ஜென்ஸ் கிறிஸ்டியன் குறுண்டால் பாரிசின் கெளரவ விருந்தினர்.
-கரவைதாசன்-
உலகம் முழுவதும் நடைபெறுகின்ற புத்தக கண்காட்சிகளில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நாடாத்தப்படுகின்ற சலோன் தூ லிவ்ரா (Salon du Livre i Paris) புத்தக கண்காட்சி உலக தரம் வாய்ந்த இலக்கிய ஆர்வலர்களாலும் புத்திஜீவிகளாலும் பெரிதும் கவனத்தில் கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த முப்பது வருடங்களாக நடைபெற்று வரும் உலக தரம் வாய்ந்த இக்கண்காட்சிக்கு, இந்த வருடமும் 1000 சதுர பரப்பளவுகளை கொண்ட மண்டபத்தில், உலகின் மிகப் பிரபல புனைவு இலக்கியக்காரர்கள் தொன் நூறுபேர் விருந்தினராக அழைக்கப் பட்டிருந்தார்கள். இவர்களில் அறுபது பேர் பிரெஞ் நாட்டைச் சேர்ந்தவர்கள். மிகுதி முப்பது பேரும் உலகின் பலபாகங்களிலிருந்தும் அழைக்கப் பட்டிருந்தார்கள். இவர்களினது படைப்புகள் முதன்மைப்படுத்தப்பட்டு இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இப் புத்தக கண்காட்சியின் இந்த ஆண்டிற்கான கெளரவ விருந்தினராக சர்வதேச தரம் வாய்ந்த பிரபல எழுத்தாளர்களாக கருதப்படும் , அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கலாநிதி, கவிஞர், நாவலாசிரியர், பின்நவீனத்துவவாதி எனப் பன்முகங்களைக் கொண்ட பல்வகை இலக்கியப் புனைவாளர் பவுல் பெஞ்சமின் அவுஸ்ட்டர் (paul Benjamin Auster ), இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர், விரிவுரையாளர், தத்துவவாதி, இலக்கியவாதி, கலகக்காரர் உம்பெட்ரோ ஏகோ (Umberto Ego), கங்கேரி நாட்டைச் சேர்ந்த புலம் பெயர்ந்த படைப்பாளி ஜெர்மனியில் வாழ்ந்து வருபவர், 2002 ல் புனைவு இலக்கியத்திற்கான நோபெல் பரிசினை தன்னகத்தே கொண்ட இம்ரா கெர்ட்ச்க் (Imre Kertesz), இந்தியாவினை பிறப்பிடமாகவும் இங்கிலாந்தை வாழ்விடமாகவும் கொண்ட பிரபல எழுத்தாளர் சல்மன் ரூஷ்டி (Salman Rushdie) ஆகியோருடன் டென்மார்க்கினைச் சேர்ந்த ஜென்ஸ் கிறிஸ்டியன் குறுண்டால் (Jens Christiyan Grøndahl) அவர்களுடைய பெயரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இருந்தபோதும் ஜென்ஸ் கிறிஸ்டியன் குறுண்டால் அவர்கள் மேல்குறித்த புத்தகக் கண்காட்சியில் கெளரவ விருந்தினராக அழைக்கப்பைட்டதனையிட்டு முழு புனைவு இலக்கிய உலகமும் டெனிஸ் சமூகமும் மகிழ்ச்சிகொள்கின்றது. உண்மையில் இவர் டெனிஸ் இலக்கிய உலகில் அறியப்பட்டளவு பிரென்ச் இலக்கிய உலகிற்கும் பரீட்சியமானவர். இவரால் எழுதப்பட்ட இவரது ஏழாவது பிரென்சு படைப்பான "இளையோரின் தன்னிலைக்கான போக்கு" என்னும் நூல் இப் புத்தக கண்காட்சியில் வெளியிட்டு வைக்கப்பட்டது அனைவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியினை கொண்டுள்ளது. இவரால் எழுதப்பட்ட பிரெஞ்ச் தொடர் ஒன்றின்( Traits et Portraits) இறுதிப் பகுதிக்கு 2008 ம் ஆண்டிற்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது பெரும் சிறப்பாக கருதப்படுகின்றது. தொடர்ச்சியான இவரது எழுத்துப் பணியில் டெனிஸ் மொழியில் இவரால் அண்மையில் எழுதப்பட்ட"ஒரு சில மணித்தியாலங்களில் அகற்றப்பட்டமரங்கள்" (Om en time springer træerne ud) டென்மார்க்கின் மிகப் பெரிய பதிப்பகமான பொலிடிக்கன் பதிப்பகத்தினால் அண்மையில் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment