Monday, October 31, 2011
Sunday, October 30, 2011
ஏழாம் அறிவு -தமிழர் பெருமிதத்தின் பின்னுள்ள அபாயங்கள்
-சுகுணா திவாகர் -
கி.பி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த பௌத்த மதத்தைச் சார்ந்த பல்லவ இளவரசன் போதிதர்மன் சீனா சென்று அரிய வகை மருத்துவத்தையும் நோக்குவர்மம் எனப்படும் மெஸ்மரிசத்தையும் தற்காப்புக்கலைகளையும் கற்றுத்தருகிறார். அதே விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு சீனா, இந்தியாவின் மீது உயிரியல் போர் தொடுக்க லாங்லீ என்பவரை அனுப்புகிறது. மரபணு அறிவியல் மாணவி சுபா, போதிதர்மரின் வாரிசான சர்க்கஸ் கலைஞர் அரவிந்தனின் மரபணு நினைவாற்றலை உசுப்பிவிட்டு சீன அபாயத்தை முறியடிக்கிறார். கதை குறித்தும் காட்சியமைப்புகள், தொழில்நுட்பங்கள் குறித்தும் விரிவான விமர்சனங்கள் வரக்கூடும். அதை நான் எழுதப்போவதில்லை.
படம் நெடுகிலும் தமிழரின் வீரம்,அறிவியல், கலைகள் குறித்த பெருமிதம் முன்வைத்து வியந்தோதப்படுகிறது.சீன தேசத்தில் கொண்டாடப்படும் மகத்தான ஞானியான போதிதர்மனை (இது போதிதர்மனா, போதிதம்மனா என்கிற அய்யம் எனக்குண்டு) தமிழகம் எப்படி மறந்துபோனது என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.ஞாயமான கேள்விதான். தமிழ்ப்பரப்பில் இலக்கியம்,

Labels:
விமர்சனம்
Thursday, October 27, 2011
கடாஃபியைக் கொன்றவர்களும் லிபியாவை வென்றவர்களும்
-அ.மார்க்ஸ்-
சாக்கடைக் குழாய்க்குள்ளிருந்த பெருச்சாளி ஒன்றை வெளியே இழுத்துப் போட்டு அடித்துக் கொன்றதைப் போல் கர்னல் கடாஃபியை கலகப் படையினர் கொன்று போட்டுள்ளனர். அமெரிக்கத் தலைமையில் இயங்கும் ‘நேடோ’ படைகளின் உதவியோடு இது நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு செத்த நாயைப்போல அவர் உடல் இழுத்துச் செல்லப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டதையும், சதாம் உசேன் அல்லது சீசெஸ்கு வீழ்த்தப்பட்டபோது மக்கள் "மகிழ்ச்சி அடைந்த" காட்சிகள் எவ்வாறு காட்டப்பட்டனவோ அதேபோல இன்று கடாஃபியின் கொலையை மக்கள் கொண்டாடடியதையும் ஊடகங்களில் பார்த்தோம்.
அராபிய வசந்தம் எனச் சொல்லப்படும்
Labels:
அரசியல்
Saturday, October 22, 2011
ச.தமிழ்ச்செல்வனுடன் நேர்காணல்
‘‘எந்த ஆன்மிகவாதியாலும் தொட முடியாத எல்லையில் நிற்பவன் கம்யூனிஸ்ட்'' -ச.தமிழ்ச்செல்வன்-
நேர்கண்டவர் : பேராச்சி கண்ணன்
ச.தமிழ்ச்செல்வன் |
ச. தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக ஆறு ஆண்டுகள் பதவி வகித்தவர். தற்போது மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இருளும் ஒளியும், அரசியல் எனக்கு பிடிக்கும் உட்பட முப்பது நூல்களை வெளியிட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக இருக்கும் இவர், தமிழகம் முழுவதும் தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருப்பவர். தமுஎகச மற்றும் இடதுசாரிகளின் பங்களிப்புகள், முற்போக்கு எழுத்து உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பேராச்சி கண்ணனிடம் தெளிவாகப் பதிலளிக்கிறார்
தமிழின் நம்பிக்கை அளிக்கும் சிறுகதை எழுத்தாளராக அறிமுகமானவர் நீங்கள். பிறகு முற்றிலும் களச்செயல்பாட்டாளராக மாறிவிட்டீர்கள். ஏன் இந்தத் தேர்வு?
