Saturday, August 28, 2010

சவுதியில் இலங்கைப் பெண் -கொத்தடிமை

23 ஆணிகளும் 1,8 மில்லியன் பெண்களும்
-சிங்களத்தில்- வேறோனிக்க- (தமிழில் என்.சரவணன் )

இந்த வாரம் இலங்கை மக்களை மட்டுமல்ல உலகில் பலரையும் உலுக்கிய செய்தியாக இலங்கையை சேர்ந்த ஆரியவதியின் கதை அமைந்திருக்கிறது.

இயேசுநாதர் சிலுவையில் ஆணி அறையப்பட்டு கொல்லப்பட்டதை நாம் அறிந்திருக்கிறோம். உயிருடன் உள்ள பெண்ணை அதுவும் மனிதவுலகம் நாகரிகமடைந்தாக கூறப்படும் இந்த காலத்தில் ஒரு பெண் சுத்தியால் ஆணிகள் அடிக்கப்பட்டு சித்திரவதைசெய்யப்பட்டுள்ளார்.

உடலில் எட்டு ஆணிகள் உள்ளே ஏற்றப்பட்ட நிலையில் சவுதியில் இருந்து திரும்பியிருக்கிறார் ஆரியவதி என்கிற பெண்.

தனது வாழ்நாளுக்குள் தனது 3 பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ சொந்தமாக ஒரு சிறு குடிசையை அமைத்துக்கொள்வதற்காக பிழைப்பு தேடி பணிப்பெண் வேலைக்காக சவுதி சென்றவர் ஆரியவதி (வயது 49).

இவர் இலங்கையின் தெற்குப் பகுதியில் உடதெனிய எனும் இடத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு தரகர் ஒருவர் இலவசமாக அனுப்புகிறார் என்று கேள்வியுற்று அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு பணியகத்தின் 15 நாள் பயிற்சியை மேற்கொண்டார். அதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி சவுதி புறப்பட்டார்.

சவுதியில் ரியாத் நகரத்தில் இறங்கியதும் அவரை இருவர் காரொன்றில் அன்பாக வேலைக்காக அழைத்துச் சென்றனர். அந்த வீட்டின் உரிமையாளர் அவரது மனைவி மற்றும் 5 பிள்ளைகளுக்கும் பணிவிடைகள் செய்வதும் வீட்டை சுத்தமாக பராமரிப்பதும் அவருக்கு வழங்கப்பட்ட பிரதான வேலைகள். இதனைத் தவிர உடுதுணி துவைத்தல், அவற்றை ஸ்திரிசெய்து மடித்து வைத்தல், வாகனங்களை கழுவுதல் போன்ற வேலைகளும் அவருக்கு ஒதுக்கப்பட்டன.

ஒரே வாரத்தில் அந்த வீட்டினர் தமது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினர். சிறு சிறு தற்செயல் பிழைகளுக்காக அவரை கட்டையைக் கொண்டு தாக்கியுள்ளனர்.

தற்செயலாக ஒரு கிளாஸ்’ கைதவறி விழுந்து உடைந்த சம்பவத்திலிருந்தே இந்த வன்முறைகள் தொடங்கின.

உரிமையாளரின் மனைவி (எஜமானி அம்மா) ஆரியவதியின் கைகளை இறுக்கிப் பிடித்திருக்க கணவர் சூடாக்கிய ஆணிகளை உடலில் சுத்தியலால் அடித்திருக்கிறார். அதே நாள் இரண்டரை இஞ்ச் உயர ஆணிகள் ஐந்து இவ்வாறு ஆரியவதியின் உடலில் ஏற்றப்பட்டுள்ளன.

அன்றைய தினம் ஆரியவதியின் ஓவென்ற அவலக்குரல் எவர் காதுகளிலும் விழவுமில்லை. அந்த வீட்டில் ஆரியவதியின் அன்புப் பணிவிடைகளை அதுவரை பெற்றுக்கொண்ட அந்த வீட்டின் பிள்ளைகள் கூட காப்பாற்ற முன்வரவில்லை.

தொடர்ந்து கத்தினால் கழுத்தை வெட்டி எறிவோம் என்று மிரட்டப்பட்டுள்ளார். தனது அன்புக்குரிய பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக ஆணிகள் ஏற்றப்பட்ட உடலுடன் தொடர்ந்தும் அங்கு பணிபுரிந்துள்ளார்.

ஆரியவதி தாய்மண்ணுக்கு திரும்பியதும் அவர் கண்களில் நீர்பெருக பகிர்ந்துகொண்ட விபரங்கள் அனைவரது நெஞ்சையும் உலுக்கச் செய்யும் கதைகள்.

“ஒரு தடவை கோப்பை நழுவி விழுந்தது. இன்று தொலைந்தேன்.. என்று பதறிக்கெணடிருக்கையில் வீட்டு எஜமானி அம்மா “உன் கண்கள் என்ன குருடா.. இரு... குருடாக்கி விடுகிறேன் என்று கூறிக்கொண்டு ஆணியை எடுத்து கண்களில் சொருகுவதற்காக கிட்ட கொண்டு வந்தார். என் கண்களை இறுக மூடிக்கொண்டு இருந்தேன். எவ்வளவோ கதறியும் அந்த ஆணிகளை எனது புருவ இமைகளின் மேல் பகுதியில் இறுக்கிச் சொருகினார்.... “ என்று இன்னமும் நீக்கப்படாத நிலையில் உள்ள அந்த ஆணி சொருகப்பட்ட இடத்தைக் காண்பித்தார் ஆரியவதி..

அவரது கால் பாதங்களுக்குள் இரு ஆணிகளை ஏற்றியுள்ளனர். இவ்வாறு சிறுசிறு பிழைகளுக்கெல்லாம் உடலின் ஏதாவது ஒருபகுதியில் ஆணியை செருகினார்கள். வெளியில் இழுக்கக்கூடிய ஆணிகளை இழுத்துவிட்டேன். அகற்ற கடினமானவற்றை அப்படியே விட்டுவிட்டேன். காய்ச்சல் ஏற்ப்பட்டபோது என்னை சிகிச்சையளிக்க அனுமதிக்கவில்லை. இலங்கைக்கு திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று மன்றாடியபோது, அவர்கள் கிடைத்ததைக் கொண்டு என்னைத் தாக்கினர்.

இறுதியில் எனது உடலில் ஆணிகள் உள்ள பகுதிகளில் இருந்து புண் முற்றி சீழ் வடிய ஆரம்பித்தது. இருக்கின்ற உடு துணிகளைக் கொண்டு சுத்தப்படுத்தி கட்டு போட்டுக்கொண்டே இருந்தேன். கடந்த மாதம் அவர்கள் என்னைப் பார்த்து அசிங்கப்பட்டனர். ஆணி உள்ள இடங்களில் வேதனை அதிகமாகிக் கொண்டிருந்தது. மீண்டும் சித்திரவதை செய்வார்கள் என்று பயந்து வேலைகளை செய்து வந்தேன்..." எனறார்.

இதற்கிடையில் தொடர்பு இல்லாத நிலையில் ஆரியவதியின் குடும்பத்தினர் பீதியடைந்த நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆரியவதியுடன் தொலைபேசி தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆரியவதியால் சுதந்திரமாக விபரமாக நிலைமைகளை எடுத்துரைக்க முடியவில்லை. “...எனக்கு இங்கு பிரச்சினை என்னை உடனடியாக இலங்கை திரும்ப ஏற்பாடு செய்யுங்கள்..” எனக்கூறி வைத்துவிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஆரியவதியின் கணவர் மீண்டும் இலங்கை வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து அவர் திருப்பி அழைக்கப்பட்டார். இது குறித்து ஆரியவதி தெரிவிக்கையில்

"..கடந்த 20ஆம் திகதி வீட்டு எஜமானி அம்மா ஒரு பையைக் கொண்டுவந்து தந்து ஒரு காரில் என்னை ஏற்றிக்கொண்டுவந்து விமான நிலையத்தில் ஏஜென்சியிடம் ஒப்படைத்தார். அந்த ஏஜென்சி, நாடு திரும்புவதற்கு டிக்கெட் செலவுக்காக 3 மாத சம்பளத்தை எடுத்துக்கொண்டு எஞ்சிய இரு மாத சம்பளத்தை என் கைகளில் வைத்தார். ஏன் நடப்பதற்கு கஸ்டப்படுகிறாய் என்று அவர் என்னிடம் கேடடார். காலில் வருத்தமுள்ளது என்று மட்டும் கூறினேன். இருந்த பண்த்தில் எனது கணவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நான் நாடு திரும்புவதை அறிவித்தேன். 21ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் என்னை அழைத்துச் செல்ல எனது கணவர் வந்திருந்தார்." என்றார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர் நடந்து வந்த விதத்தை வைத்து ஒரு துன்புறுத்தப்பட்ட நிலையில் திரும்புகிற ஒரு பெண் என்பதை யாரும் புரிந்து கொள்வர். அது குறித்து விமான நிலைய அதிகாரிகள் பலர் ஆரியவதியிடம் விசாரித்த போதும், தனக்கு காலில் நோ உள்ளதாக மட்டுமே கூறியுள்ளார். தனத பாதங்களில் ஆணிகள் ஏற்றப்பட்டுள்ளன என்கிற உண்மையை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளும் மனநிலையில் அவர் இருக்கவில்லை. ஒரு அதிகாரி 700 ரூபாவை வைத்தியச் செலவுக்காக பெற்றுக்கொடுத்துள்ளார்.

நான் நாடு திரும்பிய மகழ்ச்சி எனக்கு போதும். உடலில் உள்ள வலிகூட தெரியவில்லை. உண்மையை எங்காவது சொன்னால் என்னை பிடித்து வைத்துக்கொள்வார்களோ என்ற பயத்தில் நான் எங்கும் உண்மை கூறவில்லை..” என்று அப்பாவித்தனமாக பின்னர் அவர் ஊடகங்களுக்கு கூறினார். விமான நிலையங்களின் உலோகங்களைக் கண்டுபிடிக்கும் கருவிகள் எதுவுமே இவரது உடலின் ஆணிகளைக் கண்டு பிடிக்காதது பலருக்கும் வியப்பைத் தந்திருக்கிறது.

வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் கூட அவர் கணவருக்கோ பிள்ளைகளுக்கோ தான் பட்ட வேதனைகளை அவர் கூறவில்லை. சிறு ஊசியொன்று ஏறியிருப்பதால் தனக்கு கால் வலிப்பதாகக் கூறியியிருக்கிறார். அவரது 25 மகன் சமில் பிரியதர்சன தனது தாயை அழைத்துக்கொண்டு கும்புறுபிட்டி நகர வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதுதான் முதற்தடவையாக வைத்தியரிடம் உண்மைகளைக் கூறியிருக்கிறார்.
வைத்தியர் நிமல் ஜயசிங்க உடனடியாகவே அவருக்கு ஏற்பு ஊசி ஏற்றியிருக்கிறார். பின்னர் அவரது உடலை முழுவதும் எக்ஸ்ரே எடுத்து மேலதிக அறிக்கைகளை சிரேஸ்ட வைத்தியர் ஒருவர் சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கை அங்குள்ள எல்லோரையும் திடுக்கிடச் செய்துள்ளது. மொத்தம் 23 ஆணிகள் உடல் முழுவதும் ஆங்காங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது போன்றதொரு சம்பவம் இதற்கு முதல் இடம்பெற்றதில்லை என ஆஸ்பத்திரிக்கு விஜயம் செய்த வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரி தெரிவித்தார். இது பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஆரியவதிக்கு நியாயம் கிடைக்கச் செய்ய அனைத்தையும் மேறகொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது குடிசையை சரிசெய்து குடும்பத்துடன் ஒன்றாக சந்தோசமாக வாழவென புறப்பட்டுச் சென்று 5 மாதங்களின் பின் தனது கிராமத்துக்குத் திரும்பியபோது ஆரியவதிக்கு எஞ்சியிருந்தது ஐந்து மாதங்களுக்கு முன்னர் இருந்த குடிசையும் கடும் மழையினால் உடைந்து உருக்குலைந்து இருந்தது. ஆணிகள் ஏற்றப்பட்ட போது கிடைத்த வலியை விட அது வேதனைமிக்கது என அவர் கண்ணீர்மல்க பலர் முன்னிலையில் தேம்பினார்.

மேலதிக புகைப்படங்கள் (Slide show)


27அன்று நடந்த ஒப்பரேசனில் 5 ஆணிகளை நீக்க முடியவில்லை.
ஆரியவதியின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய அந்த 23 ஆணிகளில் முக்கிய 18 ஆணிகளை இன்று (ஓகஸ்ட் 27) நீக்கப்பட்டுள்ளது. ஏழு சிரேஸ்ட வைத்தியர்கள் உள்ளிட்ட 15 பேரைக் கொண்ட குழு இரண்டரை மணித்தியாலங்களாக செய்த ஓப்பரேசனில் 13 இடங்களை வெட்டி ஆணிகளை நீக்கியுள்ளனர். எஞ்சிய 5இல் குண்டு ஊசிகளும் உண்டு என்றும் அவற்றை நீக்குவது ஆபத்து மிகுந்ததென்றும். அவற்றை நீக்கும் போது நரம்புகளுக்கு பாதிப்பை கொண்டுவரக்கூடும் என்றும். அதை விட அவற்றை நீக்காமல் விடுவது பாதுகாப்பானது எனது வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

நீக்கப்பட்ட ஆணிகள்
கண் இமை நெற்றிக்கருகில் - 1 கம்பி
வலது கையில் - 5 ஆணிகள், 1 கம்பி
இடது கையில் - 3 ஆணிகள், 2 கம்பிகள்
வலது காலில் - 4 ஆணிகள்
இடது காலில் - 2 ஆணிகள்

ஆகக் கூடிய நீளமுள்ள ஆணி 6.6 சென்றிமீற்றர் கொண்டது என வைத்தியர்கள் அறிவித்தனர்.

குறிப்பு
  • மத்தியகிழக்கு நாடுகளுக்கு வேலைக்காக சென்றவர்களின் சராசரி 20 சடலங்கள் மாதாந்தம் இலங்கை கொண்டுவரப்படுகின்றன. இயற்கை மரணங்கள், ஏனைய விபத்துக்களினால் மரணித்தவர்கள் அதில் அடக்கம்.
  • வெளிநாடுகளில் நாடுகளில் 1.8 மில்லியன் இலங்கையர்கள் பணிபுரிகின்றனர்.
  • இவர்களில் 70 வீதத்தினர் பெண்களாவர்.
  • சவுதியில் மட்டும் 5.5 மில்லியன் வெளிநாட்டவர்கள் பணிபுரிகின்றனர்.
  • இதில் 4 லட்சம் பேர் இலங்கையர்கள்.
  • இலங்கையின் சனத்தொகையில் 10 வீதத்தினர் இவ்வாறு வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
  • மாதாந்தம் 18 ஆயிரம் பெண்கள் மத்தியகிழக்கிற்கு வேலைக்காக பயணிக்கின்றனர்.
  • இலங்கையின் மொத்த தேசிய வருமானத்தை ஈட்டித் தருவதில் வெளிநாட்டு பணிப்பெண்கள் முக்கிய இடத்தில் உள்ளனர்.
நன்றி :பெண்ணியம்

Saturday, August 21, 2010

சந்திப்பு


நடிகவினோதன்
ரி .யோகராஜாவுடன் ஓர் சந்திப்பு.
-இனிக்காக சந்தித்தவர்: மு .சி .கந்தசாமி-


(ஈழத்தின் வடமராட்சிப் பகுதியில் வதிரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் நடிகவினோதன் அவர்கள். இவர் ஈழத்தின் தகமை பெற்ற நடிகர்களில் ஒருவர், அத்தோடு புலம்பெயர்ந்தபோதும் டென்மார்க்கில் vestern vinden எனும் டெனிஸ் நாடக மன்றில் ஊதியம் பெற்று நடிகராக வழும் தகமைக்குரியவராகவும் வாழ்ந்து வருகிறார்.)


வினா: வணக்கம்! நீங்கள் இந்த நாடகத்துறைக்கு எப்போது? எப்டி வந்தீர்கள்?
நடிகர்: நான் எனது பள்ளிப் பருவத்திலேயே இத்துறைக்கு வந்துவிட்டேன். எனது எட்டாவது வயதில் எனது பாடும் திறனைக் கண்ட எனது தமிழ் ஆசிரியர்களான அல்வாயூரைச் சேர்ந்த ஜீ.ஜீ.மகாலிங்கம் ஆசிரியரும், ஆ.கதிரவேல் ஆசிரியரும,; கோவலன் கண்ணகி, அரிச்சந்திர மயாணகாண்டம், சத்தியவான் சாவித்திரி போன்ற ஸ்பெசல் நாடகங்களிலும் காத்தவராயன் நாடகத்திலும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவைத்தார்கள்.

வினா: நீங்கள் ஓர் கலைஞன் என்பதும் உங்களுக்குள் அதன் ஆளுமை உள்ளதாகவும் எப்போது உணர்ந்தீர்கள்?
நடிகர்: எனது இருபதாவது வயதில் |தூயஉள்ளம|; என்னும் சமூக நாடகத்தை நானே எழுதி நெறியாள்கை செய்து தேவரயாளி இளைஞர் நாடக மன்றத்தினர் மூலம் மேடையேற்றியதினைக் குறிப்பிடலாம். ஏனெனில் பல போட்டி நாடகங்களில் அந்நாடகம் தங்கப்பதக்கங்களை வென்று குவித்தது. அது தவிர சிறந்த நடிகருக்குரிய பரிசினையும் எனக்குப் பெற்றுத் தந்தது. அதுவுமன்றி 1982ல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னை வானொலிக் கலைஞனாகத் தேர்ந்தெடுத்தது. அவ்வப்போது நான் எழுதிய சில நாடகங்களையும் ஒலிபரப்புச் செய்தது. 1985ல் நடிகமணி வைரமுத்து அவர்கள் நடிகவினோதன் என்ற பட்டத்தினை வழங்கி கவுரவித்தார். பின் புலம்பெயர்ந்து வந்தபோது மேல்காற்று (ஏநளவநசn எiனெநn) என்னும் டெனிஸ் நிறுவனம் என்னை நடிகனாக அங்கீகரித்து வேலைக்கமர்த்தியபோதும் எனக்குள் இருக்கும் ஆளுமையை நான் புரிந்து கொண்டேன்.

வினா: மேலைத் தேசத்தில் இப்சன், செகால,; பிராண்டோ போன்றவர்கள் யதார்த்த நாடகங்கள் நிறையவே செய்திருக்கிறார்கள். இவை பற்றி…..
நடிகர்;: இது பற்றிக் கூறுவதாயின் தமிழில் பெரிதான வளர்ச்சி இல்லை என்பதே என் அபிப்பிராயம், ஆனால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கே.எம்.வாசர் இருந்த காலத்தில் நாடகத் தமிழை விடுத்து பேச்சுவழக்கிலுள்ள தமிழை நாடக உரைநடைகளில் சேர்த்துக் கொண்டார். மற்றையது தமிழின் வாழ்க்கைத் தரம் தாழ்ந்திருக்கும்போது மேலான ஓர் வளர்ச்சி உடனே ஏற்பட்டுவிடாது.

வினா: டெனிஸ் நாடகக் குழுவில் வாழும் கலைஞாராக இருக்கிறீர்கள் இதனிடையே ஏதாவது வேறுபாட்டினைக் கண்டுள்ளீர்களா?
நடிகர்;: முதலில் ஸ்கிறீப் இல்லாமல் நடிப்பதை இங்குதான் கற்றுக் கொண்டேன். பர்வையாளர்கள் எங்களில் ஒருவராக இருப்பதையும் இங்கேதான் கற்றுக் கொண்டேன். கதை சொல்லல், கதை கேட்டல் என்பதைவிடுத்து கதையை நகர்த்தல் என்பது இங்கு கூட்டாக நடைபெறுகிறது. கலைஞரும் சுவைஞரும் பங்காளராக இருக்கிறார்கள். மீடியா வளர்ந்தும் பொதுமைப்பட்டிருப்பதையும் புரிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது.

வினா: நீங்கள் வடமராட்சியினைச் சேர்ந்தவர் அந்த வகையில் நெல்லியடி அம்பலத்தாடிகளுக்கும் உங்களுக்குமான உறவு எப்படி இருந்தது?
நடிகர்;: எனது துரதிஸ்டம் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றும் பாய்க்கியம் எனக்கு கிட்டவில்லை. மற்றையது அது ஒரு இடதுசாரிகளின் கலைமன்றாகவே இருந்தது. ஈழத்து நாடக வரலாற்றில் அவர்களை விடுத்து கலை இலக்கியம் சார்ந்து பேசமுடியாது.

வினா: இறுதியாக ஓர் கேள்வி தற்போது எவ்வகையான நாடகங்களை எவ்வகையான உத்திகளை உங்கள் நாடகங்களில் கையாளுகிறீர்கள்?
தமிழ் நாடக அரங்குகளில் ஓரங்க நாடகங்களைத்தான் தற்போது இயக்கியும் நடித்தும் வருகிறேன்.

(இனி இதழ் இரண்டிலிருந்து )

கொம்புமுறி விளையாட்டு

தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களில் சிறப்பான இடத்தினை பெறும் கொம்புமுறி விளையாட்டு
-சந்துரு -
தமிழர் எமது கலை, கலாச்சாரங்கள் மறைந்துவரும் நிலையில். நான் நீண்ட நாட்களாக அறிய ஆவலாக இருந்த விடயம் ஒன்றுக்கு முற்று முழுதான விளக்கம் கிடைத்திருக்கின்றது. அது வேறு ஒன்றுமல்ல. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கொம்புமுறி விளையாட்டு பற்றிய பல்வேறு விடயங்களை நேற்று அறிந்து கொள்ள முடிந்தது.

எனது இகிராமம்கூட கொம்புமுறி விளையாட்டுக்கு பிரசித்தி பெற்ற ஒரு கிராமமாகும். க்கிராமத்திலே கொம்புமுறி விளையாட்டு இடம் பெற்ற இடம் கொம்புச் சந்தி என்று இப்பொழுதும் அழைக்கப்படுகிறது ஆனால் இங்கு இருக்கும் அநேகமானவர்களுக்கு கொம்புமுறி விளையாட்டு என்றாலே என்ன என்று தெரியாது.


கலைஞர் அறிமுகத்திலே கலந்து கொண்டிருக்கும் கலாபூசனம் ஆறுமுகம் அரசரெத்தினம் அவர்களை நேற்று சந்திக்கக் கிடைத்தது. அவர் கொம்புமுறி விளையாட்டு தொடர்பாக பூரணமான விளக்கத்தினைத் தந்ததோடு. அவரால் கொம்புமுறி விளையாட்டு தொடர்பாக வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்தினையும் தந்தார். அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


கண்ணகை அம்மனுடன் தொடர்பு பட்டதே கொம்புமுறி விளையாட்டு. மாநாய்கரின் வளர்ப்பு மகள். மாசாத்துவரின் மருமகள். கோவலனுடைய மனைவி. இவர்கள் மூவரும் செட்டிகள். இதனால்தான் கண்ணகியும் செட்டிச்சி அம்மை. மாதவிக்குப் பொன்தோற்றகோவலருடன் மதுரைக்குச் சென்ற கண்ணகை ஆயர் இடைச் சேரியில் தங்கியிருக்க. கோவலன் கண்ணகியின் இடது காற்சிலம்பை விற்க மதுரை நகர் வீதியிலே விலை கூறினான்.



பாண்டிமாதேவியின் சிலம்பை பறி கொடுத்த தட்டான். சிலம்புத் திருடன் கோவலன் என்று பாண்டி மன்னனிடம் குற்றம் சாட்ட விதி வலியால் தீர விசாரித்தறியாத மன்னன் கோவலனை மழுவால் வெட்டுவிக்கும்படி கட்டளை இட்டான்



கோவலன் கொலையுண்டான். இதை கண்ணகை அறிந்தாள். கடும் சினம் கொண்டாள். "காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என் கணவன்? என்று செங்கதிர்ச் செல்வனிடம் கேட்டாள் . உன் கணவனை கள்வன் என்ற இவ்வூரை தீ உண்ணும் என்றான் செங்கதிர்ச் செல்வன். தலைவிரி கோலம். ஒரு கையில் சிலம்பும் மறு கையில் வேப்பம் குழையோடும். மன்னனிடம் சென்று வாதாடி வழக்குரைத்து.சிலம்புடைத்துவழக்கு வென்றாள்.



மன்னனும் மனைவியும் உயிர் நீத்தனர். இடது முலை திருகி நகர் எரித்தால். ஆயர் இடைச் சேரிக்கு வந்தாள். ஆய்ச்சியர் வெண்ணை தயிர் என்பவற்றை அவள் மார்பிலே அப்பினர். சீற்றத்துடன் வந்து கொண்டிருந்த கண்ணகியின் முன்னால் கோவலன் கட்சி, கண்ணகை கட்சி எனப் பிரிந்து கொம்புமுறித்து விளையாடி கண்ணகை கட்சிக்கு வெற்றி கொடுத்து இளைஞர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். சினம் தணிந்த கண்ணகை சிரித்து மகிழ்ந்தாள். தாயே குளிந்தளிர்வாய் என்று அவர்கள் வேண்ட அம்மனும் குளிர்ந்தாள். இதுதான் கொம்புமுறி விளையாட்டு வந்த வரலாறு.


"கொம்பு எனப்படுவது வளைந்த மரத்தடியாகும். வெட்சி, கருவீரம், கரயாக்கு என்ற மரக்கிளைகளே பயன் பட்டன. வட சேரிக்கொம்பு 90 பாகை வளைவிலும் தென்சேரிககொம்பு அதை விடக்கூடிய வளைவிலும் இருக்கவேண்டும் என்பது விதி. இரண்டே முக்கால் விரல்க்கடையில் சரிகொம்பு இருக்க வேண்டும். இரண்டு விரக்கடை குச்சித்தோடு இருக்கவேண்டும். கொம்புகளின் அளவுப் பிரமாணம். ஏனைய கட்சியினால் பரிசீலிக்கப்படும். கொம்புகளுக்கு மூன்றரை முழம் (ஐந்தரை அடி) நீழமான பில்லிக்கம்புகள் வைத்து வெளுக்கயிற்றினால் வரிந்து பனிச்சை மரத்தின் கைகளின் பசை பூசி காய வைத்து எடுப்பர். கொம்புக்கு "அரிப்பு" எனப்படும் கயிறு கட்டப்படும்.

தூண்டில் போடுவோருக்கு தூண்டில் அரிப்புப் பற்றியும் நன்கு தெரியும். அரிப்பு என்பது ஒரு ஆள் நீளமான சுமார் ஆறடி நீளக் கயிறாகும். இது வெள்ளை ஆத்தி நாரினால் திரிக்கப்பட்ட வெளுக் கயிறாகவோ, மான் தோலினால் திரிக்கப்பட்ட கயிறாகவோ இருக்கும். இந்தக் கயிற்றுக்கு ஆமணக்கு என்னை பூசுவது வழக்கம். தென்சேரி வாரக் கொம்பு அரிப்பிலே உள்ள கொழு தவனையுடாக பெரிய வடத்தினைப்பூகுத்தி பேரு மரமொன்றின் அடியில் பிணைத்து விடுவர். வட சேரிக் கொம்பின் கொளுத் தவணையுடன் ஒரு உலக்கை போடப்படும். வட சேரிக்கொம்பின் கொலு தவணையில் நீழமான வடமும் பூட்டப்படும்.

தென்சேரி வாரத்தினர் தமது கொம்பினை தயாராகப் பிடித்துக்கொள்ள வடசேரி வாரத்தினர் தமது கொம்பினைப் பூட்டுவதத்கு தயாராக நிற்பர். நீழமான வடத்திலே வடைசேரித் தென்சேரிப் பொது மக்கள் இழுப்பதட்குத் தயாராக நிற்பர். கொம்பு பூட்டும் போது தத்தமது கொம்புகளை பாது காக்கும் வகையில் பில்லி மிரட்டும் இழுபறி இடம் பெரும். சரியாகப் பூட்டப்பட்டதும்.பொது மக்களின் இழுவையினால் கொம்பு ஒன்று முறிந்து விடும். முறியாத கொம்புக்குரியவர்கள் வெற்றி ஆரவாரம் செய்வர்.இரு சேரிக்கும் பொதுவாக உள்ள ஈடகத்தை அலங்கரித்து அதில் தமது கொம்பினை வைத்து கொம்புமுறிப்பாடல்களை பாடுவார்.



