Wednesday, August 04, 2010


ஆதவன் தீட்சணாவுடனான இலக்கிய சந்திப்பு

-கே.ஏ. நவரட்ணம்-

அட்டன் நகரில் 24.7.2010 அன்று மாலை 4.00 மணிக்கு ஓர் அற்பதமான இலக்கியச்சந்திப்பு இடம்பெற்றது. தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்தபுதுவிசை|| ஆசிரியர் ஆதவன் தீட்சண்யாவுடன் ஒரு சந்திப்பு எனும்மகுடத்தில் இது இடம் பெற்றிருந்தது. ஏற்பாடு முச்சந்தி இலக்கிய வட்டம், அதன்ஆலோசகர்களில் ஒருவரான ந. இரவீந்திரன் தலைமை தாங்கினார். மலையகத்தின் மூத்த படைப்பாளிகள், கல்வியியலாளர்கள், சமூகச்செயற்பாட்டாளர்கள் முதல் இளம் தலைமுறை ஆர்வலர்கள் வரை பலரும்கலந்து கொண்டு ஆரோக்கியமான கருத்தாடற் களமாக ஆக்கியதால்சந்திப்பினை அர்;த்தமுள்ளதாக்கியிருந்தனர்.

~~ முன்னதாக சு. உலகேஸ்பரா வரவேற்புரை ஆற்றுகையில் முச்சந்தி இலக்கியவட்டம் (மு.கி.வ) முதல் நிகழ்வாக இந்தச் சந்திப்பினை ஏற்படுத்தியபோதிலும்இந்த அமைப்பு புதிய ஒன்றல்ல என்பதை எடுத்துரைத்தார். கார்க்கி இலக்கியவட்டம் தனது பெயரை மு.இ.வ. என மாற்றியிருந்தமையை அறியத்தந்தார்.

தலைமையுரையில்
இரவீந்திரன், ஒருதசாப்தங்களின் முன்வரை அதற்கு முன்புஇருந்த எழுச்சியின் பேறாக கார்க்கி பெரிதும் ஆதர்ச சக்தியாக இருக்க முடிந்தது. இன்றைய தலைமுறையோ செல்லும்வழி இருட்டு என்ற திகைப்புடன்முச்சந்தியில் நின்று மார்க்கம் எதுவென அறியாது மயங்கும் நிலையில்அல்லாடுகிறது. அந்தவகையில் பெயர்மாற்றம் காலப்பொருத்தமானது. நாம்அனைத்தும் அறிந்தவர்கள், வழிப்படுத்த வந்திருக்கிறோம் என எவரும்சொல்லமுடியாத நெருக்கடி நிலை இன்று உள்ளது. முச்சந்தியில் கூடும்மக்களின் இருப்புக்கு நிகராக முன்முடிவுகள் இல்லாமல் இங்கே விவாதிக்கவேண்டியவர்களாக கூடியுள்ளோம். மனந்திறந்த கருத்தாடல்கள் வாயிலாகஎமக்கான மார்க்கத்தை கண்டறிந்து செயற்பாட்டில் நாம் முன்னேற வேண்டும். மக்கள் விடுதலைக்கு வழிகாட்டிய இடதுசாரி சக்திகள் ஒன்றில் வலதுசாரிசந்தர்ப்பவாதிகளாக அல்லது அதிதீவிர இடதுசாரி வாத வாய்ச்சவடால்பேர்வழிகளாக ஆகிவிட்டார்கள். இன்று அதிதீவிர இடதுசாரிக் கோசங்களால்தம்மைப் பெரிய புரட்சியாளர்களாக வேடம் போடுபவர்கள் இளம்தலைமுறையை நச்சுப்படுத்துபவர்களாயுள்ளனர்.

முப்பது
வருட யுத்தத்தினால் நாடு முழுமையிலுள்ள மக்கள் நல நாட்ட சக்திகள்அழிக்கப்பட்டதோடு இன்றைய வெற்றிடத்துக்கு தொடர்புள்ளது. அதேவேளைஇந்த நெருக்கடி எமக்கு மட்டும் உரியதல்ல. இயல்பான வாழ்வில் முன்னேறும்இந்தியாவிலும் அரசியல் நெருக்குவாரங்கள் இடதுசாரிகளுக்கு பெரும்இடர்ககளை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் இன்றைய புதிய சூழலுக்குஅமைவான மார்க்சியப் பிரயோகத்துக்கு ஏற்ற விவாதங்கள்அவசியப்படுகின்றன. அதனை ஆரோக்கியமான திசைவழியில் முன்னெடுக்கும்சஞ்சிகையாக புதுவிசை உள்ளது. அதன் ஆசிரியர் ஆதவன் தீட்சண்யா சிறந்தசெயற்பாட்டாளராகவும் உள்ளார். அவரும் அந்த அமைப்பும் இன்று தமிழகத்தில்காத்திரமான சமூக அசைவியக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்தியஅனுபவங்கள் சார்ந்து அவர் முன் வைக்கும் விடயங்கள் எமக்குபயனுள்ளவையாக அமைய முடியும். எனக்குறிப்பிட்டு இரவீந்திரன்தலைமையுரையை நிறைவு செய்தார்.

அறிமுக உரையை நிகழ்த்திய திரு. வ. செல்வராஜா மலையக மக்கள்தொடர்பாகவும் அதன் பின்னனியில் மலையக தேசியம் தொடர்பாகவும் தமதுஅறிமுக உரையை நிகழ்த்தினார். இன்று மலையக மக்களின் சமூக இருப்புதொடர்பான வாத பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இம்மக்களை மலையக மக்கள் என்று அழைப்பதா? அல்லது இந்திய வம்சாவழிதமிழர் என்று அழைப்பதா? என்பதாகவே அவ்வாதங்கள் அமைந்திருக்கின்றன. திரு செல்வராஜ மலையக மக்கள் என்று அழைப்பதை அழுத்தமாக வழியுறுத்தியஅவர் தமது கருத்தை பின்வருமாறு முன்வைத்தார்:

~~மலையக மக்களின் அரசியல் சமூக பொருளாதார வாழ்வியல் அம்சங்களைஒட்டி பார்க்கின்ற போது அவர்களை மலையக தமிழர் என்றழைபபதேபொருத்தமானது. மலையக தமிழர் என்று அழைக்கின்ற போது அதன் ஆத்மாவாகஅமைவது பரந்துபட்ட உழகை;கும் மக்களாவார். ஒரு புறமான இன காலனித்துவஆதிக்கமும், சமூக ஒடுக்கு முறைகளும் மறுபுறமான சமூக உருவாக்கமும்இணைந்து இம்மக்களை தனித்துவமான தேசிய இனம் என்ற உணர்வைஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் இந்திய வம்சாவழி தமிழர் என்ற பதம்மலையக சமூக அமைப்பின் பண்பாட்டு பாராம்பரியங்களை அதன்; பரந்துப்பட்டஉழகை;கும் மக்களின் நலனிலிருந்து அன்னியப்படுத்தி பார்ப்பதாகவேஅமைந்திருக்கின்றது. யாவற்றுக்கும் மேலாக இந்திய முதலாளிகளின் நலனைகாக்கின்ற அடிப்படையில் தான் இந்திய தமிழர் என்ற பதம் பாவிக்கப்பட்டுவருகின்றது. இன்று மலையகத்தில் தோன்றியுள்ள புதிய மத்தியத்தர வர்க்கம்இப்போக்கை அங்கிகரிப்பதாவும் படுகின்றது. இப்போக்கானது மலையகத்தின்ஒட்டு மொத்தமான சமூக இருப்பையும் சிதைப்பதாக அமையும்” என்றார்.

ஆதவன்
தீட்சண்யா தனது உரையில் சென்ற வருடம் ஒக்டோபர் மாதத்தில்முதல் தடவையாக இலங்கைக்கு வருகை தந்தபோது அட்டன் வந்தமையுடன்தொடர்புபடுத்தி இரண்டாவது பயனங்குறித்து பேசினார், இந்தியாவிலும், உலகெங்குமே இடதுசாரி இயக்கங்கள் பல நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளன. இது தொடர்பில் தென்னமெரிக்க அனுபவங்களை வெளிப்படுத்தும் நூல் ஒன்றுதமிழில் பாரதி புத்தகாலயத்தால் வழங்கப்பட்டுள்ளமைகாலப்பொருத்தமுடையது.

