Wednesday, April 28, 2010


ஸ்பெயின்: ஒரு ஐரோப்பிய போரின்
ஆறாத
ரணம்

-கலையரசன்-
"அப்போதுதான் நாடாளுமன்றக் கூட்டம் சூடுபிடித்திருந்தது. வரவிருக்கும் ஆண்டுகளில் தமது திட்டங்களை ஆளும் கட்சி அறிவித்துக்கொண்டிருந்தது. திடீரென பாராளுமன்றத்தினுள் சில இராணுவத்தினர் துப்பாக்கிகள் சகிதம் உள் நுழைந்தனர். அவர்களில் அதிகாரி போலிருந்தவர் சபாநாயகரின் ஒலிவாங்கியைப் பறித்து அரசாங்கத்தை திட்டித்தீர்த்தார். தொடர்ந்து பல கூக்குரல்கள், அதைத் தொடர்ந்து சடசடவென வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர்கள் கதிரைகளின் கீழ் ஒழிந்து கொண்டனர்.

வானொலியில் பாராளுமன்ற நடப்புகளைக் கேட்டுக்கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். வதந்திகள் காட்டுத்தீபோல் நாடு முழுவதும் பரவின. தலைநகரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இராணுவமும் பொலிஸ{ம் ஆக்கிரமித்துக்கொண்டன. ஆழும் கட்சியான சோஷலிசக் கட்சியின் தலைமையலுவலகத்திற்கு முன்பு கவச வாகனத்தின் பீரங்கி குறிபார்த்தது . பொதுமக்கள் அவசர அவசரமாக வீடுகளுக்குள் பதுங்கினர். "

மேற்படி சம்பவம் நடந்தது எங்கோ ஒரு "அபிவிருத்தியடையாத" மூன்றாம் உலக நாட்டில்அல்ல. "அபிவிருத்தியடைந்த" மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், 1981 ம் ஆண்டு பெப்ரவரி 23 ம்திகதி இது நடைபெற்றது. ஐரோப்பியக் கண்டத்தில் துருக்கி, கிறீஸ் போன்று ஸ்பெயினிலும் உண்மையான ஆட்சியதிகாரம் திரைமறைவில் இராணுவத்தின் கைகளில்தான் இருக்கிறது. என்னதான் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் இராணுவத்தை பகைக்காத வகையில் ஆட்சியில் நிலைக்கலாம். 1981 ம்ஆண்டு ஸ்பெயினில் இராணுவச் சதிப்புரட்சிக்கான சந்தர்ப்பம் இருந்த போதும் அது வெறும் எச்சரிக்கையுடன் நின்று விட்டது.

ஸபெயினில் இராணுவத்தின் ஆதிக்கம் உள்நாட்டுப் போரில் இருந்தே நிலைத்து வருகின்றது. ஸ்பெயின் உள்நாட்டுப்போர் இரண்டாம் உலகப் போரின் தொடக்கம் என்றும், பல சரித்திரவாசிரியர்களால் கூறப்படுகின்றது. ஒருபுறம் வலதுசாரிப் பாஸிச இராணுவமும், மறுபுறம் இடதுசாரி ஆயுதக் குழுக்களும் கோடிக்கணக்கான மக்களைப் பலி கொண்ட போரில் ஈடுபட்டிருந்தன. 1936 ம் ஆண்டு யூலையில் ஆரம்பமாகியது இப் போர். நெப்போலியனின் ஐரோப்பியப் படையெடுப்பால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்பெயின் மன்னர் அல்போன்சோ, அந்த வருடம் பொதுத் தேர்தலை அறிவித்தார். அந்தத் தேர்தலில் லிபரல்களும் சோஷலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் மாபெரும் வெற்றியீட்டினர். வெற்றியீட்டிய கடசிகள் "மக்கள் முன்ணணி" அல்லது "குடியரசுவாதிகள்" என அழைக்கப்பட்டனர். இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் முடியாட்சியை ரத்ததுச் செய்துவிட்டு குடியரைப் பிரகடனம் செய்தனர். கத்தோலிக்க மதத்தின் பிடியில், நிலவுடைமைச் சமுதாயம் நிலவிய ஸ்பெயினில் நிலச்சீர்திருத்தச் சட்டத்தை அறிவித்தனர். வரவிருக்கும்ஆபத்தையுணர்ந்துகொண்ட மன்னர் குடும்பத்தோடு நாட்டை விட்டோடினார்.

புதிய இடதுசாரி அரசாங்கத்தின் முடிவுகளில் அதிருப்தியுற்ற கத்தோலிக்கத் தேவாலயங்கள், முடியாட்சி ஆதரவாளர்கள் ஆகியோர் ஸ்பானியப் பாசிசக்கட்சியான ஃபலாங்கிஸ்டுக்கள் தலைமையில் ஒன்று திரண்டனர். வலது சாரிப் பிற்போக்குவாதிகள் நிறைந்திருந்த ஸ்பானிய இராணுவம் அரசாங்கத்திற்கெதிராகக் கிளர்ச்சி செய்ததது. ஃபலாங்கிஸ்டுக்கள் இந்தக் கிளர்ச்சியை வழிநடத்தினர். ஜெனரல் பிராங்கோவின் தலைமையில் ஆரம்பித்த கிளர்ச்சியாளர்கள் தெற்கு ஸ்பெயினிலும், மொறோக்கோவிலும் (ஸ்பெயின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்கள்) இராணுவ முகாம்களை தமது கட்டப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

ஸ்பெயினின் (மறக்கப்பட்ட) உள்நாட்டுப்போர் இவ்வாறுதான் ஆரம்பமாகியது. அதே காலத்தில் இத்தாலியில் முசோலினியின் பாஸிசக்கட்சியும், ஜேர்மனியில் ஹிட்லரின் நாஸிக்கட்சியும் ஆட்சி நடாத்தின. இவர்கள் ஸபெயினில் தமது தோழர்களான ஃபலாங்கிஸ்டுக்களுக்கு மனமுவந்து உதவி செய்தனர். இத்தாலியின் காலாட்படையினரினதும், ஜேர்மன் விமானப் படையினரினதும் உதவியோடு ஃபலாங்கிஸ்டுக்கள் தலைமையிலான இராணுவம் விரைவிலேயே தெற்கு மற்றும் மேற்கு ஸ்பெயினின் பல இடங்களைக் கைப்பற்றினர். தலைநகரமான மட்றிட் இரண்டாவது பெரிய நகரமான பார்சலோனா உட்பட கிழக்கு ஸ்பெயினில் குடியரசுவாதிகளும், இடதுசாரிக்கட்சிகளும் ஆதிக்கம் செலுத்தினர். லிபரல்கள் தலைமை தாங்கிய குடியரசுவாதிகளின் அரசாங்கத்திற்கு பிரான்ஸ் உதவி செய்து வந்தது. ஆனால், "நடுநிலைமை" வகித்த இங்கிலாந்து அமெரிக்கா ஆகிய நாடுகளின் வற்புறுத்தலால் பிரான்ஸ் தனது ஆயுத விநியோகத்தை நிறுத்தியது. "சர்வதேச சமூகத்தால்" கைவிடப்பட்ட நிலையிலும், கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கினாலும் அரசாங்கம் சோவியத் யூனியனின் உதவியை நாடவேண்டியேற்பட்டது.

இதேவேளை மொஸ்கோவில் தலைமையகத்தைக் கொண்டிருந்த சர்வதேசக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அமைப்பான "கொமின்தேர்ன்" ஸ்பெயினின் உள்நாட்டுப்போரில் தலையிடுவதென முடிவு செய்தது. அன்றைய சோவியத் யூனியன் அதிபரான ஸ்டாலினின் உத்தரவின் பேரில் ஆயுதத் தளபாடங்கள் ஸ்பெயினுக்கு அனுப்பப்பட்டன. உள்நாட்டுப் போரின் வரலாற்றில் ஸ்பெயின் குடியரசு அரசாங்கத்திற்குக் கிடைத்த ஒரேயொரு வெளிநாட்டு உதவி சோவியத் யூனியனிலிருந்துதான் வந்தது.

இதைவிட அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பாவிலும் இருந்த கம்யூனிஸ்ட்கட்சிகள் தத்தமது நாடுகளில் தொண்டர்படைக்கு ஆட்களைத் திரட்டினர். குறிப்பாக அமெரிக்காவிலிருந்து "ஆபிரகாம் லிங்கன் படைப்பிரிவு" ஒரு கறுப்பினக் கொமாண்டரின் தலைமையின் கீழ் அனுப்பப்பட்டமை அமெரிக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். பன்னாட்டுத்தொண்டர் படைகள் ஸ்பெயினின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் போரிட்டனர். இதே நேரம் காலத்தின் தேவையை உணர்ந்து கொண்ட குடியரசு அரசாங்கம் மக்கள் ஆயுதக் குழுக்களை அமைக்க அனுமதி வழங்கியது. அரசாங்கத்திற்கு ஆதரவான இராணுத்தினர் இந்தக் குழுக்களுக்கு தலைமை தாங்கினர். அரச ஆயுதக் களஞ்சியத்திலிருந்து அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன. அப்போதிருந்த பிற இடதுசாரிச் சக்திகளான அனார்கிஸ்டுகளும், ட்ரொட்கிஸ்டுகளும் தத்தமது மக்கள் இராணுவக் குழுக்களை உருவாக்கினார்கள்.

ஆரம்பத்தில் சகல இடதுசாரிக் குழுக்களும் குடியரசு அரசாங்கத்திற்கு தமது ஆதரவை வழங்கின. இருப்பினும் தத்தமது ஆதிக்கத்திற்குட்பட்ட இடங்களில் "கொம்யூன்" என அழைக்கப்படும் மக்களாட்சியை நிறுவினர். கிராமிய நகர மட்டங்களில் சாதாரண மக்கள் நேரடியாகப் பங்குபற்றும் நிர்வாகங்கள் அமைக்கப்பட்டன. இவ்வாறு ஸ்பானிய உள்நாட்டுப் போர் பாஸிஸ்டுகளுக்கு எதிரான போராட்டமாகவும் கலாச்சாரப் புரட்சியாகவும் அமைந்தது. மறுபக்கத்தில் பாஸிஸ்டுகள் தம்மைத் தேசபக்தர்களாகக் காட்டிக்கொள்ள இந்தச் சம்பவங்கள் வழிசமைத்தன. "கம்யூனிச அபாயத்திலிருந்து தாய் நாட்டைக் காக்க போராடுவதாக அவர்கள் கூறிக்கொண்டார்கள். மேலும் அரசியல் அதிகாரத்தை இழந்த கத்தோலிக்கத் திருச்சபை அவர்களின் பக்கம் நின்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயினின் வடக்குப் பகுதியில் பிரஞ்சு எல்லையோரமாக பாஸ்க் மொழி பேசும் மக்கள் சிறுபான்மையினமாக வாழ்கின்றனர். இவர்கள் நீண்டகாலமாகவே ஸ்பெயினின் ஒற்றையாட்சிக்கெதிராக சுதந்திரம் கோரிப் போராடி வருகின்றனர். ஸ்பானிய உள்நாட்டுப்போர் அவர்களுக்கு அரிய சந்தர்ப்பத்தை வழங்கவே "எயுஸ்கடி" என்ற தனிநாட்டைப் பிரகடனம் செய்தனர். ஸ்பெயின் குடியரசு அரசாங்கமும் அதற்கு அங்கீகாரம் வழங்கியது. இருப்பினும் இந்தத் தனியரசு ஓரிரு வருடங்களே நிலைத்து நிற்க முடிந்தது. ஃபலாங்கிஸ்டுக்களின் உதவிக்கு வந்த ஜேர்மனியப் போர் விமானங்கள் பாஸ்க் மக்களின் பிரதான நகரமான குவேர்னிக்கா மீது குண்டு மழை பொழிந்தன. இந்நகரின் அழிவைப்பற்றிக் கேள்வியுற்ற பிரபல ஓவியரான பிக்காஸோ உலகப்பிரசித்தி பெற்ற குவேர்னிக்கா ஓவியத்தை வரைந்தார்.

அதிக ஆயுத பலமற்ற, மேலும் வெளியிடத்திலிருந்து ஆதரவு கிடைக்காத ("அவர்களுக்குத் தனி நாடு வேண்டமானால், அவர்களே பார்த்துக்கொள்ளட்டும்" என்பது குடியரசுப்படைகளின் கருத்தாக இருந்தது) பாஸ்க் தனியரசு முன்னேறிய வலது சாரிப்படைகளுக்கு விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று. எதிரிகளிடம் அகப்பட விரும்பாத பாஸ்க் மக்கள் துறைமுகத்தில் புறப்படவிருந்த கப்பல்களில் ஏறிக்கொண்டனர். இவ்வாறு கப்பலொன்றில் அளவுக்கதிகமான ஆட்கள் தப்பினால் போதுமென்ற நோக்கில் ஏறிக்கொள்ளவே, பாரந்தாங்காமல் நடுக்கடலில் போன கப்பல் அப்படியே தாழ்ந்து போனது. கப்பலில் போன அனைவரும் ஜலசமாதியாகினர். உலகப்பிரசித்தி பெற்ற டைட்டானிக் கப்பலின் கதையை விடத் துயரமான இந்தச் சம்பவத்தை இதுவரை யாரும் திரைப்படமாக்க முன்வரவில்லை. டைட்டானிக்கில் பயணித்தவர்கள் பணக்கார உல்லாசப் பயணிகள், பாஸ்க் கப்பலில் போனவர்கள் சபிக்கப்பட்ட சாதாரண அகதிகள் என்ற பாகுபாடுதான் காரணமா ?

1939 ல் முடிவுக்கு வந்த ஸ்பானிய உள்நாட்டுப்போரின் இறுதியில் பாஸிச இராணுவம் வெற்றிவாகை சூடியது. இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகிறது. இடதுசாரிக் குழுக்களுக்கிடையே நிலவிய ஒற்றுமையின்மை ஒரு முக்கிய காரணம். (சோவியத் சார்பு) கம்யூனிஸ்டுகள், ஸ்ரொட்கிஸ்டகள், அனார்கிஸ்டுகள் எனப்பிரிந்திருந்த இவர்களால் ஒருங்கிணைத்த வேலைத்திட்டத்தை கொண்டவர முடியவில்லை. சில இடங்களில் முரண்பாடுகள் காரணமாக இந்தக் குழுக்கள் தமக்கிடையே சண்டையிட்டுக் கொண்டன. பாஸிச இராணுவத்திற்கு விட்டுக்கொடுத்ததாக ஒருவரையொரவர் இவர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த வாக்குவாதம் இன்றுவரை தொடர்கிறது. இன்னொரு காரணம் ஃபலாங்கிஸ்டுக்களுக்கு நாஸி ஜேர்மனியும், பாஸிச இத்தாலியும் பகிரங்கமாக உதவி செய்தமை தெரிந்த போதும் அமெரிக்கா இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகள் "நடுநிலைமை" என்ற பெயரில் பாராமுகமாக இருந்தனர். மேலும் அதேகாலகட்டத்தில் ஜேர்மனிக்கு எதிரான நேச நாடுகளின் அணி உருவாகியது. இதில் அங்கம் வதித்த சோவியத் யூனியன் ஸ்பானிய குடியரசு அரசாங்கத்திற்கான உதவியை நிறுத்த வேண்டுமென வற்புறுத்தப்பட்டது. இதைவிட சர்வதேசத் தொண்டர் படையை திருப்பியனுப்புமாறு குடியரசு அரசாங்கத்தை இணங்க வைத்தனர்.

எது எப்படியிருப்பினும், மூன்றுவருடப்போரின் முடிவில் ஃபலாங்கிஸ்டுக்களின் இராணுவம் ஸ்பெயினின் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. குடியரசு அரசாங்கத்தை ஆதரித்தவர்கள் பிரான்ஸிற்கும் பிற நாடுகளுக்கும் அகதிகளாகத் தப்பியோடினர். 7 ம்திகதி ஏப்பிரல் மாதம் 1939 ம் ஆண்டு ஜெனரல் ஃபிராங்கோவினால் போரின் முடிவு அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து பாஸிஸ இராணுவ சர்வாதிகார ஆட்சி ஆரம்பமாகியது. ஸ்பானிய சமூகத்தை இரண்டாகப் பிளவு படுத்திய உள்நாட்டு யுத்தத்தால் இலட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் எதிரெதிர் முகாங்களில் நின்று போரிட்டனர். அன்று பிரிந்த சகோதரர்களில் பலர் இன்று ஜனநாயகச் சூழல் வந்த நிலையிலும் ஒருவரோடொருவர் முகம் கொடுத்துப் பேசாத நிலையிலுள்ளனர்.

1939 லிருந்து 1975 வரை சமார் நாற்பது ஆண்டு காலம் நீடித்த பாஸிசச் சர்வாதிகார ஆட்சியின்போது குடியரசு ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு காணாமல்போனார்கள். இவர்களில் பல பெண்களும் குழந்தைகளும் அடக்கம். இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பலர் கொலை செய்யப்பட்டு இரகசியப் புதைகுழிகளினுள் புதைக்கப்பட்டனர். நாடுமுழுவதும் இவ்வாறு நூற்றுக்கணக்கான இரகசியப் புதைகுழிகள் உள்ளன. சில இடங்களில் 5000 த்திற்கும் அதிகமான சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அண்மையில் ஓரிடத்தில் அணைக்கட்டு நிர்மாணப் பணிகள் நடந்தபோது அங்கே மனிதப் புதைகுழி யிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு நாடளாவிய சர்ச்சையைக் கிளப்பியது.

உலகின் பல நாடுகளிலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய செய்திகளை அறிந்திருப்பீரகள். இவற்றிற்குக் கிடைக்கும் சர்வதேச முக்கியத்துவம் காரணமாக குறிப்பிட்ட சில நாடுகளைப் பற்றி மட்டுமே உலக மக்கள் தெரிந்து கொள்கின்றனர். ஆனால், 1975 ம் ஆண்டு ஃபிராங்கோவின் மரணத்திற்குப்பின்பு ஜனநாயக ஆட்சி ஏற்பட்டு பல்லாண்டுகள் ஆகியும் ஸ்பெயினில் இடம்பெற்ற மனித உரிமைகள் பற்றி யாருமே அக்கறை காட்டவில்லை. ஒரு சில மனித உரிமை நிறுவனங்கள் இரகசிய மனிதப்புதைகுழிகளை தோண்ட உரிமை கேட்டு நீதிமன்றத்தில் வழக்குப்போட்டும், எந்தவொரு நீதிபதியும் அதைப்போய்ப் பார்க்கவில்லை.

இந்த அக்கறையின்மைக்கு என்ன காரணம் ? ஃபிராங்கோ காலத்தில் கொலை, சித்திரவதைகளில் சம்பந்தப்பட்ட எந்தவொரு இராணுவ, பொலிஸ் அதிகாரியும் இதுவரை ஏன் கைதுசெய்யப்படவில்லை ? பலமான இராணுவத்திற்கு எல்லா அரசியல்வாதிகளும் பயப்படுவதுதான் அதற்குரிய காரணம். மன்னர் ஹுவான் கார்லோஸ் கூட இன்றும் ஃபிராங்கோ பற்றி உயர்வாகப் பேசுவார். ஸ்பெயினை ஜனநாயகப்படுத்தியதில் மன்னரின் பங்கு பிரதானமானது. கடந்தகால சர்வாதிகார ஆட்சியை மன்னித்து மறந்து விடுமாறு சத்தியம் வாங்கிய பின்னர்தான் அரசியல் கட்சிகள் சட்டபூர்வமாக்கப்பட்டன. மீண்டும் ஒரு இராணுவச் சதிப்புரட்சி ஏற்படுவதை யாரும் விரும்பவில்லை. அதனால்தான் பழசையெல்லாம் மறந்து விடுவோம் என்று பெருந்தன்மையோடு இருக்கிறார்கள்.

ஸ்பானிய இராணுவத்தில் இன்றும் கூட பாஸிஸ பிற்போக்குவாதிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். சோஷலிச அல்லது குடியரசுக் கொள்கைகளுக்கு ஆதரவானவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுகின்றனர். ஃபிராங்கோவின் சர்வாதிகார ஆட்சி நிலவிய காலத்தில், அமெரிக்கா ஸ்பெயினை நேட்டோ அமைப்பில் சேர்த்து அங்கீகரித்தது. ஸ்பானிய இராணுவம் நீண்ட காலமாகவே தன்னை நவீனமயப்படுத்திக் கொள்ள ஆதரவாகவிருந்தது. அதற்கு நேட்டோ உறுப்புரிமை வழிவகுத்துக் கொடுத்தது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இராணுவத் தளபாடங்கள் வாங்குவதற்கு பெருந்தொகைப் பணத்தை ஒதுக்கித் தருகிறது. ஈராக் போரின் போது காரணமில்லாமல் ஸ்பெயின் அமெரிக்காவிற்கு ஆதரவளிக்கவில்லை.

Saturday, April 24, 2010

டெனிஸ் இலக்கிய மூலை



ஜென்ஸ் கிறிஸ்டியன் குறுண்டால் பாரிசின் கெளரவ விருந்தினர்.

-கரவைதாசன்-



உலகம் முழுவதும் நடைபெறுகின்ற புத்தக கண்காட்சிகளில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நாடாத்தப்படுகின்ற சலோன் தூ லிவ்ரா (Salon du Livre i Paris) புத்தக கண்காட்சி உலக தரம் வாய்ந்த இலக்கிய ஆர்வலர்களாலும் புத்திஜீவிகளாலும் பெரிதும் கவனத்தில் கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த முப்பது வருடங்களாக நடைபெற்று வரும் உலக தரம் வாய்ந்த இக்கண்காட்சிக்கு, இந்த வருடமும் 1000 சதுர பரப்பளவுகளை கொண்ட மண்டபத்தில், உலகின் மிகப் பிரபல புனைவு இலக்கியக்காரர்கள் தொன் நூறுபேர் விருந்தினராக அழைக்கப் பட்டிருந்தார்கள். இவர்களில் அறுபது பேர் பிரெஞ் நாட்டைச் சேர்ந்தவர்கள். மிகுதி முப்பது பேரும் உலகின் பலபாகங்களிலிருந்தும் அழைக்கப் பட்டிருந்தார்கள். இவர்களினது படைப்புகள் முதன்மைப்படுத்தப்பட்டு இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இப் புத்தக கண்காட்சியின் இந்த ஆண்டிற்கான கெளரவ விருந்தினராக சர்வதேச தரம் வாய்ந்த பிரபல எழுத்தாளர்களாக கருதப்படும் , அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கலாநிதி, கவிஞர், நாவலாசிரியர், பின்நவீனத்துவவாதி எனப் பன்முகங்களைக் கொண்ட பல்வகை இலக்கியப் புனைவாளர் பவுல் பெஞ்சமின் அவுஸ்ட்டர் (paul Benjamin Auster ), இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர், விரிவுரையாளர், தத்துவவாதி, இலக்கியவாதி, கலகக்காரர் உம்பெட்ரோ ஏகோ (Umberto Ego), கங்கேரி நாட்டைச் சேர்ந்த புலம் பெயர்ந்த படைப்பாளி ஜெர்மனியில் வாழ்ந்து வருபவர், 2002 ல் புனைவு இலக்கியத்திற்கான நோபெல் பரிசினை தன்னகத்தே கொண்ட இம்ரா கெர்ட்ச்க் (Imre Kertesz), இந்தியாவினை பிறப்பிடமாகவும் இங்கிலாந்தை வாழ்விடமாகவும் கொண்ட பிரபல எழுத்தாளர் சல்மன் ரூஷ்டி (Salman Rushdie) ஆகியோருடன் டென்மார்க்கினைச் சேர்ந்த ஜென்ஸ் கிறிஸ்டியன் குறுண்டால் (Jens Christiyan Grøndahl) அவர்களுடைய பெயரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
சோதனை எலிகளாக்கப்படும் பழங்குடிப் பெண்கள்
-மு.வி.நந்தினி -

‘உங்கள் வீட்டு 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் இருக்க தடுப்பு மருந்து கொடுங்கள்’ என சில மாதங்களுக்கு முன் ரேவதி உள்ளிட்ட முன்னாள் நடிகைகள் ஒரு தொண்டு நிறுவனம் தயாரித்த விளம்பரத்தில் பிரச்சாரம் செய்தது நினைவில் இருக்கலாம். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்ற ஆட்கொல்லி நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தகைய பிரச்சாரங்கள் உதவலாம். ஆனால் இவற்றுக்கு இன்னொரு புறம் இருப்பதையும் நாம் கருத்தில் கொள்ளத்தான் வேண்டும்.

‘நோய் வருவதற்கு உண்டான காரணங்களை கண்டறிந்து அவற்றை களைவதற்கு நடவடிக்கை எடுக்காமல், தடுப்பு மருந்துகளை பயன்படுத்துங்கள் என்கிற பிரச்சாரங்கள் மருந்து நிறுவனங்களின் பணப்பையை நிரப்புவதற்காக செய்யப்படுபவை’ என்பது மக்கள் நலனில் அக்கறை கொண்ட மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து பற்றி ஒரு பகீர் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. ஆந்திராவில் சோதனைக்காக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்தை உட்கொண்ட மூன்று இளம்பெண்கள் உயிரிழந்திருக்கிறார். உயிரிழந்த இந்த மூவரும் பழங்குடி இன பெண்கள். இன்னொரு தகவல் என்னவென்றால் ஆந்திரா மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 30 ஆயிரம் பழங்குடி பெண்களுக்கு சோதனை ரீதியில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து கொடுத்திருக்கிறார்கள். இந்த பெண்கள் இறந்ததற்கான காரணம் தடுப்பு மருந்தை உட்கொண்டதுதான் என்று தெள்ளத்தெளிவாக போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லியிருக்கிறது. வழக்கம் போல ஆந்திர காவல் மற்றும் சுகாதாரத்துறை மூன்று பெண்களும் தற்கொலை செய்துகொண்டார் என அறிக்கை (டெக்கான் கிரானிக்கல் செய்தி) விட்டு, சம்பவத்தை மூடிமறைத்துவிட்டார்கள்.

இந்திய அரசு, பழங்குடி மக்கள் மேல் ஆபரேஷன் கிரீன் ஹண்டில் இறங்கியிருக்க, மற்றொரு புறம் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் பழங்குடி பெண்களை சோதனை எலிகளாக்கி இருக்கின்றன. இந்த மருத்துவ அத்துமீறலை எமக்கு தெரியப்படுத்தியவர் மருத்துவர் வீ. புகழேந்தி. கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் ஏற்படுத் கதிர்வீச்சு அபாயம் குறித்து தொடர்ந்து குறல் எழுப்பி வருபவர். சர்ச்சை குறித்தும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்தும் இவரிடம் கேட்டோம்…

“இந்தியாவில் அதிக பெண்கள் பாதிப்புக்கும் உயிரிழப்புக்கும் உள்ளாவது சர்விக்கிள் கேன்சர் என்று சொல்லப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்குத்தான். வருடத்திற்கு கிட்டத்தட்ட 75 ஆயிரம் பெண்கள் இறப்பதாகவும், ஒன்றரை லட்சம் பெண்களுக்கு இந்த புற்றுநோய் அறிகுறி கண்டறியப்படுவதாகவும் அரசு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

சிறு வயதிலேயே பாலியல் தொடர்பு (பால்ய திருமணங்கள் மூலமாக) ஏற்படுவது, ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் பாலியல் உறவு கொள்வது, பால் உறுப்புகளை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பது, கர்ப்பத்தடை சாதனங்கள் பயன்படுத்துதல் போன்றவையே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படக் காரணங்கள். இந்தக் காரணங்களை ஒதுக்கிவிட்டு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து குறித்துதான் இப்போது அதிகமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் டாக்டர் வீ. புகழேந்தி. தொடர்ந்த அவர்,

“இந்த புற்றுநோய் தடுப்பு மருந்தின் விலை 10 ஆயிரம் ரூபாய். தடுப்பு மருந்துகளை இலவசமாகப் போடுகிறோம் என்று கூவிக்கூவி அழைக்கும்போதே அலட்சியம் காட்டுபவர்கள் இருக்க, பத்தாயிரம் ரூபாய் கொடுத்து எத்தனை பேர் போடுவார்கள் என்று தெரியவில்லை. தமிழகத்தின் பெரிய பெரிய கார்ப்பொரேட் மருத்துவமனைகளில் இந்த தடுப்பு மருந்தை போடுகிறார்கள். இது ஒருபுறம் இருக்க, இந்திய மருத்துவக் கழகத்தின் ஒப்புதலோடு ஒரு தனியார் தொண்டு நிறுவனம் Gardasil என்ற பெயர் கொண்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்தை, ஆந்திரா மற்றும் குஜராத்தில் வசிக்கும் 14 வயதுக்குக்கு உட்பட்ட (செக்ஸுவலாக ஆக்டிவ் ஆகும்முன் இந்தத் தடுப்பு மருந்து போடப்பட வேண்டும்) பழங்குடி பெண்கள் 30 ஆயிரம் பேருக்கு பரிசோதனை ரீதியில் அளித்திருக்கிறார்கள். மூன்று தவணைகளில் போடப்பட்ட இந்த மருந்தை மூன்றாவது தவணையாக உட்கொண்ட ஆந்திராவின் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் நடந்திருக்கிறது. தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதால்தான் இந்தப் பெண்கள் உயிரிழந்தார்கள் என மருத்துவபரிசோதனை முடிவுகள் சொல்கின்றன.

தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளும்போது மயக்கம், தலைவலி, நரம்பு மண்டலங்களில் பாதிப்பு, அஜீரணக்கோளாறு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படும் எனவும் உச்சபட்சமாக உயிரிழப்பும் நிகழலாம் எனவும் இந்த மருந்தை கண்டுபிடித்த டாக்டர் டயானா ஹார்ப்பர் தெரிவித்திருக்கிறார். லண்டனில் 14 வயது இளம் பெண் ஒருவருக்கு தடுப்பு மருந்து கொடுத்து உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து டயானா ஹார்ப்பரே ஒப்புக்கொண்ட உண்மை இது. அதோடு இந்தத் தடுப்பு மருந்து புற்றுநோய் வந்தால் அதனுடைய தாக்கத்தை குறைக்குமே தவிர, முற்றிலும் வராமல் தடுக்காது என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

இந்திய மருத்துவக் கழகத்தின் ஒப்புதலோடுதான் பழங்குடியின இளம்பெண்கள் சோதனை மிருகங்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இன்னும் எத்தனை அப்பாவிப் பெண்கள் விபரீத சோதனைகளுக்குப் பலியாவோர்களோ என்பதுதான் நம்முடைய கவலையாக இருக்கிறது.ஜெயந்தி நடராஜன் போன்றவர்கள் தடுப்பு மருந்தின் விலை அதிகமாக இருக்கிறது என்று கவலைப்படுகிறார்களே தவிர, தடுப்பு மருந்தின் பக்கவிளைவுகள் குறித்து அக்கறைப்படவில்லை” என்று காட்டமான டாக்டர் வீ. புகழேந்தி, கர்ப்ப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளை பட்டியலிட்டார்.

“ஒருவனுக்கு ஒருத்தி என்கிற பிரச்சாரத்தை அதிகப்படுத்த வேண்டும். திருமணத்திற்கு முன் பாலியல் உறவு கொள்ளும் பழக்கம் கிராமப்புறங்களில்தான் அதிகமாக இருப்பதாக சமீபத்திய புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது. இத்தகைய காலகட்டத்தில் பாலியல் குறித்த சரியான விழிப்புணர்வை கட்டாயம் செய்தாக வேண்டும். அடுத்து, நாப்கினை உபயோகப்படுத்துவதன் அவசியம் குறித்தும் பால் உறுப்புகளை தூய்மையாக பராமரிப்பது குறித்தும் எடுத்துச் சொல்ல வேண்டும். அரசு, இவற்றை முழுவீச்சோடு செய்தாலே கர்ப்ப்பை வாய் புற்றுநோய் இறப்பு விகிதம் தன்னால் கீழே இறங்கிவிடும்” என்று முடித்தார்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து சர்ச்சை குறித்து தெஹல்கா இதழ் விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது.
நன்றி : பெண்ணியம்

Wednesday, April 21, 2010

தொடர வேண்டிய போராட்டம்


தொடர வேண்டிய போராட்டம்

- கலாநிதி. சி.சிவசேகரம்.. -


சாதி முறை என்பது தென்னாசியாவுக்கே உரிய ஒரு சாபக்கேடு. இந்து தருமம் என்கிற பேரில் அதற்குத் தெய்வங்களின் ஆசி வழங்கப்பட்டுள்ளது. எனினும் சாதியம் என்பது இந்து மதங்களால் உருவாக்கப்பட்டதல்ல. அவற்றால் அது நியாயப்படுத்தப்பட்டது. ஏற்கெனவே இருந்து வந்த சாதிமுறைகளுடன் ஆரிய வருண முறை இணைந்தே இந்தியாவின் இறுக்கமான சாதியமைப்பு உருவாக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் வலுவானவை. சாதி முறை என்பது முழுத் துணைக்கண்டத்திலும் ஒரே விதமான அதிகார அடுக்குக்களைக் கொண்டதல்ல ஒவ்வொரு தேசிய இனமும், பிரதேசமும், சிலசமயங்களில் ஊர்களும், தங்களுக்கேயுரிய நடைமுறைகளைப் பேணிவந்துள்ளன. சமூகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக சாதிப்படி அடுக்கில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சாதிகள் இணைந்துள்ளன. புதிய சாதிகள் உருவாகியுள்ளன. சாதிகளின் தொழில் அடையாளங்கள் மாறியுள்ளன. இனக்கலப்பு பெருமளவில் நடைபெற்ற ஒரு துணைக்கண்டத்தில் சாதிக் கலப்பு பல்வேறு சூழ்நிலைகளிலும் பல்வேறு காரணங்களுக்காக நடைபெற்றிருப்பதை யாரும் மறுக்க இயலாது. என்றாலும் பொருளாதார மாற்றங்களால் ஏற்பட்ட சமூக மேல்நிலையாக்கங்களும் இனக்கலப்பும் சாதிக்கலப்பும் சாதிமுறையை ஏற்காத மதங்களின் தோற்றமும் வருகையும் சாதியத்தை முறியடிக்கவில்லை. பௌத்தமும் அதற்கு முன்னரே சமணமும் சாதியத்துடன் சமரசம் செய்து கொண்டன. அவற்றின் நிலைப்பிற்கு எப்போது அவை நிலவுடமை அரசுகளது துணையை நாடினவோ அப்போதே அத்தகைய சமரசம் அவசியமாகிவிட்டது. கிறிஸ்துவத்தின் பல்வேறு கிளைகளும் சீக்கிய மதமுங் கூடச் சாதிமுறையை உள்வாங்கியே தம்மை நிலை நிறுத்திக்கொண்டன. இஸ்லாம் மட்டுமே சாதியத்துடன் சமரசம் செய்யாமல் மதமாற்றத்தை மேற்கொண்டது. எனினும் முஸ்லீம்களிடையிலும் சாதிப்பாகுபாடு முற்றாக ஒழிந்து விடவில்லை. எவ்வாறாயினும் மற்ற மதங்களின் உள்ளே இருக்குமளவுக்குச் சாதிப்பாகுபாடு முஸ்லீம்களிடையே தீவிரமாக இல்லை. எவ்வாறியினும் மதத்தின் பேரால் சாதியத்தை நியாயப்படுத்தும்;;;;;;;;;; வாய்ப்பு இந்து மதங்களிடை மட்டுமே உள்ளது. சாதி முறையை நிராகரித்துக் கர்நாடகத்தில் உருவான வீரசைவம், பல்வேறு சாதிப்பிரிவினரையும் உள்வாங்கியது. தம்மை இந்துக்கள் என்று அழைப்பதை லிங்காயத்துக்கள் எனப்படும் வீரசைவர்கள் இன்றுவரை மறுத்து வந்துள்ளனர். எனினும் இன்று லிங்காயத்துக்கள் ஒரு தனியான சமூகமாக, ஏறத்தாழ ஒரு சாதியைப்போல ஆகியுள்ளனர். இந்து மதங்களுக்குள் சாதியத்தை முறியடிக்கிற தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராமனுஜர் தாழ்த்தப்பட்ட சாதியினருக்குப் பூனூல் அணிவித்து வைணவர்களாக்கி அவர்கள் எல்லோரும் பிராமணர் என்று பிரகடனஞ் செய்தார். அதைவிடத் தீவிரமான ஒரு செயல் பக்தி இயக்கத்தின்போது தமிழ்நாட்டில் நடந்ததில்லை. எனினும் இந்து என்ற அடையாளத்தை ஏற்ற எந்த மதத்தாலும் சாதிமுறை என்ற மதிலைத் தாண்ட இயலவில்லை. சாதியத்திற்குள்ள மத அங்கீகாரத்துக்கும் மேலாக சாதி முறை துணைக்கண்டத்தின் வர்க்க அமைப்புடனும், உற்பத்தி முறையுடனும், உற்பத்தி உறவுகளுடனும் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்து இருந்ததாலே அது மொழி, மதம் என்கிற சமூக அடையாளங்கட்குச் சமாந்தரமாகவும், சில சமயங்களில் அவற்றை விட வலுவாகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. அகமணமுறை அதனை மேலும் உறுதிப்படுத்தியது. ஆணையே குடும்ப முதல்வனாகக் கொண்ட ஒரு சமுதாயச் சூழலில் கலப்புத் திருமணங்கள் பெண்ணின் சாதி அடையாளத்தை ஆணின் அடையாளமாக மாற்றுவதே வழமையாகயிருந்தபோதும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை உயர்நிலைச் சாதி ஆண் மணந்தால், ஆண் தனது சாதியிலிருந்து நீக்கப்படுவதும் உண்டு. இது இரு சாதிகளிடையே பெரும் ஏற்றத்தாழ்வு உள்ளபோது ஏற்படக்கூடியது. சாதிகள் வௌ;வேறு சமூகங்களாக இருந்து வந்துள்ள ஒரு சூழலில் கலப்புத் திருமணங்கள் சாதிகளின் கலப்பாவதற்கு வாய்ப்பு இருக்கவில்லை. இந்தியத் துணைக்கண்டத்திற் கொலனி ஆட்சி சாதியத்தை மேலும் இறுக்கமாக்கியதே ஒழிய நெகிழ்விக்கவோ இல்லாதொழிக்கவோ எதுவுஞ் செய்யவில்லை.
எவ்வாறாயினும் நவீன உற்பத்தி முறைகளின் வரவும் தொழிலாளி வர்க்கத்தின் உருவாக்கமும் நகரங்களின் பெருக்கமும், சாதிக்கலப்புக்கும் சாதி ஏற்றத்தாழ்வுகளின் நீக்கத்திற்கும் சாதகமான சூழ்நிiலையை உருவாக்கின. சாதிப்பாகுபாடுகட்கும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கட்கும் இப் புதிய சூழல் வாய்ப்புக்களை ஏற்படுத்தியது. பல போராட்ங்கள் வெற்றிபெற்றுள்ளன. எனினும் சாதிமுறையை இன்னமுந் தகர்க்க இயலவில்லை. நகரங்களின் பொது இடங்களிற் தீண்டாமையை கடைப்பிடிப்பது மேலும் இயலாமலாகி வருகிறது. பொது இடங்களிற் சாதித்துவேஷம் பாராட்டுவது பல இடங்களிற் சட்டப்படியும் சமூகத்தினுள்ளும் ஏற்கப்படாததாகியுள்ளது. அனைத்திலும் முக்கியமாகத் தாழ்த்தப்பட்ட சாதியினர் தங்கள் உரிமைக்காகப் போராடவும் அஞ்சாது துணிந்து பேசவும் முடிகிறது. இவற்றில் எதுவுமே தாமாக நிகழ்ந்தவையல்ல. பலவாறான போராட்டங்கள் மூலமே ஒவ்வொன்றும் வெல்லப்பட்டுள்ளது.
அத்தனை வெற்றிகட்குப் பிறகும் தாழ்தப்பட்ட சாதியினரது குடியிருப்புக்கள் தீமூட்டப்படுகின்றன. கலப்புத்திருமணத்திற்கு தண்டனையாகவும் கல்வி கற்று உயர்பதவி பெற்றதற்காகவும் முழுக்குடும்பங்கள் கொல்லப்பட்டுள்ளன. ஊராட்சிகட்குத் தெரிவு செய்யப்பட்டோர் பதவி ஏற்க இயலாத விதமாகப் பலவிதமான வன்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றில் கவனிக்கத்தக்கது ஏதெனில், நாம் அறிய வருகிற வன்முறைகளிற் பெரும் பகுதி சாதி அமைப்பின் உச்சங்கிளையில் அமைந்திருக்கும் பார்ப்பனர்களே. அவர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள உயர் சாதியினரோ செய்வன அல்ல. ஒப்பிடுகையிற் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களே தமக்கு கீழுள்ள தாழ்தப்பட்ட சாதியனர் மீது வன்முறையைப் பிரயோகிக்கின்றனர். இது ஏன்?
அது மட்டுமன்றி குஜராத்தில் நடந்த வன்முறையிற் தாழ்தப்பட்ட சாதியினரும் பழங்குடியினருமே முஸ்லீம்கட்கு எதிரான வன்முறையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதைப் பற்றிப் பேசப் பலர் தயங்குகின்றனர். குஜராத்தின் முதல்வரான இந்துத்துவ பாசிசவாதி நரேந்திர மோடி, உயர் சாதியினரல்ல. ஆனால் பார்ப்பனிய இந்துத்துவ நிறுவனமான பாரதிய ஜனதா கட்சியின் தூணாக இருக்கிறார். எனவே சாதிமுறையையும் சாதியத்தையும் சமூகத்தில் அவை ஆழ வேரூன்றியுள்ளமையையும் மிகையாக எளிமைப்படுத்துவது, தவறான முடிவுகட்கே இட்டுச்செல்லும்.
ஒரு குறிப்பிட்ட வகையான கொடுமைக்கு உட்பட்ட எந்தவொரு சமூகமோ, சமூகப்பிரிவோ அந்தக் கொடுமைக்கும் அதையொத்த கொடுமைகட்கும் எதிராக ஒன்று திரண்டு போராடுவது சரியானது. கொடுமையின் அடிப்படை எதுவோ, அதற்கு எதிரான போராட்டமும் அந்த அடிப்படையிலேயே அமையும். அது சரியானது. ஆனால் ஒவ்வொரு வகையான கொடுமைக்கு எதிரான போராட்டமும் தன்னை நீதிக்கான பிற போராட்டங்களினின்று தனிமைப்படுத்துவது தவறானதும் தன்னையும் பிற போராட்டங்களையும் பலவீனப்படுத்தக் கூடியதுமாகும். இதையே பின்நவீனத்துவம் என்ற பேரில் ஏகாதிபத்திய வாதிகள் தமது என்.ஜீ.ஓ. முகவர்களுடாக ஒவ்வொரு மூன்றாம் மண்டல நாட்டிலுஞ் செய்து வருகிறார்கள்.
தேசி இனப் பிரச்சினையிலிருந்தோ மத அடிப்படையிலான ஒடுக்குமுறையிலிருந்தோ நிறவாதத்திலிருந்தோ வர்க்கப்பரிமானத்தை விலக்கிவிடும்போது, முரண்பாடுகள் இனங்களிடையிலான பகைமையாகவும் மதங்களிடையிலான பகைமையாகவும் வௌ;வேறு நிறத்தவரிடையிலான பகைமையாகவும் உருப்பெறுகின்றன. இவ்வாறான முரண்பாடுகளால் ஒடுக்கப்பட்ட மக்கள் பிளவுபடுகின்றனர். ஒடுக்குமுறைக்கான வசதியாக இன, மத, நிற வேறுபாடுகள் உள்ளனவே ஒழிய, அவையே ஒடுக்குமுறையின் அடிப்படைகளல்ல. எனவே தான் சமூகநீதிக்கான போராட்டத்தில் ஒடுக்கிற தேசிய இனம், மதம், நிறம் என்ற அடையாளங்களைக் கொண்ட சமூகப்பிரிவினர் எல்லாருமே ஒடுக்குமுறைக்கு உடன்பாடானவர்களல்லர். அதைவிடவும் அவர்கள் நடுவிலிருந்து ஒடுக்கப்பட்டோருக்காகக் குரல்கொடுப்போர் மட்டுமல்லாது ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களின் முன்வரிசையில் நின்றோரும் வந்துள்ளனர்.
அதேவேளை ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்குள்ளே ஒடுக்குமுறையை ஏற்போர் மட்டுமன்றி அதைவலிந்து நியாயப்படுத்துவோர் கூட இருந்துள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்களிற் பெரும்பாலனவர்கள் தமது ஒடுக்கப்பட்ட நிலை பற்றிப் போதிய தெளிவுடனும் விடுதலைப் போராட்ட உணர்வுடனும் இல்லை என்பது வருந்தத்தக்க உண்மை. ஆனால் அது மாற்ற இயலாத ஒரு நிலை அல்ல. எனினும் போராட்டங்களைத் தனிமைப்படுத்தி நோக்குவதும் ஒரு முழுமையின் பகுதியாக விளங்கிக்கொள்ள மறுப்பதும், எவ்வகையிலும், ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றுபடுத்தவோ அவர்களது போராட்டங்களை வலுப்படுத்தவோ உதவப்போவதில்லை.
தமிழ்நாட்டில் சாதியத்திற்கெதிரான போராட்டங்களை நீண்டகாலமாக இடதுசாரிகள் முன்னெடுத்து வந்துள்ளனர். வர்க்கச் சுரண்டலும் சாதிக் கொடுமையும் இணைந்த கிராமச் சூழல்களில் எத்தனையோ போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்றுங்கூடச் சாதியத்திற்கு எதிரான போராட்டங்களி;ல் இடதுசாரிகளின் பங்கு முதன்மையானது. ஆயினும் எத்தகைய இடதுசாரிகள் என்ற கேள்வி எழுகிறது. தங்களது சாதி அடையாளங்கட்கும் மேலாக உயர்ந்து சமூகநீதி என்ற நிலைப்பாட்டில் நோக்குகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் சந்தர்ப்பவாhத அரசியலிற் சிக்குண்டு போகிறபோது, அவர்களால் தங்கள் நியாய உணர்வை அதன் தர்க்கரீதியான எல்லைவரை கொண்டுசெல்ல முடியாமற் போகிறது. இவ்வாறான தவறுகள் ஒரு போராட்டத்தின் போக்கால் மட்டுமே திருத்தக் கூடியவை.
ஈ.வெ.ரா. அவர்களது சாதிய விரோத நிலைப்பாட்டிற் குறைபாடுகள் இருந்திருக்கலாம். ஆனாற் சாதிமுறையை அவர் மனமார வெறுத்து நிராகரித்தவர். அவருக்குப் பின்னால் வந்த திராவிட இயக்கத்தை அவருடைய பாதையிற் போக இயலாமற் தடுத்தவற்றுள் அதிகார மோகம் பிடித்த சந்தர்ப்பவாத அரசி;யற் தலைமைகள் முக்கியமானவை.
சாதியத்திற்கெதிரான போராட்டத்தை அதனால் பாதிக்கப்பட்டவர்களே முன்னெடுக்க வேண்டும் என்ற பார்வை தவறான கண்ணோட்டத்துடன் முன்னெடுக்கப்பட்டதனால் இரண்டு முக்கியமான இழப்புகள் நேர்ந்தன. ஒன்று சாதியத்தாற் பெரிதும் பாதிக்கப்படாது இருந்தபோதும் அதைத் தவறானது என்று உணர்ந்து போராட முற்பட்டவர்களை ஒதுக்கியும் வலிந்து பகைத்தும் சிலர் நடந்து கொண்டதனாற் போராட்டம் பல நேச சக்திகளை இழந்தது. இரண்டாவது சாதியப் பிரச்சினையைத் தலித்துக்கள் எனப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் பிறருக்கும் இடையிலான மோதலாக நோக்குகிற போக்கு சாதியத்திற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தை அடையாளங்காண இயலாமற் தடுத்தது.
இவற்றை ஒத்த தவறுகள் ஒவ்வொருவகையான விடுதலைப் போராட்டத்திலும்; நேர்ந்துள்ளன. மாக்சிய லெனினிய வாதிகள் அவற்றைப் பற்றி ஒவ்வொரு தருணத்திலும் எச்சரித்துள்ளதோடு அவற்றைத் தவிர்க்கவும், திருத்தவும் உதவியுள்ளனர். இலங்கையில் நடந்த தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கமே, அவ்விடயத்தில் மிக முக்கியமான முன்னுதாரணமாகும். அப்போராட்டத்தின்போது, தாழ்த்தப்பட்ட சாதியனராயிருந்து சிறிது சமூகமேம்பாடு கண்டவர்கள் சிலர் சாதி மேலாதிக்கம் பேணிய தமிழரசுக்கட்சி போன்றவற்றுடன் சேர்ந்து போராட்டத்தை நிராகரித்ததையும் நாம் அறிவோம். அதேவேளை உயர்சாதியினர் எனப்பட்டவர்களிற் கணிசமானோர் போராட்டத்திற் பல்வேறு தளங்களிலும் பங்கேற்றுள்ளனர்.
தலித்தியம் என்ற பேரிற் தமிழ் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட இயக்கம் தாழத்தப்பட்ட சாதியினரை ஒன்றுபடுத்தத் தவறியது ஏன்? வர்க்கப் போராட்டத்தை எதிர்த்து, வர்க்க அடையாளத்தை ஏற்பது தலித் அடையாளத்தை மறுக்கும் என்று சிலர் தொடர்ந்து வாதித்து வருவது ஏன்? தமிழகத்தின் சாதிக்கட்சிகள் தாழ்த்தப்பட்ட மக்களிடையே உருவாகக் காரணம் என்ன? தலித்தியத்தை என்.ஜீ.ஓக்கள் ஊக்கிவிப்ப ஏன்? இவ்வாறான பல கேள்விகள் நம்மை எதிர் நோக்குகின்றன. வெறுங் கோஷங்களாலும் தனிப்பட்ட அவதூறுகளாலும் நேர்மையற்ற வாதங்களாலும் உண்மைகளை மூடிமறைப்பது என்றென்றைக்கும் இயலுமானதல்ல.
தமிழ்த் தேசியவாதிகளும் நடுத்தரவர்க்கப் பெண்ணியவாதிகளும் மாக்சியத்தை எதிர்க்கப் பயன்படுத்திய அணுகுமுறைகளை 'தலித்தியவாதிகள்” எனப்படுவோர் பயன்படுத்துவதை நாம் காண்கிறோம். அவற்றின் விளைவுகளையும் நாம் அறிவோம். எனவே தான், தேசிய ஒடுக்குமுறை என்பதோ, பால் அடிப்படையிலான ஒடுக்குமுறை என்பதோ, குறிப்பிட்ட ஒரு இனத்திற்கும் குறிப்பிட்ட வர்க்கப்பிரிவு ஒன்றுக்கும்; வரையறுக்கக் கூடியதல்ல. எவ்வாறு பாட்டாளி வர்க்க அணுகுமுறை தன்னை வர்க்கப்போராட்டம் என்ற பேரில் தேசியஇனம், பால், சாதி என்கின்ற அடிப்படையிலான போராட்டங்களின்று விலக்கிக்கொள்ள இயலாதோ, அவ்வாறே சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும் தன்னைத் தனிமைப்படுத்தாது தனது தளத்தை விரிவு படுத்த வேண்டும்
பல தனிமனிதர்களும் சில சாதிப்பிரிவுகளும், தங்களது சமூகமேம்பாட்டுடன், சாதியத்திற்கெதிரான போராட்டத்தை மறந்துவிடுகின்றனர். சாதியமைப்பும் சாதியமும் முழு சமூகத்தையும் பீடித்துள்ள ஒரு நோய். அதற்கெதிரான போராட்டம் பல்வேறு தளங்களிலும் தளராது முன்னெடுக்கப்பட வேண்டும். குறுகிய நோக்கங்களும் சுயலாபத்துக்கான இலக்குகளும் நிராகரிக்கப்பட்டுப் பரந்துபட்ட அளவிலான மானிட விடுதலைப் போராட்டத்தில் சாதியத்திற்கும் சாதி முறைக்கும் எதிரான போராட்டம் ஒரு முக்கிய பங்கு வகிக்க இயலும் அதற்கான வழிமுறைகளை நாம் தேட வேண்டும்……
(இனி இதழ் ஐந்திலிருந்து )

மாமேதை லெனின் விவரணம்

Wednesday, April 14, 2010

ஆமைக் கோதும் மனிதனும்

யுத்தம் ..! முத்தம்...!! யுத்தம்..!!?
என் முதல் முத்தத்தினை - இந்த
யுத்த முனையில்தான்
உமிழ்ந்து பார்த்திருக்கிறேன்.