வசந்தன் கூத்துக்கள், பொய்க்கால் குதிரை ஆட்டம், வினோத உடை அலங்காரம் என்பன இரவு முழுவதும் இடம் பெறும். கொம்பு முறிப்பில் கொம்பின் வலிமையோடு பல மந்திர, தந்திர வித்தாண்மைகளும் பயன்படுத்தப்பட்டன.

தோற்ற கட்சியினர் மறுநாள் போட்டிக்கு கொம்பு ஆயத்தம் செய்வர். போட்டி பலநாள் தொடரும். சுள்ளிக்கொம்பு 01, கொம்புத்தட்டுக் கொம்பு 03, கூடாரக் கொம்பு 05, ஏடகக் கொம்பு 07, தண்ணீர்க் கொம்பு 01 முறித்து விளையாடுவதற்கு இரண்டு பிரிவுகள் தேவை. கோவலன் கட்சியை வடசேரி என்றனர். கண்ணகை கட்சியை தென்சேரி என்றனர்.

கொம்புமுறி விளையாட்டின்போது பல சுவாரசியமான சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் இன்னும் பல தகவல்களையும் கலாபூசனம் ஆறுமுகம் அரசரெத்தினம் அவர்களிடம் இருந்து அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

Wednesday, August 18, 2010

போலந்து போகலாம் வாங்க! - பயணக் கதை
-கலையரசன் -
போலந்து நாட்டின் தலைநகரம் வார்சொவிற்கு, நான் சென்று வந்தது சில நாட்கள் ஆயினும், எழுதுவதற்கு நிறைய இருக்கின்றன. இது ஒரு பயணக்கட்டுரை மட்டுமல்ல, என்னைப் போன்ற வெளிநாட்டுக் குடியேறிகளின் சமூகப் பின்னணியையும் ஆராய்கின்றது. ஐரோப்பாவில் போலந்து என்ற நாடு குறித்து தமிழ் உலகில் குறைவாகவே அறியப்பட்டுள்ளது. நீண்ட காலமாக சோஷலிச நாடுகளின் கூட்டமைப்பில் இருந்ததது. பாடசாலை பாடங்களில் ஓரிரு தடவைகள் போலந்து பற்றிய குறிப்புகள் வருகின்றன. வரலாற்றுப் பாடத்தில் வரும் வார்சோ ஒப்பந்த நாடுகள், விஞ்ஞானப் பாடத்தில் வரும் எக்ஸ்-கதிர்களைக் கண்டுபிடித்த மேரி கியூரி, இதற்கப்பால் போலந்து பற்றிய தகவல்கள் கிடைப்பது அரிது. எண்பதுகளில் தெரிவான பாப்பரசர் ஜான் பால் கத்தோலிக்கர்கள் மத்தியில் போலந்து குறித்த ஆர்வத்தை தூண்டவில்லை. அதற்கு காரணம் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளைப் போல, போலந்து பற்றிய செய்திகளும் மேற்குலகில் பட்டு எதிரொலித்தே எமக்கு கிடைக்கின்றன. வெளிநாடுகளில் குடியேற விரும்புபவர்களும் போலந்தை தவிர்த்தார்கள். அதற்குக் காரணம் அங்கே வேலை வாய்ப்பு இல்லை என்பது தான். ஒரு சில வருடங்களுக்கு முன்னர் வரை அந்தக் கூற்றில் நியாயம் இருந்தது. வேலையில்லாப் பிரச்சினையால் போலந்து உழைப்பாளிகள் மேற்குலகிற்கு படையெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

ஐரோப்பியக் கண்டத்தில் அதிக நிலப்பரப்பைக் கொண்டுள்ள பெரிய நாடுகளில் போலந்தும் ஒன்று. அதன் இன்றைய எல்லைகள் இரண்டாம் உலகப்போரின் பின்னர் நிர்ணயிக்கப்பட்டன. போலந்தின் கிழக்குப் பகுதியில் ஒரு துண்டு அன்றைய சோவியத் யூனியன் வசமாகியது. இன்று அது பெலாரஸ் குடியரசின் பகுதி. அந்த நாட்டில் பெலாரஸ் (வெள்ளை ரஷ்யா) என்ற மக்கள் பேசும் மொழி, போலிஷ் மொழி போன்றிருக்கும். போலந்தில் பேசப்படும் போல்ஸ்கி மொழி, ரஷ்ய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. போலந்துக் காரருக்கு ரஷ்யருடன் உள்ள ஜென்மப் பகை காரணமாக இரண்டாம் மொழியாக ரஷ்ய மொழி கற்பதை வெறுக்கிறார்கள். போலந்து சோஷலிச முகாமில் இருந்த காலங்களிலும் பெரும்பான்மை மக்கள் ரஷ்ய மொழி கற்கவில்லை. சரித்திர ரீதியாக போலந்து கத்தோலிக்க நாடு என்பதால், நீண்ட காலமாக மேற்கைரோப்பாவுடன் தொடர்புளை பேணி வந்தனர். சோஷலிச ஆட்சியிலும் கத்தோலிக்க தேவாலயத்தின் அதிகாரங்கள் ஓரளவு மட்டுப்படுத்தப் பட்டாலும், செல்வாக்கு குறையாமல் இருந்தது.

சோஷலிச போலந்தை வீழ்த்துவதற்கு பாப்பரசர் ஜோன் போலும், கத்தோலிக்க மத நிறுவனமும் உதவினார்கள். "கம்யூனிச சர்வாதிகாரத்தில் இருந்து விடுதலையடைந்த" போலந்து மீண்டும் கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கத்தின் கீழ் வருமென்று கணக்குப் போட்டார்கள். அது தப்புக்கணக்கு என்று பின்னர் தெளிவானது. முதலாளித்துவம் நுகர்பொருள் கலாச்சாரம் என்ற புதிய மதத்திற்குள் மக்களை தள்ளி விட்டது. எங்கெங்கு காணிலும் பாரிய விளம்பரத் தட்டிகளின் ஆதிக்கம். வார்சோ நகரின் மத்திய பகுதியில் உயரமான கட்டிடங்கள் எதையும் விட்டு வைக்கவில்லை. ஜன்னல்களை திறக்கத் தடையாக இருக்குமென்பதால் மேற்கைரோப்பிய நகரங்களில் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள். வங்கிகள், சூப்பர் மார்க்கட்கள் என்று பெரிய வணிகக் கழகங்கள் யாவும் மேற்கு ஐரோப்பிய நிறுவனங்களுடையவை. எங்காவது ஒன்றிரண்டு போலந்து நிறுவனங்கள் காணப்படுகின்றன.

ஒரு காலத்தில் சோஷலிச முகாம் நாடாக இருந்த போலந்து ஒரு சில வருடங்களிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை பெற்று விட்டது. கம்யூனிச காலகட்டத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகள் யாவரும் அதனை நோக்கமாக கொண்டே செயற்பட்டனர். மேற்குலக சார்பு மக்களும் அதையே எதிர்பார்த்தார்கள். பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது, போலந்தின் பொருளாதாரம் வளர்முக நிலையடைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்ததன் பலன்களை அறுவடை செய்வதாகவே தெரிந்தது. நடுத்தர வர்க்க படித்த இளைஞர்கள் மேற்கு-ஐரோப்பிய தரத்திற்கு நிகராக சம்பளம் பெறுகின்றனர். கோடை காலத்தில் தென் ஐரோப்பிய கடற்கரைகளுக்கு உல்லாசப் பயணம் செய்கின்றனர். வசதிபடைத்த குடும்பங்கள் அதிகரித்து வருவதால், அவர்களுக்கு என்று சகல வசதிகளும் கொண்ட குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இதற்கென பழைய அடுக்குமாடிக் கட்டிடங்கள் இடிக்கப்படுகின்றன.

வார்சோ நகரம் விரைவாக மாறி வருகின்றது. அது சராசரி ஐரோப்பிய நகரம் போல தோற்றமளிக்கின்றது. புதிதாக எழும்பும் கட்டிடங்கள், செப்பனிடப்படும் வீதிகள், இவற்றில் கட்டுமானப் பணிகள் செய்வதற்கு தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். போலந்து தொழிலாளர்கள், ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்வதால், உள்நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகின்றது. அதனால் வெளிநாட்டுத் தொழிலாளரை தருவிக்க வேண்டிய நிலை. போலந்தில் ஒரு தகமையற்ற தொழிலாளியின் சராசரி சம்பளம் 300 - 500 யூரோக்கள். வார்சோ நகரில் ஒரு சிறிய வீடு வாடகைக்கு எடுப்பதென்றாலும் அவ்வளவு பணம் தேவை! இதனால் இரண்டுக்கு மேற்பட்டோர் வாடகைப் பணத்தை பங்கு போட்டுக் கொள்கின்றனர். போலந்து நாட்டினரைப் பொறுத்த வரை பலர் சொந்த வீடுகளில் வாழ்வதால், அவர்களுக்கு அந்த செலவில்லை.

போலந்து மக்கள் சொந்த வீட்டில் வாழ்வது, கம்யூனிச அரசு கொடுத்த சீதனம். கம்யூனிஸ்ட்கள் அனைத்து பிரஜைகளுக்கும் கட்டிக் கொடுத்த (பரம்பரையாக கிடைத்த வீடுகள் வேறு) வீடுகளை இப்போதும் சொந்தம் கொண்டாடுகிறார்கள். போலிஷ் மக்கள் சொந்த வீடிருப்பதால் வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட முடிகின்றது. போலந்தில் வாழ்க்கைச் செலவு ஐரோப்பியத் தரத்திற்கு உயர்ந்துள்ளது. சூப்பர் மார்க்கட்களில் பிராண்ட் பொருட்கள் யாவும் மேற்கில் விற்கும் அதே விலைக்கு விற்கப்படுகின்றன. ஆங்காங்கே உள்ளூர் தயாரிப்புகள் சீண்டுவாரின்றி கிடக்கின்றன. குறைவாக சம்பாதிக்கும் அடித்தட்டு மக்களுக்கென்றே சில சூப்பர் மார்கட்கள் இருக்கின்றன. போலந்து முதலாளிகளால் நிறுவப்பட்ட சூப்பர் மார்க்கட்களில், முழுக்க முழுக்க உள்ளூர் தயாரிப்புகள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன.

வார்சோ நகரில் பிரமாண்டமான ஸ்டேடியம் ஒன்று கட்டப்படுகின்றது. அடுத்த ஐரோப்பிய கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டிகளை நடத்துவதற்காக அதனைத் தயார் செய்கின்றனர். இதற்கென சுற்றுவட்டாரத்தில் இருந்த கடைகள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டன. ஸ்டேடியம் கட்டப்படும் இடத்திற்கருகில் ஒரு சந்தை இயங்கி வந்தது. அங்கே கடை விரித்தவர்கள் பெரும்பாலும், வெளிநாட்டு குடியேறிகள். ஒரு சில போலிஷ்காரரை தவிர, வியட்நாமிய, நைஜீரிய, இலங்கைத்தமிழ் சிறு வியாபாரிகள் தமது சிறு தொகை வருமானத்தை அங்கே தான் தேடிக் கொள்கின்றனர். பல வியாபாரிகள் நியாயமாக வாங்கிய சரக்குகளை விற்றாலும், போலிப் பாவனைப் பொருட்களை விற்பவர்களுக்கும் அது தான் புகலிடம்.

குறிப்பாக சட்டவிரோதமாக தங்கியிருப்போர் போலியான பிராண்ட் பொருட்களை விற்பனை செய்கின்றனர். வார்சோ காவல்துறைக்கு இந்த விடயம் தெரியும் என்ற போதிலும் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அசம்பாவிதம் நிலைமையை தலைகீழாக மாற்றியது. போலிகளை சோதனையிட போலிஸ் வருவதும், பொருட்களைத் தூக்கிக் கொண்டு வியாபாரிகள் ஓடுவதும் அவ்வப்போது நடந்து வந்தது. ஒரு நாள் அப்படியான நடவடிக்கையின் போது, நைஜீரிய வியாபாரி போலிசை எதிர்த்து நின்று வாதாடியுள்ளார். திடீரென ஒரு போலீஸ்காரனின் துப்பாக்கி முழங்கியதில், ஸ்தலத்திலேயே பலியானார். வார்சோவில் ஒரு இனக்கலவரம் உருவாக சிறு பொறி போதுமானதாக இருந்தது. ஆத்திரமடைந்த நைஜீரிய வியாபாரிகள் போலிஸ் வாகனங்களைத் தாக்கி தீயிட்டனர். கலகத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சில நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

போலிஸ் அத்துமீறல் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அறிவிக்கப்பட்டது. அவர்களால் அனுப்பபட்ட விசாரணைக்குழு வந்து பார்த்து விட்டு போலிஸ் மீது குற்றஞ்சாட்டியது. இருப்பினும் போலந்து போலிசின் நோக்கமும் நிறைவேறியது. அந்தச் சம்பவத்திற்குப் பின்னர், சந்தை கலைக்கப்பட்டது. சிறு வியாபாரிகளுக்கு விமான நிலையம் செல்லும் வழியில் புதிய இடம் ஒதுக்கப்பட்டது. "அமைதியான" போலந்தில் இடம்பெற்ற கலவரம் குறித்து எந்தவொரு சர்வதேச ஊடகமும் அக்கறை கொள்ளவில்லை. சம்பவம் நடந்த இடத்தை சுற்றிக்காட்டிய தமிழ் நண்பர், செய்தியை வெளியிடாத ஊடக மௌனம் குறித்து என்னிடம் கேள்வியெழுப்பினார். தமிழ் ஊடகங்களில் கலையகம் மட்டுமே இணையத்தில் அந்த செய்தியை (பார்க்க :போலந்து போலிஸின் நிறவெறிப் படுகொலை) வெளியிட்டதை சுட்டிக் காட்டினேன். வியப்புடன் என்னை நோக்கினார். கண்களில் நம்பிக்கை ஒளி மின்ன, போலந்தில் அகதிகளின் அவல வாழ்க்கை பற்றிய தகவல்களையும் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார்.