எல்லா மனிதர்களுக்குமே புறச்சூழல் தான் அகத்தூண்டுதலைத் தீர்மானிக் கிறது. என்னுடைய வாழ்க்கையில் புறச்சூழல் தூண்டுதல்தான் எழுதக் காரணமானது. எழுத்து முக்கியம்தான். ஆனால் அதைவிட களப்பணி முக்கியமானதாக இருக்கிறது.
Labels:
அரசியல்,
ச.தமிழ்ச்செல்வன்,
நேர்காணல்
Friday, October 21, 2011
இந்திய மண்ணில் சிங்கள நூலுக்கு விருது
-மேமன்கவி-
இந்திய மண்ணில் சிங்கள மொழி நூல் ஒன்றுக்கு நான் அறிந்த மட்டில் முதல் முதலாக விருதும்பரிசும் வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதுக்கும் பரிசுக்கும்; உரியவர் நம் நாட்டு சகோதர சிங்கள மொழிப் படைப்பாளியும் தமிழ் சிங்கள் மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டு வருபவருமான திரு உபாலி லீலாரட்ன ஆவார்.இவர் சிங்களத்தில் மொழிபெயர்த்த தமிழகப் படைப்பாளியான கு.சின்னப்ப பாரதியின் ‘சுரங்கம்’ நாவலின் சிங்கள மொழிபெயர்ப்பு நாலுக்கு தமிழகத்தில் மொழிபெயர்ப்புத் துறையை ஊக்குவிக்கமுகமாக செயற்படும் நல்லி திசை எட்டும் எனும் அமைப்பினால் அப்பரிசு வழங்கப்பட்டது.
நல்லி குப்புசாமி செட்டியா அவர்களின் அனுசரணையுடன் செயற்படும் அவ்வமைப்பின் 2011 ஆம் ஆண்டுக்கான மொழியாக்க விருதுகள் வழங்கும் விழா கடந்த செப்டம்பர் 17ந்திகதி திருச்சியில் நடைபெற்ற வேளை
Thursday, October 20, 2011
பக்தி பேரியக்கத்தை வெறும் மத நிகழ்வாக மட்டும் பார்க்க முடியாது! .
-கலாநிதி .ந.இரவீந்திரன்-
இலங்கையின் வடபுலத்தில் யாழ்ப்பாண நகரிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பண்டத்தெருப்புக்கு உட்பட்ட காலையடி எனும் கிராமத்தில் 1955இல் பிறந்தவர். நடேசன் இரவீந்திரன். காலையடி அமெரிக்கன்மிசன் தமிமழ்க்கலவன் பாடசாலை, சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லுரி ஆகியவற்றில் கல்வி பெற்று, பேராதனைப் பல்கலைக் கழகத்தில் வெளிவாரி மாணவராய் கலைப் பட்டதாரியாகவும், பின்னர் முதுகலை மாணிப் பட்டத்தையும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் “திருக்குறளின் கல்விச் சிந்தனை’’ எனும் பொருளில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
மார்க்சியத்தைத் தனது தத்துவத் தளமாக்கிக் கொண்டார். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (இப்போது “புதிய ஜனநாயகக் கட்சி’’) இவரது அரசியல் பார்வையை விரிவுபடுத்தியது. மலையகத்தில் 1977இல் ஆசிரியராகச் செயற்படத் தொடங்கியதிலிருந்து மேலும் தனது சமூகவியல் பார்வையை வளர்த்துக் கொண்டவர். மலையகத்தின் ஸ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரியில் 1992இல் விரிவுரையாளராக இணைந்து, 1995இல் வவுனியாவிற்கு இடமாற்றம் பெற்று இன்றுவரை வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை வந்திருந்தபோது சந்தித்த உரையாடலிலிருந்து...
சந்திப்பு: முத்தையா வெள்ளையன்

ந.ரவீந்திரன்,
நேர்காணல்
Wednesday, October 19, 2011
உலகத்தமிழாராய்ச்சி மகாநாடு பின்னணியும் பின்நோக்கும்
-க.கைலாசபதி-
கீழைத்தேசங்களைப் பற்றியும், அதன் வரலாறு, மொழி, இலக்கியம், சமயங்கள், கலைகள் முதலியன பற்றியும், மேல்நாட்டு அறிஞர்கள் பலர் சிறப்பாக ஆராய்ந்துள்ளனர் என்னும் கருத்து பலரிடையே ஆழமாக வேரூன்றியுள்ளது. இக்கருத்து முற்றுமுழுதாக உண்மையல்லவெனினும், சிற்சில துறைகளில், ‘விஞ்ஞானபூர்வமான’ ஆய்வுகளை மேல்நாட்டு கல்விமான்கள் சிலர் நடத்தியுள்ளனர் என்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே. இன்று, சோசலிச நாடுகள் சிலவற்றிலும், ஆசிய - ஆபிரிக்க கலை இலக்கியங்கள் குறித்து சில பல கனமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆயினும் ஆரம்பத்திலிருந்தே ஒரு விசயம் தெளிவாயிருந்து வந்துள்ளது. மேலைத்தேசங்கள் “உலகையாண்ட” காலத்திலேயே, அந்நாடுகளில் கீழைத்தேய ஆராய்ச்சிகள் தொடங்கப் பெற்றன. விசித்திரமான விசயங்களைக் கற்க விரும்பும் ஒரு சிலர் எல்லாக் காலத்திலும், எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். மேல்நாடுகளிலும் அத்தகைய “பைத்தியங்கள்” சில, சமஸ்கிருதம், தமிழ், இந்தி, யப்பானிய மொழி போன்ற அயல் மொழிகளையும், இலக்கிய இலக்கணங்களையும், கற்பதில் பெருங்காதல் கொண்டிருந்தனர். ஆனால் கீழைத்தேயங்கள் சம்பந்தமான ஆய்வுகளில் ஈடுபட்டோரிற் பெரும்பாலானோர், ஏதோ ஒரு வகையில் மேல்நாட்டு அரசாங்கங்களுடன் நெருங்கிய தொடர்புடையோராயும் அவற்றின் ஆதரவை வேணடி நின்றோராயும் இருந்தனர்.

Saturday, October 15, 2011
இலங்கையில் இறுதி யுத்தத்தில் நடந்த சம்பவங்களிலும் நான் பொறுமை இழந்துள்ளேன். பான்.கீ மூன்
(காணொளி இணைக்கப்பட்டுள்ளது )
நார்வேயில் கடந்த திங்கட்கிழமை (10.10.2011) துவங்கிய "உலகில் அனைவருக்கும் 2030ஆம் ஆண்டுக்கிடையில் மின்சாரம்" என்ற பொருளில் நடைபெற்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வந்தபோது பன்னாட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இலங்கை தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கள்:
"இலங்கை அரசின் நடவடிக்கையிலும் இலங்கையில் இறுதி யுத்தத்தில் நடந்த சம்பவங்களிலும் நான் பொறுமை இழந்துள்ளேன்." என்று அய்க்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்தார்.
Labels:
காணொளி
Tuesday, October 11, 2011
இலங்கையின் பிரதான பிரச்சினையை இனங்காணத்தவறிய ஜே .வி.பி ஒரு மாக்சியக் கட்சியாக மிளிர முடியாது!