அது
யுத்தத்திற்கும் சப்தத்திற்கும் இடையேயான
காத்தே புக மறுக்கும்
சிறு இடைவெளியில் நடந்தவை.

அவ்வேளை...
அன்புக்கும்
அமைதிக்கும்
காதலுக்கும் சின்னமான என் இதயமே!
இரத்தம் வடிதலை பொறுக்காது
உடைந்து நொறுங்கும்.

கணப் பொழுதும் பிசகாது
குருதி குடித்துக் குடித்து
கொப்பழிப்பதிலேயே மகிழும் என் இதயமே!
சடுதியாய் தலை கால்களை உள்ளே புகுத்தி
தானே மறைந்ததாய் வாழும்
ஆமையாய் கூனிக் குறுகி
மண்டியிட்ட வேளையினை என்னவென்பேன்.

யுத்தம்.... ம்
அது என் உணர்ச்சியின் உறைவிடம்
முத்தம்....ம்
அது என் உணர்வின் உந்து கோல்
பசி .... ம்
அது என் உயிருடன் கலந்தது.

கரமிரு உழைத்திடும்
பறந்திடும் பசியது.... அல்லேல்
அடி முடி மாற்றி
ஆரம்ப இடத்திற்கே மீண்டு சென்று-
எங்களை நாமே அடித்துப்
புசித்து
குடிமனை அழித்துக் காடுகள் வளர்த்து
கல்லணை படுத்து மிருகங்கள் போல
கலவிகள் செய்து பிறப்பதை உண்டு - பின்பாய்
மனிதத்தை வளர்ப்போம்.

அதற்காக....
அதுவரை....
ஆயுதம் விளைத்து
மனிதமாய் தெரியும் மனிதர்களாகி
யுத்தங்கள் மீது முத்தங்கள் பதிப்போம்.

மாறாக...
யுத்தம் வெறுத்து முத்தம் விரும்பும்
குருதி குடித்துக் குடித்து குமுறும் இதயத்தை
அரிந்தெடுத்து அழித்தே ஒதுக்க
யாரால் முடியும்

லோகன் செல்லம்

Sunday, April 11, 2010




எரிக் பிராம்
-எஸ். தோதாத்ரி-

பொது உடைமைத் தத்துவம் தோன்றி வளர்ந்து வரும்பொழுது அதை எதிர்ப்பதற்கென்றே தோன்றியவர்கள் பலர் உண்டு. இவர்களில் ஒரு வகையினர் அதைப் பகிரங்கமாகவே எதிர்க்கிறார்கள். இவர்கள் பூர்சுவா முகாமின் பிற்போக்கான சிந்தனையாளர்கள். இவர்களது படைப்புகளில் உழைக்கும் மக்களது மாக்சிசம் கேலிக்குள்ளாக்கப்படுகின்றது@ அல்லது, பலத்த கண்டனத்துள்ளாக்கப்படுகின்றது. ஆனால் அதே சமயத்தில், பூர்சுவா முகாமில் பலர் முற்போக்கான சிந்தனை உள்ளவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் உழைக்கும் மக்களது நிலை பற்றிச் சிந்திக்கவும் செய்கிறார்கள். உழைக்கும் மக்களின் தத்துவமான மாக்சிசம் பற்றிப் பேசுகிறார்கள். இவர்கள் பூர்சுவா எல்லைகளுக்குள் இருந்து கொண்டே மாக்சிசம் பற்றிப் பேசும்பொழுது மாக்சிசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். இந்த முயற்சியில் அவர்கள் மாக்சிசத்தை எதிர்க்கிறார்கள். இப்படி முயற்சித்தவர்களில் ஒருவர்தான் எரிக் பிராம் என்ற அறிஞர். இவரது முயற்சியானது, மாக்சிசத்தின் உயிர் நாடியான அம்சங்களை சிதைப்பதில் வந்து முடிகிறது.

எரிக் பிராமின் கருத்துக்களை ஆராய்ந்தால், இது தெளிவாகத் தெரியும். எரிக் பிராம், ஜெர்மனியர். பிராய்டிசத்தில் அதிக ஆர்வம் உள்ளவர். அவருடைய நேரத்தில் பெரும் பகுதியை சமூக உளவியல்த்துறை ஆய்வில் கழித்தார். இதன் பின்னர் அவர் அமெரிக்காவின் பிராங்பர்ட் ஆய்வுக் குழுவுடன் தன்னை இணைத்துக்கொண்டார்.

எரிக் பிராம் உளவியல்த்துறையில் மிகப்பெரும் சிந்தனையாளராக விளங்கினார். அவர் பிராய்டிசத்தை ஆராய்ந்து அதன் துறைகளை நிவர்த்திக்க முயற்சித்தார். பிராய்ட் அவருடைய உளவியலில் தனி நபரை மையப்படுத்திய அறிஞர். மனித நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் சக்தியாக, மனிதனுக்கும், சமூகத்திற்கும் உள்ள உறவைத் தீர்மானிக்கும் சக்தியாக, அவர் நனவிலி மனதில் உருவமற்று அமுங்கிக் கிடக்கும் ´இட் அல்லது பால் உணர்வை முன்வைத்தார். மனிதனின் நடவடிக்கைகளுக்கு அவர் இந்த ´இட் அல்லது ´லிபிடினல்´ சக்தியை ஆதாரமாகக் காட்டினார். மனிதனது சமூக உறவுகளை அவர் தீர்மானிக்கும் சக்தியாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, மனித கலாசாரத்தின் அடிப்படையே இந்த நனவிலி மனதில் உருவமற்றுக் கிடக்கும் பால் உறவு உணர்வுதான் என்று பிராய்ட் கூறினார். பல்வேறு சமூக இயக்கங்கள், கலாசார இயக்கங்கள் ஆகியவற்றிற்கு இந்த ´இட்´ டைத்தான் ஆதார சக்தியாக காட்டினார். படைப்பாளி ஒரு நரம்பு நோயாளி என்றே அவர் கருதினார். பிராய்டின் கருத்து இன்றும் கூட, கலை இலக்கிய உலகில் ஒரு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை காண முடிகிறது.

அதே சமயத்தில் பிராய்டின் கருத்துக்களை ஆழமாகப் பயின்றவர்கள், அதில் உள்ள குறைகளையும் கண்டனர். அக்குறைகளை அவர்கள் களைய முற்பட்டனர். இவர்கள் புதிய பிராய்டிசவாதிகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களது முயற்சி, பிராய்டு புறக்கணித்த சமூக சிந்தனையை பிராய்டிசத்துடன் ஒன்று கலப்பதாக இருக்கின்றது. இவர்களில் முக்கியமானவர் எரிக் பிராம் ஆவார்.

எரிக் பிராமின் Escape from freedom என்ற புத்தகத்தில் அவருடைய கருத்துக்கள். மிகத் தெளிவாகக் காணப்படுகின்றன. எரிக் பிராமின் கருத்துப்படி, பிராய்ட்; சமூகம் பற்றி மிகவும் கொச்சையான கருத்து உள்ளவராகவே இருந்தார். சமூகப் பிரச்சினைகள் பற்றி பிராய்ட்; உளவியல் ரீதியாக கூறியவை யாவும் குழப்பமான முடிவுகளையே தந்துள்ள என்று பிராம் கருதினார்.

பிராய்டின் கருத்து அமைப்பில் Repression அல்லது உள்ளடக்குதல் ஒரு முக்கிய மான கருத்தாகும். பால் உறவு நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டு பிராய்ட் இக் கருத்துப் படிமத்தை உருவாக்கினார். பால் உறவு நிகழ்ச்சிகளை மனிதன் வெளியே சொல்ல விரும்புவதில்லை. இவற்றை இரகசியமாகவே வைத்திருக்க விரும்புகிறான். அவற்றில் பெரும்பாலானவற்றை நனவு மனதில் இருந்து நனவிலி மனதிற்குள்ளாக அடக்கிவிடுகின்றான். இது வேண்டத்தகாத நிகழ்ச்சிகளை உள்ளடக்கும் இடத்திற்குச் சென்றுவிடுகிறது. இந்த உள்ளடக்குதல். என்பது, தனிநபர் மனதில் நிகழும் நிகழ்ச்சி: இந்த பால் உறவு நிகழ்ச்சிகளின் உள்ளடக்குதலை பிராய்ட் அவரது கருத்தமைப்பிற்கு அடிப்படையாக ஏற்றுக்கொண்டார்.

எரிக் பிராம் இக்கருத்தை மறுக்கிறார். ”உள்ளடக்கம்” என்பது இன்றைய சமூக அமைப்பில் செயலற்றதாகிவிட்டது. என்று அவர் கூறுகிறார். அதற்கு பதிலாக இன்றைய மனிதனை ஆட்டிப் படைப்பது ”அந்நிய மயமாதல்” இன்றைய தொழிற்சாலை அமைப்புள்ள சமூகத்தில் தனி மனிதன் தன்னை இனங்காண முடியாதவாறு விலகி நிற்கிறான். இந்த அந்நிய மயமாதல் என்ற பிரச்சினை மிக முக்கியமானது என்று பிராம் கருதுகிறார். உளப் பகுப்பாய்வியலில் பிராய்ட் இது பற்றிப் பேசவில்லை. ஆனால் இன்றைய சூழ்நிலையில் உளப் பகுப்பாய்வியலில், இந்த அந்நிய மயமாதல் பற்றிக் காணுதல் வேண்டும்@ அது நனைவிலி மனதில் ஏற்படுத்தும் விளைவுகளைக் காண வேண்டும். மனிதனின் தேவைக்கு ஏற்ப சமூகத்தை மாற்றி அமைக்கும் முயற்சியினால் ஏற்படும் மன விளைவுகளை பிராய்டிசம் ஆராய வேண்டும் என்று பிராம் கூறினார். பழைய பிராய்டிசத்தில், சமூகம் மனதில் ஏற்படும் விளைவு பற்றிய ஆராய்ச்சி இல்லாமல் இருந்தும், அதை நிவர்த்திக்க பிராம் முயன்றார்.

விரும்பத் தகாதவற்றை உள்ளடக்குதல் என்பது பிராய்டை பொறுத்த மட்டிலும் அகவயமான ஒன்றாகும். அது ஒரு தனி நபர் மனதில் அகத்தே நிழக் கூடிய நிகழ்ச்சி. அதற்கும் சமூக நிகழ்ச்சிகளுக்கும் தொடர்பு எதுவும் இல்லை. இவ்வாறு தான் பிராய்ட் கருதினார். எரிக் பிராமின் கூற்றுப்படி, உள்ளடக்குதல் என்பதை அகவயப்படுத்தப்பட்ட ஒன்று என்று கருதக் கூடாது. சமூக நிகழ்ச்சிகளின் தாக்கம்தான் அது என்று அவர் கருதினார். ஒவ்வொரு கால கட்டத்திலும் சமூகம் சில சிந்தனை முறைகளை, வகைகளை உருவாக்குகிறது. இந்த வகைகளுக்குத் தனி நபர் பதில் இறுக்க வேண்டியிருக்கிறது. இவற்றிக்கு முரண்படக் கூடிய உணர்வுகளை, எண்ணங்களை தனி நபர் உள்ளடக்குகிறான். இவ்வாறு பிராம் உள்ளடக்குதலுக்கு சமூக அமைப்பிலிருந்து காரணம் தேடினார். நனைவிலி மனதில் இடம் பெறும் உள்ளடக்குதல் என்ற நிகழ்ச்சிக்குச் சமூகக் காரணங்களைக் காண வேண்டும் என்பதை பிராம் எடுத்துக் காட்டினார். அது வெறும் பால் உறவு சம்பந்தமான விஷயம் அல்ல என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

பிராய்ட் தனி நபரை மையமாகக் கொண்டு, நனவிலி மனதை அணுகினார். ம நிகழ்ச்சிகளைத் தனிநபர் நடவடிக்கைகளின் சாராம்சமாகக் கண்டார். பிராம் அதே நனவிலி மனதை சமூக நிகழ்ச்சிகளிலிருந்து ஆராய முற்பட்டார். பிராய்ட் தனிநபர் நனவிலி மனது பற்றிப் பேசுகிறார். பிராம், சமூக நனவிலி மனது பற்றி ஆராய்கிறார். இந்தச் சமூக நனவிலி மனது என்பது, ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் உள்ள சமூக உறவுகளினால் உருவாக்கப்படும் மனிதனின் மனப் பகுதியைக் குறிக்கிறது. இது சமூகத் தன்மை மிகுந்தது. இந்தச் சமூக நனவிலி மனது, பொதுப்படையான பன்புகளை உடையது.

இந்தச் சமூக நனவிலி மனது என்பது, மனித சாராம்சத்தைக் குறிக்கிறது. இச் சாராம்சத்தில், மனிதனுடைய மூலாதாரமான மாற்ற முடியாத தேவைகள் அடங்கியுள்ளன. இத் தேவைகளைத் தீர்மானிப்பது மனிதனது இருப்பு எல்லாவற்றையும் கடந்த (பிறர், இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம்) ஒரு பொது நிலை ஆகியவற்றிக்கு இடையே உள்ள முரண்பாடு ஆகும்.