போலந்து போகலாம் வாங்க! - பயணக் கதை Part 2
போலந்து நாட்டினருக்கு அகதித் தஞ்சம் கோருவது புதிய விடயமல்ல. இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் ஹிட்லர் போலந்தை ஜெர்மனியுடன் இணைத்த பொழுது, போலிஷ் அரசு பிரிட்டனில் அகதியாக தஞ்சம் கோரியது. கம்யூனிஸ்ட்கள் மொஸ்கோவில் தஞ்சம் கோரினார்கள். நாஸிகளின் இன அழிப்புக்கு தப்பிய யூதர்கள் அகதியாக அமெரிக்கா வரை சென்றார்கள். நாஸிப் படைகளை தோற்கடித்த சோவியத் செம்படையுடன் கம்யூனிஸ்ட்கள் திரும்பி வந்து சோஷலிச ஆட்சி அமைத்தார்கள். சோஷலிச போலந்தில் அதிருப்தியடைந்த ஒரு கூட்டம் மேற்குலக நாடுகளை நோக்கி அகதிகளாக ஓடினார்கள். கத்தோலிக்க தேவாலயங்கள், தொழிற்சங்கங்களின் இடையறாத போராட்டம் காரணமாக, கம்யூனிஸ்ட்கள் விட்டுக் கொடுத்தார்கள். முன்னாள் சோஷலிச நாடுகளில், முதன் முதலாக போலந்தில் தான் அனைத்துக் கட்சிகளும் பங்குபற்றிய பொதுத்தேர்தல் நடைபெற்றது. மேற்குலகில் அடைக்கலம் கோரிய போலிஷ் புத்திஜீவிகள் நாடு திரும்பினார்கள். சுபம்.
கதை அத்துடன் முடியவில்லை. அதுவரை அகதிகளை அனுப்பிக் கொண்டிருந்த போலந்து, 20 ம் நூற்றாண்டின் இறுதியில், அகதிகளை பொறுப்பேற்க வேண்டிய கடமைக்குள்ளானது. சோஷலிசத்தின் வீழ்ச்சியில் இரும்புத்திரை கிழிந்தது என்று சந்தோஷப்பட்டார்கள். ஆனால் கிழிந்த திரையூடாக வேற்றின அகதிகள் வருகை தந்தார்கள். ரஷ்யர்கள், தெற்காசிய, ஆப்பிரிக்க அகதிகளின் புகலிடமாக போலந்து மாறியது.

போருக்குப் பின்னர், கம்யூனிஸ்ட்கள் எழுத்தறிவற்ற மக்களின் தேசத்தை பொறுப்பேற்றார்கள். அனைத்து பிரஜைகளுக்கும் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி அளித்தார்கள். இதனால் புதிதாக தோன்றிய நடுத்தர வர்க்கம் ஒன்று, மேலதிக உரிமைகளைக் கோரியது. தொன்னூறுகளில் நான் சந்திந்த போலந்து மாணவி ஒருவர் பின்வருமாறு கூறினார். "கம்யூனிஸ்ட்களின் காலத்தில் ஜனாதிபதியை ...... மகன் என்றெல்லாம் திட்ட முடியாது. பிடித்து ஜெயிலில் போட்டு விடுவார்கள். இப்போது தாராளமாக திட்டலாம். யாரும் தண்டிக்கப்படமாட்டார்கள்." நடுத்தர வர்க்கம் போராடிப் பெற்ற பேச்சு சுதந்திரம் அது. இன்று அதே போலந்தில் பாதுகாப்புப் படையினர் அகதிகளை நடத்தும் விதம் குறித்து விமர்சிப்பவர்களை விரட்டுகிறார்கள். பொதுவாகவே அகதிகள் எதிர்ப்புப் குரல் கொடுக்க தைரியமற்றவர்கள். அவர்கள் சார்பாக சிறிய இடதுசாரிக் குழுக்களை சேர்ந்த போலிஷ்காரரே விமர்சனங்களை முன்வைக்கின்றனர். நான் இங்கே எழுதப் போகும் அகதிகளின் நிலை பற்றிய செய்திகளை எந்த ஊடகமும் வெளியிடவில்லை. அதிலிருந்து யாருக்கான கருத்துச் சுதந்திரம் குறித்து உலகம் அக்கறை கொள்கிறது எனப் புரிந்து கொள்ளலாம்.

ஆரம்ப காலங்களில், அதாவது போலந்து முதலாளித்துவ - ஜனநாயக நாடாக மாறிய தொன்னூறுகளில், ஆட்கடத்தல்காரர்களே அகதிகளை போலந்து கூட்டி வந்தார்கள். ஏற்கனவே விசா வழங்கும் நடைமுறையை மேற்கு ஐரோப்பிய நாடுகள் இருக்கியிருந்தன. போலந்துக்கு வருவது அவ்வளவு கஷ்டமல்ல. போலந்து விசா கிடைக்காவிட்டாலும், அருகில் இருக்கும் உக்ரைன், பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு விசா எடுத்து விட்டு, பின்னர் எல்லை கடக்கலாம். போலந்தின் மேற்கு புற எல்லையில் ஜெர்மனி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதையும் கடந்து விட்டால் மேற்கைரோப்பாவில் அகதித் தஞ்சம் கோரலாம். மெல்ல மெல்ல போலந்திற்குள் வரும் அகதிகளின் நடமாட்டம் குறித்து எல்லைக்காவல் படை விழிப்புற்றது. இதனால் எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. பல அகதிகள் எல்லை கடக்கும் பொழுது சிக்கிக் கொண்டார்கள். ஐ.நா.அகதிகள் உயர் ஸ்தானிகராலய நெறிப்படுத்தலின் கீழ், போலந்து அரசு அகதிகளைப் பதியும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அப்படி இருந்தும் பலர் அங்கே தங்கவில்லை. சந்தர்ப்பம் பார்த்து மீண்டும் எல்லை கடந்து ஓடினார்கள்.

போலந்தில் பதிந்த அகதிகள் சரிவர பராமரிக்கப்படாதது, அவர்கள் ஓடுவதற்கு ஒரு காரணம். ஒரு ஐரோப்பிய நாட்டில் நுழைந்தால், அங்கே தான் முதலில் அகதித் தஞ்சம் கோர வேண்டும் என்ற சட்டம் அப்போதே வந்து விட்டது. மேற்கு ஐரோப்பாவில் தஞ்சம் கோரியவர்களிடம், போலந்தில் தஞ்சம் கோராதமைக்கு, அல்லது அங்கே நிரந்தரமாக தங்காமைக்கு காரணம் கேட்கப்பட்டது. அபோதெல்லாம் போலந்து அரசின் குறைபாடுகளை எடுத்துச் சொன்னார்கள். இந்த விஷயம் குறிப்பாக ஜெர்மனிக்கு பெரிய தலையிடியாக இருந்தது. ஏனெனில் போலந்து ஊடாக வந்த அகதிகளில் பெரும்பான்மையானோர் ஜெர்மனியில் அகதித் தஞ்சம் கோரியிருந்தார்கள். இந்தப் பிரச்சினையை தீர்க்க ஜெர்மனி ஒரு வழி கண்டுபிடித்தது.

போலந்தில் அகதிகளைப் பராமரிக்கும் அரச திணைக்களம் ஒன்றை உருவாக்க ஜெர்மனி அழுத்தம் கொடுத்தது. போலந்திற்கு வரும் அகதிகளைப் பதிவது மட்டுமல்ல, உணவு, உறைவிடம் வழங்குவதும் அந்தத் திணைக்களத்தின் பொறுப்பு. விசாரணை நடத்தி தகுதியான அகதிகள் அங்கீகரிக்கப்பட வேண்டும், அல்லது வதிவிட அனுமதி வழங்க வேண்டும். இதிலே குறிப்பிட வேண்டியது என்னவெனில், எத்தனையோ வருடங்களாக UNHCR எடுத்துக் கூறியும் கேட்காத போலந்து அரசு, ஜெர்மனி சொன்னதும் கேட்டது. அதற்குக் காரணம் அகதிகளை போலந்தில் வைத்து பராமரிக்கும் செலவை ஜெர்மனி பொறுபேற்றுக் கொண்டது. உண்மையில் அதற்காக நிதி ஒதுக்குவதன் மூலம், பல மில்லியன் யூரோக்களை ஜெர்மனி மிச்சம் பிடிக்கின்றது. போலந்தில் இருக்கும் அத்தனை அகதிகளும் ஜெர்மனி வந்தால்? இதைவிட அதிகமாக செலவிட வேண்டியிருக்கும்.

போலந்தில் பதியப்பட்ட அகதிகளில் பெரும்பான்மையோனோர் செச்னியர்கள் (ரஷ்யா). அதை விட அல்ஜீரியா, பங்களாதேஷ், சில ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களும், தஞ்சம் கோருகின்றனர். வருடந்தோறும் சில நூறு இலங்கை (தமிழ்) அகதிகள் தஞ்சம் கோரியுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. ஆனால் போலந்து முழுவதும் நூறு தமிழ் அகதிகள் இருந்தாலே அதிகம். வார்சோ நகரில் எப்படியும் நாற்பது, ஐம்பது பேர் ஆவது வசிக்கலாம். வார்சோ நகரில் வசிக்கும் தமிழர்களில் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் வந்து தங்கி விட்டவர்களும் உண்டு. சிலர் ஆட்கடத்தல் வேளைகளில் ஈடுபட்டவர்கள். சிலர் உள்ளூர் பெண்களை மணந்து கொண்டு போலந்துவாசியானவர்கள்.

போலந்தில் அகதியாக பதிவதற்கென்று ஒரேயொரு நிலையம் மட்டுமே உள்ளது. உக்ரைன் நாட்டு எல்லைக்கருகில், Debak எனுமிடத்தில் மட்டுமே புதிய அகதிகளை பதிவார்கள். போலந்தில் அகதிகளுக்கான முகாம்கள் உள்ளன. அனேகமாக எங்கோ தொலைதூர நாட்டுப்புறத்தில், காட்டுக்கு மத்தியில் அந்த முகாம் இருக்கும். சுற்றிவர பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். வெளியார் யாரும் செல்ல முடியாது. மூன்று வேளை சாப்பாடு கொடுத்து, சிறிதளவு பணம் செலவுக்கு கொடுப்பார்கள். போக்குவரத்துக்கு, தொலைபேசுவதற்கு அதெல்லாம் போதாது. முகாமில் வசதிக் குறைபாடுகள் இருப்பதால், பலர் வெளியே வாழ்கின்றனர். அதற்கு அவர்களுக்கு சுதந்திரம் உண்டு. நகரங்களில் இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் வீடுகளில் வசிக்க முடியும். அப்படி வசிப்பவர்களுக்கு 750 ஸ்லொட்டி (200 யூரோ) வழங்கப்படும். வீட்டு வாடகை, சாப்பாட்டுச் செலவு எல்லாம் அதற்குள் தான் சமாளிக்க வேண்டும். அவர்கள் மாதமொரு தடவை உதவிப்பணம் எடுப்பதற்காக ஒரு காரியாலயம் செல்ல வேண்டும்.

வார்சோ புறநகர்ப் பகுதி ஒன்றில் (விமான நிலையம் அருகில்) அகதிகள் உதவிப்பணம் பெரும் காரியாலயம் அமைந்துள்ளது. விசா காட் புதிப்பிக்க வேண்டுமானாலும் அங்கே செல்ல வேண்டும். வார்சோ மத்தியில் இருந்து மெட்ரோ எடுத்து சென்று, அதன் பிறகு 45 நிமிடம் பஸ்ஸில் அந்த இடத்திற்கு போக வேண்டும். அப்படியும் சுமார் ஒரு கி.மி. பஸ் தரிப்பிடத்தில் இருந்து நடந்து செல்ல வேண்டும். அகதிகளுக்கான அரசுக் காரியாலயம் அமைந்துள்ள கட்டிடத்தை சுற்றி மரங்கள் மறைத்திருக்கின்றன. உள்ளே நுழைய முன்னர் பாதுகாப்பு உத்தியோகத்தரின் ஸ்கேன் மெஷின் ஊடாக செல்ல வேண்டும். அதே அலுவலகத்திற்கு மேலே ஒரு சிறைச்சாலை இயங்குகின்றது. அனேகமாக நாடுகடத்தப்பட வேண்டிய அகதிகளை அங்கே அடைத்து வைத்திருக்கலாம். தஞ்ச மனு நிராகரிக்கப்பட்ட சிலரை, அங்கே விசா புதுக்க வரும் போதே தடுத்து வைத்து விடுவதாக அறிந்தேன். அலுவலகப் பணியாளர்கள், ஆங்கில, ரஷ்ய மொழிகளை இரண்டாம் மொழியாகப் பேசுகின்றனர். சுவரில் அகதிகளை திருப்பியனுப்புவதை பொறுபேற்கும் IOM, மற்றும் UNHCR பிரசுரங்கள் சில காணப்பட்டன. அகதிகள் என்றால் நோய்க்காவிகள் என்று கருதினார்களோ என்னவோ, UNHCR பிரசுரம் எய்ட்ஸ் நோயை தடுப்பது எப்படி என்று சொல்லிக் கொடுத்தது.

போலந்தில் அகதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதால், விதிவிட அனுமதி பத்திரம் அதிகமாக வழங்கப் படுகின்றது. ஒரு வருடத்திற்கு மேலாக தஞ்ச வழக்கு நடந்து கொண்டிருந்தால், "Okrana " என்ற வதிவிட அனுமதி வழங்குகிறார்கள். அதன் கால எல்லை ஒரு வருடம், சில நேரம் இரண்டு வருடங்கள். ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்க வேண்டியிருப்பதுடன், அதனை நிரந்தர வதிவிட அனுமதியாக வழங்குவது குறைவாகவே உள்ளது. Okrana அனுமதிப் பத்திரம் பெற்றவர்கள் சட்டப்படி வேலை செய்யலாம். வார்சோ நகரில் தான் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட அகதிகள் பலதரப் பட்ட வேலைகளை செய்கிறார்கள். உதவிப்பணம் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே வழங்கப்படுவதால், வேலை தேட வேண்டிய நிர்ப்பந்தம். பல வருடங்களாக போலந்தில் வாழும் தமிழர்கள் சிறு வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். ஒன்றில் ரெஸ்டாரன்ட், அல்லது கடை வைத்துள்ளனர். இவர்ளை விட பலர் தற்போது கல்லூரிகளில் படிப்பதற்கென்று வருகிறார்கள். அவர்களில் சிலர், போலந்தில் அகதித் தஞ்சம் கோரியுள்ளனர்.