-எஸ் . அருளானந்தம் -
தேசிய மட்டத்தில் மூன்றாவது பலம் பொருந்திய கட்சியாக ஜே.வி.பி. கருதப்பட்டது. இன்று அது பிளவின் விளிம்பில் வந்து நிற்கிறது.
கடந்த நான்கு வருடங்களுக்குள் இடம்பெறும் இரண்டாவது பாரிய பிளவு என்று இதனைக் கொள்ள முடியும். 2008ஆம் ஆண்டு இன்றைய அமைச்சர் விமல் வீரவன்ச கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவருடன் பத்து எம்.பீ.க்களும் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டனர். தற்போது ஜே.வி.பி. இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டு நிற்கிறது. கட்சித் தலைவர் சோமவன்ச அமரசிங்கவுக்கு எதிரான அதிருப்தியாளர் குழுவுக்கு ஆதரவு அதிகமாக இருப்பது போலத் தெரிகிறது.
கடந்த இரண்டு வருடங்களாகப் புகைந்து கொண்டிருந்த உட்கட்சிப் பூசல் தற்போது வெடித்திருக்கிறது. 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஜே.வி.பி. ஆதரவு வழங்கியமையும், ஜனநாயகத் தேசிய முன்னணியெனக் கூட்டணி அமைத்து ஜே.வி.பி. பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டமையுமே பிரச்சினையின் ஆரம்பமெனக் கூறப்படுகின்றது. எந்தக் கட்சிகளுடனும் கூட்டணி அமைக்கக் கூடாதென்பது அதிருப்தியாளர் குழுவின் அடிநாதமாக இருக்கிறது. இதனால்தானோ என்னவோ இனிமேல் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைப்பதில்லையென்ற முடிவுக்கு சோமவன்ச அமரசிங்க தலைமையிலான ஜே.வி.பி. பிரிவு முடிவுக்கு வந்திருக்கிறது.

நூல் அறிமுகம்
விமல் குழந்தைவேலின் - கசகறனம் - நாவல் உரை அரங்கு!
"""""போராட்டத்தின் பெயரால் தமது வாழ்வைத் தொலைத்த அக்கறைப்பற்று பெரும் பிரேதேச ஏழை தமிழ் முஸ்லிம் மக்களின் துயரத்தை அம்மக்களின் மொழியிலேயே நம்முன் காட்சிப்படுத்துகிறது இந் நாவல்.
தாயக மண்ணில் சிதவுற்று நிற்கின்ற தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான வாழ்வுறவை மீளக் கட்டியெழுப்பும் விமல் குழந்தைவேலின் "கசகறணம்" நாவல்,கலாசார பண்பாட்டுத் தளத்தில் பெரும் பங்காற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
இந்த உன்னத பணி வெற்றிபெற நாமனைவரும் இணைந்து முடியுமான பங்களிப்பினை வழங்குவோம். தகவலை ஏனைய நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்."""""
- மு. நித்தியானந்தன்
- ந.சபேசன்
- ஹரி ராசலட்சுமி
- பூ.சீவகன்
- எஸ்.வேலு
- ச.வாசுதேவன்
- வசந்தி சுப்பிரமணியம்
- எம்.பௌசர்
- விமல் குழந்தைவேல்
இசைக்கோர்வை - சாலமன் மற்றும் நண்பர்கள்
இடம்: Quaker Meeting House
1A, Jewel Road, Walthamstow, London, E17 4QU
காலம்- 22 அக்டோபர் மாலை 5மணி
(இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.)