இந்த முரண்பாடு உளவியலில் இருப்பதை பிராம் ஆராய்ந்த பின்பு, இதன் காரணமாகத்தான் பெரும் புரட்சிகள் தோன்றுகின்றன என்று கருதினார்.
பிராய்டை இவ்வாறு பூர்த்தி செய்யும் முயற்சியில் இறங்கிய பிராம், ஒரு முழுமையான தத்துவத்தின் உருவாக்க முயற்சியை மேற்கொள்கையில் மார்க்சை ஆளமாகக் கற்றார். பிராமிற்கு மார்க்ஸ்மீது ஒரு பெரிய மரியாதை ஏற்படுகிறது. அதே சமயத்தில் மார்க்சிசம் குறைபாடு உடையது என்று கருதுகிறார். மார்க்சிசம் நடைமுறைப்படுத்தப்பட்ட முறைகளை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. சோவியத் முறையுடன் அவர் முரண்படுகிறார். சோஷலிசக் கோட்பாடுகளிலிருந்து முற்றிலும் முரண்படும் ஒன்று என்று சோவியத் மார்க்சிசத்தை அவர் விமரிசனம் செய்கிறார். மார்க்சிசத்தைச் சிதைத்தற்கு லெனினையும், ஸ்டாலினையும் அவர் குற்றம் சாட்டுகிறார். தமது கடைசிக் காலத்தில் மார்க்சும், எங்கல்சும் குழம்பிவிட்டனர் என்று கூறுகிறார். பிராமின் கருத்துப்படி, மார்க்சிசத்தில் ஒரு பெரிய குறைபாடு உள்ளது. மார்க்ஸ் காலத்தில், பொருள்முதல்வாத அடிப்படையிலான உளவியல் என்பது வளர்ச்சி பெறவில்லை, மனப்பண்புகளைப் பற்றிய இன்று கிடைக்கும் விவரங்கள் அன்று அதிகமாக இல்லை: எனவே மார்க்சின் தத்துவம் உளவியலை முற்றிலுமாக புறக்கணித்த ஒன்றாகும். மார்க்ஸ் மனித உணர்ச்சிகளின் சிக்கலான, வலுவான தன்மைகளை குறைத்தே மதிப்பிட்டார் என்று பிராம் கூறுகிறார். மனிதன், சமூகப் பொருளாதாரக் காரணிகளால் மட்டும் உருவாக்கப்பட்டவன் அல்ல: மனப்பண்புகள் சமூகப் பொருளாதாரக் காரணிகளையும் கட்டுப்படுத்தும். இவற்றை மார்க்ஸ் ஆராயவில்லை என்று பிராம் கூறினார்.
இக்குறையை எவ்வாறு நிவர்த்திப்பது என்ற ஆராய்ச்சியில் பிராம் இறங்கினார். அதன் விளைவாக அவர் ஒரு முடிவிற்கு வந்தார். மார்க்சையும், பிராய்டையும் ஒன்று கலப்பது என்பது அந்த முடிவாகும். மார்க்சிசத்தில் உளவியல் அம்சங்கள் இல்லை. மார்க்சிசம் வெறும் பொருளாதார மனிதனை மட்டும்தான் உருவாக்குகிறது – அவனது மனப்பண்புகளைப் பற்றிய ஆராய்ச்சி அதில் இல்லை. அதே சமயத்தில் பிராய்டிசத்தில் சமூகக் காரணிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை. இந்த இரு அம்சங்களையும்; ஒன்று கலப்பதன் மூலம் இவற்றின் குறைகளைக் களையலாம் என பிராம் கருதினார். மார்க்சிசத்தின் சமூகவியல் பார்வையுடன் பிராய்டிசத்தின் உளப்பகுப்பாய்வு முறையை ஒன்று கலந்த ஒரு அமைப்பை அவர் உருவாக்கினார்.

மார்க்சிசத்தின் மையமான பகுதி சமூக நிகழ்ச்சிகளை எது தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறது என்பதாகும். மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோர் உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகியவை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்ற என்று கூறினார். பிராம் இந்த இரண்டினையும் இணைக்கும் பணியினை மேற்கொள்ளும் பொழுது சமூகப் பண்பு என்ற கோட்பாட்டினை உருவாக்கினார். மனித நடத்தை பற்றி பிராய்ட் உருவாக்கிய கூறுகளின் அபிவிருத்தி என்று இந்தக் கோட்பாட்டைப் பிராம் கூறுகிறார். பிராய்ட் காணும் மனிதன், பால் உறவு நாட்டத்தை, ஒரு குறிப்பிட்ட இலட்சியத்தினை நோக்கி திருப்புகின்றன. இந்தக் கண்ணோட்டத்தில் ஒரு மனிதனுக்கும், மற்றொரு மனிதனுக்கும் உள்ள உறவு, இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு ஆகியவற்றை விளக்கப்போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவேதான் மார்க்சிசத்தில் காணப்படும் சமூகச் சிந்தனையை இத்துடன் இணைத்து சமூக நடத்தை என்ற கோட்பாட்டினை பிராம் உருவாக்கினார்.

ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பின் பண்புகளை ஒரு மனிதன் தன் வயப்படுத்துவதில் பல சிரமங்கள் உள்ளன. சமூக அமைப்பிற்கும் பொருத்தமாகத் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படுகிறது. இவ்வாறு சமூக அமைப்பிற்கும் பொருத்தமாக மாறும் நடத்தையைத்தான் பிராம் சமூக நடத்தை என்கிறார். சோசலிச மனித நேயம் என்ற புத்தகத்தில் அவர் கூறுகிறார். அவன் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய விரும்புகிறான். சமூகம் உருவாக்கும் நிபந்தனைகளில் அவன் திருப்தி காண்கிறான். இதன் காரணமாக மனிதனுக்கும் சமூகத்திற்கும் ஒரு இசைவு தோன்றுகிறது.

இந்தச் சமூக நடத்தை என்ற கோட்பாட்டை மார்க்சிசத்துடன் இணைக்கிறார். இது மார்க்சிசத்தை அபிவிருத்தி செய்வதாகும் என்று பிராம் கருதுகிறார்.
மார்க்சிசத்தில் அடிப்படை மேற்கோப்பு என்ற கருத்துப்படிமம் பின்பற்றப்படுகிறது. சமூகம் (உற்பத்திக் கருவிகள், உறவுகள்) அடிப்படை@ அதற்கு சமமான சிந்தனை உலகம், மேற்கோப்பு எனப்படுகிறது. மார்க்சின் கருத்துப்படி அடிப்படையின் பிரதிபலிப்பு மேற்கோப்பு என்பதாகும். மேலும் அடிப்படைதான் மேற்கோப்பைத் தீர்மானிக்கிறது என்று மார்க்சிசம் கூறுகிறது.
பிராம் இந்த விளக்கத்தில் மார்க்ஸ் தவறு செய்துவிட்டார். என்று கருதுகிறார். மனதும், அதன் செயலுக்கும் இந்த விளக்கத்தில் இடமில்லை ஆதலால், பிராம் சமூக நடத்தை என்ற ஒரு புதிய கருத்தை அடிப்படை மேற்கோப்பு ஆகியவற்றிற்கு ஊடாக நுழைக்கிறார்.
சமூக அமைப்பு, சமூக நடத்தையை உருவாக்குகிறது. சமூக நடத்தை அதற்குச் சமமான சிந்தனை உலகத்தை தோற்றுவிக்கிறது. என்று புதிய விளக்கத்தை பிராம் கொடுத்தார்.
சமூக நடத்தை (சமூக மனது) என்ற இந்த விளக்கம் இல்லாததன் காரணமாக மாக்சிசம் குறைபாடு உடையது என்பது பிராமின் கருத்து.
உளவியல் காரணிகள் மட்டுமே பிராய்டிசத்தில் தீர்மானிக்கும் சக்தியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பொருளாதாரக் காரணிகள் மட்டுமே மாக்சிசத்தில் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. இந்த இரண்டும் ஒன்று கலந்த ஒன்றுதான் பிராமின் சமூக நடத்தைக் கோட்பாடு.

இதை விளங்கிக் கொள்ள ஒரு உதாரணம் கூறலாம். பாசிசம் என்பது, ஜெர்மானிய கீழ்மட்ட மத்திய வர்க்கத்தினரின் கோட்பாடு. முதல் உலகப் போருக்குப் பின்னர் வளர்ந்த பணவீக்கம் ஏக போகங்களின் வளர்ச்சி ஆகியவற்றிக்கு மத்தியதர வர்க்கத்தினர் பதில் செயல் புரிந்ததன் விளைவே பாசிசம். இந்தப் பணவீக்கம் ஏக போகங்களின் வளர்ச்சி ஆகியவை இவ்வர்க்கத்தின் மன உணர்வுகளுடன் கலந்து, பல மாறுதல்களை அடைந்து பாசிசமாக வெளிப்படுகிறது. இந்த மன உணர்வுகளில் பல ஒன்றுக்கொன்று முட்டி, மோதி ஒரு சமநிலை அடையும்பொழுது அது பாசிசமாக அல்லது நாசிக் கருத்துகளாக வெளியாகிறது. இவ்வாறு பிராம் உலக நிகழ்ச்சிகளை விளக்க முற்பட்டார்.

பிராம் மார்க்சிசத்தில் மாறுதல் செய்ய விழையும் பொழுது இந்த முறையில் அடிப்படை, மேற்கோப்பு ஆகியவற்றிக்கு இடையே சமூக நடத்தை என்ற கருத்தை நுழைத்தார். அவர் கருத்துப்படி அடிப்படை சமூக நடத்தையைப் பாதிக்கிறது. அதாவது சமூக நனவிலி மனதினைத் தாக்குகிறது. இந்தச சமூக நடத்தை மேல் கோப்பினை உருவாக்குகிறது.

பிராம் புதிய இடதுசாரிகளுள் ஒருவர். புதிய இடதுசாரிகள் மாக்சிசத்தின் குறைகளைக் களையும் துப்பரவுப் பணியில் புதிய, வளர்ச்சி பெற்றுள்ள பூர்சுவா சமூகத்தில் முரண்பாடுகள் இல்லை என்று கூறுவதுதான். இதன் விளைவுதான் பிராமின் படைப்புகள்.

பிராமின் கருத்துக்கள் மாக்சியம் பற்றிப் பேசும்பொழுது புரட்சிகரமாகத் தோன்றினாலும், அதில் ஒரு தர்த்துவார்த்தப் பிழை இடம்பெறுகிறது. அவரது கருத்தின்படி, புரட்சி தேவையில்லை என்ற ஒரு முடிவு ஏற்படுகிறது. இன்று உள்ள தொழில் வளர்ச்சி பெற்றுள்ள நாடுகளில் மனிதர்கள் அந்நிய மயமாகி உள்ளார்கள் இவர்கள் வாழ்க்கையில் உள்ள வசதிகள் தாம் இதற்கு காரணம். இந்த அந்நியமயமாதல் உலகம் முழுவற்குமான ஒரு நிகழ்ச்சி@ இந்தச் சமூக விளைவை அகற்றுவதற்குச் சில சீர்திருத்தங்கள், சில மாறுதல்கள் ஆகியவற்றைச் செய்து கொண்டாலே போதும் அடிப்படையில் ஏற்படும் மாறுதல்கள் சமூக நடத்தையை தாக்கும் பொழுது, சமூக நடத்தையைச் சரி செய்து கொண்டால் அவற்றைச் சமாளிக்கலாம் என்ற முடிவு பிராமின் முடீவு ஆகும். இது மாக்சிசத்திற்கு முரண்பாடான ஒன்றாகும்.

பிராய்ட் உளவியலைப் பற்றித்தான் அதிகம் சிந்தித்தார். சமூகத்தைப் பற்றிச் சிந்திக்கவில்லை என்பது ஆராய்வதற்குரிய கருத்து. இக்கட்டுரையில் அது பற்றி ஆராய முடியாது. மார்க்சின் சமூகச் சிந்தனையுடன் பிராய்டின் உளப்பகுப்பாய்வினை ஒன்று கலத்தல் என்ற பிராமின்; கருத்து, கேள்விக்குரிய ஒன்றாகும். மார்க்ஸ் அடிப்படையில் இயங்கியல் பொருள்முதல்வாதி. பிராய்ட் அடிப்படையில் கருத்து முதல்வாதி, இந்த இருவரது சிந்தனை அமைப்பின் சில அம்சங்களை ஒன்று கலப்பது என்பது மறுபடியும் கருத்து முதல்வாதத்திலேதான் முடிவடையும். கருத்து முதல்வாதிகள், பல கருத்துக்களை ஒன்று கலந்த ஒரு புதிய கருத்தை உருவாக்கிவிடுவாhர்கள். ஆனால் அவை எல்லாம் சாரம்சத்தில் கருத்து முதல்வாதத்தின் பல்வேறு வடிவங்களாகத்தான் இருக்க முடியும். மார்க்ஸ் கருத்து முதல்வாதியான கெகலின் இயங்கியல் முறையைப் பொருள்முதல்வாதத்திற்குப் பயன்படுத்தினார். இதனால் பல வியப்பான சமூகவியல் உண்மைகளை வெளிப்படுத்தினார். ஆனால் பிராம் இயங்கியல் பொருள்முதல்வாதக் கோட்பாட்டினைக் கருத்து முதல்வாதத்துடன் கலந்து ஒரு நடுப்பாதையை மேற்கொண்டார்.

இந்தப் பாதை என்பது, மாக்சியத்தை மறுக்கும் ஒருவகையான பாதையாகும் என்பதை வாசகர்கள் மனதில் கொள்ள வேண்டும்.
(இனி இதழ்5)

Saturday, April 10, 2010

எதுவரை இதழ் மூன்று


மஹிந்த ராஜபக்சாவை சுற்றியுள்ள நெருக்கடிகள் அல்லது ராஜபக்ச குடும்பத்தின் எதிர்காலம் ? நாடுஎதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் .

-கிரிஷ்ணமூர்த்தி அரவிந்தன்
--
(எதுவரை இதழ் மூன்றிலிருந்து )