Friday, August 13, 2010

பெண்களின்மீதான வீட்டு வன்முறைகள்- கலந்துரையாடல்

GBV 2 Domestic Violence Perceptions - Tamil from Young Asia Television on Vimeo.

GBV 3 Domestic Vilonce Act - Tamil from Young Asia Television on Vimeo.



GBV 4 - Tamil from Young Asia Television on Vimeo.


GBV 4 - Tamil from Young Asia Television on Vimeo.


முச்சந்தி இலக்கிய வட்டம்

முச்சந்தி இலக்கிய வட்டம்

இரு நிகழ்வுகள்

இடம் :- கிறிஸ்தவ தொழிலாளர் பொழில் - (CWF)
ஹட்டன். இலங்கை.

காலம் :- 22- 08- 2010, மு.ப 9.30

நிகழ்வு - 1
உலக தமிழ் எழுத்தாளர் மாநாட்டில்
மலையக பிரதநிதித்துவம் பற்றிய கருத்தாடல்

தலைமை :- திரு. லெனின் மதிவானம்
அறிமுகம் :- திரு. ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
கருத்துரை :- திரு. பி. மோகன் சுப்ரமணியம்
திரு. அந்தனி ஜீவா

நிகழ்வு - 2
சஞ்சிகை விமர்சனம் - கொழுந்து
தலைமை :- சட்டத்தரணி கே. இராஜகுலேந்திரா
அறிமுகம் :- திரு. தி. ரா. கோபாலன்
விமர்சனவுரை :- திரு. சு. முரளிதரன்

நன்றியுரை :- திரு. ஜே. பிரான்சிஸ் ஹலன்

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

தொடர்புகளுக்கு :- + 94 774409605

Thursday, August 12, 2010

நூல் விமர்சன நிகழ்வு

நூல் விமர்சன நிகழ்வு
உலகமயம் பண்பாடு எதிர்ப்பு அரசியல்

-
லெனின் மதிவானம்-

இடம்; பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம், கொழும்பு-
காலம்: 15- 08- 2010, நேரம்: பி.ப 4.30
தலைமை:
நீர்வை பொன்னயன்

விமர்சன உரைகள்
பேராசிரியர் சபா ஜெயராசா
கலாநிதி செல்வி திருச்சந்திரன்
திரு. செ. கிருஷ்ணா


பதிலுரை:
திரு லெனின் மதிவானம்
ஏற்பாடு : இலங்கை முற்போக்குக் கலை இலக்கியமன்றம்
______________________________________________________________________________________________________________________



திறனாய்வு + நூலறிமுகம்
------------------------------------
உலகமயம் - பண்பாடு - எதிர்ப்பு அரசியல்
-நீர்வை பொன்னையன்-


ஆசிரியர்- லெனின் மதிவானம்
வெளியீடு- இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்.
விலை- ரூ. 250 (இலங்கை)


உலக மயமாக்கல் ஒரு விஷவிருட்சம். அதன் விதைகள் ஒரு நாட்டில் விதைக்கப்பட்டால், அவைகள் பெரும் விருட்சங்களாகி அந்த நாட்டின் பொருள்வளம், மனித வளம், பாரம்பரிய பண்பாடு, மனித விழுமியங்கள் எல்லாவற்றையும் சிதைத்துச் சீரழித்து, அந்த நாட்டை சர்வநாசத்திற்குள்ளாக்கிவிடும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகநாடுகளில் ராணுவ ரீதியில் தலையிடுவதற்குப் பதிலாக தனது அடியாட்களான பல்தேசியக் கம்பெனிகள், சர்வதேச நாணய நிதியம், உலகவங்கி, சர்வதேசபொருளாதாரக் கழகம் ஆகியவற்றினூடாக மேற்கொள்ளும் உலகமயமாக்கல் வாயிலாக அனைத்து நாடுகளையும் தனது ஆதிக்கத்திற்குள் கொண்டு வருகின்ற செயற்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

உலகமயம் என்றால் என்ன? அமெரிக்க மூலதனம் முழு உலகையும் தன் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வந்து, பண்டங்களை மூலதனமாக்குவதற்குப் பதிலாக, மூலதனத்தையே உலகமயமாக்கும் செயல்பாடுதான் உலகமயம். அத்துடன் இலாபத்தைப் பெருமளவில் பெருக்கிக் கொள்ளும் நோக்குடன், மூலதனம் எதுவித தங்குதடையுமின்றி வேகமாக வியாபிப்பதற்கு ஏதுவாக, உலக அரசியல் கட்டமைப்பை தனது ஆதிக்கத்திற்குள் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் பெருமுயற்சிதான் உலகமயமாக்கல். இம் முயற்சியில் மிகத்தீவிரமாக செயல்பட்டு வருகின்றது அமெரிக்க ஏகாதிபத்தியம். இதற்கு பண்பாட்டுத் துறையையும் ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாக உபயோகிக்கின்றது. இதற்குப் பல்தேசியக் கம்பெனிகளைப் பயன்படுத்துகின்றது.

மூர்டோக்கின் ,நியூஸ் கோப்பறேசன், சொனி, டிஸ்னி,டைம்வார்ணஸ், விவேண்டி, ஏச். எம். வி. போன்ற ஏழு பல்தேசியக் கம்பெனிகள் அமெரிக்காவின் அனைத்து தொலைக்காட்சி அவை வரிசைகளையும் கட்டுப்படுத்தி, தங்கள் ஆதிக்கத்துக்குள் வைத்திருக்கின்றன. ஹொலிவூட்டின் பெரும்பாலான ஸ்ரூடியோக்கள் இவர்களுக்கே சொந்தம். உலகத்தின் ஒலிநாடா, இசைத்தட்டுச் சந்தையின் 85 வீதம் இக்கம்பெனிகளுக்குச் சொந்தம். நூல் வெளியீட்டுத் துறைகள், தொலைக்காட்சி அலை வரிசைகளின் பெரும்பகுதிகள் இந்த ஏழுபல்தேசியக் கம்பெனிகளுக்கே சொந்தம். சொனி, ஏச். எம்.வி. ஆகிய இரு பல்தேசியக் கம்பெனிகள் இந்தியாவிலும் இலங்கையிலும் ஒளிநாடா, ஒலித் தகடுகள் சந்தையைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன. உதாரணத்திற்கு இந்திய சுதந்திரப் போராட்ட வேள்வியில் ஜனித்த வந்தே மாதரம் என்ற புனித தேசிய கீதத்தின் ஆத்மாவை திரைப்பட இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரகுமானின் துள்ளலிசையின் மூலம் படுகொலை செய்த பெருமை பல்தேசிய சோனிக் கம்பெனிக்கே உரியது. இதே போல மூன்றாவது உலக நாடுகளின் பாரம்பரிய பண்பாட்டுச் சின்னங்களை, தங்கள் வக்கிர வன்முறை தகரடப்பா இசை மூலம் இதை சீரழித்துக் கொண்டிருக்கின்றன இப்பல்தேசியக் கம்பெனிகள்.

பல்தேசியக் கம்பெனிகளின் மூலதனச் சந்தையைச் சார்ந்தவர்கள் நுகர்வுப்பண்பாட்டை மக்கள் மீது திணிப்பதன் மூலம் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுகின்றனர். குறைந்த முதலீட்டில், குறுகிய காலத்தில் கூடிய லாபத்தைப் பெற்றுக் கொள்வதுதான் நுகர்வுப் பொருளாதார வர்த்தகர்களின் பிரதான நோக்கம். நுகர்வுப் பொருள்கள் எவ்வளவு தரங்குறைந்தவையாக இருந்ததாலும் சரி இப்பொருட்களை இவர்கள் குறைந்த விலையில் இறக்குமதி செய்கின்றனர். இந்த தரம் குறைந்த பொருள்களை நவீன விளம்பர யுத்திகள் மூலம் மக்களின்

மனதைக் கவர்ந்து, இப்பொருள்களை கூடிய விலையில் விற்று கொள்ளை இலாபம் சம்பாதிக்கின்றனர்.இவர்களது வலுவான ஆயுதம் விளம்பரந்தான். மக்களின் மனங்களை, குறிப்பாக இளைஞர்களின் மனங்களை சுண்டி இழுக்கக்கூடிய வகையில், மிருக உணர்ச்சியையும் வன்முறையையும் தூண்டுகின்ற வகையில் பெண்களின் அரை நிர்வாண ஆபாச விளம்பரங்கள், பதாகைகள், சுவரொட்டிகள், வீடியோக்கள், நூல்கள், ஆகியவற்றை தாராளமாகத் தயாரித்து அல்லது இறக்குமதி செய்து விற்று கொள்ளை இலாபம் சம்பாதிக்கின்றனர். அதே வேளை எமது பாரம்பரியப் பண்பாட்டையும் கலாசாரத்தையும் சிதைத்துச் சீரழிக்கின்றனர்.

மக்களின் விருப்பத்திற்கு மாறாக, அவர்கள் அறியாமலே, அவர்களது மனதை மிகவும் சாதுரியமாக, சூட்மமான வழிகளில் அடிமைப்படுத்தி, மக்களை ஏற்றுக்கொள்ள வைக்கும் விளம்பரத் தந்திரோபாயங்களையும் யுக்திகளையும் இவர்கள் கையாள்கின்றனர். வெகுஜன ஊடகங்களூடாக ஒளி, ஒலி சாதன விளம்பரங்களை, கவர்ச்சிகரமான சுவரொட்டிகள் விளம்பரத் தட்டிகள், பதாகைகள் போன்ற பிரச்சார வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தமக்கு விரோதமானவற்றைக் கூட தம்மை அறியாமலே மக்களை ஏற்றுக் கொள்ளவைக்கும் மனப்பான்மையை உருவாக்குவதும் ஒரு வழிதான் இது. கனவுகளை விற்பனை செய்து மக்களை ஏமாற்றும் முறையாகும் . இப்புல்லுருவிகள் விளம்பரத் துறையில் பெண்களை ஒரு கவர்ச்சிப் பண்டமாகப் பயன்படுத்துகின்றனர். எமது கீழைத்தேச பாரம்பரியத்துக்கும் பண்பாட்டிற்கும் ஒவ்வாத வகையில், பெண் குலத்தையே அவமானப்படுத்தும் வகையில் பெண்களைக் கவர்ச்சிப் பண்டமாகப் பயன்படுத்துகின்றனர். நுகர்வுப் பொருளாதாரத் துறையையும் விளம்பரத்துறையையும் சார்ந்த பெரும்பாலான நவீன சாதனங்களது விளம்பரங்களில் பெண்களை மையப்படுத்தி துகிலுரி படலத்தை நடத்தி வருகின்றனர். பெண்குலத்தையே அவமானப்படுத்துகின்ற இந்த சீர்கெட்ட செயலில் இப்பல்தேசியக் கம்பெனிகள் ஈடுபட்டு வருகின்றன.

அமெரிக்காவில் பெரும்பான்மையான மக்கள் தண்ணீர் குடிப்பது மிகவும் குறைவு. பதிலாக பெப்சி, கொக்கோகோலா பானங்களையே குடிக்கின்றனர். இக் குளிர்பானங்கள் ஒரு விதபோதை தருகின்றன. இப்பானங்களில் கொக்கெயின் செறிவுள்ளதால், நீண்டநாள் பாவனையால் நரம்புத்தளர்ச்சி ஏற்பட வாய்புண்டு. இதனால் சிலநாடுகளில் இப்பானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கூட விஞ்ஞான ஆய்வின் பின் சில மானிலங்களில் இப்பானங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. அதே வேளை பெப்சி ,கொக்கோகோலா பானங்களின் ஆக்கிரமிப்பால் உள்நாட்டு குளிர்பான உற்பத்தி பெருமளவில் பாதிப்படைந்துள்ளன. இலங்கையில் கிராமங்களில் கூட கொக்கோகோலாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பமாகியுள்ளது.

பல்தேசியக் கம்பெனிகளில் ஒன்றான மெக்டொனால்ட் நிறுவனம் மரபணு தொழில்நுட்ப முறை தானியத்தால் உணவுகளை தயாரிக்கின்றது. இதனை உட்கொள்ளும் ஆயிரக்கணக்கான மக்களின் உடல் நிலை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு எதிராக பல வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு, இந்த நிறுவனத்திற்கு பல மில்லியன் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டதுடன் அம்மாநிலங்களில் இந்த உணவுகள் தடைசெய்யப்பட்டுள்ள. நமது நாட்டில் சில நகரங்களில் மெக்டொனாள்ட், பஸ்கசா ஹப், கே.எவ்.சி. சரியாட் போன்ற றெஸ்ரோறென்கள் ஆரம்பிக்கப்பட்டு இளைஞர்கள் கவர்ந்திழுக்கப்படுகின்றனர். இந்த நிறுவனங்கள் காலப்போக்கில் எமது பாரம்பரிய உணவுகளை உட்கொள்வதிலும், எமது பண்பாட்டிலும் சீரழிவை ஏற்படுத்தும் நிலைமை நிச்சயமாக ஏற்படும்.

எமது நாட்டின் பொருளாதாரம், கல்வி, பண்பாடு அரசில் ஆகிய துறைகளில் இப்பல்தேசியக் கம்பெனிகளால், முன் எடுத்துச் செல்லப்படுகின்ற உலக மயமாக்கலை எத்தைகைய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்ற நுண் ஆய்வுகள் பல வெளியாக வேண்டும். இவ்வகையில் முன்னெடுத்துச்செல்லும் பல்தேசியக் கம்பெனிகளின் மக்கள் விரோத, தேச விரோத, எமது நாட்டின் பாரம்பரிய பண்பாட்டை சர்வநாசமமாக்கும் செயல்பாடுகள் போன்றவற்றை தடுத்து நிறுத்தி எமது பண்பாட்டை பாதுகாக்க போராடுவது அவசர அவசியமாக உள்ளது.

மாக்ஸிம் கார்க்கியிலிருந்து முருககையன் வரையில் மறைந்த முற்போக்கு இலக்கிய முன்னோடிகளுக்கான நினைவுப் பேருரையை திரு. லெனின் மதிவானம் நிகழ்த்தியுள்ளார். அந்த நினைவுப் பேருரையின் விரிவாக்கத்தை அவர் நூலாக தந்துள்ளார். இந்த நூலில், திரு.லெனின் மதிவானம் அவர்கள் பண்பாட்டில் உலகமயமாக்கத்தின் தாக்குதலும் புத்துயிர்ப்பும், பண்பாடு தோற்ற மும் வளர்ச்சியும், அதன் மாற்றம், உலகமயமாக்கல் சூழலில் நாம் நோக்கும் நெருக்கடிகள் அவற்றுக்கு எதிராக முகம்கொடுப்பது, போராடுவது போராட்ட யுக்திகள் போன்ற பல விடயங்களை அவர் விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறியுள்ளார். இப்படிப்பட்ட நூல்கள் இன்றய சூழலில் எமக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றன. இந்த நூலை இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றம் பதிப்பித்து வெளியிடுவதில் பெருமைப்படுகின்றது. தமது வேலைப் பழுவுக்கு மத்தியிலும் இந்நூலை சிறப்புற ஆக்கித் தந்தமைக்கு இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றம் திருலெனின் மதிவானம் அவர்கட்கு நன்றி கூறக்கடப்பாடுடையது.

(லும்பினிதளத்திலும் பதிவாகியுள்ளது)


Monday, August 09, 2010

கே .பி யுடனான செவ்வி



ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் "டெய்லி மிரர்" ஆங்கில பத்திரிகைக்காக தொலைபேசி மூலம் குமரன் பத்மநாதனை பிரத்தியேகமாக செவ்வி கண்டார்.

நான் உள்ளே நுழைந்தவுடன் பாதுகாப்புச் செயலாளர் எழுந்து கைகுலுக்கினார்: குமரன் பத்மநாதன்


திங்கள் கிழமை 09 ஓகஸ்ட் 2010 11:50

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் ஆயுதக்கொள்வனவாளரும் வே.பிரகாரனினுக்குப் பின்னர் அவ்வமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டவருமான தம்பையா செல்வராசா பத்மநாதன் அல்லது குமரன் பத்மநாதன் (கே.பி.) கடந்த 05.08.2009 ஆம் திகதி கோலாலம்பூரில் 316இ ஜலான் துங்கு அப்துல் ரஹ்மான் வீதியிலுள்ள பெர்ஸ்ட் ரியூன் ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டு மறுநாள் கொழும்புக் கொண்டு வரப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியான கடந்த 5ஆம் திகதி வியாழனன்று சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ்இ டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக தொலைபேசி மூலம் குமரன் பத்மநாதனை பிரத்தியேகமாக செவ்வி கண்டார்.

7ஆம் திகதி சனிக்கிழமை டெய்லிமிரர் பத்திரிகையில் வெளியான இப்பிரத்தியேக செவ்வியின் தமிழ் வடிவம் இது :-

கே: கடந்த வருடம் ஓகஸ்ட் 5ஆம் திகதி நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள். ஒருவருட காலமாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில் உங்கள் தற்போதைய சூழ்நிலை குறித்து எவ்வாறு வர்ணிப்பீர்கள்?

ப: நான் கைது செய்யப்பட்டபோது அதிர்ச்சியடைந்தேன். சுமார் ஒரு மணித்தியாலம் பெரும் திகைப்பாக இருந்தது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட போதும் கவலையடைந்தேன். ஆனால்இ நான் கடவுளை நம்புகிறேன். மோசமான நிலை ஏற்படலாம் என அச்சமடைந்த போதிலும் நான் அதிஷ்டசாலி. நான் கைது செய்யப்பட்டமை எனக்கு நன்மையளித்துள்ளது.

துன்பப்படும் தமிழ் மக்களுக்கு சேவையாற்ற எனக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. எமது போராட்டம் இலங்கையிலுள்ள எமது மக்களை குறிப்பாக வன்னியிலுள்ள மக்களை பரிதாபகரமான நிலைக்குத் தள்ளியுள்ளது. இப்போது Nநுசுனுழு (வடக்கு கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பு) ஊடாக சிறிய வழியிலேனும் என்னால் அவர்களுக்கு உதவ முடிகிறது.

கே: நீங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தின் சூழ்நிலை என்ன?


ப: நான் வீடொன்றில் வைக்கப்பட்டுள்ளேன். நான் வெளியே போக முடியாது. ஆனால் வீட்டிற்குள்ளே சுதந்திரமாக எங்கும் நடமாடலாம். தொலைபேசியில் பேசுவதற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. என்னை இங்கு சந்திக்க வருவதற்கு மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். நான் யாரையும் சந்திப்பதென்றால் அனுமதி பெற வேண்டும். அவர்களை சந்திப்பதற்கு நான் வெளியே செல்லும்போது சில அதிகாரிகள் என்னுடன் வருவார்கள். கட்டுப்பாடற்ற வகையில் மின்னஞ்சல் (ஈமெயில்) பயன்படுத்தும் வசதியும் உள்ளது.

கே: எந்த வழியிலாவது நீங்கள் மோசமாக நடத்தப்பட்டீர்களா?

ப: இல்லை நான் மிகவும் தயைவுடன் நடத்தப்படுகிறேன். ஆரம்ப நாட்களில் சிலவகை பதற்றம் இருந்தது. ஆனால் நாட்கள் சென்றபின் நம்பிக்கையும் பரஸ்பர மரியாதையும் நிலவுகிறது.

கே: எவ்வாறு இந்த சூழ்நிலை ஏற்பட்டது? புலம்பெயர்ந்த தமிழர்களில் பலர் நீங்கள் அரசாங்கத்துடன் உடன்பாடொன்றைச் செய்துகொண்டதாகவும் உங்கள் கைது ஒரு நாடகம் எனவும் கூறுகிறார்கள். எவ்வாறு நீங்கள் கைது செய்யப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டீர்கள்?

ப: எனக்கெதிரான இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து எனக்குத் தெரியும். ஆனால் நான் எப்படி கைது செய்யப்பட்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனது கைது குறித்து ஆங்கிலத்தில் விரிவாக எழுதிய முதல் நபர் நீங்கள்தான். பல நாட்களின்பின் நான் அதை வாசித்தபோது சில சிறிய விடயங்களைத் தவிரஇ பெரும்பாலானவை சரியாக இருந்தன. இவர்கள் என்ன சொன்னாலும் உண்மை என்னவென்றால் நான் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டேன் என்பதாகும்.

கே: நீங்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டீர்கள் என்று கூறமுடியுமா?

ப: நான் ஹோட்டல் அறையில் அமர்ந்துஇ இங்கிலாந்திலிருந்து மலேசியாவுக்கு வந்திருந்த புலிகளின் முன்னாள் அரசியல் பொறுப்பாளர் நடேசனின் சகோதரருடனும் அவரின் மகனுடனும் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு கனடாவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. சி.எம்.ஆர். வானொலியிலிருந்து ராகவன் பேசினார். தொலைபேசி சமிக்ஞை தெளிவாக இருக்கவில்லை. அதனால் நான் அவர்களிடம் கூறிவிட்டு வெளியே சென்றேன்.

நான் ஹோட்டல் ஓய்வரங்கப் பகுதியிலுள்ள கதிரையொன்றில் அமர்ந்து தொடர்ந்தும் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். திடீரென மலேசிய அதிகாரிகள் குழுவொன்று என்னை சூழ்ந்துக்கொண்டது. ஒருவர் 'வெரி சொரி மிஸ்டர் கே.பி'. என்று கூறிவிட்டு எனது தொலைபேசியை கைப்பற்றிக்கொண்டார். அது கீழே விழ மற்றொரு அதிகாரி அதை எடுத்தார். என்னை அவர்களுடன் வருமாறு கூறினர். அவர்களுடன் செல்வதைத் தவிர எனக்குத் தெரிவுகள் எதுவும் இருக்கவில்லை.

நான் கோலாலம்பூரிலுள்ள குடிவரவு தடுப்பு நிலையமொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு சுமர் 36 மணித்தியாலங்கள் (2 பகல்களும் 2 இரவுகளும்) அங்கு வைக்கப்பட்டிருந்தேன். தடுப்பு நிலைய அறையொன்றில் நான் உறங்கவேண்டியிருந்தது. அவர்களின் உரையாடல் மூலம் நான் அதிகாரபூர்வமாக நாடு கடத்தப்படவுள்ளேன் என்பதை உணர்ந்துகொண்டேன். ஆனால் நான் இலங்கைக்கா? இந்தியாவுக்கா? அமெரிக்காவுக்கா? அல்லது வேறெங்குமா? கொண்டுசெல்லப்படப் போகிறேன் என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

அதன்பின்இ நான் கோலாலம்பூர் விமான நிலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டேன். அங்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமொன்று காத்திருந்தது. அப்போது நான் கொழும்புக்கு கொண்டுசெல்லப்படப் போகிறேன் என்பது தெரிந்தது. நான் விமானத்தின் சிக்கன வகுப்புக்கான வாசல் வழியாக ஏற்றப்பட்டு பின்னர் உட்புறமாக வர்த்தக வகுப்பிற்கு மாற்றப்பட்டேன். அதையடுத்து நான் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டேன்.

கே: கைது செய்யப்பட்ட காலத்தில் நீங்கள் தாய்லாந்தில் வசித்தீர்கள். இந்நிலையில் பாங்கொக்கில் அல்லாமல் கோலாலம்பூர் புறநகரில் நீங்கள் இயங்கியமைக்கான காரணம் என்ன? 2007ஆம் ஆண்டு நீங்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதனாலா?

ப: நான்இ தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு வெளியே இருந்தபோது தாய்லாந்தில் பல வருடங்கள் அமைதியான வாழ்க்கையை முன்னெடுத்தேன். நான் அங்கு வசிப்பதும் அறியப்பட்டிருந்தது. மீண்டும் நான் புலிகள் அமைப்பில் தீவிரமாக செயற்படத் தொடங்கியபோது தாய்லாந்திலுள்ள எனது குடும்பத்தின்மீது மற்றவர்களின் கவனம் ஈர்க்கப்படுவதை நான் விரும்பவில்லை. அதனால்தான் நான் கோலாலம்பூருக்குச் சென்றேன். அத்துடன் எல்லா இடங்களிலிருந்தும் மக்கள கோலாலம்பூருக்கு வந்து என்னை பார்ப்பதும் இலகுவாக இருந்தது.

உண்மையில் நான் 2007இல் கைது செய்யப்படவில்லை. என்னை கைது செய்ய ஒரு முயற்சி நடந்தது. சில அதிகாரிகள் அதிகாலை வேளையில் எனது வீட்டை சூழ்ந்துகொண்டனர். அதிஷ்டவசமாக நான் அங்கு இருக்கவில்லை. ஆனால் நான் கைது செய்யப்பட்டுவிட்டதாக இலங்கையில் செய்தி கசிந்தது.

கே: நீங்கள் கொழும்புக்கு வந்தவுடன் என்ன நடந்தது? பாதுகாப்புச் செயலருடன் முதல் சந்திப்பிலேலேயே சிறந்த தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாக நான் சில கதைகள் கேள்விப்பட்டேன்.


ப: கொழும்பு நோக்கிய விமான பயணத்தின்போது இலங்கை அதிகாரியுடன் நான் நீண்ட நேரம் கதைத்தேன். அவர் மிக சினேகபூர்வமானவர். இலங்கை அதிகாரிகளால் நான் நாகரிகமாக நடத்தப்பட்டேன். அது எனக்கு ஆறுதல் அளித்தது. ஆனாலும் இலங்கை அடைந்தபின் என்ன நடக்குமோ என அப்போதும் இதயத்தில் கவலை இருந்தது. பாதுகாப்புச் செயலாளர் குறித்து மிக கவலை கொண்டிருந்தேன். அவர் கடுமையாகப் பேசும் சிங்கள கடும்போக்குவாதி என்ற அபிப்பிராயத்தையே நான் கொண்டிருந்தேன். அதனால் அவருடனான சந்திப்பு குறித்து உண்மையில் அச்சம் கொண்டிருந்தேன்.


ஆனால்இ பாதுகாப்புச் செயலரின் இல்லத்திற்கு நான் கொண்டு செல்லப்பட்டபோது சில விடயங்கள் நடந்தன. பின்னணியில் ஒளி பளிச்சிட புத்தர் சிலையொன்று அங்கு இருந்தது. நான் சில நிமிடங்கள் நின்று புத்தர் சிலையை நோக்கிவிட்டுச் சென்றேன். அதனால் எனது மனம் ஆறுதலடைந்தது. தாய்லாந்தில் நான் எனது மனைவியுடன் அடிக்கடி பௌத்த ஆலயங்களுக்குச் செல்வேன். எனது வீட்டில் புத்தர் படம் உட்பட அனைத்து மத கடவுள்களின் படங்களும் உள்ளன. அதனால் எனக்கு பேராபத்து எதுவும் வராது என நான் நினைத்தேன்.


பாதுகாப்புச் செயலாளர் ஏனைய அதிகாரிகளுடன் அமர்ந்திருந்தார். நான் உள்ளே நுழைந்தவுடன் அவர் எழுந்து என்னுடன் கைகுலுக்கிவிட்டு 'பிளீஸ் சிட் டவுண்' என்றார். ஏனைய அதிகாரிகளை எனக்கு அறிமுகப்படுத்தினார். திரு. கோட்டாபய மிக கண்ணியமானவராக இருந்தார். எதற்காகவும் கவலைப்பட வேண்டாம் என்றார். நான் அப்போது சரியாக என்ன சொன்னேன் என்று நினைவில்லை. ஆனால் "நுழைவாயிலில் நான் புத்தர் சிலையை கண்டேன்இ பாதுகாப்பாகவும் அமைதியாகவும் உணர்கிறேன்" என்பதுபோல் ஏதோ கூறினேன்.


கே: நீங்கள் குறிப்பிடும் புத்தர் சிலை சம்பவமானது புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலுள்ள உங்களை விமர்சிப்பவர்கள்இ புத்தரை புகழும் துரோகியென உங்களை சித்தரிப்பதற்கு ஏதுவாகலாம்?