அழைப்பு- தமிழ் மொழிச் சமூகங்களின் செயட்பாட்டகம்
தொடர்பு - 074 02 868713 - 075 33 737896
திரு நங்கையின் வலி
திரு நங்கையின் வலி
-வித்யா -
சொந்த நாட்டில் வாழ வழியின்றி, அடைக்கலம் கொடுக்கும் நாட்டிற்கு சென்று வாழ்பவர்களைத் தான் அகதிகள் என்று சொல்வார்கள். உண்மையில் அவர்களுக்கும் தலையாய அகதிகள் போல வாழ்பவர்கள் திருநங்கைகளே. "வாக்குரிமை, குடும்ப அட்டை, பெயர்மாற்றம்" என்று எதுவாக இருந்தாலும் போராட்டம் தான் அவர்களுக்குப் பெற்றுத் தருகிறது. இது போதாதென்று சொந்த குடும்பத்தாலும், உறவுகளாலும், நண்பர்களாலும் ஒதுக்கி வைக்கப்படுபவர்கள். ரயில் பயணங்களிலோ, காய்கறி சந்தையிலோ யாசகம் கேட்கும் திருநங்கையை கவனிக்காதது போல பலமுறை சென்றிருக்கிறேன். அவர்களுடன் என்னை தொடர்பு படுத்திப் பேசிவிடுவார்களோ என்ற பயம். அவர்களின் யாசக நிலைமைக்கான காரணத்தை என்றுமே யோசித்ததில்லை. பயம் விட்டுப்போய் பல வருடங்கள் ஆகிறது. இப்போதெல்லாம் எனக்கு எதிரில் யார் இருந்தாலும் தயங்காமல் பேசப் பழகிவிட்டேன். "quality of life is nothing but a quality of communication" என்ற மேற்கோளை நினைத்துக் கொள்வேன்.
Labels:
ஆளுமைகள்
Saturday, October 08, 2011
Le Havre (துறைமுகம் ) ஒன்றுபட்டால் வெல்லமுடியும்!
தேவா - ஜெர்மனி
தற்போது ஜெர்மன் சினிமாத்திரைகளில், Le Havre (துறைமுகம்); படம் ஓடிக்கொண்டிருக்கிறது. பின்லாந்து, பிரான்ச்,ஜெர்மன் நாடுகளின் கூட்டுத்தயாரிப்பு இது. இச்சினிமாப்படம் ஒரு சிறந்த- சினிமாக் கலைஞரும் பின்லாந்துக்காரருமான Aki Kaurismäki யின் இயக்கத்தில் உருவாயிருக்கிறது. 1990இருந்தே இவரின் பல குறும்படங்களும், பெரும் திரைப்படங்களும் சர்வதேசதிசைப்பட விழாக்களில் பரிசுபெற்றிருக்கின்றன. பரிசுக்கு தேர்வானவையும்கூட. Cannes ல் நடைபெற்ற 64வது சர்வதேசவ திரைப்படவிழாவிலே இப்படத்துக்கு FIBPRESCI பரிசு கிடைத்தது. மேலும் இவரது மற்றொரு திரைப்படமான The man without a past, ஐரோப்பாவிலும், ஆர்ஐன்டீனாவிலும் நடைபெற்ற திரைப்படவிழாக்களிலே சிறந்த இயக்குனர், கதை, சிறந்த கமராவுக்காக 2002ல் பல பரிசுகள் பெற்றது. சில படைப்புக்கள் Oscar க்கும் தெரிவானவைகள்.
பொதுவாகவே இவரின் படைப்புக்களிலே கலைத்தன்மையோடு மனிதநேயம், நேர்மை, சோகங்கள் கலந்திருக்கும். பாத்திரங்கள் போராட்ட குணமுடையவர்களாய்; இருப்பார்கள். அவர்களது வெளிப்பாடு திரையில் கவித்துவமாய் வெளிப்பட்டிருக்கும். இதயத்தை நெருடிச்செல்லும் தன்மை கொண்டவை.மென்மையான மாந்தர்கள் அங்கு படைக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் தங்கள் கொள்கைபிடிப்பில் தீவிரமாய் இருப்பார்கள். அகி கருசிமாகி படம் பார்ப்போரை மிகவும் நெருங்கிவிடுவார்.
Labels:
தேவா
Subscribe to:
Posts (Atom)