இலங்கைத்
தீவில் இப்பொழுது மகிந்த ராஜபக்ஸ அல்லது ராஜபக்ஸ குடும்பம் இரண்டாவது வெற்றியை பெற்றிருக்கிறது. ஒன்று புலிகளுடனான போரின் போது கிடைத்த வெற்றி. அடுத்தது ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வெற்றி. இந்த இரண்டு வெற்றிகளும் அநேகமாக யாருமே எதிர்பார்த்திருக்காதவை. ஏன் வெற்றி வெற்றவர்களே எதிர்பார்த்திராத வெற்றிகள் இவை. அதிலும் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்த லின் வெற்றி பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது. அதேவேளை இந்த வெற்றி இலங்கையின் அரசி யல், சமூக, பொருளாதார நிலைமைகளிலும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தவுள்ளன. உண்மையில் இந்த விளைவுகள் சாதகமாவதும் பாதகமாவதும் வெற்றி பெற்ற ராஜபக்ஸ குடும்பத்தின் கைகளில் இல்லை. பதிலாக எதிர்த்தரப்புகளின் கைகளிலேயே அது தங்கியுள்ளது.
இப்பொழுது வெற்றி பெற்றிருப்பவர் மகிந்த ராஜபக்ஸ அல்ல. அவர் இப்போது நெருக்கடி என்ற பெருங்குழியின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளார்.
இனிவரும் நாட்கள் அநேகமாக மகிந்த ராஜபக்ஸவுக்கான நெருக்கடியாகவும் ராஜபக்ஸ குடும்பத்தின் நெருக்கடியாகவும் இருக்கப் போகின்றன. அதே வேளை இதனை மக்களும் ஏனைய அரசியற் கட்சிகளும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் சரியாகக் கையாளாதுவிட்டால், அது மக்களின் மீதான நெருக்கடியாகவும் மாறக்கூடிய அபாயமுண்டு. எதிர்க்கட்சிகள், எதிரணிகள், ஊடகங்கள் மீது ஏற்படக்கூடிய பெரும் அபாயநிலையாகவும் மாறக்கூடும். எது நடந்தாலும் ஒரு குறிப்பிட்ட எல்லைவரை நாடு பெரும் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்படவேபோகிறது.
இப்போது புலிகளுடனான போர் முடிந்த பின்னர், அது சிங்கள அரசியற் கட்சிகளின் போராகமாறியுள்ளது. சிறுபான்மை மக்களின் மீது செலுத்தப்பட்ட நெருக்கடிகள் தளர்வடைந்து அது, பெரும்பான்மைச் சமூகத்துக்குள்ளேயான நெருக்கடியாக மாற்றமடைந்துள்ளது. புலிகளை முற்றாக அழித்தால் மகிந்த ராஜபக்ஸ தன்னுடைய கையைத் தானே சுட்டுக் கொண்டதாகத்தான் அமையும் என அரசியல் ஆய்வாளர் ஒருவர் புலிகளின் வீழ்ச்சிக்கு முன்னே குறிப்பிட்டது இங்கே நினைவுக்கு வருகிறது. இப்போதைய நிலை ஏறக் குறைய அப்படித்தானிருக்கிறது.
மகிந்த ராஜபக்ஸவின் நான்காண்டுகால ஆட்சியா னது இலங்கைத் தீவின் நீண்டகாலப் போரை முடிவுக் குக் கொண்டு வந்தது என்பதைத் தவிர ஏனைய எல்லா விதத்திலும் எதிர்நிலையான விசயங்களையே உருவாக்கியுள்ளது. ஜே. ஆர்.ஜெயவர்த்தனாவுக்குப் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் உள்ள அத்தனை அதிகாரங்களையும் சிறுபான்மைச் சமூகங்களுக்கெதிராகவும் பிற அரசியற்கட்சிகள், மக்களுக் கெதிராகவும் பாவிக்கக் கூடியவராக மகிந்த ராஜபக்ஸ இப்போதிருக்கிறார். ஜே.ஆரின் காலத்தில் அவருக்குத்தோதாக சிறில் மத்யூ, காமினி பொன்சேகா, லலித் அத்துலத்முதலி போன்றோர் இருந்தனர். மகிந்த ராஜபக்ஸவுக்குத்தோதாக அவருடைய சகோதரர்கள் இருக்கிறார்கள்.
ஜே. ஆர் சிறுபான்மைச் சமூகங்களின் ஜன நாயக உரிமைகள் அத்தனையையும் நிராகரித்து அவர்களின் மீது கேள்விக்கிடமில்லாத வகையில் இராணுவ அழுத்தத்தைப் பிரயோகித்தார். எதிர்க்கட்சியான சிறி லங்கா சுதந்திரக் கட்சியைச் சிதறடித்து, அந்தக் கட்சியின் தலைவியாக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக் காவின் குடியுரிமையையும் பறித்தார். ஏறக்குறைய இதைப் போன்றதொரு கையாளல் முறைமையைத் தான் மகிந்த ராஜபக்ஸவும் மேற்கொள்கிறார். ஜே.ஆர். தன்னுடைய இரண்டாவது பதவிக்காலத்தில் முடிவில்லாத நெருக்கடிகளால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தார். இந்தியப் படைகளை வெளியேற்ற முடியாமை, பொருளாதாரா நெருக்கடிகள், வேலையில்லாப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமை, இவற்றை வைத்து ஜே.வி.பி மீள் எழுச்சி கொண்டமை என்ற நெருக்கடிகளால் அவர் திணறினார். இறுதியில் வேறு வழியின்றி பிரேமதாஸவிடம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்து ஒதுங்கிக் கொண்டார். மகிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது பதவிக்காலமும் அத்தகையதொரு கொந்தளிப்புக் காலமாகவே மாறக்கூடிய நிலையே உண்டு. ஆனால், தன்மைகள், வடிவங்கள், தரப்புகள்தான் மாற்றமடையப் போகின்றன.
போரில் பெற்ற வெற்றியைப் பகிர்ந்து கொள்வதற்குப் போட்டியாக ஜெனரல் சரத் பொன்சேகா இப்படித் திடீரென வருவார் என திரு. மகிந்த ராஜபக்ஸவோ ராஜபக்ஸ குடும்பமோ எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால், அந்த மாபெரும் நெருக்கடியை முறியடித்து அவர் அல்லது அவர்கள் வெற்றியடைந்து விட்டனர். அதுவும் அதிகப் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்குக் கிடைத்த மகத்தான வரவேற்பு இது என்று அரசாங்கத் தரப்பில் சொல்லப்படுகிறது. இவர்கள் எல்லோரும் என்னதான் சொன்னாலும் இந்த வெற்றியை நிராகரிப்போரும் இருக்கிறார்கள். இந்த வெற்றியைக் கடுமையாக எதிர்ப்போரும் இருக்கின்றார்கள். இந்த நிராகரிப்பும் எதிர்ப்பும் தனியே எதிர்க்கட்சிகள், எதிரணிகளின் எதிர்ப்பு என்று கொள்ள முடியாது. அது பொதுமக்களின் மன எதிர்ப்பாக இருப்பதை இங்கே நாம் கவனிக்க வேண்டும். இதுதான் இங்கே நமது கவனத்திற்குமுரியது. இந்த எதிர்ப்பு அல்லது அதிருப்திதான் இனிவரும் நாட்களின் இலங்கைத் தீவின் நிலவரமாகவும் அரசியலாகவும் இருக்கப்போகிறது. இதுதான் ராஜபக்ஸ குடும்பத்தின் எதிர்காலமாகவும் இருக்கப்போகிறது.
அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை, எதிர்ப்பை திசை திருப்பிவிடுவதற்கு முன்னர் போர் என்ற தேசிய விவகாரம் இருந்தது. இப்பொழுது அது இல்லை. முன்னர் எதிர்க்கட்சிகளோ ஊடகங்களோ அரசாங்கத்தின் மீது போர்க்கொடி தூக்கினால், தேசவிரோதக் குற்றஞ் சாட்டி அவற்றை அடக்கிவிடுவதற்கு அரசாங்கத்துக்கு வாய்ப்பிருந்தது. பயங்கரவாதத்துக்கெதிரான போர் என்ற போர்வையில் அரசாங்கத்தை எதிர்ப்போர் எவரின் மீதும் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதற்கு வசதி கிடைத்தது. எத்தகைய ஜனநாயக மறுப்பையும் வெற்றிகரமாகச் செய்யவும் முடிந்தது. புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற ஒரேயொரு குற்றச் சாட்டுகளின் மூலம் எவரையும் கட்டிப்போடவும் காணாமற்போகச் செய்யவும் கூடியதாக இருந்தது.
இதன் மூலம் எத்தகைய அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடிகளையும் திசை திருப்பிச் சமாளித்துக் கொள்வதற்கும் அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும் ஆட்சியாளருக்கு கடந்த காலங்களில் போர் என்ற விவகாரம் வாய்ப்பாக இருந்தது. ஆனால், அது இப்போது இல்லை. ஆகவே இன்று மகிந்த ராஜபக்ஸ வெட்ட வெளியில் நிற்கிறார். எதிலும் மறைந்து கொள்ள முடியாத, எதைச் சொல்லியும் திசைதிருப்ப முடியாத ஒரு பகிரங்க வெளியில் நிற்கிறார். அதே வேளை அவருடைய கடந்த காலம் என்பதும் பெரும் பாரங்களையுடையதாகவே இருக்கிறது. குடும்ப ஆதிக்கம், ஊழல், போர்க்குற்றங்கள், ஊடக வன்முறை, ஜனநாயக மறுப்பு என்ற பல விசயங்கள் அவருக்கு இந்தச் சுமையைக் கொடுக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டு களையெல்லாம் வெற்றி கொண்டு, வெளியே அவர் பல மான நிலையில் இருப்பதைப் போலத் தென்பட்டாலும் அவருடைய கட்டமைப்பினுள்ளும் அவரைச் சுற்றியும் அவர் நெருக்கடிக்குள்ளாகித்தானிருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலை அடுத்து தென்பகுதியில் இந்தத் தேர்தல் தவறானது என்று நடத்தப்பட்ட 02.02.2010 இல் நடத்தப்பட்ட போராட்டமும் 04.02.2010 இல் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தமையும் இங்கே கவனிக்கத்தக்கன.
அதைப் போல இனிவரும் நாட்களில் அவர் எதிர் கொள்ள வேண்டியிருக்கின்ற அபிவிருத்தி, ஜனநாயக மீளமைப்பு, புனர்வாழ்வு, வேலை வாய்ப்புகளை அளித்தல், சம்பள உயர்வு, பொருளாதார உயர்வுக்கான முயற்சிகள், அரசியற் தீர்வு போன்ற முக்கியமான பிரச்சினைகள் எல்லாம் அவருக்கு உவப்பாக இருக்கப் போவதில்லை. அத்துடன், அடுத்து வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுடன் அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வந்த தமிழ்க்கட்சிகளும் சற்று விலகியநிலையில், ஒரு புதிய அரசியற் தொடக்கத்தை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதால் சிறுபான்மை மக்களின் அரசியற் போராட்டங்களும் இன்னொரு வடிவத்தில் அதிகரிக்கலாம். (இது, சிறுபான்மைக் கட்சிகள் எப்படிக்கையாளப்போகின்றன என்பதைப் பொறுத்தே இருக்கிறது). வடக்குக் கிழக்கில் மீள் கட்டுமானம், புனர்வாழ்வு என்பவற்றுக்கு பெருமளவு நிதி தேவைப்படுகிறது. முன்னரைப்போல இந்தப் பிரதேசத்தை யாருடைய கண்களிலிருந்தும் அரசாங்கம் மறைத்து விட முடியாது.
அத்துடன், சர்வதேச ரீதியாகவும் அரசாங்கத்துக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் உண்டு. அதிகாரத்துக்கு மீண் டும் வந்திருக்கும் மகிந்த ராஜபக்ஸவுடன் என்னதான் சமரசங்களைச் செய்தாலும் அடிப்படைமுரண்கள் நிழலாகவே இருக்கப்போகின்றன. இது அபிவிருத்திக்கான உதவிகள், கடன்களில் தாமதங்களை ஏற்படுத்தும். பொதுவாக எந்தத் தரப்பையும் லாவகமாகக் கையாளும் அரசியல் மரபு மகிந்தவின் கூட்டணியிடம் இல்லை என்று சொல்லப்படுவதுண்டு. போரின்போது இந்தக் கரடுமுரட் டுத் தனத்தை பிறர் அனுசரிக்கவே வேண்டியிருந்தது. அதற்குக் காரணம், புலிகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற அவர்களின் தேவைகள். ஆனால், இனிமேல் அந்தமுறைமை சரிப்படாது.
ஆனால், இதையெல்லாம் சிலர் வேறுவிதமாகப் பார்க்கிறார்கள். மகிந்த ராஜபக்ஸவும் குழு வினரும் இப்போது நெருக்கடி களால் தாம் சூழப்பட்டிருப்பதை நன்கறிவார்கள். இதனால், அவர் களுடைய உளவியல், முன்னரை விடவும் எதிர்நிலையில் – எச்சரிக்கையுணர்வு அதிகரித்த நிலையில் தான் இருப்பார்கள். அதாவது அபாயங்கள் தங்களை நோக்கி வருவதைத் தடுப்பதற்கான காரியங்களை முற்கூட்டியே செய்ய முனைவார்கள் என்கின்றனர் இவர்கள். எதிர்ப்பாளர்களை மடக்குதவற்கான உபாயங்களில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றிருக்கும் ராஜபக்ஸ வினர் இந்தத்தடவை அதை உச்சநிலையில் பயன்படுத்துவர் என்று இவர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்படியான நிலையில் பொதுமக்களும் எதிரணிகளும் மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும். குறிப்பாக தன் மீது வரும் நெருக்கடியைத் திசை திருப்பி, மக்களின் நெருக்கடியாக மாற்றும் ஒரு உபாயத்துக்கும் ஜனாதிபதி போகக் கூடும். இது நாட்டின் ஜனநாயகத் துக்குப் பெரும் சேதங்களை ஏற்படுத்தும்.
ஆக, இப்போது இரண்டு பக்கமும் கூருள்ள ஒரு கத்தியைப் போன்ற அரசியல் நிலைமையே இலங்கைத் தீவில் உருவாகியிருக்கிறது. இதை மிக நுட்பமாகவும் விவேகமாகவும் கையாள வேண்டிய பொறுப்பில் அரசாங்கத்துக்கு வெளியே இருக்கும் சகல தரப்பினரும் இருக்கின்றனர். முன்னைய ஜனாதிபதிகளுக்கு வெளியே இருந்த அதிருப்தியாளர்கள், எதிர்ப்பாளர்களின் மனதிலிருந்த கோபம் வேறு. இப்போதிருக்கும் கோபம் வேறு. இது தீவிரம் நிறைந்தது. காட்டமானது. ஆகவே மக்களை ஒருங்கிணைப்பதற்கு அதிக சிரமப்படப்போவதில்லை.
குறிப்பாக சிறுபான்மைக் கட்சிகள் எதற்கும் அவ சரப்படாமல் களநிலைமைகளைச் சரியாக மதிப்பிட்டு காரியமாற்ற வேண்டிய சந்தர்ப்பம் இது. தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமை தொடக்கம் போரில் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் மற்றும் அந்த மக்களின் வாழ்க்கை தொடர்பான ஏராளம் முக்கிய மையப்பிரச் சினைகள் தமிழ் முஸ்லிம் கட்சிகளின் முன்னே இருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொறிமுறை பற்றிய சிந்தனை இந்தக் கட்சிகளுக்கு இன்று அவசியம். ஒரு பக்கத்தில் தேசியப் பிரச்சினைகளில் அரசாங்கத்தை தீர்வு நோக்கி அழைத்துச் செல்வது. மறுபக்கத்தில் வடக்குக் கிழக்கின் பிரச்சினைகளில் தேசியத் தரப்புகளை அழைத்து வருவது. இந்த இரண்டு வகையான அணுகுமுறைகள் தமிழ் முஸ்லிம் கட்சிகளுக்குத் தேவையாக இருக்கின்றன. இதற்கு இந்தக் கட்சிகள் தமக்குள் கடக்க வேண்டிய பல தடைக்கோடுகளை இவை கடக்க வேண்டும். அப்படிக் கடக்கவில்லை என்றால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது இந்தக் கட்சிகளுக்கான பொறியாகிவிடும்.
பெரும் நெருக்கடி வளையத்தால் சூழப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்ஸ ஒரு போதும் சும்மா இருக்கப் போவதில்லை. வியூகங்களை வகுப்பதிலும் போர்களை உருவாக்குவதிலும் வெற்றி கொள்வதிலும் அவர் ஒரு ஓயாத மனிதராக இருக்கிறார். அவரைத் தோற்கடிப்பதற்கான கணிதங்களோடு, வியூகம் அமைக்கவுள்ளவர்கள் அவரையும் விட வேகத்தோடும் விவேகத் தோடும் இருப்பது அவசியம். தவிர, அரசு என்ற பலமான ஒரு அதிகார மையம் ஜனாதிபதியின் கைகளில் இருக்கிறது. எனவே எதிர் வியூகம் என்பது சாதாரணமாக இருக்கப்போவதில்லை.
இங்கே வெற்றி தோல்வி என்பது தனி நபர்களுக்கும் மகிந்த ராஜபக்ஸ ஒரு போதும் சும்மா இருக்கப்போவதில்லை. வியூகங்களை வகுப்பதிலும் போர்களை உருவாக்குவதிலும் வெற்றி கொள்வதிலும் அவர் ஒரு ஓயாத மனிதராக இருக்கிறார். அவரைத் தோற் கடிப்பதற்கான கணிதங்களோடு, வியூகம் அமைக்கவுள்ளவர்கள் அவரையும் விட வேகத்தோடும் விவேகத் தோடும் இருப்பது அவசியம். தவிர, அரசு என்ற பலமான ஒரு அதிகார மையம் ஜனாதிபதியின் கைகளில் இருக்கிறது. எனவே எதிர் வியூகம் என்பது சாதாரணமாக இருக்கப்போவதில்லை.
இங்கே வெற்றி தோல்வி என்பது தனி நபர்களுக்கிடையிலானது – அல்லது அமைப்புகளுக்கிடையிலானது என்று அர்த்தப்படுத்தப்படவில்லை. மாறாக அரசாங்கத்தை மக்களின் நலன்களை நோக்கியும் பிரச்சினைகளை நோக்கியும் பணியவைப்பது, ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் போரிடுவது என்பதாகவே கொள்ளப்படவேண்டும். இதுதான் இன் றைய நிலையில் இலங்கைத் தீவின் மிகப் பெரிய சவால்களாக கருதப்படுகின்றன. இவையே இலங்கையின் ஆகப் பெரும் அச்சுறுத்தல்களாகவும் எதிர்காலம் குறித்த கவலைகளாகவும் பலருக்கும் இருக்கின்றன.

மகிந்தராஜபக்சவை சுற்றியுள்ள நெருக்கடிகள் அல்லது ராஜபக்ச குடும்பத்தின் எதிர்காலம்? நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள். –கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010
இலங்கைத் தீவில் இப்பொழுது மகிந்த ராஜபக்ஸ அல்லது ராஜபக்ஸ குடும்பம் இரண்டாவது வெற்றியை பெற்றிருக்கிறது. ஒன்று புலிகளுடனான போரின் போது கிடைத்த வெற்றி. அடுத்தது ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வெற்றி. இந்த இரண்டு வெற்றிகளும் அநேகமாக யாருமே எதிர்பார்த்திருக்காதவை. ஏன் வெற்றி வெற்றவர்களே எதிர்பார்த்திராத வெற்றிகள் இவை. அதிலும் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்த லின் வெற்றி பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது. அதேவேளை இந்த வெற்றி இலங்கையின் அரசி யல், சமூக, பொருளாதார நிலைமைகளிலும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தவுள்ளன. உண்மையில் இந்த விளைவுகள் சாதகமாவதும் பாதகமாவதும் வெற்றி பெற்ற ராஜபக்ஸ குடும்பத்தின் கைகளில் இல்லை. பதிலாக எதிர்த்தரப்புகளின் கைகளிலேயே அது தங்கியுள்ளது.இப்பொழுது வெற்றி பெற்றிருப்பவர் மகிந்த ராஜபக்ஸ அல்ல. அவர் இப்போது நெருக்கடி என்ற பெருங்குழியின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளார். இனிவரும் நாட்கள் அநேகமாக மகிந்த ராஜபக்ஸவுக்கான நெருக்கடியாகவும் ராஜபக்ஸ குடும்பத்தின் நெருக்கடியாகவும் இருக்கப் போகின்றன. அதே வேளை இதனை மக்களும் ஏனைய அரசியற் கட்சிகளும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் சரியாகக் கையாளாதுவிட்டால், அது மக்களின் மீதான நெருக்கடியாகவும் மாறக்கூடிய அபாயமுண்டு. எதிர்க்கட்சிகள், எதிரணிகள், ஊடகங்கள் மீது ஏற்படக்கூடிய பெரும் அபாயநிலையாகவும் மாறக்கூடும். எது நடந்தாலும் ஒரு குறிப்பிட்ட எல்லைவரை நாடு பெரும் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்படவேபோகிறது. இப்போது புலிகளுடனான போர் முடிந்த பின்னர், அது சிங்கள அரசியற் கட்சிகளின் போராகமாறியுள்ளது. சிறுபான்மை மக்களின் மீது செலுத்தப்பட்ட நெருக்கடிகள் தளர்வடைந்து அது, பெரும்பான்மைச் சமூகத்துக்குள்ளேயான நெருக்கடியாக மாற்றமடைந்துள்ளது. புலிகளை முற்றாக அழித்தால் மகிந்த ராஜபக்ஸ தன்னுடைய கையைத் தானே சுட்டுக் கொண்டதாகத்தான் அமையும் என அரசியல் ஆய்வாளர் ஒருவர் புலிகளின் வீழ்ச்சிக்கு முன்னே குறிப்பிட்டது இங்கே நினைவுக்கு வருகிறது. இப்போதைய நிலை ஏறக் குறைய அப்படித்தானிருக்கிறது. மகிந்த ராஜபக்ஸவின் நான்காண்டுகால ஆட்சியா னது இலங்கைத் தீவின் நீண்டகாலப் போரை முடிவுக் குக் கொண்டு வந்தது என்பதைத் தவிர ஏனைய எல்லா விதத்திலும் எதிர்நிலையான விசயங்களையே உருவாக்கியுள்ளது. ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்குப் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் உள்ள அத்தனை அதிகாரங்களையும் சிறுபான்மைச் சமூகங்களுக்கெதிராகவும் பிற அரசியற்கட்சிகள், மக்களுக் கெதிராகவும் பாவிக்கக் கூடியவராக மகிந்த ராஜபக்ஸ இப்போதிருக்கிறார். ஜே.ஆரின் காலத்தில் அவருக்குத்தோதாக சிறில் மத்யூ, காமினி பொன்சேகா, லலித் அத்துலத்முதலி போன்றோர் இருந்தனர். மகிந்த ராஜபக்ஸவுக்குத்தோதாக அவருடைய சகோதரர்கள் இருக்கிறார்கள். ஜே. ஆர் சிறுபான்மைச் சமூகங்களின் ஜன நாயக உரிமைகள் அத்தனையையும் நிராகரித்து அவர்களின் மீது கேள்விக்கிடமில்லாத வகையில் இராணுவ அழுத்தத்தைப் பிரயோகித்தார். எதிர்க்கட்சியான சிறி லங்கா சுதந்திரக் கட்சியைச் சிதறடித்து, அந்தக் கட்சியின் தலைவியாக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக் காவின் குடியுரிமையையும் பறித்தார். ஏறக்குறைய இதைப் போன்றதொரு கையாளல் முறைமையைத் தான் மகிந்த ராஜபக்ஸவும் மேற்கொள்கிறார். ஜே.ஆர். தன்னுடைய இரண்டாவது பதவிக்காலத்தில் முடிவில்லாத நெருக்கடிகளால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தார். இந்தியப் படைகளை வெளியேற்ற முடியாமை, பொருளாதாரா நெருக்கடிகள், வேலையில்லாப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமை, இவற்றை வைத்து ஜே.வி.பி மீள் எழுச்சி கொண்டமை என்ற நெருக்கடிகளால் அவர் திணறினார். இறுதியில் வேறு வழியின்றி பிரேமதாஸவிடம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்து ஒதுங்கிக் கொண்டார். மகிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது பதவிக்காலமும் அத்தகையதொரு கொந்தளிப்புக் காலமாகவே மாறக்கூடிய நிலையே உண்டு. ஆனால், தன்மைகள், வடிவங்கள், தரப்புகள்தான் மாற்றமடையப் போகின்றன. போரில் பெற்ற வெற்றியைப் பகிர்ந்து கொள்வதற்குப் போட்டியாக ஜெனரல் சரத் பொன்சேகா இப்படித் திடீரென வருவார் என திரு. மகிந்த ராஜபக்ஸவோ ராஜபக்ஸ குடும்பமோ எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால், அந்த மாபெரும் நெருக்கடியை முறியடித்து அவர் அல்லது அவர்கள் வெற்றியடைந்து விட்டனர். அதுவும் அதிகப் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்குக் கிடைத்த மகத்தான வரவேற்பு இது என்று அரசாங்கத் தரப்பில் சொல்லப்படுகிறது. இவர்கள் எல்லோரும் என்னதான் சொன்னாலும் இந்த வெற்றியை நிராகரிப்போரும் இருக்கிறார்கள். இந்த வெற்றியைக் கடுமையாக எதிர்ப்போரும் இருக்கின்றார்கள். இந்த நிராகரிப்பும் எதிர்ப்பும் தனியே எதிர்க்கட்சிகள், எதிரணிகளின் எதிர்ப்பு என்று கொள்ள முடியாது. அது பொதுமக்களின் மன எதிர்ப்பாக இருப்பதை இங்கே நாம் கவனிக்க வேண்டும். இதுதான் இங்கே நமது கவனத்திற்குமுரியது. இந்த எதிர்ப்பு அல்லது அதிருப்திதான் இனிவரும் நாட்களின் இலங்கைத் தீவின் நிலவரமாகவும் அரசியலாகவும் இருக்கப்போகிறது. இதுதான் ராஜபக்ஸ குடும்பத்தின் எதிர்காலமாகவும் இருக்கப்போகிறது. அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை, எதிர்ப்பை திசை திருப்பிவிடுவதற்கு முன்னர் போர் என்ற தேசிய விவகாரம் இருந்தது. இப்பொழுது அது இல்லை. முன்னர் எதிர்க்கட்சிகளோ ஊடகங்களோ அரசாங்கத்தின் மீது போர்க்கொடி தூக்கினால், தேசவிரோதக் குற்றஞ் சாட்டி அவற்றை அடக்கிவிடுவதற்கு அரசாங்கத்துக்கு வாய்ப்பிருந்தது. பயங்கரவாதத்துக்கெதிரான போர் என்ற போர்வையில் அரசாங்கத்தை எதிர்ப்போர் எவரின் மீதும் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதற்கு வசதி கிடைத்தது. எத்தகைய ஜனநாயக மறுப்பையும் வெற்றிகரமாகச் செய்யவும் முடிந்தது. புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற ஒரேயொரு குற்றச் சாட்டுகளின் மூலம் எவரையும் கட்டிப்போடவும் காணாமற்போகச் செய்யவும் கூடியதாக இருந்தது. இதன் மூலம் எத்தகைய அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடிகளையும் திசை திருப்பிச் சமாளித்துக் கொள்வதற்கும் அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும் ஆட்சியாளருக்கு கடந்த காலங்களில் போர் என்ற விவகாரம் வாய்ப்பாக இருந்தது. ஆனால், அது இப்போது இல்லை. ஆகவே இன்று மகிந்த ராஜபக்ஸ வெட்ட வெளியில் நிற்கிறார். எதிலும் மறைந்து கொள்ள முடியாத, எதைச் சொல்லியும் திசைதிருப்ப முடியாத ஒரு பகிரங்க வெளியில் நிற்கிறார். அதே வேளை அவருடைய கடந்த காலம் என்பதும் பெரும் பாரங்களையுடையதாகவே இருக்கிறது. குடும்ப ஆதிக்கம், ஊழல், போர்க்குற்றங்கள், ஊடக வன்முறை, ஜனநாயக மறுப்பு என்ற பல விசயங்கள் அவருக்கு இந்தச் சுமையைக் கொடுக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டு களையெல்லாம் வெற்றி கொண்டு, வெளியே அவர் பல மான நிலையில் இருப்பதைப் போலத் தென்பட்டாலும் அவருடைய கட்டமைப்பினுள்ளும் அவரைச் சுற்றியும் அவர் நெருக்கடிக்குள்ளாகித்தானிருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலை அடுத்து தென்பகுதியில் இந்தத் தேர்தல் தவறானது என்று நடத்தப்பட்ட 02.02.2010 இல் நடத்தப்பட்ட போராட்டமும் 04.02.2010 இல் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தமையும் இங்கே கவனிக்கத்தக்கன. அதைப் போல இனிவரும் நாட்களில் அவர் எதிர் கொள்ள வேண்டியிருக்கின்ற அபிவிருத்தி, ஜனநாயக மீளமைப்பு, புனர்வாழ்வு, வேலை வாய்ப்புகளை அளித்தல், சம்பள உயர்வு, பொருளாதார உயர்வுக்கான முயற்சிகள், அரசியற் தீர்வு போன்ற முக்கியமான பிரச் சினைகள் எல்லாம் அவருக்கு உவப்பாக இருக்கப் போவதில்லை. அத்துடன், அடுத்து வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுடன் அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வந்த தமிழ்க்கட்சிகளும் சற்று விலகியநிலையில், ஒரு புதிய அரசியற் தொடக்கத்தை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதால் சிறுபான்மை மக்களின் அரசியற் போராட்டங்களும் இன்னொரு வடிவத்தில் அதிகரிக்கலாம். (இது, சிறுபான்மைக் கட்சிகள் எப்படிக்கையாளப்போகின்றன என்பதைப் பொறுத்தே இருக்கிறது). வடக்குக் கிழக்கில் மீள் கட்டுமானம், புனர்வாழ்வு என்பவற்றுக்கு பெருமளவு நிதி தேவைப்படுகிறது. முன்னரைப்போல இந்தப் பிரதேசத்தை யாருடைய கண்களிலிருந்தும் அரசாங்கம் மறைத்து விட முடியாது. அத்துடன், சர்வதேச ரீதியாகவும் அரசாங்கத்துக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் உண்டு. அதிகாரத்துக்கு மீண் டும் வந்திருக்கும் மகிந்த ராஜபக்ஸவுடன் என்னதான் சமரசங்களைச் செய்தாலும் அடிப்படைமுரண்கள் நிழலாகவே இருக்கப்போகின்றன. இது அபிவிருத்திக்கான உதவிகள், கடன்களில் தாமதங்களை ஏற்படுத்தும். பொதுவாக எந்தத் தரப்பையும் லாவகமாகக் கையாளும் அரசியல் மரபு மகிந்தவின் கூட்டணியிடம் இல்லை என்று சொல்லப்படுவதுண்டு. போரின்போது இந்தக் கரடுமுரட் டுத் தனத்தை பிறர் அனுசரிக்கவே வேண்டியிருந்தது. அதற்குக் காரணம், புலிகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற அவர்களின் தேவைகள். ஆனால், இனிமேல் அந்தமுறைமை சரிப்படாது. ஆனால், இதையெல்லாம் சிலர் வேறுவிதமாகப் பார்க்கிறார்கள். மகிந்த ராஜபக்ஸவும் குழு வினரும் இப்போது நெருக்கடி களால் தாம் சூழப்பட்டிருப்பதை நன்கறிவார்கள். இதனால், அவர் களுடைய உளவியல், முன்னரை விடவும் எதிர்நிலையில் – எச்சரிக்கையுணர்வு அதிகரித்த நிலையில் தான் இருப்பார்கள். அதாவது அபாயங்கள் தங்களை நோக்கி வருவதைத் தடுப்பதற்கான காரியங்களை முற்கூட்டியே செய்ய முனைவார்கள் என்கின்றனர் இவர்கள். எதிர்ப்பாளர்களை மடக்குதவற்கான உபாயங்களில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றிருக்கும் ராஜபக்ஸ வினர் இந்தத்தடவை அதை உச்சநிலையில் பயன்படுத்துவர் என்று இவர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்படியான நிலையில் பொதுமக்களும் எதிரணிகளும் மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும். குறிப்பாக தன் மீது வரும் நெருக்கடியைத் திசை திருப்பி, மக்களின் நெருக்கடியாக மாற்றும் ஒரு உபாயத்துக்கும் ஜனாதிபதி போகக் கூடும். இது நாட்டின் ஜனநாயகத் துக்குப் பெரும் சேதங்களை ஏற்படுத்தும். ஆக, இப்போது இரண்டு பக்கமும் கூருள்ள ஒரு கத்தியைப் போன்ற அரசியல் நிலைமையே இலங்கைத் தீவில் உருவாகியிருக்கிறது. இதை மிக நுட்பமாகவும் விவேகமாகவும் கையாள வேண்டிய பொறுப்பில் அரசாங்கத்துக்கு வெளியே இருக்கும் சகல தரப்பினரும் இருக்கின்றனர். முன்னைய ஜனாதிபதிகளுக்கு வெளியே இருந்த அதிருப்தியாளர்கள், எதிர்ப்பாளர்களின் மனதிலிருந்த கோபம் வேறு. இப்போதிருக்கும் கோபம் வேறு. இது தீவிரம் நிறைந்தது. காட்டமானது. ஆகவே மக்களை ஒருங்கிணைப்பதற்கு அதிக சிரமப்படப்போவதில்லை. குறிப்பாக சிறுபான்மைக் கட்சிகள் எதற்கும் அவ சரப்படாமல் களநிலைமைகளைச் சரியாக மதிப்பிட்டு காரியமாற்ற வேண்டிய சந்தர்ப்பம் இது. தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமை தொடக்கம் போரில் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் மற்றும் அந்த மக்களின் வாழ்க்கை தொடர்பான ஏராளம் முக்கிய மையப்பிரச் சினைகள் தமிழ் முஸ்லிம் கட்சிகளின் முன்னே இருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொறிமுறை பற்றிய சிந்தனை இந்தக் கட்சிகளுக்கு இன்று அவசியம். ஒரு பக்கத்தில் தேசியப் பிரச்சினைகளில் அரசாங்கத்தை தீர்வு நோக்கி அழைத்துச் செல்வது. மறுபக்கத்தில் வடக்குக் கிழக்கின் பிரச்சினைகளில் தேசியத் தரப்புகளை அழைத்து வருவது. இந்த இரண்டு வகையான அணுகுமுறைகள் தமிழ் முஸ்லிம் கட்சிகளுக்குத் தேவையாக இருக்கின்றன. இதற்கு இந்தக் கட்சிகள் தமக்குள் கடக்க வேண்டிய பல தடைக்கோடுகளை இவை கடக்க வேண்டும். அப்படிக் கடக்கவில்லை என்றால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது இந்தக் கட்சிகளுக்கான பொறியாகிவிடும். பெரும் நெருக்கடி வளையத்தால் சூழப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்ஸ ஒரு போதும் சும்மா இருக்கப் போவதில்லை. வியூகங்களை வகுப்பதிலும் போர்களை உருவாக்குவதிலும் வெற்றி கொள்வதிலும் அவர் ஒரு ஓயாத மனிதராக இருக்கிறார். அவரைத் தோற்கடிப்பதற்கான கணிதங்களோடு, வியூகம் அமைக்கவுள்ளவர்கள் அவரையும் விட வேகத்தோடும் விவேகத் தோடும் இருப்பது அவசியம். தவிர, அரசு என்ற பலமான ஒரு அதிகார மையம் ஜனாதிபதியின் கைகளில் இருக்கிறது. எனவே எதிர் வியூகம் என்பது சாதாரணமாக இருக்கப்போவதில்லை. இங்கே வெற்றி தோல்வி என்பது தனி நபர்களுக்கும் மகிந்த ராஜபக்ஸ ஒரு போதும் சும்மா இருக்கப்போவதில்லை. வியூகங்களை வகுப்பதிலும் போர்களை உருவாக்குவதிலும் வெற்றி கொள்வதிலும் அவர் ஒரு ஓயாத மனிதராக இருக்கிறார். அவரைத் தோற் கடிப்பதற்கான கணிதங்களோடு, வியூகம் அமைக்கவுள்ளவர்கள் அவரையும் விட வேகத்தோடும் விவேகத் தோடும் இருப்பது அவசியம். தவிர, அரசு என்ற பலமான ஒரு அதிகார மையம் ஜனாதிபதியின் கைகளில் இருக்கிறது. எனவே எதிர் வியூகம் என்பது சாதாரணமாக இருக்கப்போவதில்லை. இங்கே வெற்றி தோல்வி என்பது தனி நபர்களுக்கிடையிலானது – அல்லது அமைப்புகளுக்கிடையிலானது என்று அர்த்தப்படுத்தப்படவில்லை. மாறாக அரசாங்கத்தை மக்களின் நலன்களை நோக்கியும் பிரச்சினைகளை நோக்கியும் பணியவைப்பது, ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் போரிடுவது என்பதாகவே கொள்ளப்படவேண்டும். இதுதான் இன் றைய நிலையில் இலங்கைத் தீவின் மிகப் பெரிய சவால்களாக கருதப்படுகின்றன. இவையே இலங்கையின் ஆகப் பெரும் அச்சுறுத்தல்களாகவும் எதிர்காலம் குறித்த கவலைகளாகவும் பலருக்கும் இருக்கின்றன.

கெளரவிப்பு


ஈழத்து படைப்புலகின் நண்பன் பத்மநாபஐயர்
தகவல்: -முல்லையமுதன் -

வாழும் போதே கௌரவிக்கிற நிகழ்விற்கு பொருத்தமானவர்களில் முதலிடத்தை பெறுபவர் திரு. பத்மநாப ஐயர் அவர்கள். ஈழத்து இலக்கிய உலகில் பன்முகப் பார்வை கொண்டவர். நவீன படைப்பிலக்கிய முயற்சிகளின் உந்து சக்தியாக விளங்குபவர். பதிப்பு, படைப்புகளைத் தேர்ந்தெடுப்பதின் திறமை, திசைகளெங்கும் வருகிற படைப்புகளில் தரமானவற்றை பலரையும் படிக்க வைப்பதிலும் முன் நிற்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக வெளியீட்டு துறையில், ஆக்கங்களை தொகுப்பதிலும் ஆர்வம் காட்டி வருவது எங்களுக்கு கிடைத்த கொடையாகும்.

28/08/1941 இல் பிறந்த பத்மநாப ஐயர் தீவிர இலக்கிய வாசகனாக இருப்பதால் தான் நல்ல இலக்கிய முயற்சிகளை கொணர்வதில்/ தேடுவதில் ஆர்வம் காட்டுகிறார் என உணர முடிகிறது. கூடவே இவருக்கு வாய்த்த கல்வி, வீட்டுச் சூழல், நண்பர்கள் இவரைச் சரியான திசையில் செல்ல வைத்தது. அ.யேசுராஜா, மு.நித்தியாந்தன், மு.புஷ்பராஜன், என்.கே.மகாலிங்கம், ஏ,ஜே.கனகரட்னா, சட்டநாதன், குப்பிளான்.ஐ.சண்முகம், கே.கணேஷ், செல்வா.கனகநாயகம், சு. வில்வரத்தினம், சசி.கிருஷ்னமூர்த்தி, மு.பொன்னம்பலம், சேரன் ,நிர்மலா,ரகுபதி, வ.ச.ஐ.ஜெயபாலன், எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா, சுந்தரராமசாமி, நா.கண்ணன், 'கிரியா.ராமகிருஸ்னன், சி.மோகன் என விரிகிறது இவரின் நண்பர்கள் கூட்டம்.

டொமினிக் ஜீவா, கைலாசபதி, காவலூர் ஜெகநாதன் போன்றோரின் முயற்சியினால் ஒரு வழியாக நமது இலக்கியம் முன்னெடுக்கபட்ட சூழலில் முதன் முதலாக தென்னக இலக்கிய உலகில் நமது படைப்புகள் பற்றி பேச வைத்த பெருமை திரு.பத்மநாப ஐயரையே சாரும்.

அந்த நாட்களில் வெளி வந்த தீபம், கணையாழி, எழுத்து, கசடதபற, காலச்சுவடு, படிகள், புதியகலாசாரம் எனப் பல சிறு சஞ்சிகைகளை பலருக்கு அறிமுகபடுத்தியதுடன் அது போல சஞ்சிகைகளும் நம்முள் வர உந்து சக்தியாக இருந்தவர். புதுசு, அலை, சமர் குறிப்படதக்கவைகள். ஐயர் என்றாலே இலக்கிய உலகில் தெரியாதவர்கள் இல்லை எனலாம்.

முதன் முதலில் நூலக சுட்டெண்ணுடன் வெளி வந்த ஈழத்து தமிழ் நூல் வெளியீடு இவர் தொகுத்த அலை இதழ்களின் தொகுப்பே. அச்சிடலின் முன் மாதிரியான தொகுப்புக்களைக் கொண்டு வந்ததில் ஓவியர். மார்க்ஸ் அவர்களின்' தேடலும் படைப்புலகமும்'(1987) நூலாகும். தமிழ் நாட்டிலும் வந்ததில்லை எனச் சொல்வர். அந்த நாட்களிலேயே நாற்பத்தைந்தாயிரம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட நூலாகும். வடிவமைப்பில் புதுமுயற்சியாகவும் கருதப்பட்டது. மேலும் தரமான கவிதைகளைத் தேர்ந்தெடுத்து 'மரணத்துள் வாழ்வோம்'(1985) எனும் தொகுப்பாக இன்றும் பேசப்படுகிற தொகுப்பாக்கித் தந்துள்ளார்.

ஐயர் என்றாலே அவரின் இலக்கிய முகமே நம் கண் முன் வந்து நிற்கிறது. ஈழநாடு ஆசிரியர் சபாரத்தினம் எழுதிய ஆசிரியத் தலையங்கங்களைத் தொகுத்து 'ஊரடங்கு வாழ்வு'(1985) தமிழியல் வெளியீடாக வெளியிட்டு உலகிலேயே முதலில் வந்த ஆசிரியத் தலையங்கங்களின் தொகுப்பெனும் பெருமையையும் தந்துள்ளது. கவிதை என்றவுடன் பலருக்கும் ஞாபகம் வருவது சண்முகம் சிவலிங்கம். அவரின் 'நீர்வளையங்கள்'(1988) ஐம்பத்தெட்டுக் கவிதைகளைக் கொண்ட நூலாகும். சுந்தர ராமசாமி, கைலாசநாதக்குருக்கள் போன்றோர் மீது அபிமானம் கொண்டிருந்தவர்.

திருமதி.பத்மநாப ஐயரின் 'இலங்கையின் தோட்டப் பள்ளிக்கூடங்களின் கல்வியமைப்பும் பிரச்சினைகளும்'(1988) வெளியிட்டு இன்னொரு பரிமாணத்தினை படைப்பில்/வெளியீட்டில் காட்டி நின்றார். கா.கைலாசநாத குருக்களின் 'இந்து பண்பாடு:சில சிந்தனைகள்' நூலை 1986 இலும் 'சைவத் திருக்கோவிற் கிரியை நெறி' நூலை 2009 இலும் வெளிவரக் காரணமாக இருந்தவர். வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் பல இடங்களிலும் தந்தையுடனும், கல்வி, தொழில் நிமித்தம் பல இடங்களிலும் வசிக்க நேர்ந்ததில் பல இலக்கிய நேசிப்பாளர்களை நண்பர்களாக்கியும் கொண்டார். தெளிவத்தை.ஜோசெப், கே.கணேஸ் குறிப்பிடதக்கவர்கள்.

யாழ் நூலகம் எரியுண்ட போது அதன் மீள் எழுகைக்காக தன் பங்களிப்பை அன்றே வழங்கியவர். பின் நாளில் வெளி வந்த நூலகம் பற்றிய (Burnning memories)- விவரண சித்திரத்தின் பின் ஒத்துழைப்பை வழங்கியவர்களில் இவரும் ஒருவர். தர்மசிறி பண்டாரநாயக்காவின் சின்னத்திரைப்பட முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதன் மூலம் இன்னொரு பரிமாணதிற்கான ஒத்துழைப்பையும் வழங்கி ஈழத்து இலக்கிய பரம்பலுக்கான படிகளை திறந்து விட்டார்.

இதே போலவே ரஷ்ஷிய சுயசரிதை(...) நூலை நண்பர் ஊடாக சிங்களத்தில் வெளியிட உதவினார். 21/10/2007 இல் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்த காந்தி மக்கின்ரயரின் நாடகத்தை லண்டனில் மேடையேற்ற நண்பர்களுடன் உதவியாக இருந்தார்.

விடுதலை போராட்ட நெருக்கடி காலத்தில் கூட அதீத அக்கறை காட்டி பயங்கரம் மிகுந்த கடல் வழிப் பயணம் மேற்கொண்டு தமிழகத்தில் ரகுபதி(Early Settlements in Jaffna), யேசுராசா(தொலைவும் இருப்பும் ஏனய கதைகளும் ,அறியப்படாதவர் நினைவாக) போன்றோரின் நூல்கள் வெளிவரக் காரணமாக இருந்தவர்.

மயிலங்கூடலூர்.பி.நடராஜனின் நட்புக்கு பாத்திரமாய் இருப்பவர். நூலகக் கனவின் ஒரு படியாகவே ஈழத்து நூல்களை 'மதுரைத் திட்ட இணைய நூலகத்தில் கணிசமான எமது நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பதும், ஈழத்து நூல்களுக்கான நூலக திட்டதின் படி இணைய நூலகம் ஒன்று மின்னம்பலத்தில் பவனி வரச் செய்தவர். பல நூல்களை யாரும் பார்க்கலாம்.

தங்களின் நூல்களை மின்னம்பலத்தில் பதிவேற்றம் செய்வதற்கு தங்கள் நூல்களை அல்லது நூற்பதிப்பின் குறுந் தகடுகளை பெறுவதில் ஆர்வம் காட்டி வருவதுடன் பதிப்பாளர்களிமிருந்தும் எதிர்பார்ப்பது தவிர்க்கமுடியாதது. 1965 இல் லக்ஷ்மி வாசகர்வட்டம் மூலம் வெளியிட்ட 'அக்கரை இலக்கியம். இவருள் ஏற்படுத்திய தாக்கமே இன்று வரை நல்ல வாசகனாகவும், தரமான நூல்கள் வருவதில் பெருவிருப்பு கொண்டவராகவும் பவனி வருகிறார்.

இசை மீதான அதீத ஈடுபாடு கொண்டதின் வெளிப்பாடே மணக்கால் ரங்கராஜனின் லண்டனில் நடாத்திய இசை நிகழ்வும் தான் விரும்பும் இசையை ந ண்பர்களும் கேட்க வைப்பதில் அவருடன் பழகியவர்க்குத் தெரிந்திருக்கும். எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி தொடங்கி அனைத்து கர்நாடக இசை கலைஞர்களை நேசத்துடன் வரவேற்பதுடன் அவர்களின் இசையை நண்பர்கள் மூலம் பரப்புவதிலும் முன் நிற்கிறார். தரமுள்ள ஏழை எழுத்தாளர்களையும், இசைக் கலைஞர்களையும் கைதூக்கி விடவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி செயல்படுத்தியும் உள்ளார்.

பாரதி , சி.வி.இராமன் போன்றோரின் விவரணச் சித்திரத்தை நமக்கெல்லாம் தந்துதவியவர். ஈஸ்ட்காம் தமிழர் நலன்புரிச் சங்கத்தில் கடமை புரிந்த காலத்தில் அதன் ஊடாக பத்தாவது ஆண்டுச் சிறப்பிதழ்(1996), கிழக்கும் மேற்கும்(1997), இன்னுமொரு காலடி(1998) ,யுகம் மாறும்(1999) ,கண்ணில் தெரியுது வானம்(2001) வெளியிட்டதன் மூலம் இலக்கியத்தின் இன்னொரு பரிமாணத்தை உலகுக்கு காட்டியவர் எனலாம்.

கனடாவிலிருந்து வெளிவரும் 'காலம் ' சஞ்சிகை வெளியிட்ட சுந்தரராமசாமி, ஏ,ஜே.கனகரட்னா .கே.கணேஷ் சிறப்பிதழ்களுக்கு ஒத்தாசையாக இருந்தவர். இவர் வெளியிட்டவற்றில் 'அக்கரைக்கு போன அம்மாவுக்கு'(1985), யுகங்கள் கணக்கல்ல(1986) , பெண்களின் சுவடுகளில்..(1989), யதார்த்தமும் ஆத்மார்த்தமும்(1991), மீண்டும் வரும் நாட்கள்(2004), வர்ணங்கள் கரைந்த வெளி'(2004) AJ:The Rooted Cosmopolitan (Articlesby AJ) (2008), சுழலும் தமிழ் உலகம் (2008) , ஒற்றை மைய உலக அரசியலில் போரும் சமாதானமும் (2008), தேடலும் விமர்சனங்களும்...(2009), முடிந்து போன தசையாடல் பற்றிய கதை(2009) என்பனவற்றுடன் இன்னும் அச்சில் வர விருப்பவைகள் தமிழியல் வெளியீடாகும். வெளியீட்டு முயற்சியின் மைல் கல்.

ஏ.ஜே.கனகரட்னாவின் நூலுக்கான வெளியீட்டுக்கான முழு ஒத்துழைப்பும் இவருடையதே. இதே போல் தான் தன் கஷ்டம் பாராது பலருக்கு உதவுவதில் மற்றவர்க்கு தெரியாமலேயே செய்வதை நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன் நந்தினி சேவியர் கூட ஒரு முறை தன் இதய சிகிச்சைக்கு ஐயர் உதவியதை சொன்னார்.

இவர் எத்தனை லட்சத்திற்கு அதிபதி என்று கேட்டால் அவரின் கடன் பட்டியல் தெரிய வரும். அதுவும் புத்தகத்திற்காக/ எழுத்தாளர்களுக்காகச் செலவு செய்திருப்பதும் அறிய வரும். வீடு முழுக்க இறைந்து கிடக்கும் நூல்கள் இவரின் தேடலுக்கான பதிலாகும். மனித நேயம் அங்கு உணரப்படும் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயத்திலும், பண்டாரவளை அர்ச்.சூசையப்பர் கல்லூரியிலும், பேராதனைப் பல்கலைக் கழக பௌதீக விஞ்ஞான பட்டதாரியான இவர் இரத்தினஐயர் யோகாம்பாள் தம்பதிகளின் புதல்வராவார்.

சஞ்சிகையில் தனக்கென தனி இடத்தை பெற்ற அலை வெளியீடாக'மார்க்ஸியமும் இலக்கியமும்:சில நோக்குகள்(1981), ஒரு கோடை விடுமுறை(19810, தேசிய இனப் பிரச்சினையும் முஸ்லீம் மக்களும்(1983),அகங்களும் முகங்களும்(1985)இவரின் பங்களிப்பை பேச வைத்த நூல்களாகும். அலைகளின் பிரதிகளை ஒரே தொகுப்பாக்கி முதன் முதலில் வெளியிட்ட பதினைந்து வருடங்களுக்குப் பின்பே பிற சஞ்சிகைகள் தங்களின் இதழை தொகுப்பாக்கினர்..

பத்மநாப ஐயரின் தூண்டுதலினால் அக்கரை இலக்கியம்(1968), விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள்(1981), போர்க்குரல்(1981), வடமொழி இலக்கிய வரலாறு(1981)அழியா நிழல்கள்(1982 )தியானம்(1982) ,மழை வரும் நாட்கள்(1983), இரண்டாவது சூரிய உதயம்(1983) ,சாதாரணங்களும் அசாரணங்களும்(1983), நதிக்கரை மூங்கில்(1983) மகாகவி கவிதைகள்(1984) ,பதினொரு ஈழத்து கவிஞர்கள்(1984) முற்போக்கு இலக்கியம்(19840) ,அறியப்படாதவர் நினைவாக(1984), ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி(1984), புது யுகம் பிறக்கிறது(1984), போர்ப்பறை(1984) மெய்யுள்(1984) ,கலைஞனின் தேடல்(1984), ஒரு தனி வீடு(1984) ,இந்து சமுத்திர பிராந்தியமும் இலங்கை இனப்பிரச்சினையும்(1987) தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்(1989), வீடற்றவன்(... )மத்து(2000), செங்காவலர் தலைவர் யேசுநாதர்(2000),கிருஷ்ணகானம்1,2(2000) நூல்களின் வருகை ஐயரின் பரிமாண வளர்ச்சி திசை எங்கும் பேசப்பட்டு வருகிறது. அவர் ஒரு பல்கலைக் கழகம் தான். 2004 இல் கனடா இலக்கிய தோட்டமும் டொரொண்டோ பல்கலைக்கழக தென்னாசிய மையமும் இணைந்து வழங்கிய 'இயல்'விருது இவருக்கு வழங்கிய அதி உயர் விருதாகும்.

வடமொழி இலக்கிய வரலாறு போன்ற கைலாசநாதகுருக்களின் நூல்களை மறு பிரசுரம் செய்து தமிழகம் உள்ளிட்ட தமிழர் வாழும் பிரதேசங்களில் கொண்டு செல்லும் நாளும் வெகு தூரத்தில் இல்லை என்பதில் உறுதியாக உள்ளார்.

நகைச்சுவை நிரம்பியவராக இருப்பினும் தீவிர பதிப்பாளராவே தென்படுகிறார். இலக்கிய உலகம் இவருக்கு நிறையவே கடமைப் பட்டிருக்கிறது. இவரை 'வெளிக்கள நூலகர்' என மௌனகுருவும் ,'தமிழ்த்தூது' என எம்.ஏ.நுஹ்மானும் சொல்வது உண்மை தான். காலம் சஞ்சிகை சிறப்பிதழை வெளியிட்டு பெருமை தந்தது. பொ.ஐங்கரநேசன் இவரை நேர்காணல் கண்டு தினக்குரலில் பிரசுரித்தும் , அதை தன் நூலில் இணைத்துக் கொண்டுள்ளார்.

வாழும் போதே கௌரவிக்கப் படவேண்டியவர். எனினும் நல்ல மனம் படைத்தவர்கள் வாசகராக இணைந்து இவரை பலப் படுத்த வேண்டும் .அதுவே சிறந்த கௌரவமாகும். இவர் பட்டங்களை நாடிச் சென்றவர் இல்லை.

தமிழ் மெல்லச் சாகும் என்கிற கவலை நம்மை போலவே இவருக்கும் உண்டு. இவரின் களமுனையில் இணைவதன் மூலம் இந்த நடமாடும் நூலகம் புதுப் பரிமாணத்துடன் கூடிய இலக்கிய வளர்ச்சிக்கு உதவமுடியும்.

10.04.2010 முத்தமிழ்விழாவில்(பத்மநாபஐயரை கௌரவம் செய்வதன் மூலம் நாம் மகிழ்வடைவோம்.