ப: எனக்குத் தெரியும். நீங்கள் கூறுவது சரி. ஆனால் நான் உண்மையில் என்ன நடந்து என்பதையே சொல்கிறேன். நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. கடந்த ஜுன் மாதம் இலங்கைக்கு வந்த 9 பேர் கொண்ட புலம்பெயர் தமிழர் தூதுக்குழுவொன்றிடமும் நான் இந்த புத்தர் சிலை பற்றி சொன்னேன்.

எனது வீட்டு சூழல் காரணமாகவும் எனது மனைவியின் மத நம்பிக்கை காரணமாகவும் எனக்கு புத்த வழிபாடுஇ ஆலயங்கள் பரீட்சியமானவை. எனவே புத்தர் சிலையை கண்டமை உணர்வு ரீதியில் எனக்கு உதவியது. இது தான் உண்மை. அதற்காக அவர்கள் என்னை தாக்க விரும்பினால் அதை செய்யட்டும். நான் புத்தருக்கோ பௌத்தத்திற்கோ எதிரானவன் அல்லன்.


கே: உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்கிறேன். பாதுகாப்புச் செயலாளருடனான உங்கள் சந்திப்பு எவ்வாறு தொடர்ந்தது?


ப: கேக்இ தேநீர் பரிமாறப்பட்டன. பிரச்சினையை அமைதியான வழியில் அவர்கள் தீர்க்க முயற்சித்ததாகவும் ஆனால் முழுமையான யுத்தத்தை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் பாதுகாப்புச் செயலர் கூறினார். அவர் சில கேள்விகளை கேட்டார். நான் உண்மையாக பதிலளித்தேன். எனக்குத் தெரியாத விடயங்களை கேட்டபோது அது பற்றி சொன்னேன். எனது பதில்களில் அவர் திருப்தியடைந்தவராகக் காணப்பட்டார். அதேவேளைஇ என்னைப் பொறுத்தவரை யுத்தம் நீண்டகாலத்திற்கு முன்பே முடிந்துவிட்டது எனவும் இப்போது எனது ஒரே குறிக்கோள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கை வாழ உதவுவதே எனவும் கூறினேன்.


பாதுகாப்புச் செயலரின் நடத்தைகள் எனக்கு உண்மையில் வியப்பாக இருந்தன. தொலைக்காட்சி நேர்காணல்களைப் பார்த்து அவர் ஒரு சிங்கள கடும்போக்குவாதி என்ற விம்பமே என் மனதில் இருந்ததுஇ என்பதையும் அவரின் நடத்தை எனக்கு ஆச்சரியமளிக்கிறது என்பதையும் ஒரு கட்டத்தில் நான் அவரிடம் சொன்னேன். அவர் சிரித்துவிட்டு "நான் எப்போதும் இப்படித்தான். சில ஊடகவியலாளர்கள் என்னை எரிச்சல்படுத்துகின்றனர். அதனால்தான் நான் அப்படி கோபமடைகிறேன் " என்றார்.


நீண்ட உரையாடலின் பின்னர் அவர் ஒரு குறித்த அதிகாரியை எனக்கு அறிமுகப்படுத்தியதுடன்இ அவர் தான் எனக்குப் பொறுப்பாக இருப்பார் என்றார். சகல விடயங்கள் குறித்தும் அந்த அதிகாரியுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் தேவையானால் அவரூடாக தனக்கு எழுத்து மூலம் எதுவும் தெரிவிக்கலாம் எனவும் கூறினார். அவர் மீண்டும் என்னுடன் கை குலுக்கினார். நான் கொழும்பிலுள்ள வீடொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டேன். எனது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகியது.


கே: அதன்பின் என்ன நடந்தது? நீங்கள் அரசாங்கத்துடன் சேர்ந்துகொண்டு வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் பற்றி அரசாங்கத்துக்கு தகவல் கொடுப்பதாகவும் குற்றச்சாட்டுகளும் தகவல்களும் வெளியாகின?


ப: இது பற்றி என்னை தெளிவாகச் சொல்ல விடுங்கள். இலங்கை புலனாய்வு அதிகாரிகள் என்னுடன் பேச ஆரம்பித்த போது எனக்கு இரு தெரிவுகள் இருந்தன. ஒன்று எதிர்ப்பதுஇ இரண்டாவது ஒத்துழைப்பது. நான் மோதினால் நான் நீண்டகால சிறையை எதிர்நோக்க வேண்டியிருந்திருக்கும். அதனால் யாருக்கும் பலன் இருக்காது. ஆனால் நான் ஒத்துழைத்தால் நான் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வென்றெடுக்கலாம். இது எமது மக்களுக்கு சில சேவைகளையாற்றுவதற்கு வாய்ப்பை வழங்கலாம்.


போராட்டம் இப்போதும் தொடர்ந்து அத்துடன் எனது தலைவரும் உயிருடன் இருந்திருந்தால் நான் அரசாங்கத்தை எதிர்த்து ஒத்துழைக்காமல் இருந்திருக்கலாம். நான் எத்தகைய பின்விளைவையும் சந்தித்திருப்பேன். ஆனால் நிலைமை அப்படியில்லை. எல்லாமே முடிந்துவிட்டது. எனவே எதிர்ப்பதில் அர்த்தமில்லை. எனவே நான் ஒத்துழைப்பதை தெரிவு செய்தேன்.

இன்னொரு விடயத்தையும் நான் நினைவுபடுத்த வேண்டும். நான் 2003 ஜனவரியிலிருந்து 2008 டிசெம்பர் வரை நான் இயக்கத்திற்கு வெளியே இருந்தேன். எனக்கு 2003 ஆம் ஆண்டிற்கு முந்தைய விசயங்கள் மட்டுமே தெரிந்திருந்தது. அக்காலப் பகுதியில் கட்டமைப்பிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. சம்பந்தப்பட்ட நபர்களிலும் எனக்குப் பின்னால் வந்தவர்களால் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இதைத் தெளிவாக புலனாய்வு அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறினேன். அவர்கள் எனது நிலையை புரிந்துகொண்டனர்.


நாங்கள் பேசும்போது வேடிக்கையான விடயமொன்று நடந்தது. ஒரு கட்டத்தில் அதிகாரிகள் என்னைப் பார்த்து சிரிக்கத் தொடங்கினர். "உங்களுக்கு தற்போதைய எல்.ரி.ரி.ஈ. பற்றி எதுவும் தெரியாது" என பகிடியாக கூறினர். அவர்கள் சொன்னது சரிதான். பல வருடங்களுக்கு முந்தைய கட்டமைப்புகள் பற்றி மாத்திரமே என்னால் சொல்ல முடிந்தது. 2002 ஆம்ஆண்டுக்கு பின்னரான சூழல் குறித்து எனக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. அதை அவர்கள் உணர்ந்துகொண்டு என்னை பார்த்து சிரித்தனர்.


இலங்கை புலனாய்வுத்துறை எமது மக்களில் சிலர் எண்ணுவதைப்போல் முட்டாள்தனமானது அல்ல. அதேவேளை ஏனைய நாடுகளின் புலனாய்வுத் துறையுடனும் அதிக பரிமாற்றங்கள் மேற்;கொள்ளப்படுகின்றன.


கே: ஆனால் புலம்பெயர்ந்தோர் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்த தகவல்களை நீங்கள் அரசாங்கத்திற்கு வழங்குவதாகஇ நெடியவன் தலைமையிலான காஸ்ட்ரோ சார்பு குழுவும் சில ஊடகங்களும் உங்களுக்கு எதிராக பிரசாரம் செய்கின்றன?


ப: அது எனக்குத் தெரியும். ஆனால்இ உண்மை சற்று வித்தியாசமானது. புலனாய்வு ஆட்களால் பல்வேறு வட்டாரங்களிலிருந்து தகவல்கள் பெறப்படும் அதேவேளைஇ அவர்களுக்கு காஸ்ட்ரோவின் ஆட்களாலும் அதிக தகவல்கள் கிடைத்துள்ளன.


கே: அது எப்படி?


ப: எனக்கு சொல்வதற்கு சற்று தயக்கமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். இராணுவம் விசுவமடுவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தபோது காஸ்ட்ரோவும் அவரின் பிரிவினரும் அனைத்தையும் விட்டுவிட்டு ஓடிவிட்டனர். எனவே புலிகளின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் குறித்து இலங்கை அதிகாரிகளிடம் இப்போது அதிக தகவல்கள் உள்ளன. அவர்களிடம் கணினிகள்இ தகவல் திரட்டுகள் உள்ளன. புலிகளுக்குப் பணம் கொடுத்தவர்களின் பட்டியல்கள்இ திகதிகள்இ தொகைகள் என்பன உள்ளன. அவர்களிடம் வரி பற்றுச்சீட்டுகளின் பிரதிகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் யார் நிதி சேகரிக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். புலிகளினால் முதலீடு செய்யப்பட்ட வர்த்தகங்கள்இ சொத்துக்களை யார் நிர்வகிக்கிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். சுமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வன்னிக்குச் சென்ற அனைவரின் விசிட்டிங் கார்ட்டுகள்கூட அவர்களிடம் உள்ளன. ஆனால்இ தகவல் கொடுப்பவன் என மக்கள் என்னை தூற்றிக்கொண்டிருந்தால் நான் என்ன செய்ய முடியும்?

கே: காஸ்ட்ரோவின் பிரத்தியேக டயரிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அது உண்மையா?


ப: நான் எந்த டயரியையும் பார்க்கவில்லை. ஆனால் புலனாய்வு ஆட்கள் உத்தியோகபூர்வமற்ற விதமாக நட்பு ரீதியில் என்னுடன் உரையாடிய போது காஸ்ட்ரோவின் 20 வருடகால டயரிகள் தம்மிடம் இருப்பதாகக் கூறினர். அவர் (காஸ்ட்ரோ) வெளிப்படையாக பல விடயங்களை அந்த டயரிகளில் எழுதியுள்ளார். ஒரு தடவை அதிகாரியொருவர் என்னிடம் சிரித்துக் கொண்டே காஸ்ட்ரோவுக்கு காதல் தொடர்பொன்று இருந்ததா எனக் கேட்டார். எனக்கு அது பற்றி தெரியாது என்றேன். அவர் சிரித்துக்கொண்டு முழுக்கதையையும் சொன்னார். காஸ்ட்ரோ அது பற்றிகூட எழுதியுள்ளார்.

கே: தமிழிழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்பில் நீங்கள் மிக சக்தி வாய்ந்த நபராக விளங்கிய காலமொன்று இருந்தது. ஆயுதக்கொள்வனவுஇ புலிகளின் கிளைகள் நிர்வாகம்இ நிதி சேகரிப்புஇ மூன்று முக்கிய பிரிவுகளுக்கு நீங்கள் பொறுப்பாக இருந்தீர்கள். 2003 ஆம் ஆண்டில் நீங்கள் இந்த இயக்கத்திலிருந்து விலகியபின் நீங்கள் உங்கள் செல்வாக்கை இழந்துவிட்டதைப் போன்றும்இ 2009 ஆம் ஆண்டு மீண்டும் அதில் இணைந்தபோது உங்களை மீள நிலைநிறுத்திக்கொள்வதற்கு சிரமப்பட்டதைப் போன்றும் தோன்றியது. அப்போது என்ன நடந்தது? ஏன் விலகினீர்கள்? நீங்கள் திருமணம் செய்ததுதான் காரணமா?

ப: இல்லை இல்லை. எனது திருமணம் காரணமல்ல. நான் கடந்த நூற்றாண்டின் 90களின் முற்பகுதியில் திருமணம் செய்தேன். இந்த நூற்றாண்டில் அல்ல. எனது மகள் இப்போது தனது பதின்மர் பருவத்தின் கடைசியில் இருக்கிறாள்.

எனவேஇ நடந்தவை வேறு. 2002 ஆம் ஆண்டு சமாதான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு போர் நிறுத்தம் பிரகடணப்படுத்தப்பட்ட பின்னர்இ தலைவர் பிரபாகரன் புலிகள் அமைப்பை புதிய வழியில் மீளமைக்க முயன்றார். இவ்விடயங்கள் குறித்து நான் வன்னிக்கு வந்து அவரை சந்திக்க வேண்டும் என அவர் விரும்பினார்.


ஆனால்இ அப்போது பல நாடுகளின் புலனாய்வு வலைப் பின்னல்களால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் நான் முன்னிலையில் இருந்தேன். 2001 ஆம் ஆண்டின் செப்டெம்பர் 11 தாக்குதல் உலகின் உலகின் பாதுகாப்பு நிலைவரத்தை மாற்றியிருந்தது. நான் அப்போது இலங்கைக்கு பயணம் செய்யும்' ரிஸ்க்' எடுக்க விரும்பவில்லை. நான் பல நாடுகளின் புலனாய்வு முகவரகங்களால் குறிவைக்கப்பட்டுள்ளேன் என்பதை எனது சொந்த தகவல் வட்டாரங்களின் மூலம் அறிந்திருந்தேன். எனவே நான் தயங்கினேன். இது எனது தலைவருக்கு சினமூட்டியது.


மற்றொரு விடயம் எனக்கும் இயக்கத்திற்கும் தலைவருக்கும் இடையிலான இணைப்பில் (லிங்க்) மாற்றம் ஏற்பட்டது. 15 வருடகாலமாக வேலு என்பவர் எனக்கும் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான தொடர்பாடல் இணைப்பாக அவர் செயற்பட்டார். திடீரென அவர் மாற்றப்பட்டு புதிய ஒருவர் நியமிக்கப்பட்டார். நான் வேலுவுக்கு பழக்கப்பட்டிருந்ததால் புதிய நபருடன் அஜஸ்ட் செய்துகொள்ள எனக்கு கடினமாக இருந்தது. ஒரு வழியில் தொடர்பாடல்கள் பாதிக்கப்பட்டன.


அதேவேளைஇ புலிகளின் பல சிரேஷ்ட தலைவர்கள் போர் நிறுத்தத்தை தமது அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்குப் பயன்படுத்துவதில் அக்கறையாக இருந்தனர்.


புலிகளின் கப்பல்களை கடற்புலிகளின் கட்டுப்படுத்த வேண்டுமென கடற்புலிகளின் தளபதி சூசை விரும்பினார். அதுவரை அக்கப்பல்களுக்கு நான் பொறுப்பாக இருந்தேன். அரசியல் பொறுப்பாளர் எஸ்.பி.தமிழ்ச்செல்வன் புலம்பெயர்ந்த மக்களின் அரசியல் செயற்பாடுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பினார். காஸ்ட்ரோ வெளிநாட்டு நிர்வாகத்திற்குப் பொறுப்பாக இருந்தார். அவர் அனைத்து வெளிநாட்டுக் கிளைகளினதும் முழுக்கட்டுப்பாட்டை பெற விரும்பினார். நிதிக்குப் பொறுப்பாக இருந்த தமிழேந்தி நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் அதிக பங்கு வகிக்க விரும்பினார்.

எனவே அவர்கள் அனைவரும் பிரபாகரன் எனது அதிகாரத்தை குறைத்து அவற்றை தமக்கு வழங்க வேண்டும் என விரும்பினர். போர்நிறுத்தம் காணமாக புலம்பெயர்ந்த மக்கள் பலர் வன்னிக்கு அடிக்கடி வன்னிக்குப் பயணம் செய்தனர். எனவே தம்மால் சகல விடயங்களையும் தொலைபேசிஇ பெக்ஸ்இ மின்னஞ்சல் மூலம் நேரடியாகக் கையாள முடியும் என பிரபாகரனுக்கு புலிகளின் ஏனைய சிரேஷ்ட தலைவர்கள் அறிவுறுத்தினர்.

பின்னர் எனக்கு அதிக பொறுப்புகள் காரணமாக பளுமிகுந்துள்ளதாகவும் எனவே சில நடவடிக்கைகளிலிருந்து நான் ஓய்வுவெடுக்க வேண்டும் எனவும் அவர் பிரபாகரன் தெரிவித்தார். நான் என்ன செய்ய முடியும்? அதனால் நான் ஓய்வு பெற்றேன்.

கே: உங்களுக்கும் வெளிநாடுகளிலுள்ள உங்கள் நெருங்கிய சகாக்களுக்கும் எதிராக சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லையா?

ப: ஆம். சில குற்றச்சாட்டுகள் இருந்தன. சில பெண்களை வன்னிக்கு அனுப்பி எனக்கும் பாரிஸிலுள்ள மனோஇ ஒஸ்லோவிலுள்ள சர்வே ஆகியோருக்கும் எதிராக புகாரிடச் செய்யும் அளவுக்கு அவர்கள் சென்றனர். சில பெண்கள் பிரபாகரனுக்கு முன்னால் சத்தமிட்டு அழுததாகவும் நான் கேள்விப்பட்டேன்.


கே: இதன் பின்னால் யார் இருந்தார்கள்?


ப: அது ஒரு சதி. காஸ்ட்ரோஇ தமிழ்ச்செல்வன் ஆகியோர் அதன் பின்னால் இருந்தனர். கவலையளிக்கும் விதமாக தலைவர் அதில் ஏமாற்றப்பட்டார். நாம் எம்மை நேரடியாக தற்காத்துக்கொள்ள முடியவில்லை.


கே: அதன்பின் என்ன நடந்தது?


ப: நான் முன்பு கூறியதைப் போல தலைவர் என்னை ஓய்வெடுக்குமாறு கூறினார். அதனால் நான் ஓய்வுபெற நேரிட்டது. வெளிநாட்டு நிர்வாகங்களை காஸ்ட்ரோ முழுமையாக பொறுப்பேற்றார். எனது விசுவாசிகள் என அவர் கருதிய அனைவரையும் அவர் நீக்கினார். சில மாதங்களுக்குள் ஏறத்தாழ அனைத்தும் மாறின. புலிகளின் விசுவாசமான செயற்பாட்டாளர்கள் பலர் அவர்களின் பதவிகளிலிருந்து முறையற்ற விதமாக நீக்கப்பட்டனர்.


கே: ஆனால் அப்போதும் நீங்கள் ஆயுதக் கொள்வனவுக்குப் பொறுப்பாக இருந்தீர்கள். ஏன் அது மாறியது? எப்படி ஆனந்தராஜா அல்லது ஐயா உங்களுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்?


ப: அது இன்னொரு கதை. ஐயா மிக விவேகமான மனிதர். அவரிடம் சிறந்த பயண ஆவணங்கள் இருந்தன. சுதந்திரமாகப் பயணிப்பார். அத்துடன் அவர் தகுதிபெற்ற கணக்காளர். எனவே எனது அறிவுறுத்தலின்படி அவர் எமது கணக்குகளை தணிக்கை செய்வதற்காக அவர் சகல நாடுகளுக்கும் செல்வார்.


பின்னர் நான் அதிகமாக அறியப்பட்டு பல புலனாய்வு முகவரகங்களால் தேடப்பட்ட போது எனது பயணங்களையும் நடமாட்டங்களையும் கட்டுப்படுத்திக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டேன். எனவே நான் அவரை ஆயுதச் சந்தையில் ஆயுதங்களை வாங்கக்கூடிய இடங்களுக்கும் அனுப்பத் தொடங்கினேன். ஆந்த இடங்களுடன் அவர் பரிட்சியமானார்.


பின்னர் பிரபாகரனிடமும் எனது பிரதிநிதியாக அவரை நான் அனுப்பினேன். அவர் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன். அவர் எனக்கு விசுவாசமாக இருப்பார் என நினைத்தேன். ஆனால் வன்னியிலுள்ள எனது நண்பர் ஒருவர் 'இவர் உண்மையாகவே உங்களுடைய ஆளா? அவர் உங்களுக்கு எதிராக தலைவரின் மனதில் நஞ்சூட்டிக்கொண்டிருக்கிறார்' என்று கூறியபோது அதிர்ச்சியடைந்தேன். ஐயா தானே சகல ஆயுதக்கொள்வனவுகளையும் மேற்கொள்வது போலவும் அனைத்தையும் தன்னால் செய்ய முடியும் என்பதுபோலவும் காட்டிக்கொண்டதாக அறிந்தேன்.

அதன்பின் ஐயா பற்றி பாலா அண்ணை சொன்னது சரி என்று உணர்ந்தேன்.

கே: பாலா அண்ணை (அன்ரன் பாலசிங்கம்) ஐயா பற்றி உங்களிடம் என்ன சொன்னார்?


ப: பாலா அண்ணையும் அடேல் அன்ரியும் 1999 ஆம் ஆண்டில் வன்னியிலிருந்து கடல் வழியாக வெளியேறியபோது அவர்கள் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தங்குவதற்கும் லண்டனுக்குச் செல்வதற்கு முன்னர் மருத்துவ சிகிச்சை பெறவும் நான் ஏற்பாடு செய்தேன். நான் அப்போது இந்தோனேஷியாவில் இருந்ததால் அவர்களின் நலன்களைக் கவனிக்கும் பொறுப்பை நான் ஐயாவிடம் கொடுத்திருந்தேன். ஆனால் மனிதர்களை மிகச்சரியாக எடைபோடும் பாலா அண்ணை பின்னர் என்னிடம்"'நீ இந்த ஆளை நம்புகிறாய். ஆனால் இருந்துபார் ஒருநாள் உனது இடத்தை அவர் பிடித்துக்கொள்வார்" எனக் கூறினார்.
பாலா அண்ணையின் மதிநுட்பத்தை நான் உணர்ந்தபோது கால தாமதமாகியிருந்தது.


கே: ஆகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் கே.பி. டிபார்ட்மென்ட் என அறியப்பட்டஇ வெளிநாட்டுக் கொள்;வனவுப் பிரிவிலிருந்து நீங்கள் விடுவிக்கப்பட்டீர்கள். அதற்கு என்ன காரணம் சொல்லப்பட்டது?

ப: நான் முன்பே சொன்னதைப்போல் தலைவரை சந்திப்பதற்காக நான் இலங்கைக்குச் செல்லவில்லை. பல புலனாய்வு நிறுவனங்களின் பட்டியலில் மேல் இடத்தில் நான் இருந்ததால் பயணம் செய்வது ஆபத்தானது என உணர்ந்தேன். இந்நிலையில் நான் ஆயுதம் வாங்குவதற்காக பயணம் செய்து ஆபத்துக்குள்ளாவதை தான் விரும்பவில்லை என பிரபாகரன் கூறினார். சில காலத்திற்கு ஓய்வெடுக்குமாறும் அங்கு வருவதற்கும் தன்னை சந்திப்பதற்கும் முயற்சிக்குமாறும் அவர் கூறினார்.
இதன்பின் நான் எனது கடமைகளை விடுவிப்பதைத் தவிர எனக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. எனக்குப் பதிலாக நியமிக்கப்படுபவர்கள் தொடர்ந்தும் என்னிடம் ஆலோசனை கேட்பார்கள் எனவும் பிரபாகரன் கூறினார். ஆனால் அது நடக்கவில்லை.

கே: இது எப்போது நடந்தது. உங்களுக்கும் பிரபாரகரனுக்கும் இடையில் பிரிவொன்று ஏற்பட்டதா? அதன்பின் என்ன நடந்தது?


ப: இது 2002 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடந்தது. 2003 ஆம் ஆண்டிலிருந்து நான் இயக்கத்தின் அன்றாட செயற்பாடுகளிலிருந்து நான் விலகியிருந்தேன். ஆனால் நான் ஒருபோதும் முறையாக இயக்கத்திலிருந்து விலகவில்லை. அது பென்ஷன் இல்லாமல் ஓய்வெடுப்பது போலத்தான்.


அவருக்கும் எனக்கும் இடையிலான நட்பில் பிரிவு எதுவும் இருக்கவில்லை. அவரிடமிருந்து பிரிந்திருக்கவும் என்னால் முடியாது. அவர் எனது தலைவர்இ நண்பர். அத்துடன் எனக்கு ஓர் மூத்த சகோதரன் போல. ஆனால் நடந்த விசயங்களால் நான் வருத்தமடைந்தேன். முன்புபோல் நான் அவரை அடிக்கடி தொடர்புகொள்ளவில்லை. நான் அதைச் செய்யவேண்டுமென அவர் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் நான் அதைச் செய்யவில்லை. நாம் இருவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் திசைத்திரும்பியிருந்தோம். ஆனால் ஆனால்இ ஒரு போதும் பிளவு ஏற்படவில்லை. எமக்கிடையிலான பரஸ்பர அன்புணர்வு நீடித்தது.

கே: அப்போது உங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்களில் ஒரு பகுதியாகஇ பிரபாகரனுக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது எனவும் நீங்கள் துரோகி என அவரால் கருதப்பட்டதாகவும் கூறப்பட்டது.


ப: அது எனக்குத் தெரியும். நான் 2003 ஆம் ஆண்டு புலிகளின் அமைப்பின் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியிருந்த பின்னர் வெளிநாடுகளிலிருந்து புலிகளின் புதிய தொகுதி செயற்பாட்டாளர்களுக்கு என்னைப் பற்றியயோ கடந்த காலத்தைப் பற்றியோ தெரிந்திருக்கவில்லை. எனவே எனக்கெதிராக எதுவும் சொல்லப்பட்டிருக்கலாம்.


உண்மை என்னவென்றால்இ நாம் விலகியிருந்தாலும் எம் இருவருக்கிடையிலும் மிகுந்த அன்பும் பாசமும் இருந்தது. ஒரு சம்பவம் காரணமாக பிரபாகரன் எழுத்து மூலம் என் மீதான அன்பை வெளிப்படுத்தியிருந்தார். வெளிநாட்டிலிருந்த புலிகளின் வான்படைப் பிரிவு செயற்பாட்டாளர் ஒருவருக்கு சில விடயங்களுக்காக என்னுடன் கலந்தாலோசனை நடத்த வேண்டியிருந்தது. அதற்கு தலைவர் அனுமதியளிப்பாரா என்று அவருக்குத் தெரியாமலிருந்தது. எனவே அவரின் முன்னாள் நண்பர் கே.பியுடன் தொடர்புகொள்ளலாமா என்று கேட்டு அவருக்கு ஒரே மெசேஜ் அனுப்பினார். பிரபாகரன் தனது எழுத்து மூல பதிலிலஇ; அதை செய்யலாம் என்று கூறியதுடன் கே.பி. தனது முன்னாள் நண்பன் அல்லவெனவும் 'இன்றும் என்றும் நல்ல விசுவாசமான நண்பன'; எனவும் வலியுறுத்தியிருந்தார்.


கே: எனவே நீங்கள் புலிகள் அமைப்பிலிருந்து ஓய்வுபெற்றீர்கள். அப்போது உங்களுக்கும் புலிகளுக்கும் இடையிலான எல்லா விசயங்களும் முடிந்துவிட்டது என எண்ணினீர்களா?


ப: அவ்வேளையில் நான் அப்படித்தான் நினைத்தேன். நான் புலிகள் அமைப்பிலிருந்து விலகியிருப்பதைப் பற்றி எனது மனைவியிடம் சொன்னது நினைவிலுள்ளது. இப்போது அவளுடனும் எமது மகளுடனும் அதிக காலத்தைச் செலவிட முடியும் என்று கூறினேன். ஆனால் அவள் "உங்களால் உண்மையாக அப்படி செய்ய முடியுமா? மீண்டும் வி.பி. (வேலுப்பிள்ளை பிரபாகரன்) உங்களை அழைத்தால் மீண்டும் திரும்பிச் செல்லாமல் இருக்க முடியுமா?" என்று கேட்டாள்.


எனக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான பிணைப்பை எனது மனைவி உணர்ந்திருந்தாள். அவள் பிரபாகரனின் மனைவி மதிவதனியுடன் தொலைபேசியில் பேசுவாள். அவர்கள் இருவருக்கும் தமது கணவர்களுக்கிடையிலான நெருங்கிய நட்பு தெரிந்திருந்தது.


கே: நீங்கள் மீண்டும் திரும்பிய விடயம் எப்படி நடந்தது? எப்படி ஏன் இந்த இயக்கத்தில் நீங்கள் மீண்டும் இணைந்தீர்கள்? யுத்தத்தின் கடைசி நாட்களில் உங்கள் பாத்திரம் என்ன?


ப: அது மற்றொரு நீண்ட கதை.

(அடுத்த வாரம் தொடரும்)
(தமிழில்: ஆர்.சேதுராமன்)