்துக்களைப் பரப்பவும், இம்மாநாட்டைத் தலைமைப்பீடம் பயன்படுத்தியது என்பதிலும் ஐயமில்லை. உண்மையாக தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இந்நாட்டு தமிழ் எழுத்தாளர் எவரையும் மாநாடு தக்கபடி சேர்த்துக்; கொள்ளாமை, அதன் பக்கச்சார்பையும் அந்தரங்கத்தையும் காட்டுகிறது எனலாம். மாநாட்டையொட்டி நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில், ஆறுமுகநாவலர் பெற்ற இடத்தை எண்ணினால் எவருக்குத்தான் ஆத்திரம் உண்டாகாது?
ஆனால் ஒன்று மட்டும் கூறலாம். மாநாட்டை நடத்தியவர்கள் மக்களை மதித்துப் போற்றவில்லை. அவர்களைப் பயன்படுத்தவே விரும்பினர். கருத்தரங்குகளில் பண்புக்குப்பதில் பண நிலையே கணிக்கப்பட்டது. இதன் காரணமாக சாதாரண மக்கள் இதில் உணர்வுபூர்வமாகக் கலந்து கொள்ளவில்லை. மாநாட்டின் போலித்தன்மையும், விதேசியத்தன்மையும், உயர்மட்டத்தன்மையும், அடிப்படையான ஆங்கில மோகமும், அரசியல் அட்டகாசங்களும், எப்படியோ முதலிலிருந்தே சாதாரண மக்களுக்குத் தெரிந்துவிட்டது. மக்களை எந்தக் கெட்டிக்காரனும் ஏமாற்ற முடியாது. எனவேதான் இறுதிக்கட்டத்தில், மாநாட்டைப் பயன்படுத்தி, தனிநாடு கோரும் குரல்கள் எழுந்ததும், மக்கள் பொத்தென்று கைவிட்டனர்.
யாழ்பாணத்தில் 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைப்பெற்ற அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடு தொடர்பாக கைலாசபதி(வாமனன் என்ற புனைப்பெயரில்) கிளிநொச்சி மக்கள் கலாசார பேரவையினால் வெளியிடப்பட்ட களனி இதழில்(1974 சித்திரை- ஆனி, 37 ஆவது ஆண்டுமலர்) எழுதிய சிறப்புக்கட்டுரை.

No comments:
Post a Comment