தனது
உரையை ஆதவன், மார்த்தா ஹர்னேக்கர் எனும் மார்க்சியரின்இடதுசாரிகளும் புதிய உலகமும்|| எனும் அந்த நூலை அடிப்படையாகமுன்வைத்து ஆற்றியிருந்தார். உலகெங்கிலும் இடதுசாரி இயக்கங்கள் புதியஉலகச் செல்நெறிக்கு அமைவாக மார்க்சியத்தை பிரயோகிக்க இயலாத நிலைக்கஅமைவாக மார்க்சியத்தை பிரயோகிக்க இயலாத நிலைக்கு உள்ளாகியுள்ளன. சோவியத் பானியிலான கட்சியமைப்பு இன்று கேள்விக் குறியாகியுள்ளது. அன்றைய எதேச்சாதிகார ஆட்சியில் ருஷ்யாவில் கட்டியெழுப்பப்ட்ட மாதிரியைஜனநாயக நாடுகளின் கம்யூனிஸ் கட்சிகளைக் கட்டியெழுப்பிட முடியாது. சோவியத்பாணி தோல்வியடைந்ததாலேயே மார்க்சியம் தவறென்றுசொல்லிவிடவும் முடியாது. தோசை சுட்ட ஒருவர் கருக விட்டதாலேயேசமையல் குறிப்பு நூல் தவறென்று சொல்லிவிட முடியாது. உண்மையில்இன்றைய சூழலுக்கு பிரயோகிக்க ஏற்றவகையில் மார்க்சிடம் கற்றுக்கொள்ளஇயலும்.

~~ இவ்விடத்தில் இடதுசாரிகளாகிய நாம் எதனை செய்தோம் அல்லது எதனைசெய்ய வேண்டும் என்பது பற்றி சிந்தித்தல் அவசியமாகும். புழையபெருமைகளை பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. பெருங்காய டப்பாஎவ்வளவு காலத்திற்கு மனக்கும். இன்று உலகமயம் என்பது பாரதூரமானவிளைவுகளை நம் மத்தியில் ஏற்படத்தியுள்ளது. அது தாராளமயத்தின் மூலமாகதேசிய எல்லையை தாண்டி ஒரு ஒற்றைச் சந்தையை உருவாக்குவதன்மூலமாக அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் மூன்றாம் உலக நாடுகளைகொள்ளையடித்து வருகின்றனர். இங்கு மனிதர்கள் கூட விலைப் போகும்சரக்குகளாக மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த
சூழலில் தான் நாம் பணியாற்ற வேண்டியுள்ளது. லத்தின் அமெரிக்கநாடுகளில் மக்கள் மத்தியில் இடதுசாரி மனோபாவம் கொண்ட ஆட்சியைஉருவாக்கியுள்ளனர். இங்கு இந்நாடுகள் எத்தகைய முயற்சிகளைமேற்கொண்டன, எத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளத் தவறின என்பதுபற்றிய தெளிவான பார்வை அவசியமானதாகும்.
மேலும்
இன்று இயங்க கூடிய இடதுசாரிகளை கட்சி சார்ந்த இடதுசாரிகள், சமூகம் சார்ந்த இடதுசாரிகள் என இரண்டுவிதமாக வகைப்படுத்தலாம். மக்களின்விடுதலைக்காக ஒரு ஸ்தாபனமாக இணைந்து சமூகமாறறப் போராட்டங்களைமுன்னெடுக்கின்ற செயற்பாட்டாளராக செயற்படுபவர்களை கட்சிசார்ந்தஇடதுசாரிகள் என கூறலாம். இதற்கு மாறாக கட்சியில் அங்கம் வகிக்காதஅதேசமயம் அதிகார வர்க்கத்திற்கு எதிரான போர்க்குணத்தையும்செயற்பாடுகளையும் கொண்டுள்ளவர்களை சமூகம் சார்ந்த இடதுசாரிகள் எனக்குறிப்பிடலாம். இன்றைய சூழலில் புதிய தாராள மயமாக்கத்திற்கு எதிரானபோராட்டத்தில் இவ்விரு சக்திகளும் ஐக்கியப்படுவது காலத்தின் தேவையாகும். எனவும் ஆதவன் தீட்சண்யா தமது உரையில் குறிப்பிட்டார்.

இவ்வகையான
சூழலில் இடதுசாரிகள் தமது புதிய சூழலுக்கு ஏற்றவகையில்தம்மை புனரமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது தொடர்பான ஆரோக்கியமானவிவாதங்கள் நடைப்பெற்றன. இக்கலந்துரையாடலில் திருவாளர்கள். ஓ. ஏ. இராமையா, லெனின் மதிவானம், ஜெ. சற்குருநாதன், கே. மெய்யநாதன், அ.ந. வரதராஜா, கு. இராஜசேகர், முதலானோர் கலந்துக் கொண்டனர். நன்றியுரையைதிரு. ஜே. பிரான்சிஸ் ஹலன் வழங்கினார்.

No comments: